Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


மகன் தேறாததால் மகளை களமிறக்கும் பிரணாப்: லோக்சபா தேர்தலில் ஷர்மிஸ்தா போட்டி?

Posted:

புதுடில்லி: வரும், லோக்சபா தேர்தலில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகளும், பிரபல, 'கதக்' நடன கலைஞருமான, ஷர்மிஸ்தா, மேற்கு வங்கத்தில் போட்டியிடப் போவதாக, தகவல் வெளியாகியுள்ளது.ஒதுங்கினார்: காங்., மூத்த தலைவர்களில் ஒருவரான, பிரணாப் முகர்ஜி, ஜனாதிபதியாக பதவியேற்றதை அடுத்து, தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கினார். இதற்கு பின், அவர் அரசியலில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு இல்லை. இதனால், தன் அரசியல் பாரம்பரியம், தன்னுடன் முடிவுக்கு வந்து விடக் கூடாது என்பதற்காக, தன் மகன் அபிஜித் முகர்ஜியை, அரசியலுக்குள் இழுத்து விட்டார். பிரணாப் முகர்ஜியின் ...

உரத்த சிந்தனை: காவு கேட்கும் கல்விக்கூடங்கள் - இரா.ஆஞ்சலா ராஜம்

Posted:

'ஆசிரியர் அடித்ததால் மாணவன் தற்கொலை; தேர்வில் தோல்வி அடைந்ததால், மாணவி தற்கொலை' போன்ற செய்திகளையே, சில ஆண்டுகளாக கேட்டுப் பழகியிருந்த நமக்கு, புதுவரவாக, ஆசிரியரை மாணவர்கள் கொலை செய்யும் செய்திகளும் வரத் துவங்கி விட்டன.கடந்த ஆண்டு, சென்னையில், ஆசிரியை ஒருவரை, ஒன்பதாம் வகுப்பு மாணவன் கொலை செய்த சம்பவத்தை, யாரும் மறந்திருக்க முடியாது. அதன் தொடர்ச்சியாக, தற்போது, இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர் ஒருவரை, மாணவர்கள், 'போட்டு'த் தள்ளி விட்டனர்!இதில் வேடிக்கை என்னவென்றால், ஆசிரியர், மாணவனைத் தாக்கினாலும்; மாணவன், ஆசிரியரைத் தாக்கினாலும், பழி என்னவோ, ...

இன்னும் ஆறு மாதம் மட்டும் தான் உங்கள் ஆட்சி: காங்கிரசுக்கு நரேந்திர மோடி எச்சரிக்கை

Posted:

உதய்ப்பூர்:''காங்கிஸ் மேலிடம், சி.பி.ஐ.,யை தவறாக பயன்படுத்தி, பா.ஜ., தலைவர்கள் மீது, வழக்கு பதிவு செய்ய வைக்கிறது. காங்கிரஸ் தலைவர்கள் ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்கள், ஆட்சி அதிகாரத்தில் இருக்கப் போவது, இன்னும் ஆறு மாதங்கள் மட்டும் தான்,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி பேசினார்.பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி, ராஜஸ்தான் மாநிலம், உதய்ப்பூரில் நடந்த, பிரசார கூட்டத்தில், நேற்று பேசியதாவது:சமீபகாலமாக, ராஜஸ்தானிலும், குஜராத்திலும், மத்திய அரசு சார்பில், ஏராளமான திட்டங்களுக்கான துவக்க விழாக்கள் ...

இறக்குமதி வெங்காயம் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு இல்லை

Posted:

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி ஆகப்போகும், வெங்காயத்தை, வட மாநிலங்களுக்கு மட்டுமே பயன்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. டில்லி உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில், சட்டசபை தேர்தல்கள் நடக்கவுள்ளதால், அதில் ஆதாயம் அடையும் வகையில், மத்திய அரசு, இந்த திட்டத்தை தீட்டியுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.திணறும் அரசுகள்:வெங்காய விலையேற்றம், நாடு முழுவதுமே, பெரிய அளவில் பிரச்னையாக இருந்து வருகிறது. இந்த விஷயத்தில், மத்திய, மாநில அரசுகள், செய்வதறியாது திணறிப் போயுள்ளன.தலைநகர் டில்லி, பீகார் மாநிலம் பாட்னா உள்ளிட்ட இடங்களில், ஒரு கிலோ வெங்காயம், 100 ...

காங்கிரசுக்கு ஆதரவாக சச்சின் பிரசாரம்?மோடி அலையை சமாளிக்க திட்டம்

Posted:

போபால்:பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடிக்கு ஆதரவாக வீசும் அலையை சமாளிப்பதற்காக, கிரிக்கெட் வீரர் சச்சினை பிரசாரத்தில் இறக்க, காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.பா.ஜ., பிரதமர் வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். அவரின் கூட்டங்களுக்கு, ஏராளமான இளைஞர்கள் திரள்வதால், காங்., கவலை அடைந்துள்ளது.இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் விரைவில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், மோடி ஆதரவு அலையை சமாளிக்கும் வகையில், பிரபல கிரிக்கெட் வீரர் சச்சினை, பிரசாரத்தில் ஈடுபடுத்த, காங்., முடிவு செய்துள்ளது.சச்சின், தற்போது ராஜ்யசபா எம்.பி.,யாக ...

விஜயகாந்துக்கு காங்கிரஸ் தூது: டில்லியில் சந்திக்க ராகுல் திட்டம்

Posted:

தேசிய அளவில், மூன்றாவது அணி அமைக்கும் முயற்சிக்கு, முட்டுக்கட்டை விழுந்தது போல், தமிழகத்திலும், மூன்றாவது அணி அமைக்கும் திட்டத்துக்கு, சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த அணியில் சேர, ம.தி.மு.க., தயாராக இருக்கிறது. ஆனால், தே.மு.தி.க., நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.தி.மு.க., - அ.தி.மு.க., இல்லாமல், தே.மு.தி.க.,வுடன் சேர்ந்து, தேர்தலை சந்திக்க, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் விரும்புவதாகவும், அது தொடர்பாக, டில்லியில் விஜயகாந்தை சந்தித்துப் பேச அவர் திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.தமிழகத்தில், தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு மாற்றாக, பா.ஜ., ...

இடைத்தேர்தல் நடக்கும் ஏற்காட்டில் பிரசாரம் களைகட்டுகிறது

Posted:

ஏற்காடு இடைத்தேர்தலில், தற்போது வரை, அ.தி.மு.க., -- தி.மு.க., மட்டுமே களம் காண்பதால், இரு கட்சியைச் சேர்ந்தவர்களும் உற்சாகத்தில் உள்ளனர். தங்களுடைய வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். அ.தி.மு.க.,வில், 31 மந்திரிகள் உட்பட, 52 பேர் நேரடியாக களம் இறங்க உள்ளனர். அவர்களுக்கு போட்டியாக, தி.மு.க.,வும் தேர்தல் பணிக்குழுவை முடுக்கி விட்டுள்ளது. தீபாவளி முடிந்த பின், எல்லா மந்திரிகளும் ஏற்காட்டில் ஒரு மாதம் முகாம் இட உள்ளனர்.ஏற்காடு தொகுதிக்கான இடைத்தேர்தல், டிசம்பர், 4ல் நடக்க உள்ளது. அ.தி.மு.க., சார்பில், மறைந்த எம்.எல்.ஏ., பெருமாளின் ...

நாட்டின் உயரிய அமைப்பான சி.பி.ஐ.,க்கு பணிச்சுமை: அரசியல் தலைவர்கள் வழக்குகள் அதிகரிப்பு

Posted:

நாட்டின் உயரிய விசாரணை அமைப்பான, சி.பி.ஐ.,க்கு பணிச்சுமை அதிகரித்து விட்டது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் வழக்குகள், அது தொடர்பான விசாரணைகளால், பணிச்சுமையும் ஏற்பட்டுள்ளது. மேலும், அரசியல் தலைவர்கள் தொடர்பான வழக்குகள் அதிகமாக விசாரிக்கப்படுவதால், பல்வேறு மட்டங்களில் இருந்து வரும் நெருக்கடிகளால், விசாரணை அதிகாரிகள் சோர்வடைந்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.சிறப்பு போலீஸ் அமைப்பு:இரண்டாம் உலகப் போரின் போது, நாட்டில், லஞ்சம், ஊழல் அதிகரித்து விட்டது. வீரர்கள் மற்றும் போர்ப்படை தளபதிகள் கூட, லஞ்சத்தில் ஆழ்ந்து போயினர். அப்போது ...

தீபாவளி வெடியில் கவர்ச்சி நெடி: அரசு அனுமதித்தது எப்படி?

Posted:

கோவை : தீபாவளி பட்டாசுகளில் "கவர்ச்சி' படங்கள் அதிகளவு காட்டப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன; இந்த "கவர்ச்சி' படங்கள் பிஞ்சு மனதில் நஞ்சு விதைப்பதாக உள்ளன. ஆண்டுக்கு ஒரு முறை வரும் தீபாவளி பண்டிகையில் பட்டாசு முக்கிய இடம் வகிக்கிறது. குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்வர். இந்த தீபாவளிக்கு பட்டாசுகளின் அட்டைகளில், சினிமா நடிகைகளின் அரைகுறை ஆடைகளுடன் காட்சி தரும் "கவர்ச்சி' படங்கள் அதிகளவு நிறைந்திருப்பது தான் கொடுமையான விஷயமாக உள்ளது. பட்டாசுகளின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ள நிலையில், விற்பனை செய்ய கவர்ச்சி ...

கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டிலேயே தயாளுவிடம் விசாரணை: குற்றம் சாட்டப்பட்ட 5 பேர் நாளை எழும்பூர் நீதிபதியிடம் வாக்குமூலம்

Posted:

'2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளுவிடம், நாளை, 28ம் தேதி, சென்னையில் உள்ள அவரது கோபாலபுரம் வீட்டில், எழும்பூர் நீதிமன்ற முதன்மை மாஜிஸ்திரேட், விசாரணை நடத்துகிறார். இந்த விசாரணையின் போது, தயாளு, கனிமொழி, கலைஞர் "டிவி'யின் முன்னாள் நிர்வாக இயக்குனர் சரத்குமார் உட்பட, ஐந்து பேரும் அவர்களது வழக்கறிஞர்களும் ஆஜராகின்றனர். தயாளுவின் உடல்நிலை கருதி, அவரது வீட்டிலேயே விசாரணை நடக்க உள்ளதால், அதற்கான வசதி குறித்து, நேற்று நீதிமன்ற ஊழியர்கள், கோபாலபுரம் வந்து பார்வையிட்டுச் சென்றுள்ளனர்."2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை ...

முசாபர் நகர் கலவரம்:பாதிக்கப்பட்ட 1800 குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம்

Posted:

லக்னோ:உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் கடந்த மாத துவக்கத்தில் ஒரு பெண்ணை கேலி செய்தது தொடர்பாக இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. பிறகு அது பெரும் மத கலவரமாக மாறியது. இரு தரப்பினரும் மாறி, மாறி தாக்கிக் கொண்டதில் 62 பேர் கொல்லப்பட்டனர்.முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் சூறையாடப்பட்டதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற நேர்ந்தது. இதில் சுமார் 40 ஆயிரம் பேர் முகாம்களில் தங்கினர். கடந்த மாதம் 20ம் தேதி முதல் அங்கு இயல்புநிலை திரும்பியது. முதல்வர் உத்தரவு:கலவரம் நடந்த பகுதிகளுக்கு பிரதமர் மன்மோகன் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™