Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


மாலுமிகளை போலீசார் கைது செய்து, தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு வந்த போது எடுத்த படம்.

Posted: 18 Oct 2013 12:42 PM PDT

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த ஆயுதக்கப்பலில் இருந்த பாதுகாவலர்கள் மற்றும் மாலுமிகளை போலீசார் கைது செய்து, தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு வந்த போது எடுத்த படம்.

அபூர்வ குருவிக்கூட்டம்

Posted: 18 Oct 2013 12:40 PM PDT

ராமநாதபுரம் மாவட்ட தீவுப் பகுதிகளைச் சுற்றிலும் 200 'க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் வாழ்ந்து வருகின்றன. பாம்பன் குந்துகால் கடற்கரையில் நேற்று பழுப்பு ஈப்பிடிப்பான்  எனப்படும் குருவிகள் கூட்டமாக நின்றிருந்த அழகிய காட்சியை படத்தில் காணலாம்.

அருண்ஷோரி எழுதிய சுய வஞ்சகம்

Posted: 18 Oct 2013 12:37 PM PDT

அருண்ஷோரி எழுதிய சுய வஞ்சகம்-இந்தியாவின் சீன கொள்கைகள் என்ற புத்தகத்தை குஜராத் முதல்-மந்திரியும், பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி வெளியிட்டார். அருகில் அருண்ஷோரி, துக்ளக் ஆசிரியர் சோ, பல்கிவாலா அறங்காவலர்கள் அரவிந்த் பி.தத்தா, ராஜா ஆகியோர் உள்ளனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் இந்தியாவின் அதிரடி தொடருமா? 3-வது ஆட்டம் இன்று நடக்கிறது

Posted: 18 Oct 2013 12:14 PM PDT

மொகாலி,

இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மொகாலியில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இதிலும் இந்திய வீரர்களின் அதிரடிவேட்டை தொடருமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

ஒரு நாள் கிரிக்கெட்

ஜார்ஜ் பெய்லி தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 7 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. புனேயில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 72 ரன்கள் வித்தியாசத்திலும் ஜெய்ப்பூரில் நடந்த 2-வது ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.

தமிழக கடல் பகுதியில் மர்ம பயணம் தூத்துக்குடி அருகே ஆயுதங்களுடன் பிடிபட்டனர் அமெரிக்க கப்பலில் இருந்த 33 பேர் கைது பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்

Posted: 18 Oct 2013 12:00 PM PDT

தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே இந்திய கடல் பகுதியில் 'சீமேன் கார்டு' என்ற அமெரிக்க தனியார் பாதுகாப்பு கப்பல் அத்துமீறி நுழைந்தது.

பிடிபட்ட அமெரிக்க ஆயுத கப்பல்

அதில் 10 மாலுமிகள் மற்றும் 25 பாதுகாவலர்கள் இருந்தனர். கப்பலில் 35 துப்பாக்கிகளும், 5 ஆயிரத்து 785 தோட்டாக்களும் இருந்தன.இந்த கப்பலை கடந்த 12–ந் தேதி கடலோர காவல்படையினர் மடக்கி பிடித்து தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர். விசாரணையில், ஆயுத கப்பலில் இருந்தவர்கள், தூத்துக்குடியில் இருந்து சட்ட விரோதமாக 1,500 லிட்டர் டீசல் வாங்கியது தெரியவந்தது.

மணல் அள்ளுவதற்கு 100 சதவீதம் தடை விதித்தது தவறு: நீதிபதி சதாசிவம்

Posted: 18 Oct 2013 10:23 AM PDT

புதுடெல்லி

கடல் மற்றும் ஆற்றுப்படுகைகளில் மணல் அள்ளுவதற்கு 100 சதவீதம் தடை விதித்தது தவறு என்று, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.சதாசிவம் கருத்து தெரிவித்து இருக்கிறார்.

100 சதவீத தடை தவறு

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கு பற்றி கவலை இல்லை ப.சிதம்பரத்தை சந்தித்த குமாரமங்கலம் பிர்லா பேட்டி

Posted: 18 Oct 2013 09:41 AM PDT

புதுடெல்லி

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கு பற்றி கவலை இல்லை என்று மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தை சந்தித்த பின்னர் குமாரமங்கலம் பிர்லா கூறினார்.

நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கு

அஸ்திவாரம், கட்டிடத்துக்கு அச்சாரம்

Posted: 18 Oct 2013 08:57 AM PDT

வீட்டின் அஸ்திவாரம் உறுதியாக இருந்தால் தான் கட்டிடம் பிரச்சினை இல்லாமல் கம்பீரமாய் எழுந்து நிற்கும். அதில் சிறு பாதிப்பு ஏற்பட்டாலும் அது கட்டிடத்தை ஆட்டம் காண செய்து விடும். அதனால் தான் கட்டிடத்தின் ஆணி வேராக விளங்கும் அஸ்திவாரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டி இருக்கிறது. பல விஷயங்களை கவனத்தில் கொண்டும் செயல்பட வேண்டி உள்ளது. அதுபற்றிய சில தகவல்களை பார்ப்போம்.

மண் பரிசோதனை அவசியம்

வீட்டுமனை மதிப்பு உயரும் பெருங்களத்தூர்

Posted: 18 Oct 2013 08:56 AM PDT

சென்னை புறநகர் பகுதியை நோக்கி குடியேற்றம் விரிவாக்கம் அடைந்து வருவதற்கு ஏற்ப குடியிருப்புகளும் பெருகி வருகின்றன. பல பகுதிகளில் வீடுகள் நெருக்கமாக அமைந்து இருக்கின்றன. இதன் காரணமாக வீட்டு மனைகளின் பரப்பளவு குறைந்து வருகிறது. இடம் வாங்கி வீடு கட்டி குடியேறும் எண்ணத்தில் இருப்பவர்கள் முதலில் வீட்டு மனைகளை வாங்குவதற்கு அதிக ஆர்வம் காட்டுவதால் அதன் விலையும் எகிறிக்கொண்டே இருக்கிறது.

சாலை கட்டமைப்பு வசதி

தூத்துக்குடி கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்த அமெரிக்க கப்பலில் இருந்த 33 பேர் கைது நவீனரக துப்பாக்கிகள் பறிமுதல்

Posted: 18 Oct 2013 08:35 AM PDT

தூத்துக்குடி,

தூத்துக்குடி கடல் பகுதிக்குள் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த அமெரிக்க கப்பலில் இருந்த 33 பேர் கைது செய்யப்பட்டனர். நவீனரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அத்துமீறி நுழைந்த அமெரிக்க கப்பல்



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™