மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- நிலக்கரி சுரங்க முறைகேடு: தொழில் அதிபர் கே.எம்.பிர்லா மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு
- டெல்லியில் 30-ந்தேதி காங்.-பா.ஜனதாவுக்கு எதிராக 3-வது அணி கூட்டம்: ஜெயலலிதாவுக்கு இடதுசாரிகள் அழைப்பு
- சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை திறப்பு
- 18ம் தேதி முதல் ராஜஸ்தானில் இந்தியா - ரஷ்ய வீரர்கள் கூட்டுப் போர் பயிற்சி
- அன்னா ஹசாரே ஆஸ்பத்திரியில் அனுமதி: விரைவில் ஆபரேஷன் செய்ய டாக்டர்கள் முடிவு
- உ.பி.: முசாபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.6.84 கோடி இழப்பீடு வழங்க அரசு உத்தரவு
- இந்திய மீனவர் சுட்டுக்கொலை: பாகிஸ்தான் தூதரை நேரில் அழைத்து கண்டனம்
- மூன்றாவதும் பெண்ணாக பிறந்ததால் மதுவை ஊற்றி கொன்ற தந்தை தலைமறைவு
- எனது தலைமை மீது தொண்டர்கள் நம்பிக்கை இழந்தால் பதவி விலகுவேன்: உத்தவ் தாக்கரே
- ஏர் இந்தியா விமானத்தில் பரிமாறப்பட்ட 'ஸாண்ட்விச்'சில் புழு
- காஷ்மீர் எல்லைப் பகுதியில் பதுங்கியிருந்த 2 பாகிஸ்தான் தீவிரவாதிகள் கைது - ஆயுதங்கள் பறிமுதல்
- காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது தொடர்பாக தமிழ் மக்களுடைய உணர்வுகளை மதிப்போம்: பிரதமர் கடிதம்
- கற்பழிப்பு வழக்கு தொடர்பாக விசாரிக்க ஆசாராம் பாபு குஜராத் அழைத்து வரப்பட்டார்
- பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் குறித்து பிரதமர் அறிக்கை வெளியிடவேண்டும்: பா.ஜனதா வலியுறுத்தல்
- ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி விஸ்வ இந்து பரிசத் நடத்தும் யாத்திரைக்கு அகிலேஷ் அரசு தடை
- மோடியின் கான்பூர் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள மத்திய மந்திரிக்கு அழைப்பு
- நரேந்திர மோடியை எதிர்த்து பிரியங்கா பிரச்சாரமா? - காங்கிரஸ் மறுப்பு
- தீவிரவாதி துண்டாவின் உதவியாளர்கள் மூன்று பேரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
- கலப்பு திருமணம் செய்த மகாராஷ்டிர பழங்குடியின பெண்ணுக்கு மொட்டையடித்து சித்ரவதை: மாமியார் கைது
- பைலின் புயலில் இறந்தோர் எண்ணிக்கை 25 ஆக உயர்வு: சத்தீஷ்கர், பீகாருக்கு வெள்ள எச்சரிக்கை
| நிலக்கரி சுரங்க முறைகேடு: தொழில் அதிபர் கே.எம்.பிர்லா மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு Posted: 14 Oct 2013 10:56 PM PDT நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக தொழில் அதிபர் கே.எம். பிர்லா மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது. மத்திய அரசு நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாகவும், இதனால் அரசுக்கு ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் கோடிக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் கணக்கு தணிக்கை துறை குற்றம் சாட்டியது. இது பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான முக்கிய பைல்கள் மாயமாகிவிட்டது. இதற்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்ததுடன் |
| Posted: 14 Oct 2013 10:27 PM PDT விரைவில் 5 மாநில தேர்தல் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலும் வர இருக்கிறது. பாரதீய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செல்லத் தொடங்கி விட்டார். பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிரடி திட்டங்களை தீட்டி வருகிறார். காங்கிரஸ் கட்சிக்கு ராகுல்தான் பிரதமர் வேட்பாளர் என்று அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் கூறி வருகிறார்கள். காங்கிரசும் இப்போதே |
| சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை திறப்பு Posted: 14 Oct 2013 05:19 PM PDT ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, நாளை (16-ந் தேதி) மாலை திறக்கப்படுகிறது. சபரிமலை அய்யப்பன் கோவில் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் |
| 18ம் தேதி முதல் ராஜஸ்தானில் இந்தியா - ரஷ்ய வீரர்கள் கூட்டுப் போர் பயிற்சி Posted: 14 Oct 2013 03:30 PM PDT இந்தியா - ரஷ்ய நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்கள் வரும் 18ம் தேதி முதல் ராஜஸ்தான் மாநிலம் மகாஜன் பகுதியில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானத்தில் 10 நாட்கள் கூட்டுப் போர் பயிற்சியில் ஈடுபட உள்ளனர் |
| அன்னா ஹசாரே ஆஸ்பத்திரியில் அனுமதி: விரைவில் ஆபரேஷன் செய்ய டாக்டர்கள் முடிவு Posted: 14 Oct 2013 02:49 PM PDT பெருகிவரும் ஊழல்களுக்கு எதிராக வலுவான லோக்பால் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும் என்று போராடி வரும் அன்னா ஹசாரே புனேவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிராஸ்டேட் சுரப்பி எனப்படும் சிறுநீர் குழாய் தொடங்கும் இடத்தில் உள்ள சுரப்பியில் ஏற்பட்டுள்ள அடைப்பை |
| உ.பி.: முசாபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.6.84 கோடி இழப்பீடு வழங்க அரசு உத்தரவு Posted: 14 Oct 2013 02:29 PM PDT உத்தரபிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டத்தில் கடந்த மாத தொடக்கத்தில் ஒரு பெண்ணை கேலி செய்தது தொடர்பாக இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. பிறகு அது பெரும் மத கலவரமாக மாறியது. இரு தரப்பினரும் மாறி, மாறி தாக்கிக் கொண்டதில் சுமார் 50 பேர் பலியானார்கள் |
| இந்திய மீனவர் சுட்டுக்கொலை: பாகிஸ்தான் தூதரை நேரில் அழைத்து கண்டனம் Posted: 14 Oct 2013 02:06 PM PDT குஜராத் கடலில் சர்வதேச எல்லை அருகே 11-ந் தேதி இந்திய மீனவர்கள் 'தன்வதி' என்ற படகில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பாகிஸ்தான் கடற்பாதுகாப்பு அதிகாரிகள் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 30 பேர் பிடித்துச் செல்லப்பட்டனர் |
| மூன்றாவதும் பெண்ணாக பிறந்ததால் மதுவை ஊற்றி கொன்ற தந்தை தலைமறைவு Posted: 14 Oct 2013 01:28 PM PDT ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஷேக் இஸ்மாயில். மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு அவரது மனைவி |
| எனது தலைமை மீது தொண்டர்கள் நம்பிக்கை இழந்தால் பதவி விலகுவேன்: உத்தவ் தாக்கரே Posted: 14 Oct 2013 01:24 PM PDT மும்பை தாதர் சிவாஜி பார்க் மைதானத்தில் சிவசேனா சார்பில் பிரமாண்ட தசரா பொதுக்கூட்டம் நடந்தது. பால்தாக்கரே இறந்த பிறகு கட்சியின் தலைவரான அவர் மகன் உத்தவ் தாக்கரே தலைமையில் நடைபெறும் முதல் தசரா பொதுக்கூட்டம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. மாநிலம் முழுவதும் இருந்து தொண்டர்கள் வந்து குவிந்தனர் |
| ஏர் இந்தியா விமானத்தில் பரிமாறப்பட்ட 'ஸாண்ட்விச்'சில் புழு Posted: 14 Oct 2013 12:46 PM PDT டெல்லியில் உள்ள ரஜோரி கார்டன் பகுதியை சேர்ந்த ஒருவர் ஏர் இந்தியா விமானம் மூலம் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் இருந்து கடந்த மாதம் 28ம் தேதி புதுடெல்லி வந்தார். வரும் வழியில் பசியாற்றிக் கொள்ள 'ஸாண்ட்விச்' கொண்டுவரும்படி விமான பணிப்பெண்ணை அந்த பயணி கேட்டுக் கொண்டார். பணிப்பெண் கொண்டுவந்து தந்த ஸாண்ட்விச்சை சாப்பிடப் போனவர் அவற்றில் புழுக்கள் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். |
| காஷ்மீர் எல்லைப் பகுதியில் பதுங்கியிருந்த 2 பாகிஸ்தான் தீவிரவாதிகள் கைது - ஆயுதங்கள் பறிமுதல் Posted: 14 Oct 2013 12:30 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இந்தியா - பாகிஸ்தான் எல்லைக் கோட்டுப் பகுதியான டங்தார் என்ற இடத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் சிலர் இந்தியாவுக்குள் ஊடுருவ தயார் நிலையில் உள்ளதாக ராணுவத்தினருக்கு ரகசிய தகவல் வந்தது |
| காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது தொடர்பாக தமிழ் மக்களுடைய உணர்வுகளை மதிப்போம்: பிரதமர் கடிதம் Posted: 14 Oct 2013 12:16 PM PDT காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது தொடர்பாக தி.மு.க. மற்றும் தமிழ் மக்களுடைய உணர்வுகள் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களையும் மதித்து, பரிசீலித்து உரிய முடிவுகளை எடுப்போம் என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார் |
| கற்பழிப்பு வழக்கு தொடர்பாக விசாரிக்க ஆசாராம் பாபு குஜராத் அழைத்து வரப்பட்டார் Posted: 14 Oct 2013 11:17 AM PDT குஜராத்தை சேர்ந்த ஆன்மிக தலைவர் ஆசாராம் பாபு (வயது 72), ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் ஆசிரமம் நடத்தி வருகிறார். இந்த ஆசிரமத்தில் வைத்து உத்தரபிரதேச மாநிலம், ஷாஜகான்பூரை சேர்ந்த 16 |
| பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் குறித்து பிரதமர் அறிக்கை வெளியிடவேண்டும்: பா.ஜனதா வலியுறுத்தல் Posted: 14 Oct 2013 09:14 AM PDT பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி, எல்லையில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் அதிகாலை நேரம் காஷ்மீர் பூஞ்ச் எல்லையில் பலத்த ஆயுதங்களுடன் தீவிரவாதிகள் துணையுடன் நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தினர், ரோந்து சென்ற இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 5 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். |
| ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி விஸ்வ இந்து பரிசத் நடத்தும் யாத்திரைக்கு அகிலேஷ் அரசு தடை Posted: 14 Oct 2013 09:04 AM PDT ஆயோத்தியில் ராமர் கோவில் கட்ட பாராளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி உத்தரப்பிரதேச மாநிலம் பைசாபாத்தில் வரும் 18-ம் தேதி சங்கல்ப் திவாஸ் என்ற பேரணிக்கு விஸ்வ இந்து பரிசத் அழைப்பு விடுத்துள்ளது. |
| மோடியின் கான்பூர் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள மத்திய மந்திரிக்கு அழைப்பு Posted: 14 Oct 2013 05:45 AM PDT உத்தரப் பிரதேசத்தில் உள்ள கான்பூரில் வரும் 19-ம் தேதி நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசுகிறார். பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங், மதத் தலைவர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள கான்பூர் தொகுதியின் எம்.பி.யும், மத்திய அமைச்சருமான ஸ்ரீபிரகாஷ் ஜெய்சுவாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. |
| நரேந்திர மோடியை எதிர்த்து பிரியங்கா பிரச்சாரமா? - காங்கிரஸ் மறுப்பு Posted: 14 Oct 2013 05:21 AM PDT ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தில்லி, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அவருக்கு போட்டியாக காங்கிரஸ் கட்சியின் |
| தீவிரவாதி துண்டாவின் உதவியாளர்கள் மூன்று பேரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு Posted: 14 Oct 2013 04:25 AM PDT லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி அப்துல் கரிம் துண்டாவின் மூன்று முக்கிய உதவியாளர்களான அலாவுதின், முகமது பசிருதின், முகமது ஜகாரியா மீது, 1997-ம் ஆண்டு பாகிஸ்தான் மற்றும் வங்காளதேச தீவிரவாதிகளை இந்தியாவிற்குள் ஊடுருவ உதவியதாக வழக்கு பதியப்பட்டது. |
| கலப்பு திருமணம் செய்த மகாராஷ்டிர பழங்குடியின பெண்ணுக்கு மொட்டையடித்து சித்ரவதை: மாமியார் கைது Posted: 14 Oct 2013 03:56 AM PDT மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த 19 வயது பெண் ஒருவர், தன்னுடன் பணியாற்றிய வேறு சமூகத்தைச் சேர்ந்த யோகேஷ் பட்டீல் என்ற வாலிபரை காதலித்துள்ளார். இந்த காதலுக்கு யோகேஷ் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த எதிர்ப்பை மீறி கடந்த மே மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அந்த பெண் பிவண்டி தாலுகா பாலி கிராமத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு |
| பைலின் புயலில் இறந்தோர் எண்ணிக்கை 25 ஆக உயர்வு: சத்தீஷ்கர், பீகாருக்கு வெள்ள எச்சரிக்கை Posted: 14 Oct 2013 03:32 AM PDT அதி வேகப்புயல் 'பைலின்' கடந்த சனிக்கிழமை இரவு ஒடிசாவை தாக்குவதற்கு முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக 9 லட்சம் பேர் பத்திரமான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர். இதனால், மிகப்பெரிய அளவிலான உயிர் சேதம் தடுக்கப்பட்டது. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |