Tamil Star |
- இந்திய மாணவி ஆஸ்திரேலியாவில் மாயம்
- சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை திறப்பு
- இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டூழியம்
- ‘அல்லாஹ்’ என்ற சொல்லை முஸ்லிம் அல்லாதவர்கள் பயன்படுத்த முடியாது
- பிலிப்பைன்ஸ் நாட்டில் கடும் நிலநடுக்கம்: வீடுகள் இடிந்ததில் 4 பேர் பலி
- வட மாகாணசபையின் முதல் அமர்வு எதிர்வரும் 25ம் திகதி
- பெப்சி, கோக்குக்குத் தடை விவசாய அமைச்சர் அதிரடி
- ஐ.நாவின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க மறுக்கிறது அரசு
- இராணுவம் தொடர்ந்து மக்களுக்கு உதவும்: இராணுவத்தளபதி
- பாலச்சந்திரன் படுகொலை! இலங்கைக்கு எதிரான போலிப் பிரசாரங்களே!- பாதுகாப்பு அமைச்சு
| இந்திய மாணவி ஆஸ்திரேலியாவில் மாயம் Posted: 14 Oct 2013 10:10 PM PDT இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த நடாஷா நரங்(30) என்பவர் ஆஸ்திரேலியாவில் உள்ள டாஸ்மானியா பல்கலைக்கழகத்தில் ‘ஆஸ்திரேலியாவில் படிக்கும் இந்திய மாணவர்கள்’ என்ற தலைப்பில் முனைவருக்கான (பி.எச்.டி) ஆராய்ச்சி படிப்பில் ஈடுப்பட்டிருந்தார். தனது கணவருடன் டாஸ்மானியாவில் தங்கி படித்துவந்த அவரை கடந்த 4ம் தேதியில் இருந்து காணவில்லை என்று போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக சிலரை போலீசார் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணான தகவல்கள் கிடைத்தன. இந்நிலையில், டாஸ்மானியாவில் உள்ள ஆற்றங்கரை ஓரத்தில் நடாஷா நரங்கின் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை திறப்பு Posted: 14 Oct 2013 09:53 PM PDT ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, நாளை (16-ந் தேதி) மாலை திறக்கப்படுகிறது. சபரிமலை அய்யப்பன் கோவில் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த திருவிழா நாட்களில் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து லட்சக் கணக்கான பக்தர்கள் சபரி மலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். இந்த திருவிழா நாட்கள் தவிர, […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டூழியம் Posted: 14 Oct 2013 09:49 PM PDT புதுக்கோட்டை மீனவர்கள் 15 பேர் எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் நள்ளிரவில் படகுகளுடன் சிறைபிடித்து சென்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த 700 விசைப்படகு மீனவர்கள் நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் அனைவரும் இன்று காலை 7 மணிக்கு கரை திரும்பியிருக்க வேண்டும். மற்ற படகுகள் கரைக்கு வந்துசேர்ந்த நிலையில் 4 படகுகள் மட்டும் இன்னும் கரை திரும்பவில்லை. இதற்கிடையே மாயமான படகுகளில் இருந்த 15 மீனவர்கள் இலங்கை […] |
| ‘அல்லாஹ்’ என்ற சொல்லை முஸ்லிம் அல்லாதவர்கள் பயன்படுத்த முடியாது Posted: 14 Oct 2013 09:47 PM PDT ‘அல்லாஹ்’ என்ற சொல்லை முஸ்லிம் அல்லாத பிறமதத்தினர் பயன்படுத்த முடியாது என மலேசியா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மலேசியா நாட்டில் உள்ள அனைத்து மதத்தினரும் தங்களது கடவுள்களை குறிக்கும் வகையில் மலாய் மொழியில் ‘அல்லாஹ்’ என்ற சொல்லையே பயன்படுத்தி வருகின்றனர். இந்த சொல் அரபு மொழியில் இருந்து மலாய் மொழிக்கு மருவி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மலாய் மொழியில் வெளியாகும் கத்தோலிக்க கிருஸ்துவ நாளிதழான ‘தி ஹெரால்ட்’ கடந்த 2009-ம் ஆண்டு கடவுளை குறிப்பிட ‘அல்லாஹ்’ என்ற சொல்லை […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| பிலிப்பைன்ஸ் நாட்டில் கடும் நிலநடுக்கம்: வீடுகள் இடிந்ததில் 4 பேர் பலி Posted: 14 Oct 2013 09:42 PM PDT பிலிப்பைன்ஸ் நாட்டில் சுற்றுலா தலமான சிபு மாகாணத்தில் இன்று காலை 5.43 மணியளவில் சக்கி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இதை தொடர்ந்து பீதி அடைந்த மக்கள் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தில் போகோல் தீவு கடும் சேதம் அடைந்தது. இங்கு வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்தன. இடிபாடுகளில் சிக்கி 4 பேர் பலியாகினர். இங்குள்ள கிறிஸ்தவ தேவாலயம், முன்னாள் சிட்டி ஹால் […] |
| வட மாகாணசபையின் முதல் அமர்வு எதிர்வரும் 25ம் திகதி Posted: 14 Oct 2013 09:33 PM PDT வட மாகாணசபையின் முதலாவது அமர்வு எதிர்வரும் 25ம் திகதி நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம் கைதடியில் இந்த அமர்வு நடைபெறவுள்ளது. அமர்வுகளை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இதுவரையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளாத உறுப்பினர்கள் அமர்வுகள் ஆரம்பிப்பதற்கு முன்னதாக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தவிசாளர்இ பிரதி தவிசாளர் தெரிவுஇ வட மாகாணசபையின் ஆரம்ப அமர்வுகளின் போது நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. முதலாம் அமர்வுகளில் வட மாகாண ஆளுனர் பங்கேற்பாரா […] |
| பெப்சி, கோக்குக்குத் தடை விவசாய அமைச்சர் அதிரடி Posted: 14 Oct 2013 09:26 PM PDT வடக்கு மாகாண அமைச்சர்களின் நிகழ்வுகளிலோ, கூட்டங்களிலோ "பெப்சி', "கொக்கா கோலா' போன்ற வெளிநாட்டு மென்பானங்கள் பயன்படுத்தக் கூடாதெனவும் உள்ளூர் பழரசங்களே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் தனது அமைச்சைப் பொறுப்பேற்ற பின்னர் அதிரடியாக அறிவித்தார் ஐங்கரநேசன். விவசாயமும், கமநலசேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், சுற்றாடல் அமைச்சின் பொறுப்புக்களை யாழ். புருடி வீதியிலுள்ள அலுவலகத்தில் பொறுப்பேற்ற பின்னர் அலுவலர்களுடன் கலந்துரையாடும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது: எனது அமைச்சுக்களுக்கு உட்பட்ட நிகழ்வுகளிலேயோ அல்லது கலந்துரையாடல்களிலோ […] |
| ஐ.நாவின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க மறுக்கிறது அரசு Posted: 14 Oct 2013 09:22 PM PDT ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் தாம் பதிலளிக்க முடியாது என இலங்கை அரசு அறிவித்துள்ளது. இலங்கையின் இறுதிக்கட்ட போரின் போது பொதுமக்களின் சிறந்த பாதுகாப்புக்கு அழுத்தம் கொடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் ஐ.நா. மேற்கொண்டது. இதற்காக ஐ.நா. முன்வைத்த யோசனைகளை இலங்கை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்த வில்லை என அதன் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். மோதல்களில் சிக்கிக் கொள்ளாமல் மக்களை வெளியேற அனுமதிக்கும் பொருட்டு மோதல்கள் கட்டாயமாக […] |
| இராணுவம் தொடர்ந்து மக்களுக்கு உதவும்: இராணுவத்தளபதி Posted: 14 Oct 2013 09:16 PM PDT இராணுவத்தினால் முன்னெடுக்கப்படும் மனிதாபிமான உதவிகள் ஒருபோதும் நிறுத்தப்படமாட்டாது என்று தெரிவித்துள்ள இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்னாயக்க இராணுவம், மக்களுக்கு தொடர்ந்தும் உதவும் என்று அவர் தெரிவித்துள்ளார். இராணுவ தளபதியாக தயா ரத்னாயக்க நியமிக்கப்பட்ட பின்னர் முதற் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு நேற்று திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்டிருந்தார். பண்ணை பகுதியில் அமைந்துள்ள படை முகாமில் இராணுவ வீரர்களுடன் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், மக்களுக்காக முன்னெடுக்கப்படும் மனிதாபிமான உதவிகள் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| பாலச்சந்திரன் படுகொலை! இலங்கைக்கு எதிரான போலிப் பிரசாரங்களே!- பாதுகாப்பு அமைச்சு Posted: 14 Oct 2013 09:05 PM PDT இலங்கைக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் கொலை உள்ளிட்ட பல்வேறு போலிப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சு குற்றம் சாட்டியுள்ளது. நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்த சர்வதேச ஊடகங்கள் முயற்சி; பாதுகாப்பு அமைச்சு குற்றச்சாட்டு இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டினை குழப்புவதற்காக சர்வதேச ஊடகங்கள் பொய்ப்பிரச்சாரம் செய்து வருகின்றது. இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கைக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் […] |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |