Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


கனவுகளின் காதலன்

Posted: 02 Oct 2013 02:58 PM PDT

கனவுகளின் காதலன் இறுதியில் போடவேண்டிய விடையை முதலிலே கூறிவிடுகிறேன் (யாரிவள் புதுக்காதலி. ஆம் நான் காணும் கனவுகள். இவை இல்லையெனில் நாம் வாழமுடியுமோ தெரியவில்லை. கற்பனைகளும் கனவுகளும் எம் வாழ்வின் துணைகள் அல்லவா! அந்த கனவுகளை நான் விரும்புகின்றேன்) கனவுகளின் காதலன் எண்ணங்களின் இளங் காதலியே - நீ எப்போ வருகின்றாய் தண்ணிலவின் ஒளி மின்னலிலே - நான் தவிக்கும் நிலைகாணாய் உண்ண மனம்கொளும் இச்சையில்லை - என் உள்ளத் தவிப்பறிவாய் மண்ணுலகில் என் மனமகிழ்வே - நீ மறுபடி வாராயோ வண்ணங்களின் ...

விடுமுறை விண்ணப்பம் - கிருஷ்ணாம்மா :)

Posted: 02 Oct 2013 01:22 PM PDT

நண்பர்களே ! ஒரு முக்கிய வேலையாய் வெளியூர் செல்கிறேன், அதனால் 1 வாரம் 10 நாள் என்னால் இங்கு வர  முடியாது, எனவே எனக்கு விடுமுறை அளிக்கவேண்டுகிறேன்     அட்வான்சாக, நன்றி, அன்புடன், கிருஷ்ணாம்மா

1000 பதிவுகள் கடந்த செம்மொழியான் பாண்டியனை வாழ்த்தலாம் வாங்க

Posted: 02 Oct 2013 01:18 PM PDT

1000 பதிவுகள் கடந்த செம்மொழியான் பாண்டியனுக்கு இனிய வாழ்த்துகள்.



இன்னும் பல ஆயிரம் பதிவுகள் கடக்க வாழ்த்துகள்.

புதிய பதிவுகளில் Tags / Keywords இணைக்கும் வசதி!

Posted: 02 Oct 2013 01:17 PM PDT

மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1

Posted: 02 Oct 2013 01:15 PM PDT

மலேஷிய மன்மத மைனர் மறதி மன்னாரு - பகுதி 1 கோலாலம்பூருக்கு சென்று வருடங்கள் பல ஓடிடுச்சு நம்ம மன்மத மைனருக்கு. நேற்று தான் வந்ததுபோல் தோணும் ஆனால் அவரு முதுகிலும், கன்னத்திலும் உள்ள தழும்புகளை எண்ணினால் எத்தனை வருடங்கள் ஆயிருக்கும்ன்னு எளிதா சொல்லிடலாம். அனைத்தும் அவர் பெற்ற வீரத் தழும்புகள். வீரத் தழும்பு முகன்னு பட்டமே குடுத்தாங்கன்னா பார்த்துக்கோங்களேன். அவ்வளவு பிரசித்தி அவரின் பிரதாபங்கள். சரி எதுக்காக திருமுகமா இருந்தது தழும்பு முகமாச்சுன்னு தோணுமே உங்களுக்கு? கொஞ்சம் அறிவு ...

மருத்துவத் தகவல்கள்

Posted: 02 Oct 2013 12:58 PM PDT



விளாம்பழம் வெப்பத்தைத் தணித்து உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். இது ஈளை இருமல், கோழை, வெப்பத்தால் உண்டான நீர்வேட்கை இவைகளைப் போக்குவதுடன் பசியை உண்டாக்கி உடலுக்கு நன்மை தரும்.

விளாம்பழத்தின் ஓட்டை நீக்கிப் பழத்தை மாத்திரம் சாப்பிட்டு வர வாய் நீர் ஊறல், தொண்டைப் புண், பல்லீற்றுப் புண்கள் ஆறும்

இன்று நாள் எப்படி?

Posted: 02 Oct 2013 12:44 PM PDT

இன்று நாள் எப்படி?

மேஷம் - மோசம்
விருச்சிகம் - வீண் விரையம்
தினமும் நாட்காட்டியை
கிழித்தவுடன் பார்ப்பவை !

நேற்று என்ற ஒரு நாள்
உன்னை விட்டு ஓடிவிட்டது
நாளை வருமா? யாரும் அறியவில்லை
இன்று என்ற ஒருநாள்
உன்னுடன் உள்ளது !

திட்டமிட்டு செயல்படுவதை
விட்டு விட்டு இப்படி
ராசிபலன் பார்க்கும் நண்பா,
எல்லா நாளும் நல்ல நாளே
உன் எண்ணமும் செயலும் தூய்மையானால்!

உங்கள் பயன்பாட்டிற்கு சில ஐகான்கள்!

Posted: 02 Oct 2013 12:42 PM PDT

 

உணர்ச்சிகளை அடக்கலாமா?

Posted: 02 Oct 2013 12:32 PM PDT

டெல்லி மருத்துவ மாணவி தொட்டு, எல்.கே.ஜி. மாணவி வரையிலான பாலியல் பலாத்காரங்களுக்கு காரணம் என்ன? இதுதான் இன்றைக்கு எல்லா தரப்பு மக்களாலும் கேட்கப்படும் கேள்வி. அவர்கள் மனதளவில் உணர்ச்சிகளை அடக்க முடியாமல் போவதுதான் காரணம் என்பது பலருக்கும் புரிகிறது. ஆனால் அதை அடக்குவதற்கான வழமுறைகள் தெரிந்ததுதான் அதற்குக் காரணம். சரி, உணர்ச்சிகள் என்றால் அது காமம் மட்டும்தானா? நாம் சந்திக்கும்... உணரும் உணர்வுகள் எல்லாமே உணர்ச்சிதான். அன்பு, பாசம், கோபம், சினம், ஆனந்தம், இன்பம், துக்கம், ஆசை, காமம், ...

இன்டர்நெட் இல்லைனா என்ன ஆகும்?

Posted: 02 Oct 2013 12:30 PM PDT

Written by: Keerthi இன்று இணையம் என்ற ஒன்று வந்த பிறகு மக்கள் எங்கு எவ்வளவு தொலைவில் இருந்தாலும் தங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள் எனலாம். இணையம் என்பது உள்ளுரம் வாய்ந்த ஓர் அமைப்பு. ஒரே ஒரு சாதனத்தைச் சார்ந்தோ அல்லது ஒரே ஒரு கேபிள் இணைப்பிலோ இது இயங்குவது இல்லை. இணையம், பல கம்ப்யூட்டர்களின் நெட்வொர்க்குகள் இணைந்த ஒரு நெட்வொர்க். உலகைப் பல முனைகளிலிருந்து இது இணைக்கிறது. கண்டங்களைத் தாண்டி, கடல்களுக்கு ஊடாக, விண்வெளியில் சாட்டலைட் களைத் தடவி எனப் பல வகை ஊடகங்களின் வழியாக இணைக்கப் பட்டுள்ளது. ...

எப்போது மாறும் இந்த அவல நிலை???

Posted: 02 Oct 2013 12:18 PM PDT

கர்நாடகாவில் இருந்து வந்தால்... "கன்னடன்"! ஆந்திராவில் இருந்து வந்தால்... "தெலுங்கன்"! கேரளாவில் இருந்து வந்தால்... "மலையாளி"! பஞ்சாப்பில் இருந்து வந்தால்... "பஞ்சாபி"! ராஜஸ்தானில் இருந்து வந்தால்... "ராஜஸ்தானி"! பாகிஸ்தானில் இருந்து வந்தால்... "பகிஸ்தானி"! வங்கதேசத்தில் இருந்து வந்தால்... "வங்காளி"! ஈழதேசத்தில் இருந்து "தொப்புள் கொடி" உறவாக வந்தால் மட்டும்.... "இவன் அகதி"! ஏன் தமிழா... ஈழத்தமிழனுக்கு மட்டும்... "இந்த அவதி"? எப்போது மாறும் இந்த அவல நிலை??? நன்றி தமிழ்நியூஸ்

கி.மு./கி.பி-படுஜாலியான ஒலிப்புத்தகம்.

Posted: 02 Oct 2013 12:16 PM PDT

கி.மு./கி.பி-படுஜாலியான ஒலிப்புத்தகம். உலகில் முதலில் தோன்றியது பெண். அதாவது, ஆதாம் அல்ல "ஏவாள்' தான் என்கிறார் மதன். விஞ்ஞான அடிப்படையில் அதை உறுதியாகக் கூறிவிட்டு, "அட, சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்பது உண்மைதான்!' என "லோக்கல்' ஆக சந்தோஷப்பட வைக்கிறார். இந்த ஒலிப் புத்தகத்தில் இரண்டு சிறப்புகள் உண்டு. உலகம் தோன்றியது, மனிதன் பிறந்தது, நாகரிகங்கள் உண்டானது, மதங்கள் வளர்ந்தது, போர்கள் உண்டது என வரலாறு தெரிந்து கொள்ளலாம். இன்னொரு சிறப்பு, இதையெல்லாம் சரித்திரப் பாடங்கள் போல போரடிக்காமல் மதன் ...

வெறிநாய் கடித்தால் அலட்சியம் வேண்டாம்

Posted: 02 Oct 2013 08:50 AM PDT

'நாய் கடித்தாலோ, செல்லப் பிராணிகள் கடித்தாலோ, உடனடியாக டாக்டரை அணுக வேண்டும். இவற்றை தடுப்பூசிகள் மூலம், கட்டுப்படுத்த முடியும்; அலட்சியம் காட்டினால் உயிர் பறிபோகும்' "வெறிநாய் கடித்தால் தொப்புளைச் சுற்றி, 16 ஊசிகள் போடும் காலம் மலையேறி விட்டது. தசையில் நான்கு, ஐந்து ஊசிகள் போட்டால் போதும். மக்கள் இதில் அலட்சியம் காட்டக் கூடாது; உயிர் பறிபோகும்," என, டாக்டர் எச்சரித்துள்ளார். இந்தியாவில் மட்டும், ஆண்டுக்கு, 20 ஆயிரம் பேர், 'ரேபிஸ்' நோயால் இறக்கின்றனர். உலகில் ரேபிஸ் நோயால் இறப்போரில், 40 ...

ரசிக்கும் உரிமை கணவனுக்கே

Posted: 02 Oct 2013 08:48 AM PDT

பெண்கள் ஆண்களை விடக் கூடுதலான பாகங்களை மறைக்க வேண்டும் என்பதை தங்களது நடவடிக்கையின் மூலம் இவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். மறைக்கும் அளவு எது என்பதில் தான் நமக்கும் அவர்களுக்குமிடையே கருத்து வேறுபாடு. சரி நிகர் சமானம் என்பதிலோ, பெண்களின் சுதந்திரம் என்பதிலோ அல்ல. ஒழுக்க வாழ்வில், மிகவும் மோசமாக உலகம் பின்னடைந்திருப்பதற்கு முதற் காரணம் பெண்களின் அரைகுறை ஆடைகளும், ஆண்களைச் சுண்டி இழுக்கும் அலங்காரங்களுமே. ஒரு ஆண் குறைவான ஆடையுடன் இருந்தாலும் அவனுக்குப் பாதிப்பில்லை. ஆனால் அரைகுறையான, கிளர்ச்சியூட்டக் ...

கூகிள் தமிழ் எழுத்துருக்களை பாவிப்பது எப்படி? webfont

Posted: 02 Oct 2013 07:29 AM PDT

(இது கணினி சம்பந்தமான படியால் இங்கே இடுகிறேன்  . இடம் மாற்றவேண்டியதாயின் கூறுங்கள்) WEBFONT இணையத்தளம்  Homepage ஒன்று வைத்திருக்கிறீர்களா / அப்படியென்றால் தமிழ் எழுத்து எப்படி பேஜ் உடன் சேர்த்து அனுப்புவது என்பதுபற்றி ஒருமுறை விளக்கியிருந்தேன் இப்போது எழுத்துக்கள் google ல் புதிய முயற்சியாக (தற்சமயம் நான்குவைகயான தமிழ் எழுத்துக்களை  ) webfontஆக  சேர்த்துக்கொண்டுளார்கள் இனி லதா எழுத்தை விட வேறுவகையான எழுத்தை விரும்புவோருக்கு சிறந்த வசதியை இங்கே google லிருந்து பெற்றுக்கொள்லலாம். எப்படி ...

முகம் அழகாக...

Posted: 02 Oct 2013 07:24 AM PDT

* பச்சைப் பயறை அரைத்து, முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து, கழுவி விடுங்கள். இரண்டு வாரம் இதைச் செய்தால், முகத்தில் இருக்கும் ரோமங்கள் உதிர்ந்து விடும். * நல்லெண்ணெயில், மருதாணி இலையே போட்டு நன்றாக காய்ச்சி, அதில், ஒரு மூடி எலுமிச்சம் பழத்தை பிழிந்து, கலந்து, மயிர்கால்களின் இடுக்குகளில் நன்றாக தேய்த்து, ஊற வைத்து, பின் சீயக்காய் தேய்த்து அலச வேண்டும். இவ்வாறு, தொடர்ந்து வாரத்தில் இரண்டு, மூன்று நாட்கள் செய்து வந்தால், பொடுகு நீங்கி விடும். * தூளாக்கிய ஆரஞ்சு பழத்தோல், ஒரு தேக்கரண்டி ...

ஒரு பக்கக் கதை - கற்றது!

Posted: 02 Oct 2013 07:22 AM PDT

1990 வினோத், ஆசிரியர் மறுநாள் எழுதிக் கொண்டு வரச்சொன்ன பொதுக்கட்டுரையை எழுதி முடித்து விட்டு நிமிர்ந்தான். பின்னால் நிழலாடியது ராகுல்! "வினோத் சார் சொன்ன கட்டுரை எழுதிட்டியா?' "முடிச்சிட்டேன் ராகுல். ஆமாம், ஒவ்வொரு முறையும் அடுத்தவங்க கட்டுரையை காப்பியடிச்சி எழுதிக்கிறே. நீயா முயற்சி செய்து, கற்பனை பண்ணி எழுதலாமே?' "அடப்போடா!... சுயமா எழுதறதெல்லாம் எனக்கு சரிபட்டு வராது. அடுத்தவன்கிட்டே வாங்கணுமா, காப்பி அடிச்சம்மா.. முடிஞ்சது வேலை! கற்பனை அது இதுவெல்லாம் உனக்குத்தான் வரும்.' 2013 "டேய், ...

SAP பற்றி சொல்லவும்

Posted: 02 Oct 2013 07:10 AM PDT

நண்பர்கள், SAP பற்றி நீங்கள் பதில் சொல்லவும்

காந்தி மகான் அல்ல; மக்கள் விரோதி!

Posted: 02 Oct 2013 07:06 AM PDT

வடகிழக்கில் சிட்டகாங் நகரிலும், மேற்கில் பெஷாவரிலும் போர்க் குணமிக்க போராட்டங்கள் 1930களில் தோன்றின. சிட்டகாங்கில் புரட்சிகர மாணவர் இயக்கங்களைச் சார்ந்த இந்துஸ்தான் குடியரசுப் படையினர் பிரிட்டிஷ் ஆயுதக் கிடங்கைச் சூறையாடினர். பெஷாவரில் பத்தானியர்களுக்கும் போலீசாருக்கும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. முழு எதிர்காலத்துக்கும் மிகப் பொருட்செறிவுள்ள நிகழ்ச்சி, பெஷாவரில் நடந்த கார்வாலிப் படைவீரர்களின் கலகமாகும். களத்திலிருந்த தலைவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஆத்திரமுற்ற மக்களின் ஆர்ப்பாட்டங்களை ...

இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு!

Posted: 02 Oct 2013 06:42 AM PDT

இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு அவமதிப்பு!  தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், மேல்மங்கலம் என்ற சிற்றூரில் ஸ்ரீ பட்டாளம்மன் ஸ்ரீ முத்தையா கோவில் உள்ளது. ஆண்டு தோறும் இங்கு புரட்டாசி மாதத்தில் புரவி எடுப்பு திருவிழா நடைபெறும். இக்கோவில் நூற்றாண்டுகள் கடந்த பழமையான கோவில். இதை தனிப்பட்ட சிலர் அறங்காவல் குழு என்கிற பெயரில் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இதை எதிர்த்து இன்னொரு தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இறுதியாக சென்னை உயர் நீதிமன்றம் சட்டத்திற்கு புறம்பான அந்த அறங்காவல் குழுவை ...

Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(Photography)

Posted: 02 Oct 2013 06:29 AM PDT

#weekendenjoy
#priyamudanprabuclicks

இங்கிருந்த பிற தள சுட்டி நீங்கப்பட்டது - அசுரன்








பிரியமுடன் பிரபு.

நினைவூட்டல்!

Posted: 02 Oct 2013 05:41 AM PDT


-

-
முதியோர் இல்லத்தில்
இருக்கும் அம்மாவை
மகனுக்கு ஞாபகப்படுத்தியது
தும்மல்!
-
----------------

>சீ.இருளப்பசாமி, சென்னை 83
நன்றி: குடும்ப மலர்

உறவுகள்

Posted: 02 Oct 2013 05:31 AM PDT

எங்கள் வீட்டு விருந்தோம்பல் என்றென்றும் திருவிழாவாய் எங்கள் வீடு நிறைந்திருக்கும் உறவினர்கள் வருகையின்றி ஒரு நாளும் இருந்ததில்லை உற்றார்கள் துணையோடு சந்தோசத்தில் திளைத்திருந்தோம் சங்கீதமாய் பாடி மகிழ்ந்தோம் இத்தனையும் ஒரு நொடியில் காணாமல் போனதிங்கு அப்பாவின் தொழில் நஷ்டம் அனைத்தையும் இழந்து நின்றோம் ஒருவரையும் காணவில்லை ஒருவார்த்தை பேசவில்லை இத்தனை நாள் வந்த சொந்தம் ஒருவருமே வருவதில்லை மனித மனம் மிருகமென்று அப்பொழுதே அறிந்து கொண்டேன் சொந்தங்கள் அத்தனையும் பகட்டானா வாழ்க்கைக்கு ...

வேர்க்கடலை பொடி!

Posted: 02 Oct 2013 05:09 AM PDT

தேவையான பொருட்கள்: வறுத்து, தோல் நீக்கிய வேர்க்கடலை - இரண்டு கப், வறுத்த வெள்ளை எள் - ஒரு மேஜைக் கரண்டி, காய்ந்த மிளகாய் - ஆறு (வெறும் வாணலியில், லேசாக வறுக்கவும்), பூண்டு - ஆறு பல், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து, மிக்சியில் நைசாக அரைத்தெடுக்கவும். சூடான சாதத்தில், சிறிது நெய் விட்டு, வேர்க்கடலை பொடியை போட்டு, பிசைந்து சாப்பிட, சுவை அள்ளும்.

ஆனந்த பயணம்

Posted: 02 Oct 2013 04:29 AM PDT

இறைவா உன் உருவம் கல்லானதால் உன் மனமும் கல்லாகி போனதோ அழிக்க நினைக்கும் மனதுக்கு ஆயிரம் அன்புகள் அள்ளிக் கொடுத்தாய் அன்பு வேண்டி நின்ற எனக்கு மட்டும் கிடைத்த ஒற்றை அன்பையும் பறித்துக்கொண்டாய் ஏனடா என்னை மட்டும் அன்புக்கு ஏங்க வைத்தாய் உன்னை நித்தம் தொழுவதற்கு எனக்கு கொடுத்த பரிசா இது உனை தொழுத கைகளும் உனை சுற்றிய கால்களும் இனி இருந்தால் என்ன முடமாகி போனால் என்ன காலனே நான் தயாராக இருக்கிறேன் நீயாவது இந்த பொய்மையான ஆர்பறிக்கும் உலகில் இருந்து அமைதியான உன் உலகிற்கு ...

அன்பே

Posted: 02 Oct 2013 04:02 AM PDT

உள்ளம் என்னும் ஓடையிலே
பயணம் செய்ய வந்தவளே
உன் பயணம் நீண்டு செல்ல
என் உள்ளம் ஆசைப்பட
நீ என் உள்ளத்திலே குடியிருக்க
நடு வழியில் நிறுத்திவிட்டாய்
அப்போது சுழன்று வந்த
சுழல் காற்று உன் படகை
கவிழ்க்க முயல இறைவா என்றழைக்காமல்
என் உயிரே என்று எனை அழைத்தாய்
அந்நேரம் உன்கரம் பிடித்தேன்
இன்று வரை நீ என்னோடு
என் உயிரே
நான் என்றும்
உன்னோடு................................

வாழ்க்கை

Posted: 02 Oct 2013 03:58 AM PDT

உன்னோடு பேசும் ஒவ்வொரு நிமிடமும்
என் இதயம் துடிக்கும் ஒவ்வொரு முறையும்
என் மனது நினைக்கும் ஒவ்வொரு நினைவும்
நான் பார்க்கும் ஒவ்வொரு நிகழ்வும்
எனை கடந்து செல்லும் ஒவ்வொருவரும்
என் வாழ்வை தீர்மானிக்கின்றன...................
உன் நினைவுகள் மட்டும் என்னை வழிநடத்துகிறது
என்றென்றும்.........

கவிதையில் யாப்பு

Posted: 02 Oct 2013 03:50 AM PDT

யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம் ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012 இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி. தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது. கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே, என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம். யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில் ...

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -54)

Posted: 02 Oct 2013 03:34 AM PDT

வணக்கம் ஈகரை உறவுகளே ..    இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 3 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -3 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள்.    மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .     தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் . இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை குறிப்பு : நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட ...

பறவைகள்

Posted: 02 Oct 2013 03:09 AM PDT


-
விசா
இல்லாமல்
வெளிநாடு
செல்லும்
விருந்தாளிகள்...!
-
------------------------------
>எஸ்.ஆர்.சந்தானகிருஷ்ணன்

ஓம் சரவண பவ -சத்குரு ஜக்கி வாசுதேவ்

Posted: 02 Oct 2013 03:04 AM PDT

ஓம் சரவண பவ -சத்குரு ஜக்கி வாசுதேவ் நண்பர்களே... சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் படைப்பாக தினகரனில் வெளிவந்த ஓம் சரவண பவ...!-என்ற கட்டுரை தொகுப்பு மின்நூல் வடிவில் உங்களுக்காக... பதிவிறக்கி படித்து மகிழுங்கள்... டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/ubmtfzalkd2a97o/omsaravanabava%28OrathanaduKarthik.blogspot.com%29.rar

2013- ஆகஸ்ட் தமிழ் வார இதழ்கள்

Posted: 02 Oct 2013 03:03 AM PDT

29-8-2013-குமுதம் ரிப்போர்ட்டர் http://www.mediafire.com/download/vjjf9iuy2utf7gg/Reporter29813%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 31-8-2013-குங்குமம் தோழி http://www.mediafire.com/download/u9v57939e99aiyr/Thozhi31813%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 31-8-2013-இளைஞர் மலர் http://www.mediafire.com/download/ld6derdude314li/ilaignarmalar31813%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 31-8-2013-குங்குமம் தோழி ப்ரூட்ஸ் ஸ்பெஷல் http://www.mediafire.com/download/a4n5d93g14fpxcq/Thozhi_Suppli31813%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 31-8-2013-குங்குமச் ...

பூக்கள்

Posted: 02 Oct 2013 03:00 AM PDT



-
எங்களுக்கு
வாழ்க்கை
ஒரு நாள்
வசந்தம்..!
-
--------------------
>எஸ்.ஆர்.சந்தானகிருஷ்ணன்

கணினி தொடர்பான செய்முறை விளக்க புத்தங்கள் மின் நூல் வடிவில் (தமிழ் மற்றும் ஆங்கிலம் )

Posted: 02 Oct 2013 02:52 AM PDT

October2013- PC World (USA) Magazine Pdf Free Download Link... http://www14.zippyshare.com/v/57935800/file.html October2013-Windows7 Help & Advice Magazine Pdf Free Download ... http://www23.zippyshare.com/v/27815269/file.html 26.9.2013-MicroMart (UK) Magazine Free Download Pdf Link .. http://www10.zippyshare.com/v/41929709/file.html October2013-Practical Photoshop Magazine(uk) Pdf Free Download http://www23.zippyshare.com/v/58725/file.html Sep2013-Photoshop Creative ...

இறைவனை துதித்து 100 பாடல்கள் (கவிதை) போட்டி

Posted: 02 Oct 2013 02:51 AM PDT

இறைவனை துதித்து 100 பாடல்கள் (கவிதை) போட்டி அன்புள்ள நண்பர்களே! நமது ஈகரையின் இளம்புயல் தம்பி பூவன் அவர்கள் இறைவனை துதித்து 100 பாடல்கள் (கவிதைகள்) குறிப்பிட்ட நேரத்தில் பதிக்க உள்ளார் என்பதை இங்கு அறிவிப்பாக தெரிவிக்கிறேன். அவர் எவ்வளவு நேரம் இந்த 100 கவிதைகளை எழுத எடுத்துக்கொள்கிறார் என்பதையும் இங்கு குறிப்பிடுவார்... அது முதல் சாதனையாகும். இதை முறியடிக்க நினைப்பவர்கள் என்னை தொடர்பு கொள்ளவும். பிறகு இரண்டாமவர் இவரின் சாதனையை முறியடிக்க வேன்டும். போட்டியில் பங்குகொள்ளும் கவி.பூவனுக்கு ...

"இறைவனை துதித்து தொடர்ச்சியாக நூறு கவிதைகள்" - Page 7

Posted: 02 Oct 2013 02:47 AM PDT

இந்த திரியில் யாரும் பின்னூட்டம் இடவேண்டாம் .... இந்த திரிக்கு பின்னூட்டம் இங்கு http://www.eegarai.net/t90769-100#top இடலாம். முழு முதல் கடவுள் கணபதியை தொழுது இந்த முதல் கவிதை வடிக்கிறேன் .... 1 .யானை முகம் கொண்டு பானை வயிறும் கொண்டு பார்க்கும் இடமெல்லாம் காட்சி தந்து பாற்கடலின் மேல் பள்ளி கொண்டோனும் போற்றும் பாவலன் நீ இந்த சிறு பாலகனையும் பார்த்து அருள் புரிவாயாக காத்து அருள் புரிவாயாக ....

2013 - ஜூலை தமிழ் வார இதழ்கள்

Posted: 02 Oct 2013 02:37 AM PDT

31-7-2013-நக்கீரன் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/3bb6d28yauc299i/Nak31713%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 31-7-2013-சினிக்கூத்து இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/51jz9o9ngggfpgr/CK31713%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 31-7-2013-குமுதம் இதழை டவுன்லோட் செய்ய டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/2to7fg99gco91w7/kumudam_31-07-2013_%5Bwww.Freedomusertech.blogspot.com%5D.pdf 29-7-2013-புதிய தலைமுறை கல்வி இதழை ...

6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை கண்டுபிடிப்பு

Posted: 02 Oct 2013 02:37 AM PDT

புதுக்கோட்டை அருகே கவிநாடு கண்மாயில் கி.பி. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய புத்தர்சிலையை புதுகை அரசு மன்னர் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் அ.சந்திரபோஸ் மற்றும் காந்திய கிராம வளர்ச்சி ஆராய்சி அறக்கட்டளையின் மேலாண்மை இயக்குநர் கே.எம்.சுப்பிரமணியம் ஆகியோர் அண்மையில் கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறிய தகவல்: வௌ்ளாற்றுடன் இணைந்த கவிநாடு கண்மாய் ஆயிரம் ஏக்கர் பாசன வசதி கொண்ட மாவட்டத்திலேயே மிகப்பெரிய ஏரியாகும். இப்புத்தரின் உடைந்த தலை, உடல் மற்றும் கைகள் நீண்ட காலமாக கண்மாய் ...

பல லட்சம் தலைமுறை காலத்துக்கு ஆபத்து இல்லை பூமி இன்னும் 175 கோடி ஆண்டு வாழும்.

Posted: 02 Oct 2013 02:29 AM PDT

மனிதன் உட்பட உயிரினங்கள் உயிர் வாழும் இந்த பூமியின் 'உயிர் வாழும்' காலம் எவ்வளவு தெரியுமா? 175 கோடி ஆண்டுகள் தான். அதன் பின், இந்த பூமி, சூரிய மண்டலத்தின் உச்சகட்ட கொதிக்கும் கிரகமாகி விடுமாம்; தண்ணீர் ஒரு துளி கூட இருக்காதாம். பிரிட்டனில் நம்பர் 1 பல்கலைக்கழகம் யுனிவர்சிட்டி ஆப் ஈஸ்ட் ஆங்கிலியா. இந்த பல்கலைக்கழக வான் உயிரியல் ஆராய்ச்சி குழுவினர், நிபுணர் ஆன்ட்ரூ ரஷ்பி என்பவர் தலைமையில் பல ஆண்டாக பூமி பற்றிய ஆய்வுகளை செய்து வருகிறது. சமீபத்தில் இந்த குழு வெளியிட்ட அதிர்ச்சி தகவல் தான் இது. இது ...

ஈர்க்கும் விழிகள்

Posted: 02 Oct 2013 01:29 AM PDT



-
நான் எங்கெங்கே
சுற்றித் திரிந்தாலும்
என் விழிகள்
மட்டும்
உன்னைச் சுற்றியே
வட்டமிடுவதன்
காரணம் எனக்கு
இப்போது புரிந்து...!
-
உன் விழிகளுக்குள்
இருக்கிறது
புவி ஈர்ப்பு விசை...!
-
---------------------
>எஸ்.ஆர்.சந்தானகிருஷ்ணன்

திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது ஆசிட் ஊற்றிய காதலி

Posted: 02 Oct 2013 12:38 AM PDT

உத்தர பிரதேசத்தில் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலன் மீது காதலி ஆசிட் ஊற்றியுள்ளார். உத்தர பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டம் பத்னி கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மேந்திரா. அவர் அப்பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் தனது காதலியை திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார். இதனால் அந்த பெண் தர்மேந்திரா மீது கோபத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் அந்த பெண் தன்னை மணக்க மறுத்த தர்மேந்திரா மீது ஆசிட் ஊற்றினார். இதில் படுகாயம் அடைந்த தர்மேந்திரா பஸ்தி ...

தமிழருக்கு காந்தியடிகள் பாராட்டு!

Posted: 02 Oct 2013 12:06 AM PDT

(புகைப்படம் நான் எடுத்தது; இடம் சென்னை கடற்கரை) காந்திஜி தென்னாப்பிரிக்காவிலிருந்து இறுதியாக இந்தியாவிற்குப் புறப்படவிருந்த சமயம்; தமிழ் மக்கள் அவருக்கு ஒரு பெரிய பிரிவுபசார விழா நடத்தினார்கள். அப்போது அவர் பேசியதாவது: தமிழர்களை நான் சந்தித்தபோது எனது உடன் பிறந்தவர்களைச் சந்திப்பது போன்றே உணர்ந்தேன். எத்தனையோ ஆண்டுகளாக நான் போற்றி வளர்த்து வந்துள்ள மனோ உணர்ச்சி இது. அதற்கான காரணமும் மிக எளிது. இந்தியரிடையே உள்ள பல்வேறு பிரிவினரில் போராட்டத்தின் உக்கிரத்தைத் தாங்கியவர்கள் தமிழர்கள் தான் ...

வறுமை

Posted: 02 Oct 2013 12:06 AM PDT

>
-
பாசத்தை இடம் மாற்றியது வறுமை
பாசத்தோடு வளர்த்த பசுமாட்டை
பணத்துக்காக விற்றான்!
-
------------------
>மு.பெரியசாமி, விட்டுக்கட்டி
நன்றி: குடும்ப மலர்

ஸ்ருதியின் அடுத்த நாயகன் ஆர்யா?

Posted: 02 Oct 2013 12:01 AM PDT


-
3 படத்துக்குப் பிறகு தமிழ்ப் படங்களைத் தவிர்த்துவிட்டு, தெலுங்கு,
இந்தியில் மட்டும் கவனம் செலுத்தி வந்த ஸ்ருதி, அடுத்து ஒரு
தமிழ்ப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம்.
-
இந்தப் படத்தில் அவர் ஜோடி ஆர்யா. இந்தப் படத்தை தடையறத்
தாக்க மகிழ் திருமேனி இயக்குகிறார்.
-
இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
-
--------------


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™