Tamil News | Online Tamil News |
- உ.பி.,யில் மோடி, ராகுல் அடுத்தடுத்து முற்றுகை: முலாயம் கலக்கம்: பிரமாண்ட கூட்டங்களை நடத்த சமாஜ்வாதி திட்டம்
- டீ, பிஸ்கட்டுக்கு, ரூ.9; மேடைக்கு ரூ.400: அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் கிடுக்கிப்பிடி
- தமிழக மீனவர்களை தாக்குதலில் இருந்து காக்க என்ன வழி? சுப்ரீம் கோர்ட் 'நோட்டீஸ்'
- தீபாவளி பண்டிகைக்கு தயாராகிறது கசப்பு மருந்து: எரிபொருள் விலையை அதிகரிக்க அரசு முடிவு
- 'ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்!' உ.பி.,யில் மோடி உணர்ச்சிகர உரை
- பொதுக்கூட்டங்களில் ராகுலின் பேச்சுக்கு எதிர்ப்பு : முஸ்லிம் அமைப்புகள் கடும் கண்டனம்
- 35 நாட்டு தலைவர்களின் தொலைபேசியை ஒட்டுக்கேட்ட அமெரிக்கா
- பள்ளி மாணவர்களிடம் தீபாவளி வசூல் தீவிரம்: பெற்றோர் அதிருப்தி
- விரைவில் 24 மணி நேர சீரான மின்சாரம்* சட்டசபையில் ஜெ., உறுதி
- கருணாநிதியின் 3வது அணி பேச்சால் தி.மு.க.,வினர் குழப்பம்: காங்., பா.ஜ., கைகழுவி விடும் என்ற அச்சம் காரணமா?
| Posted: லக்னோ: லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்காக, நரேந்திர மோடி, ராகுல் ஆகியோர், உ.பி.,யை அடுத்தடுத்து முற்றுகையிடுவதால், அங்கு ஆளும் கட்சியாக உள்ள, சமாஜ்வாதி கலக்கம் அடைந்துள்ளது. கோட்டையை தக்க வைப்பதற்காக, சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில், பிரமாண்ட கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யும்படி, கட்சி நிர்வாகிகளுக்கு, முலாயம் சிங் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.செல்வாக்கு இல்லை: உ.பி.,யில், முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில், சில ஆண்டுகளுக்கு முன்வரை, செல்வாக்கு மிக்க கட்சிகளாக இருந்த, காங்கிரஸ், ... |
| டீ, பிஸ்கட்டுக்கு, ரூ.9; மேடைக்கு ரூ.400: அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் கிடுக்கிப்பிடி Posted: புதுடில்லி : டில்லி சட்டசபை தேர்தலில், பண பலத்தை கட்டுப்படுத்த, தேர்தல் கமிஷன் கிடுக்கிப் பிடி போட்டுள்ளது. 'ஒரு டீ, இரண்டு பிஸ்கட்டுக்கு, ஒன்பது ரூபாயும்; ஸ்பீக்கருக்கு, 1,600 ரூபாயும் தான், செலவிட வேண்டும். இந்த தொகைக்கு மேல், கணக்கு காட்டினால், அதை ஏற்க முடியாது' என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.அதிரடி நடவடிக்கை:டில்லியில், வரும், டிசம்பரில், சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தேர்தலில், பண பலத்தை கட்டுப்படுத்துவதற்கு, தேர்தல் கமிஷன் சார்பில், பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, 'தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், ஒரு சட்டசபை ... |
| தமிழக மீனவர்களை தாக்குதலில் இருந்து காக்க என்ன வழி? சுப்ரீம் கோர்ட் 'நோட்டீஸ்' Posted: புதுடில்லி : 'தமிழக மீனவர்கள் பிரச்னையை, தீர்க்க, தூதரக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், வழிகள் இருக்கிறதா?' என, கேட்டு, மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும், 'நோட்டீஸ்' அனுப்ப, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.மீனவர்களுக்கு பாதுகாப்பு:'தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால், தொடர்ந்து தாக்கப்படுகின்றனர்; இதை தடுத்த நிறுத்த வேண்டும்; மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என, தி.மு.க., - எம்.பி., விஜயனும், அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரையும், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.இந்த மனுக்கள், தலைமை நீதிபதி, பி.சதாசிவம் ... |
| தீபாவளி பண்டிகைக்கு தயாராகிறது கசப்பு மருந்து: எரிபொருள் விலையை அதிகரிக்க அரசு முடிவு Posted: புதுடில்லி : இன்னும் சில நாட்களில், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைகளை, மேலும் அதிகரிக்க, மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. எண்ணெய் நிறுவனங்களின் டீலர்களுக்கு கமிஷன் தொகையை அதிகரிக்க முடிவு செய்துள்ளதால், அவற்றின் சுமை, வாடிக்கையாளர் மீது ஏற்றப்படவுள்ளது. இதற்காக, தேர்தல் கமிஷனிடம், மத்திய அரசு அனுமதி கேட்டுள்ளது.வலியுறுத்தல்:பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு, நாடு முழுவதும், 42,000 டீலர்கள் உள்ளனர். இவர்கள், தங்களுக்கான கமிஷன் தொகை, நீண்ட நாளாக உயர்த்தப்படாமல் இருப்பதாகவும், அதனால், பெட்ரோலுக்கு, லிட்டருக்கு, 42 பைசாவும், டீசலுக்கு, 27 ... |
| 'ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்!' உ.பி.,யில் மோடி உணர்ச்சிகர உரை Posted: ஜான்சி : ''உ.பி., முஸ்லிம் இளைஞர்களை, பாகிஸ்தான், ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்பினர் அணுகியதாக கூறிய ராகுல், மன்னிப்பு கேட்க வேண்டும்,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான, நரேந்திர மோடி கூறினார்.உத்தர பிரதேசத்தின், ஜான்சி நகரில் நேற்று நடந்த, லோக்சபா தேர்தல், பா.ஜ., தேர்தல் பிரசார கூட்டத்தில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடி பேசியதாவது:'ஏழைகள் மீது அக்கறை கொண்ட கட்சி காங்கிரஸ்' என, ராகுல் கூறியுள்ளார். அந்த கட்சியின், 60 ஆண்டு கால ஆட்சியில், ஏழைகளுக்கு முழு ரொட்டியைக் கூட கொடுக்க அவர்களால் முடியவில்லை; ஏழைகளின் வயிற்றை, காங்கிரஸ் கட்சியால், இன்னும், நுாறு ... |
| பொதுக்கூட்டங்களில் ராகுலின் பேச்சுக்கு எதிர்ப்பு : முஸ்லிம் அமைப்புகள் கடும் கண்டனம் Posted: லக்னோ : ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில், காங்கிரஸ் துணைத் தலைவர், ராகுல் பேசிய பேச்சுக்கு, முஸ்லிம் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மத வேறுபாட்டை வளர்க்கும் விதத்தில், ராகுல் பேசியதால், தேர்தல் கமிஷனில் முறையிட, பா.ஜ., முடிவு செய்துள்ளது.காங்கிரஸ் கட்சியில், மூத்த தலைவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாமல், துணைத் தலைவர் ராகுலுக்கு அதீத முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நடைபெற உள்ள, ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், காங்கிரசின் முக்கிய பிரசார துாதராக, ராகுலை, காங்கிரஸ் முன்னிலைப்படுத்துகிறது.சர்ச்சை பேட்டி:ஆனால், ... |
| 35 நாட்டு தலைவர்களின் தொலைபேசியை ஒட்டுக்கேட்ட அமெரிக்கா Posted: லண்டன் : அமெரிக்கா, 35 நாட்டு தலைவர்களின், தொலைபேசி உரையாடல்களை ஒட்டு கேட்டுள்ளதாக, பிரிட்டன் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.அமெரிக்க உளவு நிறுவனமான, என்.எஸ்.ஏ., உலகின் பல்வேறு நாட்டு பிரமுகர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டதாக, இந்த நிறுவனத்தில் பணிபுரிந்த, ஸ்னோடென் என்பவர் அம்பலப்படுத்தினார். இதற்காக, அமெரிக்கா, அவரை கைது செய்ய முயன்றதை அடுத்து, ஸ்னோடென், ரஷ்யாவில் தஞ்சம் அடைந்துள்ளார். அவர், வெளிப்படுத்திய தகவலின் அடிப்படையில், கடந்த டிசம்பர், 10ம்தேதி முதல் இந்த ஆண்டு, ஜனவரி 8ம்தேதி வரை, 7.3 கோடி பேரின் தொலைபேசி உரையாடல்களை, என்.எஸ்.ஏ., உளவு ... |
| பள்ளி மாணவர்களிடம் தீபாவளி வசூல் தீவிரம்: பெற்றோர் அதிருப்தி Posted: கோவை : கோவையில் சில தனியார் பள்ளிகளில் தீபாவளி பண்டிகையை காரணம் காட்டி, ஆசிரியர் அல்லாத பள்ளி ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதாக கூறி "ஜோராக' நன்கொடை வசூலிக்கப்பட்டு வருகிறது; பள்ளிகளில் நோட்டீஸ் விநியோகித்து கட்டண வசூல் செய்வது, பெற்றோர் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.ஆண்டு முழுவதும் தங்களுக்காக சேவை செய்பவர்களுக்கு, தீபாவளி பண்டிகை நேரத்தில் அன்பளிப்பு வழங்குவதை பலரும் கடமையாக செய்து வருகின்றனர். இந்த அன்பளிப்பு முறையை கோவையில் உள்ள சில தனியார் பள்ளிகள், தீபாவளி நன்கொடை என்ற பெயரில் ஜோராக "வசூல் வேட்டை' நடத்தி வருகின்றன. இதற்கென்று பள்ளிகள் ... |
| விரைவில் 24 மணி நேர சீரான மின்சாரம்* சட்டசபையில் ஜெ., உறுதி Posted: சென்னை:"தொழில் கூடங்கள், விவசாயம் மற்றும் வீட்டு இணைப்புகள் என, அனைவருக்கும், 24 மணி நேரமும் சீரான மின்சாரம் கிடைக்கும் சூழலை, மிக விரைவில் உருவாக்கிக் காட்டுவோம்,'' என, முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் தெரிவித்தார்.கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.,க்கள் பாலபாரதி, ஆறுமுகம் ஆகியார் தமிழக மின் நிலைமை குறித்து, சட்டசபையில் நேற்று கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்துக்கு பதில் அளித்து, முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:அ.தி.மு.க., அரசு ஆட்சிக்கு வந்து, கடந்த இரு ஆண்டுகளில், மேட்டூர் அனல் மின் திட்டத்தில், 600 மெகாவாட் திட்டம் விரைந்து முடிக்கப்பட்டதால், 500 மெகவாட் ... |
| Posted: காங்கிரசா பா.ஜ.,வா? இரண்டு பக்கமும் கதவை திறந்து வைத்துள்ள, தி.மு.க., தலைவர் கருணாநிதி, இப்போது மூன்றாவது அணிக்கும் பச்சைக் கொடி காட்டியுள்ளார். "இந்தியாவின் நன்மைக்காக, காங்கிரஸ், பா.ஜ., அல்லாத மூன்றாவது அணி அமைந்தால் வரவேற்கிறேன்' என்று பேட்டி அளித்து, தி.மு.க.,வினரை மட்டுமல்ல; அக்கட்சியுடன் அணி சேர ஆர்வம் காட்டும் கட்சிகள் மத்தியிலும், புதிய குழப்பத்தை அவர் ஏற்படுத்தியுள்ளார் .காங்கிரசும் பா.ஜ.,வும் கைவிட்டு விடும் என்ற குழப்பமும் கருணாநிதிக்கு ஏற்பட்டுள்ளதும் ஒரு காரணம், என்கின்றனர் தி.மு.க.,வினர்.வரும் 2014ல் நடக்கும் லோக்சபா தேர்தலுக்கான, கூட்டணி ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |அக்டோபர் 26,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |