Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


சென்னை - கொச்சுவேளி இடையே சிறப்பு ரயில்: இன்றுமுதல் முன்பதிவு

Posted: 25 Oct 2013 01:42 PM PDT

சென்னை சென்ட்ரல் - கொச்சுவேளி இடையே தீபாவளி கூடுதல் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

விழுப்புரம் நீதிமன்றத்தில் பொன்முடி ஆஜர்

Posted: 25 Oct 2013 01:41 PM PDT

செம்மண் குவாரி வழக்கில், முன்னாள் அமைச்சர் க.பொன்முடி, விழுப்புரம் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜரானார்.

கப்பல் பாதுகாப்பு அதிகாரி உள்ளிட்ட மூவரிடமும் 10 மணி நேரம் விசாரணை

Posted: 25 Oct 2013 01:40 PM PDT

தூத்துக்குடி அருகே சிறைப்பிடிக்கப்பட்ட அமெரிக்க கப்பலின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி உள்ளிட்ட போலீஸ் காவலில் உள்ள மூவரிடமும் உள்நாட்டு பாதுகாப்புப்பிரிவு ஐ.ஜி. கண்ணப்பன் வெள்ளிக்கிழமை 10 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை மேற்கொண்டார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: நவம்பர் 27-க்கு விசாரணை ஒத்திவைப்பு

Posted: 25 Oct 2013 01:40 PM PDT

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 25 வழிமுறைகளைக் கடைப்பிடிக்க கூடுதல் அவகாசம் கேட்டு ஆலை நிர்வாகம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் நவம்பர் 27-ஆம் தேதிக்கு தில்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஒத்திவைத்தது.

சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் திடீர் போராட்டம்

Posted: 25 Oct 2013 01:31 PM PDT

ஆணையர் உள்ளிட்ட காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, சிதம்பரம் நகராட்சி அலுவலகம் முன்பு திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மின்வயர் திருடிய 2 இளைஞர்கள் கைது

Posted: 25 Oct 2013 01:31 PM PDT

வெள்ளியணை அருகே மின்வயரை திருடியதாக  இளைஞர்கள் 2 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். வெள்ளியணை அருகே வால்காட்டுப்புதூரில் உள்ள ஊராட்சி கிணற்றின் மின்வயரை வெள்ளிக்கிழமை 2 இளைஞர்கள் அறுத்துக்கொண்டிருந்தனராம். அப்போது, அந்த வழியாகச் சென்

பொறியியல் கல்லூரியில் தொழில்நுட்பக் கருத்தரங்கு

Posted: 25 Oct 2013 01:31 PM PDT

கரூர் செட்டிநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இயந்திரவியல் துறை சார்பில் சிஎன்சி இயந்திரம் மூலம் உற்பத்தி என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

மின்வயர் திருடிய 2 இளைஞர்கள் கைது

Posted: 25 Oct 2013 01:31 PM PDT

வெள்ளியணை அருகே மின்வயரை திருடியதாக  இளைஞர்கள் 2 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். வெள்ளியணை அருகே வால்காட்டுப்புதூரில் உள்ள ஊராட்சி கிணற்றின் மின்வயரை

பணித்தள பொறுப்பாளர்களுக்கு பயிற்சி

Posted: 25 Oct 2013 01:30 PM PDT

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கூட்ட அரங்கில், 20 ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளை  மேற்கொள்ளும் பணித்தள பொறுப்பாளர்களுக்கான வழிகாட்டி நெறிமுறைகள் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

தமமுக நிர்வாகிகள் அறிவிப்பு

Posted: 25 Oct 2013 01:30 PM PDT

கரூர் மாவட்ட தமிழக மக்கள் முன்னேற்றக்  கழக நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.     மாவட்டச் செயலர் - பெ. கருணாகரன், தலைவர் - வீ.ச. முருகேசன், மகளிர் அணி செயலர்

31 இலங்கை மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு

Posted: 25 Oct 2013 01:30 PM PDT

எல்லை தாண்டியதாக இந்தியக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, சிறை வைக்கப்பட்டுள்ள, 31 இலங்கை மீனவர்களும் ராமநாதபுரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர்.

அரியலூரில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்: எஸ்.பி

Posted: 25 Oct 2013 01:30 PM PDT

தீபாவளி பண்டிகையையொட்டி, அரியலூர் பேருந்து நிலையம் அருகில் கண்காணிப்பு கேமரா  பொருத்தப்படும் என்றார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக்.

வடகிழக்குப் பருவமழை: அரியலூர் ஆட்சியரகத்தில் கட்டுப்பாட்டு அறை திறப்பு

Posted: 25 Oct 2013 01:29 PM PDT

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அரியலூர் மாவட்ட பொதுமக்கள் தொடர்பு கொள்ள வசதியாக ஆட்சியரகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ்.

துப்புரவுப் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

Posted: 25 Oct 2013 01:29 PM PDT

ஊராட்சிகளில் துப்புரவுப் பணியிடத்துக்கு  அக். 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

திருமயம்: 68 பேருக்கு பட்டா மாறுதல் ஆணை

Posted: 25 Oct 2013 01:29 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விரைவு பட்டா மாறுதல் முகாமில் 68 பேருக்கு பட்டா மாறுதல் ஆணை வழங்கப்பட்டது.

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் உற்பத்தி பாதிப்பு

Posted: 25 Oct 2013 01:28 PM PDT

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை காலை 3-ஆவது யூனிட்டில் திடீரென பழுது ஏற்பட்டதால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை நகர்மன்றக் கூட்டம்: திமுக-அதிமுக உறுப்பினர்கள் வாக்குவாதம்

Posted: 25 Oct 2013 01:28 PM PDT

தஞ்சாவூர் நகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் திமுக-அதிமுக உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

பிரான்ஸ் நாட்டு ஊழியரின் வீட்டில் 50 பவுன் நகைகள் திருட்டு

Posted: 25 Oct 2013 01:28 PM PDT

புதுவையில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஊழியரின் வீட்டில் இருந்த 50 பவுன் நகைகள், வங்கி வரைவோலைகளைத் திருடிச் சென்றதாக மூன்று பெண்கள் மீது போலீஸார் வியாழக்கிழமை விசாரணை நடத்தினர்.

வாக்காளர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

Posted: 25 Oct 2013 01:27 PM PDT

மயிலாடுதுறையில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற வாக்காளர் பெயர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு சைக்கிள் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

கொசு ஒழிப்புப் பயிற்சி

Posted: 25 Oct 2013 01:27 PM PDT

குளித்தலையில், ஊராட்சி மன்றம் மற்றும் பேரூராட்சியில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, கொசு ஒழிப்பு குறித்த பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. 

தீபாவளி பண்டிகைக்காகவாகனங்களில் ரூ. 20-க்கு தரமான அரிசி விற்பனை

Posted: 25 Oct 2013 01:27 PM PDT

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கரூர் மாவட்டத்தில் வெளிச்சந்தையில் வாகனம் மூலம் ரூ. 20-க்கு தரமான அரிசி விற்பனை செய்யப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு

Posted: 25 Oct 2013 01:26 PM PDT

தென்னக நதிநீர் இணைப்புத் திட்டத்தை கொடுமுடியில் இருந்து செயல்படுத்தக் கோரி, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.

மீனவர்களைப் பாதுகாக்கக் கோரும் மனுக்கள்: மத்திய அரசு, மீன் வளத் துறைக்கு நோட்டீஸ்

Posted: 25 Oct 2013 01:26 PM PDT

தமிழக மீனவர்களைப் பாதுகாக்கவும் அவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்தும் தாக்குதலைத் தடுக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, திமுக மக்களவை உறுப்பினர் ஏ.கே.எஸ். விஜயன், அதிமுக மக்களவை உறுப்பினர் எம். தம்பிதுரை ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை ஒரே வழக்காகக் கருதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

"18 வயது பூர்த்தியானவர்களை கட்டாயம் புதிய வாக்காளர்களாகச் சேர்க்க வேண்டும்'

Posted: 25 Oct 2013 01:26 PM PDT

18 வயது பூர்த்தியானவர்களை கட்டாயம் புதிய வாக்காளர்களாகச் சேர்க்க  வேண்டுமென மாவட்ட சிறப்பு வரைவு  வாக்காளர் பட்டியல் பார்வையாளர்  ராஜேந்திர ரத்னு தெரிவித்தார்.

