Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


மோடி பேசிய பாட்னா பேரணி அருகே அடுத்தடுத்து குண்டுவெடிப்பு: அப்பாவிகள் ஆறு பேரை பலி வாங்கிய சதி குறித்து நடவடிக்கை

Posted:

பாட்னா: பீகாரில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடியின் பிரசார கூட்டம் துவங்குவதற்கு, சில நிமிடங்களுக்கு முன், பாட்னா ரயில்வே ஸ்டேஷன், கூட்டம் நடந்த மைதானம் உட்பட, ஆறு இடங்களில், அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில், அப்பாவிகள் ஆறு பேர் இறந்தனர்; 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதற்கான சதி குறித்து விசாரிப்பதற்காக, தேசிய புலனாய்வு அமைப்பு, சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளது. பா.ஜ., பிரதமர் வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். அடுத்தாண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலுக்கு, பா.ஜ.,வுக்கு ஆதரவாக, நாட்டின் முக்கிய ...

'ஸ்பெக்ட்ரம்' ஊழல் வழக்கு: தயாளுவிடம் இன்று சாட்சியம் பதிவு

Posted:

சென்னை: சென்னை கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க., தலைவர் கருணாநிதியின் வீட்டில், அவரது மனைவி தயாளுவிடம், "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பான சாட்சியத்தை, எழும்பூர் நீதிமன்ற முதன்மை மாஜிஸ்திரேட் கோபாலன் இன்று பதிவு செய்கிறார்."2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணை, உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில், டில்லி சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில், அலைவரிசை ஒதுக்கீடு செய்ததில், கலைஞர் "டிவி'க்கு, 200 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக, பங்குதாரரும், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மனைவியுமான தயாளு, ...

பீகார் மக்களுக்கு முதல்வர் நிதிஷ் குமார் துரோகம்: பிரமாண்ட கூட்டத்தில் நரேந்திர மோடி தாக்கு

Posted:

பாட்னா : ''பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ஒரு சந்தர்ப்பவாதி. காங்கிரசை எதிர்த்து போராட்டம் நடத்திய ஜெயப்பிரகாஷ் நாராயண், ராம் மனோகர் லோகியா போன்றவர்களுக்கும், பீகார் மக்களுக்கும் நம்பிக்கை துரோகம் செய்து விட்டார்,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஆவேசமாக பேசினார்.கூட்டணி முறிவு:பீகாரில், ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடந்தது. ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ் குமார் முதல்வராகவும், பா.ஜ.,வின், சுஷில் குமார் மோடி, துணை முதல்வராகவும், பதவி வகித்தனர்.குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு, பா.ஜ.,வில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டதை ...

சர்ச்சை பேச்சுகள்:ராகுல் திடீர் மவுனம்

Posted:

புதுடில்லி : ''டில்லி மெட்ரோ ரயில் திட்டத்தை, உலகத் தரத்தில் மேற்கொண்டு உள்ளோம்; பல நாடுகள், இந்தத் திட்டத்தை பின்பற்றி வருகின்றன,'' என, காங்கிரஸ் துணைத் தலைவர், ராகுல் கூறினார்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, முதல்வர், ஷீலா தீட்ஷித் தலைமையிலான டில்லி சட்ட சபைக்கு, தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மூன்று முறை வெற்றி பெற்று, நான்காவது முறையாக ஆட்சி அமைக்க விரும்பும் காங்கிரசுக்கு ஆதரவு திரட்டி, டில்லியில் நேற்று, ராகுல் பிரசாரம் மேற்கொண்டார்.லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, கடந்த வாரம், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் ராகுல் பேசிய பேச்சு ...

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்

Posted:

சென்னை:'காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா பங்கேற்காது என, உடனடியாக பிரதமர் அறிவிக்க வேண்டும்' என, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை:காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா பங்கேற்கக் கூடாது என, சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக, இலங்கைத் தூதர் கரியவாசம் கருத்து தெரிவித்துள்ளார். "காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணித்தால், இந்தியா தனிமைப்படுத்தப்படும்' என, டில்லியில் இருந்து அவர் கூறியிருக்கிறார். மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், "காமன்வெல்த் மாநாட்டில் ...

ஏற்காடு தேர்தல் பணிக்குழுவில் 31 மந்திரிகள்: அரசு துறை உயர் அதிகாரிகள் "குஷி'

Posted:

நாமக்கல் : ஏற்காடு இடைத்தேர்தல் பணிக்குழுவில், அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளதால், விடுமுறை நாட்களை, குடும்பத்துடன் கழிக்கலாம்' என, அரசு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்காடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல், டிச., 4ம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் இருந்தாலும், அரசியல் கட்சிகள் பிரசார களத்தில் இறங்கி விட்டன. தி.மு.க., சார்பில், ஒன்பது பேர் அடங்கிய, தேர்தல் பணிக்குழு நியமிக்கப்பட்ட நிலையில், அ.தி.மு.க., சார்பிலும், தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டது. இதில், 31 அமைச்சர்கள் உட்பட, 52 பேர் இடம் பெற்றுள்ளனர். "லோக்சபா தேர்தல், அடுத்த ஆறு மாதங்களில், ...

கூட்டணி பற்றி பேச டில்லி வரவில்லை: விஜயகாந்த்

Posted:

புதுடில்லி : இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேணடும், என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.டில்லியில் வாழும் தமிழ் மக்களுக்கு ஆதரவாக, ஜந்தர்மந்தரில், தே.மு.தி.க., சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில், தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:இலங்கையில், நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா கலந்து கொள்ளக்கூடாது. நமது உணர்வுகளை மீறி இந்தியா பங்கேற்குமேயானால், இலங்கை அதிபர் ராஜபக்சேயின் நடவடிக்கைக்கு அங்கீகாரம் அளித்தது போல் ஆகிவிடும். இலங்கை தமிழர்களை ...

30 ஆண்டுகளாக நிலவிய பயங்கரவாதத்தை மூன்று ஆண்டுகளில் முடிவுக்கு கொண்டு வந்தோம்: ராஜபக்சே பேச்சு

Posted:

கொழும்பு : ''இலங்கையில், 30 ஆண்டுகளாக நிலவிய பயங்கரவாதத்தை , எனது அரசு, மூன்று ஆண்டுகளில் முடிவுக்கு கொணடு வந்தது; உலகில் வேறெந்த நாடும் இந்த சாதனையை செய்யவில்லை,'' என, அந்நாட்டு அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.இலங்கையில், அடுத்த மாதம், காமன்வெல்த் மாநாடு நடக்க உள்ளது. இதற்காக, விமான நிலையத்திலிருந்து, கொழும்பு நகரம் வரை அமைக்கப்பட்டுள்ள, 28 கி.மீ., சாலையை, அதிபர் ராஜபக்சே நேற்று திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:இலஙகையில், 30 ஆண்டு களாக நிலவிய பயங்கரவாதத்தை, எனது அரசு, மூன்று ஆண்டுகளில் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. 2009, மே, 19ம் தேதிக்கு பிறகு, எந்த ...

"மக்-அப்' மாணவர்கள் உயர்கல்வியில் "பேக்-அப்': அடிப்படை காரணம் என்ன?

Posted:

கோவை:அடிப்படை கல்வியின்மையால் மாணவர்களின் உயர்கல்வியில் பின்னடைவு ஏற்படுவதுடன், போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற முடியாத நிலை உருவாகிறது. சில பள்ளிகளில் பொதுத் தேர்வுக்கான பாடத்திட்டங்களை, அதற்கு முந்தைய வகுப்புகள் முதலே நடத்தப்படுவதால் இந்நிலை ஏற்படுவதாக கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.பிளஸ்2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவன், கல்லூரிகளில் "அரியர்' வைப்பது ஆச்சர்யமாக இருக்கலாம். ஆனால், அப்பின்னடைவுக்கான காரணத்தை உற்றுநோக்கினால், பள்ளிகளில் முக்கிய கட்டத்தை (9, 11ம் வகுப்புகள்) எட்டும் மாணவர்களுக்கு, ...

கிராக்கியை வைத்து கல்லா கட்ட திட்டம்: அதிக கட்டணத்தில் சிறப்பு ரயில் அறிமுகம்

Posted:

புதுடில்லி:பயணிகள் போக்குவரத்தினால் ஏற்படும் நஷ்டம்; உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுக்காக ஏற்பட்டுள்ள கிராக்கி ஆகியவற்றின் காரணமாக, முக்கிய நகரங்களுக்கு இடையே, அதிக கட்டணத்தில், சிறப்பு ரயில்களை விட ரயில்வே திட்டமிட்டுள்ளது.பேருந்து கட்டணத்தை விட, ரயில்களுக்கான பயணிகள் கட்டணம் குறைவாக இருப்பதால், முக்கியமான பண்டிகை நாட்களில், ரயில் டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு, இரண்டு மாதத்திற்கு முன் துவங்கினாலும், ஒன்றிரண்டு நாட்களில் முடிந்து விடுகிறது.அதிர்ஷ்டம்:இதனால், பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில், ரயில்களில் டிக்கெட் கிடைப்பது ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™