Tamil News | Online Tamil News |
- 'புல்லட் ரயில் எல்லாம் அவசியமில்லை': கூறுகிறார் அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே
- தீபாவளி அன்று "டாஸ்மாக்' சரக்கு விற்பனை நிச்சயம்: "குடி' மக்களிடம் இருந்து 4 நாளில் 400 கோடி ரூபாய் எதிர்பார்ப்பு
- மொத்த வளர்ச்சி சதவீதம் குறையும் என கணிப்பு: பணவீக்கம் அதிகரிப்பால் ரிசர்வ் வங்கி கவர்னர் கவலை
- சர்தார் படேல் முதல் பிரதமராகியிருக்க வேண்டும்: பிரதமர் முன்னிலையில் நரேந்திர மோடி ஆவேசம்
- பிராணிகள் நல ஆர்வலர்களின் ஓட்டுகளை கவருவாரா ராகுல்
- வேலை உறுதி திட்டமா? வேதனை திட்டமா? கருணாநிதி கேள்வி
- சூரியநெல்லி விவகாரத்தில் தப்பிய பாதகர்கள்: பாதிக்கப்பட்ட சிறுமி அனுபவிக்கிறார் மரண தண்டனை
- கலெக்டர் ஆபீசில் ஆளும் கட்சி சாதனை பட்டியல்: பொதுமக்கள் பார்வையில் படும்படி விளம்பர பலகை
- கோட்டையில் தங்கம் இல்லை: தோண்டும் பணி நிறுத்தம்
- உரங்களின் செயற்கை தட்டுப்பாடால் விவசாயிகள் விரக்தி : விலை உயரும் அபாயம்
- குஜராத்தில் 26க்கு 26 ஐ பிடிக்க வேண்டும்:கட்சியினருக்கு முதல்வர் மோடி கட்டளை
| 'புல்லட் ரயில் எல்லாம் அவசியமில்லை': கூறுகிறார் அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே Posted: "ஏழை மக்கள் வசிக்கும் நாடு இந்தியா; இங்கு, புல்லட் ரயில் போக்குவரத்துக்கு முன்னுரிமை அளிக்கத் தேவையில்லை" என, ரயில்வே அமைச்சர், மல்லிகார்ஜுன கார்கே, கூறினார்.ரயில்வே ஆணையத்தின் சார்பில், 'அதிவேக ரயில் போக்குவரத்துக்கான ஆணையம்' துவக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா, டில்லியில் நேற்று நடந்தது. இந்த விழாவில், ரயில்வே அமைச்சர், மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது: வெளிநாடுகளில் இருப்பது போல, புல்லட் ரயில்களை, இந்தியாவிலும் அறிமுகப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை உள்ளது. புல்லட் ரயில் போக்குவரத்து, மிகவும் ஆடம்பரமானது மட்டுமல்ல; அதிக செலவையும் ஏற்படுத்தக் ... |
| Posted: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, "டாஸ்மாக்' கடைகளில், 12 நாட்களுக்கு தேவையான, மதுபானங்களை இருப்பு வைக்க, உத்தரவிடப்பட்டு உள்ளது. தீபாவளி தினமான, 2ம் தேதி அன்று, ஒரே நாளில், 150 கோடிக்கு, "சரக்கு' விற்பனையாகும் என்றும், 1ம் தேதி முதல், 4ம் தேதி வரையிலான, நான்கு நாட்களில், மொத்தம், 400 கோடி ரூபாய்க்கு விற்பனையாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில், 6,800 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன; நாள்தோறும், சராசரியாக, 67 கோடி ரூபாய்க்கு மது வகைகள் விற்பனையாகிறது. டாஸ்மாக் கடைகளில், முன்பு, 90 நாட்களுக்கு தேவையான மது வகைகள், இருப்பு வைக்கப்பட்டன. பார் உரிமையாளர், பணம் ... |
| மொத்த வளர்ச்சி சதவீதம் குறையும் என கணிப்பு: பணவீக்கம் அதிகரிப்பால் ரிசர்வ் வங்கி கவர்னர் கவலை Posted: மும்பை : 'நாட்டின் மொத்த பொருளாதார வளர்ச்சி, 5 சதவீதம் தான் இருக்கும்' என, ரிசர்வ் வங்கி அறிக்கை படம் பிடித்து காட்டியுள்ளது. அதிக அளவு பணவீக்கம் இருப்பதை சுட்டிக்காட்டும் அந்த அறிக்கை, அதைக் கட்டுப்படுத்தா விட்டால், வளர்ச்சி சதவீதம் அதிகரிக்காது என்றும், தெளிவாக தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் பொருளாதார வளர்ச்சி, மந்த நிலையில் இருக்கும் போது, ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை குறித்து, கடந்த சில தினங்களாக பரபரப்பான எதிர்பார்ப்பு இருந்தது.தற்போதைய நிதிப் பிரச்னைகள், அடுத்த சில மாதங்களில் குறைந்து, வளர்ச்சி சீராகும் என, நிதியமைச்சகம் கூறி வருகிறது. ... |
| சர்தார் படேல் முதல் பிரதமராகியிருக்க வேண்டும்: பிரதமர் முன்னிலையில் நரேந்திர மோடி ஆவேசம் Posted: ஆமதாபாத் : நாட்டின், முதல் பிரதமராக, சர்தார் படேல், பதவி வகிக்கவில்லையே என, மக்கள், இப்போதும் கவலைப்படுகின்றனர். சர்தார் படேல், முதல் பிரதமராகி இருந்தால், நாட்டின் தலைவிதியே மாறியிருக்கும்,'' என, பிரதமர் மன்மோகன் சிங் முன்னிலையில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி பேசியது, பரபரப்பை ஏற்படுத்தியது. "இந்தியாவின் இரும்பு மனிதர்' என, போற்றப்படுபவரும், நாட்டின், முதல் உள்துறை அமைச்சருமான, சர்தார் வல்லபாய் படேல், குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். இவருக்கு, குஜராத்தில், நர்மதா ஆற்றின் அருகே, உலகிலேயே, மிகப் பெரிய சிலையை அமைப்பதற்கான முயற்சியை, அம்மாநில ... |
| பிராணிகள் நல ஆர்வலர்களின் ஓட்டுகளை கவருவாரா ராகுல் Posted: புதுடில்லி : டில்லியில், இரவு நேரத்தில், ராகுல் காரில் தன் வளர்ப்பு நாயுடன் உலா வந்து, அதிர்ச்சியை ஏற்படுத்தினார். சாலையில் சென்ற பெண் ஒருவரிடம, நாய் வளர்ப்பு பற்றி கேட்டறிந்தார்.காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுலுக்கு பயங்கரவாதிகளால், அச்சுறுத்தல் இருப்பதால், அவருக்கு உச்சகட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர் எங்கு சென்றாலும் பாதுகாப்பு படை வீரர்கள் புடைசூழ்ந்து இருப்பர். ஆனால் சில சமயங்களில், பாதுகாப்பு வளையத்தை மீறி, ராகுல் காரில் தனியாக வலம் வருவது, நண்பர்களுடன் ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார்.சில தினங்களுக்கு முன், ... |
| வேலை உறுதி திட்டமா? வேதனை திட்டமா? கருணாநிதி கேள்வி Posted: சென்னை : 'வேலை உறுதித் திட்டத்தில் இறந்தவர்கள், உயிரோடு வேலை பார்த்ததாகக் கூறி மோசடி நடைபெற்றுள்ளது, வேதனை அளிக்கிறது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை, கல்லூர் ஊராட்சி, பாரதி நகரைச் சேர்ந்த நாகநாதன், உயர் நீதிமன்றத்தில், ஒரு மனுவை தாக்கல் செய்திருக்கிறார். "நூறு நாள் வேலை அளிக்கும், தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில், திருவாடானை ஊராட்சி ஒன்றியம், கல்லூர் ஊராட்சியில் இறந்தவர்கள், வெளிநாடுகளில் வேலை பார்ப்போர், அரசு வேலையில் இருப்போர், வேறு ஊர்களை சேர்ந்தவர் பெயர்களை எல்லாம் வேலை ... |
| சூரியநெல்லி விவகாரத்தில் தப்பிய பாதகர்கள்: பாதிக்கப்பட்ட சிறுமி அனுபவிக்கிறார் மரண தண்டனை Posted: அந்தக் கொடூரம் நிகழ்ந்து, 17 ஆண்டுகள் ஆகி விட்டன. அவளை சீரழித்த, 40க்கும் மேற்பட்ட குற்றவாளிகள், வழக்கை விசாரித்த போலீசார், தீர்ப்பு வழங்கிய நீதித் துறையினர், அந்தப் பெண்ணை சுமையாக கருதும் பெற்றோர் தவிர, வேறு யாருக்கும், 'இந்தப் பெண் தான், சூரியநெல்லி பாலியல் பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்' என, தெரியாது.யாருக்குமே நிகழக் கூடாத அந்த கொடுமை, அந்தச் சிறுமிக்கு, 16 வயதில் நிகழ்ந்தது.அந்தச் சிறு வயதில் குழந்தைகள் அறிந்திராத, 'அந்த' வக்கிரம், அந்தச் சிறுமிக்கு, 40 நாட்களில், 400 தடவைக்கும் மேலாக நடந்தது. கட்டிளம் காளைகள் முதல், வயது முதிர்ந்த பெருசுகள் வரை, ... |
| கலெக்டர் ஆபீசில் ஆளும் கட்சி சாதனை பட்டியல்: பொதுமக்கள் பார்வையில் படும்படி விளம்பர பலகை Posted: சேலம் கலெக்டர் அலுவலக நுழைவாயிலில், அரசின் சாதனைகளை விளக்கும் வகையிலான விளம்பர பலகை, பொதுமக்கள் பார்வையில் படும்படி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை, அதிகாரிகள் அலட்சியப்படுத்துவதாகவும், ஆளும் கட்சியினருக்கு சாதகமாக செயல்படுவதாகவும், எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.தேர்தல் நடத்தை விதி:ஏற்காடு இடைத்தேர்தல், டிசம்பர், 4ம் தேதி நடக்க உள்ளதையடுத்து, தேர்தல் நடத்தை விதி அமல்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் என, அறிவிக்கப்பட்டு, பின், தொகுதிக்கு மட்டுமே தேர்தல் விதி பொருந்தும் என, தேர்தல் ஆணையம் தரப்பில் ... |
| கோட்டையில் தங்கம் இல்லை: தோண்டும் பணி நிறுத்தம் Posted: லக்னோ : உத்தர பிரதேசத்தின் பழங்கால மன்னர் கோட்டையில் தங்கம் இருக்கலாம் என்ற நம்பிக்கையில், கடந்த பத்து நாட்களாக நடைபெற்ற தோண்டுதல் பணி, நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. 'அங்கு தங்கம் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை' என, தொல்பொருள் ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.உன்னாவ் என்ற பகுதியில், சோபன் சர்க்கார் என்ற சாமியார், 'என் கனவில் தோன்றிய, மறைந்த மன்னர் ராம்பக்ஸ் சிங், தன் கோட்டையின் அடியில், 1,000 கிலோ தங்கத்தை புதைத்து வைத்துள்ளதாக கூறினார்' என, தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.அப்பகுதியை சேர்ந்த, மத்திய அமைச்சர் சரண்தாஸ் மகந்த், இந்த தகவலை, பிரதமர் ... |
| உரங்களின் செயற்கை தட்டுப்பாடால் விவசாயிகள் விரக்தி : விலை உயரும் அபாயம் Posted: சம்பா சாகுபடி தீவிரமடைந்துள்ள நிலையில், உரங்களின் விலையை உயர்த்துவதற்காக, செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதை வேளாண் துறையினர் கண்டுக் கொள்ளாததால், விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர்.வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும், சம்பா சாகுபடி களைக் கட்டியுள்ளது. டெல்டா மாவட்டங்களில், 12 லட்சம் ஏக்கரில் சாகுபடி நடக்கும் என, அரசு கணித்துள்ளது. மற்ற மாவட்டங்களில் நடக்கும் சாகுபடி பரப்பளவை கணக்கிடும் பணி, தற்போது தான் துவங்கியுள்ளது. இருப்பினும் டெல்டா மாவட்டங்களையும் சேர்த்து, 30 லட்சம் ஏக்கருக்கு மேல் சாகுபடி நடக்க ... |
| குஜராத்தில் 26க்கு 26 ஐ பிடிக்க வேண்டும்:கட்சியினருக்கு முதல்வர் மோடி கட்டளை Posted: ஆமதாபாத் : வரும் லோக்சபா தேர்தலில், தன் சொந்த மாநிலமான குஜராத்தில், பா.ஜ., அதிக இடங்களைப் பிடிக்க வேண்டும் என்பதில், அம்மாநில முதல்வரும், பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளருமான, நரேந்திர மோடி தீவிரமாக உள்ளார். இதன்மூலம், குஜராத்தில், கேசுபாய் படேல் ஆட்சிக் காலத்தில், பா.ஜ., நிகழ்த்திய சாதனையை முறியடிக்க திட்டமிட்டுள்ளார்.கடந்த, 1998ல் நடந்த லோக்சபா தேர்தலின்போது, குஜராத்தில், மொத்தமுள்ள, 26 லோக்சபா தொகுதிகளில், 20 தொகுதிகளை, பா.ஜ., பிடித்தது. அப்போது, முதல்வராக இருந்தவர், கேசுபாய் படேல். அப்போதைய, பா.ஜ., முதல்வரான அவர், அதன்பின், அந்தக் கட்சியிலிருந்து விலகி, தனிக்கட்சி ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |அக்டோபர் 30,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |