Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


சஞ்சய் தத்தின் தண்டனை குறைப்பு? மகாராஷ்டிரா அரசிடம் கருத்து கேட்பு

Posted:

புதுடில்லி: மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், சிறை தண்டனை அனுபவித்து வரும், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் தண்டனை காலத்தை குறைப்பது குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம், மகாராஷ்டிரா அரசிடம் கருத்து கேட்டுள்ளது.மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், பாலிவுட் நடிகருக்கு, சுப்ரீம் கோர்ட், ஐந்தாண்டு சிறை தண்டனை வழங்கியது. தண்டனையை மறுபரிசீலனை செய்யக்கோரி, சஞ்சய் தத் தாக்கல் செய்த அப்பீல் மனுவை, சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. இந்திய பத்திரிகை கவுன்சிலின் தலைவர், மார்க்கண்டேய கட்ஜு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பிய மனுவில், 'சஞ்சய் தத் ...

மத சார்பற்ற அணி அமைக்க வரவேற்பு இல்லை: கம்யூ., அழைப்பு; மாநில கட்சிகள் நிராகரிப்பு

Posted:

புதுடில்லி : இடதுசாரி கட்சிகள் தலைமையில், காங்., பா.ஜ., அல்லாத கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள, மதவாதத்துக்கு எதிரான மாநாட்டை, பெரும்பாலான மாநில கட்சிகள் புறக்கணித்துள்ளன. இதனால், வரும் லோக்சபா தேர்தலை சந்திக்க, மதச்சார்பின்மையை மையப்படுத்தி அணி அமைக்கும், இடதுசாரி கட்சிகளின் நடவடிக்கைக்கு வரவேற்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது.அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளதை அடுத்து, காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணியும், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியும், தங்களின் கூட்டணியில் புதிய கட்சிகளை இழுப்பதற்கான நடவடிக்கைகளை துவங்கியுள்ளன. தே.ஜ., கூட்டணிக்கு, ...

அரசு பஸ்களில் இரட்டை இலை சர்ச்சை: கோர்ட்டுக்கு கொண்டு செல்ல தி.மு.க., தீவிரம்!

Posted:

சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கும், மினி பஸ்களைத் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதற்காக, சென்னை தலைமைச் செயலகம் முன், புதிய பஸ்கள் கொண்டு வந்து நிறுத்தப்பட்டிருந்தன. புதிய வழித் தடங்களில் அந்த புதிய பஸ்களை, தமிழக முதலவர் கொடியசைத்து துவக்கி வைத்தார். கூடவே தமிழகத்தின் பல்வேறு மண்டலங்களுக்கும் புதிய பஸ்கள் வழங்கப்பட்டன. இந்த பஸ்கள் அனைத்தும் மஞ்சள் நிறத்தில் இருக்க, இரண்டு புறமும், பிரமாண்டமாக பச்சை நிறத்தில், இரட்டை இலை போடப்பட்டிருக்க, அது பெரும் சர்சசையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தத் தகவல், தி.மு.க., தரப்புக்கு உடனடியாகப் போய் சேர, ...

"சட்டசபையில் வம்பு இழுத்தால் கண்டுக்காதீங்க...: விஜயகாந்த் அறிவுரை

Posted:

"சட்டசபையில் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், சக கட்சி போட்டி எம்.எல்.ஏ.,க்களும் வாய் கொடுத்து, வம்புக்கு இழுத்தாலும், அதை கண்டுகொள்ள வேண்டாம்,'' என, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு அக்கட்சி தலைவர் விஜயகாந்த் ஆலோசனை வழங்கியுள்ளார்.விஜயகாந்த்தை தவிர அக்கட்சியின் மற்ற எம்.எல்.ஏ.,க்கள் நேற்று சட்டசபைக்கு சென்றனர். அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களை தவிர, மீதமுள்ள தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள், சட்டசபை நிகழ்ச்சி முடிந்ததும், சென்னை கோயம்பேடு தே.மு.தி.க., தலைமை அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு, விஜயகாந்த் தலைமையில், எம்.எல்.ஏ.,க்கள் ஆலோசனை கூட்டம் ஒரு மணிநேரம் நடந்தது. வரும், 30ம் தேதி ...

முக்கிய பொறுப்புகளில் பெண்கள் இருப்பது சாதனையா? சோதனையா?

Posted:

கோவை : அரசியல்ரீதியாக பெண்கள் புறக்கணிக்கப்பட்ட கோவை மாவட்டத்தில், முக்கிய அதிகாரிகளாக பெண்கள் இருப்பது, இந்த மாவட்டத்துக்கு சாதனையா, சோதனையா என்ற கேள்வி, மக்களிடம் எழுந்துள்ளது.வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவுக்கு, கோவை மாவட்டத்தில் பெண் அதிகாரிகள் மிக முக்கியமான பொறுப்புகளை வகித்து வருகின்றனர். இந்த மாவட்டத்திலுள்ள 4 ஐ.ஏ.எஸ்., பணியிடங்களான கலெக்டர், மாநகராட்சி கமிஷனர், விற்பனை வரித்துறை துணை கமிஷனர் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை ஆணையர் ஆகிய பணியிடங்களில், முறையே அர்ச்சனா பட்நாயக், லதா, மரியம் மற்றும் சாந்தா ஆகிய பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளே ...

இன்றைய நிலையில் வெங்காயம் 'தங்கம்': மும்பையில் பரபரப்பு திருட்டு சம்பவம்

Posted:

வெங்காயத்தின் விலை அதிகரித்து வருவதால், வெங்காய பதுக்கல் மும்முரமாக நடந்து வரும் நிலையில், மும்பையில், காய்கறி மொத்த கடையில் நுழைந்து, 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 300 கிலோ வெங்காயத்தை திருடிச் சென்ற இருவர், போலீசில் சிக்கிஉள்ளனர். விலை தொடர்ந்து அதிகரித்தால், தங்கத்திற்கு கொடுக்கப்படும் பாதுகாப்பு, வெங்காயத்திற்கும் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என, வியாபாரிகள் அஞ்சுகின்றனர். விலையை குறைக்க, மத்திய அரசும், சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.செயற்கையாக விலையேற்றம்:இந்திய உணவு வகைகளில், அத்தியாவசியமாக இடம்பெறும் வெங்காயத்தின் விலை, ...

எல்லை விஷயத்தில் சீனா தலைவலி இனி தீருமா?

Posted:

பீஜிங் : இந்தியா - சீனா இடையே, எல்லை பாதுகாப்பு ஒத்துழைப்பு, நதிகள் விவகாரம் உட்பட, ஒன்பது முக்கிய ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தாயின. இதில், பிரதமர் மன்மோகன் சிங்கும், சீன பிரதமர் லீ கெகியாங்கும் கையெழுத்திட்டனர். இதன் மூலம், இருநாடுகளும் ஆசியாவின் மறுமலர்ச்சிக்கு உதவும் வகையில், இருநாடுகளின் செயல்கள் அமையும் என்ற கருத்தை பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.ரஷ்ய பயணத்தை முடித்துக்கொண்டு, நேற்று சீனா சென்ற பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. அதன்பின், இரு நாட்டு உயர்மட்ட தலைவர்கள் சந்தித்து பேசினர். பின், பிரதமர் மன்மோகன் ...

'என் பாட்டி, தந்தை போல் நானும் கொல்லப்படலாம்': ராகுல் திடீர் அலறல்

Posted:

சூரு (ராஜஸ்தான்): ''என் பாட்டி, தந்தை கொலை செய்யப்பட்டது போல், நானும் கொல்லப்படலாம்; அதற்காக கவலைப்பட மாட்டேன்; மதவாத சக்திகளை தொடர்ந்து விமர்சிப்பேன்,'' என, காங்., துணைத் தலைவர் ராகுல், உணர்ச்சிகரமாக பேசினார்.அடுத்தாண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், பா.ஜ., பிரதமர் வேட்பாளராக, நரேந்திர மோடி நியமிக்கப்பட்டுள்ளார். காங்., சார்பில், அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல், பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது.திடீர் மாற்றம்:ஏற்கனவே, பிரசாரத்தை துவக்கிவிட்ட நரேந்திர மோடிக்கு, செல்லுமிடமெல்லாம் ஏராளமான கூட்டம் கூடுகிறது. இதையடுத்து, ...

'தொழிற்சங்கத்திடம் பேசவில்லை' கருணாநிதி வருத்தம்

Posted:

சென்னை : 'முக்கியமான தொழிற்சங்கப் பிரதிநிதிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி விட்டு, போனசை அறிவிக்காமல், அனைத்து புகழும் அம்மாவுக்கே என்பதைப் போல தன்னிச்சையாக அறிவித்துள்ளனர்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:தி.மு.க., ஆட்சியில் எந்த அளவிற்கு அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, 'போனஸ்' மற்றும் கருணைத் தொகை வழங்கப்பட்டதோ, அதே அளவிற்குத் தான் தற்போது 20 சதவீதம் என்ற அளவிற்கு இந்த ஆட்சியில் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பைக் கூட முக்கியமான தொழிற்சங்கப் பிரதிநிதிகளை அழைத்து ...

புதிய அனல் மின் நிலையங்களை துவக்குவதில் அரசு தீவிரம்

Posted:

செய்யூர், உடன்குடி அனல் மின் நிலைய திட்ட பணிகளை விரைவாக மேற்கொள்ள, அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த பணிகளை மேற்கொள்ள, முன்னணி நிறுவனங்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.ரூ.18 ஆயிரம் கோடி:மத்திய அரசு, 'அல்ட்ரா மெகா பவர் புராஜக்ட்' என்ற திட்டத்தின் கீழ், தனியார் பங்களிப்புடன், தமிழகத்தில், காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூரில், 18 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 4,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட, அனல் மின் நிலையம் அமைக்க முடிவு செய்தது.இதற்கான அறிவிப்பு முறைப்படி, கடந்த, 2008ல் வெளியிடப்பட்டது. எனினும், தமிழக அரசு, 2010ம் ஆண்டில் தான் ஒப்புதல் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™