Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- மெய்யாலுமா..?
- ஆந்திர மாநிலப் பிரிவினைக்கு எதிர்ப்பு: ஜெகன்மோகன் உண்ணாவிரதம்
- கால்நடைத் தீவன ஊழல் வழக்கு: நிதீஷ்குமாரை விசாரிக்க பாஜக வலியுறுத்தல்
- பா.ம.க. தலைமையில் தனி அணி: 45 ஜாதி சங்கங்களின் தலைவர்கள் கோரிக்கை
- கோவையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பாலம்
- குளச்சலில் ரூ.87.75 கோடியில் மீன்பிடி துறைமுகம்
- பிகாரில் மோடி பொதுக்கூட்டம்: ஐக்கிய ஜனதா தளம் எதிர்ப்பு
- உத்தரகண்ட்: மீட்புப் பணியில் உயிரிழந்த படைவீரர்களின் சேவை மகத்தானது
- அத்வானியின் கருத்து யூகத்தின் அடிப்படையிலானது: பிரணாப் முகர்ஜி
- மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீது 84% பேர் நம்பிக்கை
- "இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத கட்டமைப்புகளை பாகிஸ்தான் அகற்ற வேண்டும்'
- முசாஃபர்நகர் கலவரத்தில் பிரிந்த 72 ஜோடிகளுக்கு திருமணம்
- விமான நிலையத்தில் பயணியிடம் 1 கிலோ தங்கம் பறிமுதல்
- கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர் சாவு
- 2 சாதுக்கள் சுட்டுக்கொலை
- பஞ்சாப்: காங்கிரஸ் கட்சித் தலைவர் மனைவி மீது ஆசிட் வீச்சு
- காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி: 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
- சீமாந்திராவில் 2ஆவது நாளாக பந்த்: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
- 10 நாள்களில் தேர்தல் அறிக்கை: ஷீலா திட்சித்
- இருவர் ஜாமீன் கோரி மனு; நாளை விசாரணை
- உரிமையாளரின் ஜாமீன் மனு மீது நாளை உத்தரவு
- மத்தியப் பிரதேச காங்கிரஸில் ஒற்றுமை நிலவுகிறது
- 6 வயது சிறுமி பாலியல் வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டு சிறை
- புகார் தெரிவிக்கச் சென்ற பெண்ணிடம் முறைதவறி நடந்த இன்ஸ்பெக்டர் இடமாற்றம்
- சிறுமியைக் கடத்திச் சென்று பலாத்காரம்: இளைஞர் கைது
- முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகன் பா.ஜ.க.வில் இணைந்தார்
- பாஜக ஆட்சிக்கு வந்தால் தில்லியில் வசிக்கும் பூர்வாஞ்சல் மக்களின் குறைகள் தீர்க்கப்படும்
- ஏ.கே. அந்தோனியிடம் பிரதமர் நலம் விசாரிப்பு
- "ஃபேஸ்புக்' பெண் நண்பரிடம் பணம் கேட்டு மிரட்டிய பஞ்சாப் இளைஞர் தலைமறைவு
- துபாய்க்கு கடத்தப்படவிருந்த போதை மாத்திரைகள் பறிமுதல்
- ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் கேஜரிவால்
- காணாமல்போன ஜெர்மன் பெண் ஃபரீதாபாதில் மர்மச் சாவு
- ராகுல் குறித்து ஷீலா தீட்சித் கருத்து
- கூட்டத்தில் மினி வேன் புகுந்து பெண் சாவு
- விபத்தில் சிக்கி பள்ளத்தில் கவிழ்ந்த மணல் லாரி
- கல்பாக்கம் அணு மின் நிலையத்தைச் சுற்றி மீன் பிடிக்கத் தடை
- மரக்கன்றுகள் நடும் தொழில்நுட்ப பயிற்சிக் கூட்டம்
- பட்டு உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை: மத்திய அமைச்சர் உறுதி
- காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தில் தொடரும் பைக் திருட்டு
- விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
- ஆதிபராசக்தி பொறியியல் மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன்
- டி.வி., பிரிட்ஜ், வாஷிங்மெஷின் வாங்க இந்தியன் வங்கிக் கடன்
- வாக்குச் சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்
- அதிமுக ஆலோசனைக் கூட்டம்
- செங்கல்பட்டில் கோலாகலமாக தொடங்கிய 10 நாள் தசரா திருவிழா
- தேசிய நெடுஞ்சாலையிலும் ஆக்கிரமிப்பு?
- தொழுதாவூர் கிராமத்தினர் எஸ்.பி.யிடம் மனு
- சாலைகளை ஆக்கிரமித்த கால்நடைகள்: வாகன ஓட்டிகள் அவதி
- தரைப்பாலத்துக்கு தடுப்பு கம்பிகள் அமைக்க கோரிக்கை
- அதிமுக ஆலோசனைக் கூட்டம்
- மனைவி மர்மச் சாவு: கணவன் கைது
- பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை
- ரயில் முன் பாய்ந்து பொறியியல் பட்டதாரி தற்கொலை
- வியாபாரிகளை தாக்கிய 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
- மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி தொடக்கம்
- அமைச்சர்கள் தேர்வு: தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் கடும் போட்டி
- மழைநீர் சேகரிப்புப் பணி தீவிரம்
- மின்கசிவு: 4 வீடுகள் தீக்கிரை
- கால்வாயில் மிதந்த முதியவர் சடலம்
- 6 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
- நிலக்கோட்டை அருகே ஊரைக் காலி செய்து மலையில் குடியேறிய மக்கள்
- ரியல் எஸ்டேட் அதிபர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி
- பட்டா மாறுதல் சிறப்பு முகாம்
- ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி ரூ. 12 லட்சம் மோசடி: 3 பேர் கைது
- போலி ஆவணம் மூலம் நிலமோசடி
- உதவி தொடக்கக் கல்வி அலுவலர் நியமன பட்டியல் வெளியீடு
- கூட்டுறவு மருந்துக் கடை திறப்பு
- காந்திய மக்கள் இயக்கக் கூட்டம்
- தரவரிசையில் நடால் முதலிடம்
- பள்ளி வாசலில் மினாரா திறப்பு
- பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கம்
- மாற்றுத்திறனாளிகளுக்கு நாளை தடகளப் போட்டி
- தாட்கோ திட்டத்தில் கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
- சீன ஓபன் டென்னிஸ்: சானியா ஜோடி சாம்பியன்
- வரும் மக்களவைத் தேர்தலில் தொண்டர்கள் அதிமுக வெற்றிக்கு பாடுபட வேண்டும்: அமைச்சர்
- ராஜபாளையத்தில் செஸ் போட்டி
- பெண்ணைத் தாக்கி பணம், நகை பறித்த வழக்கு: இருவருக்கு தலா 7 ஆண்டு சிறை
- பாலியல் வன்முறை தடுப்பு சட்ட விழிப்புணர்வு முகாம்
- துலீப் கோப்பை: தெற்கு மண்டலம் 600; மேற்கு மண்டலம் திணறல்
- சிவகாசியில் ரௌடிகளிடம் போலீஸார் விசாரணை
- இந்தியா ஏ - மேற்கிந்தியத் தீவுகள் ஏ 2-வது டெஸ்ட் டிரா
- பரமக்குடியில் இந்திய கம்யூ. மறியல்: 4 பெண்கள் உள்பட 30 பேர் கைது
- சமுதாய தலைவர்களின் படங்கள் அகற்றம்: மென்னந்தியில் 2 பஸ்கள் சிறைபிடிப்பு
- ஏர்வாடியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பின்
- 19 வயதுக்குட்பட்டோர் தொடர்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா
- புனித ஜெபமாலை அன்னை ஆலய தேர்ப் பவனி
- அண்ணன்,தம்பிக்கு வெட்டு: 3 பேர் கைது
- டிரினிடாடை 153 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது மும்பை
- தேவகோட்டையில்அக்.10 பட்டா மாறுதல் சிறப்பு முகாம்
- அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர், ஜேசிபி இயந்திரம் பறிமுதல்: 2 பேர் கைது
- ஐஜேஎஃப் ஜூடோ கிராண்ட்ப்ரீ: கல்பனாவுக்கு வெண்கலம்
- இந்திய கம்யூ. மறியல்: 916 பேர் கைது
- பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
- கோயில்களில் நவராத்திரி விழா துவக்கம்
- பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
- ஆட்டோ கிராண்ட்ப்ரீ உலக சீரிஸ்: 15-வது சுற்றில் நரேன் வெற்றி
- மகளிர் கல்லூரியில் கருத்தரங்கம்
- பட்டாசு தொழிற்சங்க கிளைகள் தொடக்கம்
- இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது ராஜஸ்தான்
- இந்திய கம்யூ. மறியல்: 1530 பேர் கைது
| Posted: 05 Oct 2013 12:57 PM PDT யாரோடும் கூட்டு இல்லை. குறிப்பாக, திராவிடக் கட்சிகளுடன் ஒட்டோ உறவோ இல்லை என்று வீரவசனம் பேசியவர்கள் இப்போது மறு சிந்தனையில் இருக்கிறார்களாம். |
| ஆந்திர மாநிலப் பிரிவினைக்கு எதிர்ப்பு: ஜெகன்மோகன் உண்ணாவிரதம் Posted: 05 Oct 2013 12:56 PM PDT ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரிக்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சனிக்கிழமை உண்ணாவிரதம் தொடங்கினார். |
| கால்நடைத் தீவன ஊழல் வழக்கு: நிதீஷ்குமாரை விசாரிக்க பாஜக வலியுறுத்தல் Posted: 05 Oct 2013 12:55 PM PDT கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் பிகார் முதல்வர் நிதீஷ்குமார் மற்றும் ஐக்கிய ஜனதா தளத்தலைவர் சிவானந்த் திவாரி ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது. |
| பா.ம.க. தலைமையில் தனி அணி: 45 ஜாதி சங்கங்களின் தலைவர்கள் கோரிக்கை Posted: 05 Oct 2013 12:53 PM PDT வரும் தேர்தலில் பாமக தலைமையில் தனி அணி அமைத்து போட்டியிட வேண்டும் என 45 ஜாதி சங்கங்களின் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| கோவையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பாலம் Posted: 05 Oct 2013 12:52 PM PDT கோவையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பாலங்கள் அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். |
| குளச்சலில் ரூ.87.75 கோடியில் மீன்பிடி துறைமுகம் Posted: 05 Oct 2013 12:52 PM PDT கன்னியாகுமரி குளச்சலில் மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கு ரூ.87.75 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். |
| பிகாரில் மோடி பொதுக்கூட்டம்: ஐக்கிய ஜனதா தளம் எதிர்ப்பு Posted: 05 Oct 2013 12:13 PM PDT குஜராத் முதல்வரும் பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி, பிகார் தலைநகர் பாட்னாவில் அக்டோபர் 27-ஆம் தேதி பங்கேற்கவுள்ள பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என ஐக்கிய ஜனதா தளத்தின் இளைஞர் பிரிவு தேசிய பொதுச்செயலர் பிரதீப் யாதவ் வலியுறுத்தியுள்ளார். |
| உத்தரகண்ட்: மீட்புப் பணியில் உயிரிழந்த படைவீரர்களின் சேவை மகத்தானது Posted: 05 Oct 2013 12:13 PM PDT உத்தரண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பேரழிவின்போது, மீட்புப் பணியில் ஈடுபட்டு உயிர்த்தியாகம் செய்த பாதுகாப்புப் படையினரின் சேவை மகத்தானது என அம் மாநில முதல்வர் விஜய் பகுகுணா புகழாரம் சூட்டினார். |
| அத்வானியின் கருத்து யூகத்தின் அடிப்படையிலானது: பிரணாப் முகர்ஜி Posted: 05 Oct 2013 12:12 PM PDT "மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த அவசரச்சட்டம் திரும்ப பெறப்பட்டதற்கு தான் காரணம் என அத்வானி கூறியிருப்பது யூகத்தின் அடிப்படையிலானது' என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மறுப்பு தெரிவித்துள்ளர். |
| மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீது 84% பேர் நம்பிக்கை Posted: 05 Oct 2013 12:11 PM PDT தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மீது 84% பேர் நம்பிக்கை கொண்டிருப்பது தேர்தல் ஆணையம் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. |
| "இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத கட்டமைப்புகளை பாகிஸ்தான் அகற்ற வேண்டும்' Posted: 05 Oct 2013 12:10 PM PDT "பாகிஸ்தான் மண்ணிலிருந்து இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் பயங்கரவாதிகளின் கட்டமைப்புகளை பாகிஸ்தான் அரசு அகற்ற வேண்டும். அப்போதுதான் இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காண முடியும்' என, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கண்டிப்புடன் கூறினார். |
| முசாஃபர்நகர் கலவரத்தில் பிரிந்த 72 ஜோடிகளுக்கு திருமணம் Posted: 05 Oct 2013 12:05 PM PDT உத்தரப்பிரதேச மாநிலம், முசாஃபர் நகர் கலவரத்தில் பிரிந்த 72 ஜோடிகளுக்கு நிவாரண முகாமில் திருமணம் நடந்தது. |
| விமான நிலையத்தில் பயணியிடம் 1 கிலோ தங்கம் பறிமுதல் Posted: 05 Oct 2013 12:05 PM PDT கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் பயணியிடம் 1 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. |
| கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர் சாவு Posted: 05 Oct 2013 12:04 PM PDT மஹாராஷ்டிரத்தில் உள்ள துல்ஜாபூர் தேவி கோவிலில் சனிக்கிழமை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். 20 பேர் காயமடைந்தனர். |
| Posted: 05 Oct 2013 12:04 PM PDT உத்தரப்பிரதேச மாநிலம், முசாஃபர்நகரில் இரண்டு சாதுக்கள் அடையாளம் தெரியாத நபர்களால் சனிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனர். |
| பஞ்சாப்: காங்கிரஸ் கட்சித் தலைவர் மனைவி மீது ஆசிட் வீச்சு Posted: 05 Oct 2013 12:03 PM PDT பஞ்சாபில், அடையாளம் தெரியாத 2 பேர் ஆசிட் வீசியதில், காங்கிரஸ் கட்சித் தலைவரின் மனைவி படுகாயம் அடைந்தார். |
| காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி: 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை Posted: 05 Oct 2013 12:03 PM PDT காஷ்மீரில் கேரன் எல்லைக்கோடு பகுதி வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 4 பயங்கரவாதிகளை ராணுவ வீரர்கள் சனிக்கிழமை சுட்டுக்கொன்றனர். |
| சீமாந்திராவில் 2ஆவது நாளாக பந்த்: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு Posted: 05 Oct 2013 12:03 PM PDT ஆந்திர மாநிலத்தைப் பிரிப்பது என்ற மத்திய அரசின் முடிவைக் கண்டித்து சீமாந்திரா மற்றும் கடலோர மாவட்டங்களில் இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் பந்த் நடைபெற்றது. |
| 10 நாள்களில் தேர்தல் அறிக்கை: ஷீலா திட்சித் Posted: 05 Oct 2013 11:59 AM PDT தில்லி பிரதேச காங்கிரஸ் கட்சி சார்பில் பத்து தினங்களுக்குள் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று முதல்வர் ஷீலா தீட்சித் தெரிவித்தார். |
| இருவர் ஜாமீன் கோரி மனு; நாளை விசாரணை Posted: 05 Oct 2013 11:59 AM PDT வெளிநாட்டு வாழ் இந்திய மாணவர் அன்மோல் சர்னா (24) இறந்த சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்ட்ட 6 பேரில் இருவர் ஜாமீன் கோரி மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளனர். |
| உரிமையாளரின் ஜாமீன் மனு மீது நாளை உத்தரவு Posted: 05 Oct 2013 11:58 AM PDT தில்லியில் வீட்டு வேலை பார்த்து வந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணைத் தாக்கியது தொடர்பான புகாரில் கைதான வீட்டின் பெண் உரிமையாளர் வந்தனா தீரின் ஜாமீன் மனு மீதான உத்தரவு திங்கள்கிழமைக்கு (அக். 7) தள்ளிவைக்கப்படுவதாக தில்லி பெருநகர் நீதிமன்றம் தெரிவித்தது. |
| மத்தியப் பிரதேச காங்கிரஸில் ஒற்றுமை நிலவுகிறது Posted: 05 Oct 2013 11:58 AM PDT மத்தியப் பிரதேச காங்கிரஸில் கோஷ்டிப்பூசல் இல்லை; ஒற்றுமை நிலவுகிறது என்று அந்த மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான திக்விஜய் சிங் தெரிவித்தார். |
| 6 வயது சிறுமி பாலியல் வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டு சிறை Posted: 05 Oct 2013 11:58 AM PDT ஆறு வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், தில்லியைச் சேர்ந்த 24 வயது இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. |
| புகார் தெரிவிக்கச் சென்ற பெண்ணிடம் முறைதவறி நடந்த இன்ஸ்பெக்டர் இடமாற்றம் Posted: 05 Oct 2013 11:58 AM PDT பாலியல் புகார் தெரிவிக்கச் சென்ற பெண்ணிடம் முறைதவறி நடந்து கொண்டதாக உத்தம் நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட |
| சிறுமியைக் கடத்திச் சென்று பலாத்காரம்: இளைஞர் கைது Posted: 05 Oct 2013 11:57 AM PDT சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக விகாஸ் (22) என்பவரை தில்லி காவல் துறையினர் கைது செய்தனர். |
| முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகன் பா.ஜ.க.வில் இணைந்தார் Posted: 05 Oct 2013 11:57 AM PDT முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் மகன் பங்கஜ் சிங், பாரதிய ஜனதா கட்சியில் சனிக்கிழமை இணைந்தார். |
| பாஜக ஆட்சிக்கு வந்தால் தில்லியில் வசிக்கும் பூர்வாஞ்சல் மக்களின் குறைகள் தீர்க்கப்படும் Posted: 05 Oct 2013 11:57 AM PDT தில்லியில் அங்கீகாரம் இல்லாத காலனிகளில் வசிக்கும் பூர்வாஞ்சல் பகுதி மக்களின் குறைகளைப் பாஜக தீர்த்து வைக்கும் என்று அக் கட்சியின் தில்லி பிரதேச தலைவர் விஜய் கோயல் தெரிவித்தார். |
| ஏ.கே. அந்தோனியிடம் பிரதமர் நலம் விசாரிப்பு Posted: 05 Oct 2013 11:57 AM PDT அறுவை சிகிச்சை செய்துகொண்ட மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனியை பிரதமர் மன்மோகன் சிங் தில்லி ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் சனிக்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இச் சந்திப்பு சுமார் 15 நிமிஷங்கள் நீடித்தது. |
| "ஃபேஸ்புக்' பெண் நண்பரிடம் பணம் கேட்டு மிரட்டிய பஞ்சாப் இளைஞர் தலைமறைவு Posted: 05 Oct 2013 11:57 AM PDT தில்லியில் வசிக்கும் "ஃபேஸ்புக்' பெண் நண்பரிடம் பணம் கேட்டு மிரட்டிய பஞ்சாப் மாநில இளைஞரைப் போலீஸார் தேடி வருகின்றனர். |
| துபாய்க்கு கடத்தப்படவிருந்த போதை மாத்திரைகள் பறிமுதல் Posted: 05 Oct 2013 11:57 AM PDT தில்லியிலிருந்து கொச்சி வழியாக துபாய்க்கு கடத்திச் செல்லப்படவிருந்த ரூ.19 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. |
| ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் கேஜரிவால் Posted: 05 Oct 2013 11:56 AM PDT தில்லி பிரதேச சட்டப்பேரைவத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக அக் கட்சியின் அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் அறிவிக்கப்பட்டார். |
| காணாமல்போன ஜெர்மன் பெண் ஃபரீதாபாதில் மர்மச் சாவு Posted: 05 Oct 2013 11:56 AM PDT தில்லியில் காணாமல்போன ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இளம்பெண், தேசியத் தலைநகர் வலயம் ஃபரீதாபாத் ரயில்வே தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. |
| ராகுல் குறித்து ஷீலா தீட்சித் கருத்து Posted: 05 Oct 2013 11:56 AM PDT அண்மையில் மத்திய அரசு கொண்டு வந்து பின்னர் திரும்பப் பெற்றுக் கொண்ட அவசரச் சட்டம் குறித்த ராகுல் காந்தியின் விமர்சனங்களுக்கு தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் பதில் அளித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்த அவர், "நம்மில் பலரும் உணர்வதைத்தான் ரா |
| கூட்டத்தில் மினி வேன் புகுந்து பெண் சாவு Posted: 05 Oct 2013 11:55 AM PDT மதுராந்தகம் அருகே 100 நாள் வேலைத் திட்ட பயனாளிகள் கூட்டத்தில் மினி வேன் புகுந்து ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் இறந்தார். |
| விபத்தில் சிக்கி பள்ளத்தில் கவிழ்ந்த மணல் லாரி Posted: 05 Oct 2013 11:55 AM PDT கூடுவாஞ்சேரி அருகில் சனிக்கிழமை செங்கல்பட்டிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற டேங்கர் லாரி மீது மணல் ஏற்றிச் சென்ற லாரி மோதிவிட்டு அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது . |
| கல்பாக்கம் அணு மின் நிலையத்தைச் சுற்றி மீன் பிடிக்கத் தடை Posted: 05 Oct 2013 11:55 AM PDT கல்பாக்கம் அணு மின் நிலையத்தைச் சுற்றி 500 மீட்டர் தூரத்துக்கு மீன் பிடிக்க தடை விதித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் லி. சித்ரசேனன் உத்தரவிட்டுள்ளார். |
| மரக்கன்றுகள் நடும் தொழில்நுட்ப பயிற்சிக் கூட்டம் Posted: 05 Oct 2013 11:54 AM PDT தமிழ்நாடு வனத்துறை திட்டத்தின்கீழ் காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகளுக்குப் பட்டா நிலங்களில் மரக்கன்றுகள் நடும் தொழில்நுட்பப் பயிற்சிக் கூட்டம் செங்கல்பட்டு வனவிரிவாக்க கோட்ட அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| பட்டு உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை: மத்திய அமைச்சர் உறுதி Posted: 05 Oct 2013 11:54 AM PDT : உள்நாட்டில் பட்டு உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய ஜவுளித் துறை அமைச்சர் கெüரி சாம்பாசிவ ராவ் உறுதியளித்தார். |
| காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தில் தொடரும் பைக் திருட்டு Posted: 05 Oct 2013 11:54 AM PDT காஞ்சிபுரம் பழைய ரயில் நிலைய வாகன நிறுத்துமிடத்தில் கடந்த 1 வாரமாக இருசக்கர வாகனங்கள் திருட்டு அதிகரித்துள்ளது. |
| விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் Posted: 05 Oct 2013 11:53 AM PDT உத்தரமேரூரில் பஞ்சமி நில மீட்பு ஆணையத்தை நடைமுறைப்படுத்தக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| ஆதிபராசக்தி பொறியியல் மாணவர்கள் ஒட்டுமொத்த சாம்பியன் Posted: 05 Oct 2013 11:53 AM PDT அண்ணா பல்கலைக்கழக மண்டல அளவிலான பொறியியல் கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற தடகள போட்டிகளில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. |
| டி.வி., பிரிட்ஜ், வாஷிங்மெஷின் வாங்க இந்தியன் வங்கிக் கடன் Posted: 05 Oct 2013 11:53 AM PDT பண்டிகை காலத்தை முன்னிட்டு, புதிதாக வீட்டுக் கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கு வீட்டு உபயோகப் பொருள்களான டி.வி., பிரிட்ஜ், வாஷிங்மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்க 10.20 சதவீத வட்டிக்குக் கடன் வழங்கப்படும் என்று இந்தியன் வங்கி அறிவித்துள்ளது. |
| வாக்குச் சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் Posted: 05 Oct 2013 11:53 AM PDT உத்தரமேரூர் தொகுதி வாக்குச் சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை வாலாஜாபாத்தில் நடைபெற்றது. |
| Posted: 05 Oct 2013 11:52 AM PDT திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மாதவரம் சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புழல் அருகே லட்சுமிபுரத்தில் வெள்ளிக்கிழமை நடந்தது. |
| செங்கல்பட்டில் கோலாகலமாக தொடங்கிய 10 நாள் தசரா திருவிழா Posted: 05 Oct 2013 11:52 AM PDT செங்கல்பட்டில் உள்ள கோயில்களில் நவராத்திரி விழா சனிக்கிழமை தொடங்கியது. |
| தேசிய நெடுஞ்சாலையிலும் ஆக்கிரமிப்பு? Posted: 05 Oct 2013 11:51 AM PDT கும்மிடிப்பூண்டி வட்டாரத்தில் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் பல பகுதிகளில் சர்வீஸ் சாலைகளையும், தேசிய நெடுஞ்சாலையையும் கேழ்வரகு, எள் போன்றவைகளை உலர்த்தப் |
| தொழுதாவூர் கிராமத்தினர் எஸ்.பி.யிடம் மனு Posted: 05 Oct 2013 11:51 AM PDT : "எங்களை அழிக்க திட்டமிட்டுள்ளவர்களிடம் இருந்து எங்களை பாதுகாக்க வேண்டும். எங்களது கிராம மக்களை காப்பாற்ற வேண்டும்' என தொழுதாவூர் கிராம மக்கள், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி.யிடம் கோரிக்கை மனு கொடுத்தனர் . |
| சாலைகளை ஆக்கிரமித்த கால்நடைகள்: வாகன ஓட்டிகள் அவதி Posted: 05 Oct 2013 11:51 AM PDT கும்மிடிப்பூண்டியை அடுத்த புதுவாயல் - பெரியபாளையம் நெடுஞ்சாலையில் ரால்லபாடி பகுதியில் சாலையில் திரியும் மாடுகளால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். |
| தரைப்பாலத்துக்கு தடுப்பு கம்பிகள் அமைக்க கோரிக்கை Posted: 05 Oct 2013 11:50 AM PDT நெல்வாய்- ராமநாதபுரம் சாலையில் உள்ள தரைப்பாலத்துக்கு தடுப்புக் கம்பிகள் அமைத்து விபத்தைத் தடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| Posted: 05 Oct 2013 11:50 AM PDT திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மாதவரம் சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புழல் அருகே லட்சுமிபுரத்தில் வெள்ளிக்கிழமை நடந்தது. |
| Posted: 05 Oct 2013 11:50 AM PDT திருமணமான 4 மாதத்தில் மனைவி மர்மமான முறையில் இறந்ததைத் தொடர்ந்து அவரது கணவனை போலீஸார் கைது செய்தனர். |
| பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை Posted: 05 Oct 2013 11:50 AM PDT திருவள்ளூர் அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| ரயில் முன் பாய்ந்து பொறியியல் பட்டதாரி தற்கொலை Posted: 05 Oct 2013 11:49 AM PDT திருவள்ளூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி வேலை கிடைக்காத விரக்தியில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். |
| வியாபாரிகளை தாக்கிய 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது Posted: 05 Oct 2013 11:49 AM PDT புழல் பகுதியில் கடைகளை அடித்து உடைத்து வியாபாரிகளை தாக்கியதாக மூன்று ரெüடிகள், வியாழக்கிழமை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். |
| மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி தொடக்கம் Posted: 05 Oct 2013 11:49 AM PDT திருவள்ளூரில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியை சனிக்கிழமை வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.வி.ரமணா தொடங்கி வைத்தார். |
| அமைச்சர்கள் தேர்வு: தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் கடும் போட்டி Posted: 05 Oct 2013 11:49 AM PDT இலங்கையின் வடக்கு மாகாணத் தேர்தலில் அபார வெற்றி பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அமைச்சர் பதவிக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. |
| மழைநீர் சேகரிப்புப் பணி தீவிரம் Posted: 05 Oct 2013 11:49 AM PDT திருவள்ளூர் மாவட்டம், ஆவடி நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மழைநீர் சேகரிப்புப் பணி, பிளாஸ்டிக் பைகள் ஒழிப்புப் பணிகள் குறித்து விழிப்புணர்வு பிரசாரப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. |
| Posted: 05 Oct 2013 11:48 AM PDT கும்மிடிப்பூண்டியை அடுத்த வாணியமல்லி பகுதியில் சனிக்கிழமை மின்கசிவின் காரணமாக 4 குடிசை வீடுகள் தீக்கிரையாயின. |
| கால்வாயில் மிதந்த முதியவர் சடலம் Posted: 05 Oct 2013 11:48 AM PDT திருவள்ளூர் அருகே சென்னை குடிநீருக்குச் செல்லும் இணைப்புக் கால்வாயில் மிதந்து வந்த முதியவரின் சடலத்தை கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
| Posted: 05 Oct 2013 11:48 AM PDT பழவேற்காட்டில் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை வட்ட வழங்கல் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர். பழவேற்காடு பகுதியில் உள்ள வீடுகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு ஆந்திரத்துக்கு கடத்த செல்லப்பட்டு வருவதாக பொன்னேரி வட்ட |
| நிலக்கோட்டை அருகே ஊரைக் காலி செய்து மலையில் குடியேறிய மக்கள் Posted: 05 Oct 2013 11:47 AM PDT நிலக்கோட்டை அருகே உள்ள நடுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென்று கோரி ஊரைக் காலி செய்து அருகில் உள்ள மலைக் கரட்டில் குடியேறி உள்ளனர். |
| ரியல் எஸ்டேட் அதிபர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி Posted: 05 Oct 2013 11:47 AM PDT ஒட்டன்சத்திரத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி மேற்கொண்டார். |
| Posted: 05 Oct 2013 11:46 AM PDT திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் வரும் அக. 10-ஆம் தேதி பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. |
| ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி ரூ. 12 லட்சம் மோசடி: 3 பேர் கைது Posted: 05 Oct 2013 11:46 AM PDT நிலக்கோட்டை அருகே முகாமில் வசித்து வந்த இலங்கை தமிழர்கள் 12 பேரை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி ரூ. 12 லட்சம் மோசடி செய்த 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். |
| Posted: 05 Oct 2013 11:46 AM PDT தம்பியின் நிலத்தை போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்த அண்ணன் உள்பட 7 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். |
| உதவி தொடக்கக் கல்வி அலுவலர் நியமன பட்டியல் வெளியீடு Posted: 05 Oct 2013 11:45 AM PDT அரசு கள்ளர் சீரமைப்புத் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள், கல்வி துறையைப் போல் கள்ளர் சீரமைப்புத் துறை பள்ளிகளுக்கும், உதவி தொடக்கக் கல்வி அலுவலரை நியமிக்க வேண்டும் என்ற நீண்டநாள் |
| கூட்டுறவு மருந்துக் கடை திறப்பு Posted: 05 Oct 2013 11:45 AM PDT தேனி அல்லி நகரத்தில் சனிக்கிழமை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் சார்பில் புதிய கூட்டுறவு மருந்துக் கடையை நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். |
| காந்திய மக்கள் இயக்கக் கூட்டம் Posted: 05 Oct 2013 11:45 AM PDT பழனியில் காந்திய மக்கள் இயக்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. |
| Posted: 05 Oct 2013 11:45 AM PDT சீன ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு நடால் முன்னேறினால், டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தைப் பிடிப்பார் என்று இப்போட்டி தொடங்கும் முன்பே தெரிவிக்கப்பட்டது. அதேபோல், தற்போது நடால் இறுதிச்சுற்றை எட்டியுள்ளார். |
| Posted: 05 Oct 2013 11:45 AM PDT திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு சின்னபள்ளிவாசலில் மினாரா நிறுவப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. விழாவுக்கு பெரிய பள்ளிவாசல் தலைவர் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்துப் பேசினார். முஹமது யசூப் |
| பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கம் Posted: 05 Oct 2013 11:44 AM PDT அருப்புக்கோட்டை செüடாம்பிகா பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் துறை சார்பில் தொழில் நுட்பக் கருத்தரங்கம் நடைபெற்றது. |
| மாற்றுத்திறனாளிகளுக்கு நாளை தடகளப் போட்டி Posted: 05 Oct 2013 11:44 AM PDT தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நிகழாண்டிற்கான மாவட்ட அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளப் போட்டி அக்டோபர் 7ஆம் தேதி நடைபெறுவதாக மாவ |
| தாட்கோ திட்டத்தில் கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்பு Posted: 05 Oct 2013 11:44 AM PDT விருதுநகர் மாவட்டத்தில் தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு தொழில் திட்டங்களுக்கு கடனுதவி பெற இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
| சீன ஓபன் டென்னிஸ்: சானியா ஜோடி சாம்பியன் Posted: 05 Oct 2013 11:44 AM PDT சீன ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. |
| வரும் மக்களவைத் தேர்தலில் தொண்டர்கள் அதிமுக வெற்றிக்கு பாடுபட வேண்டும்: அமைச்சர் Posted: 05 Oct 2013 11:43 AM PDT வரும் மக்களவைத் தேர்தலில் தொண்டர்கள் அதிமுக வெற்றிக்கு பாடுபட வேண்டும் என அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி கேட்டுக் கொண்டார். |
| Posted: 05 Oct 2013 11:43 AM PDT ராஜபாளையம் செஸ் கிளப் சார்பில் விருதுநகர் மாவட்ட அளவிலான 8,10,13,17 வயதுடையவர்களுக்கான செஸ் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (அக். 6) ராஜபாளையத்தில் நடைபெற உள்ளது. |
| பெண்ணைத் தாக்கி பணம், நகை பறித்த வழக்கு: இருவருக்கு தலா 7 ஆண்டு சிறை Posted: 05 Oct 2013 11:43 AM PDT ராஜபாளையத்தில், ஆசிரியர் மனைவியை வீடு புகுந்து தாக்கி நகை, பணத்தை கொள்ளையடித்த வழக்கில் இருவருக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சனிக்கிழமை தலா 7 |
| பாலியல் வன்முறை தடுப்பு சட்ட விழிப்புணர்வு முகாம் Posted: 05 Oct 2013 11:43 AM PDT அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியில் ராகிங் தடுப்புக்குழு சார்பில் முதலாமாண்டு மாணவ- மாணவிகளுக்கான சிறப்புக் கருத்தரங்கம் சாது கலையரங்கில் நடைபெற்றது. |
| துலீப் கோப்பை: தெற்கு மண்டலம் 600; மேற்கு மண்டலம் திணறல் Posted: 05 Oct 2013 11:43 AM PDT துலீப் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் காலிறுதியில் முதல் இன்னிங்ஸில் தெற்கு மண்டலம் அணி 600 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. மேற்கு மண்டலம் அணி 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. |
| சிவகாசியில் ரௌடிகளிடம் போலீஸார் விசாரணை Posted: 05 Oct 2013 11:42 AM PDT சிவகாசி காவல் கோட்டத்தில் குற்றம் நடைபெறாமல் தடுக்க போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன் அடிப்படையில் வியாழக்கிழமை ரௌடிகள் 33 பேரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். |
| இந்தியா ஏ - மேற்கிந்தியத் தீவுகள் ஏ 2-வது டெஸ்ட் டிரா Posted: 05 Oct 2013 11:42 AM PDT இந்தியா ஏ மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஏ அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. |
| பரமக்குடியில் இந்திய கம்யூ. மறியல்: 4 பெண்கள் உள்பட 30 பேர் கைது Posted: 05 Oct 2013 11:42 AM PDT பரமக்குடி சந்தைக்கடைத் தெரு தேசிய நெடுஞ்சாலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக்கோரி சனிக்கிழமை சாலை மறியல் நடைபெற்றது. மறியலில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட 30 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| சமுதாய தலைவர்களின் படங்கள் அகற்றம்: மென்னந்தியில் 2 பஸ்கள் சிறைபிடிப்பு Posted: 05 Oct 2013 11:41 AM PDT பரமக்குடி வட்டம் போகலூர் ஒன்றியத்தில் அரசு புறம்போக்கு இடங்களில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த சமுதாயத் தலைவர்களின் உருவப்படங்களை அகற்றும் பணி சனிக்கிழமை நடைபெற்றது. |
| ஏர்வாடியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பின் Posted: 05 Oct 2013 11:41 AM PDT ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடியில் சனிக்கிழமை டால்பின் மீன் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. |
| 19 வயதுக்குட்பட்டோர் தொடர்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா Posted: 05 Oct 2013 11:41 AM PDT தென் ஆப்பிரிக்காவை 201 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது. |
| புனித ஜெபமாலை அன்னை ஆலய தேர்ப் பவனி Posted: 05 Oct 2013 11:41 AM PDT ராமநாதபுரம் புனித ஜெபமாலை அன்னை ஆலய திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை திருவிழா சிறப்புத் திருப்பலியும், அன்னை தேரில் எழுந்தருளி காட்சி தரும் தேர் பவனியும் நடைபெற்றது. |
| அண்ணன்,தம்பிக்கு வெட்டு: 3 பேர் கைது Posted: 05 Oct 2013 11:40 AM PDT கமுதி அருகே உறவினர்கள் இடையே முன் விரோதத்தில் அண்ணன், தம்பி யை வெட்டியதாக மூவரை போலீஸார் கைது செய்தனர். பேரையூர் காவல் நிலைய சரகம் மேல கன்னிசேரியை சேர்ந்தவர் பழனிச்சாமி |
| டிரினிடாடை 153 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது மும்பை Posted: 05 Oct 2013 11:40 AM PDT சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 2-வது அரையிறுதியில் மும்பை அணிக்கு 154 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது டிரினிடாட் அண்ட் டொபாகோ. |
| தேவகோட்டையில்அக்.10 பட்டா மாறுதல் சிறப்பு முகாம் Posted: 05 Oct 2013 11:40 AM PDT வட்ட அளவிலான பட்டா மாறுதல் சிறப்பு முகாம் வரும் அக்.10ஆம் தேதி தேவகோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் வே.ராஜா |
| அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர், ஜேசிபி இயந்திரம் பறிமுதல்: 2 பேர் கைது Posted: 05 Oct 2013 11:39 AM PDT திருவாடானை தாலுகா தொண்டி அருகே, சோழியக்குடி ஆற்றுப் பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர், ஜேசிபி இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். |
| ஐஜேஎஃப் ஜூடோ கிராண்ட்ப்ரீ: கல்பனாவுக்கு வெண்கலம் Posted: 05 Oct 2013 11:39 AM PDT உஸ்பெகிஸ்தானின் தாஷ்கெண்ட்டில் நடைபெற்ற ஐஜேஎஃப் ஜூடோ கிராண்ட்ப்ரீ சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் கல்பனா தேவி வெண்கலம் வென்றார். |
| இந்திய கம்யூ. மறியல்: 916 பேர் கைது Posted: 05 Oct 2013 11:39 AM PDT விருதுநகரில் இந்திய கம்யூனிஸ்ட் நடத்திய மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 251 பெண்கள் உள்ளிட்ட 916 பேரை சனிக்கிழமை போலீஸார் கைது செய்தனர். |
| பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு Posted: 05 Oct 2013 11:39 AM PDT ஸ்ரீவில்லிபுத்தூரில் பட்டப்பகலில் பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலி பறித்துச் சென்றவரை போலீஸார் தேடி வருகிறார்கள். |
| கோயில்களில் நவராத்திரி விழா துவக்கம் Posted: 05 Oct 2013 11:38 AM PDT ராஜபாளையம் அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நவராத்திரி உற்சவம் சனிக்கிழமை துவங்கியது. அக்டோபர் 14 வரை இந்த உற்சவம் நடைபெறுகிறது. |
| பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி Posted: 05 Oct 2013 11:38 AM PDT பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணியை நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் நடத்தினர். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி திஉநாச வைத்திலிங்க நாடார் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலத்திட்டப் பணி மாணவர்களின் சிறப்பு முகாம் பள்ளிமடம் கிராமத்தில் நடைபெற்றது. |
| ஆட்டோ கிராண்ட்ப்ரீ உலக சீரிஸ்: 15-வது சுற்றில் நரேன் வெற்றி Posted: 05 Oct 2013 11:38 AM PDT 2013-ம் ஆண்டுக்கான ஆட்டோ கிராண்ட்ப்ரீ உலக சீரிஸ் கார் பந்தயத்தின் 15-வது சுற்றில் இந்தியாவின் நரேன் கார்த்திகேயன் வெற்றி பெற்றுள்ளார். |
| மகளிர் கல்லூரியில் கருத்தரங்கம் Posted: 05 Oct 2013 11:38 AM PDT சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரி தமிழ்த் துறையும், திருச்சி தமிழாய்வுச் சங்கமும் இணைந்து "தமிழ் இலக்கியங்களில் வாழ்வியல் அறங்கள்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தின. நிகழ்ச்சிக்கு முதல்வர் த. |
| பட்டாசு தொழிற்சங்க கிளைகள் தொடக்கம் Posted: 05 Oct 2013 11:38 AM PDT சிவகாசி ஊராட்சி ஒன்றியம் பெத்துலுபட்டி, சுப்பிரமணியபுரம் காலனி, வாடியூர் ஆகிய ஊர்களிலும், விருதுநகர் ஒன்றியம் வி. முத்துலிங்காபுரம், சாத்தூர் ஒன்றியம் முத்தால் நாயக்கன்பட்டி ஆகிய ஊர்களில் பட்டாசு தொழிற்சங்க கிளைகள் தொடங்கப்பட்டன. சங்கத் தலைவராக பெத்துலுபட்டியில் என். சீனியம் |
| இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது ராஜஸ்தான் Posted: 05 Oct 2013 11:37 AM PDT சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸிடம் தோல்வியைத் தழுவியது. |
| இந்திய கம்யூ. மறியல்: 1530 பேர் கைது Posted: 05 Oct 2013 11:37 AM PDT மத்திய அரசைக் கண்டித்து சிவகங்கை மாவட்டம் முழுவதும் மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகங்கை தொகுதி எம்.எல்.ஏ மற்றும் அக்கட்சியின் 515 பெ |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |