ஈகரை தமிழ் களஞ்சியம் |
- இந்திய அணி ஜெய்ப்பூரில் வெற்றி,,,,
- வதனப் புத்தகத்தின் மூலம் ஒரு வரலாற்றுச் சாதனை!
- பிடதி ஆசிரமத்தில் கர்நாடக அதிகாரிகள் அதிரடி ரெய்டு.. நித்தியானந்தா சாபம்!
- மனிதரைக் கொட்டியவுடன் தேனீ ஏன் இறந்து போகிறது?
- அதிகம் பார்வையிடும் திரிகள்
- முகநூலில் ரசித்தவை-2
- யானை தவிர வேறு சில விலங்குகளுக்கும் தந்தங்கள் உண்டு!
- சமூக சேவகி சரோஜினி வரதப்பன் இன்று சென்னையில் மரணம்
- ந.க.துறைவன் ஹைக்கூ
- அதே பிச்சைக்காரி குழந்தையாய் நான்! (உண்டியலில் பணம் போடுவோர் தவறாமல் படிக்க)
- IDM - உதவி தேவை
- " முதுகெலும்பிலிகள் "
- கன்னி மாடம் - சாண்டில்யன் - மின்நூல்
- தாயின் குரல்
- தப்பைச் சொல்லிக் கொடுத்த நண்பா நீயாவது நலமா?
- சென்னையின் டேஸ்ட்டான உணவகங்கள்
- வலை மூலம் பெறும் பெரும் நன்மைகள்
- படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -65)
- Samsung Galaxy Golden (SHV-E400) - இரண்டு திரைகளுடன் சாம்சங் கைப்பேசி அறிமுகம்!
- ஆடுகளம்: உறவை மேம்படுத்தும் தாயம்!
- விக்கல் ஏன் வருகிறது?
- நம்பிக்கை மாற்றாதே !
- எளிய வழியில் தமிழில் டைப் செய்வது எப்படி?
- சிறு வயதில் காணாமல் போய் 25 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த கமாண்டோ படைவீரர்
- கூகுள் எர்த்' இணையதளம் உதவியால் 26 ஆண்டுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தவர்
- காதல் நோய் ...
- குற்றச் செயல்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களின் பட்டியல் வெளியீடு
| இந்திய அணி ஜெய்ப்பூரில் வெற்றி,,,, Posted: 17 Oct 2013 11:49 AM PDT ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூர் ஒருநாள் போட்டியில் எட்ட முடியாத இலக்கை எட்டிக் காட்டிய இளம் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. விராத் கோஹ்லி அதிகவேக சதம் அடித்து சாதித்தார். ரோகித் சர்மாவின் சதம், தவானின் அதிரடி துவக்கம் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. புனேயில் நடந்த முதல் போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ... |
| வதனப் புத்தகத்தின் மூலம் ஒரு வரலாற்றுச் சாதனை! Posted: 17 Oct 2013 09:55 AM PDT வதனப் புத்தகம் (ஃபேஸ் புக்) இன்றைய இளைஞர்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்துவிட்ட சமாச்சாரம். நல்லது, கெட்டது, துக்கம், மகிழ்ச்சி, அனைத்தையும் வதனப் புத்தகத்தில் விவாதிக்கிறார்கள். இதைக் கொண்டு உலகத்தையே உள்ளங்கைக்குள் கொண்டு வரத் துடிக்கிறது பதின்பருவம். ஆனால், வதனப் புத்தகம் மூலம் இதையும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறது ஒரு குழு. அப்படி இவர்கள் செய்த சாதனைதான் என்ன? திண்டிவனம் - மரக்காணம் சாலையில் உள்ள பெருமுக்கல் முக்தியாஜலஈஸ்வரர் கோயிலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ... |
| பிடதி ஆசிரமத்தில் கர்நாடக அதிகாரிகள் அதிரடி ரெய்டு.. நித்தியானந்தா சாபம்! Posted: 17 Oct 2013 09:51 AM PDT கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் செயல்பட்டு வரும் நித்தியானந்தா குருகுல் எனப்படும் மையத்தில் கர்நாடக அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தியுள்ளனர். இந்த ரெய்டின்போது மீடியாக்களைச் சேர்ந்தவர்களுக்கும், நித்தியானந்தா ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் மூண்டதாகவும், அதில் நித்தியானந்தா ஆட்கள், பத்திரிக்கையாளர்களைத் தாக்கியதாகவும் புகார் எழுந்துள்ளது. மேலும் அதிகாரிகளுடனும், நித்தியானந்தா ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டதாகவும் புகார் கிளம்பியுள்ளது. இதுகுறித்து கர்நாடக பெண்கள் மற்றும் ... |
| மனிதரைக் கொட்டியவுடன் தேனீ ஏன் இறந்து போகிறது? Posted: 17 Oct 2013 09:31 AM PDT தேனீக்கள் கூர்முனையுடன் கூடிய கொடுக்குகளைக் கொண்டுள்ளன. இவற்றின் மூலம் தங்களுக்குத் தொந்தரவாக இருக்கும் மற்ற தேனீக்களையும் பூச்சிகளையும் கொட்ட முடியும். அதேநேரம், தன் கொடுக்குகள் மூலம் ஒரு பாலூட்டியைத் தேனீ கொட்டும்போது, பாலூட்டிகளுக்கு உள்ள கடினமான தோல் காரணமாக, தேனீயின் கொடுக்குகள் தோலில் மாட்டிக்கொள்கின்றன. அதிலிருந்து விடுபடுவதற்குத் தேனீ முயற்சிக்கும்போது, அதன் அடிவயிற்றின் ஒரு பகுதி பிய்ந்து விடுகிறது. இதனால் அடுத்த சில நிமிடங்களில், அது இறந்துபோகிறது. இப்படி இறப்பவை வேலைக்கார தேனீக்கள்தான், ... |
| Posted: 17 Oct 2013 09:13 AM PDT தினமும் அதிகம் பார்வையிடும் திரிகள் * ஈகரை வருகை பதிவேடு * படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4 * தொடத் தொடத் தொல்காப்பியம் (1) * நெகிழ வைத்த நிஜங்கள் * ஈகரை முகநூல் பக்க காணொளிகள்! * முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது * பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - அரசியல் ஸ்டேட்மென்டு * நான் சென்று வருகிறேன் உறவுகளே - மீண்டும் சந்திப்போம். * ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்? * நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்?? * ... |
| Posted: 17 Oct 2013 08:52 AM PDT சரியாக தமிழ் உச்சரிப்பது பற்றிய படம் .. |
| யானை தவிர வேறு சில விலங்குகளுக்கும் தந்தங்கள் உண்டு! Posted: 17 Oct 2013 08:43 AM PDT ஒன்றல்ல பல யானைக்கு மட்டும்தான் தந்தங்கள் உண்டு என பெரும்பாலானோர் நினைத்திருக்கலாம். ஆனால் யானை தவிர வேறு சில விலங்குகளும் தந்தத்துடன் உள்ளன. உதாரணத்துக்குச் சில விலங்குகளைப் பார்க்கலாமா? மரு ஆப்பிரிகாவைச் சேர்ந்த மரு என்றழைக்கப்படும் காட்டுப் பன்றியினத்தைச் சேர்ந்த விலங்கிற்கு இரண்டு ஜோடி தந்தங்கள் உண்டு. பார்க்க பயங்கரமாகத் தோன்றினாலும், குணத்தில் மிகவும் சாதுவானவை இவை. புற்களையும் கிழங்குகளையும் மட்டுமே உண்டு வாழும். காட்டுப்பன்றி ஆசியா முழுவதும் காணப்படும் காட்டுப்பன்றிக்கும் ... |
| சமூக சேவகி சரோஜினி வரதப்பன் இன்று சென்னையில் மரணம் Posted: 17 Oct 2013 08:40 AM PDT சமூக சேவகி சரோஜினி (வயது 92) வரதப்பன் சென்னை மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா அருகில் உள்ள பக்தவச்சலம் சாலையில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். சரோஜினி வரதப்பனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு கடந்த 10 நாட்களாக மீனாட்சி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. இதையடுத்து அவரது உடல் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்paட்டு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. சரோஜினி வரதப்பன் மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜனின் பெரியம்மா ஆவார். டெல்லியில் இருந்த ஜெயந்தி நடராஜனுக்கு ... |
| Posted: 17 Oct 2013 08:38 AM PDT விலகு நந்தியே, உள்ளே செல்லவேண்டும் நந்தனாரின் வாரிசுகள். |
| அதே பிச்சைக்காரி குழந்தையாய் நான்! (உண்டியலில் பணம் போடுவோர் தவறாமல் படிக்க) Posted: 17 Oct 2013 08:30 AM PDT கோயில் முன் பூமாலை வாங்க நின்றேன்- குழந்தையோடு பிச்சைக்காரி சாப்பாட்டுக்கு எதாவது குடு 'சாமி' பர்சை துலாவினேன் 1,2,5 சில்லறைகள்கள் இல்லை பத்து ரூபாய் நோட்டு தென்பட 'சில்லறை இல்ல போமா' என்றேன். "அப்பா பத்து ரூபாயைக் கொடுத்துடுப்பா குழந்தைய பாக்கப் பாவமா இருக்கு" என்றான் மகன். கை, கால் நல்லாதானே இருக்கு போ… மா… தரிசனம் முடித்து- 100 ஐ மகனிடம் கொடுத்து உண்டியலில் போடு என்றேன். "ஏம்பா… சாமிக்கு கை, கால் நல்லா தானே இருந்திச்சி ஒடைஞ்சி போயில்லையே?" என்றான். டே… சாமி கண்ண ... |
| Posted: 17 Oct 2013 08:15 AM PDT மாலை வணக்கம் நண்பர்களே நான் இன்டர்நெட் டவுன்லோடு மேனேஜர் பயன்படுத்துகிறேன். படங்கள் டவுன்லோடு ஆகிக் கொண்டிருக்கும்போது மின்தடை ஏற்பட்டு ரீஸ்டார்ட் ஆனபிறகு பாதிவரை டவுன்லோடு ஆகி இருந்த படங்கள் அந்த லிஸ்டிலேயே இல்லை.திரும்ப புதிதாக டவுன்லோடு செய்ய வேண்டியிருக்கிறது, என்ன காரணம் என தெரிந்தவர்கள் சொல்லுங்கள் நண்பர்களே. நன்றி |
| Posted: 17 Oct 2013 07:41 AM PDT பிறர் மெய் தேடி தன் பொய் மூடி குட்டு வெளிப்பட நேர்கையில் மாற்றோனை பழிசூடி சால்ஜாப்பு சாடி முடிவில்லை எனில் தானே சரணடையும் ஆறறிவு எட்டி ஐந்தறிவு ஜீவனாய் மறைக்க முயலும் முதுகெலும்பிலிகள் "நாங்கள்" வாழ்கிறோம் "மனிதர்கள்" எனும் பெயர் சூடி ...! (தயவு செய்து எவர் மனதையும் புண்படுத்த இதனை எழுதவில்லை நிஜத்தைக் குறிப்பிட்டுள்ளேன் அவ்வளவே! இதனை ஆமோதிப்பவர்கள் இருந்தால் மகிழ்ச்சியே! மீறி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன் ! இதில் என்னையும் சாடியுள்ளேன் ... |
| கன்னி மாடம் - சாண்டில்யன் - மின்நூல் Posted: 17 Oct 2013 07:36 AM PDT வாசக நண்பர்களே! சாண்டில்யனின் மிகத்தெளிவான மின்நூல் வரிசையில் இந்தப் பதிவில் இடம்பெறுவது கன்னிமாடம் ஆகும். தெளிவான மின்நூல் வரிசையில் இதற்கு முன்பு வெளியிட்ட நாவல்கள் பின்வருமாறு: 01. யவனராணி http://thamizhthenee.blogspot.com/2012/06/blog-post_14.html 02. மன்னன் மகள் http://thamizhthenee.blogspot.com/2012/06/blog-post_15.html 03. மூங்கில் கோட்டை http://thamizhthenee.blogspot.com/2012/06/moongil-kottai-history-novels-sandilyan.html 04. ஜல மோகினி http://thamizhthenee.blogspot.com/2012/07/jalamokini-sandilyan-ebook.html ஈழ ... |
| Posted: 17 Oct 2013 07:29 AM PDT காமராஜர் முதல்வராக இருந்த சமயம் அவரது அன்னை சிவகாமி அம்மையாரை ஆனந்த விகடனுக்காக எழுத்தாளர் சாவி பேட்டி கண்டிருந்தார். (2.7.1961) இணையத்தில் மறுபிரசுரம் கண்ட அந்த இணைப்பை ஒரு நண்பர் எனக்கு அனுப்பியிருந்தார், அதன் மீள்பதிவு இது ••• விருதுநகர் தெப்பக் குளம். குளத்தைச் சுற்றிலும் கடை வீதிகள். அந்த வீதிகளில் ஒன்றுக்குள்ளே பிரிந்து செல்லும் சந்துக்குள் புகுந்து சென்றால், அங்கிருந்து வேறொரு சந்து திரும்புகிறது. அப்புறம் இன்னொரு சந்து. அதற்கப்புறம் மற்றொரு சந்து. அந்த சந்துக்குள்ளேதான் சுலோசன ... |
| தப்பைச் சொல்லிக் கொடுத்த நண்பா நீயாவது நலமா? Posted: 17 Oct 2013 06:49 AM PDT என்ன தான் இருக்கிறது கொஞ்சம் கொடு நண்பா புகைத்துப் பார்க்கிறேன்! என்னடா உளறுகிறாய் அப்படி என்ன போதை இருக்கு கொஞ்சம் ஊத்து பாக்கலாம்! அட… இந்த உலகம் நல்லாதானே இருக்கு! கொஞ்சமாய் தவறு செய்தால்தான் என்ன? என்னடி தப்பு? படிக்கும் பொண்ணுன்னா… தப்பு செய்யக்கூடாதா! ஆண் என்ன? பெண் என்ன? என் குழந்தை என் குடும்பம் என் வாழ்க்கை என்ன மகிழ்ச்சிதான் இல்லை! தவற்றை எல்லாம் கற்றுக் கொடுத்த நண்பா நீ எப்படி இருக்கிறாய்? |
| சென்னையின் டேஸ்ட்டான உணவகங்கள் Posted: 17 Oct 2013 06:21 AM PDT உலகின் பல மூலைகளிலிருந்தும் நாள்தோறும் சென்னையை தேடி பறவைகள் புலம்பெயர்ந்து வருவது போல் பல்லாயிரக்கணக்கான பேர் வந்து கொண்டிருக்கின்றனர். அப்படி வரும் கூட்டத்தில் பாதிபேர் மெரினா பீச்சுக்கும், மீதிபேர் கபாலீசுவரர் கோயில், பார்த்தசாரதி கோயில், வடபழனி முருகன் கோயில், ஷாப்பிங் மால்கள், வண்டலூர் பூங்கா என்று தங்களுக்கு பிடித்தமான இடங்களுக்கும் செல்கிறார்கள். எல்லாவற்றையும் சுற்றிப் பார்த்த பிறகு வாய்க்கு ருசியாய் சாப்பிட வேண்டும் என்றால் ஏகப்பட்ட ஹோட்டல்களும், ரெஸ்டாரன்ட்டுகளும் சென்னையில் உள்ளன. ... |
| வலை மூலம் பெறும் பெரும் நன்மைகள் Posted: 17 Oct 2013 06:13 AM PDT வலை மூலம் பெறும் பெரும் நன்மைகள் தொழில்நுட்ப வளர்ச்சி நம் அன்றாட வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டு வந்துவிட்டது. இன்று இன்டர்நெட் மூலம் நாம் பல விடயங்களை தெரிந்து கொள்கிறோம். கல்லூரிக்கு போகாமல் ஒன்லைனிலே படித்து பட்டதாரி ஆகும் கலாச்சாரமும் அதிகரித்துவிட்டது. ஒன்லைன் மூலம் பல தரப்பட்ட விடயங்களை நாம் கற்றுக்கொள்ள முடிகிறது. பல விடயங்களை நாம் கற்றுக்கொள்வதற்க்கு இதில் பணம் செலவு செய்ய வேண்டி இருக்கும். ஒரு சில விடயங்களை நீங்கள் ஒன்லைனில் இலவசமாகவும் கற்றுக்கொள்ளலாம் அவைகள் பெரும்பாலோனோருக்கு ... |
| படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -65) Posted: 17 Oct 2013 05:41 AM PDT வணக்கம் ஈகரை உறவுகளே .. இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 3 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -3 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள். மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் . இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை குறிப்பு : நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட ... |
| Samsung Galaxy Golden (SHV-E400) - இரண்டு திரைகளுடன் சாம்சங் கைப்பேசி அறிமுகம்! Posted: 17 Oct 2013 05:19 AM PDT சென்ற வாரம், சாம்சங் நிறுவனம், தன் மொபைல் போன் வடிவமைப்பில் புதுமை ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. சாம்சங் காலக்ஸி கோல்டன் (SHV-E400) எனப் பெயரிடப்பட்ட பிளிப் வகை மொபைல் போனில் இரண்டு திரைகளைத் தந்துள்ளது. இதன் மேலாக ஒரு திரையும், மேல் மூடியைத் திறந்தால், உள்ளாக ஒரு திரையும் தரப்பட்டுள்ளன. இரண்டும் 3.7 அங்குல அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டிலும் சூப்பர் AMOLED டிஸ்பிளே கிடைக்கிறது. எனவே, போனை மூடிவிட்டாலும், மேல்புறமாக உள்ள திரையைப் பயன்படுத்தலாம். உள்புறமாக உள்ள, திரை கீ போர்டுடன் இயங்குகிறது. ... |
| ஆடுகளம்: உறவை மேம்படுத்தும் தாயம்! Posted: 17 Oct 2013 04:56 AM PDT கியூப் டைஸ் என அழைக்கப்படும் ஆறு சதுர முக பக்கங்கள் கொண்ட தாய விளையாட்டுக்கும் நம் இந்திய தாய விளையாட்டுக்கும் வித்தியாசம் உண்டு. நம் தாயக்கட்டைகள் நான்கு முகங்கள் உடையது. மரம் மற்றும் உலோகங்களில் ஆன விளையாட்டு பொருள். அந்தக் காலத்தில் அமைக்கப்பட்ட விளையாட்டுகள் அனைத்துமே ஓரளவுக்கு எளிதாக அனைத்து இடத்திலும் விளையாடும் வண்ணம் இருந்தன. உள்ளரங்கு விளையாட்டுகள் எனப்படும் இண்டோர் கேம்ஸ்க்கும் அதிகம் செலவழிக்க தேவை இருந்ததில்லை. மனிதர்களுக்கு மதிப்பு இருந்த காலம். விளையாட மனிதர்கள் இருந்தால் ... |
| Posted: 17 Oct 2013 04:39 AM PDT திடீரென விக்கல் வருகிறது. தண்ணீர் குடித்ததும் காணாமல் போகிறது. அது எப்படி என்று யோசித்திருக்கிறீர்களா? "இந்த விக்கல், தும்மல், கொட்டாவி, பசி, பட்டினி, தூக்கம்... இதெல்லாம் எப்போ வரும்னு தெரியாது. வந்தாலும் ஏன்னு கேட்க முடியாது" என்று முத்து படத்தில் ரஜினி வசனம் பேசியது போல, விக்கல் எப்போது வரும் என்று யூகிக்க முடியாது. நம் உடலில் வயிற்றையும், மார்பையும் இணைக்கும் பகுதிக்கு உதரவிதானம் என்று பெயர். இந்தப் பகுதியில் 'ப்ரெனிக் நெர்வ்ஸ்' (Phernic nerves) என்ற நரம்புகள் உள்ளன. இதேபோல 'டயாஃப்ரம்' ... |
| Posted: 17 Oct 2013 04:12 AM PDT ஏற்றங்கள் மாறும் வண்ணங்கள் மாறும் வார்த்தைகள் மாறும் இன்பங்கள் மாறும் துயரங்கள் மாறும் கனவுகள் மாறும் காட்சிகள் மாறும் காலங்கள் மாறும் - கொண்ட கோலங்கள் மாறும் ஆனால் மனிதா - உன் நம்பிக்கை மாற்றாதே - அது வாழ்வில் தோல்வியை ஏற்றாதே தோற்றாலும் மனம் தளராதே தொடரும் முயற்சியை நீ விட்டு விடாதே...! சில மணித்துளி வாழும் பூக்களைப் பார் மண்ணில் வீழும் வரை மணக்க மறப்பதில்லை ஓரிரு நாட்களே எறும்பின் வாழ்க்கை அதன் ஓயாத உழைப்பே கூறும் அதன் சிறப்பை வண்ணங்கள் ஜொலிக்கும் வானவில் விண்ணில் ... |
| எளிய வழியில் தமிழில் டைப் செய்வது எப்படி? Posted: 17 Oct 2013 03:16 AM PDT நம்மில் பலருக்கு தமிழில் மிக எளிய வழியில் டைப் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் ஆனால் இதற்காக தமிழ் டைபிங் கற்றுக்கொள்ள தேவையில்லை. இணையத்தில் எங்கிருந்தாலும் தமிழ் மொழியில் தட்டச்சு செய்வதை Google Input Tool எளிதாக்குகிறது. Google Input Tool download link http://www.google.co.in/inputtools/windows/ Google Input Tool ய் பயன்படுத்தும் விதம் பற்றிய பயனுள்ள காணொளி தமிழில். - முகநூல் |
| சிறு வயதில் காணாமல் போய் 25 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்துடன் இணைந்த கமாண்டோ படைவீரர் Posted: 17 Oct 2013 01:51 AM PDT சிறுவயதில் காணாமல் போய் கமாண்டோ படை வீரர் ஆனவர், 25 ஆண்டுகளுக்கு பிறகு தன்னுடைய குடும்பத்துடன் இணைந்தார். கமாண்டோ படை வீரர் மராட்டிய மாநிலம் தானே நகர போலீஸ் கமாண்டோ படை பிரிவில் பணியாற்றி வருபவர் கணேஷ் ரகுநாத் தாங்குடே(வயது 31). விளையாட்டில் அதிக ஆர்வம் உள்ள இவர் முதலில் தானே நகர போலீஸ் படை பிரிவில் கான்ஸ்டபிளாக பணிக்கு சேர்ந்து படிப்படியாக விளையாட்டு திறமையால் கமாண்டோ படைக்கு முன்னேறினார். கமாண்டோ படை வீரர்கள் தனித்தனி குழுக்களாக பிரிந்து பணியாற்றுவது வழக்கம். ஒரு குழுவிற்கு அதிகாரி ... |
| கூகுள் எர்த்' இணையதளம் உதவியால் 26 ஆண்டுக்கு பின் குடும்பத்துடன் இணைந்தவர் Posted: 17 Oct 2013 01:23 AM PDT கோல்கட்டா : ரயில் பயணத்தின் போது, தன் சகோதரனை பிரிந்த, ஐந்து வயது சிறுவன், 26 ஆண்டுகளுக்குப் பின், 'கூகுள் எர்த்' இணையதளம் உதவியுடன் தன் வீட்டை அடைந்தார். இதனால், தொலைந்த சிறுவனின் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ரயிலில் பயணம்: மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர், சரோ முன்ஷி கான், 26 ஆண்டுகளுக்கு முன், தன், 14 வயது சகோதரனுடன் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். ரயில் பயணத்தில் தன் அண்ணனை தொலைத்த சரோ முன்ஷி கான், செல்லும் இடம் தெரியாமல், ஊர்ஊராக அலைந்துள்ளார். வீதிகளில் திரிந்த சரோ, ... |
| Posted: 17 Oct 2013 01:20 AM PDT 1.உன்னால் எனக்குள் காதல் நோய் புரியாமல் அறுவை சிகிச்சை செய்கிறது உன் கண்கள் ! 2.கருந்திராட்சை உண்டது உன் விழிகள் போதை காட்சிகள் என் கண்களுக்கா ...? 3.விதையாத வித்துக்களாய் உன் கருவறை சேராது வீணாகிப் போகின்றன என் உயிர்த்துளி ! 4.உன் உடலில் என் உயிர் எழுதிய உயிலுக்கு சாட்சியாய் உன் கருவறைக்குள் நம் வளர்பிறை ! 5.கடும் புயலிலும் கொட்டும் மழையினிலும் என்றும் அணையா தீபமாய் உன்னுள் என் ஜீவசமாதி ! 6.சாத்தி வைத்த ... |
| குற்றச் செயல்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களின் பட்டியல் வெளியீடு Posted: 17 Oct 2013 01:07 AM PDT நாட்டிலேயே எழுத்தறிவில் முதலிடத்தில் இருக்கும் கேரள மாநிலம், குற்றச் செயல்களிலும் முதலிடம் பெற்றிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தேசிய குற்றப் பதிவுத் துறை 2013ஆம் ஆண்டிற்கான குற்றச் செயல்கள் குறித்து வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தண்டனை சட்டப்படி கேரள மாநிலத்தில் லட்சம் பேருக்கு 456 பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள் என்று அந்த தகவல் கூறுகிறது. கேரளாவிற்கு அடுத்தப்படியாக மத்திய பிரதேசம் 2வது இடத்திலும், தமிழ்நாடு 3வது இடத்திலும் உள்ளது. ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |