ஈகரை தமிழ் களஞ்சியம் |
- கொசுக்கள் ஏன் சிலரை மட்டுமே அதிகமாகக் கடிக்கின்றன?
- சிக்ஸ் பேக்கில் கரீனா கபூர்!
- நடிகை சுனைனா இனி அனுஷா!
- ஒரே கம்ப்யூட்டரில் 2 ஓ எஸ் செயல்படுத்துவது எப்படி?
- mobile flash செய்வது ஏப்படி? (nokia x2)
- கோடாங்கி
- முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
- 2016 அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார் சோனியா காந்தி
- மலேசியா: ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் அடுத்த இலக்கு: குண்டர் கும்பலில் பெண்கள், மாணவர்கள்!
- முஸ்லிம்களின் இடுகாட்டில் அடக்கம் செய்த உடலை தோண்டி வெளியே வீசிய கும்பல்: பாகிஸ்தானில் அட்டூழியம்
- வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் புதுச்சேரி, பாம்பன், தூத்துக்குடியில் எண் 1 புயல் எச்சரிக்கை கூண்டு
- மாமியாருக்கு ஆபரேஷன்னு அழும் மருமகள்..!
- சமாதானத்துக்கான நோபல் பரிசு
- நான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?!
- வேடந்தாங்கலில் ஒரு நாள் !
- பணம் கொட்டும் பழங்கால நாணயங்கள்!
- பள்ளிக்கு போறோம்..!
- இந்தியாவில் கழிவறைகள் கட்ட பில்கேட்ஸ் நிதியுதவி
- நையாண்டி' பட விவகாரம் : மன்னிப்பு கேட்டார் நஸ்ரியா!
- printvideo
- படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -59)
- நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது
- ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..!
- யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார்
- புயல் கூண்டுகள் குறித்த விளக்கம்
- சரித்திர நாவல்களின் பட்டியல் வேண்டும்
- பையனுக்கு லேடீஸ் காலேஜ்ல சீட் கிடைக்கலே...!
- கன்னிகா தானம் பண்ண சொல்லு..!!
- சாலை நடுவில் பூத்த பூக்கள்
- புதியதோர் உலகம்
- நவராத்திரி வழிபாடு
- சப்த கன்னியர்
- பெண்ணின் பெருமை..! - கருமுத்து
- ஈஷா கிரியா தியானம் காணொளி எழுத்து வடிவில்!!
- கணினி தொடர்பான செய்முறை விளக்க புத்தங்கள் மின் நூல் வடிவில் (தமிழ் மற்றும் ஆங்கிலம் )
- உங்க அப்பாவைக் கேட்டுத் தெரிஞ்சுக்க...!
- லப்டப்... லப்டப்..!
- ஏன் இந்த பாகுபாடு??
- இன்று உலக அஞ்சல் தினம்
- மலேசியா: குண்டர் கும்பல் என்று தெரிந்தால் சுடுவோம்! பின்னர் தான் விசாரணை!
- அதிகம் பேசும் விழிகள்..!
- லட்டு – சிறுவர் பாடல்
| கொசுக்கள் ஏன் சிலரை மட்டுமே அதிகமாகக் கடிக்கின்றன? Posted: 09 Oct 2013 02:48 PM PDT - சாதாரணமாக நம்மைக் கடிப்பது பெண் கொசுக்கள்தான். அவை யாரைக் கடிக்க வேண்டும் என்பதைப் பார்வை, மோப்ப சக்தி மூலம் கண்டறிகின்றன. அவற்றின் உணர்கொம்புகள் மூலம் 72 வகையான மணங்களை உள்வாங்கிக்கொள்ள முடியும். இந்த 72 வகையான மணங்களில் 27 வேதிப்பொருள்கள் நமது வியர்வையில் இருப்பவை. நமது வியர்வையில் இருக்கும் அப்படிப்பட்ட வேதிப் பொருள்களில் கார்பன் டை ஆக்சைடு, ஆக்டனால், நோனனால் போன்றவை அடங்கும். ஒருவரது வியர்வையில் இந்த வேதிப்பொருள்களின் அடர்த்தி அதிகமாக இருந்தால், கொசுக்கள் அவர்களைக் ... |
| Posted: 09 Oct 2013 02:45 PM PDT -- – 'Shuddhi' என்னும் இந்தி படத்திற்காக சிக்ஸ் பேக் வைக்கவிருக்கிறார் கரீனா கபூர். - கரண் மல்கோத்ரா இப்படத்தினை இயக்கவிருக்கிறார். ஹிரித்திக் ரோஷன் நாயகனாக நடிக்கும் இப்படத்தினை தயாரிக்கிறார் இயக்குநர் கரண் ஜோஹர். டிசம்பர் மாதம் முதல் படப்பிடிப்பு துவங்கப் போகிறார்களாம். - இப்படத்திற்காக தற்காப்பு கலைகளை கற்க திட்டமிட்டு இருக்கிறார் கரீனா கபூர். |
| Posted: 09 Oct 2013 02:36 PM PDT - 'காதலில் விழுந்தேன்', ' மாசிலாமணி', 'யாதுமாகி', ' வம்சம்', ' நீர்ப்பறவை', 'சமர்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சுனைனா. ---- -- பெரியளவில் பட வாய்ப்புகள் கிடைக்காததால், இதனால் நியூமராலஜிப்படி தனது பெயரை அனுஷா என்று மாற்றியமைத்து இருக்கிறார். தற்போது ஸ்ரீகாந்த் ஜோடியாக நடித்து வரும் 'நம்பியார்' படத்தின் டைட்டில் கார்ட்டில் தனது பெயரை அனுஷா எ ன்று போடும்படி கூறியிருக்கிறார். - —————————————– |
| ஒரே கம்ப்யூட்டரில் 2 ஓ எஸ் செயல்படுத்துவது எப்படி? Posted: 09 Oct 2013 12:37 PM PDT ஒரே கம்ப்யூட்டரில் 2 ஓ எஸ் செயல்படுத்துவது எப்படி? மேலும் பார்ட்டிசன் செய்வது எப்படி? |
| mobile flash செய்வது ஏப்படி? (nokia x2) Posted: 09 Oct 2013 12:29 PM PDT uthavungal...... |
| Posted: 09 Oct 2013 12:12 PM PDT அண்மையில் ஒரு புதிய திரைப்படத்தில் "கோடாங்கி" என்னும் வார்த்தையை கேட்டேன். பொருள் புரியவில்லை , தெரியவில்லே. அது தமிழகத்தில் பயன்படுத்தப்படும் வார்த்தை என நினைக்கிறேன், அதன் பொருள் தெரிந்தவர்கள் தயவு செய்து விளக்கம் தருவீர்களா? |
| முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது Posted: 09 Oct 2013 11:40 AM PDT NO more time for love throwing myself into my careers right now plz regret the rumours guys.......... - --------------------------------- >Nayanthara Kurian |
| 2016 அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார் சோனியா காந்தி Posted: 09 Oct 2013 11:19 AM PDT . 2016 இல் தனது 70வதாவது வயதில் அரசியலில் இருந்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தி ஒய்வு பெறுவார் என பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் வெளியாகியுள்ள "24 அக்பர் சாலை" எனப் பெயரிடப்பட்டுள்ள புத்தகத்திலேயே இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.பிரபல எழுத்தாளரும் பத்திரிகையாளரும் சோனியா குடும்பத்திற்கு நெருக் கமானவருமான 'ரசீட் கிட்வாக' என்பவர் எழுதியுள்ள புத்தகத்திலேயே இந்த தகவல் இடம் பெற்றுள்ளது - By ராசாத்தி (தினமணி) |
| மலேசியா: ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையின் அடுத்த இலக்கு: குண்டர் கும்பலில் பெண்கள், மாணவர்கள்! Posted: 09 Oct 2013 10:22 AM PDT குண்டர் கும்பல்களில் மாணவர்களும் குடும்ப மாதர்களும் உறுப்பினர்களாக சேர்க்கப்படுவதைத் தடுக்க பெண்களுக்கான சிறப்பு ஓப்ஸ் சந்தாஸ் நடவடிக்கையை தேசிய காவல்துறை தொடங்கியுள்ளது. திங்கட்கிழமை முதல் பெண் அதிகாரிகளாலும், கண்காணிப்பாளர்களாலும் இந்நடவடிக்கை கிள்ளான் பள்ளத்தாக்கில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூட்டரசு காவல்துறை (புக்கிட் அமான்) விபச்சார, சூதாட்ட, குண்டர் கும்பல் ஒழிப்புப் பிரிவின் முதன்மை உதவி இயக்குநர் டத்தோ அப்துல் ஜாலில் ஹாசான் (படம்) கூறினார். பணத்தைக் காட்டி இடைநிலைப்பள்ளி மாணவர்களைக் ... |
| முஸ்லிம்களின் இடுகாட்டில் அடக்கம் செய்த உடலை தோண்டி வெளியே வீசிய கும்பல்: பாகிஸ்தானில் அட்டூழியம் Posted: 09 Oct 2013 10:07 AM PDT பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தை சேர்ந்தவர் புரோ பீல். இந்து தலித் சமுதாயத்தை சேர்ந்த இவர் ஒரு சாலை விபத்தில் இறந்துவிட்டார். அவரது உடலை உறவினர்கள் பதின் மாவட்டத்தில் உள்ள ஹாஜி பகீர் இடுகாட்டில் அடக்கம் செய்தனர். அடக்கம் செய்த 12 மணி நேரத்தில் ஒரு கும்பல் அங்கு வந்து புரோ பீல் உடலை தோண்டி எடுத்து வெளியே வைத்தனர். முஸ்லிம்களின் இடுகாட்டில் இந்து உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது என்று அந்த கும்பல் எதிர்ப்பு தெரிவித்தது. சுமார் 8 மணி நேரமாக திறந்த வெளியில் அந்த உடல் இருந்தது. இதுபற்றி ... |
| Posted: 09 Oct 2013 10:02 AM PDT சென்னை: அந்தமான் தீவுக்கு வடக்கே வங்கக் கடலில் நேற்று குறைந்த காற்றழுத்தம் உருவானது. காற்றின் போக்கு சாதகமாக இருப்பதால் அது மேலும் வலுப்பெற்று புயலாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த புயலுக்கு பைலின் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. தற்போது அந்த புயல் விசாகப்பட்டினத்தில் இருந்து கிழக்கு மற்றும் தென்கிழக்கே 1300 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இன்னும் 22 மணி நேரத்தில் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா இடையே இந்த புயல் கரையை கடக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தற்போது பைலின் புயல், வடக்கு ... |
| மாமியாருக்கு ஆபரேஷன்னு அழும் மருமகள்..! Posted: 09 Oct 2013 09:58 AM PDT - உங்க மாமியாருக்கு இன்னும் ஆபரேஷனே ஆரம்பிக்கலை, அதுக்குள்ளே அழறீங்களே? - ஆபரேஷனுக்கு அப்புறம் அழுதா அவங்களுக்கு தெரியாதே, டாக்டர்..! - ------------------------------------------------------------------------------------ - ஒருத்தர் ஒருத்தரா அனுப்புங்க சிஸ்டர்...! - ஒருத்தர்தான் இருக்கார் டாக்டர்..!! - ------------------------------------------------------------------------------------- - டாக்டர்! எனக்கு வாழவே பிடிக்கலை...! - நீங்க என்கிட்டே வரும்போதே நினைச்சேன்..! - ------------------------------------------------------------------------- - தீபாவளிக்கு ... |
| Posted: 09 Oct 2013 09:56 AM PDT - – சமதானத்துக்கான நோபல் பரிசு பாகிஸ்தானில் பெண் சிறார்களின் கல்விக்காக போராடும் மலாலா யூசப்சைக்கு வழங்கப்பட வேண்டுமென பெரும்பாலோனோர் விருப்பம் தெரிவித்துள்ளனர். எனினும் மலாலாவின் இளவயது இப்பரிசைப் பெறுவதற்கான பக்குவத்தைக் கொண்டிருக்காது என விமர்சனமும் எழுந்துள்ளது. - கொங்கோவில் சிவில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான பெண்களுக்கு மருத்துவம் பார்த்த டாக்டர் டெனிஸ் முக்வேகேவிற்கும் இப்பரிசு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. - ================ |
| நான்கு தமிழ் வார்த்தை கற்றுக்கொடுத்தது குத்தமா...?! Posted: 09 Oct 2013 09:48 AM PDT - சீரியல்ல உங்களுக்கு மூன்று கதாபாத்திரமா? அப்ப மூன்று வேடங்களில் நடிக்கிறீங்களா? - இல்ல, ஒரே வேடம்தான. முதல் பத்து வருடம் கதாநாயகி, அடுத்த பத்து வருடம் அம்மா, அடுத்த பத்து வருடம் பாட்டியா நடிக்கிறேன்…! - >கனக கு.ராமசாமி - ------------------------------- - மன்னா…எதிரிப்படைகள் திரண்டு வந்துவிட்டன இந்த நேரத்தில் பேச்சாளர்களை போர்க்களத்திற்கு அனுப்பி வைத்துள்ளேன் …என்று சொல்கிறீர்களே…! - அவர்கள்தானே நமது பிரச்சார பீரங்கிகளாயிற்றே…! - >வெ.பாலாஜி - ----------------------------------- - புலவரிடம் ... |
| Posted: 09 Oct 2013 09:05 AM PDT " வேடந்தாங்கல் " - பாடப்புத்தகங்களிலும் , வருடத்திற்கு ஒரு முறையோ இரண்டு முறையோ நாளிதழ்களிலும் இடம்பெறும் ஒரு பெயர் . ஒவ்வொரு முறையும் இந்தப்பெயரை பார்க்கும்போதும் , கேட்கும்போதும் ஒரு முறையாவது அங்கு செல்ல வேண்டும் என்ற ஆசை நம் எல்லோருக்கும் துளிர் விடும் . நீண்ட காத்திருத்தலுக்குப் பிறகு இன்று தான் வாய்ப்பு அமைந்தது . வேடந்தாங்கல் - இந்தியாவின் மிகப்பழமையான நீர் சார்ந்த பறவைகள் சரணாலயம் . இது 300 ஆண்டுகள் பழமையானதாகும் . 250 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளூர் கிராம மக்களால் சிறப்பாக பராமரிக்கப்பட்டு ... |
| பணம் கொட்டும் பழங்கால நாணயங்கள்! Posted: 09 Oct 2013 08:36 AM PDT சமீபத்தில் அரசாங்கத்தால் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 25 பைசா நாணயம் உங்களிடம் கிடைத்தால் இனி தூக்கி எறிந்துவிடாதீர்கள். காரணம், அதன் மதிப்பு இன்றைக்கு 30 ரூபாய் என்கிறார்கள். 25 காசுக்கே இவ்வளவு மதிப்பு என்றால், பழங்கால நாணயத்திற்கு இன்னும் எவ்வளவு மதிப்பு இருக்கும்! உங்களிடம் பழங்கால நாணயங்கள் இருந்தால், அதை வைத்தே நீங்கள் பல ஆயிரம் ரூபாயைச் சம்பாதிக்கலாம். எப்படி என மெட்ராஸ் காயின் சொஸைட்டியின் நிறுவனர் டி.ஹெச்.ராவிடம் கேட்டோம். நாணயச் சங்கம்! ''மெட்ராஸ் காயின் சொஸைட்டி, நாணயம் ... |
| Posted: 09 Oct 2013 08:04 AM PDT தோளில் பையைத் தூக்கி துள்ளித் துள்ளி நடந்து பள்ளிக்கூடம் போறோம் – நாங்க பாடம் படிக்க போறோம்! - அதிக வேகம் போறோம் ஆறு கடந்துத் போறோம் புதிய புதிய பாடம் படிக்க – நாங்க புத்துணர்ச்சியோடு போறோம்! - வண்டி ஏறிப் போறோம் வலியை மறந்து போறோம் ஏற்றம் தரும் பாடம் – நாங்க எழிலாய் கற்கப் போறோம்! - பாடம் நன்கு படித்து பரிசு பலவும் பெற்று பேறு வாங்கப போறோம்-எங்க பெருமை நாட்டப் போறோம்! - வருங்காலம் வளமாய் மாற வழியைக் கற்கப் போறோம் புதிய பாதை போட்டு – நாட்டை புதியதாக்கப் ... |
| இந்தியாவில் கழிவறைகள் கட்ட பில்கேட்ஸ் நிதியுதவி Posted: 09 Oct 2013 08:03 AM PDT இந்தியாவில் கழிவறை வசதிகளை ஏற்படுத்த மைக்ரோசாப்ட் துணை நிறுவனர் பில் கேட்ஸின் பில் அன்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மூலமாக நிதியுதவி செய்கிறார். பில்கேட்ஸ், மத்திய அரசுடன் இணைந்து இந்தியாவில் போதுமான கழிவறை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முன்வந்துள்ளார். இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் பாதி பேர் திறந்தவெளியைத் தான் கழிவறையாகப் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, இந்தியாவுக்கு தற்போதைய முக்கிய தேவை கழிவறை என்பதை உணர்ந்து பில்கேட்ஸ் இந்த நிதியுதவியை அளித்துள்ளார். இந்தியாவில் கழிவறை வசதி ... |
| நையாண்டி' பட விவகாரம் : மன்னிப்பு கேட்டார் நஸ்ரியா! Posted: 09 Oct 2013 07:41 AM PDT 'நய்யாண்டி' படத்தில் நஸ்ரியாவுக்கு டூப் நடிகையை வைத்து ஆபாச காட்சி காட்டிய விவகாரம் தற்போது முடிவுக்கு வர உள்ளது. இந்த பிரச்சனையில் நடிகை நஸ்ரியா டைரக்டர் சற்குணம் மற்றும் தயாரிப்பாளர் எஸ்.கதிரேசன் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இது குறித்து இயக்குனர் சற்குணம் வெளியிட்ட அறிக்கையில், மீடியா நண்பர்களுக்கு பாடலைத் திரையிட்டுக் காட்டுகிறேன். நஸ்ரியாவும் பாடலைப் பார்த்து பதில் சொல்லட்டும். உறுத்தலாக இருந்தால் அந்தக் காட்சியை நீக்கவும் தயார்' என்றார். இன்று காலையில் நஸ்ரியாவின் தந்தை ... |
| Posted: 09 Oct 2013 06:27 AM PDT நான் எனது கம்ப்யூட்டர் வேலைசெய்வதை வீடியோ பதிவுபண்ண மென்பொருள் இருந்த கூறுங்கள் |
| படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -59) Posted: 09 Oct 2013 05:47 AM PDT வணக்கம் ஈகரை உறவுகளே .. இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 3 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -3 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள். மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் . இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை குறிப்பு : நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட ... |
| நல்ல தமிழ் அறிவோம் -ஔவையாரின் நல்வழி தொடர் பதிவு -முடிந்தது Posted: 09 Oct 2013 05:15 AM PDT மூதுரையை தொடர்ந்து நல்வழியை ஈகரை உறவுகளுக்கு அளிக்கும் முயற்சியை தொடர்ந்துள்ளேன்.... நல்வழி என்பது நல்லவர்கள் சொல்லும் வழி, நல்ல கதிக்கு செல்லும் வழி என்ற பொருள்படும். மூதுரையை போல், மக்கள் வாழ அறிவுரையை கூறும் பாடல்களை உடையது நல்வழி, ஒரு சில பாடல்கள் நாம் பள்ளியில் படித்து இருந்தாலும், நூலில் உள்ள அனைத்து பாடல்களையை படிக்கும் வாய்ப்பு அனைவருக்கும் கிட்டியதில்லை. இப்படி நாம் படித்து ரசித்த பாடல்களையும், பார்க்காமல் விட்ட பாடல்களையும் இத்திரியில் பொருளுடன் பதிக்கிறேன், உங்கள் ஆதரவுடன் ......... தவறு ... |
| ஒளவையாருக்கு ரமணர் சொன்ன பதில்..! Posted: 09 Oct 2013 05:13 AM PDT சித்திரை மாத பௌர்ண மிக்கு தனிச் சிறப்பு உண்டு. அந்த நன்னாளில் ரமணாசிரமத்தில் நடந்த சுவையான நிகழ்ச்சிகளில் ஒன்று. - ஆசிரமத்தில் உணவு உண்ட பின்னர் ஓய்வடுத்த சோமசுந்தர சுவாமி என்பவர் நீண்ட அறையில் படுத்துக் கொண்டு தன் வயிற்றைத் தடவியபடி ஒளவையாரின் பாடல் ஒன்றைப் பாடினாரராம் - ''ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய் இரு நாளைக்கு ஏலென்றால் ஏலாய் ஒரு நாளும் என்னோ அறியாய் இடும்பை கூர் என் வயிறே உன்னோடு வாழ்தல் அரிது'' - இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டிருந்த ரமண மகரிஷி, வயிறு ... |
| யாருடன் வாழ்வது கடினம் - ஔவையார் Posted: 09 Oct 2013 05:06 AM PDT ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய் இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய்-ஒருநாளும் என்னோ வறியாய் இடும்பைகூர் என்வயிறே உன்னோடு வாழ்தல் அரிது. இடும்பைகூர் என் வயிறே -துன்பம் மிகுக்கின்ற என்னுடைய வயிறே; ஒருநாள் உணவை ஒழி என்றால் ஒழியாய் - (கிடையாதபோது) ஒருநாளுக் குணவை விட்டிரு என்றால் விட்டிராய்; இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய் - (கிடைத்தபோது) இரண்டு நாளுக்கு ஏற்றுக்கொள்ளென்றால் ஏற்றுக்கொள்ளாய்; ஒருநாளும் என் நோ அறியாய் - ஒரு நாளிலாயினும் என்னுடைய வருத்தத்தை அறியாய்; உன்னோடு வாழ்தல் அரிது - (ஆதலினால்) ... |
| புயல் கூண்டுகள் குறித்த விளக்கம் Posted: 09 Oct 2013 04:47 AM PDT - புயல் எச்சரிக்கை விடுக்க துறைமுகங்களில் ஏற்றப்படும் புயல் கூண்டுகள் குறித்த விளக்கங்களின் விபரம் பின்வருமாறு : ஒன்றாம் எண் எச்சரிக்கையால், புயல் உருவாகக்கூடிய வானிலைப் பகுதி ஒன்று ஏற்பட்டுள்ளது என அர்த்தம். இரண்டாம் எண், புயல் உருவாகியுள்ளது என்று எச்சரிப்பதற்காக ஏற்றப்படுகிறது. மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை விடப்படுமானால், திடீர் காற்றோடு மழை பொழியக்கூடிய வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்று பொருள். நான்காம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகம் புயல் அச்சுறுத்தலுக்கு ... |
| சரித்திர நாவல்களின் பட்டியல் வேண்டும் Posted: 09 Oct 2013 04:42 AM PDT நண்பர்களே நமது ஈகரை இணய தளத்தில் பதிவிட பட்டுள்ள சரித்திர நாவல்களின் பட்டியல் வேண்டும் கிடைக்குமா ..? ![]() |
| பையனுக்கு லேடீஸ் காலேஜ்ல சீட் கிடைக்கலே...! Posted: 09 Oct 2013 04:30 AM PDT - தலைவரோட நாற்பது வருஷ மேடைப் பேச்சை பாராட்டி விருது கொடுக்குறாங்க…! - என்ன விருதாம்? - வாழ்நாள் சோதனையாளர் விருதாம்…!! - >யுவகிருஷ்ணா - ------------------------------------ - உங்க சொந்த ஊர் எதுங்க? - எனக்கு திண்டுக்கல் பக்கம். உங்களுக்கு? - எனக்கு திண்டுக்கல் தூரம்ங்க..! - >கொளக்குடி சரவணன் - ---------------------------------------- - நான் மந்திரி ! தெரியுமில்லே? - இருக்கட்டும், அதுக்காக உங்க பையனுக்கு லேடீஸ் காலேஜிலெல்லாம் சீட் தர முடியாது சார்..! - >கொளக்குடி சரவணன் - -------------------------------------- - ஹலோ…சத்தமா ... |
| Posted: 09 Oct 2013 04:25 AM PDT எதுக்கு ஏட்டய்யா லத்தியைக் கொண்டு போய் செல்போன் சார்ஜர்ல சொருகி வெச்சிருக்கீங்க? - இன்ஸ்பெக்டர்தான் 'லத்தி சார்ஜ்' பண்ணச் சொன்னார்..! - >யுவகிருஷ்ணா - -------------------------------- - எங்க அப்பா நிறைய தானம் பண்ணுவார்…! - அப்ப உன்னை எனக்கு கன்னிகா தானம் பண்ணித் தரச் சொல்லு…! - >வி.சாரதிடேச்சு - ------------------------------- - ஆபிஸ் ஃபைல்ல 'லவ்' லெட்டர் வச்சு நீ அடிக்கடி லேடி டைப்பிஸ்டுக்கு அனுப்பறயாமே? - ஆமாம் சார்…ஒண்ணா ஒரே ஆபிஸ்ல வேலை பாக்குறோம் லெட்டரை தபால்ல அனுப்பினா ... |
| Posted: 09 Oct 2013 04:11 AM PDT - கீழ்வானில் நித்தமும் சித்திரம் தீட்டி அழித்துக் கொண்டிருக்கிறான் திருபதி ஆடையாத ஓவியன் ஒருவன்! - ———————————– - கரையோரத்துப் புற்களென கவலைகள் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருப்பினும் நதி போல ஓடிக்கொண்டுதானிருக்கிறது வாழ்க்கை! - ————————————– - இரண்டு வழிப் பாதைகளில் வெட்டப்பட்ட மரங்களுக்கு அஞ்சலி செலுத்துகிறது சாலை நடுவில் பூத்த பூக்கள்..! - ===================== >சிக்ஸ்முகம் நன்றி: மல்லிகை மகள் |
| Posted: 09 Oct 2013 03:54 AM PDT நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் இது ஒரு சிறுகதை மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கதை. புதிதாக பிறந்தான் உலகத்தில் 1990ம் ஆண்டு சொர்க்கபூமியில் தாய் தேவதை தந்தை தேவன். இவர்களுக்கு பிறந்த குழந்தைதான் கதிர் இன்று சென்னை கல்லூரியில் இளங்கலை கணிதம் படித்துக் கொண்டிருக்கிறான். இவனுக்கு ஒரு கெட்ட பழக்கம் யாரிடத்திலும் கொஞ்சம் அதிகமாகவே பாசத்தை வைத்துவிடுவான் அவர்கள் பிரியும் போது மிகவும் கஷ்டப்படுவான். அப்போதுதான் அவனுக்கு கல்லூரியில் ஒரு பெண் நண்பி கிடைத்தாள். அவளுடன் பேச ஆரம்பித்த ... |
| Posted: 09 Oct 2013 03:44 AM PDT -- நன்றி : தினமலர் -- நவராத்திரி வழிபாடு தோன்றிய காரணம்! நவராத்திரியின் சிறப்புப் பற்றியும், இதை அனுஷ்டிக்க வேண்டிய முறை, கிடைக்கக்கூடிய பலன்கள் பற்றியும் தேவி மஹாத்மியத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. முன்னொரு காலத்தில் சும்பன், நிசும்பன் என இரு அசுரர்கள் இருந்தார்கள். அவர்கள் தெய்வங்களிடம் வரம் பல பெற்று, தங்களை அழிக்க யாருமில்லை என்று தலைக்கனம் பிடித்துத் திரிந்தார்கள். அவர்களது ஆட்சிக்காலத்தில் மக்கள் மிகவும் அல்லலுற்றனர். தவசீலர்களால் வேள்விகளைச் செய்ய முடியவில்லை. அனைவரும் இந்த இரு ... |
| Posted: 09 Oct 2013 03:43 AM PDT பெரும்பாலான அம்மன் கோயில்களிலும் கிராம கோயில்களிலும் சப்த கன்னியர் வரிசையாக ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டு இருப்பதை பார்த்திருக்கலாம். பிராம்மி, மகேஸ்வரி, நாராயணி, வாராகி, இந்திராணி, கௌமாரி, சாமுண்டி ஆகிய ஏழு பெண் தெய்வங்களே சப்த கன்னியர். பிராம்மி – பிரம்மாவின் படைப்பு தொழிலுக்கு துணை நிற்பவள். மகேஸ்வரி – தீமைகளை அழிக்கும் தீக்கண்ணனுக்கு இடப்பக்கம் இருப்பவள். நாராயணி – அனைத்து உலகங்களையும் பரிபாலனம் செய்ய திருமாலுக்கு உதவியாக இருப்பவள். வாராகி – பரந்தாமனின் வராக வடிவோடு ... |
| பெண்ணின் பெருமை..! - கருமுத்து Posted: 09 Oct 2013 03:00 AM PDT பெண் தாரம் ஆகிறாள் தாயாகிறாள் தலைவியாகிறாள் மண்ணிலே உலவுகிறாள் விண்ணிலே பறக்கிறாள் - பொறுமையில் இலக்கணம் பெண்! பொங்கினால் மறு பெயர் கண்ணகி! இன்பத்தையும் துன்பத்தையும் பங்கு போடுபவள் பெண் - பெண் விடுதலைக்காகப் போராடும் பேரியக்கங்கள் எத்தனை! எத்தனை! - பெண் இல்லை என்றால் மண் இல்லை பெண்ணுக்கு விடுதலை எந்நாளோ? அந்நாளே மகாத்மா கண்ட கனவுக்கு விடுதலை! - ——————— >கருமுத்து கவிதைப்புனல் கவிதை தொகுப்பிலிருந்து |
| ஈஷா கிரியா தியானம் காணொளி எழுத்து வடிவில்!! Posted: 09 Oct 2013 02:30 AM PDT |
| கணினி தொடர்பான செய்முறை விளக்க புத்தங்கள் மின் நூல் வடிவில் (தமிழ் மற்றும் ஆங்கிலம் ) Posted: 09 Oct 2013 02:18 AM PDT Ultimate Guide to Samsung Galaxy 2013 - Top 50 Must Have Apps Ebbok Free Download Link http://www18.zippyshare.com/v/7764612/file.html 3.10.2013-WebUser Tech Magazine Pdf Free Download Link.... http://www41.zippyshare.com/v/67469711/file.html 3.10.2013--MicroMart(UK) Magazine Pdf Free Download Link....... http://www41.zippyshare.com/v/14954923/file.html 2013-The Samsung Galaxy Book - Volume 2 Pdf Free Download Link.... http://www.mediafire.com/download/g7l6nuv9oflkbwx/The+Samsung+Galaxy+Book+-+Volume2+2013%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf October2013- ... |
| உங்க அப்பாவைக் கேட்டுத் தெரிஞ்சுக்க...! Posted: 09 Oct 2013 02:02 AM PDT - எனக்கு கோபம் வந்தா என்ன ஆகும் தெரியுமா? - தெரியாது மம்மி...! - உங்கப்பாவைக் கேட்டு தெரிஞ்சுக்க...! - ----------------------------------------------------------------------------------- - திருடன் சமையலறையில் புகுந்து நான் சமைச்சு வச்ச பிரியாணியை எடுத்து சாப்பிட்டுகிட்டு இருக்கான்...உடனே போன் பண்ணுங்க...! - போலீஸூக்கா...ஆம்புலன்ஸூக்கா..? - ----------------------------------------------------------------------------- - உனக்கு கல்யாணம் ஆகி அஞ்சு வருஷமாச்சா...? இதை ஏன் இவ்வளவு ... |
| Posted: 09 Oct 2013 02:01 AM PDT டாக்டர் என்றதுமே 'நினைவு வருவது அவர் கழுத்தில் தொங்கும் ஸ்டெதாஸ்கோப் மாலை. உங்களுக்கும் கழுத்தில் ஸ்டெதாஸ்கோப்பைத் தொங்கவிட்டுக்கொண்டு, நடக்கும் ஆசை இருக்கும். இந்த 'ஸ்டெதாஸ்கோப்' உருவானது எப்படி? செயல்படுவது எப்படி என்று பார்ப்போமா... 'ஸ்டெதாஸ்கோப்' கருவியைக் கண்டுபிடித்தவர் 'லென்னே' என்கிற பிரெஞ்சு மருத்துவர். 1781-ல் பிறந்த இவரின் முழுப் பெயர் ரினே தியோஃபில் ஹையஸிந்த் லென்னே (Rene Theophilie Hyacinthe Laennec). அவர் ஸ்டெதாஸ்கோப்பைக் கண்டுபிடித்ததே ஒரு சுவாரஸ்யமான கதை. லூவர் என்ற இடத்தில் ... |
| Posted: 09 Oct 2013 01:50 AM PDT முகநூலில் சில நாட்களுக்கு முன்பாக நண்பர் ஒருவர் பதிவிட்டு இருந்தார்.அதாவது வெளிநாடுகளில் இருந்து,அதிலும் குறிப்பாக அமெரிக்க,ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு பயணிக்கும் போது, ஒரே விமானமாக இல்லாமல் முதலில் துபாய் அல்லது சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு வந்து,மீண்டும் அங்கிருந்து மற்றுமொரு விமானத்தில் இந்தியாவை நோக்கி பயணிப்பவர்களே அதிகம்.காரணம் நேரடி விமானங்களில்,விமான கட்டணம் அதிகமாக இருக்கும் வாய்ப்புண்டு. அப்படி நாம் பயணிக்கும் தருணங்களில்,அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் இருந்து துபாய், ... |
| Posted: 09 Oct 2013 01:32 AM PDT 1874ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதியன்று சுவிசர்லாந்து 'பேர்ன்' நகரில் சர்வதேச அஞ்சல் ஒன்றியம் நிறுவப்பட்ட நாளை, உலக அஞ்சல் தினமாகக் கொள்ளப்படுகிறது. அஞ்சல் தினம் இன்றோடு 139 ஆண்டுகளைத் தொட்டு விட்டது. "உலகின் பல்வேறு நாடுகளுக்கும் உரிய புவியியல், அரசியல், மதம் போன்ற பல்வேறு எல்லைகளையும், தடைகளையும் தாண்டி எமது மக்களை முழு உலகுக்கும் இணைக்கின்றோம். மக்கள் அவர்களுக்குரிய பிரத்தியேகமானதும், மிகப் பெறுமதி வாய்ந்ததுமான தகவல்களையும்,பொருட்களையும் எம்மிடம் ஒப்படைப்பது, அவற்றைப் பாதுகாத்து மிக வேகமாகவும் ... |
| மலேசியா: குண்டர் கும்பல் என்று தெரிந்தால் சுடுவோம்! பின்னர் தான் விசாரணை! Posted: 09 Oct 2013 12:54 AM PDT குண்டர் கும்பல் என்று தெரிந்தால் சுடுவோம்! பின்னர் தான் விசாரணை! – சாஹிட் ஒப்புதல் குற்றவாளிகளைப் பிடிக்க முயற்சி செய்யுங்கள்.. சுட வேண்டாம்…என்று அரசு சாரா இயக்கங்கள் காவல்துறைக்கு எதிராகப் பல ஆண்டுகளாகக் கூறி வந்தாலும், குற்றவாளிகளைச் சுட்டுக்கொல்வது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இவ்விவகாரம் ஒருபுறம் இருக்க உள்துறை அமைச்சர் சாஹிட் ஹமீடி கடந்த சனிக்கிழமை விடுத்த அறிக்கையில், குற்றவாளிகளை முதலில் சுடுவது, அதன் பின்னர் விசாரணை செய்வது தான் சரி என்று வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டிருக்கிறார். பாதுகாப்பு ... |
| Posted: 09 Oct 2013 12:33 AM PDT -- ---- இதழ்களை விட விழிகளே அதிகம் பேசுகின்றன காதலர்கள் ! இருளில் ஒளி வந்தது எண்ணம் ! வாய்ப்பு வழங்கியும் திருந்த மறுக்கும் அரசியல்வாதிகள் ! சுமையாய் நினைத்தால் பறக்க முடியாது சிருகுகள் ! இமைகள் மூடியும் வரவில்லை தூக்கம் அவள் நினைவு ! . ======================= –கவிஞர் இரா .இரவி ! |
| Posted: 09 Oct 2013 12:09 AM PDT லட்டு லட்டு லட்டு தட்டு நிறைய லட்டு! - உருண்டை பூமி போல உருட்டி வைத்த லட்டு! - கடலை மாவில் பூந்தி செய்து கணக்காய் செய்த லட்டு! - சீனிப்பாகில் ஊற வைத்து சீராய் உருட்டிய லட்டு! - ஏலம், முந்திரி சேர்த்து மஞ்சளாய் மின்னும் லட்டு! - சின்னச் சின்ன மழலைகள் சிரித்து ருசிக்கும் லட்டு! - ————— .பெ.சரஸ்வதி நன்றி:தங்கமலர் |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |