Tamil Star |
- கூட்டமைப்புக்கள் குழப்பம்: பங்காளி கட்சிகள் தனித் தனியே பேச்சு
- இந்திய அரசைக் கண்டித்து போராட்டம் : தமிழகத்தில் 70,000 பேர் கைது
- மகாத்மா காந்தி பயணம் செய்த ரயில் பெட்டி மாயமானது உண்மையா?
- சீனாவின் கனவை தகர்க்க தீவிரமாக இந்தியா
- 300 கவிஞர்களின் கல்லறைகளுக்கு சுற்றுப்பயணம் செய்த அமெரிக்கர்
- இத்தாலி திரைப்பட இயக்குனர் தற்கொலை
- கத்திமுனையில் பாலாத்காரம் செய்யப்பட்ட பாடகி மடோனா
- எதிர்க்கட்சி நிபந்தனைக்கு அடிபணிய மாட்டேன்: ஒபாமா உறுதி
- நள்ளிரவில் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
- சிறைச்சாலை கூரை மீது ஏறி சிறைக்கைதி போராட்டம்
| கூட்டமைப்புக்கள் குழப்பம்: பங்காளி கட்சிகள் தனித் தனியே பேச்சு Posted: 05 Oct 2013 11:30 PM PDT நடைபெற்று முடிந்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கியுள்ளார்கள் என்பதுடன், எமது தேர்தல் அறிக்கையை ஏற்று, மிகப்பெரிய ஆணையையும் எமக்கு கொடுத்திருக்கின்றனர். ஆனால், தேர்தலின் பின்னரான தமிழரசுக் கட்சியின் நடவடிக்கைகள் அனைத்தும் ஏனைய அங்கத்துவக் கட்சிகளின் கருத்துக்களை உள்வாங்காமல் முடிவுகளை தன்னிச்சையாக எடுக்கும் போக்கு தொடர்கின்றது என கூட்டமைப்பின் சார்பாக வடமாகாண சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும், புளட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். வட மாகாண […] |
| இந்திய அரசைக் கண்டித்து போராட்டம் : தமிழகத்தில் 70,000 பேர் கைது Posted: 05 Oct 2013 11:23 PM PDT விலைவாசி உயர்வு மற்றும் இந்திய மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மறியல் போராட்டம் இன்று நடந்தது. இதில் தமது கட்சி சார்ந்த 15 ஆயிரம் பெண்கள் உள்ளிட்ட 70 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு தொடர்ந்து கடைப்பிடித்து வரும் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்து மத்திய அரசு அலுவலங்களை […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| மகாத்மா காந்தி பயணம் செய்த ரயில் பெட்டி மாயமானது உண்மையா? Posted: 05 Oct 2013 11:10 PM PDT சென்னை பெரம்பூர் ஐ.சி.எப். ரயில்வே பெட்டி தொழிற்சாலை மக்கள் தொடர்பு அதிகாரி ஜி.சுப்பிரமணியன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, தென்னாபிரிக்காவில் காந்தி பயணம் செய்த ரயில் பெட்டி ஒன்று ஐ.சி.எப். வளாகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது காணாமல் போய்விட்டதாகவும் செய்தி வெளியாகி உள்ளது. இந்த செய்தி உண்மைக்கு புறம்பான செய்தி ஆகும். தென்னாபிரிக்காவில் காந்தி பயணம் செய்த ரயில் பெட்டி சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, காட்சிக்கு வைக்கப்பட்டது என்பதற்கு எந்த விதமான அடிப்படை ஆதாரமும் இல்லை. ஐ.சி.எப்.ல் […] |
| சீனாவின் கனவை தகர்க்க தீவிரமாக இந்தியா Posted: 05 Oct 2013 11:05 PM PDT சீனாவை கண்காணிக்கும் வகையில் புதிய போர்படை விமானதளத்தை அமைக்க இந்தியா முடிவு செய்துள்ளது. இந்தியா- சீனா எல்லை தொடர்பாக இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து அவ்வப்போது பேச்சு வார்த்தை நடத்தி சமரச முயற்சியில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு இரு நாட்டு ராணுவங்களும் எல்லை பகுதியில் கண்ணாமூச்சி ஆடி வருகின்றன. இந்நிலையில் சீனா கடல் மட்டத்தில் இருந்து சுமார் 14 ஆயிரம் அடி உயரத்தில் திபெத்தில் விமான நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் சீன […] |
| 300 கவிஞர்களின் கல்லறைகளுக்கு சுற்றுப்பயணம் செய்த அமெரிக்கர் Posted: 05 Oct 2013 10:57 PM PDT
இது குறித்து அவர் கூறுகையில், "மறைந்த 500 கவிஞர்களின் கல்லறைகளை பார்வையிட விரும்புவதாகவும், வாழ்ந்து கொண்டிருக்கும் அல்லது மறைந்த ஒரு கவிஞரைப் பற்றி புத்தகம் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகவும்' தெரிவித்தார். தற்போது, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 201 கவிஞர்களின் கல்லறைகளை அவர் அடையாளம் கண்டுள்ளார். மேலும் ஸ்கோல்ட் கூறுகையில், "கல்லறைகளைத் தேடி நீண்ட நாட்கள் பயணம் செய்வேன் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால், இது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது'' என்றார். "மறைந்த கவிஞர்களுக்கான அமெரிக்க சமுகம்' என்ற அமைப்பை நிறுவிய ஸ்கோல்ட், 2009ஆம் ஆண்டு முதல் கவிஞர்களின் கல்லறைகளுக்குப் பயணம் செய்து அவர்களைப் பற்றிய குறிப்புகளை சேகரித்து வெகுகாலங்களாக மறக்கப்பட்ட எழுத்தாளர்களை நினைவுப்படுத்தி வருகிறார். அந்த ஆண்டில் மட்டும் 90 நாட்களில் 23 மாகாணங்களுக்கு பயணம் செய்து 150 கல்லறைகளை பார்வையிட்டுள்ளார். கல்லறைகளில் சேகரிக்கப்பட்ட குறிப்புகள், விடியோ பதிவுகள், புகைப்படங்கள் ஆகியவற்றை அருங்காட்சியகம் மற்றும் பிற நிறுவனங்களில் கொடுத்து நிதி திரட்டி, வழிப்பயணத்துக்கான செலவை சரிக்கட்டி வருகிறார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| இத்தாலி திரைப்பட இயக்குனர் தற்கொலை Posted: 05 Oct 2013 10:52 PM PDT மூன்றவாது மாடியில் இருந்து குதித்து, 91 வயது இத்தாலி திரைப்பட இயக்குனர் நேற்று சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். இத்தாலியின் பழம் பெரும் திரைப்பட இயக்குனர் கார்லோ லிஜ்ஜானி (91). இவர் ரோமில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 3-வது மாடியில் வசித்து வந்தார். இந்நிலையில் அவர் நேற்ற சனிக்கிழமை தனது வீட்டு பால்கனி வழியாக கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். லிஜ்ஜானி, வெனிஸ் திரைப்பட விழா குழுவுக்கு 3 ஆண்டுகள் தலைவராக இருந்துள்ளார். 1948-ஆம் ஆண்டு […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| கத்திமுனையில் பாலாத்காரம் செய்யப்பட்ட பாடகி மடோனா Posted: 05 Oct 2013 10:48 PM PDT அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கத்திமுனையில் தான் பாலியல் பாலாத்காரம் செய்யப்பட்டதாக பொப் பாடகி மடோனா அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். பிரபல அமெரிக்கப் பத்திரிகை ஒன்றுக்கு எழுதிய சிறப்புக் கட்டுரை ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். மடோனா பாப் பாடகியாக பிரபலமாகும் முன் அவர் நியூயார்க் நகரில் வைத்து கத்தி முனையில் பாலியல் பாலாத்காரம் செய்யப்பட்டதாகஅவர் தெரிவித்தார். வெறும் 35 டாலர்களுடன் நியூயார்க் வந்த தான், தனது விடா முயற்சியால் இன்று அமெரிக்காவின் முன்ணணி செல்வந்தர்களில் ஒருவராக மாறியுள்ளதாகவும் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| எதிர்க்கட்சி நிபந்தனைக்கு அடிபணிய மாட்டேன்: ஒபாமா உறுதி Posted: 05 Oct 2013 10:43 PM PDT
இதனால் அத்தியாவசியம் இல்லாத அரசு நிறுவனங்களான தேசிய பூங்காக்கள், அருங்காட்சியகம் உள்பட பல நிறுவனங்கள் 1-ந்தேதி மூடப்பட்டது. சுமார் 10 லட்சம் ஊழியர்கள் சம்பளம் இன்றி கட்டாய விடுப்பில் சென்றனர். இதன் மூலம் வாரத்துக்கு ரூ.6 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும். இந்த அரசு நிறுவனங்கள் மூடல் நேற்று 5-வது நாளாக தொடர்ந்தது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் ஆளும் ஜனநாயக கட்சி உறுப்பினர்கள், எதிர்க்கட்சியான குடியரசு கட்சி உறுப்பினர்கள் சந்தித்து தீவிர ஆலோசனை நடத்துகிறார்கள். ஆனால் இரு தரப்பினர் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடிப்பதால் நேற்று வரையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. ஜனாதிபதி ஒபாமாவும், ஆளுங்கட்சியினரும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை நிறைவேற்றியே தீரவேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருக்கிறார்கள். இதில் அரசாங்கம் பின்வாங்கினால் குடியரசு கட்சியினர் வேறுசில திட்டம், ஈரான் பொருளாதார தடை விவகாரம் ஆகியவற்றில் தலையிடுவார்கள் என அஞ்சுகிறார்கள். அதே நேரத்தில் குடியரசு கட்சி அணித்தலைவர் ஜான் போஷ்னெர், 'அரசாங்க நிறுவனங்கள் மூடலை பொதுமக்களோ, நாங்களோ விரும்பவில்லை. இதை அனைவரும் உட்கார்ந்து பேசினால் சுலபமாக தீர்க்கலாம். அதற்கு அரசு ஒத்துழைக்க வேண்டும்' என்றார். இந்த விவகாரத்தை அரசாங்கம் சரியாக கையாள தவறி விட்டதாக குடியரசு கட்சியை சேர்ந்த இந்திய வம்சாவளி கவர்னர்களான பாபி ஜிண்டால் (லூசியானா), நிக்கி ஹாலே (கரோலினா) ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர். பாபி ஜிண்டால் கூறுகையில், 'அரசாங்கத்தின் அன்றாட செயல்பாட்டுக்கு இது ஒரு சான்று' என்றார். நிக்கி ஹாலே கருத்து தெரிவிக்கையில், 'ஒபாமாவின் தலைமை முழுமையாக செயல் இழந்து விட்டது' என்றார். இந்த விவகாரம் குறித்து ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள். என்றாலும் தீர்வு காண மேலும் காலதாமதம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. வருகிற 17-ந்தேதி வரையில் தான் இதற்கு கெடு இருக்கிறது. அதற்குள் தீர்வு காணப்படவில்லை என்றால் அமெரிக்க அரசாங்கம் கடனை செலுத்த முடியாத நிலை ஏற்படும். இதன் விளைவாக கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு விடும். இந்நிலையில் ஜனாதிபதி ஒபாமா தனது வாராந்திர வானொலி உரையில் இந்த நிதி மசோதா பிரச்சினையில் எதிர்க்கட்சியின் நிபந்தனைக்கு அடிபணிய மாட்டேன் என்று திட்டவட்டமாக எச்சரிக்கை விடுத்தார். அவர் கூறியதாவது:- அரசாங்க நிறுவனம் மூடல் அறிவிப்பால் மக்களின் இதயத்தில் வேதனை குடிபுகுந்து விட்டது. இதனால் ஏராளமானோரின் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டு இருப்பதாக எனக்கு கடிதம் எழுதி வருகிறார்கள். கடந்த சில நாட்களாக தங்களின் துயர நிலையை எடுத்துக்கூறி 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கடிதம் எழுதியிருக்கிறார்கள். வேலை பெறுவதற்காக எந்த ஒரு அமெரிக்கரும் பிணைத்தொகை வழங்க மாட்டார்கள். அதுவே அனைத்து பாராளுமன்ற உறுப்பினருக்கும் பொருந்தும். அதுபோல அரசாங்கம் மீண்டும் இயங்க நான் ஏன்? பிணைத்தொகை பரிமாறிக்கொள்ள வேண்டும். நெருக்கடியை தீர்க்க நான் யாருக்கும் பிணைத்தொகை கொடுக்க தயாராக இல்லை. இந்த நிதி பிரச்சினையால் நாடு கடும் நெருக்கடியை சந்திக்க நேரிடும். மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இந்த நிலைமையை எதிர்க்கட்சி புரிந்து கொள்ள வேண்டும். எனவே தனித்தன்மையை பார்க்காமல், நாட்டு நலனை கருத்தில் கொண்டு நிதி மசோதாவை நிறைவேற்ற எதிர்க்கட்சி ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு ஒபாமா கூறினார். தனக்கு பொதுமக்கள் அனுப்பிய சில கடிதங்களையும் அவர் வாசித்தார். தற்போதைய நிதி நெருக்கடியால் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம்(நாசா) பணிகளும் பாதிக்கப்பட்டிருக்கிறது. அங்கு பணி புரிந்த 20 ஆயிரம் ஊழியர்களில் 95 சதவீதம் பேருக்கு கட்டாய விடுப்பு கொடுக்கப்பட்டது. இதனால் நாசா பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளது. இதன் விளைவாக விண்வெளி ஆய்வு மற்றும் விண்கலம் அனுப்பும் பணி பாதிக்கும். அதன் ஒருபகுதியாக செவ்வாய் கிரகத்துக்கு இந்தியா விண்கலம் அனுப்ப இருக்கும் திட்டப்பணிகளும் பாதிக்கப்பட்டு காலதாமதம் ஆகலாம் என கருத்தப்படுகிறது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| நள்ளிரவில் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் Posted: 05 Oct 2013 10:33 PM PDT சீனாவில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்து வைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்படி பெற்றுக் கொள்பவர்களுக்கு கட்டாய கருக்கலைப்பு செய்து வைக்கப்படுகிறது. மேலும் குறிப்பிட்ட அளவிலான தொகையும் அபராதமாக வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் Liu Xinwen(வயது 33) என்ற பெண்ணுக்கு கட்டாயமாக கருக்கலைப்பு செய்து வைக்கப்பட்டுள்ளது. ஆறு மாத கர்ப்பிணி பெண்ணான இவரை, நள்ளிரவில் மருத்துவமனைக்கு அழைத்து சென்று இந்த கொடூரத்தை அரங்கேற்றி உள்ளனர். இதுகுறித்து […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| சிறைச்சாலை கூரை மீது ஏறி சிறைக்கைதி போராட்டம் Posted: 05 Oct 2013 10:27 PM PDT மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறைக்கைதியொருவர் இன்று காலை முதல் கூரை மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றார். மட்டக்களப்பு சிறைச்சாலையில் பாலியல் துஸ்பிரயோக வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் புதூரை சேர்ந்த அன்டனி ஜெயராஜ் என்பவே இவ்வாறு போராட்டத்தில் குதித்துள்ளார். இவரை பொலநறுவையில் உள்ள சிறைச்சாலைக்கு இடமாற்றுவதற்கு நடவடிக்கையெடுக்கப்பட்டுவருவதாகவும் தன்னால் அங்கு செல்ல முடியாது என தெரிவித்தே அவர் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகளிடம் வினவியபோது, குறித்த கைதி தண்டனை வழங்கப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |



