Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


மோடி மேஜிக் ! வெற்றி வியூகமா...வெற்று கோஷமா ?

Posted: 04 Oct 2013 11:50 AM PDT




நன்றிகள்:ஆ.வி

தொன்மையான கிரேக்கம்!

Posted: 04 Oct 2013 11:34 AM PDT

கி.மு.800-காலகட்டத்திற்கு பிறகு வந்த காலத்தில் கிரேக்க கலாசாரம் புத்துயிர் பெற தொடங்கியது. இந்த கலாசாரம் 500- கால கட்டத்தில் தழைத்தோங்கியது. இதன் பெயர், ஆகெய்யிக் காலம். கிரேக்க ஜனத் தொகை பெருக தொடங்கி பிற நிலங்களோடு தொடர்புகளும் ஏற்படலாயின. கிரேக்ககலை முன்னேற்றமடைந்தது. எழுத்துக் கலை மறுபடியும் கண்டுபிடிக்கப்பட்டு முன்னேற்றமடைந்தது. முதல் காலனிகள்! கி.மு.1000 ஆண்டிற்கு முன் கிரேக்கத்தின் பிரதான பகுதியிலிருந்து மக்கள் கடல் தாண்டி புதிய நிலப் பகுதிகளை தேடி நகர தொடங்கினர். பஞ்சம், வெள்ளம் ...

கோபம் கோபமா வருது! - சிறுவர் கதை

Posted: 04 Oct 2013 11:31 AM PDT

ஒருநாள் அதிகாலை நேரம். பனி மூட்டம் எங்கும் பரவி புகை மூட்டம் போல் காட்சி அளித்தது. லேசாக தென்றல் வீசிக் கொண்டிருந்தது. பனித்துளிகள் மரங்களின் இலைகளின் மீது படிந்து, நீர் மொட்டுக்களை உருவாக்கிக் கொண்டிருந்தன. ஆனால், ஒரு குளத்தில் இருந்த தாமரை இலை, தன் மீது விழுந்த பனித்துளிகளை சேமித்து வைப்பதில் கடினமாக உழைத்தது. பனித்துளியை சிறிதும் சேதம் ஆகி விடாமல் அவற்றைச் சேமித்து வைப்பதிலேயே தாமரை கண்ணுங் கருத்துமாக இருந்தது. நீருக்குள் இருந்த தவளை ஒன்று தாமரையின் உழைப்பைக் கண்டு ஆச்சரியப்பட்டது. ...

சொர்க்கம் போறேன்!

Posted: 04 Oct 2013 11:27 AM PDT

வெகு காலத்துக்கு முன், வீரகேசரி என்னும் பெயருடைய மன்னன் மருத நாட்டை ஆண்டு வந்தான். அவன் எந்த நாட்டை சேர்ந்த முனிவர்களாக இருந்தாலும், அவர்களை தன் நாட்டுக்கு வரவேற்று, அவர்களுக்கு எல்லா வித உதவிகளையும் அரசாங்கத்தின் சார்பில் செய்து வந்தான். ஒருசமயம் ஒரு முனிவர் வீர கேசரியின் நாட்டுக்கு வந்தார். அவர் நாட்டுக்கு வெளியே ஆசிரமம் அமைத்து, தன்னை நாடி வருபவர்களுக்கு அருளாசி வழங்கி வந்தார். தன் நாட்டுக்கு எங்கோ தூர தேசத்தில் இருந்து ஒரு முனிவர் வந்ததை அறிந்த மன்னன் வீரகேசரி, முனிவரை சந்திக்க, தன் ...

பெண்கள் மீதான தாக்குதல்களால் இந்தியாவிற்கு தலைகுனிவு-பிரணாப்

Posted: 04 Oct 2013 11:03 AM PDT

பிரஸல்ஸ்: பெண்கள் மீதான தாக்குதல்களால் இந்தியாவின் பெருமை வெளிநாடுகளில் குறைகிறது என, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கவலை தெரிவித்துள்ளார். நல்லெண்ண பயணமாக பெல்ஜியம் சென்றுள்ள அவர், அங்குள்ள இந்தியர்கள் மத்தியில் பேசும் போது, 'பெண்கள் மீதான சமீபத்திய தாக்குதல்கள் நாட்டிற்கு பெருமை தரக்கூடியவையாக இல்லை. இதுபோன்ற சம்பவங்களால், தனி நபர்களுக்கு மட்டுமல்லாது, நாட்டிற்கும் பாதிப்பு ஏற்படுகிறது. பொதுவாக இந்திய பெண்கள், நாணம், கூச்ச சுபாவம் கொண்டவர்கள். இந்நிலையில் அவர்கள் மீதான தாக்குதல்கள் தவிர்க்கப்பட ...

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Posted: 04 Oct 2013 10:48 AM PDT

benazeerfathima wrote:எல்லாம் அருமை...         

பயனுள்ள இணையத் தளங்கள்

Posted: 04 Oct 2013 10:36 AM PDT

வாக்காளர்பட்டியல் வாக்காளர் பெயர் சேர்க்கலாம் தமிழக அரசு - வாக்காளர் பட்டியல் வாக்காளர் பெயர் - ஆன்லைனில் இணைய சேவைகள் இந்திய அஞ்சல் (தபால் துறை) உச்சநீதி மன்றம் இந்திய பொது விவகாரத்துறை இந்திய இரயில்வே நீதிமன்றங்கள் (இந்தியா) தமிழ்நாடு காவல்துறை உச்சநீதி மன்றம் தேர்தல் ஆணையம் தமிழ்நாடு அரசு - பதிவுத்துறை இணையதளம் தமிழ்நாடு அரசு - வணிகவரித்துறை தமிழ்நாடு அரசு - இணையதளம் இந்திய அரசு - தூதரக இணையதளம் இந்திய அரசு - இணையதளம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் இணைய ...

காத்திருக்கிறேன்....

Posted: 04 Oct 2013 10:34 AM PDT

உன் பேச்சுக்கு மறு பேச்சு
பேசத் தான் முடியவில்லை
என்ன மாயம் செய்தாயோ
என்னை வாயடைக்க வைத்தாயோ
உள்ள மெங்கும் உன் நினைவு
உறங்கும் போதும் பிரிவதில்லை
உனக்கு என்று புரியுமென்று
எனக்கும் அது தெரியவில்லை
உன் அகம் பார்க்க எந்தனுக்கு
உன் முகம் பார்க்க துடிக்குதடி
வாடாமல் வாடுகிறேன்
வாழ்வு அளிக்க வருவாயோ
வழி மீது விழி வைத்து
காத்திருப்பேன் உனக்காக.....ஆம் காத்திருக்கிறேன் உனக்காக மட்டும்..............

சரித்திர நாவல்களின் பட்டியல் வேண்டும்

Posted: 04 Oct 2013 10:23 AM PDT

நண்பர்களே
  நமது ஈகரை இணய தளத்தில் பதிவிட பட்டுள்ள சரித்திர நாவல்களின் பட்டியல் வேண்டும் கிடைக்குமா ..?ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

கங்கைகொண்ட சோழபுரம் - எனது சில படங்கள்

Posted: 04 Oct 2013 07:52 AM PDT

கங்கைகொண்ட சோழபுரம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது

அடையாளங்கள்

Posted: 04 Oct 2013 07:41 AM PDT


-
இராமர் வருடியதால்
முதுகில் மூன்று கோடுகளோடு
அணில்!
-
தோமையார் குறியிட்ட
சிலுவையோடு நண்டு!
-
யார் வரைந்தார்களோ?
நட்சத்திர ஓட்டுடன் ஆமைகள்
நட்சத்திர ஓட்டல்கள்
பாசமுடன் சூப் வைக்க!
-
அடையாளங்கள்!
ஆபத்தானவைதான்
—————————–—————————–
>நிர்மலாசுரேஷ்
நன்றி: கடிகாரக் குயிலும் கடல் குதிரையும் – கவிதைகள்

எதையும் பாசிட்டிவா எடுதுக்கணுமாம்...!

Posted: 04 Oct 2013 07:39 AM PDT

நெகடிவ்: ஐயகோ, சீனர்கள் ஊடுவல், இந்தியாவுக்கு ஆபத்து..! - பாசிடிவ்:\ சப்பை மூக்குக்காரனுங்க, இடியாப்பம் திருடிட்டு போய் நூடுல்ஸ் பண்ணுனாங்க. இப்ப எத திருடப் போறாங்க? இட்லி தொழில் நுட்பம்? - -------------------------------- - நெகடிவ்: டி ஷர்ட்ல 'நாம் வேலைக்கு போய்ட்டா ஊற யாரு பாத்துக்கறது'ன்னு எழுதிக்கிட்டு அலையறானுவ... - பாசிட்டிவ்: டி சர்ட்டிலயும் தமிழ் வாசகமா? சூப்பர்! தமிழ் அழியாதுடா! அது எல்லா வகையிலும் நுழைந்து வளரும்...! - ====================================== - நெடிவ்: நஸ்ரியா ...

எதிர்பார்ப்பு

Posted: 04 Oct 2013 07:39 AM PDT

-- எழுத்து வாசனையே அறியாத அம்மா, தாளிப்பு வாசனையில் லயித்துக் கிடக்கிறாள் கடுகோடு சேர்த்துத் தாளிப்பாள் எரிச்சலையும் பல சமயம் - சாய்வு நாற்காலிக்கு ஓய்வே கொடுக்காமல் வரி விளம்பரங்களைக் கூடக் கண்களால் உரித்தெடுக்கும் அப்பா - அல்ஜீப்ராவை என்னிடம் அடைக்கலமாக்கி விட்டு டிஸ்கவரி சானலில் ஜீப்ரா பார்க்க பக்கத்து வீட்டுக்குப் போய்விட்ட குட்டித் தங்கை - பழையதைத் தொலைத்து விட்டு புதிய கிரிக்கெட் பந்து கேட்டு என் சம்பளக் கவரை நோட்டமிடும் சின்னதம்பி - இவர்கள் ...

கைக் குட்டை

Posted: 04 Oct 2013 07:37 AM PDT

- உதறினான் மந்திரவாதி கைக்குட்டையை உள்ளேயிருந்து பறந்தது புறா - தன் பெயரைப் பூத்தையல் செய்து காதலி தந்த கைக்குட்டையை புதையலைப் போல் பாதுகாத்தான் இளைஞன் - கைக்குட்டையைத் தலையில் சுற்றி காதில் செருகித் தொழுகை செய்தார் பக்திமான்! - சுண்டுவிரல் நுனியில் கைக்குட்டையைக் கட்டி குதியாட்டம் போட்டது பங்க்ரா நடனக்குழு! - ரயில் பயணத்தில் வரவிருக்கும் நண்பனுக்காக கைக்குட்டை விரித்துப் போட்டு இடம் பிடித்தான் தோழன்! - நெற்றி வியர்வையை விரல்களால் வழித்து விட்டு ...

பெயரும் துயரும்

Posted: 04 Oct 2013 07:35 AM PDT

- பெயர்தான் கடல்குதிரை அடக்கிவிடலாம் கைப்பிடிக்குள் மூன்று நான்கை! - பெயர்தான் நெருப்புக்கோழி பூமியில் தலை புதைத்து பாதி மண்சமாதியாய் - பெயருக்குப் பட்டதாரி எதிர்காலம் விண்ணப்பப் படிவக் கட்டிடங்களுக்குள்! பரம்பத விளையாட்டாய் - ——————————– >நிர்மலாசுரேஷ் நன்றி: கடிகாரக் குயிலும் கடல் குதிரையும் – கவிதைகள்

கோபுரங்கள்

Posted: 04 Oct 2013 07:33 AM PDT


-


–
படிகள் இல்லாத
தந்தக் கோபுரம்!
-
நிழல் இல்லாத
தஞ்சைக் கோபுரம்!
-
நேர் இல்லாத
பைசா கோபுரம்
-
வெளிச்சம் இல்லாத
ஒளிபரப்புக் கோபுரம்
-
இல்லாமல் போன
இரட்டைக் கோபுரம்!
-
—————————–
>நிர்மலாசுரேஷ்
நன்றி: கடிகாரக் குயிலும் கடல் குதிரையும் – கவிதைகள்

இந்த புன்னகை என்ன விலை ....

Posted: 04 Oct 2013 06:52 AM PDT

- படம்: தெய்வத்தாய் இசை: விஸ்வநாதன் & ராம்மூர்த்தி பாடியவர்கள்: டி.எம்.சௌந்தர்ராஜன் & பி.சுசீலா ---------------------- - இந்தப் புன்னகை என்ன விலை என் இதயம் சொன்ன விலை இவள் கன்னங்கள் என்ன விலை இந்த கைகள் தந்த விலை (இந்த) - எழுதிய கவிதைகள் ஆயிரமோ எண்ணங்கள் ஊஞ்சலில் போய் வருமோ அழகிய பெண்களின் பழக்கம் உண்டோ பாட்டுக்கள் பாடும் வழக்கம் உண்டோ (இந்த) - எந்தப் பாட்டுக்கும் தாளங்கள் வேண்டும் எந்தப் பாவைக்கும் காவல்கள் வேண்டும் எந்த ஆசைக்கும் உருவங்கள் வேண்டும் எந்தப் பார்வைக்கும் ...

ராஜராஜ சோழனின் ஆட்சி அமைப்பு

Posted: 04 Oct 2013 06:43 AM PDT

மாமன்னன் முதல் இராசராச சோழன் காலத்து சோழமண்டல வள நாடுகள் 1. அருண்மொழித் தேவ வளநாடு 2. உய்யக்கொண்டான் வளநாடு 3. இராசராச வளநாடு 4. நித்திவிநோத வளநாடு 5. இராசேந்திர சிங்க வளநாடு 6. இராசாசிரய வளநாடு 7. கேரளாந்தக வளநாடு 8. சத்திரிய சிகாமணி வளநாடு 9. பாண்டிகுலாசனி வளநாடு உலகம் போற்ற ஆட்சி செய்த இராஜராஜனின் ஆட்சி அமைப்பு: இதில் ஆட்சி முறை அமைப்பும், இன்று மாவட்டங்கள் இருப்பது போன்று அன்று எப்படி மண்டலங்களாக ஆட்சிப் பிரிவுகள் இருந்தன என்பதும், ஆட்சிக்கு உறுதுணையாக இருந்த அலுவலர்களைப் ...

முதலாம் ராஜ ராஜன்

Posted: 04 Oct 2013 06:35 AM PDT

சோழ வம்ச சொக்கத்தங்கம் மாமன்னர் ராஜ ராஜனை பற்றி சில துளிகள்!!!... தஞ்சையிலுள்ள பெரிய கோவிலில் இக்கல்வெட்டு இருக்கிறது. கோவில் கட்டியாகி விட்டது. நிர்வகிக்க யார்? யார்?. அவருக்கென்று வீடு ஒதுக்கி, வீட்டு இலக்கம் சொல்லி, பெயர் எழுதி, கல்வெட்டாய் வெட்டியிருக்கிறது. இடது சிறகு மூன்றாம் வீடு, நக்கன் பரமிக்கு பங்கு ஒன்றும், இடது சிறகு நான்காம் வீட்டு எச்சுமண்டைக்கு பங்கு ஒன்றும் என்று பல நூறு பெயர்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. வீணை வாசிக்கும் ஆதிச்சன் இறந்தமையால், அவன் மகனுக்குப் பங்கு அரையும் என்று ...

தஞ்சை பெரிய கோயில்

Posted: 04 Oct 2013 06:30 AM PDT

கருவூர்ச் சித்தரால் வடிவமைக்கப்பட்டு, மன்னன் இராச ராச சோழனால் கட்டப்பட்ட, தமிழனின் கட்டிடக்கலையைப் பறைசாற்றும் கோவிலின் பெருமை! உலகின் அதிசயம் எனக் கூறப்படும் இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் மூன்று கட்டமாக 177 வருடங்கள் கட்டப்பட்டது. இந்தக் கட்டிடத்தை முதலில் கட்டும் போது, இதன் கீழ் உள்ள மண்ணை சோதிக்காமல், ஒரு கட்டிடம் கட்டுவதற்கான அடிப்படை விசயங்களை கூட கடைப்பிடிக்காமல் கட்டிட அடித்தளத்தை மிகவும் மோசமாக கட்டினர். இதனால் இந்த கட்டிடம் சாயத்தொடங்கியது, இரண்டாம் தளம் கட்டும் போது போர் மூண்டதால் ...

சோழர் ஆட்சியில்....

Posted: 04 Oct 2013 06:14 AM PDT

இப்போது இருக்கும் நாட்டின் பெயர்கள் அனைத்தும் தமிழில் தான் இருந்ததாம்...

உதாரணம்:-

இந்தோனேசியா - விஜயம் என்று அழைக்கப்பட்டது,

லக்ஷதீப் தீவுகள்- சோழ புறம் என்றும் அழைக்கபட்டது..

தமிழர்கள் அனைவரும் அறியட்டும்...............

ஆறாம் வகுப்பு மாணவியின் அசாத்திய திறமை : வியாதிய சொல்லுங்க மருந்து சொல்றேன்...!

Posted: 04 Oct 2013 05:31 AM PDT

ஆறாம் வகுப்பு மாணவியின் அசாத்திய திறமை : வியாதிய சொல்லுங்க மருந்து சொல்றேன்...! அம்பத்தூரை சேர்ந்தவர் பாஸ்கர். பிஎஸ்சி படித்த இவர், தற்போது திருவள்ளூரில் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி பாக்கியலட்சுமி. இவர்களுடைய மகள் பாக்யஸ்ரீ (11). அம்பத்தூரில் உள்ள ஒரு பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கிறார். அதீத திறமையுள்ள இந்த பாக்யஸ்ரீயிடம் எந்த நோயை பற்றி சொன்னாலும், அந்த நோய்க்கான மருந்தின் பெயரை அடுத்த நொடியே சொல்லி விடுகிறார். மருந்துகளின் குறியீட்டை கூறினாலும் மருந்துகளின் பெயரையும், அது எந்த ...

பாடகரானார் சந்தானம்

Posted: 04 Oct 2013 05:27 AM PDT


-
'நம்பியார்' படத்திற்காக ஒரு முழுப்பாடலை பாடியிருக்கிறார் சந்தானம்.

இதுவரை காமெடியில் மட்டுமே கலக்கிவந்த சந்தானத்தை
முதன் முறையாக ஒரு முழுப்பாடலையும் 'நம்பியார்'
படத்திற்காக பாடவைத்திருக்கிறார்கள்.

இப்பாடலை விவேகா எழுத, விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார்.

இத்தாலியில் கோர விபத்து: படகு தீப்பிடித்து கடலில் மூழ்கியது; 100 பேர் பலி 300 பேர் கதி என்ன?

Posted: 04 Oct 2013 05:06 AM PDT

 இத்தாலியில் கோர விபத்து: படகு தீப்பிடித்து கடலில் மூழ்கியது; 100 பேர் பலி 300 பேர் கதி என்ன? ரோம் இத்தாலியில் படகு தீப்பிடித்து கடலில் மூழ்கியதில் 100 பேர் உயிரிழந்தனர். 300 பேர் கதி என்ன என்பது தெரியவில்லை. பிழைப்பு தேடி பயணம் இத்தாலி நாட்டில், துனிசியா–சிசிலி இடையே லாம்பிதுசா என்ற தீவு உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் தேடி செல்கிறவர்களுக்கு இந்த லாம்பிதுசா தீவு நுழைவு வாயில் போல அமைந்துள்ளது. இந்த நிலையில், கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் இருந்து பிழைப்பு தேடி 500–க்கும் ...

பா.ஜா.காவுக்கு இருநூறுக்கு மேல், காங்கிரஸுக்கு 4-வது இடம் - சோ

Posted: 04 Oct 2013 04:42 AM PDT

'மோடியை முன்னிறுத்தியுள்ளதால், இந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு, 200 சீட்டு களுக்கு மேல் கிடைக்கும். காங்கிரஸ் நான்காவது இடத்துக்கு தள்ளப்படும்' என, பத்திரிகையாளர் சோ தெரிவித்தார். அதிரடி சந்திப்புகள் மூலம், தமிழக அரசியலில் திடீர் திருப்பங்களுக்கு காரணகர்த்தாவாக இருப்பவர் சோ. சமீபத்திய அவரது சந்திப்பு, முதல்வர் ஜெயலலிதாவுடன் நடந்தது. அது ஏற்படுத்திய விவாதமும், பரபரப்பும் ஓயாத நிலையில், `தினமலர்' நாளிதழுக்கு நேற்று அவர் அளித்த சிறப்பு பேட்டி: மோடி, பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது, ...

கொள்முதல்...ஒரு பக்க கதை

Posted: 04 Oct 2013 04:37 AM PDT

இங்கிலீஷ் பேப்பர் கிலோ ஒன்பது ரூபாய் தமிழ் பேப்பர் நாலு ரூபாய்' என்பதைப் பார்த்ததும் தனது குறுகிய புத்தியை செயலாற்றத் துவங்கினாள் சாந்தி - இங்கிலீஷ் பேப்பபரின் இடை இடையே தமிழ் பேப்பரை வைத்துக்கட்டி பேப்பர்காரனுக்குப் போட்டாள் - எல்லாம் இங்கிலீஷ் பேப்பர்பா, பார்த்து நல்லா எடை போட்டு எடுத்திட்டுப் போப்பா...! - சரிங்கம்மா, மொத்தம் பத்து கிலோகிட்ட வருது,...இந்தாங்கம்மா தொண்ணூறு ரூபாய் என அவன் கொடுத்து சென்றான் - ஏதோ ...சாமர்த்தியமாய் சாதித்ததாய் பூரித்துப் போனாள் சாந்தி! - மாலை ...

'நச்' என்று ஒரு சிறுகதை -சுஜாதா

Posted: 04 Oct 2013 04:36 AM PDT

பாரிஸ் நகரத்தில் மிக அழகான பெண் ஒருத்தி இருந்தாள். அவளைத்தான் உலகிலேயே மிக விலை உயர்ந்த தாசி என்று சொன்னார்கள். அவளை அடைய, அவளுடன் (சந்தேகமில்லாமல் இன்பமாக) ஒரு மாலைப் பொழுதை கழிப்பதற்கு மிகுந்த பணம் தேவையாக இருந்தது. - நகரத்தின் அருகிலே ஒரு பெரிய மிலிட்டரி காம்ப் இருந்தது. அதில் இருந்த எல்லா ஆண்களின் கனவு அந்தப் பெண்ணுடன் ஒரு தினம். - அவர்களில் ஒருவன் ஒரு நாள் மாலை மற்றவர் எல்லாரையும் திரளாகக் கூப்பிட்டு இவ்வாறு சொன்னான். "நண்பர்களே! நாம் எல்லோரும் குணத்திலும், உருவத்திலும், மனப்பான்மையிலும் ...

மருமகள்

Posted: 04 Oct 2013 04:15 AM PDT

கோமதிக்கு கண்ணம்மாவிடமிருந்து ஒரு போன் கால் அன்று வந்தது. = மூன்று மாதங்களுக்கு முன்பு வந்த மருமகள் சிந்து தன் பேச்சைக் கேட்பதில்லை, வீட்டில் அவள் ஆட்சிதான், மகன் மனைவிக்குத்தான் பக்கபலமாக இருக்கிறான், இதனை நல்லவிதமாக முடித்து வைக்க கோமதி நேரில் வரவேண்டும் என்று போனில் அழாக்குறையாகச் சொன்னாள் கண்ணம்மா. - நான்கு வருடங்களுக்கு முன் திண்டுக்கல்லில் அடுத்தடுத்து வீட்டில் குடியிருத பழக்கம் - கோமதியின் மகனுக்கு திருமணம் நடந்த ஆறே மாதத்தில் மருமகள் லட்சமி , கோமதியிடம் அடிக்கடி ...

கூலா திங்க் பண்ணுங்க _ ஜாலி தொகுப்ப

Posted: 04 Oct 2013 03:41 AM PDT

- நெகடிவ்: ஞாயித்துக் கிழமை சினிமாவுக்கு வந்தது அவ்வளவு பெரிய குத்தமா..? பக்கத்துல வந்ததும் சரியா கவுன்டர் மூடுறானுங்களே....! - பாசிடிவ்: அவ்வளவு பெரிய மொக்கைப் படமா இது? மூணு மணி நேரம் மிச்சம்.காப்பாத்துன கடவுள் யாருப்பா? - ===================================== - நெகடிவ்: பொண்டாட்டி கூட வரும்போதா இத்தனை ஃபிகர் நம்மளைக் கடந்து போகணும்? ...ச்சை! - பாசிடிவ்: ஆஹா, நாம இன்னும் ராமன்தான்னு 'சீன்' போடுறதுக்கு சூப்பரா ஒரு சிச்சுவேஷன் கிடைச்சிருக்கு, பொண்ணைப் பாக்காதடா, மண்ணைப் பாருடா...., ...

பாரம் சுமப்போர் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றவன்...

Posted: 04 Oct 2013 03:15 AM PDT

ஆம்
பிறரிடம் பகிரப்படாத
துன்பங்களுடன் எனது
மனமும் முன்வரிசையில்
அமர்ந்திருக்கிறது .

பாரம் சுமப்போர் போட்டியில்
கலந்துகொள்ள
தோள்களின் தோழமையோடு !
==============
>கவிஞர் கா .ந .கல்யாணசுந்தரம் .

சாகச விளையாட்டால் வந்த விபரீதம்: திருமண நாளை கொண்டாட வந்த இளம்பெண் கணவர் முன் பலி

Posted: 04 Oct 2013 03:14 AM PDT

தாய்லாந்தில் திருமண நாளை கணவருடன் கொண்டாட சென்றிருந்த இந்திய பெண் ஒருவர் சாகச விளையாட்டில் ஈடுபட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை சேர்ந்த 36 வயது பெண் ஷில்பி அகர்வால். இவர் தனது கணவருடன் திருமண நாளை கொண்டாடுவதற்காக தாய்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அங்குள்ள பட்டாயா நகர கடற்கரையில் பாராசெய்லிங் விளையாட எண்ணிய இந்த ஜோடி, அதற்காக ஒரு ஸ்பீட்போட்டை வாடகைக்கு எடுத்தனர். முதலில் ஷில்பி பாராசூட்டில் பறக்க, அந்த பாராசூட்டை விரைவாக சென்ற படகு ...

"தேர்தல் தோல்வியால் ஆத்திரம்: தமிழர்கள் மீது ராணுவம் தாக்குதல்': தப்பி வந்த இலங்கை அகதி தகவல்

Posted: 04 Oct 2013 03:11 AM PDT

ராமேஸ்வரம்: இலங்கையில், தமிழ் தேசிய கூட்டணி வெற்றியால், ஆத்திரமடைந்த சிங்கள ராணுவம், தமிழ் இளைஞர்களை கடத்தி தாக்குவதாக, தனுஷ்கோடி வந்த இலங்கை அகதி தெரிவித்தார். இந்திய கடற்படை, கடலோர காவல்படை ரோந்து கப்பலில் சிக்காமல், இலங்கையை சேர்ந்த மர்ம படகில் வந்த மூவர், நேற்று அதிகாலை, தனுஷ்கோடி, அரிச்சல்முனை கடற்கரையில், இலங்கை தமிழர் ஒருவரை இறக்கி திரும்பினர். தனுஷ்கோடி போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த அவரிடம், போலீசார் நடத்திய விசாரணையில், இலங்கை, வல்வெட்டி துறையை சேர்ந்த, செல்வ கிருஷணன், 39, என்பதும், ...

அக்டோபர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ...

Posted: 04 Oct 2013 02:39 AM PDT

1-10-2013-அருள் தரும் ஆன்மிகம் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/l0sjbj3ok6o3269/Arultharum1.10.13%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 2-10-2013-குமுதம் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/6mbb13cqak7304e/Kumudam2.10.13%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 1-10-2013-ஆன்மிகமலர் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/nfmh709o2k22es0/Aanmeegamalar1.10.13%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf

நைஜீரியாவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 16 பேர் உடல் கருகி பலி

Posted: 04 Oct 2013 02:37 AM PDT

நைஜீரியாவில் லாகோஸ் நகரில் இருந்து ஒன்டோ மாகாணத்திலும் உள்ள அகூருக்கு ஒரு உள்நாட்டு பயணிகள் விமானம் புறப்பட்டது. அதில் 20 பயணிகள் இருந்தனர். அவர்களில் 7 பேர் விமான ஊழியர்கள். இது லாகோஸ் விமான நிலையத்தில் புறப்பட்டு விண்ணில் பறந்த சில நிமிடங்களில் தலைகுப்புற தரையில் விழுந்து நொறுக்கியது. இதனால் விமானம் தீப்பிடித்து எரிந்தது. உடனே, விமான நிலையத்தில் இருந்த பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இருந்தும் 4 பேரை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. 16 பேர் தீயில் உடல் ...

மீசை மீது ஆசையில்லா ஆண் இல்லை...!

Posted: 04 Oct 2013 02:26 AM PDT

மீசை மீது ஆசையில்லா ஆண் இல்லை .ஆணின்
மன உணர்வை படம் பிடித்துக் காட்டும் கவிதை ஒன்று
-----.

அம்மா இறந்தபோது
காரியத்திற்காக மழிக்கப்பட்டது .
அம்மா இல்லாததை விடவும்
அதிகமாகவே கவலையளித்தது
முகத்தில் இல்லாத மீசை !
-
======================
கவிஞர் பொன் குமார் .சேலம் .

வெவ்வேறு பாடல்களை பதியும் போது

Posted: 04 Oct 2013 02:21 AM PDT

வணக்கம் நண்பர்களே ,

நான் இணையத்தில் இருந்து எடுத்த பலப்பாடல்களை windows7 யை பயன்படுத்தி DVD யில் பதிந்தேன் . ஆனால் ஒவ்வொரு பாடலும் வெவ்வேறு சத்தத்தில் இருக்கிறது .இதனால் பலமுறை சத்தத்தை சரிசெய்ய வேண்டி இருக்கிறது .எல்லா பாடல்களையும் ஒரே அளவு சத்தத்தில் பதியலாமா , அப்படி முடியும் என்றால் வழிமுறைகளை சொல்லவும் .
நன்றி

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -56)

Posted: 04 Oct 2013 01:46 AM PDT

வணக்கம் ஈகரை உறவுகளே ..    இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 3 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -3 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள்.    மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .     தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் . இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை குறிப்பு : நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட ...

நல்ல நண்பன்

Posted: 04 Oct 2013 01:37 AM PDT

ஒரு ஊரில் ஒரு இளைஞன் இருங்தான். அவன் எப்போதும் கோபப்படும் சுபாவத்தை கொண்டவன். ஒரு முறை அவனது நண்பன் அவனிடம் ஆணிகள் நிரம்பிய பையை கொடுத்தான். நீ எப்போதெல்லாம் கோபப்படுகிறாயோ அப்போதெல்லாம் ஒரு ஆணியை இந்த சுவற்றில் அடிக்கவும் என்றான், இளைஞ்சனும் அப்படியே செய்து வந்தான். முதல் நாள் அவன் 35 ஆணிகளை அடித்தான், மறு நாள் 30 என்று இப்படியாக குறைந்து கொண்டு வந்தது. சில நாட்கள் கழித்து அவன் கோபப்படுவதை நிறுத்தி விட்டான். அதணால் அவன் ஆணிகளை அடிக்கவில்லை. அதை அவனது நண்பன் பார்த்து பெருமை பட்டான். அவனை ...

மரணத்திலும் உயிர் பெற்றது கண்கள்

Posted: 04 Oct 2013 01:19 AM PDT

. ஒவ்வொரு கணத்தையும் உணர்த்துகிறது ஓடும் கடிகாரம் ! - >அமுதபாரதி . சென்னை ------------------------------------------- எறும்புகள் தூக்கி செல்கிறது வண்ணத்துப்பூச்சியின் இறுதி ஊர்வலம் ! -- >இரா .தயாளன் .திருவாய்நல்லூர் --------------------------------------------- இறந்தவர் கொடை மரணத்திலும் உயிர்பெற்றது கண்கள் ! - >கவிஞர் ஆரிசன் கீழக் கொடுங்காலூர் - --------------------------------------------------------- படித்து ரஸித்த இதழ்: அருவி ! கவிதை இலக்கிய காலாண்டிதழ் ...

கர்ணம் தப்பினால் மரணம்... ரெட்புல் சாகச டிரைவிங் போட்டி!

Posted: 04 Oct 2013 01:07 AM PDT

மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறையில் ஆஸ்திரியாவை சேர்ந்த ஊட்டச்சத்து பான தயாரிப்பு நிறுவனமான ரெட்புல் மிக பிரபலமாக திகழ்கிறது. ஃபார்முலா- 1 கார் பந்தயத்தில் ரெட்புல் அணி குறிப்பிடத்தக்க சாதனைகளை பதிவு செய்து வருகிறது. இந்த நிலையில், சீனாவில் சமீபத்தில் மலையேற்ற டிரிஃப்ட் கார் பந்தயத்தை ரெட்புல் நடத்தியது. இதில், ஹாங்காங்கை சேர்ந்த ரெட்புல் வீரர் ஜேம்ஸ் டேங் மற்றும் இத்தாலியை சேர்ந்த பெடரிகோ செரீஃபோ ஆகியோர் நேருக்கு நேர் சவால் விட்டு களத்தில் இறங்கினர். சீனாவிலுள்ள டயன்மென்ஷன் மலையில் இருக்கும் 99 கொண்டை ...

வண்ணத்தோடு மட்டுமே வாழ்கிறோம்...

Posted: 04 Oct 2013 01:02 AM PDT



.
நாங்கள் வண்ணத்தோடு மட்டுமே
வாழ்கிறோம் .
வருணத்தோடு இல்லை .

சாதி சாத்திரம்
எங்களிடம் கிடையாது .

எங்கள் காதலால்
எந்த ஊரும் எரியாது .

நல்ல வேளை
நாங்கள் மனிதர்களாக
பிறக்கவில்லை .

அப்படி பிறந்திருந்தால்
விண்ணைத் தொடும் சிறகுகள்
முளைக்காமல் போயிருக்கும் ... !
=============


கவிஞர் சோ .சரவணபவா .திமிரி .

நந்தவனத்தில் சில மனிதப்பூக்கள்

Posted: 04 Oct 2013 12:59 AM PDT

நந்தவனத்தில் சில மனிதப்பூக்கள்

http://www.mediafire.com/download/f4g9b3639v4x3er/Nandavanathil-Sila-Manidha-Pookal%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf

காக்கப்பட வேண்டிய "காட்டுவாசி'கள்: இன்று உலக விலங்குகள் தினம்

Posted: 04 Oct 2013 12:59 AM PDT

விலங்குகள், மனித வாழ்க்கையோடு தொடர்பு உடையவை. உலகில் பல வித விலங்குகள், நமக்கு பல வழிகளிலும் உதவியாக இருக்கின்றன. விலங்குகளை பாதுகாப்பது; அவற்றுக்கு எதிரான கொடுமைகளை தடுப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அக்., 4ம் தேதி உலக விலங்குகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. "அனிமல்' என்ற வார்த்தை லத்தீன் மொழியில் இருந்து உருவானது. இத்தாலியைச் சேர்ந்த வன ஆர்வலர் பிரான்சிஸ் ஆப் அசிசி என்பவரின் நினைவு நாளை குறிப்பிடும் வகையில், இத்தினம் உருவாக்கப்பட்டது. விலங்குகள், வீட்டு மற்றும் காட்டு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™