ஹெக்டேருக்கு ரூ. 3000 மானியத்தில் இடுபொருள்

Posted: 25 Oct 2013 01:26 PM PDT

திருந்திய நெல் சாகுபடியில் ஹெக்டேருக்கு ரூ. 3000 மானியத்தில்  இடுபொருள் வழங்கப்படுவதாக மாவட்ட  ஆட்சியர் ச. ஜெயந்தி தெரிவித்தார்.

கரூரில்தீபாவளிக்காக கண்காணிப்பு கோபுரம் திறப்பு

Posted: 25 Oct 2013 01:26 PM PDT

கரூரில் தீபாவளியையொட்டி, திருடர்களை  கண்காணிக்க கண்காணிப்பு கோபுரம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

ஆயுதப்படை பிரிவில் டிஐஜி திடீர் ஆய்வு

Posted: 25 Oct 2013 01:25 PM PDT

: கரூர் ஆயுதப்படை பிரிவை மத்திய மண்டல காவல்துறை துணைத் தலைவர்  அமல்ராஜ் வெள்ளிக்கிழமை திடீர் ஆய்வு செய்தார்.

முதல்வர் கோப்பைக்கான மாவட்ட விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

Posted: 25 Oct 2013 01:25 PM PDT

கரூரில் முதல்வர் கோப்பைக்கான  மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

மண்டல பூப்பந்தாட்ட போட்டி:டிஎன்பிஎல் மாணவிகள் அணி தகுதி

Posted: 25 Oct 2013 01:25 PM PDT

மண்டல அளவிலான பூப்பந்தாட்ட போட்டியில் விளையாட டிஎன்பிஎல் மாணவிகள் அணி தகுதிப் பெற்றுள்ளது.

சிறுமி பாலியல் பலாத்கார விவகாரம்:நடவடிக்கைக் கோரி பெற்றோர் மனு

Posted: 25 Oct 2013 01:24 PM PDT

கரூர் மாவட்டம், குளித்தலை அருகேயுள்ள நெய்தலூர் இந்திரா நகரைச் சேர்ந்த மூன்றரை வயதுச் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சிறுமியின் பெற்றோர் குளித்தலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு

குளித்தலையில் பஞ்சமி நில மீட்புக்கான பயிற்சி கூட்டம்

Posted: 25 Oct 2013 01:24 PM PDT

: கரூர் மாவட்டம், குளித்தலையில் பஞ்சமி நில மீட்புக்கான பயிற்சி கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு நில உரிமை கூட்டமைப்பு மற்றும் கரூர் மாவட்ட தலித்மக்கள் முன்னேற்ற சங்கம் சார்பில்

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உயர்நிலை பாலம்: முதல்வருக்கு விவசாயிகள் நன்றி

Posted: 25 Oct 2013 01:23 PM PDT

அரியலூர் மாவட்டம், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உயர்நிலை பாலம் அமைப்பதற்கு ரூ. 48 கோடி நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

விஷம் குடித்த இளைஞர் சாவு

Posted: 25 Oct 2013 01:23 PM PDT

ஜயங்கொண்டம் அருகே குடும்பத் தகராறு காரணமாக, விஷம் குடித்த இளைஞர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

தீபாவளியை ஒலி மாசற்ற பண்டிகையாக கொண்டாட ஆட்சியர் வேண்டுகோள்

Posted: 25 Oct 2013 01:23 PM PDT

தீபாவளி பண்டிகையை ஒலி மாசற்ற பண்டிகையாக பொதுமக்கள் கொண்டாட வேண்டுமென அரியலூர் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெண்ணை திருமணம் செய்வதாகக்கூறி ஏமாற்றிய வழக்குரைஞருக்கு 7 ஆண்டு சிறை

Posted: 25 Oct 2013 01:23 PM PDT

அரியலூர் மாவட்டம்,  ஜயங்கொண்டம் அருகே பெண்ணை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றிய வழக்குரைஞருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து அரியலூர் விரைவு மகளிர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

பெண் தற்கொலை

Posted: 25 Oct 2013 01:22 PM PDT

செந்துறை அருகேயுள்ள  சிறுகடம்பூரைச் சேர்ந்தவர்  கலியமூர்த்தி (55). அவரது மகள் மகேஸ்வரி (22).  இவருக்கும் வாலாஜாநகரத்தைச் சேர்ந்த பிரபாகரனுக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

சைக்கிள் ஓட்டுவோம்

Posted: 25 Oct 2013 01:22 PM PDT

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை சைக்கிள்களின் பயன்பாடு பெருமளவில் இருந்தது. பள்ளி, கல்லூரி, பணிக்கு செல்வோர் அதிகளவில் சைக்கிள் பயணம் மேற்கொண்டனர்.

வாக்காளர் பட்டியல் விடியோ படக்காட்சி

Posted: 25 Oct 2013 01:22 PM PDT

அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தம் தொடர்பான விடியோ படக்காட்சி வியாழக்கிழமை மாலை ஒளிபரப்பப்பட்டது.

ஆர்ப்பாட்டம்

Posted: 25 Oct 2013 01:22 PM PDT

வறட்சி நிவாரணம் கோரி, செந்துறையில் முந்திரி விவசாயிகள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எளம்பலூரில் கோ பூஜை நிறைவு விழா

Posted: 25 Oct 2013 01:21 PM PDT

எளம்பலூர் பிரம்மரிஷி மலையடிவாரத்தில் உள்ள செல்வமகா வெற்றி கணபதி மற்றும் காகன்னை ஈஸ்வரர் கோயிலில், மகாசித்தர்கள் அறக்கட்டளை சார்பில் உலக மக்கள் நலன் கருதியும், ஜீவகாருண்ய சிந்தனை

அறிவு தந்த மன்றங்கள்

Posted: 25 Oct 2013 01:21 PM PDT

இயற்கையை ஆராதிக்கும் ஆங்கிலக் கவிஞர் வேர்ட்ஸ் வொர்த் ஒரு முறை விருந்தினர் ஒருவருக்கு தம் வீட்டைச் சுற்றிக் காட்டியபோது நூலகத்திற்கு அழைத்துச் சென்றாராம். அங்கிருந்த நூல்களை எல்லாம் காட்டிவிட்டு, "இதுதான் என் நூலகம், ஆனால் என் படிப்பெல்லாம் இதற்கு வெளியிலேதான்' என்றாராம்.

"வாக்காளர் பட்டியலில் தகுதியற்றோர் பெயரை நீக்க ஒத்துழைக்க வேண்டும்'

Posted: 25 Oct 2013 01:21 PM PDT

வாக்காளர் பட்டியலில் இருந்து, தகுதியற்றோர் பெயரை நீக்க அரசியல் கட்சியினர் ஒத்துழைக்க வேண்டும் என்றார் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் டாக்டர் வீரசண்முகமணி.

துணைத் தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் தொடக்கம்

Posted: 25 Oct 2013 01:21 PM PDT

பெரம்பலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் -2 துணைத் தேர்வர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

Posted: 25 Oct 2013 01:20 PM PDT

பெரம்பலூரில், 40 மைக்ரானுக்கு குறைவாக விற்பனைக்காக  வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருள்களை நகராட்சி அலுவலர்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.

பள்ளி மாணவர்கள் மூவரை காணவில்லை எனப் புகார்

Posted: 25 Oct 2013 01:20 PM PDT

பெரம்பலூரில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் 3 மாணவர்களை காணவில்லை என காவல் நிலையத்தில், அவர்களது பெற்றோர் வெள்ளிக்கிழமை புகார் அளித்தனர்.

1,607 பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ. 14.74 லட்சம் ஊக்கத்தொகை

Posted: 25 Oct 2013 01:20 PM PDT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில், பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

திசைதிருப்பல்!

Posted: 25 Oct 2013 01:20 PM PDT

தனது பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜீவ்காந்தி இருவரும் கொல்லப்பட்டதைப் போலத் தானும் கொல்லப்படலாம் என்றும், அதற்காக பயப்படப் போவதில்லை என்றும், காங்கிரஸின் அறிவிக்கப்படாத பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி ராஜஸ்தான் மாநிலம் அல்வர் மாவட்டம், சுருவில் நடந்த பேரணியில் கூறியிருப்பது அவர்மீது அனுதாபம் ஏற்படுத்துவதற்கு பதிலாக, அவரது முதிர்ச்சியின்மையைத்தான் வெளிப்படுத்துகிறது.

ஆவின் நிறுவன இடத்திலிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Posted: 25 Oct 2013 01:20 PM PDT

புதுக்கோட்டை புறவழிச்சாலையில் ராஜகோபாலபுரம் அருகே ஆவின் நிறுவனத்துக்குச் சொந்தமாக சுமார் 1 ஏக்கர் நிலம் உள்ளது. அதில், விரைவில் மதிப்புக்கூட்டப்பட்ட பால் பொருள்கள் உற்பத்தி செய்யும்

அனுமதியின்றி மணல் அள்ளிய 2 மாட்டுவண்டிகள் பறிமுதல்

Posted: 25 Oct 2013 01:19 PM PDT

மணமேல்குடியில் அனுமதியின்றி மணல் அள்ளிய 2 மாட்டுவண்டிகளை போலீஸார் வியாழக்கிழமை  பறிமுதல் செய்தனர்.

வருவாய் கோட்ட அலுவலகத்தில் ஆண்டுத்தணிக்கை ஆய்வு

Posted: 25 Oct 2013 01:19 PM PDT

புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆண்டுத்தணிக்கையில்

வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்

Posted: 25 Oct 2013 01:19 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகளை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 25 Oct 2013 01:18 PM PDT

புதுக்கோட்டையில் சென்னையைச் சேர்ந்த தனியார் கால்டாக்சி நிறுவனத்தின் சேவைக்கு அனுமதி அளித்ததைக் கண்டித்து மாவட்ட சாலைப்போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை

புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி

Posted: 25 Oct 2013 01:18 PM PDT

ஆவுடையார்கோவில் ஒன்றியம், ஆர். புதுப்பட்டினம் அரசு தொடக்கப் பள்ளியில் இளையோர் அமைப்பு சார்பில் புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி அண்மையில் நடைபெற்றது.

துணை நிதிநிலை அறிக்கையில் பல்வேறு திட்டங்களுக்காக ரூ.5,898 கோடி ஒதுக்கீடு

Posted: 25 Oct 2013 01:18 PM PDT

நடப்பு நிதியாண்டுக்கான முதல் துணை நிதிநிலை அறிக்கையில் பல்வேறு திட்டங்களுக்காக ரூ.5,898 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதுகையில் ஐக்கிய நாடுகள் தினம்

Posted: 25 Oct 2013 01:18 PM PDT

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2013-ம் ஆண்டின் ஐக்கியநாடுகள் தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

மாதர் சம்மேளத்தினர் நூதனப் போராட்டம்

Posted: 25 Oct 2013 01:18 PM PDT

புதுக்கோட்டையில் காவல்துறையினரைக் கண்டித்து இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் வெள்ளிக்கிழமை நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: நாளை இறுதிக்கட்ட சிறப்பு முகாம்

Posted: 25 Oct 2013 01:17 PM PDT

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்வதற்கான இறுதிக்கட்ட சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (அக். 2

வாழ்வாதார இயக்கம்: 157 ஊராட்சிகளுக்கு நிதி

Posted: 25 Oct 2013 01:17 PM PDT

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாழ்வாதாரத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் 157 ஊராட்சிகளுக்கு தொடக்க நிதி வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

"ஆசிரியர்கள் கண்டிப்பது மாணவர்களை நல்வழிப்படுத்தவே'

Posted: 25 Oct 2013 01:17 PM PDT

மாணவர்களை நல்வழிப்படுத்துவதற்காகவே ஆசிரியர்கள் கண்டிக்கின்றனர் என்றார் பட்டிமன்றப் பேச்சாளர் பேராசிரியர் மு. ராமச்சந்திரன்.

இளம் பெண்ணை காணவில்லையென புகார்

Posted: 25 Oct 2013 01:16 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே பரம்பூர் ஊராட்சி காரசூராம்பட்டியை சேர்ந்த விவசாயி சிதம்பரம்.   இவரது மகள் செல்வமணி (25) விவசாய வேலை செய்துவந்தார்.

இலவச கண் பரிசோதனை முகாம்

Posted: 25 Oct 2013 01:16 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், கைக்குறிச்சி பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் வாசன் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவாரூரில் மறியலில் ஈடுபட்ட மக்கள் நலப் பணியாளர்கள் 84 பேர் கைது

Posted: 25 Oct 2013 01:15 PM PDT

மீண்டும் பணி வழங்கக் கோரி, திருவாரூரில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் நலப் பணியாளர்கள் 84 பேரை போலீஸார் கைது செய்தனர்.

குத்தாலம் கடைகளில் ஆய்வுகுத்தாலம்,

Posted: 25 Oct 2013 01:15 PM PDT

நாகப்பட்டினம் மாவட்டம், குத்தாலம் கடைவீதிகளிலுள்ள அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் வியாழக்கிழமை திடீரென ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சிறையில் உள்ள காரைக்கால் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை

Posted: 25 Oct 2013 01:14 PM PDT

இலங்கை சிறையில் உள்ள  காரைக்கால் மாவட்ட மீனவர்கள் 32 பேரை தீபாவளிக்கு முன்னதாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று   வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்காலில் சிறப்புப் பார்வையாளர் ஆய்வு

Posted: 25 Oct 2013 01:14 PM PDT

: காரைக்கால் மாவட்டத்தில் நடைபெறும் வாக்காளர் பெயர் சேர்ப்பு, முகவரி திருத்தம், வாக்குச்சாவடி இடமாற்றம் குறித்து அமைக்கப்பட்டுள்ள முகாமை, சிறப்புப் பார்வையாளர் டி.கே. மிஸ்ரா வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.

"சிறையில் இருக்கும் கைதிகள் செல்போனில் பேச முடியாத வகையில் நடவடிக்கை'

Posted: 25 Oct 2013 01:14 PM PDT

சிறையில் இருக்கும் கைதிகள் செல்போனில் பேசமுடியாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

கத்தார் நாட்டு சிறையில் உள்ள கணவரை மீட்டுத் தர இளம் பெண் கோரிக்கை

Posted: 25 Oct 2013 01:13 PM PDT

கத்தார் நாட்டு சிறையில் வாடும் தனது கணவரை மீட்டு தர வேண்டும் என இளம் பெண் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்தில் காலி பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை

Posted: 25 Oct 2013 01:13 PM PDT

நாகை உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்தில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

அக்டோபர் 26 மின் தடை

Posted: 25 Oct 2013 01:13 PM PDT

மயிலாடுதுறை வட்டம், மல்லியக்கொல்லை பகுதிகளில்  சனிக்கிழமை (அக்.26)  மின் விநியோகம் இருக்காது.இதுகுறித்து மின் வாரிய கோட்ட செயற்பொறியாளர் எஸ். சத்தியநாராயணன்  விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

உப்பு உற்பத்திக்கானகுத்தகை நிலவரி உயர்வுக்கு எதிர்ப்பு

Posted: 25 Oct 2013 01:12 PM PDT

உப்பு உற்பத்தி செய்யப்படும் நிலப் பரப்புக்கு குத்தகை வரியை உயர்த்தியுள்ள மத்திய அரசின் முடிவுக்கு வேதாரண்யம் சிறு உப்பு உற்பத்தியாளர்கள் இணையம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

தொடக்க கூட்டுறவு வேளாண் வங்கி முன்பு விவசாயிகள் முற்றுகை:32 பேர் கைது

Posted: 25 Oct 2013 01:12 PM PDT

சீர்காழி அருகேயுள்ள நிம்மேலி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் நிதி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கக் கோரி சங்கத்தின் முன்பு வெள்ளிக்கிழமை

"பாஜக ஆட்சிக்கு வந்தால்எல்லை பிரச்னைக்கு தீர்வு காணப்படும்

Posted: 25 Oct 2013 01:12 PM PDT

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் எல்லை பிரச்னை, கச்சதீவு பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்றார் அக் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன்.

வாயில் கருப்பு துணி கட்டிக் கொண்டு வந்த விவசாயிகள்

Posted: 25 Oct 2013 01:11 PM PDT

கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு வழங்கிய கரும்புக்கான நிலுவைத் தொகை ரூ. 26 கோடியை ஆலை நிர்வாகம் வழங்காததைக் கண்டித்து, கரும்பு விவசாயிகள் சிலர் வாயில் கருப்புத் துணியைக் கட்டிக் கொண்டு,

வேதாரண்யம் அருகே 2 வீடுகள் தீக்கிரை

Posted: 25 Oct 2013 01:11 PM PDT

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 2 வீடுகள் தீக்கிரையானது. தகட்டூர் தெற்கு ஆதியங்காடு முத்து மனைவி வடுகம்மாள், இவரது மகன் ராமையன் ஆகியோர் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வருகின்றனர்.

"மின்சார வாரியத்துக்கு நடப்பாண்டில் ரூ.12 ஆயிரத்து 197 கோடி நிதியுதவி'

Posted: 25 Oct 2013 01:09 PM PDT

தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு நடப்பாண்டில் ரூ.12 ஆயிரத்து 197 கோடி, நிதியுதவியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

பேரவையில் அறிவிக்கப்பட்ட புதிய மின் திட்டங்களின் நிலைமை என்ன?

Posted: 25 Oct 2013 01:06 PM PDT

சட்டப் பேரவையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பல்வேறு புதிய மின் திட்டங்களின் நிலைமை குறித்து முதல்வர் ஜெயலலிதா பேரவையில் வெள்ளிக்கிழமை விளக்கம் அளித்தார்.

பேரவையில் இருந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றம்

Posted: 25 Oct 2013 01:05 PM PDT

பேரவையை நடத்தவிடாமல் குரல் எழுப்பிய திமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப் பேரவையில் இருந்து வெள்ளிக்கிழமை வெளியேற்றப்பட்டனர்.

இரண்டரை ஆண்டுகளில் 68 பணிமனைகள்: தமிழக அரசு தகவல்

Posted: 25 Oct 2013 01:02 PM PDT

தமிழகத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 68 பணிமனைகளை அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

நூருல் இஸ்லாம் பல்கலை.யில் மென்பொருள் பயிலரங்கம்

Posted: 25 Oct 2013 01:01 PM PDT

குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைகழகத்தில் மென்பொருள் பயிலரங்கம் நடைபெற்றது.

என்ஜினைக் கழற்றி, மீண்டும் இணைக்கும் பிரச்னை நாகர்கோவிலில் ரயில் ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 25 Oct 2013 01:01 PM PDT

என்ஜினை பெட்டியிலிருந்து கழற்றி, மீண்டும் இணைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகர்கோவிலில் ரயில் என்ஜின் ஓட்டுநர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாகர்கோவில் அருகே ரயில்வே கேட் மூட எதிர்ப்பு தெரிவித்து மக்கள் மீண்டும் போராட்டம்

Posted: 25 Oct 2013 01:00 PM PDT

நாகர்கோவில் அருகே ரயில்வேகேட்டை மூட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வெள்ளிக்கிழமை மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 12 இணையதள மையங்களுக்கு அனுமதி

Posted: 25 Oct 2013 01:00 PM PDT

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க புதிதாக 12 இணையதள மையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

புதிய காவல் சட்ட மசோதா அறிமுகம்

Posted: 25 Oct 2013 01:00 PM PDT

சட்டப்பேரவையில் புதிய காவல் சட்ட மசோதாவை முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்தார்.

நவ. 1 குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை

Posted: 25 Oct 2013 01:00 PM PDT

கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த நாளான நவம்பர் 1 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

களியக்காவிளையில் பிளாஸ்டிக் தடுப்பு நடவடிக்கை

Posted: 25 Oct 2013 12:59 PM PDT

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் பிளாஸ்டிக் தடுப்பு நடவடிக்கைகள் வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் தொடங்கப்பட்டன.

சென்னைக்கு இயக்கப்படும் வாராந்திர ரயிலை தினசரி இயக்க எம்.எல்.ஏ. கோரிக்கை

Posted: 25 Oct 2013 12:59 PM PDT

நாகர்கோவில்-சென்னை எழும்பூர் வாராந்திர ரயிலை, தினசரி ரயிலாக இயக்க வேண்டும் என விளவங்கோடு சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். விஜயதரணி கேட்டுக் கொண்டுள்ளார்.

