Tamil News | Online Tamil News |
- "பைலின்' புயலால் ஒடிசாவில் பயிர்கள் சேத மதிப்பு ரூ.2,400 கோடி: ஆந்திராவின் கடலோர பகுதிகளிலும் பலத்த பாதிப்பு
- குற்றவாளி தண்டனை விஷயத்தில் கருணை: கோர்ட்டுகளுக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
- சொந்தப் பணத்தை செலவிடாத சோனியா, ராகுல்: லோக்சபா தேர்தலில் ரூ.380 கோடி செலவிட்ட காங்.,
- "என்னை தண்டித்து விடாதீர்கள்':கட்சியினரிடம் முலாயம் கெஞ்சல்
- பாலம் இடிந்ததாக வதந்தி: கோவில் நெரிசலில் சிக்கி 109 பேர் பலி
- பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை: சுப்ரீம் கோர்ட்டில் 300 வழக்குகள் தேக்கம்
- திருக்குறள் விளக்க உண்மைச் சம்பவம் மேற்கோள்!அரசு பாடப்புத்தகத்தில் மாணவனுக்கு "கவுரவம்'
- 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த புதையல் தேடும் பணியில் தொல்லியல் துறை
- காசு... பணம்... துட்டு... மணி... மணி...: லஞ்சம் தேசிய அவமானம்
| Posted: கோபால்பூர்: ஒடிசாவை தாக்கிய, "பைலின்' புயல், அம்மாநிலத்தில் நாசத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் இரவில் துவங்கி, நேற்று காலை வரை வீசிய, பயங்கர புயல் காற்றால், 2,400 கோடி மதிப்புள்ள பயிர்கள் அழிந்து நாசமாயின. ஒன்பது லட்சம் பேர், பல வித இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். எனினும், "200 கி.மீ., வேகத்திற்கு மேல் இருக்கக் கூடும்' என எதிர்பார்க்கப்பட்ட பைலின், கருணை கூர்ந்து, 100 கி.மீ., வேகத்தில் தாக்கியதால், ஒடிசா, ஆந்திரா மாநிலங்கள் தப்பியுள்ளன. வங்கக் கடலில், கடந்த சில நாட்களாக உருவாகியிருந்த, காற்றழுத்த தாழ்வு நிலை, மேலும் தீவிரமாகி, புயலாக உருவெடுத்தது. பைலின் ... |
| குற்றவாளி தண்டனை விஷயத்தில் கருணை: கோர்ட்டுகளுக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை Posted: புதுடில்லி:'குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனையை பரிசீலனை செய்யும்போது, கருணை என்ற பெயரில், தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்திவிட கூடாது' என, கோர்ட்டுகளுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுரை வழங்கியது.மேகாலாயா மாநிலத்தின், துரா என்ற இடத்தில், கேந்திரியா வித்யாலயா பள்ளியில், பணியாற்றிய கிளார்க் ஒருவர், மது குடித்து பணிக்கு வந்தார்.அதோடு, பள்ளி முதல்வர் அறைக்கு சென்று, தகாத முறையில் நடந்துள்ளார். ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக கூறி, அவரை பணியில் இருந்து நீக்க, கல்வித்துறை உத்தரவிட்டது. மத்திய நிர்வாக தீர்ப்பாயம் இந்த உத்தரவு சரியானது என தீர்ப்பு வழங்கியது. ... |
| சொந்தப் பணத்தை செலவிடாத சோனியா, ராகுல்: லோக்சபா தேர்தலில் ரூ.380 கோடி செலவிட்ட காங்., Posted: புதுடில்லி: லோக்சபா தேர்தல் தேதி எந்நேரமும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கடந்த லோக்சபா தேர்தலில், தன் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய, காங்கிரஸ் கட்சி எவ்வளவு பணத்தை செலவழித்தது என்ற விவரம் தெரிய வந்துள்ளது. அதில், அக்கட்சியின் தலைவர் சோனியாவும், அவர் மகனும், துணைத் தலைவருமான, ராகுலும் தங்கள் சொந்தப் பணம், ஒரு பைசா கூட செலவழிக்கவில்லை என்ற தகவலும் தெரிய வந்துள்ளது.நாட்டின் பணக்கார கட்சிகளில் முதன்மையான கட்சியாக விளங்குகிறது காங்கிரஸ். நம்மை அடிமைபடுத்தியிருந்த, வெள்ளைக்காரர்களை விரட்ட, வெள்ளைக்காரர், ஆலன் ஆக்டோவியன் ... |
| "என்னை தண்டித்து விடாதீர்கள்':கட்சியினரிடம் முலாயம் கெஞ்சல் Posted: லக்னோ:உ.பி.,யில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான அமைச்சர்கள் மற்றும், எம்.எல்.ஏ.,க்கள் மீதுள்ள கோபத்தில், என்னை தண்டித்து விடாதீர்கள், என, சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் கட்சி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.வரும் லோக்சபா தேர்தலில், உ.பி.,யில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக வரவேண்டும் என்பதில், முலாயம் சிங் யாதவ் தீவிரமாக உள்ளார். இதனால், மக்கள் மத்தியில் நல்ல பெயரை எடுக்க, தன் மகன் அகிலேஷ் யாதவ் தலைமையிலான மாநில அரசின் செயல்பாட்டை விமர்சிக்கவும் தவறுவதில்லை. இந்நிலையில், லக்னோவில், ராம் மனோகர் லோகியாவின், 47வது ... |
| பாலம் இடிந்ததாக வதந்தி: கோவில் நெரிசலில் சிக்கி 109 பேர் பலி Posted: டாடியா:ம.பி., மாநிலத்தில், ரத்னாகர் துர்கா கோவிலில், நவராத்திரி விழாவை யொட்டி, நேற்று நடந்த வழிபாட்டில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 109பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.டாடியா மாவட்டத்தில், ரத்னாகர் என்ற இடத்தில், துர்கா கோவில் உள்ளது. இங்கு, நவராத்திரி விழாவையொட்டி, நேற்று நடந்த சிறப்பு வழிபாட்டில், ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த வழிபாட்டிற்கு, ம.பி.,யில் இருந்து மட்டுமல்லாது, உ.பி., மாநிலத்தில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் அதிகமானதால், பலர் முண்டியடித்து கொண்டு செல்ல முயன்றனர். ... |
| பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை: சுப்ரீம் கோர்ட்டில் 300 வழக்குகள் தேக்கம் Posted: புதுடில்லி: பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் வன்முறை தொடர்பான, 300க்கும் மேற்பட்ட வழக்குகள், சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை, கொடூர தாக்குதல், கடத்தல் போன்ற சம்பவங்கள், நாடு முழுவதும் ஆங்காங்கே நடந்து வருகிறது. டில்லியில் மருத்துவ கல்லூரி மாணவி, பாலியல் பலாத்காரத்தால் பலியானதை அடுத்து, நாடு முழுவதும் மக்கள் மத்தியில்கொந்தளிப்பு ஏற்பட்டது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டும். இதற்கு காரணமானவர்களுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும் ... |
| திருக்குறள் விளக்க உண்மைச் சம்பவம் மேற்கோள்!அரசு பாடப்புத்தகத்தில் மாணவனுக்கு "கவுரவம்' Posted: கோவை :தமிழக அரசு, சமச்சீர் பாடத்திட்டத்தில், மூன்றாம் வகுப்பு, தமிழ் இரண்டாம் பருவ பாடப்புத்தகத்தில், திருக்குறள் தெளிவுரைக்கு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த உண்மை சம்பவம், போட்டோவுடன் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.இளம் வயதில் நுண்ணறிவை பயன்படுத்திய மாணவனுக்கு, "கவுரவம்' கிடைத்துள்ளது.அரசு பாடப்புத்தகத்தில், தமிழ்பாடத்தில், திருக்குறளுக்கு, சிறுகதைகளுடன் தெளிவுரை கொடுக்கப்படுகிறது. சமச்சீர் பாடத்திட்டம் கொண்டு வரப்பட்ட பின், தமிழ் பாடங்களுக்கு, "கார்ட்டூன்' படங்களுடன் விளக்கம் கொடுக்கப்படுகிறது.இந்தாண்டு, சமச்சீர் பாடத்திட்டத்தில், ... |
| 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த புதையல் தேடும் பணியில் தொல்லியல் துறை Posted: உன்னாவ்: பழங்கால, சிதலமடைந்த கோட்டையின் கீழ், ஏராளமான தங்கப் புதையல் இருப்பதாக, துறவி ஒருவர் கனவு கண்டதை, வெளியே கூறியதை அடுத்து, தொல்லியல் துறை அப்பகுதியில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள தயாராகி வருகிறது.உத்தர பிரதேசத்தின் உன்னாவ் என்ற இடத்தில், 1857ம் ஆண்டு, ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு எதிராக, அப்பகுதியை ஆண்ட, ராஜா ராவ் ராம்பக்ஸ் சிங் என்பவர் போரிட்டார். தவுடியா கோட்டையைத் தகர்க்க, ஆங்கிலேயர்கள் தாக்குதல் நடத்தியபோது, ராம்பக்ஸ் சிங் இந்தக் கோட்டையில் தான் தங்கியிருந்தார். அவரை, கைது செய்த ஆங்கிலேயர்கள், அவருடைய சொத்துக் கணக்கை கருவூல பதிவேட்டில் பதிவு ... |
| காசு... பணம்... துட்டு... மணி... மணி...: லஞ்சம் தேசிய அவமானம் Posted: கடமையை செய்; பலனை எதிர்பாராதே' என்பது கீதைமொழி. வாழ்க்கை நாடகத்தில் அவரவர் பாத்திரத்தை உணர்ந்து நடந்தாலே உரியது கிடைக்கும். ஆனால் இன்றைய சூழலில், கடமையை செய்வதற்கே "லஞ்சம்' என்றாகி விட்டது. அரசு பதவி என்பது பணம் பண்ணுவதற்கே எனக்கருதி, "வாரிச் சுருட்டு'வதில் வல்லவர்களாக திகழ்கின்றனர் சில அதிகாரிகள். லஞ்ச ஒழிப்பு போலீசார் தினமும் ஒருவரை, "தலையில் முக்காடு போட' வைத்தாலும், எக்கேடும் கெடாதவர்கள்போல இக்கலையில் வல்ல அரசு ஊழியர்கள், இன்னும் "கையேந்தி' காலம் தள்ளத்தான் செய்கின்றனர்.குறைந்த சம்பளம் பெறும் கீழ்நிலை ஊழியர்கள் முதல், அதிக சம்பளம் பெறும் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |அக்டோபர் 14,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |