Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தெலுங்கானாவை எதிர்த்து ஆந்திராவில் முழு பந்த்...: மந்திரி, எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா தொடர்கிறது

Posted:

ஐதராபாத் : ஆந்திராவை பிரித்து, தெலுங்கானா மாநிலம் உருவாக்க, மத்திய அமைச்சரவை, நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, தெலுங்கானா அல்லாத மற்ற ஆந்திர மாநில பகுதிகளில், மூன்று நாள், "பந்த்' நடைபெறுகிறது. இதனால், இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து வருகின்றனர். "தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட வேண்டும்' என, ஆந்திராவில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக, கோரிக்கை இருந்து வருகிறது. கடந்த இரு ஆண்டுகளாக, இந்த ...

ஏற்காடு இடை தேர்தல் தேதி அறிவிப்பு: களமிறங்க தி.மு.க.,வினர் ஆர்வம்

Posted:

ஏற்காடு சட்டசபைத் தொகுதிக்கான இடைத் தேர்தல், டிசம்பர் 4ம் தேதி நடக்கிறது. இதற்கான அறிவிப்பை, தலைமை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டதும், தமிழகத்தில், இடைத் தேர்தல் பற்றிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இத்தேர்தலில் முக்கிய எதிர்க்கட்சியான தி.மு.க., போட்டியிடுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இந்த தொகுதியில், 2011 தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட பெருமாள், 37,592 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க.,வின் தமிழ்செல்வன், 66,639 ஓட்டுக்கள் பெற்று தோல்வி அடைந்தார். இந்நிலையில், ...

சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலையில் தேடப்பட்ட பயங்கரவாதி 'போலீஸ்' பக்ருதீன் சிக்கினான்!

Posted:

சென்னை : சேலம் ஆடிட்டரும், பா.ஜ., மாநில பொதுச் செயலருமான ரமேஷ் மற்றும் வேலூர் இந்து முன்னணி பிரமுகர் வெள்ளையன் கொலை வழக்குகளில் தேடப்பட்டு வந்த, பயங்கரவாதி, 'போலீஸ்' பக்ருதீன், சென்னை அருகே, ஆந்திர மாநில எல்லைப் பகுதியில், மாலை சிக்கினான்வேலூரில், ஜூலை மாதம், 1ம் தேதி, இந்து முன்னணி பிரமுகர், வெள்ளையப்பன் கொடூரமாக கொல்லப்பட்டார். தொடர்ந்து, அதே மாதம், 19ம் தேதி, சேலத்தில், பா.ஜ., அலுவலகம் முன், அக்கட்சியின் மாநில பொதுச் செயலர், ஆடிட்டர் ரமேஷை, மூவர் கும்பல் வெட்டிச் சாய்த்தது. தொடர்ந்து, இந்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்த, சி.பி.சி.ஐ.டி., - டி.ஜி.பி., ...

சுற்றுலா மையங்களில் அதிகரிக்கும் பிச்சைக்காரர்களால் தர்ம சங்கடம்

Posted:

ஊட்டி:நீலகிரியில், அதிகரித்து வரும் பிச்சைக்காரர்கள், சுற்றுலா மையங்களை முற்றுகையிடுவதால், சுற்றுலாப் பயணிகள் தர்ம சங்கடத்தை எதிர் கொள்கின்றனர்.நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி, குன்னூர் போன்ற இடங்களில், சமீபகாலமாக வெளி மாவட்டம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வரும் கும்பல், ஆங்காங்கே உள்ள பஸ் ஸ்டாண்டு, பிளாட்பாரங்களில், முகாமிட்டு, நாடோடிகளாக வாழ்ந்து வருகின்றனர். குடும்பம் சகிதமாக, முகாமிடும் அவர்கள், தங்கள் குழந்தைகளை கையேந்தி பணம் சம்பாதிக்க செய்கின்றனர். சுற்றுலா மையங்களில், காலை முதல் இரவு வரை சுற்றித் திரியும் இக்குழந்தைகள், சுற்றுலா ...

பருவமழை பெய்யுமா என விவசாயிகள் எதிர்பார்ப்பு : சம்பா பயிரை காப்பாற்ற முடியாமல் தவிப்பு

Posted:

கடலூர்:தென்மேற்கு பருவ மழையை பயன்படுத்தி சாகுபடி செய்த சம்பா நெல்லைக் காப்பாற்ற விவசாயிகள், வடகிழக்கு பருவமழையை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.கடலூர் மாவட்டத்தில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இயற்கையாக ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை பெய்யும் தென்மேற்கு பருவமழையில் குறுவை சாகுபடியும், அக்டோர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பெய்யும் வடகிழக்கு பருவமழையை பயன்படுத்தி சம்பா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.கடந்தாண்டு பருவமழை பொய்த்து, வறட்சி நிலவியதால் மாவட்டத்தில் விவசாயிகள் பெரும் வேதனைக்கு ஆளாகினர். இந்தாண்டு கோடை ...