இலவச மருத்துவ முகாம்

Posted: 25 Oct 2013 12:59 PM PDT

ஆசாரிபள்ளம் புனித தஸ்நேவிஸ் மாதா ஆலய வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

களியக்காவிளை : முதியவர் தற்கொலை

Posted: 25 Oct 2013 12:59 PM PDT

களியக்காவிளை அருகே சிறுநீரகக்கோளாறு காரணமாக அவதிப்பட்ட முதியவர் ஆசிட் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருவட்டாறு அருகே முதியவர் மர்மச் சாவு

Posted: 25 Oct 2013 12:58 PM PDT

திருவட்டாறு அருகே செங்கோடி பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் (65). வியாழக்கிழமை இரவு இவருக்கும், இதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு நபருக்கு இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

நாடார் சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கோரி நவ. 11-ல் ஆர்ப்பாட்டம்

Posted: 25 Oct 2013 12:58 PM PDT

நாடார் சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கோரி நாகர்கோவிலில் போராட்டம் நடத்த வைகுண்ட சுவாமி தர்ம பிரஜாரண சபை  முடிவு செய்துள்ளது.

பள்ளி மாணவர்கள் சுற்றுச்சூழல் முகாமில் பங்கேற்பு

Posted: 25 Oct 2013 12:57 PM PDT

கருங்கல் அருகே உள்ள நல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கொடைக்கானலில் 3 நாள்கள் நடைபெற்ற சுற்றுச்சூழல் முகாமில் பங்கேற்றனர்.

குமரியில் சுற்றுலாப் பயணிகள் அதிகரிப்பு

Posted: 25 Oct 2013 12:57 PM PDT

கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து வருவதை தொடர்ந்து, முக்கடல் சங்கமம் பகுதியில் சூரிய அஸ்தமனம் பார்க்க வெள்ளிக்கிழமை மாலை ஏராளமானோர் குவிந்தனர்.

கடலோரப் பகுதிகளில் சாலைகளை சீரமைக்க மீனவர் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்

Posted: 25 Oct 2013 12:57 PM PDT

கடலோரப் பகுதிகளில் உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என மீனவர் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பெண்ணிடம் நகைப்பறிப்பு

Posted: 25 Oct 2013 12:57 PM PDT

பளுகல் காவல் சரகம், மாங்காலை பகுதியில் பெண்ணிடம் மூன்றே முக்கால் பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.

கேரளத்துக்கு கடத்த முயன்ற 1,400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

Posted: 25 Oct 2013 12:56 PM PDT

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 1,400 கிலோ ரேஷன் அரிசியை பறக்கும்படை தனி வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

திருவட்டாறு மாணவிபாலஸ்ரீ விருதுக்கான இறுதிச் சுற்றுக்குத் தேர்வு

Posted: 25 Oct 2013 12:56 PM PDT

புது தில்லியில் நடைபெறும் பாலஸ்ரீ விருதுக்கான இறுதிச் சுற்றுப் போட்டிக்கு, திருவட்டாறு மாணவி ஆதிரா தேர்வாகியுள்ளார்.

பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஊக்கப் பரிசு

Posted: 25 Oct 2013 12:56 PM PDT

நாகர்கோவிலில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் மாணவர், மாணவிகளுக்கு ஊக்கப் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மதமாற்ற தடைச் சட்டத்தை அமல்படுத்தக் கோரி நடைப்பயணம்

Posted: 25 Oct 2013 12:56 PM PDT

மதமாற்ற தடைச் சட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரி, இந்து தேசிய காங்கிரஸ் சார்பில் கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவிலுக்கு வியாழக்கிழமை நடைபயணம் நடைபெற்றது.

தெ.தி. இந்துக் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி

Posted: 25 Oct 2013 12:55 PM PDT

நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரி சுயநிதிப் பிரிவின் மின்னணுவியல் துறை சார்பில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

வாடகைக் கட்டடத்தில் குமரி அருங்காட்சியகம் வெயில், மழையில் வரலாற்றுப் பொக்கிஷங்கள்!

Posted: 25 Oct 2013 12:55 PM PDT

கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகம் வாடகைக் கட்டடத்தில் செயல்படுவதால், பாதுகாக்கப்பட வேண்டிய பல்வேறு அரிய வரலாற்று, கலைப் பொக்கிஷங்கள் வெயில், மழைக்கும் இரையாகின்றன.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™