Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


தீபாவளி தினத்தில் லட்சுமி குபேர பூஜை செய்து வழிபடுவது சிறப்பு

Posted: 31 Oct 2013 09:50 AM PDT

தீபாவளி தினத்தில் லட்சுமி குபேர பூஜை செய்து வழிபடுவது சிறப்பு இறைவன் அம்சம் நிரம்பியதால் அதிகாலை குளியல், புத்தாடை, பட்டாசு அவசியம்

நரகாசுரன் இறந்த நாள் ஐப்பசி மாதம், அமாவாசைக்கு முதல் நாளாகிய சதுர்த்தசி பொருந்திய விடியல் வேளையாகும்.

அந்த அசுரன் இறப்பதற்கு முன் நல்லறிவு பெற்று தான் உயிர்விடும் இத்திருநாளில் ஒழுக்கம் உள்ளவர்களாகவும், பாவங்களை தவிர்த்து எண்ணெய் தேய்த்து, புத்தாடை உடுத்தி கடவுளை வழிபடுபவர்களுக்கு அனைத்து நன்மைகளையும் செய்து தருமாறு இறைவனிடம் வேண்டினான்.

லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குவதாக புகார் நடிகர் சந்தானம் வீட்டில் வருமானவரி சோதனை

Posted: 31 Oct 2013 09:35 AM PDT

சென்னை

நடிகர் சந்தானம் ஒரு நாளைக்கு லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குவதாக கூறப்பட்ட புகாரைத்தொடர்ந்து, அவருடைய வீட்டில்  வருமானவரி சோதனை நடந்தது. இதேபோல், சில படஅதிபர்கள் வீடுகளிலும், அலுவலகங்களிலும் வருமானவரி வேட்டை நடைபெற்றது.

சந்தானம்

தமிழ் படஉலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக சந்தானம் இருந்து வருகிறார். அவர் படங்களில் நடிப்பதற்கு நாள் கணக்கில் சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது. ஒரு நாள் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்குவதாக பேசப்படுகிறது.

காமன்வெல்த் மாநாட்டுக்கு பிரதமர் சென்றால் அதன் விளைவுகளை அனுபவிக்க நேரும் கருணாநிதி எச்சரிக்கை

Posted: 31 Oct 2013 09:28 AM PDT

சென்னை,

காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்துகொண்டால், காங்கிரஸ் கட்சியே அதன் விளைவுகளை அனுபவிக்க நேரும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறினார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி, சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு கருணாநிதி அளித்த பதில்களும் வருமாறு:–

காங்கிரஸ் உயர் நிலைக்குழு கூட்டம்

‘பைலின்’ புயல் சேதம்: பிரதமர் மன்மோகன் சிங் ஹெலிகாப்டரில் ஆய்வு

Posted: 31 Oct 2013 08:54 AM PDT

புதுடெல்லி,

கடந்த 12–ந்தேதி, ஒடிசா, ஆந்திரா ஆகிய மாநிலங்களை 'பைலின்' புயல் தாக்கி, பெருத்த சேதத்தை ஏற்படுத்தியது. இரு மாநிலங்களிலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மன்மோகன்சிங் சனிக்கிழமை ஹெலிகாப்டரில் பறந்தபடி சுற்றிப்பார்க்கிறார்.

புயல் ஏற்படுத்திய சேதங்கள் குறித்து பிரதமர் ஏற்கனவே கவலை தெரிவித்துள்ளார். பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

தேசிய புலனாய்வு நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பாட்னா குண்டு வெடிப்பு தீவிரவாதி தப்பி ஒட்டம்; மீண்டும் பிடிபட்டான்

Posted: 31 Oct 2013 08:46 AM PDT

முசாபர்பூர்,

பாட்னா குண்டு வெடிப்பு தொடர்பாக பிடிபட்ட தீவிரவாதி, தேசிய புலனாய்வு நிறுவன கட்டுப்பாட்டில் இருந்து தப்பி ஓடினான். பிறகு, உத்தரபிரதேசத்தில் பிடிபட்டான்.

6 பேர் கைது

பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பா.ஜனதாவின் பிரதமர் பதவி வேட்பாளரும், குஜராத் மாநில முதல்–மந்திரியுமான நரேந்திர மோடி கலந்து கொண்ட பொதுக்கூட்டம் நடந்தது. அதில், அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில், 6 பேர் பலியானார்கள்.

இச்சம்பவம் குறித்து பீகார் போலீசாரும், தேசிய புலனாய்வு நிறுவனமும் (என்.ஐ.ஏ.) விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணை

‘தெண்டுல்கரின் சாதனையை கோலி முறியடிப்பார்’–கவாஸ்கர்

Posted: 31 Oct 2013 08:41 AM PDT

புதுடெல்லி,

‘‘சாதி, மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த முயற்சிகள் நடக்கின்றன’’ மன்மோகன்சிங் பேச்சு

Posted: 31 Oct 2013 08:38 AM PDT

 புதுடெல்லி,

சாதி, மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்த முயற்சிகள் நடக்கின்றன என எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாடு விருது வழங்கி பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.

எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு விருது

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவுநாளையொட்டி, அவரது பெயரால் அமைந்த தேசிய ஒருமைப்பாடு விருது வழங்கும் விழா டெல்லியில் நடந்தது. இந்த விருதை தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பிரதமர் மன்மோகன் சிங் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பது குறித்து எப்போது முடிவு எடுக்கப்படும்? வெளியுறவுத்துறை

Posted: 31 Oct 2013 08:22 AM PDT

புதுடெல்லி,

இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்பது குறித்து எப்போது முடிவு எடுக்கப்படம் என்பதற்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்தது.

காமன்வெல்த் மாநாடு

இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்ற நாடுகளின் கூட்டமைப்பான காமன்வெல்த் அமைப்பின் மாநாடு, இலங்கை தலைநகர் கொழும்பில் 15, 16–ந்தேதிகளில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் போர்க்கொடி உயர்த்தி உள்ளன.

மாமன்றத்திற்கு வந்து மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க தயாரா? மேயர் சைதை துரைசாமி சவால்

Posted: 31 Oct 2013 08:18 AM PDT

சென்னை,

மாமன்றத்தில் வந்து மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க தயாரா? என்று மேயர் சைதை துரைசாமி கூறியுள்ளார்.

சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் நேற்று சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பிறகு, மேயர் சைதை துரைசாமி பேசியதாவது:–

அவதூறு வழக்கு

நான் கடந்த மாதம் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் தணிக்கைத் துறையினர் முந்தைய ஆட்சி நிர்வாகத்தில் நடந்த தணிக்கைத் தடை அறிக்கை குறித்த விவரங்களை மாமன்றத்தில் சுட்டிக்காட்டினேன். அந்த குறைகளுக்கான பதிலளிப்பதை விடுத்து அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்கள்.

கன்னியாகுமரி மாவட்டம், தாய் தமிழகத்துடன் இணைந்த நாள் அரசு விழாவாக கொண்டாட ஜெயலலிதா உத்தரவு

Posted: 31 Oct 2013 07:35 AM PDT

சென்னை,

மார்ஷல் நேசமணியை பெருமைப்படுத்திட, கன்னியாகுமரி மாட்டம், தாய் தமிழகத்துடன் இணைந்த நாள் நவம்பர் 1-ந்தேதி அரசு விழாவாக கொண்டாட முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

நினைவுகூறும் வகையில்



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™