Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


செப்டம்பர் மாதத்தில் வாகன விற்பனை

Posted: 02 Oct 2013 01:12 PM PDT

டாட்டா மோட்டார்ஸ் 50,427 வாகனங்கள் விற்பனை

டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம், செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 50,427 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே மாதத்தில் 75,773–ஆக இருந்தது. ஆக, விற்பனை 33.44 சதவீதம் சரிவடைந்துள்ளது.

ஐந்து ஆண்டுகளில், தனியார் நீர்மின் திட்டங்களில் ரூ.20,000 கோடி முதலீடு; என்.எச்.பி.சி. நிறுவனம் முடிவு

Posted: 02 Oct 2013 12:52 PM PDT

புதுடெல்லி,

பொதுத் துறையைச் சேர்ந்த என்.எச்.பி.சி. நிறுவனம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் தனியார் நீர்மின் திட்டங்களில் ரூ.20,000 கோடி முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.

என்.எச்.பி.சி. முதலிடம்

நந்திக்கு தீபாராதனை

Posted: 02 Oct 2013 12:44 PM PDT

பிரதோச தினத்தை முன்னிட்டு வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் அதிகார நந்திக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்த பொது எடுத்த படம். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

பரஸ்பர நிதி திட்டங்கள் ஈர்த்த நிகர முதலீடு ரூ.24,000 கோடி

Posted: 02 Oct 2013 12:39 PM PDT

புதுடெல்லி,

இரண்டு மாதங்கள் வெளியேற்றத்துக்குப் பின், ஆகஸ்டு மாதத்தில் பல்வேறு பரஸ்பர நிதி திட்டங்களில் ரூ.24,000 கோடி நிகர முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி இத்தகவலை வெளியிட்டுள்ளது.

முதலீட்டுத் திட்டங்கள்

பிரதோஷ விழா

Posted: 02 Oct 2013 12:38 PM PDT

தஞ்சை பெரியகோவிலில் பிரதோஷத்தை யட்டி, நேற்று மாலை மகாநந்திக்கு மஞ்சள் அபிஷேகம் நடந்ததையும், திரளான பக்தர்கள் தரிசித்ததையும் படத்தில் காணலாம்.
 

மைசூர் தசரா விழா

Posted: 02 Oct 2013 12:31 PM PDT

மைசூர் தசரா விழாவையட்டி மைசூர் அரண்மனை வளாகத்தில் போலீசார் கலை நிகழ்ச்சி ஒத்திகையில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

தென்கிழக்கு ஆசியாவில்: எண்ணெய் இறக்குமதி செலவு 24,000 கோடி டாலராக உயரும்

Posted: 02 Oct 2013 12:31 PM PDT

தென் கிழக்கு ஆசிய நாடுகளின் எண்ணெய் இறக்குமதி செலவினம் 2035 ஆண்டிற்குள் 24,000 கோடி டாலராக அதிகரிக்கும் என சர்வதேச எரிசக்தி முகமை எச்சரித்துள்ளது.

இந்த நாடுகளில் நாள் ஒன்றிற்கான எண்ணெய் பயன்பாடு அடுத்த 21 ஆண்டுகளில் தற்போதைய அளவை விட இரண்டு மடங்கு அதிகரித்து 50 லட்சம் பேரல்களாக அதிகரிக்கும். இதே காலத்தில் இப்பகுதியில் மொத்த மின்சார தேவைப்பாடு 80 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்கும். 2035 ஆண்டு வரையிலான காலத்தில், மின்சாரம் மற்றும் சப்ளை கட்டமைப்புகளுக்காக இந்நாடுகளுக்கு 1.70 லட்சம் கோடி டாலர் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தயாராகும் துர்கா சிலைகள்

Posted: 02 Oct 2013 12:28 PM PDT

துர்கா பூஜை நெருங்குவதையட்டி, ஐதராபாத்தில் ஏராளமான துர்க்கை அம்மன் சிலைகள் தயாராகி வருவதை படத்தில் காணலாம்.

செப்.20–ந் தேதி வரை: வங்கிகள் வழங்கிய கடன் 10% உயர்வு

Posted: 02 Oct 2013 12:25 PM PDT

ஏப்ரல் முதல் செப்டம்பர் 20–ந் தேதி வரையிலான காலத்தில் வங்கிகள் வழங்கிய கடன் 10.1 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.57.94 லட்சம் கோடியை எட்டியுள்ளது. சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் கடன் வளர்ச்சி 3.4 சதவீதமாக இருந்தது. ஆக, வளர்ச்சி விகிதம் ஏறக்குறைய மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

செப்டம்பர் 20–ந் தேதி வரை வங்கிகள் திரட்டிய டெபாசிட் 9.3 சதவீத வளர்ச்சி கண்டு ரூ.73.77 லட்சம் கோடியை எட்டியுள்ளது. சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் டெபாசிட் வளர்ச்சி 6.5 சதவீத அளவிற்கே இருந்தது.

கவுகாத்தி

Posted: 02 Oct 2013 12:25 PM PDT

அரசு நிலத்தில் நீண்ட காலமாக குடியிருப்போருக்கு நில உரிமை வழங்கக்கோரி, அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் கிரிஷக் முக்தி சங்கரம் சமிதி என்ற அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்றவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியபோது, அதற்கு அஞ்சாமல் ஒரு பெண் ஆர்ப்பாட்டக்காரர் போராடிய காட்சி.
 



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™