Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


சமயபுரம் மாரியம்மன் கோவில்

Posted: 04 Oct 2013 12:56 PM PDT

மகாளய அமாவாசையை யட்டி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உற்சவஅம்மன் அலங்கரிக்கப்பட்ட காளை வாகனத்தில் பவனி வந்த போது எடுத்த படம்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா இன்று தொடங்குகிறது

Posted: 04 Oct 2013 11:41 AM PDT

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், வருடாந்திர பிரம்மோற்சவ விழா, இன்று தொடங்குகிறது.

பிரம்மோற்சவ விழா

உலக புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான பிரம்மோற்சவ விழா, இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. வருகிற 13–ந் தேதி வரை (9 நாட்கள்) விழா நடைபெறும்.

இன்று கொடியேற்றம்

ஆந்திரா பிரிவினையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு காங்கிரஸ் எம்.பி. தொடருகிறார்

Posted: 04 Oct 2013 11:35 AM PDT

புதுடெல்லி,

ஆந்திரா பிரிவினைக்கு காங்கிரஸ் கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மத்திய மந்திரிகள், எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து வருகிறார்கள். இந்த நிலையில், விஜயவாடா தொகுதி காங்கிரஸ் எம்.பி. ராஜகோபால், மாநில பிரிவினை முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடரப்போவதாக அறிவித்து இருக்கிறார்.

முல்லைத்தீவில் பிரபாகரன் தங்கி இருந்த பதுங்கு குழியை குண்டு வைத்து தகர்த்த இலங்கை ராணுவம்

Posted: 04 Oct 2013 11:33 AM PDT

கொழும்பு,

முல்லைத்தீவில், பிரபாகரன் தங்கி இருந்த பதுங்கு குழியை இலங்கை ராணுவம் குண்டு வைத்து தகர்த்தது.

பிரபாகரனின் பதுங்கு குழி

இலங்கையில் முல்லைத்தீவு பகுதியில் கடந்த 2009–ம் ஆண்டு மே 18–ந் தேதி சிங்கள ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிக்கட்ட போரில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனும், அவருடன் இருந்தவர்களும் கொல்லப்பட்டனர்.

‘2014 பொதுத்தேர்தல், காங்கிரசுக்கு வாழ்வா–சாவா? பிரச்சினை அல்ல’ ராகுல் காந்தி சொல்கிறார்

Posted: 04 Oct 2013 10:56 AM PDT

ராஜ்கோட்,

2014–ம் ஆண்டு பொதுத்தேர்தல் காங்கிரசுக்கு வாழ்வா–சாவா? என்ற பிரச்சினையை ஏற்படுத்தாது என்று, தொண்டர்களிடம் ராகுல் காந்தி கூறினார்.

ஊழியர் கூட்டம்

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, குஜராத் மாநிலத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். ராஜ்கோட் நகரில் நடைபெற்ற கட்சி தொண்டர்கள் கூட்டத்தில் உரையாற்றியபோது, அவர் இவ்வாறு கூறியதாக, காங்கிரஸ் எம்.பி. விக்ரம் மதாம் கூறினார்.  பத்திரிகையாளர்கள் யாரும் இந்த கூட்டத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. ராகுல்காந்தி பேசும்போது கூறியதாவது–

தேர்தலுக்குப்பிறகும் காங்கிரஸ்

தீவிரவாத தாக்குதல்களுக்கு தொடர்பு இல்லை என்று கூறுவதா? பாகிஸ்தானுக்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கண்டனம்

Posted: 04 Oct 2013 10:53 AM PDT

பிரசல்ஸ்,

இந்தியாவில் நடைபெறும் தீவிரவாத தாக்குதல்களுக்கு தொடர்பு இல்லை என்று கூறுவதா? என்று, பாகிஸ்தானுக்கு இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கண்டனம் தெரிவித்தார்.

பெல்ஜியம் நாட்டில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

கடும் கண்டனம்

இடைத்தேர்தல் நடைபெறும் ஏற்காடு தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2,34,734 பேர்

Posted: 04 Oct 2013 10:09 AM PDT

சென்னை,

தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஏற்காடு தனி (எஸ்.டி.) தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 34 ஆயிரத்து 734 ஆகும். ஏற்காடு தொகுதி அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில், தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன.

சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள ஏற்காடு சட்டசபை தொகுதிக்கு டிசம்பர் 4–ந் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக, தலைமை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:–

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்

நவராத்திரி நடன ஒத்திகை

Posted: 04 Oct 2013 10:04 AM PDT

குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் நவராத்திரி விழாவையட்டி நடைபெறும் கோர்பா நடனம் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். இதற்கான நடன ஒத்திகையில் இளம்பெண்கள் ஈடுபட்ட காட்சி.

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் 2–வது அரைஇறுதியில் மும்பை–டிரினிடாட் இன்று மோதல்

Posted: 04 Oct 2013 10:00 AM PDT

புதுடெல்லி,

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்றிரவு (சனிக்கிழமை) அரங்கேறும் இரண்டாவது அரைஇறுதியில் ஐ.பி.எல். சாம்பியன் ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்சும், வெஸ்ட் இண்டீசை சேர்ந்த தினேஷ் ராம்டின் தலைமையிலான டிரினிடாட் அண்ட் டொபாக்கோ அணியும் மோதுகின்றன. பந்து வீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி இரு அணியும் சரிசம பலத்துடன் திகழ்வதால் இந்த போட்டியில் யார் கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினமான விஷயமாகும்.

சோனியா அறிவுறுத்தலால் ராகுல் கருத்து வெளியிட்டாரா? அத்வானி கருத்தை காங்கிரஸ் நிராகரித்தது

Posted: 04 Oct 2013 09:28 AM PDT

புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவுறுத்தலின் பேரில்தான், கிரிமினல் வழக்கில் தண்டிக்கப்படுகிற மக்கள் பிரதிநிதிகள் பதவி இழப்பதை தடுக்கும் அவசர சட்டம் பற்றி ராகுல் காந்தி ஆவேசமாக கருத்து தெரிவித்தார் என பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானி தனது வலைத்தளத்தில் கூறி உள்ளார்.

ஆனால் அத்வானியின் கருத்தை காங்கிரஸ் நிராகரித்து விட்டது.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™