5 மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு: காங்., - பா.ஜ., கட்சிகளுக்கு இடையே மோதல்

Posted:

புதுடில்லி : 'மினி லோக்சபா தேர்தல்' என, வர்ணிக்கப்படும், ம.பி., ராஜஸ்தான், டில்லி, சத்தீஸ்கர், மிசோரம், ஆகிய, ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில், முதல் முறையாக, வாக்காளர்களுக்கு, வேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளதால், அரசியல் கட்சிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக நடக்கும், இந்த சட்டசபை தேர்தல்கள், காங்., – பா.ஜ., இடையேயான, அரையிறுதிப் போட்டியாகவும் கருதப்படுகிறது.சத்தீஸ்கரில், முதல்வர் ராமன் சிங் தலைமையிலான, பா.ஜ., ஆட்சியும், டில்லியில், முதல்வர் ஷீலா ...

'அவசர சட்டம் வாபசுக்கு ஜனாதிபதியே காரணம்' : பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி 'பளார்'

Posted:

புதுடில்லி: ''தண்டனை பெறும் மக்கள் பிரதிநிதிகளை பாதுகாக்கும் அவசர சட்டம், வாபஸ் பெறப்பட்டதற்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தான் காரணமே தவிர; ராகுல் அல்ல,'' என்று பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார்.தண்டனை பெற்ற எம்.பி., – எம்.எல்.ஏ.,க்களின் பதவிகளை பாதுகாக்கும் வகையில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்த மத்திய அரசு, இது தொடர்பாக அவசர சட்டம் கொண்டு வந்தது. இதற்கு, காங்., துணைத் தலைவர் ராகுல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதைத்தொடர்ந்து, அமெரிக்கா சென்று இருந்த பிரதமர் மன்மோகன் சிங், டில்லி ...

உத்தரகண்ட் பேரிடரிலிருந்து பாடம் கற்க வேண்டும்: மன்மோகன் அறிவுரை

Posted:

புதுடில்லி : ''உத்தரகண்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ளும் விஷயங்களில், நாம் பாடம் கற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது,'' என, பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமான, என்.டி.எம்.ஏ.,வின், 9ம் ஆண்டு துவக்க விழாவில், பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:நம் நாட்டில், மழை, புயல், நில நடுக்கம், சுனாமி, வெள்ளப் பெருக்கு போன்ற, பல்வேறு இயற்கை சீற்றங்கள் ஏற்படுகின்றன. இவை தவிர, மனிதர்களால் ஏற்படும் பேரழிவுகளும் நிகழ்கின்றன.கடந்த காலங்களில் நிகழ்ந்த, இதுபோன்ற பேரிடர்களால், நமக்கு, பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ...

திருப்பதி பிரம்மோற்சவத்திற்கு பக்தர்கள் வருவதில் சிக்கல் : பேருந்துகளை இயக்க போக்குவரத்துக்கழகம் மறுப்பு

Posted:

திருப்பதி: ஆந்திர மாநிலத்தில் இருந்து, தெலுங்கானாவைப் பிரிக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததற்கு, எதிர்ப்பு தெரிவித்து, நேற்று முன்தினம் நள்ளிரவு முதல், ஆந்திராவின், 13 மாவட்டங்களில், போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இதனால், திருப்பதி பிரம்மோற்சவத்திற்கு, பக்தர்கள் வருவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது. தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருப்பதியில், 48 மணி நேர போராட்டம், சித்தூர் மாவட்டத்தில், 72 மணி நேர போராட்டம் நடத்தப்படுகிறது. இதன் காரணமாக, திருப்பதிக்கு உள்ளே வரவோ, அங்கிருந்து வெளியே செல்லவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திருப்பதிக்கு ...

தமிழகத்திற்கு வரும் கிருஷ்ணா நதி நீரை தடுக்கும் போராட்டம்

Posted:

ஆந்திராவில் இருந்து, தமிழகத்திற்கு கிருஷ்ணா நீர் அனுப்பவதை நிறுத்த, 7ம் தேதி போராட்டம் நடத்த ஒன்றுபட்ட ஆந்திர போராட்டக் குழு அறிவித்துள்ளது.ஆந்திர மாநிலத்தை பிரிக்க எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவில் போராட்டம் நடந்து வருகிறது. ஆந்திர மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், மாநிலத்தைப் பிரிக்க ஒப்புதல் அளித்துள்ளதால், அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழகத்திற்கு திறந்து விடப்படும் கிருஷ்ணா நதிநீரை நிறுத்தி போராட்டம் நடத்த, ஒன்றுபட்ட ஆந்திர போராட்டக் குழு முடிவு ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™