Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


முதல ஒருநாள் போட்டி ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்

Posted: 13 Oct 2013 03:19 AM PDT

புனே,
இந்தியா–ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி புனேயில் இன்று நடக்கிறது. பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்ஷன், ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஸ்டார் கிரிக்கெட் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது.
37  ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 4  விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் எடுத்து உள்ளது. யுவராஜ் 2 விக்கேடுகளை கைபற்ரி உள்ளார்.மேக்ஸ்வெல் 17 ரன்களுடனும்,பெய்லே 51 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்

மத்திய பிரதேசம் : துர்காதேவி கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 60 பேர் பலி

Posted: 13 Oct 2013 03:10 AM PDT

போபால்

பைலின் புயல்: ஒடிசாவில் 90 லடசம் ஏக்கரில் ரூ 2400 கோடி மதிப்பிலான பயிர்கள் சேதம்

Posted: 13 Oct 2013 02:52 AM PDT

புவனேஸ்வர்

இந்தியாவில் பைலின் புயல்  ஒடிசா மாநிலத்தில் கடும் பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.  ஒடிஷாவில் புயல் மற்றும் மழையால் 2400 கோடி ரூபாய் மதிப்பிலான விளைபயிர்கள் சேதமடைந்திருப்பதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது. மொத்தம் 12 மாவட்டங்களில் 14514 கிராமங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 8 லட்சத்து 73ஆயிரத்து 646 பேரை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்திருப்பதாகவும் ஒடிஷா அரசு கூறியுள்ளது.மேலும்  90 லட்ச்சம் ஏக்கர் ப்பயிர்கள் சேதம் அடைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
வெள்ளத்தால் பாதிக்கபட்ட பகுதிகளை அம்மாநில முதல்வர் நவீன்பட்நாயக்   பார்வையிட்டார்
பின்னர் அவர் கூறியதாவது:-

இந்தியாவின் ஒடிசா மற்றும் ஆந்திராவில் பைலின் புயல் ஏற்படுத்திய பாதிப்பு

Posted: 13 Oct 2013 02:47 AM PDT

புவனேஸ்வர்,

இந்தியாவில் பைலின் புயல் ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் கடும் மழை பொழிவையும் அன்றாட வாழ்க்கையில் மக்களுக்கு பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.  புயல் காற்று ஒடிசா மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் 125 மைல் வேகத்தில் வீசியது.  வங்காள விரிகுடாவின் முழு பகுதியையும் ஆக்கிரமித்த இந்த புயல் பிரான்ஸ் நாட்டின் பரப்பளவை போன்ற பகுதியை சூழ்ந்து தாக்கியது.  இதனால் புயல் பாதிப்பிற்கு உரிய பகுதிகளில் இருந்து முன்னதாகவே 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல உத்தரவிடப்பட்டனர்.

புயல் பாதிப்பை காட்டும் புகைப்படங்கள்:

முதல் ஒருநாள் போட்டி ஆஸ்திரேலியா 2 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்

Posted: 13 Oct 2013 02:32 AM PDT

புனே,

இந்தியா–ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி புனேயில் இன்று தொடங்கியது . .டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது.

20 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் எடுத்து உள்ளது.தொடக்க ஆட்டக்காரர்களாக  ஹூஜுசும்,பிஞ்சும் கலம் இறங்கினர்.  ஹூஜுஸ்  43 ரன்களில் அவுட் ஆனார் ,அடுத்து களம் இறங்கிய வாட்சன் 2 ரன்களில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.தொடர்ந்து பெய்லே இறங்கி உள்:ஆர்.,பிஞ்ச்  64 ரன்களும் பெய்லே  14 ரன்களு எடுத்து ஆடிவருகின்றனர்.

மின்சார வயர் அறுந்து சுபாஷ் சந்திரபோஸ் சிலை மீது விழுந்துள்ள காட்சி.

Posted: 13 Oct 2013 12:35 AM PDT

பைலின் ப்யல் காரணமாக ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தின் பெருபான்மையான நகரங்கள் துண்டிக்கபட்டு உள்ளது. பெர்தாம்பூரில்  மின்சார வயர் அறுந்து சுபாஷ் சந்திரபோஸ் சிலை மீது விழுந்துள்ள காட்சி.

பைலின் புயல்:18 தமிழக மீனவர்கள் மீட்பு தமிழகம் வருகை

Posted: 13 Oct 2013 12:23 AM PDT

புவனேஸ்வர்

வங்கக்கடலில் உருவான பைலின் புயலால் கடந்த 2 நாட்களாக  ஓடிசா மற்றும் ஆந்திர கடலோரங்களில் கடும் சீற்றம் காணப்படுகிறது. இந்த புயலில், ஓடிசாவின் தனியார் மீன்பிடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 18 பேர் சிக்கி கொண்டனர். மீனவர்களின் படகு உடைந்ததால், அவர்கள் நீந்தியபடியே வனப்பகுதி ஒன்றில் தஞ்சம் அடைந்தனர்.

அமெரிக்க பொருளாதாரம் ஆபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது-உலக வங்கி தலைவர் ஜிம் யெங் கிங்

Posted: 13 Oct 2013 12:16 AM PDT

வாஷிங்டன்

அமெரிக்காவில் நிதி மசோதா நிறைவேறாததால் பல அரசு துறை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்னும் சில நாட்களில் அமெரிக்க பொருளாதாரம் பெரும் ஆபத்தை சந்திக்க வாய்ப்புள்ளதாக உலக வங்கி தலைவர்  ஜிம் யெங் கிங் கூறியுள்ளார்.

அபாயத்தை தடுக்க   அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கும் ஒன்றுகூடி விவாதித்து ஏதாவது ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்றும் கிம் கூறியுள்ளார். கடன் வரம்பு பிரச்னைக்கு அமெரிக்கா தீர்வு காணாத பட்சத்தில், அது வளரும் நாடுகளை கடுமையாக பாதிக்கும் என்றும் உலக வங்கித் தலைவர் எச்சரித்தார்.

அமெரிக்க பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு ஏற்படுமா? மாநில கவர்னர்களுடன் ஒபாமா ஆலோசனை

Posted: 13 Oct 2013 12:10 AM PDT

வாஷிங்டன்

அமெரிக்காவில் நிதி மசோதா நிறைவேறாததால் பல அரசு துறை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இது தொடர்பாக 25 மாநில கவர்னர்களுடன் ஜனாதிபதி ஒபாமா அவசர ஆலோசனை நடத்தினார்.

12–வது நாளாக மூடல் நீடிப்பு

மத்திய பிரதேசத்தில் கோவில் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி

Posted: 12 Oct 2013 11:59 PM PDT

போபால்

மத்திய பிரதேசம் டாடியா மாவடத்தில்  உள்ள ரத்னநகர் கோவில் ஒன்றில்  இன்று காலை நவராத்திரி உற்சவம் நடைபெற்றது அப்போது ஏராளமான பகதர்கள்  கூடினர் . கூட்டத்தில் தள்ளு முள்ளு ஏற்பட்டது.இதனால் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலியானார்கள். 30 பேர் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்தில் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மருத்துவ குழுவினரும் வரவழைக்கபட்டனர்



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™