Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


இந்தியன் கிராண்ட்பிரீயில் முதலிடத்தை பிடித்து அசத்தல்: பார்முலா1 கார்பந்தய பட்டத்தை 4–வது முறையாக வென்றார், வெட்டல்

Posted: 27 Oct 2013 11:58 AM PDT

நொய்டா,

பார்முலா 1 கார்பந்தயத்தில் இந்தியன் கிராண்ட்பிரீ சுற்றில் முதலிடத்தை பிடித்து பிரமிக்க வைத்த ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல், உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை 4–வது முறையாக கைப்பற்றி வரலாறு படைத்தார்.

கார்பந்தய திருவிழா

ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் தெண்டுல்கர் ஏமாற்றம் அளித்தார்

Posted: 27 Oct 2013 11:51 AM PDT

லாக்லி,

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரியானா அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணிக்காக விளையாடிய தெண்டுல்கர் 5 ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார்.

ரஞ்சி கிரிக்கெட்

இந்த ஆண்டுக்கான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி பல்வேறு இடங்களில் நேற்று தொடங்கியது.

அரியானா மாநிலம் லாக்லியில் மும்பை–அரியானா அணிகள் இடையிலான லீக் ஆட்டம் நேற்று தொடங்கியது. கடைசி முதல் தர போட்டியில் விளையாடும் தெண்டுல்கருக்கு, அரியானா மாநிலம் சார்பில் முதல்–மந்திரி பூபிந்தர்சிங் ஹூடா நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தார்.

தெண்டுல்கர் 5 ரன்னில் அவுட்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடக்க ஆட்டத்தில் இந்தியா–பாகிஸ்தான் மோதல்

Posted: 27 Oct 2013 11:48 AM PDT

துபாய்,

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி, பாகிஸ்தானை சந்திக்கிறது.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் அடுத்த ஆண்டு (2014) மார்ச் 16–ந் தேதி முதல் ஏப்ரல் 6–ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) நேற்று அறிவித்தது.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு செஸ் போட்டி: மோகன் வர்கீஸ் சுங்கத் வெற்றி

Posted: 27 Oct 2013 11:43 AM PDT

சென்னை,

இந்திய கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் உள்ள ஹயாத் ஓட்டலில் அடுத்த மாதம் 7–ந்தேதி முதல் 28–ந்தேதி வரை நடக்கிறது. இதையொட்டி நவம்பர் முதல் வாரத்தில் கார்ல்சன் இந்தியா வருகிறார். உலக செஸ் போட்டியை பிரபலப்படுத்தும் வகையில் பல்வேறு செஸ் தொடர் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கான செஸ் போட்டி சென்னை அரும்பாக்கத்தில் உள்ள விஜய்பார்க் ஓட்டலில் நேற்று நடந்தது.

ஆன்மீக சிந்தனை (28-10-2013)

Posted: 27 Oct 2013 11:27 AM PDT

கன்னித்தீவு (28-10-2013)

Posted: 27 Oct 2013 11:26 AM PDT

ஆண்டியார் (28-10-2013)

Posted: 27 Oct 2013 11:25 AM PDT

சாணக்கியன் சொல் (28-10-2013)

Posted: 27 Oct 2013 11:23 AM PDT

எட்டு மாதங்களில் இல்லாத அளவிற்கு அன்னிய நேரடி முதலீடு 38 சதவீதம் குறைந்தது

Posted: 27 Oct 2013 10:57 AM PDT

புதுடெல்லி

ஆகஸ்டு மாதத்தில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு சென்ற ஆண்டின் இதே மாதத்தைக் காட்டிலும் 38 சதவீதம் சரிவடைந்து 8 மாதங்களில் இல்லாத அளவிற்கு 140 கோடி டாலராக (ரூ.8,680 கோடி) குறைந்துள்ளது. 2012 டிசம்பர் மாதத்தில் 110 கோடி டாலராக குறைந்து இருந்தது. அதன் பிறகு தற்போதுதான் இந்த அளவிற்கு அன்னிய நேரடி முதலீடு சரிவடைந்துள்ளது.

சாதகமான சூழ்நிலை

அக்டோபர் 1 முதல் 15 வரையிலான காலத்தில் முன்பேர சந்தைகளின் வர்த்தகம் ரூ.2.84 லட்சம் கோடியாக சரிவு

Posted: 27 Oct 2013 10:53 AM PDT

புதுடெல்லி

அக்டோபர் 1 முதல் 15–ந் தேதி வரையிலான காலத்தில் முன்பேர சந்தைகளின் வர்த்தகம் 60 சதவீதம் குறைந்து ரூ.2.84 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே காலத்தில் ரூ.7.09 லட்சம் கோடியாக இருந்தது.

எரிபொருள்கள்

கணக்கீடு செய்ய எடுத்துக்கொண்ட காலத்தில் அதிகபட்சமாக எரிபொருள்கள் மீதான வர்த்தகம் மிகவும் சரிவடைந்துள்ளது. அடுத்து சாதாரண உலோகங்கள், தங்கம் மற்றும் வெள்ளி, விவசாய விளை பொருள்கள் மீதான வர்த்தகம் குறைந்துள்ளது.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™