Tamil News | Online Tamil News |
- திருச்சியில் தேர்தல் சிறப்பு மாநாடு : தி.மு.க., தலைமை ஏற்பாடு
- மீனவர்கள் பிரச்னை நீடிப்பதற்கு தமிழக அரசு காரணமா?
- சி.பி.ஐ.,யில் தமிழக அதிகாரிகள் எண்ணிக்கை குறைந்தது
- ரகுராம் ராஜன் கமிட்டி அறிக்கையை திரும்ப பெற வேண்டும்: முதல்வர் கடிதம்
- சுண்ணாம்பு கல் குவாரிகளையும் கைப்பற்ற அரசு யோசனை: சிமென்ட் விலையை கட்டுக்குள் கொண்டு வர திட்டம்
- மக்கள் பிரதிநிதிகளின் பதவிகளை பாதுகாக்கும் அவசர சட்டம் வாபஸ்
- தயாநிதி மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு: விரைவில் சம்மன் அனுப்ப முடிவு
- குஜராத் மாநிலத்தையும் மோடியையும் புறக்கணிக்க முடியாது: பிரிட்டன் தூதர்
- நரேந்திர மோடியுடன் ஒரே மேடையில் சந்திரபாபு நாயுடு
- கழிப்பறைகள் முதலில்; கோவில்கள் பின்னர் தான்: மோடி
| திருச்சியில் தேர்தல் சிறப்பு மாநாடு : தி.மு.க., தலைமை ஏற்பாடு Posted: திருப்புமுனையை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்போடு, திருச்சியில், தேர்தல் சிறப்பு மாநாட்டை நடத்த தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளதாக, தெரிய வந்துள்ளது. அதற்கான அறிவிப்பு, கட்சியின் பொதுக்குழுவில் வெளியாகும்.லோக்சபா தேர்தலை சந்திப்பதற்கான ஆயத்தப் பணி, எல்லா கட்சிகளிலும் துவங்கி விட்டது. தொகுதி வாரியாக தேர்தல் ஆலோசனை கூட்டங்களை நடத்துவதில் ஆளும் அ.தி.மு.க., மும்முரமாக இருக்கிறது. அதேநேரத்தில், முக்கிய எதிர்க்கட்சியான தி.மு.க., தேர்தல் நிதி வசூலிக்கும் வேலையில் இறங்கியுள்ளது.அடுத்த ஆண்டு ஏப்ரலில் லோக்சபா தேர்தலை சந்திக்க வேண்டிய நிலையில், ... |
| மீனவர்கள் பிரச்னை நீடிப்பதற்கு தமிழக அரசு காரணமா? Posted: இலங்கை உள்நாட்டு போர் முடிந்த பின், இலங்கை மீனவர்களும், கடலுக்கு மீன் பிடிக்க வருகின்றனர். அவர்களின் வற்புறுத்தலின் பேரில் தான், இலங்கை ராணுவம், தமிழக மீனவர்களை கைது செய்கிறது. இப்பிரச்னை தீர, இரு நாட்டு மீனவர்களும், பேச்சு வார்த்தை நடத்தி, ஒரு தீர்வை உருவாக்கி உள்ளன. ஆனால், தமிழக அரசு ஒத்துழைக்க மறுப்பதால், இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை என, தமிழகத்தின் பாரம்பரிய மீனவர் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.கச்சத்தீவு பிரச்னை:இதுகுறித்து, தமிழகத்தின் பாரம்பரிய மீனவர் சங்க செயலர் சகாயம் லியோ கூறியதாவது:கச்சத்தீவு பிரச்னை ... |
| சி.பி.ஐ.,யில் தமிழக அதிகாரிகள் எண்ணிக்கை குறைந்தது Posted: தமிழகத்தில், சி.பி.ஐ.,யில், தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவது, பெரும் மர்மமாக உள்ளது. மாநில கட்சிகளை மடக்க, மத்திய அரசின் தந்திரமான முயற்சி இது என்றும் கூறப்படுகிறது.சிறப்பு புலனாய்வு பிரிவு: நாட்டின் மிக முக்கிய புலனாய்வு நிறுவனமான சி.பி.ஐ.,க்கு, தமிழகம் உட்பட, அனைத்து மாநிலங்களிலும், அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், போலீசை போல், சிறப்பு புலனாய்வு பிரிவு, பொருளாதாரக் குற்றப்பிரிவு, ஊழல் தடுப்பு பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகளும், இதில் செயல்பட்டு வருகின்றன.சி.பி.ஐ.,யை பொறுத்தவரை, பெரும்பாலும், மாநில ... |
| ரகுராம் ராஜன் கமிட்டி அறிக்கையை திரும்ப பெற வேண்டும்: முதல்வர் கடிதம் Posted: சென்னை : 'ரகுராம் ராஜன் கமிட்டி அறிக்கையை, திரும்பப் பெற வேண்டும். அந்த அறிக்கையின் பரிந்துரையை, எந்த வடிவத்திலும், அமல்படுத்தக் கூடாது' என, பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார்.கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது: மாநிலங்களின் ஒருங்கிணைந்த மேம்பாடு குறியீட்டுக்கான, ரகுராம் ராஜன் கமிட்டி அறிக்கை, கடந்த மாதம், 26ம் தேதி வெளியிடப்பட்டது. அதில், மத்திய நிதித் துறையின் தவறான அணுகுமுறை, இருப்பதை அறிந்து, கவலை கொண்டேன்.இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி, நிர்வாக வசதிக்காக, வரி விதிக்கவும், வரி வசூல் செய்யவும், வழிவகை ... |
| சுண்ணாம்பு கல் குவாரிகளையும் கைப்பற்ற அரசு யோசனை: சிமென்ட் விலையை கட்டுக்குள் கொண்டு வர திட்டம் Posted: சிமென்ட் விலை உயர்வை கட்டுப்படுத்த, சுண்ணாம்புக்கல் குவாரிகளை அரசுடைமை ஆக்குவதற்கான சாத்தியக் கூறுகளை, தமிழக அரசு உயர் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.கட்டுமானப் பணிக்கு முக்கிய இடுபொருளாக உள்ள சிமென்டின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழக சந்தையில், கடந்த 2007ல், 180 ரூபாயாக இருந்த ஒரு மூட்டை (50 கிலோ) சிமென்டின் விலை, தற்போது, 350 ரூபாயாக அதிகரித்து உள்ளது. ஆனால், ஆந்திராவில் ஒரு மூட்டை சிமென்டின் விலை, 280 முதல், 300 ரூபாயாகத் தான் உள்ளது. தேசிய அளவிலும் இந்த விலையே சராசரி விலையாக இருக்கிறது. இந்த விலை வித்தியாசத்தால், ஆந்திராவில் இருந்து, ஒரு ... |
| மக்கள் பிரதிநிதிகளின் பதவிகளை பாதுகாக்கும் அவசர சட்டம் வாபஸ் Posted: புதுடில்லி: தண்டனை பெறும், எம்.பி., – எம்.எல்.ஏ.,க்களின் பதவிகளை பாதுகாக்கும் அவசர சட்டத்துக்கு, கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, அந்த சட்டத்தை வாபஸ் வாங்குவதென, நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இது தொடர்பாக, பார்லி.,யில் நிலுவையில் உள்ள மசோதாவையும் வாபஸ் பெறுவதென்றும், முடிவு செய்யப்பட்டுள்ளது.'குற்ற வழக்குகளில் சிறைத்தண்டனை விதிக்கப்படும், எம்.பி., – எம்.எல்.ஏ.,க்களை, உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட், சமீபத்தில், உத்தரவு பிறப்பித்தது.அமைச்சரவை ஒப்புதல்:இதையடுத்து, குற்ற வழக்குகளில், ... |
| தயாநிதி மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு: விரைவில் சம்மன் அனுப்ப முடிவு Posted: புதுடில்லி : தி.மு.க., முக்கிய தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, தயாநிதி மீது, சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்துள்ளது. முறைகேடான வகையில், 300க்கும் மேற்பட்ட தொலைபேசி இணைப்புகளை, 'சன் டிவி' நிறுவனத்திற்கு வழங்கியதாக, இவர் மீது சி.பி.ஐ., முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. தயாநிதிக்கு விரைவில் சம்மன் அனுப்ப, சி.பி.ஐ., முடிவு செய்து உள்ளது.தி.மு.க., தலைவர் கருணாநிதியின் பேரனும், முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சருமான தயாநிதி மீது, தமிழகத்தை சேர்ந்த பத்திரிக்கையாளர் குருமூர்த்தி, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.அதில், ... |
| குஜராத் மாநிலத்தையும் மோடியையும் புறக்கணிக்க முடியாது: பிரிட்டன் தூதர் Posted: டேராடூன் : குஜராத் முதல்வரும், லோக்சபா தேர்தலில், பா.ஜ., பிரதமர் வேட்பாளருமான, நரேந்திர மோடிக்கு, 'விசா' வழங்க மறுக்கும் பிரிட்டன் நாட்டின், ஐ – கமிஷனர், ஜேம்ஸ் பேவன், ''குஜராத் மாநிலத்தையும், அதன் முதல்வரையும் புறக்கணிக்க முடியாது,'' என, தெரிவித்துள்ளார்.குஜராத்தில் நிகழ்ந்த மத கலவரங்களை அடுத்து, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளில் உள்ள மனித உரிமை அமைப்புகள் சிலவும், அவற்றிற்கு ஆதரவான, எம்.பி.,க்களும், அந்நாடுகளுக்கு செல்ல, மோடிக்கு, 'விசா' வழங்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், அவருக்கு, 'விசா' வழங்க, அந்நாடுகள் மறுத்து ... |
| நரேந்திர மோடியுடன் ஒரே மேடையில் சந்திரபாபு நாயுடு Posted: புதுடில்லி : டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடியுடன், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர், சந்திரபாபு நாயுடு, ஒரே மேடையில் தோன்றினார். பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணியையும், முன்னாள் பிரதமர், வாஜ்பாயையும், நாயுடு பாராட்டினார்.'மாஜி' கூட்டணி தோழர்:ஆந்திராவில், முக்கிய அரசியல் கட்சியாக விளங்கும், தெலுங்கு தேசம் கட்சி, முன், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்திருந்தது. அதற்குப் பிறகு, கூட்டணிக்கு, 'டாட்டா' காண்பித்து வெளியேறியது.வரும் லோக்சபா தேர்தலில், பா.ஜ., பிரதமர் வேட்பாளராக, ... |
| கழிப்பறைகள் முதலில்; கோவில்கள் பின்னர் தான்: மோடி Posted: புதுடில்லி : ""என்னை இந்துத்துவா தலைவர் என்று கூறுவதை நான் அனுமதிப்பதில்லை; கிராமங்களில் முதலில் கழிப்பறைகளை கட்டுவதற்குதான் முதலிடம் தருவேன், கோவில் கட்டுவது பின்புதான்,'' என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறினார். டில்லியில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய, பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி கூறியதாவது: என்னை இந்துத்துவா தலைவர் என்று கூறுகின்றனர். நான் இதை அனுமதிப்பதில்லை. என்னை பொறுத்தமட்டில், கழிப்பறைகள் கட்டுவதுதான் முதலில்; கோவில் கட்டுவது எல்லாம் இரண்டாம் பட்சம்தான். கிராமங்களில், லட்சங்களை கொட்டி ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |அக்டோபர் 03,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |