மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- நடிகர் ஓம்பூரி மனைவிக்கு மாதம் ரூ.1 1/4 லட்சம் நிவாரணம்: மும்பை கோர்ட் உத்தரவு
- சீமாந்திரா போராட்டம்: மின்சார ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
- நவராத்திரி விழாவில் தீவிரவாதிகள் தாக்குதல் திட்டம்: மும்பையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
- கேதார்நாத் கோவிலுக்கு மீண்டும் புனித யாத்திரை தொடங்கியது
- மின்சார ரெயில்களுக்கான முதல் வகுப்பு கட்டணம் ரூ.5 முதல் 20 வரை உயர்வு
- கழிவறையுடன் கோவிலை ஒப்பிட்டு பேசிய நரேந்திர மோடிக்கு சிவசேனா கண்டனம்
- ஊட்டச்சத்து குறித்த சி.ஏ.ஜி. அறிக்கை மோடியின் செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளது: காங்கிரஸ்
- தெலுங்கானா விவகாரத்தில் தெலுங்குதேசம்-ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மீது திக்விஜய் சிங் குற்றச்சாட்டு
- மூன்றாவது அணி அமையுமா? பிரகாஷ் காரத்துடன் முலாயம் சிங் சந்திப்பு
- புத்தூரில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டில் வெடிகுண்டுகள் பறிமுதல்
- டெல்லி சட்டசபை தேர்தல்: ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் கெஜ்ரிவால்
- உம்மன்சாண்டி பங்கேற்கும் திருமண வீடு அருகே குண்டு வெடித்தது: 6 பேர் காயம்
- சோலாப்பூர் கோவிலில் கூட்ட நெரிசல்: ஒருவர் பலி-20 பேர் காயம்
- புனித நீர் எடுக்க சென்ற 4 இளைஞர்கள் ஆற்றில் மூழ்கி பலி
- மகனை பிரதமர் ஆக்க ஆந்திராவை பிரிக்கிறார்கள்: சோனியா மீது ஜெகன் மோகன் மறைமுக தாக்கு
- இந்திய-வங்காளதேச கூட்டு மின் திட்டங்கள்: மன்மோகன்-ஹசீனா தொடங்கி வைத்தனர்
- சீமாந்திரா போராட்டம் காரணமாக அழுகும் பொருட்கள்: வியாபாரிகள் கவலை
- உலக 'கரோகே பாட்டு' போட்டி: இந்தியா சார்பில் பங்குபெறும் 2 பேர் யார்?- நாளை மும்பையில் தேர்வு
- புத்தூரில் பதுங்கியிருந்த 2 தீவிரவாதிகள் கைது: 9 மணி நேர துப்பாக்கி சண்டை முடிவுக்கு வந்தது
- நாசா ஆய்வு கூடம் மூடல்: செவ்வாய் கிரகத்துக்கு இந்தியா விண்கலம் அனுப்புவது 2 ஆண்டுகள் தள்ளிப் போக வாய்ப்பு
| நடிகர் ஓம்பூரி மனைவிக்கு மாதம் ரூ.1 1/4 லட்சம் நிவாரணம்: மும்பை கோர்ட் உத்தரவு Posted: 05 Oct 2013 10:54 PM PDT நடிகர் ஓம்பூரி மனைவிக்கு மாதம் ரூ. 1 1/4 லட்சம் இடைக்கால நிவாரணம் வழங்க மும்பை கோர்ட்டு உத்தரவிட்டது. பிரபல நடிகர் ஓம்பூரி (65). இவர் இந்தி தவிர ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். இவரது மனைவி நந்திதா. இவர்களுக்கு இஷான்பூரி என்ற ஒரு மகன் இருக்கிறான். இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்த நிலையில் அவரது மனைவி நந்திதா ஓம்பூரி தனக்கும், மகனுக்கும் குடும்ப செலவுக்கும் பணம் தரவில்லை என்றும் |
| சீமாந்திரா போராட்டம்: மின்சார ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் Posted: 05 Oct 2013 10:31 PM PDT ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திரா பகுதி மக்கள் 2 மாதத்துக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் ஜாமீனில் விடுதலையான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து 76 மணி நேர பந்த் அறிவித்தார். இந்த போராட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. இதன் காரணமாக போராட்டம் மேலும் தீவிரம் அடைந்து ஆந்திரா முடங்கியது. பல இடங்களில் டயர்களை கொளுத்தி போட்டும், மரங்களை வெட்டிப் போட்டும் போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தினார்கள். |
| நவராத்திரி விழாவில் தீவிரவாதிகள் தாக்குதல் திட்டம்: மும்பையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு Posted: 05 Oct 2013 08:37 PM PDT நவராத்திரி விழாவில் தீவிரவாதிகள் தாக்குதல் சதி திட்டத்தை தொடர்ந்து மும்பையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தாக்குதல் சதி 9 நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. மும்பையில் நவராத்திரி விழாவின் போது |
| கேதார்நாத் கோவிலுக்கு மீண்டும் புனித யாத்திரை தொடங்கியது Posted: 05 Oct 2013 04:53 PM PDT உத்தரகாண்ட் மாநிலத்தில் புகழ்பெற்ற கேதார்நாத் கோவிலுக்கு, 4 மாதங்களுக்குப்பின் நேற்று புனித யாத்திரை மீண்டும் தொடங்கியது. அதன்படி மத்திய நீர்வளத்துறை மந்திரி ஹரிஷ் ராவத் தலைமையில் ஒரு குழு புறப்பட்டு சென்றது |
| மின்சார ரெயில்களுக்கான முதல் வகுப்பு கட்டணம் ரூ.5 முதல் 20 வரை உயர்வு Posted: 05 Oct 2013 03:08 PM PDT ரெயில்வே அமைச்சகம் எரிபொருள் விலை சீரமைப்பு கட்டண முறை அடிப்படையில் ரெயில் கட்டணத்தை 2 சதவீதம் நாளை முதல் உயர்த்துகிறது. மத்திய மற்றும் மேற்கு ரெயில்வே சார்பில் இயக்கப்படும் மின்சார ரெயில்களில் முதல் வகுப்பு பயண கட்டணம் ரூ.5 முதல் 20 வரையிலும் உயருகிறது |
| கழிவறையுடன் கோவிலை ஒப்பிட்டு பேசிய நரேந்திர மோடிக்கு சிவசேனா கண்டனம் Posted: 05 Oct 2013 12:04 PM PDT பா.ஜனதா பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்-மந்திரியுமான நரேந்திர மோடி கடந்த 2-ந் தேதி டெல்லியில் நடைபெற்ற இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, கழிவறையுடன் கோவிலை ஒப்பிட்டு பேசிய மோடியின் கருத்துக்கு காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன |
| ஊட்டச்சத்து குறித்த சி.ஏ.ஜி. அறிக்கை மோடியின் செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளது: காங்கிரஸ் Posted: 05 Oct 2013 09:54 AM PDT குஜராத்தை முன்னேற்றம் அடைந்த ஒரு மாநிலமாக முதல் மந்திரி நரேந்திர மோடி மாற்றியிருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகளின் நலனுக்காக நடவடிக்கைகளை எடுத்துவரும் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தை சேர்ந்தவர்கள், குஜராத்தில் ஒவ்வொரு மூன்றில் |
| தெலுங்கானா விவகாரத்தில் தெலுங்குதேசம்-ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மீது திக்விஜய் சிங் குற்றச்சாட்டு Posted: 05 Oct 2013 09:50 AM PDT ஆந்திரப்பிரதேசத்தை இரண்டாக பிரித்து தெலுங்கானாவை 29-வது மாநிலமாக பிரிக்க மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகள் இரண்டு நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றன. |
| மூன்றாவது அணி அமையுமா? பிரகாஷ் காரத்துடன் முலாயம் சிங் சந்திப்பு Posted: 05 Oct 2013 08:10 AM PDT காங்கிரஸ் தலைமையிலான ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவளித்து வருகிறது சமாஜ்வாடி கட்சி. இக்கட்சியின் தலைவர் முலாயம் சிங் அவரது சொந்த நகரில் வாழை மரம் நடும் திட்டத்தை துவக்கி வைத்து பேசினார். |
| புத்தூரில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டில் வெடிகுண்டுகள் பறிமுதல் Posted: 05 Oct 2013 07:52 AM PDT சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் கொலையில் தொடர்புடைய தீவிரவாதிகள் போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில், அபுபக்கர் சித்திக் ஆகிய 4 பேரை சிறப்பு புலனாய்வு படை தேடி வந்தது. அவர்களில் போலுஸ் பக்ருதீன் சென்னை பெரியமேட்டில் கைது செய்யப்பட்டான். |
| டெல்லி சட்டசபை தேர்தல்: ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் கெஜ்ரிவால் Posted: 05 Oct 2013 06:45 AM PDT டெல்லி சட்டசபைத் தேர்தல் டிசம்பர் 4-ம் தேதி நடைபெறுகிறது. இதில் ஆளும் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து வரும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் வேட்பாளராக களமிறங்குகிறார். |
| உம்மன்சாண்டி பங்கேற்கும் திருமண வீடு அருகே குண்டு வெடித்தது: 6 பேர் காயம் Posted: 05 Oct 2013 05:29 AM PDT கேரள மாநிலம் கண்ணூரை அடுத்த பாறாடு பகுதியில் விவசாய மந்திரி மோகனன் வீடு உள்ளது. இவரது 2 மகள்களுக்கு இன்றும், நாளையும் திருமணம் நடைபெற உள்ளது. இந்த விழாவில் முதல்–மந்திரி உம்மன்சாண்டி, எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தன் மற்றும் மார்க்சிஸ்டு மாநில செயலாளர் பினராய் விஜயன் உள்பட பல்வேறு அரசியல் பிரமுகர்களும், மந்திரிகளும் பங்கேற்பதாக கூறப்பட்டிருந்தது. |
| சோலாப்பூர் கோவிலில் கூட்ட நெரிசல்: ஒருவர் பலி-20 பேர் காயம் Posted: 05 Oct 2013 05:20 AM PDT மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள துல்ஜாபூர் தேவி கோவிலில் நவராத்திரி விழா இன்று கோலாகலமாகத் தொடங்கியது. இதையொட்டி இன்று அதிகாலை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள கலந்துகொண்டனர். |
| புனித நீர் எடுக்க சென்ற 4 இளைஞர்கள் ஆற்றில் மூழ்கி பலி Posted: 05 Oct 2013 05:13 AM PDT பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில், மதச் சடங்கிற்காக புனித நீர் எடுக்கச் சென்ற 4 இளைஞர்கள் ஆற்றில் மூழ்கி பலியானார்கள். சமஸ்திபூர் மாவட்டம் பதுவா கிராமத்தில் நவராத்திரி விழா சிறப்பு அபிஷேகம் செய்வதற்கு புனித நீர் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது. |
| மகனை பிரதமர் ஆக்க ஆந்திராவை பிரிக்கிறார்கள்: சோனியா மீது ஜெகன் மோகன் மறைமுக தாக்கு Posted: 05 Oct 2013 04:56 AM PDT தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திரா பகுதியில் உள்ள 13 மாவட்டங்களில் நேற்று காலை முதல் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. சீமாந்திராவின் 13 மாவட்டங்களில் நடந்து வரும் போராட்டம் இரண்டாவது நாளான இன்று (சனிக்கிழமை) தீவிரம் அடைந்தது. |
| இந்திய-வங்காளதேச கூட்டு மின் திட்டங்கள்: மன்மோகன்-ஹசீனா தொடங்கி வைத்தனர் Posted: 05 Oct 2013 04:51 AM PDT சமீபத்தில் ஐ.நா. சபை பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள அமெரிக்கா சென்ற இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு நாடுகளிடையே எரிசக்தி திட்டங்களை தொடங்குவது என முடிவெடுக்கப்பட்டது. |
| சீமாந்திரா போராட்டம் காரணமாக அழுகும் பொருட்கள்: வியாபாரிகள் கவலை Posted: 05 Oct 2013 04:08 AM PDT தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீமந்திரா பகுதியில் உள்ள 13 மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நேற்று காலை தொடங்கி நடந்து வருகின்றது. இன்று இந்தப் போராட்டம் இரண்டாவது நாளாகத் தீவிரம் அடைந்துள்ளது. தீவிர அரசியல் நடவடிக்கைகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவது ஒருபுறம் என்றாலும், அழுகும் பொருட்களான காய், கனி, பூ போன்றவற்றில் தினசரி வர்த்தகம் செய்பவர்களின் நிலைமை கவலைக்குரியதாகத் தோன்றுகின்றது. |
| உலக 'கரோகே பாட்டு' போட்டி: இந்தியா சார்பில் பங்குபெறும் 2 பேர் யார்?- நாளை மும்பையில் தேர்வு Posted: 05 Oct 2013 03:20 AM PDT ஆங்கிலப் பாடல்களைப் பாடும் திறன் கொண்ட கரோகே பாடகர்களுக்கான தேர்வுப் போட்டி நாளை மும்பையில் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறுவோருக்கு மெக்டோவல் நிறுவனம் வழங்கும் பரிசுக் கோப்பையும், பரிசுகளும் தவிர பின்லாந்தில் நடைபெறும் உலக கரோகே போட்டிகளில் இடம் பெறுவதற்கான விமான டிக்கெட்டுகளும் அளிக்கப்பட உள்ளன. வரும் நவம்பர் மாதம் 21-24 முடிய இந்தப் போட்டிகள் பின்லாந்து நாட்டின் தலைநகரான ஹெல்சிங்கியில் நடைபெற உள்ளது. |
| புத்தூரில் பதுங்கியிருந்த 2 தீவிரவாதிகள் கைது: 9 மணி நேர துப்பாக்கி சண்டை முடிவுக்கு வந்தது Posted: 05 Oct 2013 02:59 AM PDT சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் கொலையில் தொடர்புடைய தீவிரவாதிகள் போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில், அபுபக்கர் சித்திக் ஆகிய 4 பேரை சிறப்பு புலனாய்வு படை தேடி வந்தது. |
| Posted: 05 Oct 2013 01:22 AM PDT வாஷிங்டன், அக். 5– அமெரிக்காவில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், ஏராளமான அரசுத்துறைகள் மூடப்பட்டுள்ளன. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா நிறுவனமும் சம்பளம் கொடுக்க பணம் இல்லாமல் மூடப்பட்டுள்ளது. நாசாவில் சுமார் 20 ஆயிரம் பேர் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களில் 97 சதவீதம் பேருக்கு கட்டாய விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் நாசாவின் செயல்பாடு முற்றிலும் முடங்கியுள்ளது. இது அமெரிக்காவில் மட்டுமின்றி மற்ற நாட்டு விண்வெளி |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |