Tamil News | Online Tamil News |
- 'போலீஸ்' பக்ருதீன் சிறையில் அடைப்பு: போலீஸ் மிரட்டியதாக கோர்ட்டில் குற்றச்சாட்டு
- விசாரணைக்கு ராஜாவை அழைக்காதது ஏன்?பி.சி.சாக்கோ திடீர் விளக்கம்
- பள்ளம் தோண்ட துவங்கியாச்சு: பழங்கால கோட்டையில் 1,000 டன் தங்கமா?
- அமெரிக்க ஆயுத கப்பலில் இருந்த 35 பேர் கைது: நவீன துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல்
- தீபாவளிக்கு முன் பஸ்களில் 'அம்மா குடிநீர்' கிடைக்குமா? உற்பத்தி இலக்கை எட்டுவது எப்போது?
- தீபாவளி "வசூல் ராஜா'க்கள் நகர்வலம்: அரசுத்துறைகளுக்குள் போட்டி
- கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள் : பிரதமர் சுற்றுப்பயணத்தில் முடிவாகுமா?
- தேர்தல் கமிஷன் நியாயமாக நடக்க வேண்டும்: கருணாநிதி
- அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த தமிழக மக்கள் தயார் : சென்னை வந்த பிரதமர் வேட்பாளர் மோடி பேச்சு
- பிரதமர் மீது புகார் கூறிய பராக்கிற்கு முன்னாள் அதிகாரிகள் ஆதரவு
| 'போலீஸ்' பக்ருதீன் சிறையில் அடைப்பு: போலீஸ் மிரட்டியதாக கோர்ட்டில் குற்றச்சாட்டு Posted: வேலூர்:.பி.சி.ஐ.டி., போலீஸ் விசாரணைக்கு பின், பயங்கரவாதி, 'போலீஸ்' பக்ருதீன் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.இந்து முன்னணி மாநில செயலர் வெள்ளையப்பன் கொலை வழக்கில் கைதான, பக்ருதீனை, போலீசார் காவலில் எடுத்து, வேலூரில், ரகசிய இடத்தில் வைத்து, விசாரணை நடத்தினர்.விசாரணை தேவையில்லை:நேற்றுடன் போலீஸ் காவல் முடிந்தது. பக்ருதீனை பலத்த போலீஸ் பாதுகாப்புடன், நேற்று பகல், 12:15 மணிக்கு, வேலூர் நீதிமன்றத்தில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் ஆஜர்படுத்தினர். பக்ருதீனிடம் விசாரணை செய்து விட்டதால், இனி, போலீஸ் விசாரணை தேவையில்லை என, போலீசார் கூறினர்.இதனால், அவரை, ... |
| விசாரணைக்கு ராஜாவை அழைக்காதது ஏன்?பி.சி.சாக்கோ திடீர் விளக்கம் Posted: ஸ்பெக்ட்ரம் முறைகேடு விவகாரத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவை அழைத்து, அவரது வாக்குமூலத்தை பதிவு செய்யாதது ஏன் என்பதற்கு, பார்லிமென்ட் கூட்டுக்குழு தலைவர், பி.சி.சாக்கோ, முதன் முறையாக பதிலளித்துள்ளார்.மையப்புள்ளி:'ஸ்பெக்ட்ரம்' ஊழல் முறைகேட்டில், தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் அமைச்சர் ராஜா தான், முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டவர். இன்றளவும், சி.பி.ஐ., கோர்ட்டில், விசாரணையின் மையப்புள்ளியாக, இவர் தான் விளங்குகிறார்.ஆனால், இந்த வழக்கை விசாரிப்பதற்காக, மத்திய அரசால் அமைக்கப்பட்ட, பார்லிமென்ட் கூட்டுக் குழு, ... |
| பள்ளம் தோண்ட துவங்கியாச்சு: பழங்கால கோட்டையில் 1,000 டன் தங்கமா? Posted: லக்னோ : உ.பி.,யில் பழமை வாய்ந்த கோட்டையி்ல், 1,000 டன் தங்க புதையலை கண்டுபிடிக்க, தொல் பொருள் துறையினர் அகழ்வாராய்ச்சியை துவக்கியுள்ளனர். இதற்காக, கோட்டையை சுற்றி பள்ளம் தோண்டும் பணி துவங்கியுள்ளது. உ.பி., மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில், தாண்டியா கேரா கிராமத்தில், 19ம் நுாற்றாண்டை சேர்ந்த, கோட்டை உள்ளது.கலகம்:ஆங்கிலேயர்கள், இந்தியாவை ஆண்டபோது, இப்பகுதியில் குறுநில மன்னராக ஆட்சி செய்தவர், ராஜா ராவ் ராம் பக்ஸ் சிங். ஜான்சி ராணி லட்சுமி பாயுடன் இணைந்து, ஆங்கிலேயர்களுக்கு எதிராக, கலகம் செய்தவர்; 1857ம் ஆண்டு வீர மரணம் அடைந்தார்.'ராஜா ராவ் ராம் பக்ஸ் ... |
