Daily Thanthi |
- கட்டாக்கில் தொடர்ந்து மழை: இந்தியா–ஆஸ்திரேலியா இன்று மோதும் 5–வது ஒரு நாள் போட்டி ரத்தாகிறது?
- சென்னையில் இன்று நடக்கிறது இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம்
- பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: அரைஇறுதிக்கு செரீனா முன்னேற்றம்
- ஜூவாலா கட்டாவுக்கு எதிரான புகார் குறித்து இந்திய பேட்மிண்டன் சங்க 3 பேர் கமிட்டி விசாரணைக்கு தடை விதிக்க முடியாது
- சென்னையில் சரக்கு ரெயில் தடம் புரண்டது மின்சார ரெயில் சேவை பாதிப்பு; பயணிகள் அவதி
- ஆன்மீக சிந்தனை (26-10-2013)
- கன்னித்தீவு (26-10-2013)
- ஆண்டியார் (26-10-2013)
- சாணக்கியன் சொல் (26-10-2013)
- வங்கக்கடலில் தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்
| கட்டாக்கில் தொடர்ந்து மழை: இந்தியா–ஆஸ்திரேலியா இன்று மோதும் 5–வது ஒரு நாள் போட்டி ரத்தாகிறது? Posted: 25 Oct 2013 12:47 PM PDT கட்டாக், கட்டாக்கில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்தியா–ஆஸ்திரேலியா இடையே இன்று நடக்க உள்ள 5–வது ஒரு நாள் போட்டி ரத்தாகும் என்று தெரிகிறது. மழையில் மிதக்கும் மைதானம் ஜார்ஜ் பெய்லி தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 7 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் புனே மற்றும் மொகாலியில் நடந்த ஆட்டங்களில் ஆஸ்திரேலியாவும், ஜெய்ப்பூரில் நடந்த 2–வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. ராஞ்சியில் நடந்த 4–வது ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. |
| சென்னையில் இன்று நடக்கிறது இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம் Posted: 25 Oct 2013 12:44 PM PDT சென்னை, சென்னையில் இன்று நடைபெறும் இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டத்தில் ஐ.பி.எல். போட்டியில் இருந்து புனே வாரியர்ஸ் அணி நீக்கம் செய்வது குறித்து முடிவு செய்யப்படுகிறது. கட்டண பிரச்சினை |
| பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: அரைஇறுதிக்கு செரீனா முன்னேற்றம் Posted: 25 Oct 2013 12:28 PM PDT இஸ்தான்புல், துருக்கியில் நடந்து வரும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல்நிலை வீராங்கனை அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் அரைஇறுதிக்கு முன்னேறி இருக்கிறார். பெண்கள் டென்னிஸ் தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஆண்டின் கடைசியில் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி இந்த ஆண்டுக்கான மொத்தம் ரூ.36 கோடி பரிசுத்தொகைக்கான 43–வது பெண்கள் சாம்பியன்ஷிப் தொடர் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. |
| Posted: 25 Oct 2013 12:25 PM PDT புதுடெல்லி, இந்திய பேட்மிண்டன் சங்கம் நியமித்த 3 பேர் கொண்ட கமிட்டி தனக்கு எதிரான புகாரை விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என்று ஜூவாலா கட்டாவின் வேண்டுகோளை ஏற்க டெல்லி ஐகோர்ட்டு மறுத்தது. ஆயுட்கால தடை? |
| சென்னையில் சரக்கு ரெயில் தடம் புரண்டது மின்சார ரெயில் சேவை பாதிப்பு; பயணிகள் அவதி Posted: 25 Oct 2013 11:52 AM PDT சென்னை, திருச்சிக்கு உர மூட்டைகளை ஏற்றிச் சென்ற சரக்கு ரெயில், சென்னையில் நேற்று தடம் புரண்டது. 5 பெட்டிகள் தண்டவாளத்தைவிட்டு கீழே இறங்கின. இதனால், மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். சரக்கு ரெயில் ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து திருச்சிக்கு உர மூட்டைகளை ஏற்றிக் கொண்டு, நேற்று முன்தினம் சரக்கு ரெயில் ஒன்று புறப்பட்டது. 41 பெட்டிகளை கொண்ட இந்த ரெயில் நேற்று முற்பகல் 11.45 மணியளவில், சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தை கடந்து எக்ஸ்பிரஸ் ரெயில் பாதையில் சென்று கொண்டிருந்தது. |
| Posted: 25 Oct 2013 11:43 AM PDT |
| Posted: 25 Oct 2013 11:42 AM PDT |
| Posted: 25 Oct 2013 11:41 AM PDT |
| Posted: 25 Oct 2013 11:39 AM PDT |
| Posted: 25 Oct 2013 11:36 AM PDT சென்னை, சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. தொடக்கத்திலேயே வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் ஒரு நாள் அநேக இடங்களில் பலத்த மழை பெய்தது. அதன் பின்னர் அந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தீவிரம் அடைந்து ஆந்திரா அருகே சென்றுவிட்டது. அதனால் மழை அளவு குறைந்து சில இடங்களில் மட்டுமே மழை பெய்துவருகிறது. |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |