Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- அமெரிக்க கப்பல் பாதுகாப்பு அதிகாரி இலங்கையில் தங்கியிருந்தார்?
- கூலி உயர்வு கோரி பேரூராட்சிப் பணியாளர்கள் உண்ணாவிரதம்
- கேரளத்துக்கு மணல் கடத்த முயற்சி: லாரி பறிமுதல்
- மூதாட்டியைக் கொன்று நகைகள் கொள்ளை
- வெடிகுண்டு வீசி இளைஞர் கொலை
- ஓய்வுபெற்ற அரசு ஊழியருக்கு மிரட்டல்: டாஸ்மாக் பணியாளர் கைது
- குலசேகரம் குருசடிகள் உடைப்பு சம்பவம்: இளைஞர் கைது
- கடையில் திருட முயற்சி: 3 பேர் கைது
- தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
- நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இடநெருக்கடி
- முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு
- குமரி மாவட்ட புதிய பி.ஆர்.ஒ.பொறுப்பேற்பு
- குமரி மாவட்டத்தில் பரவலாக மழை
- நாகர்கோவில்: 20 புதிய புறநகர் பேருந்துகள் தொடக்கம்
- மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி
- திருச்செந்தூர் பள்ளியில்..
- விவேகானந்த கேந்திர பண்பாட்டு போட்டிகள்
- பசும்பொன் செல்லும் வாகனங்கள் முறையான அனுமதி பெற வேண்டும்: ஆட்சியர்
- ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் வட்டங்களில் மணல் திருட்டு
- உரிமம் பெற்று பட்டாசு கடை நடத்த வேண்டும்: சார்-ஆட்சியர்
- காயல்பட்டினத்தில் நகராட்சி நிர்வாகத் துறை பொறியாளர் ஆய்வு
- 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் பேரவையில் பங்கேற்பு
- மாணவர்கள் போராட்டம்: நாகம்பட்டி மனோ கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை
- ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க செயற்குழுக் கூட்டம்
- ரயிலிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி காயம்
- நூலக வாசகர் வட்டக் கூட்டம்
- வறுமை ஒழிப்பு தின தெருமுனைக் கூட்டம்
- சங்கிலி பறிப்பு: தொழிலாளி கைது
- அடிப்படை வசதிகளற்ற ஆரம்பப் பள்ளி
- புதுப்பட பாடல்கள் மெமரி கார்டில் பதிவு: 7 பேர் கைது
- காயல்பட்டினம் கல்லூரியில் பயின்றோர் கழகக் கூட்டம்
- குலசேகரன்பட்டினம்
- ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ. மறைவுக்கு பேரவையில் இரங்கல்
- நாகர்கோவில்
- இந்தியா - சீனா எல்லைப் பாதுகாப்பு ஒப்பந்தம்
- வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்
- கோ}கோ: சகாயமாதா பள்ளி சிறப்பிடம்
- மனுநீதி நாள் முகாமில் 236 பயனாளிகளுக்கு உதவிகள்
- வேலைவாய்ப்பு முகாம்
- கூட்டுறவு சங்க பேரவைக் கூட்டம்
- இன்று இலவச கோமாரி நோய் தடுப்பு முகாம்கள்: விவசாயிகளுக்கு அழைப்பு
- ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட தொழிலாளர்
- காலாவதி தேதி குறிப்பிடாத மினரல் வாட்டர்: நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு
- 24 சவரன் திருடியதாக தந்தை, மகன் கைது
- கார் கவிழ்ந்து 5 பேர் காயம்
- பட்டாசு விபத்து இறந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டம்
- கந்து வட்டிக் கொடுமை: தம்பதி தற்கொலை, மகன் கவலைக்கிடம்
- ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பணியாளர் பணியிடை நீக்கம்
- வளைகோல் பந்து: அரசுப் பள்ளி சிறப்பிடம்
- 500 பேருக்கு மரக்கன்றுகள் வழங்கல்
- திருவண்ணாமலையில் அதிகபட்ச மழை பதிவு
- காணாமல் போன தொழிலாளி சடலமாகக் கண்டெடுப்பு
- கார்த்திகை தீபத் திருவிழா 2,280 சிறப்புப் பேருந்துகள், 6 கூடுதல் ரயில்கள்
- சட்ட மசோதாக்களை தமிழில் உருவாக்க வேண்டும்
- போனஸ் அறிவிப்பு: கருணாநிதி குற்றச்சாட்டு
- கியூபா, பெரு நாடுகளுக்கு அன்சாரி நாளை பயணம்
- மூன்று வாரங்களுக்கு வெங்காய விலை குறையாது
- காஷ்மீர் எல்லையில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள பாகிஸ்தான் முட்டுக்கட்டை
- நேர்மையான அரசு அமைப்போம்
- வெங்காய வரத்து அதிகரிப்பு: ஷீலா தீட்சித்
- விஜய்காந்த் "தில்லி' கனவு நனவாகுமா?
- மத்திய அமைச்சர் மீது போலீஸில் ஐக்கிய ஜனதா தளம் புகார்
- சஞ்சய்தத் தண்டனை குறைப்பு?
- முதல்வர் வேட்பாளரை அறிவித்தது மகிழ்ச்சி
- போலியோ ஒழிப்புக்கு வித்திட்ட "டாக்டர்'!
- ஐந்து மாநிலத் தேர்தல்: வாக்குப் பதிவுக்கு ஏற்பாடுகள் தயார்
- பொதுமக்களிடம் கருத்துகளைப் பெற இணையதளம் தொடங்கியது காங்கிரஸ்
- விடுமுறையின்றி வேலை செய்ய போலீஸுக்குஉத்தரவு: தலையிட நீதிமன்றம் மறுப்பு
- ஆம் ஆத்மிக்கு பிரசாரம் செய்யும் மும்பை பெண் வங்கி அதிகாரி
- ஆம் ஆத்மியின் வெற்றி உறுதியாகியுள்ளது
- கணக்கை மீண்டும் சரி பார்க்க மத்திய அரசுக்கு உத்தரவு
- இன்று விரைவு பட்டா மாற்றும் சிறப்பு முகாம்
- துறைரீதியாக அதிகாரிகளை நேரில் சந்தித்த புதிய ஆட்சியர்
- எஸ்.ஐ.க்கு பிடிவாரண்ட்: நீதிமன்றம் உத்தரவு
- நூதன முறையில் ரூ. 7 லட்சம் கொள்ளை
- 5 சவரன் பறித்த இளைஞர் கைது
- செய்யூர் மின் திட்ட அதிகாரிகள் ஆய்வு
- விறகு எடுக்கச் சென்றவர் வெட்டி கொலை
- மணல் சேமிப்பு கிடங்கில் ஆய்வு? சாலைகளில் லாரிகள் நிறுத்தம்
- ரூ. 1 கோடி நிலம் அபகரிப்பு
- "108' ஆம்புலன்ஸ் பணிக்கு 26-ல் வேலைவாய்ப்பு முகாம்
- கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி
- மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு
- வரதராஜப் பெருமாள் கோயில் உண்டியலில் ரூ. 18.24 லட்சம்
- வணிகர் சங்கப் பேரவை ஆலோசனைக் கூட்டம்
- நகராட்சியை முற்றுகையிட்ட பெண்கள்
- நகையை அணிந்து கொண்டு பெண்கள் தனியாக செல்ல வேண்டாம்
- எண்ணூர் துறைமுகம் அருகே கரை ஒதுங்கிய பெண் சடலம்
- 2 பெண்கள் உள்பட 4 பேர் போலீஸில் ஒப்படைப்பு
- புயல், வெள்ளக் காலங்களை எதிர்கொள்ள தயார்
- தில்லி பாஜக முதல்வர் வேட்பாளர் ஹர்ஷ்வர்தன்
- தொழிலதிபர்கள் மீது வழக்குகள்: பிரதமர் தலையிட அசோசெம் வலியுறுத்தல்
- உணவுப் பொருள்களில் கலப்படம்: கம்பத்தில் அதிகாரிகள் சோதனை
- மதானி ஜாமீன் பெற கேரள அரசு உதவக் கூடாது: பாஜக வலியுறுத்தல்
- ராணுவத்துக்கு விசாரணை ஆணையம் கண்டனம்
- நட்சத்திர பிரசாரகர்களுக்கான செலவு: கட்சிகளின் கணக்கில் சேர்க்கப்படும்: தேர்தல் ஆணையம்
- வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
- தக்க பதிலடி கொடுப்போம்
- வீட்டில் பூட்டை உடைத்து 23 பவுன் நகை திருட்டு
- தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்
| அமெரிக்க கப்பல் பாதுகாப்பு அதிகாரி இலங்கையில் தங்கியிருந்தார்? Posted: 23 Oct 2013 01:07 PM PDT தூத்துக்குடி அருகே சிறைப்பிடிக்கப்பட்ட அமெரிக்க ஆயுதக் கப்பலில் இருந்த இங்கிலாந்தைச் சேர்ந்த தலைமை பாதுகாப்பு அதிகாரி இலங்கையில் சில நாள்கள் தங்கியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை காவலில் எடுத்து விசாரித்தால்தான் இந்த விவரம் உண்மையா என்பது தெரியவரும் என கியூ பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர். |
| கூலி உயர்வு கோரி பேரூராட்சிப் பணியாளர்கள் உண்ணாவிரதம் Posted: 23 Oct 2013 01:03 PM PDT தினக்கூலி உயர்வை வழங்கக் கோரி, தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர்கள் குடும்பத்துடன் நாகர்கோவிலில் புதன்கிழமை உண்ணாவிரதம் இருந்தனர். |
| கேரளத்துக்கு மணல் கடத்த முயற்சி: லாரி பறிமுதல் Posted: 23 Oct 2013 01:03 PM PDT களியக்காவிளை அருகே கேரளத்துக்கு மணல் கடத்திச் செல்ல முயன்ற லாரியைப் போலீஸார் பறிமுதல் செய்தனர். |
| மூதாட்டியைக் கொன்று நகைகள் கொள்ளை Posted: 23 Oct 2013 01:02 PM PDT சுசீந்திரம் அருகே மயிலாடியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியைக் கொன்று, அவர் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர். புதன்கிழமை மாலை நடைபெற்ற இச்சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது |
| Posted: 23 Oct 2013 01:02 PM PDT கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே முன்விரோதம் காரணமாக வெடிகுண்டு வீசி இளைஞர் படுகொலை செய்யப்பட்டார். இச் சம்பவத்தில் ஈடுபட்டதாக 5 பேர் மீது வழக்குப் பதிந்த போலீஸார் அவர்களைத் தேடி வருகின்றனர். |
| ஓய்வுபெற்ற அரசு ஊழியருக்கு மிரட்டல்: டாஸ்மாக் பணியாளர் கைது Posted: 23 Oct 2013 01:02 PM PDT நித்திரவிளை அருகே முன்விரோதம் காரணமாக ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து, கொலை மிரட்டல் விடுத்ததாக டாஸ்மாக் பணியாளரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். |
| குலசேகரம் குருசடிகள் உடைப்பு சம்பவம்: இளைஞர் கைது Posted: 23 Oct 2013 01:01 PM PDT குலசேகரம், திருவட்டாறு பகுதியில் குருசடிகள் உடைப்புச் சம்பவத்தில் தொடர்புடைய இளைஞர், சுந்தரை (25) போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். |
| கடையில் திருட முயற்சி: 3 பேர் கைது Posted: 23 Oct 2013 01:01 PM PDT நாகர்கோவில் நகரில் கடையின் பூட்டை உடைத்து திருட முயன்ற வடமாநில இளைஞர்களைப் பிடித்த போலீஸார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். |
| தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் Posted: 23 Oct 2013 01:01 PM PDT தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்கத்தின் சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தக்கலையில் நடைபெற்றது. |
| நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இடநெருக்கடி Posted: 23 Oct 2013 01:01 PM PDT நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் இடநெருக்கடி காரணமாக ரயில் நிறுத்துவதற்கு போதிய இட வசதி இல்லை. இதனால் பெரும்பாலான நேரங்களில் ரயில் நிலையத்துக்கு ரயில்கள் வர முடியாமல், வெளியில் நீண்ட நேரம் நிறுத்தப்படுகின்றன. |
| முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு Posted: 23 Oct 2013 01:00 PM PDT நாகர்கோவிலில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு 2-ஆம் நாளாக புதன்கிழமையும் நடைபெற்றது. |
| குமரி மாவட்ட புதிய பி.ஆர்.ஒ.பொறுப்பேற்பு Posted: 23 Oct 2013 01:00 PM PDT குமரி மாவட்ட செய்தி, மக்கள் தொடர்பு அலுவலராக அண்ணா புதன்கிழமை பொறுப்பேற்றார். |
| Posted: 23 Oct 2013 01:00 PM PDT குமரி மாவட்டத்தில் பரவலாக புதன்கிழமை மழை பெய்தது. |
| நாகர்கோவில்: 20 புதிய புறநகர் பேருந்துகள் தொடக்கம் Posted: 23 Oct 2013 12:59 PM PDT அரசு போக்குவரத்துக் கழகம் நாகர்கோவில் மண்டலத்திலிருந்து புறநகருக்கு 20 புதிய பேருந்துகள் புதன்கிழமை இயக்கப்பட்டன. |
| Posted: 23 Oct 2013 12:59 PM PDT தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 265 மாணவர்களுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது. |
| Posted: 23 Oct 2013 12:59 PM PDT திருச்செந்தூர் அருள்மிகு செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது. |
| விவேகானந்த கேந்திர பண்பாட்டு போட்டிகள் Posted: 23 Oct 2013 12:58 PM PDT கிராமப்புற தொடக்கப்பள்ளி மாணவர், மாணவிகளுக்கான ஒன்றிய அளவிலான பண்பாட்டு போட்டிகள் விவேகானந்த கேந்திரம் சார்பில் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. |
| பசும்பொன் செல்லும் வாகனங்கள் முறையான அனுமதி பெற வேண்டும்: ஆட்சியர் Posted: 23 Oct 2013 12:58 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து தேவர் குருபூஜைக்கு பசும்பொன் செல்லும் வாகனங்கள் முறையான அனுமதி பெற வேண்டும் என ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். |
| ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் வட்டங்களில் மணல் திருட்டு Posted: 23 Oct 2013 12:58 PM PDT ஸ்ரீவைகுண்டம் மற்றும் திருச்செந்தூர் வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளான ஸ்ரீவைகுண்டம் அணைக்கு கீழ்ப் பகுதியிலிருந்து ஏரல் ஆற்றுப்பாலம் வரையுள்ள தாமிரவருணி ஆற்றின் கரையோரங்களில் முறைகேடாக |
| உரிமம் பெற்று பட்டாசு கடை நடத்த வேண்டும்: சார்-ஆட்சியர் Posted: 23 Oct 2013 12:58 PM PDT கோவில்பட்டி கோட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் பட்டாசு கடை வைப்பதற்கான உரிமம் பெற்று கடைகள் நடத்த வேண்டும் என சார்-ஆட்சியர் தெரிவித்துள்ளார். |
| காயல்பட்டினத்தில் நகராட்சி நிர்வாகத் துறை பொறியாளர் ஆய்வு Posted: 23 Oct 2013 12:57 PM PDT :காயல்பட்டினம் நகராட்சியில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை சென்னை நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகப் பொறியாளர் பூபதி ஆய்வு செய்தார். |
| 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் பேரவையில் பங்கேற்பு Posted: 23 Oct 2013 12:57 PM PDT தண்டனைக் காலம் முடிவடைந்ததையடுத்து, இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த தே.மு.தி.க.வின் 6 எம்.எல்.ஏ.க்களும் பேரவைக்கு புதன்கிழமை வந்தனர். |
| மாணவர்கள் போராட்டம்: நாகம்பட்டி மனோ கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை Posted: 23 Oct 2013 12:57 PM PDT ஓட்டப்பிடாரம் அருகே நாகம்பட்டி மனோ கல்லூரியில் செவ்வாய்க்கிழமை முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்ததையடுத்து கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. |
| ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க செயற்குழுக் கூட்டம் Posted: 23 Oct 2013 12:57 PM PDT திருச்செந்தூரில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. |
| ரயிலிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி காயம் Posted: 23 Oct 2013 12:56 PM PDT கோவில்பட்டி ரயில் நிலையத்தில் புதன்கிழமை ரயிலிலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி காயமடைந்தார். மதுரை ஜெய்ஹிந்த்புரம் சோனாளிபுரத்தைச் சேர்ந்த நாகராஜன் மகன் சரவண |
| Posted: 23 Oct 2013 12:56 PM PDT ஆறுமுகனேரி கிளை நூலக வாசகர் வட்டக் கூட்டம் நடைபெற்றது. |
| வறுமை ஒழிப்பு தின தெருமுனைக் கூட்டம் Posted: 23 Oct 2013 12:56 PM PDT அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க கோவில்பட்டி நகரக் குழு சார்பில் வறுமை ஒழிப்பு தின தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. |
| சங்கிலி பறிப்பு: தொழிலாளி கைது Posted: 23 Oct 2013 12:56 PM PDT கோவில்பட்டியில் பெண்ணிடமிருந்து 6 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு ஓட முயன்ற மில் தொழிலாளியை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். |
| அடிப்படை வசதிகளற்ற ஆரம்பப் பள்ளி Posted: 23 Oct 2013 12:56 PM PDT விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கழிப்பறை தொட்டி திறந்த நிலையில் இருப்பதால், உயிர்ச் சேதம் ஏற்படும் அபாய நிலை உள்ளது. எனவே, அவற்றை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். |
| புதுப்பட பாடல்கள் மெமரி கார்டில் பதிவு: 7 பேர் கைது Posted: 23 Oct 2013 12:55 PM PDT சட்ட விரோதமாக புதுப்பட பாடல்களை மெமரி கார்டில் பதிவு செய்து கொடுத்த 7 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். |
| காயல்பட்டினம் கல்லூரியில் பயின்றோர் கழகக் கூட்டம் Posted: 23 Oct 2013 12:55 PM PDT காயல்பட்டினம் வாவு வஜீஹா மகளிர் கல்லூரியில் பயின்றோர் கழகக் கூட்டம் நடைபெற்றது. |
| Posted: 23 Oct 2013 12:54 PM PDT |
| ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ. மறைவுக்கு பேரவையில் இரங்கல் Posted: 23 Oct 2013 12:53 PM PDT ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ. செ.பெருமாள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பேரவையில் புதன்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| Posted: 23 Oct 2013 12:53 PM PDT |
| இந்தியா - சீனா எல்லைப் பாதுகாப்பு ஒப்பந்தம் Posted: 23 Oct 2013 12:52 PM PDT இந்தியா சீனா எல்லைப்பகுதியில் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில், இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன. |
| வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் Posted: 23 Oct 2013 12:47 PM PDT ஆரணியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் புதன்கிழமை நடைபெற்றது. |
| கோ}கோ: சகாயமாதா பள்ளி சிறப்பிடம் Posted: 23 Oct 2013 12:46 PM PDT செங்கம் சகாயமாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் கோ-கோ போட்டியில் சிறப்பிடம் பெற்றுள்ளனர். திருவண்ணாமலை மாவட்ட அளவில் 17 வயதுக்கு உள்பட்ட மாணவர்களுக்கு |
| மனுநீதி நாள் முகாமில் 236 பயனாளிகளுக்கு உதவிகள் Posted: 23 Oct 2013 12:46 PM PDT செங்கம் அருகே நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில் 236 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் புதன்கிழமை வழங்கினார். |
| Posted: 23 Oct 2013 12:46 PM PDT திருவண்ணாமலை குமரன் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில், 17 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. |
| கூட்டுறவு சங்க பேரவைக் கூட்டம் Posted: 23 Oct 2013 12:46 PM PDT செய்யாறு வருவாய் கோட்ட அரசு அலுவலர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கப் பேரவைக் கூட்டம் வந்தவாசியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| இன்று இலவச கோமாரி நோய் தடுப்பு முகாம்கள்: விவசாயிகளுக்கு அழைப்பு Posted: 23 Oct 2013 12:45 PM PDT திருவண்ணாமலையை அடுத்த சோமாசிபாடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறும் இலவச கோமாரி நோய்த் தடுப்பு முகாம்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கால்நடை மருத்துவ |
| ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட தொழிலாளர் Posted: 23 Oct 2013 12:45 PM PDT வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை எரமலூர் காலனியைச் சேர்ந்த தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனர். வந்தவாசி ஒன்றியத்துக்கு உள்பட்டது எரமலூர் ஊராட்சி. இந்த ஊராட்சியில் தேச |
| காலாவதி தேதி குறிப்பிடாத மினரல் வாட்டர்: நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு Posted: 23 Oct 2013 12:45 PM PDT திருவண்ணாமலை ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு காலாவதி தேதி குறிப்பிடாத மினரல் வாட்டர் பாட்டில்கள் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வழங்கப்பட்டது. |
| 24 சவரன் திருடியதாக தந்தை, மகன் கைது Posted: 23 Oct 2013 12:44 PM PDT போளூர் டைவர்ஷன் தெருவில் உள்ள லாட்ஜ் உரிமையாளர் வீட்டில் 24 சவரன் திருடு போனது தொடர்பான புகாரில் தந்தை, மகன் ஆகியோரை போலீஸார் புதன்கிழமை கைது செய்து பொருளை மீட்டனர். |
| Posted: 23 Oct 2013 12:44 PM PDT திருவண்ணாமலை அருகே சாலையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 5 பேர் காயம் அடைந்தனர். |
| பட்டாசு விபத்து இறந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டம் Posted: 23 Oct 2013 12:44 PM PDT செங்கம் பட்டாசு குடோன் தீ விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது. |
| கந்து வட்டிக் கொடுமை: தம்பதி தற்கொலை, மகன் கவலைக்கிடம் Posted: 23 Oct 2013 12:44 PM PDT கந்து வட்டிக் கொடுமையால் மனமுடைந்த தம்பதி திருவண்ணாமலை ஹோட்டலில் புதன்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இவர்களது மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறது. |
| ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பணியாளர் பணியிடை நீக்கம் Posted: 23 Oct 2013 12:43 PM PDT : ஆம்பூர் அரசு மருத்துவமனையில் செவிலியர் உதவியாளராகப் பணிபுரிந்து வரும் எம்.ஜானகிராமன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். |
| வளைகோல் பந்து: அரசுப் பள்ளி சிறப்பிடம் Posted: 23 Oct 2013 12:43 PM PDT திருவண்ணாமலை கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில், தண்டராம்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வளைகோல் பந்து போட்டியில் சிறப்பிடம் பெற்றுள்ளனர். |
| 500 பேருக்கு மரக்கன்றுகள் வழங்கல் Posted: 23 Oct 2013 12:43 PM PDT திருவண்ணாமலையை அடுத்த சோ.கீழ்நாச்சிப்பட்டு ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற ஊர் கூடி மரம் நடும் விழாவில், 500 பேருக்கு பாதாம், புங்கன், நெல்லி, நாவல் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன. |
| திருவண்ணாமலையில் அதிகபட்ச மழை பதிவு Posted: 23 Oct 2013 12:43 PM PDT திருவண்ணாமலை மாவட்டத்திலேயே அதிகபட்சமாக திருவண்ணாமலையில் 36.3 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. |
| காணாமல் போன தொழிலாளி சடலமாகக் கண்டெடுப்பு Posted: 23 Oct 2013 12:42 PM PDT திருவண்ணாமலை அருகே காணாமல் போன தொழிலாளி, மரத்தில் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கிடந்தது புதன்கிழமை தெரியவந்தது. |
| கார்த்திகை தீபத் திருவிழா 2,280 சிறப்புப் பேருந்துகள், 6 கூடுதல் ரயில்கள் Posted: 23 Oct 2013 12:42 PM PDT திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு 2,280 சிறப்புப் பேருந்துகள், 6 கூடுதல் ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியரிடம், போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். |
| சட்ட மசோதாக்களை தமிழில் உருவாக்க வேண்டும் Posted: 23 Oct 2013 12:37 PM PDT தமிழக அரசின் சார்பில் கொண்டு வரப்படும் சட்ட மசோதாக்களை தமிழிலேயே உருவாக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். |
| போனஸ் அறிவிப்பு: கருணாநிதி குற்றச்சாட்டு Posted: 23 Oct 2013 12:37 PM PDT முக்கியமான தொழிற்சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசாமல் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார். |
| கியூபா, பெரு நாடுகளுக்கு அன்சாரி நாளை பயணம் Posted: 23 Oct 2013 12:34 PM PDT கியூபா, பெரு ஆகிய நாடுகளுக்கு ஐந்து நாள்கள் அரசுமுறைப் பயணமாக குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி வெள்ளிக்கிழமை புறப்படுகிறார். |
| மூன்று வாரங்களுக்கு வெங்காய விலை குறையாது Posted: 23 Oct 2013 12:32 PM PDT இன்னும் 3 வாரங்களுக்கு வெங்காய விலை உயர்ந்தே இருக்கும் என்று, மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் சரத் பவார் தெரிவித்தார். |
| காஷ்மீர் எல்லையில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள பாகிஸ்தான் முட்டுக்கட்டை Posted: 23 Oct 2013 12:31 PM PDT காஷ்மீர் எல்லைப்பகுதியில் அந்தமாநில அரசு மேற்கொண்டு வந்த வளர்ச்சிப் பணிகளுக்கு பாகிஸ்தான் முட்டுக்கட்டைப் போட்டுள்ளது. |
| Posted: 23 Oct 2013 12:30 PM PDT தேர்தலில் வெற்றி பெற்று மக்களுக்கு நெருக்கமான, வெளிப்படையான, நேர்மையான அரசு அமைப்போம் என்று பாஜக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட டாக்டர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். |
| வெங்காய வரத்து அதிகரிப்பு: ஷீலா தீட்சித் Posted: 23 Oct 2013 12:30 PM PDT ராஜஸ்தான் போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து தில்லிக்கு வெங்காய வரத்து அதிகரித்துள்ளது; மதர் டைரியின் சஃபல் விற்பனை மையங்களில் வெங்காயம் கிலோ ரூ.55 முதல் 65 என்ற அளவில் விற்க |
| விஜய்காந்த் "தில்லி' கனவு நனவாகுமா? Posted: 23 Oct 2013 12:29 PM PDT தலைநகர் தில்லியில் வலுவான தேமுதிகவுக்கு (தேசிய முற்போக்கு திராவிட கழகம்) அடித்தளம் அமைக்கும் வகையில், தில்லி ஜந்தர் மந்தரில் வரும் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 27) நடைபெறவுள்ள |
| மத்திய அமைச்சர் மீது போலீஸில் ஐக்கிய ஜனதா தளம் புகார் Posted: 23 Oct 2013 12:29 PM PDT மத்திய அமைச்சர் சரண் தாஸ் மகந்த் தனது பதவியை தவறாகப் பயன்படுத்தி மூடநம்பிக்கையின் அடிப்படையில், உத்தரப் பிரதேசத்தில் தங்கப் புதையல் தேடும் பணியில் இந்திய தொல்பொருள் ஆய்வு |
| Posted: 23 Oct 2013 12:29 PM PDT மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இந்தி நடிகர் சஞ்சய்தத் மற்றும் 2 பேரின் தண்டனையைக் குறைப்பது குறித்து மகாராஷ்டிர அரசின் கருத்தை, மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுள்ளது. |
| முதல்வர் வேட்பாளரை அறிவித்தது மகிழ்ச்சி Posted: 23 Oct 2013 12:28 PM PDT தில்லி பிரதேச பாஜக முதல்வர் வேட்பாளராக டாக்டர் ஹர்ஷ்வர்தன் கட்சி மேலிடத்தால் அறிவிக்கப்பட்டதற்கு அக் கட்சியின் பிரதேச தலைவர் விஜய கோயல் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். |
| போலியோ ஒழிப்புக்கு வித்திட்ட "டாக்டர்'! Posted: 23 Oct 2013 12:28 PM PDT தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவர் ஹர்ஷ்வர்தன், தில்லியில் போலியோ ஒழிப்புக்கு வித்திட்டவர். அவரை அவரது தொகுதி மக்கள் "மருத்துவர் ஐயா' என்றே அன்புடன் அழைக்கின்றனர். |
| ஐந்து மாநிலத் தேர்தல்: வாக்குப் பதிவுக்கு ஏற்பாடுகள் தயார் Posted: 23 Oct 2013 12:28 PM PDT "தில்லி, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலை |
| பொதுமக்களிடம் கருத்துகளைப் பெற இணையதளம் தொடங்கியது காங்கிரஸ் Posted: 23 Oct 2013 12:27 PM PDT வருகிற மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும் முன்பாக அது தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து கருத்துகளைப் பெற காங்கிரஸ் கட்சி பிரத்யேக இணையதளத்தைத் தொடங்கியுள்ளது. இதற்கான நடவடிக்கையை அக் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டதாக அக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. |
| விடுமுறையின்றி வேலை செய்ய போலீஸுக்குஉத்தரவு: தலையிட நீதிமன்றம் மறுப்பு Posted: 23 Oct 2013 12:27 PM PDT விடுமுறையின்றி வேலை செய்ய போலீஸ் அதிகாரிகளுககு தில்லி காவல் துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவில் தலையிட நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்தது. இருப்பினும் இந்த உத்தரவால் பாதிக்கப்படுவதாக இருந்தால் அவர்கள் அரசை அணுகலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. |
| ஆம் ஆத்மிக்கு பிரசாரம் செய்யும் மும்பை பெண் வங்கி அதிகாரி Posted: 23 Oct 2013 12:27 PM PDT தில்லி பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு தெரிவித்து மும்பையைச் சேர்ந்த வங்கியின் பெண் அதிகாரி மீரா சன்யால் மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். |
| ஆம் ஆத்மியின் வெற்றி உறுதியாகியுள்ளது Posted: 23 Oct 2013 12:26 PM PDT முதல்வர் வேட்பாளராக டாக்டர் ஹர்ஷ்வர்தனை பாஜக அறிவித்ததன் மூலம் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி உறுதியாகியுள்ளது என்று அக் கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் கூறியது: ஹர்ஷ்வர்தன் முதல்வர் வேட்பாளர் என்ற பாஜகவின் அறிவிப்பு ஆம் ஆத்மியின் வெற்றியைத் தெளிவாக்கியுள்ளது. தேர்தல் வர சிறிது காலம் மட்டுமே இருக்கிற நிலையில், |
| கணக்கை மீண்டும் சரி பார்க்க மத்திய அரசுக்கு உத்தரவு Posted: 23 Oct 2013 12:26 PM PDT ஆம் ஆத்மி கட்சிக்கு வந்துள்ள நிதி விவரங்களை மீண்டும் ஒரு முறை சரி பார்த்து, மீறல்கள் இருந்தால் டிசம்பர் 10-ஆம் தேதி நடைபெறும் விசாரணையின் போது தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. |
| இன்று விரைவு பட்டா மாற்றும் சிறப்பு முகாம் Posted: 23 Oct 2013 12:26 PM PDT உத்தரமேரூரில் உள்ள வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் சிறப்பு விரைவு பட்டா மாற்றும் சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெறுகிறது. |
| துறைரீதியாக அதிகாரிகளை நேரில் சந்தித்த புதிய ஆட்சியர் Posted: 23 Oct 2013 12:25 PM PDT காஞ்சிபுரம் மாவட்ட புதிய ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட கா.பாஸ்கரன், துறை ரீதியாக அனைத்து அலுவலகங்களுக்கும் நேரில் சென்று அதிகாரிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். |
| எஸ்.ஐ.க்கு பிடிவாரண்ட்: நீதிமன்றம் உத்தரவு Posted: 23 Oct 2013 12:25 PM PDT நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளில் ஆஜராகாத காவல்துறை சப்-இன்ஸ்பெக்டருக்கு செங்கல்பட்டு நீதிமன்றம் பிடிவாரண்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. |
| நூதன முறையில் ரூ. 7 லட்சம் கொள்ளை Posted: 23 Oct 2013 12:25 PM PDT ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பட்டபகலில் புதன்கிழமை ரூ.100-ஐ, கீழே போட்டு நூதன முறையில் காரில் இருந்த ரூ. 7 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| Posted: 23 Oct 2013 12:25 PM PDT சோமங்கலம் அருகே காரில் அமர்ந்து செல்போனில் பேசிக் கொண்டிருந்தவரை மிரட்டி அவரிடம் இருந்து 5 சவரன் நகைகள் மற்றும் செல்போன் பறித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். |
| செய்யூர் மின் திட்ட அதிகாரிகள் ஆய்வு Posted: 23 Oct 2013 12:24 PM PDT செய்யூர் மின்நிலையத் திட்டம் குறித்து அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு நடத்தினர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சில விவசாயிகள் கறுப்புக் கொடி காட்ட முயன்றனர். |
| விறகு எடுக்கச் சென்றவர் வெட்டி கொலை Posted: 23 Oct 2013 12:24 PM PDT செய்யூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் விறகு எடுக்கச் சென்ற இடத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூரை அடுத்த வெள்ளிமேடு தேவராஜபுரத்தைச் சேர்ந்தவர் முருகன் (45). |
| மணல் சேமிப்பு கிடங்கில் ஆய்வு? சாலைகளில் லாரிகள் நிறுத்தம் Posted: 23 Oct 2013 12:24 PM PDT வாலாஜாபாத்தை அடுத்த காவந்தண்டலம் அருகே வள்ளிமேடு மணல் சேமிப்புக் கிடங்கில் அதிகாரிகள் ஆய்வு என்று வந்த தகவலைத் தொடர்ந்து, மணல் லாரிகள் ஒதுக்குப்புறமாக சாலைகளில் நிறுத்தப்பட்டன |
| Posted: 23 Oct 2013 12:23 PM PDT சென்னை வண்டலூர் அருகே ரூ. 1 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| "108' ஆம்புலன்ஸ் பணிக்கு 26-ல் வேலைவாய்ப்பு முகாம் Posted: 23 Oct 2013 12:23 PM PDT "108' ஆம்புலன்ஸ் பணிக்கு வரும் அக்டோபர் 26-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. |
| கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி Posted: 23 Oct 2013 12:23 PM PDT செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலை மணிகூண்டு - பழைய பஸ் நிலையம் இடையே தூர்வாரப்படாமல் இருந்து வந்த கழிவுநீர் கால்வாயை தூர்வாரும் பணி ஆணையர் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடந்தது. |
| மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு Posted: 23 Oct 2013 12:23 PM PDT திருவள்ளூர் அருகே மீது மின்கம்பி அறுந்து விழுந்ததில் சாலையோரம் அமர்ந்திருந்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். |
| வரதராஜப் பெருமாள் கோயில் உண்டியலில் ரூ. 18.24 லட்சம் Posted: 23 Oct 2013 12:22 PM PDT காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் உண்டியல் மூலம் கடந்த 2 மாதத்தில் ரூ. 18.24 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. |
| வணிகர் சங்கப் பேரவை ஆலோசனைக் கூட்டம் Posted: 23 Oct 2013 12:20 PM PDT திருவள்ளூர் கிழக்கு மாவட்ட வணிகர் சங்கப் பேரவை ஆலோசனைக் கூட்டம் செங்குன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| நகராட்சியை முற்றுகையிட்ட பெண்கள் Posted: 23 Oct 2013 12:20 PM PDT திருவள்ளூர் நகராட்சிக்குள்பட்ட பத்தியால்பேட்டை, கண்ணதாசன் நகர் ஆகிய பகுதிகளில் குரங்குகளின் அட்டகாசத்தைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி ஏராளமான பெண்கள் புதன்கிழமை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். |
| நகையை அணிந்து கொண்டு பெண்கள் தனியாக செல்ல வேண்டாம் Posted: 23 Oct 2013 12:20 PM PDT அதிக நகைகளை அணிந்து கொண்டு பெண்கள் தனியாக செல்ல வேண்டாம் என எச்சரிக்கை செய்யும் விதமாக திருவள்ளூர் டவுன் போலீஸார் செவ்வாய்க்கிழமை துண்டுப்பிரசுரங்களை விநியோகம் செய்தனர். |
| எண்ணூர் துறைமுகம் அருகே கரை ஒதுங்கிய பெண் சடலம் Posted: 23 Oct 2013 12:19 PM PDT எண்ணூர் துறைமுகம் அருகே செவ்வாய்க்கிழமை அடையாளம் தெரியாத நிலையில் கரை ஒதுங்கிய பெண் சடலத்தை போலீஸார் மீட்டு விசாரணை செய்து வருகின்றனர். |
| 2 பெண்கள் உள்பட 4 பேர் போலீஸில் ஒப்படைப்பு Posted: 23 Oct 2013 12:19 PM PDT திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற 2 பெண்கள் உள்பட 4 பேரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். |
| புயல், வெள்ளக் காலங்களை எதிர்கொள்ள தயார் Posted: 23 Oct 2013 12:18 PM PDT திருவள்ளூர் மாவட்டத்தில் புயல், வெள்ளக் காலங்களில் ஏற்படும் பேரிடர்களை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயாராக இருப்பதாக மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் தெரிவித்தார். |
| தில்லி பாஜக முதல்வர் வேட்பாளர் ஹர்ஷ்வர்தன் Posted: 23 Oct 2013 12:18 PM PDT தில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் முதல்வர் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் மருத்துவர் ஹர்ஷ்வர்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் புதன்கிழமை அறிவித்தார். |
| தொழிலதிபர்கள் மீது வழக்குகள்: பிரதமர் தலையிட அசோசெம் வலியுறுத்தல் Posted: 23 Oct 2013 12:17 PM PDT நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் குமார்மங்கலம் பிர்லா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ""தொழில் துறையினர் மீது சிபிஐ தொடர்ந்து வரும் வழக்குகளால், நிறுவனங்களின் நம்பகத்தன்மை பாதிக்கப்படுவதைத் தடுக்க பிரதமர் மன்மோகன் சிங் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என இந்திய வர்த்தக, தொழில் துறை கூட்டமைப்பு (அசோசெம்) வலியுறுத்தியுள்ளது. |
| உணவுப் பொருள்களில் கலப்படம்: கம்பத்தில் அதிகாரிகள் சோதனை Posted: 23 Oct 2013 12:17 PM PDT கம்பத்தில் மழை மற்றும் விழாக்கள் காலமாக இருப்பதால், உணவுப் பொருள்களில் கலப்படம் மற்றும் காலாவதியான பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, உணவு மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் புதன்கிழமை திடீர் சோதனை நடத்தினர். |
| மதானி ஜாமீன் பெற கேரள அரசு உதவக் கூடாது: பாஜக வலியுறுத்தல் Posted: 23 Oct 2013 12:16 PM PDT கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 2008ஆம் ஆண்டு நிகழ்ந்த குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில், அப்துல் நாசர் மதானிக்கு ஜாமீன் வழங்குவதற்கு ஏதுவாக உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு உறுதிச்சான்று அளிப்பதற்கு பாரதிய ஜனதா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. |
| ராணுவத்துக்கு விசாரணை ஆணையம் கண்டனம் Posted: 23 Oct 2013 12:15 PM PDT ஜம்மு- காஷ்மீர் மாநிலம், பாரமுல்லா நகரில் கடந்த மார்ச் மாதம் ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையில் அப்பாவி இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து விசாரித்த நீதி விசாரணை ஆணையம், இந்தச் சம்பவத்க்காக ராணுவத்தைக் கண்டித்துள்ளது. |
| நட்சத்திர பிரசாரகர்களுக்கான செலவு: கட்சிகளின் கணக்கில் சேர்க்கப்படும்: தேர்தல் ஆணையம் Posted: 23 Oct 2013 12:14 PM PDT தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் நட்சத்திர பிரசாரகர்களுக்கான செலவுத்தொகை அரசியல் கட்சிகளின் கணக்கில் சேர்க்கப்படும் என்று தில்லி தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. |
| வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் Posted: 23 Oct 2013 12:13 PM PDT பெரியகுளம் நகராட்சி பகுதியில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் மற்றும் புகைப்படம் மாற்றம் செய்தல் ஆகியன குறித்து, வரும் 31 ஆம் தேதி வரை முகாம் |
| Posted: 23 Oct 2013 12:13 PM PDT எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே புதன்கிழமை கூறினார். |
| வீட்டில் பூட்டை உடைத்து 23 பவுன் நகை திருட்டு Posted: 23 Oct 2013 12:13 PM PDT தேனி அருகே வீரபாண்டியில், புதன்கிழமை வீட்டின் பூட்டை உடைத்து 23 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளது. |
| தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம் Posted: 23 Oct 2013 12:13 PM PDT திண்டுக்கல் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, 250 சிறப்புப் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |