Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


மாநகராட்சி பிறப்பு, இறப்புச் சான்றிதழ் பிரிவில் மீண்டும் சர்ச்சைக்குரிய பணியாளர்கள்

Posted: 18 Oct 2013 01:22 PM PDT

மதுரை மாநகராட்சியில் அடிப்படையான பிறப்பு, இறப்புச் சான்றிதழ் பிரிவில், முக்கியப் பிரமுகர்களுக்கு போலியாக இறப்புச் சான்றிதழ் வழங்கிய ஒப்பந்தப் பணியாளர்களே தற்போதும் பணியாற்றி வருவது குறித்து, மாமன்றக் கூட்டத்தில் மார்க்சிய கம்யூனிஸ்ட் உறுப்பினர் புகார் தெரிவித்தார்.   இதற்கு, விரைவில் அந்தப் பிரிவில் முக்கிய பணியிடங்களில் மாநகராட்சி நிரந்தர ஊழிய

மண்டலத்துக்கே வழங்கக் கோரி மாமன்ற உறுப்பினர்கள் விவாதம்

Posted: 18 Oct 2013 01:21 PM PDT

  மதுரை மாநகரில் 2 ஆயிரம் சதுர அடிக்குள்பட்ட கட்டடங்களுக்கான வரைபட அனுமதி வழங்கும் அதிகாரத்தை, மண்டல அலுவலகத்துக்கு வழங்கக் கோரி, மண்டலத் தலைவர்கள் உள்ளிட்ட உறுப்பினர்கள் மாமன்றக் கூட்டத்தில் வலியுறுத்தினர்.

மேலூரில் வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி

Posted: 18 Oct 2013 01:21 PM PDT

மேலூர் சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்துக் கொள்ள பொதுமக்களை வலியுறுத்தி, பள்ளி மாணவ-மாணவியர் விழிப்புணர்வுப் பேரணியை வெள்ளிக்கிழமை நடத்தினர்.

கடைகளில் திருட்டு: பள்ளி மாணவர் உள்பட இருவர் கைது

Posted: 18 Oct 2013 01:21 PM PDT

மதுரையில் கடைகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டுவந்த பள்ளி மாணவர் உள்பட இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரயில் மறியல் போராட்டம்: 73 பேர் கைது

Posted: 18 Oct 2013 01:21 PM PDT

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் எனக் கோரி, வெள்ளிக்கிழமை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

வடக்கு மண்டலப் பகுதிகளில்  தேசிய அடையாள அட்டைக்கு 2 ஆவது சுற்றுப் பதிவு

Posted: 18 Oct 2013 01:20 PM PDT

  வடக்கு மண்டலத்துக்கு உள்பட்ட லூர்து நகர், கற்பக நகர், கே.புதூர், கே.கே. நகர், அண்ணா நகர், சாத்தமங்கலம் ஆகிய பகுதிகளில், தேசிய அடையாள அட்டைக்கு அக்டோபர் 20 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை இரண்டாவது சுற்றுப் பதிவு நடைபெறவுள்ளதாக, மாநகராட்சி ஆணையர் ஆர். நந்தகோபால் தெரிவித்துள்ளார்.

மாநகராட்சி பள்ளியை மூட முடிவு

Posted: 18 Oct 2013 01:20 PM PDT

மதுரை மாநகராட்சியில் மாணவ, மாணவியர் இல்லாத நிலையில், தெற்குவெளி வீதியிலுள்ள மாநகராட்சி ஆரம்பப் பள்ளியை மூட, மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

சோழவந்தான் அருகே பள்ளிக் கட்டடம் இடிந்து விழுந்து மாணவர் காயம்

Posted: 18 Oct 2013 01:20 PM PDT

சோழவந்தான் அருகே, வெள்ளிகிழமை ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்ததில், பள்ளி மாணவர் காயமடைந்தார்.

அரிசி ஆலை உரிமையாளரிடம் ரூ.15 லட்சம் வழிப்பறி

Posted: 18 Oct 2013 01:19 PM PDT

: மதுரையில் மோட்டார் சைக்கிளில் வந்த அரிசி ஆலை உரிமையாளரிடம் ரூ.15 லட்சம் வழிப்பறி செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சரின் கணவர் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

Posted: 18 Oct 2013 01:19 PM PDT

பள்ளி மாணவர்களைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் வழங்கக் கோரி முன்னாள் அமைச்சரின் கணவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்

பொறியியல் கல்லூரிகளுக்கு அக்.21 இல் விடுமுறை

Posted: 18 Oct 2013 01:19 PM PDT

பொறியியல் கல்லூரி முதல்வர் படுகொலை செய்யப்பட்ட  சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, தென் மாவட்டங்களில் உள்ள சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை (அக்.21) விடுமுறை விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

காலமானார்

Posted: 18 Oct 2013 01:18 PM PDT

கடலூர் மாவட்டம், கருங்குழியைச் சேர்ந்த ஆர்.நடராஜன் (56), உடல் நலக் குறைவால் வெள்ளிக்கிழமை (அக்.18) காலமானார்.

விவேகானந்த கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்

Posted: 18 Oct 2013 01:18 PM PDT

சோழவந்தான் அருகே திருவேடகத்தில் உள்ள விவேகானந்த குருகுல கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தலைமறைவு குற்றவாளியாக அறிவிப்பு: பவர் ஸ்டார் சீனிவாசன் முன்ஜாமீன் கோரி மனு

Posted: 18 Oct 2013 01:18 PM PDT

சிவகாசி நீதிமன்றத்தால் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

மாமன்றக் கூட்டத்திலிருந்து திமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்

Posted: 18 Oct 2013 01:17 PM PDT

  மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்துக்கு கறுப்புச் சட்டை அணிந்து வந்திருந்த 12 திமுக உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.

பொட்டு சுரேஷ் கொலை வழக்கு: கைதான இருவர் குண்டர் சட்டத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு

Posted: 18 Oct 2013 01:17 PM PDT

பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் கைதான இருவரின் குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் லேசான மழை

Posted: 18 Oct 2013 01:17 PM PDT

மதுரை மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளில், வெள்ளிக்கிழமை லேசான மழை பெய்தது.

தென்காசியில் மராமத்து பணி: பயணிகள் ரயில்  போக்குவரத்தில் மாற்றம்

Posted: 18 Oct 2013 01:17 PM PDT

ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் பொருட்டு, தென்காசி ரயில் நிலையத்தில் மராமத்துப் பணிகள் நடைபெற உள்ளதால், தென்காசி- செங்கோட்டை இடையே பயணிகள் ரயில் போ

குட்லாடம்பட்டி பகுதியில் சீரமைப்புப் பணிகள்

Posted: 18 Oct 2013 01:16 PM PDT

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஒன்றியம், குட்லாடம்பட்டி, செம்மினிப்பட்டி பகுதிகளில், கடந்த 2 நாள்களுக்கு முன் பெய்த பலத்த மழையால்,  கண்மாய் வரத்துக் கால்வாய், பாலங்கள் மற்றும் மழையால்

தாமோதர தீபத் திருவிழா துவக்கம்

Posted: 18 Oct 2013 01:16 PM PDT

: மதுரை மணிநகரம் இஸ்கான் ஹரே கிருஷ்ணா ஹரே ராமா கோயிலில், ஒரு மாத கால தாமோதர தீபத் திருவிழா வெள்ளிக்கிழமை துவங்கியது.

சிவாலயங்களில் அன்னாபிஷேகம்

Posted: 18 Oct 2013 01:16 PM PDT

ஐப்பசி பௌர்ணமியையொட்டி, சிவாலயங்களில் வெள்ளிக்கிழமை அன்னாபிஷேகம் நடைபெற்றது.    நாடு சுபிட்ஷம் பெறுவதற்காக, ஒவ்வோர் ஆண்டும் ஐப்பசி மாத பெüர்ணமியில் சிவாலயங்களில்

ரூ.3 கோடியில் செய்யாறு பஸ் நிலையம் விரைவில் விரிவாக்கம்

Posted: 18 Oct 2013 12:41 PM PDT

ரூ.3 கோடி மதிப்பீட்டில் செய்யாறு பஸ் நிலைய விரிவாக்கப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள்

Posted: 18 Oct 2013 12:40 PM PDT

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பது குறித்து மாவட்ட வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளரும், சிறுபான்மை நலத்துறை ஆணையருமான ஏ.முகமது அஸ்லாம் ஆய்வு மேற்கொண்டார்.

உலக பெண்  குழந்தைகள் தினவிழா

Posted: 18 Oct 2013 12:40 PM PDT

வந்தவாசி நூலக வாசகர் வட்டம் சார்பில் உலக பெண் குழந்தைகள் தினவிழா வந்தவாசி கிளை நூலகத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம்

Posted: 18 Oct 2013 12:40 PM PDT

சேத்துப்பட்டு பேரூராட்சியில் பாஜக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கிராமங்களில் வளர்ச்சிப் பணிகள்:செங்கம் ஒன்றியக்குழு கூட்டத்தில் முடிவு

Posted: 18 Oct 2013 12:39 PM PDT

44 கிராம ஊராட்சிகளில் அடிப்படை வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள செங்கம் ஒன்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஹோட்டலில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு

Posted: 18 Oct 2013 12:39 PM PDT

திருவண்ணாமலை ஹோட்டலில் வெள்ளிக்கிழமை மின்சாரம் பாய்ந்து தொழிலாளி இறந்ததாக அவரது உறவினர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலையை அடுத்த கெங்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தன் மகன்

உலக உணவு தினவிழா

Posted: 18 Oct 2013 12:39 PM PDT

போளூரை அடுத்த துரிஞ்சிக்குப்பம் ஊராட்சியில் உலக உணவு தினவிழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

தீபாவளிப் பண்டிகைதிருவண்ணாமலையில் இருந்து 250 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

Posted: 18 Oct 2013 12:39 PM PDT

தீபாவளி கூட்ட நெரிசலை சமாளிக்க திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு 250 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப் பேருந்துகள் அனைத்தும் இம்மாதம் 28-ம் தேதி முதல் இயக்கப்படும். குறிப்பாக,

மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

Posted: 18 Oct 2013 12:38 PM PDT

சேத்துப்பட்டு ஒன்றிய அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

ஐப்பசி மாத பௌர்ணமி: திரளான பக்தர்கள் கிரிவலம்

Posted: 18 Oct 2013 12:38 PM PDT

ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.

சாலை விபத்தில் ஒருவர் சாவு

Posted: 18 Oct 2013 12:38 PM PDT

செங்கத்தை அடுத்த மேல்பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த  சரவணன், கிருஷ்ணகிரியை சேர்ந்த வேலாயுதம் ஆகியோர் மேல்பள்ளிப்பட்டு கிராமத்தில் இருந்து செங்கத்துக்கு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர்.

கோயில் குப்பையில் புதைக்கப்பட்ட கன்றுக்குட்டி தோண்டி எடுப்பு

Posted: 18 Oct 2013 12:37 PM PDT

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலுக்குள் புதைக்கப்பட்ட இறந்த கன்றுக்குட்டியின் சடலம், அதிகாரிகள் முன்னிலையில் வெள்ளிக்கிழமை தோண்டி எடுக்கப்பட்டது

உணவு உற்பத்தியை அதிகரிக்கக் கோரிவிவசாயிகள் நூதனப் போராட்டம்

Posted: 18 Oct 2013 12:37 PM PDT

தமிழகத்தில் உணவு உற்பத்தியை அதிகரிக்கக் கோரி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் நூதனப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.

ஹிண்டால்கோ விவகாரம்: நவீன் பட்நாயக்கை சிபிஐ விசாரிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

Posted: 18 Oct 2013 12:33 PM PDT

""நிலக்கரி சுரங்கத்தை ஒதுக்கக் கோரி ஹிண்டால்கோ நிறுவனம் அளித்த விண்ணப்பத்தை மத்திய பரிசீலனைக் குழு நிராகரித்ததற்கு பிறகும்கூட அந்த நிறுவனத்துக்கு தகுதிக்கு மீறி சலுகை காட்டி பிரதமருக்கு முதல்வர் நவீன் பட்நாயக் பரிந்துரைக் கடிதம் எழுதியிருக்கிறார்.

தெலங்கானா: 13 ஆந்திர எம்.பி.க்கள் ராஜிநாமா நிராகரிப்பு

Posted: 18 Oct 2013 12:31 PM PDT

ஆந்திர மாநிலத்தைப் பிரித்து, தெலங்கானா மாநிலத்தை உருவாக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து ஆந்திரத்தைச் சேர்ந்த 13 மக்களவை உறுப்பினர்கள் அளித்திருந்த ராஜிநாமா கடிதங்களை மக்களவைத் தலைவர் மீரா குமார் வெள்ளிக்கிழமை நிராகரித்தார்.

தேசிய தேக்வாண்டோ: 1,500 பேர் பங்கேற்பு

Posted: 18 Oct 2013 12:21 PM PDT

தேசிய ஜூனியர் தேக்வாண்டோ சாம்பியன் போட்டிகள், புதுவை உப்பளத்தில் உள்ள இந்திரா காந்தி உள்ளரங்க மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கின.

இந்திய ஹாக்கி: செயல்திறன் இயக்குநராகிறார் ஓல்ட்மன்ஸ்

Posted: 18 Oct 2013 12:19 PM PDT

இந்திய ஹாக்கி அணியின் செயல்திறன் இயக்குநர் மற்றும் தலைமை ஒருங்கிணைப்பாளராக ரோலன்ட் ஓல்ட்மன்ஸ் விரைவில் நியமிக்கப்பட உள்ளார்.

துலீப் கோப்பை இறுதிப் போட்டி: தெற்கு மண்டலம் 33/2

Posted: 18 Oct 2013 12:18 PM PDT

துலீப் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியின் 2-ம் நாள் முடிவில் வடக்கு மண்டலத்துக்கு எதிராக 2 விக்கெட்டுகளை இழந்து 33 ரன்களை எடுத்துள்ளது தெற்கு மண்டலம்.

கிரிக்கெட் சங்கத் தேர்தல்: நீதிமன்றத்தில் முண்டே மனு தாக்கல்

Posted: 18 Oct 2013 12:17 PM PDT

மகாராஷ்டிர கிரிக்கெட் சங்கத் தேர்தலில், பாஜக மூத்த தலைவர் கோபிநாத் முண்டேவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து அவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

குத்துச்சண்டை: மனோஜ், மன்பிரீத் சிங் முன்னேற்றம்

Posted: 18 Oct 2013 12:16 PM PDT

கஜகஸ்தானின் அல்மாட்டி நகரில் நடைபெற்று வரும் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இந்தியாவின் மன்பிரீத் சிங், மனோஜ் குமார் ஆகியோர் முன்னேறியுள்ளனர்.

தரவரிசை: புஜாராவுக்கு பின்னடைவு

Posted: 18 Oct 2013 12:15 PM PDT

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ட் தரவரிசைப் பட்டியிலில் சேதேஷ்வர் புஜாரா 8-வது இடத்துக்கு இறங்கினார்.

டென்மார்க் ஓபன்: நடப்புச் சாம்பியன் சாய்னா தோல்வி

Posted: 18 Oct 2013 12:14 PM PDT

நடப்புச் சாம்பியனான சாய்னா நெவால், டென்மார்க் ஓபன் பாட்மிண்டன் போட்டியின் காலிறுதியில் தோல்வியைத் தழுவி, போட்டியிலிருந்து வெளியேறினார்.

இந்திய ஓபன் ஸ்னூக்கர்: இறுதிச்சுற்றில் ஆதித்யா தோல்வி

Posted: 18 Oct 2013 12:12 PM PDT

இந்திய ஓபன் ஸ்னூக்கர் போட்டியின் இறுதிச்சுற்றில் ஆதித்யா மேத்தா தோல்வியடைந்தார். இருப்பினும், வீரர்களின் தரவரிசையை நிர்ணயிக்கும் இதுபோன்ற போட்டிகளின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ஆதித்யா மேத்தா படைத்தார்.

ஆஸ்திரேலியாவுடன் இன்று 3-வது ஒருநாள் போட்டி: இந்தியாவின் வெற்றி தொடருமா?

Posted: 18 Oct 2013 12:11 PM PDT

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் வெற்றி தொடருமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

தேசிய-சர்வதேச போட்டிகளை நடத்த ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு

Posted: 18 Oct 2013 12:09 PM PDT

தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளை நடத்துவதற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

பிரதமரின் கல்லூரி நண்பரின் நூல் வெளியீட்டு விழா

Posted: 18 Oct 2013 12:06 PM PDT

பிரதமர் மன்மோகன் சிங்கின் கல்லூரி நண்பர் பேராசிரியர் கோஸ்வாமியின் பிறந்த நாளான வெள்ளிக்கிழமை அவர் எழுதித் தொகுத்த ஓவியக் கலை குறித்த நூலை பிரதமர் மன்மோகன் சிங் தில்லியில் வெளியிட்டார். 

"நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு: விளக்கமளிக்கத் தவறிவிட்டார் பரேக்

Posted: 18 Oct 2013 12:05 PM PDT

முதலில் நிராகரிக்கப்பட்ட ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு, முடிவை மாற் றி நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு செய்ததற்கான விளக்கத்தை முன்னாள் நிலக்கரித்துறை செயலாளர் பி.சி. பரேக் அளிக்கத் தவறிவிட்டதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

மத்தியில் மீண்டும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி

Posted: 18 Oct 2013 12:05 PM PDT

வரும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் மூன்றாவது முறையாக காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்று மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் மணீஷ் திவாரி கூறினார்.

இரண்டாவது நாளாக பாஜக வீடு வீடாக  பிரசாரம் 

Posted: 18 Oct 2013 12:05 PM PDT

தில்லி பிரதேசத்தில் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் "வீட்டுக்கு வீடு' நேரடியாகச் சென்று தேர்தல் பிரசாரம் செய்து வரும் பாஜகவினர் இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமையும் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

கடந்த தேர்தலில் டெபாசிட் இழந்த தேசிய கட்சிகள்

Posted: 18 Oct 2013 12:04 PM PDT

தில்லி பிரதேச சட்டப்பேரவைக்கு 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளும் அதிக இடங்களைப் பெற்றபோதிலும், சில தொகுதிகளில் டெபாசிட் தொகையை இழந்த வரலாறும் பதிவாகியுள்ளது.

ஆம் ஆத்மிக்கு 48 இடங்கள் கிடைக்கும்!

Posted: 18 Oct 2013 12:04 PM PDT

தில்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று அக் கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

கிரெடிட் கார்டு வாங்காதவருக்கு கடன் இருந்ததாக கூறிய வங்கி

Posted: 18 Oct 2013 12:04 PM PDT

கிரெடிட் கார்டு வசதி பெறாத வாடிக்கையாளரிடம் ரூ. 3 லட்சம் கடனை அடைக்கும்படி கூறிய பொதுத் துறை வங்கி, அந்த வாடிக்கையாளருக்கு ரூ. 1 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று தில்லி நுகர்வோர் குறைதீர் மன்றம் உத்தரவிட்டுள்ளது.

பீதம்புராவில் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த 3 பேர் கைது

Posted: 18 Oct 2013 12:03 PM PDT

வடமேற்கு தில்லி பீதம்புராவில் உள்ள குடியிருப்பில் கடந்த வாரம் வீடு புகுந்து துப்பாக்கி முனையில் ரொக்கம், நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற மூன்று பேரை போலீஸ

தில்லி மின் துறைச் செயலரை பணி நீக்கம் செய்ய வேண்டும்

Posted: 18 Oct 2013 12:03 PM PDT

தில்லி பிரதேச அரசின் மின் துறைச் செயலர் ஆர்.கே. வர்மாவின் மனைவி, கணக்கில் வராத பணத்தை வெளிநாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதை அடுத்து மின் துறைச் செயலரை உடனடியாகப் பணி நீக்கம் செய்ய காங்கிரஸ் அரசு தேர்தல் ஆணையத்தை கோர வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ள

நொய்டா சிட்டி சென்டரில் மெட்ரோ ரயில் சேவை

Posted: 18 Oct 2013 12:02 PM PDT

"நொய்டா சிட்டி சென்டர் மெட்ரோ ரயில் நிலைய சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. அந்த ரயில் சந்திப்புக்கு துவாரகாவில் இருந்து

ஓய்வு பெற்ற பேராசிரியை கொலை

Posted: 18 Oct 2013 12:02 PM PDT

கேளம்பாக்கத்தில் ஓய்வு பெற்ற பேராசிரியை கொலை செய்யப்பட்டார்.

கிணற்றில் இளைஞர் சடலம்:கொலையா என விசாரணை

Posted: 18 Oct 2013 12:01 PM PDT

கூடுவாஞ்சேரி அருகே விவசாய கிணற்றில் மிதந்த, இளைஞரின் சடலத்தை போலீஸார் கைப்பற்றி, அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

பட்டா மாறுதல் சிறப்பு முகாம்: 72 மனுக்களுக்கு தீர்வு

Posted: 18 Oct 2013 12:01 PM PDT

ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை  நடைபெற்ற சிறப்பு பட்டா மாறுதல் முகாமில் 1,517 மனுக்கள் பெறபட்டன. அவற்றில் 72 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உரியவர்களிடம் ஆணை வழங்கப்பட்டன.

13 குடிநீர் நிறுவனங்களுக்கு "சீல்'

Posted: 18 Oct 2013 12:01 PM PDT

சென்னை புறநகர் பகுதிகளில் உரிய அனுமதி இல்லாமலும், சுகாதாரமற்ற குடிநீர் உற்பத்தியில் ஈடுபட்டதாக, 13 நிறுவனங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

அம்மா திட்ட முகாம்

Posted: 18 Oct 2013 12:01 PM PDT

உத்தரமேரூர் தாலுக்கா திருப்புலிவனம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. வட்டாட்சியர் சாவித்திரி வரவேற்றார். ஒன்றியக்குழு

அக்டோபர் 19மின் தடை

Posted: 18 Oct 2013 12:00 PM PDT

32 ஆயிரம் புதிய வாக்காளர்கள் விண்ணப்பம்

Posted: 18 Oct 2013 12:00 PM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 32 ஆயிரம் புதிய வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி விண்ணப்பித்துள்ளனர்.

கருங்குழி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

Posted: 18 Oct 2013 12:00 PM PDT

மதுராந்தகம் அருகே கருங்குழி பேரூராட்சி அலுவலகத்தை வெள்ளிக்கிழமை அப்பகுதி மக்கள் திடீரென முற்றுகையிட்டனர்.

மணல் சேமிப்பு மையங்களை அரசு கையகப்படுத்த கோரிக்கை

Posted: 18 Oct 2013 11:59 AM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மணல் சேமிப்பு மையங்களை அரசு கையகப்படுத்த வேண்டும் என்று விவசாயச் சங்க பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பழனி மலைக்கோயில் உண்டியல்: 21 நாளில் ரூ.1.40 கோடியை தாண்டியது

Posted: 18 Oct 2013 11:59 AM PDT

பழனி மலைக்கோயிலில் உண்டியல்கள் 21 நாள்களில் நிரம்பின. இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை உண்டியல்கள் திறக்கப்பட்டு, மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் எண்ணப்பட்டன.

40 தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றும்

Posted: 18 Oct 2013 11:58 AM PDT

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றும் என தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

கடைக்குச் சென்ற சிறுவன் மாயம்

Posted: 18 Oct 2013 11:58 AM PDT

திருத்தணி அருகே கடைக்குச் சென்ற சிறுவன் காணாமல் போனதாக அவரது தந்தை போலீஸில் புகார் அளித்துள்ளார்.

அம்மா திட்ட முகாம்:44 மனுக்களுக்கு தீர்வு

Posted: 18 Oct 2013 11:57 AM PDT

கும்மிடிப்பூண்டியை அடுத்த ஈகுவார்பாளையத்தில் நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் 44 மனுக்களுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டு, பயனாளிகளுக்கு ஆணைகள் வழங்கப்பட்டன.

அக்டோபர் 19 மின் தடை

Posted: 18 Oct 2013 11:57 AM PDT

முன்னேற்பாடுகள் ஏதுமின்றி ஆதார் அட்டை முகாம்

Posted: 18 Oct 2013 11:57 AM PDT

திருவள்ளூர் நகராட்சிக்கு உள்பட்ட 10-வது வார்டில், முன்னேற்பாடுகள் ஏதுமின்றி ஆதார் அட்டை முகாம் நடைபெற்றதால் பொதுமக்கள் பல மணிநேரம் காத்திருக்கும் சூழ்நிலை உருவானது.

விவசாயிகளுக்கு ஆட்சியர் வேண்டுகோள்

Posted: 18 Oct 2013 11:57 AM PDT

திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை அனைத்து விவசாயிகளும் கடைபிடிக்க வேண்டும் என திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவராவ் வேண்டுகோள் விடுத்தார்.

பஸ்ஸில் பிக்பாக்கெட்: 2 பேர் கைது

Posted: 18 Oct 2013 11:56 AM PDT

திருவள்ளூர் அருகே மாநகர பஸ்ஸில் பிக்பாக்கெட் அடித்த 2 பேர் போலீஸில் ஒப்படைக்கப்பட்டனர். திருவள்ளூரை அடுத்த மப்பேடு பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (20).  இவர் வியாழக்கிழமை

கட்டட பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

Posted: 18 Oct 2013 11:55 AM PDT

ஆண்டிபட்டி,சக்கம்பட்டி முத்துமாரியம்மன் நகர் அரசு உயர்நிலைப்பள்ளி புதிய கட்டட பணிகளை விரைந்து முடித்திட கல்வித்துறை நடவடிக்கை எடுக்கவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளி மாணவர்களுக்கு தீத்தடுப்பு செயல்விளக்கம்

Posted: 18 Oct 2013 11:55 AM PDT

தீபாவளி பண்டிகை நேரத்தில் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பதற்காக தீயணைப்புத் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு தீத்தடுப்பு செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

உத்தமபாளையத்தில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம்

Posted: 18 Oct 2013 11:55 AM PDT

உத்தமபாளைத்தில் அக்.24-ஆம் தேதி வருவாய்த் துறை சார்பில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

தேனியில் பார்வர்டு பிளாக் மாவட்டச் செயலர் கைது: விடுவிக்கக்கோரி ஆட்சியரிடம் மனு

Posted: 18 Oct 2013 11:55 AM PDT

தேனியில் காவல் துறையால் கைது செய்யப்பட்ட அகில இந்திய பார்வர்டு பிளாக் மாவட்டச் செயலரை விடுவிக்கக் கோரி வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாயிடம், பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலரும் உசிலம்பட்டி தொகுதி எம்.எல்.ஏ.வுமான பி.வி.கதிரவன் மனு அளித்தார்.

சட்டவிரோதமாக மது பாட்டில் விற்றவர் கைது

Posted: 18 Oct 2013 11:54 AM PDT

கண்டமனூர் அருகே சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக, ஒருவரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

திருமலை ஏழுமலையான் உண்டியல் வருமானம் ரூ. 2.56 கோடி

Posted: 18 Oct 2013 11:54 AM PDT

திருமலை ஏழுமலையானின் உண்டியல் வருமானம் வெள்ளிக்கிழமை ரூ.2.56 கோடியாக இருந்தது.

அக். 25 விவசாயிகள் குறைதீர் கூட்டம்

Posted: 18 Oct 2013 11:54 AM PDT

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 25 ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

குடியிருப்புக்குள் புகுந்த மலைப்பாம்பு: வனத் துறையினர் பிடித்தனர்

Posted: 18 Oct 2013 11:54 AM PDT

லோயர்கேம்ப் அருகே வெட்டுக்காடு பகுதியில் குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பை வனத்துறையினர் வெள்ளிக்கிழமை பிடித்து காட்டிற்குள் விட்டனர்.

தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டப் பணி: தள கண்காணிப்பாளர்களுக்கு பயிற்சி

Posted: 18 Oct 2013 11:53 AM PDT

மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்ட தள கண்காணிப்பாளர்களுக்கான பயிற்சி முகாம், ஆண்டிபட்டி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

போடி மலை கிராமத்தில் "அம்மா' திட்ட முகாம்

Posted: 18 Oct 2013 11:53 AM PDT

போடி கொட்டகுடி மலை கிராமத்தில் நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் மலைவாழ் மக்கள் பயனடைந்தனர்.

ஜெயலலிதா பொற்கால ஆட்சி நடத்துகிறார்: அமைச்சர்

Posted: 18 Oct 2013 11:53 AM PDT

ஜெயலலிதா பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார் என அமைச்சர் பி. செந்தூர் பாண்டியன் தெரிவித்தார்.  ராஜபாளையம் நகர அ.தி.மு.க. சார்பில் கட்சியின் 42ஆவது ஆண்டு துவக்க விழா

மின்சாரம் பாய்ந்து சுமை தூக்கும் தொழிலாளி சாவு

Posted: 18 Oct 2013 11:52 AM PDT

ராஜபாளையத்தில் வியாழக்கிழமை இரவு மின்சாரம் பாய்ந்து சுமை தூக்கும் தொழிலாளி உயிரிழந்தார்.    ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி மகன் பாண்டி (19). இவர்

இளைஞர் செஞ்சிலுவை சங்க முகாம் தொடக்கம்

Posted: 18 Oct 2013 11:52 AM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர்-பிள்ளையார்குளத்தில் உள்ள சத்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் மாவட்ட இளைஞர் செஞ்சிலுவை சங்க மூன்று நாள் முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.  முகாமை தாளாளர்

பத்ரகாளியம்மன் கோயில் வருஷாபிஷேகம்

Posted: 18 Oct 2013 11:52 AM PDT

  ராஜபாளையம் சின்னசுரைக்காய் பட்டி வணிக வைசியச் செட்டியார் வாணியர் கோமரத்தாருக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீபத்ரகாளியம்மன் திருக்கோவில் 7ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Posted: 18 Oct 2013 11:51 AM PDT

விருதுநகர் மாவட்டத்தில் போதிய மழையின்றி வறட்சியால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அக். 27இல் சிவகாசியில் மாரத்தான் போட்டி

Posted: 18 Oct 2013 11:51 AM PDT

சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி விளையாட்டுத்துறை சார்பில், அக்டோபர் 27ஆம் தேதி ஒப்பன் மினி மாரத்தான் ஓட்டப்போட்டி நடைபெற உள்ளதாக கல்லூரி தாளாளர் ஆர்.சோலை

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1 கோடியில் வளர்ச்சிப் பணிகள்

Posted: 18 Oct 2013 11:51 AM PDT

சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான வளர்ச்சிப்பணிகள் செய்வதற்கு ஒன்றியக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

Posted: 18 Oct 2013 11:50 AM PDT

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் தொடர்பாகவும், தேர்தல் விழிப்புணர்வு குறித்தும் மாணவர்கள் பேரணி, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, வினாடி- வினா போட்டி, ஓட்டப் பந்தயம் ஆகியன முத்துராமலிங்காபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

திருத்தங்கலில் எம்ஜிஆர், அண்ணாவுக்கு வெண்கலச் சிலை: நகர்மன்றக் கூட்டத்தில் முடிவு

Posted: 18 Oct 2013 11:50 AM PDT

திருத்தங்கல் நகராட்சிப் பகுதியில் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர். அண்ணா ஆகியோருக்கு வெண்கலச் சிலை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

4 அணைகளில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு: முதல்வர் உத்தரவு

Posted: 18 Oct 2013 11:50 AM PDT

தமிழகத்தில் 4 அணைகளில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 20) முதல் தண்ணீர் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

பண்ணைக்குட்டைகள் அமைப்பதில் குளறுபடி

Posted: 18 Oct 2013 11:50 AM PDT

பண்ணைக்குட்டைகள் அமைப்பதில் குளறுபடி இருப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, ஒவ்வொரு ஊராட்சி அலுவலக அறிவிப்பு பலகையிலும் பயனாளிகள் பட்டியலை ஒட்ட வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.

சிவாலயங்களில் அன்னாபிஷேகம்

Posted: 18 Oct 2013 11:49 AM PDT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை அன்னாபிஷேக விழா நடைபெற்றது.

கும்பலால் தாக்கப்பட்ட கட்டட காண்டிராக்டர் சாவு

Posted: 18 Oct 2013 11:49 AM PDT

சிவகங்கையில் கட்டட காண்டிராக்டர் கொலை செய்யப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.   சிவகங்கை நகர த.மு.மு.க. நிர்வாகியாக இருந்தவர் அப்துல் மாலிக் (42).   இவர் கட்டடங்கள் கட்டத் தேவையான பொருள்களை காண்டிராக்ட் அடிப்படையில் வாடகைக்கு விட்டு வந்தார்.

நாளை,  அக்.27இல் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்கள்

Posted: 18 Oct 2013 11:49 AM PDT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம் பேரூராட்சி பகுதிகளில் வரும் 20, 27 தேதிகளில் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

சிவகங்கை வட்ட அளவில் விரைவு பட்டா மாறுதல் சிறப்பு முகாம்

Posted: 18 Oct 2013 11:49 AM PDT

 பட்டா மாறுதல் மனுக்கள் குறித்து முடிவு செய்வதற்கு புதிய நடைமுறைகளை பின்பற்றுமாறு அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து வியாழக்கிழமை சிவகங்கையில் விரைவு பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கூட்டம்

Posted: 18 Oct 2013 11:48 AM PDT

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க காரைக்குடி நகர நிர்வாகிகள் அமைப்பின் பேரவைக் கூட்டம் நடைபெற்றது.

பேரூராட்சி சார்பில் டெங்கு தடுப்பு நடவடிக்கை

Posted: 18 Oct 2013 11:48 AM PDT

திருப்பத்தூர் பேரூராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் இருப்பதாக கூறப்படுவதை தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகம் வெள்ளிக்கிழமை முதல் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™