| அமெரிக்க ஆயுத கப்பலில் இருந்த 35 பேர் கைது: நவீன துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல் Posted: தூத்துக்குடி:தூத்துக்குடி துறைமுகப் பகுதியில் அத்துமீறி நுழைந்து, சிறை பிடிக்கப்பட்ட, அமெரிக்க கப்பலில் இருந்த, 35 பேர், நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 35 நவீன துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.தூத்துக்குடி துறைமுகப் பகுதியில், 11ம் தேதி நள்ளிரவில், 'சீமேன் கார்டு ஓகியோ' என்ற அமெரிக்க கப்பல், கடலோர காவல் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டது. 'அட்வென் போர்ட்' என்ற தனியார் நிறுவனத்தின் கப்பல் எனவும், கடற்கொள்ளையர்களிடம் இருந்து, தனியார் கப்பல்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டதும், விசாரணையில் தெரிந்தது.இந்த வழக்கு, ... |
| தீபாவளிக்கு முன் பஸ்களில் 'அம்மா குடிநீர்' கிடைக்குமா? உற்பத்தி இலக்கை எட்டுவது எப்போது? Posted: தீபாவளி பண்டிகைக்குள், தொலைதூரம் செல்லும் அரசு பஸ்களில், 'அம்மா குடிநீர்' விற்பனை துவங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.தமிழகத்தில், செப்., 15ம் தேதி முதல், அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம், 304 இடங்களில், 'அம்மா குடிநீர்' பாட்டில்கள் விற்பனை துவங்கப்பட்டது. ஒரு குடிநீர் பாட்டில் விலை, 10 ரூபாய்.விற்பனை:பஸ் நிலையங்கள், மோட்டல்கள் மற்றும் தொலைதூரம் செல்லும் அரசு பஸ்களில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டது.இதற்காக, திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில், மினரல் வாட்டர் உற்பத்தி நிலையம் துவக்கப்பட்டது. நாள் ஒன்றுக்கு, மூன்று லட்சம் பாட்டில்கள் ... |
| தீபாவளி "வசூல் ராஜா'க்கள் நகர்வலம்: அரசுத்துறைகளுக்குள் போட்டி Posted: கோவை:மின்தடை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கோவையில் தொழில் பாதிப்பு அதிகரித்து, பணப்புழக்கம் குறைந்துள்ள நிலையில், கடந்த ஆண்டுகளை மிஞ்சும் வகையில், தீபாவளிக்கு அரசுத் துறை அலுவலர்களின் "வசூல் வேட்டை' பல மடங்காக அதிகரித்துள்ளது.கோவை மாவட்டத்தில், கடந்த சில ஆண்டுகளாக கடுமையான மின் தடை காரணமாக, பல ஆயிரம் சிறு மற்றும் குறுந்தொழில்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. தி.மு.க., ஆட்சியின்போது ஏற்பட்ட இந்த அசாதாரணமான சூழல், ஆட்சி மாற்றத்துக்குப் பின், இன்னும் மோசமாகி விட்டது. கடந்த சில மாதங்களாக, காற்றாலை மின் உற்பத்தி காரணமாக, மின் தடை நேரம் ... |
| கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள் : பிரதமர் சுற்றுப்பயணத்தில் முடிவாகுமா? Posted: புதுடில்லி : கூடங்குளத்தில், மூன்றாவது மற்றும் நான்காவது அணு உலைகள் அமைப்பதற்கான, ரஷ்ய நாட்டின் ஒத்துழைப்பிற்கான முதற்கட்ட பணிகள், பிரதமர் மன்மோகன் சிங்கின், ரஷ்ய சுற்றுப்பயணத்தில் இறுதி செய்யப்படும் என கூறப்படுகிறது.பிரதமர், மன்மோகன் சிங், சீனா, ரஷ்யா நாடுகளுக்கு, நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவரின் ரஷ்ய சுற்றுப்பயணத்தில், கூடங்குளம் அணு மின் நிலையத்தில், மூன்றாவது மற்றும் நான்காவது அணு உலை அமைப்பது குறித்து, ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், அதற்கு முன், அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால், அதற்குரிய ... |
| தேர்தல் கமிஷன் நியாயமாக நடக்க வேண்டும்: கருணாநிதி Posted: சென்னை:'ஏற்காடு இடைத்தேர்தலில், தேர்தல் கமிஷன் நியாயமாக நடக்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.சமூக வலைத்தளங்கள் மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, கருணாநிதி அளித்த பதில் விவரம்:தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட காப்பீடு திட்டம் உட்பட, எல்லா திட்டங்களுமே நிலைகுலைந்து விட்டன.சச்சின் தெண்டுல்கர் தன், 200 வது டெஸ்டில் இருந்து, ஓய்வெடுக்க முடிவெடுத்து உள்ளார்; அவருக்கு என் வாழ்த்துக்கள். தியாகுவின் உண்ணாவிரதத்தை, முதல்வர், அலட்சியப்படுத்தியது எதிர்பார்த்தது தான். ஏற்காடு இடைத்தேர்தலில் தேர்தல் கமிஷன் நியாயமாக நடந்து கொள்ளும் என, ... |
| அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த தமிழக மக்கள் தயார் : சென்னை வந்த பிரதமர் வேட்பாளர் மோடி பேச்சு Posted: சென்னை:""மத்தியில் மாற்றத்தை கொண்டு வர, தமிழக மக்கள் தயாராகி விட்டனர்,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி, சென்னையில் தெரிவித்துள்ளார்.நரேந்திர மோடி, நேற்று மதியம், 3:10 மணிக்கு, தனி விமானத்தில் சென்னை வந்தார். விமான நிலையத்தில் ஏராளமானோர் அவரை வரவேற்றனர். அங்கே கூடியிருந்த பா.ஜ., தொண்டர்களிடையே, நரேந்திர மோடி பேசியதாவது:வட மாநிலங்களில் மாற்றத்திற்கான ஒரு பேரலை இருக்கிறது என்பதை, அங்குள்ள ஆட்சியாளர்கள் நம்பவில்லை. திருச்சியில் நடந்த பிரமாண்டமான பொதுக் கூட்டத்திற்காக, நான் இங்கே என் உணர்வுகளையும், நன்றியையும் ... |
| பிரதமர் மீது புகார் கூறிய பராக்கிற்கு முன்னாள் அதிகாரிகள் ஆதரவு Posted: புதுடில்லி: நிலக்கரி ஊழல் வழக்கில், இத்துறையின் முன்னாள் செயலர் பராக் தெரிவித்த கருத்திற்கு, முன்னாள் அதிகாரிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். பிரதமருக்கு ஆதரவாக, காங்., அமைச்சர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், "பராக் கூறியதில் என்ன தவறு இருக்கிறது?' என, முன்னாள் உயர் அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.நிலக்கரி ஊழல் தொடர்பாக, கருத்து தெரிவித்த, இத்துறையின் முன்னாள் செயலர் பராக் நேற்று முன்தினம் கூறுகையில், "நாங்கள் தவறு செய்துள்ளதாக கருதினால், பிரதமரும் இதில் ஒரு சதிகாரராக இருப்பார்' என்று குறிப்பிட்டு இருந்தார். இதைத் தொடர்ந்து, மத்திய ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |அக்டோபர் 19,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |