Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


காங்கிரஸின் நியாயமான கோரிக்கை

Posted: 30 Oct 2013 03:43 PM PDT

மத்திய பிரதேச மாநில காங்கிரசார் நேற்று தலைமை தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் அவர்கள் மத்திய பிரதேசத்தில் குளத்தில் பூத்துள்ள தாமரைகளை திரை போட்டு மறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். தாமரை பூக்களை மறைக்கும் கோரிக்கை பேத்தல் என்று சொல்ல முடியாது. ஏன் என்றால் எங்கே தேர்தல் கமிஷன் மறைத்துவிடுமோ என்ற பயத்தில் பா.ஜ.க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உத்திரபிரதேசத்தில் தேர்தல் நடந்த போது மாயாவதியின் சின்னமான யானை சிற்பங்கள் எல்லாம் துணி போட்டு மூடப்பட்டன. அது போல தாமரை ...

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெருமகனார் பிறந்த நாள்

Posted: 30 Oct 2013 03:31 PM PDT

இன்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்த நாள்...! அவரின் வாழ்க்கை வரலாறு சிறு தொகுப்பாய்க் கீழே...! தமிழ்நாட்டின் தென்கிழக்கு மாவட்டமான இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பசும்பொன் என்கிற சிற்றூரில் மிகுந்த வசதி படைத்த குடும்பத்தில் அக்டோபர் 30, 1908 -ல் உக்கிரபாண்டித் தேவருக்கும் இந்திராணி அம்மையாருக்கும் பிறந்த ஒரே மகனாவார். இவரது தாயார் இவருக்கு ஒருவயது நிரம்பும் முன்பே காலமானார். குழந்தை முத்துராமலிங்கத்திற்கு இப்போது ஆறாவது மாதம் தவித்து கலங்கியது. தேவர் திருமகனார் அவர்களுக்கு மாட்டுப் ...

தமிழக அமைச்சரவை மாற்றம்: சுகாதாரத்துறை அமைச்சராக டாக்டர் விஜயபாஸ்கர் நியமனம்

Posted: 30 Oct 2013 03:22 PM PDT

தமிழக அமைச்சரவையில் புதிதாக ஒரு அமைச்சரை சேர்க்கவும், அமைச்சரவையின் இலாகா மாற்றம் தொடர்பாகவும் கவர்னருக்கு முதல்வர் ஜெயலலிதா பரிந்துரை செய்திருந்தார். இதற்கு கவர்னர் இன்று ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ.வான டாக்டர் சி.விஜயபாஸ்கர் அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலம் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதேபோல் பள்ளிக்கல்வி, விளையாட்டு, இளைஞர் நலம் மற்றும் தொல்லியல் துறைகளை அமைச்சர் கே.சி.வீரமணி கவனிப்பார். கவர்னர் ...

அஞ்சலி மாதிரி நடிகைகளை செருப்பால் அடிப்போம் - ஜாக்குவார் தங்கம்

Posted: 30 Oct 2013 03:20 PM PDT

அறிமுக இயக்குநர் சி.எம்.சஞ்சீவன் இயக்கத்தில், புதுமுகங்கள் ராஜேஷ், கெளரி நம்பியார் நடித்துள்ள ''வலியுடன் ஒரு காதல்'' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா, சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் கில்டு சங்க தலைவர் கிரிதர்லால் எல்.நாத்பால், செயலாளர் ஜாக்குவார் தங்கம், இயக்குநர்கள் மு.களஞ்சியம், மனோஜ் குமார், 'சிலந்தி' ஆதிராம், பி.டி.செல்வகுமார், தயாரிப்பாளர்கள் சித்ரா லெட்சுமணன், விஜய முரளி உள்ளிட்ட திரளான வி.ஐ.பி.க்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் ...

டீசல் லிட்டருக்கு ரூ.5 உயர்த்த ; மானிய விலை சிலிண்டர் 6-ஆக குறைக்க பரிந்துரை!!

Posted: 30 Oct 2013 03:15 PM PDT

புதுடில்லி : டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தவும், மானிய விலை சிலிண்டரின் எண்ணிக்கையை 6-ஆக குறைக்கவும் கிரிக் பரிக் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. இதுதொடர்பாக கிரிக் பரிக் கமிட்டி மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் வீரப்ப மொய்லிக்கு சமர்பித்துள்ள அறிக்கையில், பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தவும், டீசலுக்கான மானிய விலையை லிட்டருக்கு ரூ.6 குறைக்கவும் பரிந்துரை செய்துள்ளது. இதேப்போல் மண்ணெண்ணெய் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தவும், சமையல் எரிவாயு விலையை 250 உயர்த்தவும், மானிய ...

" கணிதமேதை "

Posted: 30 Oct 2013 03:11 PM PDT

ஒரு புள்ளியுடன் மறு புள்ளி இணைத்து கூட்டலையும் ( + ) ஒரு புள்ளியுடன் மறு புள்ளியை அடித்து கழித்தலையும் ( - ) ஒரு புள்ளியுடன் மறு புள்ளி குறுக்கிட்டு பெருக்கலையும் ( * ) ஒரு புள்ளிக்கும் மறு புள்ளிக்கும் இடையில் கோடிட்டு வகுத்தலையும் ( / ) அறியாப் பருவத்திலே கற்றுக் கொடுக்கிறாள் படிக்காத " கணிதமேதை " அம்மா ! ஒரு புள்ளியுடன் மறு புள்ளி இணைத்து கூட்டலையும் ( + ) ஒரு புள்ளியுடன் மறு புள்ளியை அடித்து கழித்தலையும் ( - ) ஒரு புள்ளியுடன் மறு ...

கல்விப் பூங்காவில் சிந்தனைப் பூக்கள் ! நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Posted: 30 Oct 2013 03:09 PM PDT

கல்விப் பூங்காவில் சிந்தனைப் பூக்கள் ! நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! குமரன் பதிப்பகம் ,19 கண்ணதாசன் சாலை ,தியாகராயர் நகர் ,சென்னை .600017. விலை ரூபாய் 100. நூல் ஆசிரியர் முனைவர் மூ .இராசாராம் இ .ஆ .ப .அவர்கள் அரசுப்பணியில் செயலராக இருந்து கொண்டே இலக்கியப்பணியும் செய்து வருபவர் .முகத்தில் புன்னகையை எப்போதும் அணிந்திருக்கும் பண்பாளர் .அன்பாகப் பேசிடும் நல்லவர் .வல்லவர். இவரது முந்தைய நூல் உலகப்பொதுமறையான திருக்குறளை ஆங்கிலத்தில் ...

தீபாவளி!

Posted: 30 Oct 2013 03:03 PM PDT

வெளிச்சத்தின் அருமை இருட்டில் இருக்கும் போதுதான் தெரியும். இருட்டில் தட்டுத்தடுமாறும் பொழுது எங்கிருந்தாவது ஒளிர்க்காதா என தவிக்கிறோம். மனம் கவலையில் மூழ்கி சோகத்தால் இருண்டிருக்கும் போது தீப ஒளி தோன்றாதா, அதன் நடுவே நாம் குதூகலத்துடன் இருக்கமாட்டோமா என்று எண்ணுகிறோம். இதே போன்ற சிக்கல் தீர்க்கதமஸ் என்ற முனிவருக்கு ஏற்பட்டது. அவர் இருண்ட காட்டில் தனது மனைவி, மக்களுடன் தவம் செய்து கொண்டிருந்தார். இருட்டினால் மட்டுமல்ல, துஷ்ட மிருகங்கள், விஷ ஜந்துக்கள், அரக்கர்களாலும் அவர்கள் பெரும் துன்பத்திற்கு ...

ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !

Posted: 30 Oct 2013 03:02 PM PDT

ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி ! வளர்ப்போம் புறத்தில் மரம் அகத்தில் அறம் நல்லது நினை பேசு செய் நடக்கும் நன்மை ! உணருங்கள் ஆடம்பரமன்று அவசியம் கல்வி ! சேமிப்பில் சிறந்தது வளமாக்கும் சேமிப்பு மழை நீர் சேமிப்பு ! இல்லங்களில் இன்று வழக்கொழிந்தது வரவேற்பு தொ(ல்)லைக்காட்சி ! தேய்பிறை வளர்பிறையாகுமா ? அரசுப்பள்ளிகளில் தமிழ் ! உறவுகள் மட்டுமல்ல ஊரும் மரணத்திற்கு அழுதால் வாழ்வாங்கு வாழ்ந்துள்ளார் ! இறப்பு இல்லை இறந்தும் வாழ்கிறார்கள் பொதுநலவாதிகள் ...

காவல் நிலையங்களில் சாவுகள் என்பது மனித உரிமை மீறலுக்கான சான்றுகளாகும்: கலைஞர்

Posted: 30 Oct 2013 11:23 AM PDT

தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கேள்வி :- காவல் நிலையங்களில் சாவு என்பது அ.தி.மு.க. ஆட்சியில் அதிகமாகவும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறதே? பதில் :- காவல் நிலைய இறப்புகள், கொலை, நகை பறிப்பு தொடர்பாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி உள்ளன. கொலை, கொள்ளை, செயின் பறிப்பு நிகழ்வுகளால் பொதுமக்களிடையே அச்ச உணர்வு பெருமளவுக்கு ஆக்கிரமித்திருக்கிறது. காவல் நிலையங்களில் சாவுகள் என்பது மனித உரிமை மீறலுக்கான சான்றுகளாகும். கேள்வி ...

EEGARAI FLASH NEWS

Posted: 30 Oct 2013 11:23 AM PDT

சிவகாசியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து 56 பேர் பலி



ராஜினாமா செய்! அமைச்சரை கண்டித்து போஸ்டர்!

Posted: 30 Oct 2013 11:22 AM PDT

அமைச்சர் முனுசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என்று திருவண்ணாமலை, விழுப்புரம் பகுதிகளில் திமுக இளைஞரணியினரும், தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினரும் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இதுகுறித்து திருவண்ணாமலை திமுக இளைஞரணியினர் கூறியதாவது, கடந்த 28ஆம் தேதி நடந்த தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் போது உள்ளாட்சி துறை அமைச்சர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை தொகுதி எம்.எல்.ஏவுமான எ.வ.வேலுவை, கண்டக்டராக இருந்தவர்தானே என்று பேசினார். இதை கண்டித்து ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் சட்டமன்றத்தை விட்டு ...

ஈகரையின் நிர்வாக குழுவில் இணைந்துள்ள ஜாஹீதாபானு அவர்களை வாழ்த்த வாருங்கள்

Posted: 30 Oct 2013 11:20 AM PDT

ஈகரையின் நிர்வாக குழுவில் இணைந்துள்ள ஜாஹீதாபானு அவர்களுக்கு ஈகரை சார்பில் வாழ்த்துக்கள்            ஈகரை நிர்வாகம் சிறப்புடன் தொடர தனது ஆலோசனைகளையும் ஆதரவினையும் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.      வாழ்த்துக்கள் பாட்டி    

ஈரோடு: மலைக் கிராமங்களில் தொடரும் குழந்தைத் திருமணங்கள்

Posted: 30 Oct 2013 11:20 AM PDT

தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ண கிரி, சேலம் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் குழந்தைத் திருமணங்கள் அதிகம் நடப்பதாக 'யுனிசெப்' தெரிவித்துள்ளது. இதனைத் தடுக்க அரசின் சமூகநலத் துறை எடுத்த நடவடிக்கையால், 2008-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டுவரை, 976 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால், பட்டியலில் இடம்பெறாத ஈரோடு மாவட்டத்தில் குழந்தைத் திருமணங்கள் அதிகம் நடப்பதாக சொல்லும் சமீபத்திய ஆய்வு அதிர்ச்சியளிக்கிறது. ஒரு தனியார் கல்லூரி மாணவர்கள், தொண்டு நிறுவனத்துடன் இணைந்து மலைக்கிராமங்களில் ...

ஒருநாளைக்கு 1 மில்லியன் செல்பேசிகளை சாம்சங் விற்பனை செய்கிறது!

Posted: 30 Oct 2013 11:15 AM PDT

உலகின் மிகப் பெரிய செல்பேசி தயாரிப்பு நிறுவனம் என்ற பெயரை சாங்சங் அடையவும், அந்தப் பெயரை தொடர்ந்து தக்க வைக்கவும் போராடி வருகின்றது. காரணம் ஒரு நாளைக்கு 1 மில்லியன் செல்பேசிகளையும், கையடக்கக் கணினிகளையும் சாம்சங் விற்பனை செய்கிறது என்று அந்நிறுவனத்தின் நிர்வாகத் துணைத் தலைவர் டேவிட் இயன் அறிவித்துள்ளார். இது குறித்து டேவிட் மேலும் கூறுகையில், "40 சதவிகித மக்கள் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். அதன் காரணமாக பல சாம்சங் கருவிகளும், திரைகளும் இணைந்து செயல்படுகின்றன. உலக மக்களை உள்ளடக்கம் (Content), ...

எம்.பி.யான பிறகு குட்டை பாவாடையில் டூயட் ஆட முடியுமா?: ரம்யா

Posted: 30 Oct 2013 11:15 AM PDT

பாராளுமன்ற எம்.பி. யான பிறகு குட்டை பாவாடையில் மரத்தை சுற்றி டூயட் ஆட முடியுமா? என ரம்யா ஆவேச மாக கேள்வி எழுப்பியுள்ளார். ரம்யா தமிழில் 'குத்து', 'வாரணம் ஆயிரம்', 'கிரி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் கர்நாடகாவில் மண்டியா தொகுதி பாராளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வானார். இதையடத்து சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டார். அவர் கடைசியாக நடித்த 'நீர்டோஸ்' என்ற கன்னட படம் பாதியில் நிற்கிறது. இந்த படத்தின் தயாரிப்பாளரும், கதநாயாகனுமான ஜெகதீஷ் தனக்கு நஷ்டம் ...

சர்தார் படேல் முதல் பிரதமராகியிருக்க வேண்டும்: பிரதமர் முன்னிலையில் நரேந்திர மோடி ஆவேசம்

Posted: 30 Oct 2013 11:13 AM PDT

ஆமதாபாத் : நாட்டின், முதல் பிரதமராக, சர்தார் படேல், பதவி வகிக்கவில்லையே என, மக்கள், இப்போதும் கவலைப்படுகின்றனர். சர்தார் படேல், முதல் பிரதமராகி இருந்தால், நாட்டின் தலைவிதியே மாறியிருக்கும்,'' என, பிரதமர் மன்மோகன் சிங் முன்னிலையில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி பேசியது, பரபரப்பை ஏற்படுத்தியது. "இந்தியாவின் இரும்பு மனிதர்' என, போற்றப்படுபவரும், நாட்டின், முதல் உள்துறை அமைச்சருமான, சர்தார் வல்லபாய் படேல், குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். இவருக்கு, குஜராத்தில், நர்மதா ஆற்றின் அருகே, ...

அஜீத்தின் ‘ஆரம்பம்’ படத்தை தடை செய்யக்கோரி கோர்ட்டில் மனு

Posted: 30 Oct 2013 11:13 AM PDT

அஜீத், ஆர்யா, நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள 'ஆரம்பம்' படம் நாளை ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் 'ஆரம்பம்' படத்திற்கு தடைவிதிக்கக் கோரி சேலம் ரெட்டியூரைச் சேர்ந்த பிளாக் கிங்டம் பிக்சர்ஸ் சார்பில் கே.கண்ணன் என்பவர் நகர சிவில் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், 'இனிதான் ஆரம்பம்' என்ற தலைப்பில் நான் ஒரு தமிழ் படத்தை தயாரித்து இயக்கி வருகிறேன். இப்படத்தின் பாடல் பதிவுகள் நடந்துவிட்டது. இந்த பெயரை தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் கில்டில் கடந்த ...

டெங்கு'வுக்கு மேலும் ஒரு சிறுமி பலி : வழக்கம் போல் மாநகராட்சி மறுப்பு

Posted: 30 Oct 2013 11:10 AM PDT

சென்னை: தண்டையார்பேட்டை மண்டலத்தில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேட்டால், 'டெங்கு' காய்ச்சலுக்கு, ஒரு சிறுமி, பலியாகியுள்ளார்.தண்டையார்பேட்டை மண்டலத்தில், கழிவுநீர், குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. அதனால் பகுதிவாசிகள் பல்வேறு தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 20ம் தேதி புதுவண்ணாரப்பேட்டையில் ராகவி என்ற, சிறுமி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலியானார். அவரது இறப்பை தனியார் மருத்துவமனை 'டெங்கு' அறிகுறி என, சான்றளிக்க, மாநகராட்சியோ 'டெங்கு கிடையாது; ...

இதற்குப் பெயர் பூமியில்லை!

Posted: 30 Oct 2013 10:51 AM PDT

இயற்கையை இறைவனென்றான்! ஐந்தாய்ப் பிரித்து பூதமென்றான்! இரு கை கூப்பி இயற்கையைப் பூசித்தான்! பின் அவனே அதற்கு இரங்கற்பா வாசித்தான்! விதைக்கக் கற்றவன் விவசாயியானான்! அதை அழிக்கக் கற்றவன் சுகவாசியானான்! நிலமுழுது நீர் விட்டதால் நிறைவாய்ச் சிரித்தது இயற்கை! இன்று நிலமுறிஞ்சி நீர் விற்பதால் விரைந்து இழக்கிறது தன் வனப்பை! விஞ்ஞான விளைச்சலில் கலப்பைகள் களையெடுக்கப்பட்டன! வீட்டுமனைகளாக்கி விற்பதற்காய் விளைநிலங்கள் விலைகொடுக்கப்பட்டன! இயன்றவரை இடம்பெயர இன்னொரு ...

இலவச 3D games உருவாக்க மென்பொருட்கள்

Posted: 30 Oct 2013 10:47 AM PDT

தற்போது சில காலமாக 3D Game செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறேன் . என் தேடுதலில் சில சுவாரஸ்யமான மென்பொருட்கள் இலவசமாக கிடைத்தன இந்த  இணையத்தளங்களை  அறிமுகபடுத்த  விரும்புகிறேன். முப்பரிமாண விளையாட்டு செய்ய மென்பொருட்கள்

தாயின் பாடலுக்கான குழந்தையின் உணர்ச்சி,,,,

Posted: 30 Oct 2013 10:44 AM PDT


தாய்க்கும் குழந்தைக்கும் இடையே உள்ள  பந்தம் வலுவானது.

பட் பட் பட்டாசு !

Posted: 30 Oct 2013 10:43 AM PDT

தீபாவளிக்கு இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு. பட்டாசுகளை வெடிக்கக் காத்துட்டு இருக்கீங்களா? நீங்க இப்படி ஆசையோட வெடிக்கிற பட்டாசுளைக் கண்டுபிடித்தது யார் தெரியுமா? சீனர்கள்தான் முதன்முதலில் வெடி மருந்தையும் பட்டாசுகளையும் கண்டுபிடித்தார்கள். கி.பி 960-1279ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சீனாவை ஆட்சி செய்த லிங் வம்ச காலத்தில்தான் காகிதக் குப்பையில் வெடிமருந்தைத் திணித்து வெடிக்கும் பழக்கம் ஏற்பட்டது. பட்டாசுகளை உருவாக்கும் தொழில்நுட்பத்திற்கு 'பைரோடெக்னிக்ஸ்' என்று பெயர். டபாஸ் என்ற சமஸ்கிருதச் ...

பொங்கல் மற்றும் சித்திரான்னங்கள் - பூண்டு சாதம்

Posted: 30 Oct 2013 10:41 AM PDT

இந்த திரி il நாம் பொங்கல் வகைகள் மற்றும் சித்திரான்னங்கள் செய்முறைகளை பார்போம். நாம் சாதாரணமாக ஆடிப்பெருக்கு தினங்களில் அல்லது வெளியே பிக்னிக் போல வெளியே செல்லும் நேரங்களில் சாம்பார் மற்றும் ரசம் எடுத்துசெல்வது கடினம். எனவே நாம் கலந்த சாத வகைகளை ...... அதாவது பொங்கல் மற்றும் சித்திரான்னங்களை எடுத்து செல்வது வழக்கம். அவ்வாறு எடுத்து செல்லும் சாத வகைகள் என்னென்ன , அவற்றை எப்படி செய்வது என்பதை இந்த திரி இல் பார்க்கலாம் இதில் வழக்கமாக செய்யும் வேன் பொங்கல், சர்க்கரை பொங்கல், புளியோதரை , புளியோதரை ...

சவூதி அரேபியாவில் வசிக்கும் அன்பு நண்பர்கள் கவனத்திற்கு,

Posted: 30 Oct 2013 10:39 AM PDT

சவூதி அரேபியாவில் வசிக்கும் அன்பு நண்பர்கள் கவனத்திற்கு,வரக்குடிய நவம்பர் மாதம் 3ஆம் தேதியுடன் அரசாங்கம் நமக்கு கொடுத்த கால அவகாசம் முடிவடைகிறது. என் BOSS-ன் சகலை CID பிரிவில் ஒரு பொறுப்பான பதவியில் இருக்கிறார். அவர் எனக்கு தந்த தகவலின்படி..3 ஆம் தேதி இரவே அவர்களுடைய வேட்டை தொடங்கிவிடுமாம். அவர்களின் நோக்கம் நம்மையெல்லாம் விரட்டி அடிக்க வேண்டும் என்பதல்ல.இருக்கக் கூடியவர்கள் முறையான ஆவணத்துடன் இருக்க வேண்டும் என்பதுதான். ஒரு SPONSOR பெயரில் பல நிறுவனங்கள் இருக்கலாம். ஒவ்வொரு நிறுவனத்துக்கும் ...

வைரக்கற்கள் ...

Posted: 30 Oct 2013 10:38 AM PDT

உழைப்பாளி

உடல் முழுதும்

இயற்கைப் பாராட்டி

அளித்த வைரக்கற்கள்

" வியர்வைத் துளிகள் " !

ஆயிரத்தில் இருவர் -சுஜாதா நாவல்

Posted: 30 Oct 2013 10:36 AM PDT

ஆயிரத்தில் இருவர் -சுஜாதா நாவல்

http://www.mediafire.com/download/bll5ej0r5vti86a/Aayirathil+iruvar%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf

பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்று திரும்பிய இளம்பெண் கற்பழிப்பு: 3 பேர் கைது

Posted: 30 Oct 2013 10:35 AM PDT

டெல்லியில் ஐ.டி. கம்பெனிகளில் வேலை பார்க்கும் நிறைய பேர் அருகிலுள்ள அரியானா மாநிலம் குர்கானில் தங்கியுள்ளனர். நேற்று இரவு அங்கு நடந்த பிறந்த நாள் இரவு நிகழ்ச்சியில் பல கால் சென்டர் ஊழியர்கள் கலந்துகொண்டனர். இரவு நிகழ்ச்சி முடிந்ததும் விடியற்காலை 19 வயதான இளம் பெண் ஒருவர் கால்நடையாக வீடு நோக்கி சென்றார். அப்போது அவருக்கு தெரிந்த தினேஷ் என்ற நண்பர், அந்த இளம் பெண்ணிடம் மோட்டர் சைக்கிளில் வீட்டில் விட்டு விடுவதாக கூறியுள்ளார். இதை ஏற்றுக்கொண்ட அந்த இளம்பெண், மோட்டர் சைக்கிளில் அவருடன் சென்றுள்ளார். வீடு ...

144 தடை உத்தரவை போட்டுவிட்டு எதற்காக அஞ்சலி செலுத்த வந்தீர்கள்: அமைச்சர்கள் காரை முற்றுகையிட்டு கல்வீச்சு

Posted: 30 Oct 2013 10:33 AM PDT

தேவர் குருபூஜை: பசும்பொன்னில் அமைச்சர்கள் காரை முற்றுகையிட்டு பொதுமக்கள் கல்வீச்சு ராமநாதபுரம்: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் கலந்து கொள்ள வந்த அமைச்சர்களின் கார் மீது பொதுமக்கள் கல் வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 106வது பிறந்தநாள் மற்றும் 51வது குருபூஜை கொண்டாடப்படுகிறது. குரு பூஜையின் இரண்டாவது நாளான இன்று தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் வைத்தியலிங்கம், காமராஜ் உள்ளிட்டோர் தேவரின் நினைவிடத்தில் மலர் ...

ரமணியின் கவிதைகள்

Posted: 30 Oct 2013 10:31 AM PDT

கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ...

6-வது ஒரு நாள் கிரிக்கெட்: பெய்லி- வாட்சன் சதத்தால் ஆஸி. 350 ரன் குவிப்பு

Posted: 30 Oct 2013 10:30 AM PDT

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 6-வது ஒரு நாள் போட்டி இன்று மதியம் நாக்பூரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் தோற்றால் இந்தியா தொடரை இழந்து விடும் என்பதால் இந்திய வீரர்கள் ஜெயிக்க வேண்டும் என்ற இக்கட்டான நிலையில் களம் இறங்கினர். இந்திய அணியில் 3 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றிருந்தனர். தொடக்க வீரர்களாக பின்ஞ்- ஹியூக்ஸ் களம் இறங்கினார்கள். அணியின் ஸ்கோர் 30 ரன்னாக இருக்கும்போது ஹியூக்ஸ் 13 ரன்னில் ஆட்டம் இழந்தார். ...

மங்கள சண்டிகா ஸ்தோத்திரம்

Posted: 30 Oct 2013 10:28 AM PDT

ரட்ச ரட்ச ஜகன்மாதா: தேவி மங்கள சண்டிகே ஹாரிகே விபதாம் ராசே ஹர்ஷ மங்கள காரிகே ஹர்ஷ மங்கள தட்ச ஹர்ஷ மங்கள தாயிகே சுபே மங்கள தசேக்ஷ சுபே மங்கள சண்டிகே மங்களே மங்களார்ஹேச ஸர்வ மங்கள மங்களே ஸதாம் மங்களதே தேவி ஸர்வேஷாம் மங்களாலயே பூஜ்யே மங்கள வாரேச மங்களா பீஷ்ட தேவதே பூஜ்யே மங்கள பூபஸ்ய மனுவம்சஸ்ய ஸந்தகம் மங்களா திஷ்டாத்ரு தேவி மங்களானாம் சு மங்களே ஸம்ஸார மங்களாதாரே மோக்ஷ மங்கள தாயினி ஸாரேச மங்களாதாரே பாரேச ஸர்வ கர்மணாம் ப்ரதி மங்கள வாரேச பூஜ்யே மங்கள ஸுகப்ரதே விளக்கம்: இந்த உலகத்தைக் ...

இறுதிக் கட்டப் பணியில் மங்கள்யான் செயற்கைக்கோள்

Posted: 30 Oct 2013 10:23 AM PDT

மங்கள்யான் செயற்கைக்கோளை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் இறுதிக் கட்டப் பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். - நவம்பர் 3 ம் தேதி காலை 6 மணிக்கு 56 மணி நேர கவுன்ட் டவுன் தொடங்கப்பட உள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி25 ராக்கெட் மூலம் மங்கல்யான் 1 செயற்கைக்கோள் ஏவப்பட உள்ளது. அதற்கான இறுதி கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. - செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய அனுப்பப்படும் ...

காதணி விழா அழைப்பிதழ்

Posted: 30 Oct 2013 10:23 AM PDT

காதணி விழா அழைப்பிதழ் காலங்காலமாய் தொடர்ந்து வரும் சம்பிரதாய முறைப்படி  -இதோ எங்கள் மகளுக்கும் இனிதே நடைபெற இருக்கிறது காதணி விழா இந்த இனிய தருணத்திற்கு தங்களின் வருகை மேலும் சிறப்பை தரும் என்பதால் தகப்பனான M.M. செந்தில் குமார் தாயான S. கீதா இருவரின் செல்லப் புதல்வி G.S. தனுஷ்கா அவர்களை ஆசிர்வதிக்க வேண்டி தங்களுக்கு இந்த அழைப்பை உரித்தாக்குகிறோம் நாளது ஐப்பசி   20 (06.11.2013 ) புதன் இடமது ஆனங்கூர் கரிய காளியம்மன் கோவில் நேரமது காலை 7 மணி முதல் 10 மணி வரை இனிதே ...

நவ.1 முதல் ஸ்ரீரங்கம் பெருமாள் திருவடியை தரிசிக்கலாம்!

Posted: 30 Oct 2013 10:22 AM PDT

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் பெரிய பெருமாளுக்கு சாத்தப்பட்ட தைலக்காப்பு நவம்பர், 1ம் தேதி நீக்கப்படுகிறது. திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் கடந்த, 22ம் தேதி துவங்கியது. ஏழாம் நாளான நேற்று முன்தினம், நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சி நடந்தது. உற்சவ நிறைவு நாளான இன்று, நம்பெருமாள் காலை, 9.15 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு, 9.45 மணிக்கு சந்திரபுஷ்கரணி குளத்தில் தீர்த்தவாரி, ஊஞ்சல் மண்டபத்தில், 11.30 மணி முதல் மதியம், 1.30 ...

கோர்ட்டில் சரணடைந்துவிடலாமா: வக்கீல்களுடன் அஞ்சலி ஆலோசனை

Posted: 30 Oct 2013 10:16 AM PDT

ஹைதராபாத்: இயக்குனர் களஞ்சியம் தொடர்ந்த அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத நடிகை அஞ்சலிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க என்ன செய்யலாம் என்று அஞ்சலி வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறாராம். கமுக்கமாக கோர்ட்டில் சரணடைந்துவிடலாமா: வக்கீல்களுடன் அஞ்சலி ஆலோசனை அஞ்சலி இயக்குனர் களஞ்சியம் தன்னை கொடுமைப்படுத்துவதாக நடிகை அஞ்சலி புகார் தெரிவித்தார். இந்த புகாரை மறுத்த களஞ்சியம் அஞ்சலி மீது சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு ...

“ஒப்பியல் நோக்கில் உலகப் பொதுமறை” இரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம்.

Posted: 30 Oct 2013 10:10 AM PDT

"ஒப்பியல் நோக்கில் உலகப் பொதுமறை" இரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம். நடத்துபவர்கள் கல்லூரி ஆசிரியர் குமரித் தமிழ்ச் சங்கம், சென்னை செம்முதாய்ப் பதிப்பகம் மற்றும் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரித் (தன்னாட்சி) தமிழ்த்துறையும் இணைந்து. நாள்: 7, 8 /02/14 ஸ்காட் கிறிஸ்துவக் கல்லூரி (தன்னாட்சி) நாகர்கோவில் - 629003. கட்டண விபரம் ஆசிரியர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் 700/- ஆய்வாளர்கள் 500/- கட்டுரை உலகப் பொதுமறை எனப் போற்றப்படும் திருக்குறளில் ஒன்றையோ பலவற்றையோ அடியாகக் கொண்டு தமிழிலக்கியங்களில் ...

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 6-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி

Posted: 30 Oct 2013 10:07 AM PDT

-- இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 6-வது ஒரு நாள் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று  நடைபெற்றது - இந்தியாவுக்கு எதிரான 6வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 350 ரன்களைக் குவித்தது. - இந்திய அணியினர் அபாரமாக விளையாடி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்... - -------------

ஒரே மேடையில் மன்மோகன், மோடி சொற்போர்!

Posted: 30 Oct 2013 10:06 AM PDT

ஒரே மேடையில் பங்கேற்ற பிரதமர் மன்மோகன் சிங்கும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் சர்தார் வல்லபாய் பட்டேலை மேற்கோள்காட்டி, சொற்போரில் ஈடுபட்டனர். வல்லபாய் படேல்தான் நாட்டின் முதல் பிரதமராகியிருக்க வேண்டும். அப்படி நடந்திருந்தால் நாட்டின் தலைவிதியே மாறியிருக்கும் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆதங்கத்துடன் குறிப்பிட்டார். நேருவுக்கும், வல்லபாய் படேலுக்கும் கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்பட்டபோதிலும், முக்கிய விவகாரங்களில் ஒரே கருத்துடன் இருவரும் இணைந்து செயல்பட்டனர். படேலும் காங்கிரஸ்காரர் ...

13000 பதிவுகளைக் கடந்துள்ள ரேவதிக்கு வாழ்த்துகள்!

Posted: 30 Oct 2013 09:59 AM PDT

13000 பதிவுகளைக் கடந்துள்ள அன்புத் தங்கை ரேவதிக்கு வாழ்த்துகளும் பாராட்டுக்களும்! மேலும் தங்களின் பதிவுகள் பல்லாயிரங்களாக வாழ்த்துகள் ரேவதி!

எல்லாம் ஓரினம் !

Posted: 30 Oct 2013 09:55 AM PDT

ஓரரிறிவு அமீபா

ஈரறிவு நீரினம்

மூவறிவு உயிரினம்

நான்கறிவு பறவையினம்

ஐந்தறிவு விலங்கினம்

ஆறறிவு மனித இனம்

எல்லாம் ஓரினம் !

உணர்த்துகிறான் கூலித்தொழிலாளி

பொதி சுமக்கும்போது !

செந்தில் வீட்டு விருந்துக்கு யார் யார் வருகிறீர்கள் ?வருபவர்கள் அறிவிப்பு செய்யுங்கள் !!!!!!!!!!!!!!

Posted: 30 Oct 2013 09:22 AM PDT


1.positive கார்த்திக்

உள்ளே போனவர் பண்ணிய கூத்து

Posted: 30 Oct 2013 04:27 AM PDT

நம்மாள் ஒருவர் ஆண்பனைக் கள்ளு இனிக்கும் என்பதை சுவைத்தறிய முனைந்தார்! பனையடைப்பொன்றில் புகுந்து சீவல் தொழிலாளியிடம் இனிக்கும் ஆண்பனைக் கள்ளை இறக்கித் தாடாப்பா சுவைத்துத் தான் பார்ப்போமென்றார்! ஐந்து மணித்துளி கூட ஆகியிருக்காது முட்டி நிரம்பி வழிய நுரை பொங்கி நிற்க கள்ளு முட்டி வந்தாச்சு... (ஒரு முட்டி = மூன்று போத்தல்) நம்மாளும் முட்டியோடு மண்டினார் (குடித்தார்)! பன்னாறையால் கரும் எறும்புகளைப் பூச்சிகளை வடித்து வடித்துக் குடித்த நம்மாளும் "இனிக்குதடா இனிக்குது" என்று எப்படியோ முட்டி ...

மொபைலினால் வரும் வியாதிகள்...!

Posted: 30 Oct 2013 04:26 AM PDT

இன்றைய உலகில் மொபைல் இல்லாத மனிதனை பார்க்க முடியாது என்று சொல்லலாம் அந்த அளவுக்கு இன்று மொபைலின் தாக்கம் மக்களிடம் அதிகமாகிவிட்டது எனலாம். இன்று யாருமே அணுக முடியாத இடத்தில், நிலையில் இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது. எதனையும், உலகின் எந்த மூலைக்கும் அனுப்ப முடியும் என்ற வசதி நம் பைகளில் வந்து அமர்ந்துள்ளது. அதே நேரத்தில், இதே மொபைல் போன் பயன்பாட்டினால், நாம் பல்வேறு மன, உடல் நோய்களுக்கு ஆளாகி உள்ளோம். மேற்கு நாடுகளில், இது குறித்து பல மருத்துவ ரீதியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பல்வேறு உடல் ரீதியான, ...

ஆன்லைனில் ஈசியாக பான் கார்ட் பெற வேண்டுமா?

Posted: 30 Oct 2013 04:18 AM PDT

வெவ்வேறு தேவைகளுக்கான, ஒரு அடையாள ஆவணமாக இந்தியர்கள் நிரந்தர கணக்கு எண் (பான்) அட்டையைப் பயன்படுத்துகின்றனர். வேலைசெய்யாத மற்றும் வரி தாக்கல் செய்யாத பலர், அடையாள ஆவண தேவைக்காக மட்டுமே இந்த பான் கார்டை வைத்துள்ளனர். இந்த கார்டின் தேவை சில வருடங்களாக அதிகரித்திருப்பதால், ஏராளமானோர் இதைப் பெறுவதற்காக விண்ணப்பிக்கின்றனர். இதன் காரணமாக, வருமான வரித் துறை பான் கார்ட் பெறுவதற்கான செயல்முறையை எளிமைபடுத்த முயன்று வருகிறது. ஆரம்ப நாட்களில் இடைத் தரகர்கள், குறிப்பாக சாட்டட் அக்கெளன்டன்டுகள் மூலமே இந்த ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™