Tamil News | Online Tamil News |
- நெல்லை தி.மு.க., தொண்டர்கள் சென்னை அறிவாலயத்தில் ரகளை: உள்கட்சி தேர்தல் விவகாரம் தொடர்பாக கடும் மோதல்
- முதலீட்டு சூழல் பாதிக்கப்படும்: அமைச்சர் ஆனந்த் சர்மா கவலை
- பவுர்ணமியில் தெரு விளக்குகளை அணைக்கலாம்: மோடி அறிவுரை
- கேரளாவில் ரகசிய சந்திப்பு: தனிக்கட்சி ஆர்வத்தில் நடிகர் விஜய்!
- காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் யாரும் பங்கேற்க கூடாது: பிரதமருக்கு முதல்வர் கடிதம்
- ஓட்டளிக்காததற்காக அழுதார்: சோனியா பற்றி ராகுல் உருக்கம்
- நீரா ராடியா 'டேப்' வெளிப்படுத்தும் தகவல்களில் பெரும் முறைகேடு: சி.பி.ஐ., விசாரிக்க சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
- ஜனநாயகத்தை புதைத்தவர்களை தமிழக மக்கள் வேரோடு வீழ்த்துவர்: ஜெ.,க்கு கருணாநிதி பதிலடி
- இந்தியாவில் 1.4 கோடி அடிமைகள்: அதிர்ச்சி தகவல்
| Posted: நெல்லை மாவட்ட, தி.மு.க., உட்கட்சி தேர்தலில் முறைகேடு நடந்ததாக புகார் தெரிவிக்க, சென்னை அறிவாலயத்திற்கு நேற்று வந்த, முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பனின் ஆதரவாளர்கள் ரகளையில் ஈடுபட்டனர். இதனால், அறிவாலயத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.தி.மு.க., உட்கட்சி தேர்தல், மாவட்ட வாரியாக, தகராறு, அடிதடி சம்பவங்களுடன் நடைபெற்று வருகிறது. நெல்லை மாவட்டத்தில், கருப்பசாமி பாண்டியனின் ஆதரவாளர்களுக்கும், ஆவுடையப்பனின் ஆதர வாளர்களுக்கும் கடும் போட்டி உருவாகி உள்ளது. 'கீழப்பாவூர், கடைய நல்லூர், ராதாபுரம், களக்காடு, ஆலங்குளம், பாப்பாக்குடி, நாங்குநேரி ஆகிய ... |
| முதலீட்டு சூழல் பாதிக்கப்படும்: அமைச்சர் ஆனந்த் சர்மா கவலை Posted: "பிரதமர் மன்மோகன் சிங்கின் நேர்மை குறித்து, யாரும் சான்றிதழ் அளிக்கத் தேவையில்லை. அவர் எடுக்கும், எந்தவொரு முடிவையும், அனைவரும் மதிக்க வேண்டும். அவரவர் இஷ்டம் போல, குறை சொல்ல ஆரம்பித்திருப்பதன் மூலம், நாட்டின் முதலீட்டு சூழ்நிலை, வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது," என்று, அமைச்சர் ஆனந்த் சர்மா, கூறியுள்ளார்.வழக்கு பதிவு: நிலக்கரி ஊழல் குறித்து விசாரித்து வரும், சி.பி.ஐ., இரு தினங்களுக்கு முன், தொழிலதிபர் குமாரமங்கலம் பிர்லா மற்றும் நிலக்கரித் துறை முன்னாள் செயலர் பராக் ஆகியோர் மீது, வழக்கு பதிவு செய்துள்ளது. இந்நிலையில், மத்திய தொழில் ... |
| பவுர்ணமியில் தெரு விளக்குகளை அணைக்கலாம்: மோடி அறிவுரை Posted: காந்திநகர்: ''பவுர்ணமி நாளில், மின் விளக்கை அணைத்து விடுங்கள்; மாதத்திற்கு ஒரு நாளாவது, கார், இருசக்கர வாகனங்களைத் தவிர்த்து, சைக்கிளில் அலுவலகம் சென்று வர பழகுங்கள்,'' என, குஜராத் மக்களுக்கு, அம்மாநில முதல்வர், நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்சைக்கிள் பயணம் அவசியம்: தலைநகர் காந்திநகரில், 'ஒளிபொருந்திய குஜராத்' என்ற தலைப்பிலான, தேசிய மாநாட்டை துவக்கி வைத்த, அம்மாநில முதல்வரும், பா.ஜ., பிரதமர் வேட்பாளருமான, நரேந்திர மோடி பேசியதாவது: குறைந்தபட்சம், மாதத்தில் ஒரு நாளாவது, சைக்கிளில் அலுவலகம் சென்று வர பழகிக் கொள்ள வேண்டும். ... |
| கேரளாவில் ரகசிய சந்திப்பு: தனிக்கட்சி ஆர்வத்தில் நடிகர் விஜய்! Posted: நடிகர் விஜய், கொஞ்ச காலமாகவே அரசியலில் தீவிர ஆர்வம், காட்டி வருகிறார். கடந்த சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்பதற்காக, தனி மேடை போட்டு, அ.தி.மு.க.வை ஆதரித்து பிரசாரம் செய்தார். பின், அவருக்கும், ஆளும்கட்சி தலைமைக்கும், சில முரண்பாடுகள் ஏற்பட, அவருடைய தந்தையான இயக்குனர் சந்திரசேகரன் மூலம், மறைமுக அரசியலில் இறங்கினார். இதற்கிடையில், "தலைவா' படம் ரிலீசாக வேண்டிய தருணம் வந்தது. நடிகர் விஜயும், அவருடைய அப்பாவும், அரசியல் ரீதியாக செய்த மறைமுக கலாட்டாக்களால் கோபமடைந்திருந்த ஆட்சி தலைமை, படம் ரிலீசாவதற்கு, சில தடைகளை மறைமுகமாக ஏற்படுத்தியது. ... |
| காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் யாரும் பங்கேற்க கூடாது: பிரதமருக்கு முதல்வர் கடிதம் Posted: சென்னை: இலங்கையில், அடுத்த மாதம் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா பங்கேற்கக் கூடாது' என, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, முதல்வர் ஜெயலலிதா, கடிதம் எழுதி உள்ளார்.கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது: காமன்வெல்த் மாநாடு, இலங்கை தலைநகர் கொழும்பில், அடுத்த மாதம் நடைபெற உள்ளது. "இதில், இந்தியா பங்கேற்கக் கூடாது' என, கடந்த மார்ச், 25ம் தேதி, உங்களுக்கு கடிதம் எழுதி உள்ளேன். இலங்கை அரசு, அங்குள்ள தமிழர்களுக்கு எதிராக, சமுதாயக் கொலை மற்றும் போர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளது. மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன. சிறுபான்மையினராக உள்ள தமிழர்களுக்கு, ... |
| ஓட்டளிக்காததற்காக அழுதார்: சோனியா பற்றி ராகுல் உருக்கம் Posted: போபால்: ''உணவு பாதுகாப்பு மசோதாவுக்கு ஆதரவாக ஓட்டளிக்க முடியாததால், சோனியா கண் கலங்கினார்,'' என, காங்., துணைத் தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், ஏழைகளின் பசியை உணர்ந்ததால் தான், சோனியா, உணவு பாதுகாப்பு மசோதாவை, பல போராட்டங்களுக்குப் பின் நிறைவேற்றியுள்ளதாகவும் கூறியுள்ளார்.பிரசாரம்: மத்திய பிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, காங்., வேட்பாளர்களை ஆதரித்து, ஷாதூல் என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், காங்., துணைத் தலைவர், ராகுல் பேசியதாவது: மத்திய பிரதேசத்தில் ... |
| Posted: புதுடில்லி: அரசியல் தரகர், நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடலில், பல விவகாரங்கள் உள்ளன. '2ஜி' விவகாரம் மட்டுமின்றி, அரசியல், கம்பெனி விவகாரங்கள் உட்பட பல முறைகேடுகள் தொடர்பான அம்சங்கள் அடங்கியுள்ளதால், அது குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.'2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின் போது, பன்னாட்டு நிறுவனங்களுக்கும், தொலை தொடர்பு நிறுவனங்களுக்கும், இடைத்தரகராக செயல்பட்டவர் நீரா ராடியா. ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் வெளியாகி, அந்தப் பிரசனை வலுவடைந்ததும், நீரா ராடியாவின் பன்முகத் தொடர்பும், அதில் நடந்த விவாதங்களும், நாடு முழுவதும் ... |
| ஜனநாயகத்தை புதைத்தவர்களை தமிழக மக்கள் வேரோடு வீழ்த்துவர்: ஜெ.,க்கு கருணாநிதி பதிலடி Posted: சென்னை: ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைத்து, சர்வாதிகாரத்தை தர்பாரில் உட்கார வைத்திருப்பவர்களை, தமிழக மக்கள், வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்தியே தீருவர்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அ.தி.மு.க.,வின், 42வது ஆண்டு விழாவை முன்னிட்டு, முதல்வர் ஜெயலலிதா, நேற்று முன்தினம், தொண்டர்களுக்கு, கடிதம் ஒன்றை எழுதினார். அதில், தி.மு.க., தலைவர் கருணாநிதியை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். இதற்கு, பதிலடி கொடுக்கும் வகையில், நேற்று கருணாநிதி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கை: தேர்தல் வருகிறது என்றால், முதல்வருக்கு ... |
| இந்தியாவில் 1.4 கோடி அடிமைகள்: அதிர்ச்சி தகவல் Posted: லண்டன்: இந்தியாவில் 1.5 கோடி பேர் பல்வேறு விதங்களில் அடிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்' என, ஆஸ்திரேலிய தொண்டு நிறுவனம் ஒன்று தெரிவித்து உள்ளது."வாக் ப்ரீ' என்ற, அடிமைத்தன ஒழிப்பு தொண்டு நிறுவனம், "க்ளோபல் ஸ்லேவரி இண்டெக்ஸ் 2013' என, தலைப்பிட்ட, உலக அளவில் நிலவும் அடிமைத்தனம் குறித்த, அகவரிசை பட்டியல் மற்றும் ஆய்வு அறிக்கையை நேற்று வெளியிட்டது. அதில், கட்டாய வேலையில் ஈடுபடுத்தப்படுபவர்கள், பாலியல் தொழிலுக்காக கடத்தப்பட்டவர்கள், விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து வைக்கப்பட்டவர்கள், போர்களில் பங்கேற்க கடத்தப்பட்ட சிறுவர்கள் ஆகியோர், அடிமைகளாக ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |அக்டோபர் 18,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |