Tamil News | Online Tamil News |
- மோசடியில் தி.மு.க.,வினரை மிஞ்சும் அ.தி.மு.க.,வினர்
- மதுரையில் கனிம வளக் கடத்தல் தொடர்கிறது: அரசுக்கு வருவாய் இழப்பு அபாயம்
- டாஸ்மாக் சரக்கு விற்பனையில் தொடர் சரிவு
- மகாளய அமாவாசை நாளில் மாநிலம் முழுவதும் தேர்தல் பணி துவக்கம்: முதல்வர் ஜெ., அதிரடி
- அவசர சட்டம் திடீர் வாபஸ்; தமிழக கட்சிகள் கலக்கம்
- உரத்த சிந்தனை: எட்டி உதைத்த இளவரசர்...- ஆர்.நடராஜன் -
- ஒன்றுபட்ட ஆந்திராவை வலியுறுத்தி உண்ணாவிரதம் துவக்கினார் ஜெகன்
- பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி?
- தமிழகத்தையே அச்சுறுத்திய பயங்கரவாதிகள் மூவரும் போலீஸ் பிடியில் சிக்கினர்:
- டில்லியில் மீண்டும் காங்., ஆட்சி: கருத்து கணிப்பில் தகவல்
| மோசடியில் தி.மு.க.,வினரை மிஞ்சும் அ.தி.மு.க.,வினர் Posted: சேலம்:சேலம் மாவட்டத்தில், தி.மு.க.,வினரை மிஞ்சும் வகையில், நிலம், சீட்டு மோசடி, ரவுடியிசம், மக்களுக்கு இடையூறு உள்ளிட்ட செயல்களில், அ.தி.மு.க.,வினர் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் கொதிப்படைந்திருப்பதால், வரும் இடைத்தேர்தல், லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என அக்கட்சியினர் புலம்புகின்றனர்.கடந்த, தி.மு.க., ஆட்சியில், மந்திரி முதல் மாநகராட்சி கவுன்சிலர் வரை, பணம், நிலம், வீடு என கிடைத்ததையெல்லாம் சுருட்டி போட்டு, பொதுமக்களை அந்த கட்சியினர் கடும் சிரமத்துக்குள்ளாக்கினர்.தேர்தல் எப்போது வரும், பிரச்னையெல்லாம் எப்போது ... |
| மதுரையில் கனிம வளக் கடத்தல் தொடர்கிறது: அரசுக்கு வருவாய் இழப்பு அபாயம் Posted: மதுரை :மதுரை மாவட்டத்தில் கனிமவளம் மற்றும் வருவாய்த் துறையினர் தொடர் சோதனை மேற்கொண்டாலும் கூட செம்மண், கருங்கற்கள் கடத்தல் தொடர்கிறது. அரசுக்கு வருவாய் இழப்பு அபாயம் உள்ளது.செக்கானூரணி, அலங்காநல்லூர், மேலூர், நல்லூர் பகுதிகளில் செம்மண் கிராவல் குவாரிகள் உள்ளன. வாடிப்பட்டி, மேலூர் உட்பட பல்வேறு பகுதிகளில் கருங்கல் (உடைகல்) குவாரிகள் உள்ளன. கட்டுமானம், சாலை, பிளாட்கள் அமைத்தலுக்கு செம்மண் கிராவல், கருங்கற்கள் அதிகம் தேவைப்படுகின்றன. குவாரிகளில் ஒருமுறை செம்மண் எடுக்க லாரிக்கு 150 ரூபாய், டிராக்டருக்கு 75, கருங்கற்கள் எடுக்க லாரிக்கு 270, ... |
| டாஸ்மாக் சரக்கு விற்பனையில் தொடர் சரிவு Posted: போலி சரக்கு மற்றும் விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால், டாஸ்மாக் நிறுவனத்தின் மதுபான விற்பனை, தொடர்ந்து, சரிவடைந்து வருகிறது. தமிழகத்தில் 6,800க்கும் மேற்பட்ட, டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில், நாள்தோறும், சராசரியாக, 67 கோடி ரூபாய் மதிப்பிலான, மது வகைகள் விற்பனையாகின்றன. டாஸ்மாக் கடைகளில், உள்நாட்டில் தயாரிக்கப்படும் அயல்நாட்டு மது வகைகள் (ஐ.எம்.எப்.,) மற்றும் பீர் வகைகள், அரசு நிர்ணயம் செய்துள்ள விலையில் விற்கப்படுகின்றன. சென்ற செப்டம்பர் மாதம், 2.88 கோடி பாட்டில்களை உள்ளடக்கிய, 24 லட்சம் பெட்டி பீர் மட்டுமே விற்பனையாகியுள்ளது. இதன் மதிப்பு, 288 கோடி ... |
| மகாளய அமாவாசை நாளில் மாநிலம் முழுவதும் தேர்தல் பணி துவக்கம்: முதல்வர் ஜெ., அதிரடி Posted: முதல்வர் ஜெயலலிதாவின் அதிரடி உத்தரவை அடுத்து, தமிழகம், புதுச்சேரியில் உள்ள, 40 லோக்சபா தொகுதிகளிலும் நேற்று ஒரே நாளில், ஆலோசனை கூட்டங்கள் நடத்தி, தேர்தல் பணியை, ஆளும் அ.தி.மு.க., அதிகார பூர்வமாக துவக்கியது.காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, எல்லா அமைச்சர்களும் சென்னையில், 2ம் தேதி இருக்க வேண்டும் என, ஏற்கனவே முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். காந்தி ஜெயந்தி நிகழ்ச்சி முடிந்ததும், அமைச்சர்கள் அடுத்த நாள், சென்னையில் தங்கியிருந்தனர். வழக்கமாக, ஒவ்வொரு வாரமும், வெள்ளிக் கிழமை இரவு, எல்லா அமைச்சர்களும், தொகுதிகளுக்கு சென்று விடுவர். சனி, ஞாயிறு நாட்களை, ... |
| அவசர சட்டம் திடீர் வாபஸ்; தமிழக கட்சிகள் கலக்கம் Posted: குற்ற வழக்கில் தண்டனை பெற்ற, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களின் பதவி பறிப்பை தடுக்க, மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டம், வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, வழக்குகளில் சிக்கியுள்ள, தமிழக கட்சித் தலைவர்களும், பிரமுகர்களும் கலக்கம் அடைந்து உள்ளனர்.குற்ற வழக்கில் தண்டனை பெற்ற, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களின் பதவியை பறிக்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட், அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது. குற்ற வழக்குகளில், சிறை தண்டனை பெறும் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், குறிப்பிட்ட காலத்துக்குள், மேல் முறையீடு செய்யும்பட்சத்தில், அவர்கள் பதவியில் நீடிக்கலாம் என்ற ஷரத்து, மக்கள் பிரதிநிதித்துவ ... |
| உரத்த சிந்தனை: எட்டி உதைத்த இளவரசர்...- ஆர்.நடராஜன் - Posted: மன்மோகன் சிங்கின் எதிர்பாராத அதிர்ஷ்டம், அவர் பிரதமரானது. போனஸ், இரண்டாம் முறையும் பிரதமரானது. எதிர்பாராத அதிர்ச்சி, ராகுல் தலையீடு. 'இந்திரா சொன்னால் விளக்குமாறு எடுத்துப் பெருக்குவேன்' என்று, ஜெயில் சிங் போல் சொல்லவில்லையே ஒழிய, 'இளவரசருக்கு அடிபணிவேன்' என்று வெளிப்படையாக சொன்னார் மன்மோகன் சிங். ஆனாலும், பாவம்... அவருக்கு இப்படி ஒரு அகவுரவபங்கம் வந்திருக்க வேண்டாம். அதுவும், உலக நாடுகள் அவரை கவனித்துக் கொண்டிருந்த போது.'குற்றப்பின்புலம் உள்ளவர்கள், தேர்தலில் நிற்கக் கூடாது' என்று, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பிலிருந்து அரசியல்வாதிகள் தங்களை ... |
| ஒன்றுபட்ட ஆந்திராவை வலியுறுத்தி உண்ணாவிரதம் துவக்கினார் ஜெகன் Posted: ஐதராபாத் : ஆந்திராவை இரண்டாக பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கும், மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சீமந்திரா பகுதியில், இரண்டாவது நாளாக, நேற்றும், 'பந்த்' தொடர்ந்தது. இதனால், சீமந்திரா பகுதியில் உள்ள, 13 மாவட்டங்களிலும், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஒய்.எஸ்.ஆர்.காங்., தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவக்கியுள்ளார்.ஆந்திராவை, இரண்டாக பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதற்கு, மத்திய அமைச்சரவை, இரண்டு நாட்களுக்கு முன், ஒப்புதல் அளித்தது. இதனால், தெலுங்கானா அல்லாத, சீமந்திரா பகுதியில் உள்ள, 13 ... |
| பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? Posted: இந்து தலைவர்கள் கொலை வழக்குகளில் தேடப்பட்டு வந்த, "போலீஸ்' பக்ருதீன், சென்னையில் கைதானதை தொடர்ந்து, அவனது கூட்டாளிகளான, பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோர், ஆந்திர மாநிலம் புத்தூரில், போலீசாரின், 24 மணி நேர ஆபரேஷனில் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் இருந்த, பிலால் மாலிக்கின் மனைவி மற்றும் குழந்தைகளும் மீட்கப்பட்டனர். சென்னை சூளை சந்திப்பில் நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு, "போலீஸ்' பக்ருதீனை, சிறப்பு புலனாய்வுப் பிரிவு இன்ஸ்பெக்டர் லட்சுமணன் மற்றும் அவரது சகாக்கள் அடையாளம் கண்டு கைது செய்தனர். அப்போது, "போலீஸ்' பக்ருதீனை காப்பாற்றும் விதத்தில் ... |
| தமிழகத்தையே அச்சுறுத்திய பயங்கரவாதிகள் மூவரும் போலீஸ் பிடியில் சிக்கினர்: Posted: பா.ஜ., மாநில பொதுச் செயலர் சேலம் ஆடிட்டர் ரமேஷ், வேலூர் இந்து முன்னணி பிரமுகர் வெள்ளையப்பன் கொலை சம்பவங்கள் மற்றும் மதுரையில், அத்வானி யாத்திரையில், "பைப்' வெடிகுண்டு கண்டுபிடிப்பு உள்ளிட்ட வழக்குகளில், சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாரால் தேடப்பட்டு வந்தவர்களும், தமிழகத்தையே அச்சுறுத்தி வந்த பயங்கரவாதிகளுமான, "போலீஸ்' பக்ருதீன், பிலால் மாலிக் மற்றும் பன்னா இஸ்மாயில் ஆகிய மூவரும், 24 மணி நேர வேட்டைக்கு பிறகு, போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதன் மூலம், பல மாதங்களாக நீடித்து வந்த சேலம், வேலூர் மற்றும் மதுரை சம்பவங்களின், பகீர் சஸ்பென்ஸ் ... |
| டில்லியில் மீண்டும் காங்., ஆட்சி: கருத்து கணிப்பில் தகவல் Posted: டில்லியில் நடைபெறவுள்ள, சட்டசபை தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவாலின், ஏழை மக்கள் கட்சி, பெரிய அளவில் ஓட்டுக்களைப் பிரிக்கும். அதனால், காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும் என, கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2வது இடத்தில் பா.ஜ.,: டில்லியில், டிசம்பர், 4ம் தேதி, சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில், கட்சிகளின் வெற்றி வாய்ப்புகள் குறித்து, சி ஓட்டர்ஸ் என்ற தனியார் நிறுவனம், கருத்து கணிப்பு நடத்தி, அதன் முடிவுகளை, வெளியிட்டுள்ளது. அதில், கூறப்பட்டுள்ளதாவது:டில்லி சட்டசபை தேர்தலில், சில மாதங்களுக்கு முன் துவக்கப்பட்ட, சமூக ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |அக்டோபர் 06,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |