Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


இந்தியர் முடக்கிய கறுப்பு பணம் தகவல் தர சுவிஸ் வங்கி சம்மதம்

Posted:

ஜெனீவா : சுவிஸ் வங்கிகளில் முடக்கப்படும் கறுப்பு பணம் தொடர்பான தகவல்களை, பகிர்ந்து கொள்ள, சுவிட்சர்லாந்து நாடு முன்வந்துள்ளது. இது தொடர்பான, தகவல் பகிர்வு ஒப்பந்தத்தில், கையெழுத்திட்டுள்ளதின் மூலம் இந்தியாவில் பரபரப்பாக பேசப்படும் முக்கிய விஷயத்திற்கு, இனி, தீர்வு கிடைக்கும். வெளிநாடுகளில், இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணம் பல லட்சம் கோடிகள் என்று தொடர்ந்து கூறப்பட்டது. பல்வேறு நாடுகளில், கறுப்பு பணக்தை முடக்க வசதியிருந்த போதும், சுவிஸ் வங்கிகளில் உள்ள ரகசியக் கணக்கு முறையில சேமிப்பது மிகவும் பாதுகாப்பானதாகும். கடந்த ...

கம்யூனிஸ்ட் கட்சிகளின் மூன்றாவது அணி திட்டம்: ஜெயலலிதா தலைமை ஏற்பாரா?

Posted:

தேசிய அளவில், மூன்றாவது அணி அமைக்கும் திட்டத்துக்கு வித்திடும் நிகழ்ச்சியாக, இம்மாதம், 30ம் தேதி, டில்லியில், மதச்சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து, ஒரு கூட்டத்தை கம்யூனிஸ்ட் கட்சிகள் நடத்துகின்றன. அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி, ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. டில்லி கூட்டத்தில் கலந்து கொண்டு, மூன்றாவது அணிக்கு, ஜெயலலிதா தலைமை ஏற்பாரா என்ற எதிர்பார்ப்பு, அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.மத்திய அரசு கடைபிடித்து வரும் புதிய பொருளாதார கொள்கைக்கு, மாற்று கொள்கையை முன்னிறுத்தி, கடந்த ஜூலை, 1ம் தேதி, டில்லியில் பேரணியை, இடதுசாரி ...

சொத்து குவிப்பு வழக்கு: கருணாநிதி புது கேள்வி

Posted:

சென்னை : 'முதல்வர் ஜெயலலிதாவின் கீழ் பணியாற்றும் அதிகாரி சம்பந்தம் தான், சிறப்பு கோர்ட்டில் குற்றம் சாட்டப்பட்ட முதல்வருக்கு ஆதரவாக சாட்சியம் அளித்த அதிசயம் நடந்துள்ளது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை: பெங்களூரு கோர்ட்டில் நடக்கும், சொத்துக் குவிப்பு வழக்கை தொடுத்து நடத்துவது தமிழக அரசின் விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புத் துறை.அத்துறையை சார்ந்த துணை கண்காணிப்பாளரான சம்பந்தம் புலன் விசாரணை பொறுப்பு அதிகாரியென்றும், அவ்வழக்கில் மேலும் கூடுதலான விசாரணையைத் தான் மேற்கொள்ள வேண்டும் என்ற மனுவை பெங்களூரு சிறப்பு ...

ஏற்காடு இடைத் தேர்தலில் தி.மு.க., களம் இறங்க என்ன காரணம்?

Posted:

தொண்டர்களை இழப்பதோடு, தேர்தல் வேலை செய்ய ஆளில்லாமல் போய் விடும்' என, பொருளார் ஸ்டாலின் விடுத்த எச்சரிக்கையால், ஏற்காடு இடைத் தேர்தலில் களம் இறங்க தி.மு.க., தலைவர் கருணாநிதி முழு மனதில்லாமல் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.ஏற்காடு இடைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட மறுநாளே, போட்டியிட விரும்புவோரிடம் மனுக்களைப் பெற்று, நேர்காணலை நடத்தி, வேட்பாளரையும் தி.மு.க., அறிவித்து விட்டது. இவற்றுக்கெல்லாம் ஸ்டாலினே முழுக்கக் காரணம் என, கூறப்படுகிறது.பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த பின், தொடர்ந்து நடந்த உள்ளாட்சி தேர்தல், கூட்டுறவு தேர்தல், சட்டசபை இடைத் ...

ஏற்காட்டில் காங்கிரசும் தனித்து களம் இறங்க முடிவு? லோக்சபா தேர்தலுக்கு முன் பலத்தை சோதிக்க திட்டம்

Posted:

ஏற்காடு இடைத்தேர்தலில், தனித்துப் போட்டியிட வேண்டும் என்று, இளைஞர் காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்படும் கருத்து, தமிழக காங்கிரஸ் வட்டாரத்தில் வலுப்பெற்று வருகிறது. கட்சியை வளர்க்க, லோக்சபா தேர்தலுக்கு முன் காங்கிரசுக்கு இருக்கும் செல்வாக்கை கண்டறிய அது வாய்ப்பாக அமையும் என்பதால், தி.மு.க.,வை ஆதரிக்கும் முடிவை எடுக்கக் கூடாது என்று, அவர்கள் எதிர்ப்புக் கொடி தூக்கி உள்ளனர்.ஏற்காடு இடைத்தேர்தலை சந்திக்க, முதல் கட்சியாக, தி.மு.க., களம் இறங்கி உள்ளது. பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்டுள்ள இந்த தொகுதியில், தி.மு.க., வேட்பாளராக, மாறன் என்ற புதுமுகம் ...

சென்னையில் லாட்டரி சீட்டு விற்பனை: பணத்தை இழக்கும் தொழிலாளர்கள்

Posted:

வில்லிவாக்கம் பகுதியில், சட்டத்திற்கு, 'டிமிக்கி' கொடுக்கும் வகையில், லாட்டரி சீட்டை கண்ணில் காண்பிக்காமலேயே விற்பனை செய்யும் நூதன நடைமுறையை, சிலர், அமோகமாக செயல்படுத்தி வருகின்றனர்.வில்லிவாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், இருசக்கர வாகனம், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களை பழுது பார்க்கும் தொழிலாளிகள், ரயில்வே துறை ஊழியர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், லாரி தொழிலாளிகள் மற்றும் பாரம் சுமக்கும் தினக்கூலி தொழிலாளிகள் என, ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.அவர்களை குறிவைத்து, தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடந்து வருவது குறித்து, கடந்த, 3ம் ...

டாஸ்மாக் கடைகளில் 3 நாட்களில் ரூ.270 கோடிக்கு 'சரக்கு' விற்பனை

Posted:

ஆயுத பூஜை உள்ளிட்ட தொடர் விடுமுறைகளால், டாஸ்மாக் கடைகளில், 270 கோடி ரூபாய்க்கு, மது வகைகள் விற்பனையாகி உள்ளன.தமிழகத்தில், 6,800க்கும் மேற்பட்ட, டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில், அரசு நிர்ணயம் செய்துள்ள விலையில், உள்நாட்டில் தயாரிக்கப்படும் அயல்நாட்டு மது வகைகள் (ஐ.எம்.எப்.,) மற்றும் பீர் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகின்றன.டாஸ்மாக் கடைகளில், நாள்தோறும், சராசரியாக, 67 கோடி ரூபாய் மதிப்பிற்கும், வார இறுதி நாட்களான, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில், 70-75 கோடி ரூபாய் மதிப்பிற்கும், மது வகைகள் விற்பனையாகின்றன. பொதுவாக, ஆங்கில புத்தாண்டு, பொங்கல், ஆயுதபூஜை, ...

'ஓட்டுகளை பெறவே மத பீதியை கிளப்புகிறது காங்.,': முஸ்லிம் தலைவர் புகார்

Posted:

ஜெய்ப்பூர் : 'மதச்சார்பின்மை பற்றி பேசும் காங்கிரஸ், மத நல்லிணக்கத்திற்காக இதுவரை எதுவும் செய்யவில்லை; முஸ்லிம்களின் ஓட்டு களைப் பெறுவதற்காகவே, மதச்சார்பற்ற தன்மை பற்றி அந்தக் கட்சி பேசி வருகிறது' என, 'ஜமாத் - இ - உலேமா - இ - ஹிந்த்' என்ற, முஸ்லிம் அமைப்பின் தலைவர், முகமது மதானி கூறியுள்ளார். இதை, பா.ஜ., மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் வரவேற்று உள்ளன.ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில், முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கோரி நடைபெற்ற கூட்டத்தில் பேசிய, முஸ்லிம் அமைப்பான, ஜமாத் - இ - உலேமா - இ - ஹிந்த் அமைப்பின் தலைவரும், முன்னாள் ராஜ்யசபா, எம்.பி.யுமான, முகமது ...

சொத்து கணக்கை காண்பிப்பதில் மத்திய அமைச்சர்கள் அலட்சியம்

Posted:

புதுடில்லி : மத்திய அமைச்சர்களில், குலாம் நபி ஆசாத், கபில் சிபல், அஜித் சிங் உள்ளிட்ட 35 பேர், தங்களின், ஆண்டு சொத்து கணக்கு விவரங்களை, பிரதமரிடம் தாக்கல் செய்யாமல், இழுத்தடித்து வருகின்றனர். காலக்கெடு முடிந்து, ஒரு மாதத்துக்கு மேல் ஆகியும், இவர்கள், அதை அலட்சியப்படுத்துவதாக, அதிருப்தி எழுந்து உள்ளது.ஆண்டுதோறும் அவசியம்: மத்திய மற்றும் மாநில அரசுகளின் அமைச்சர்களுக்கான நடத்தை விதிமுறைகள், அரசால் உருவாக்கப்பட்டு உள்ளன. இதன்படி, மத்திய அமைச்சர்கள், ஒவ்வொரு ஆண்டும், தங்கள் மற்றும் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் சொத்து மதிப்பு, கடன், தொழில் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™