Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


5–ந் தேதி பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் செவ்வாய் கிரகத்துக்கு மங்கள்யான் விண்கலம் ஏவுவது பற்றி நாளை ஒத்திகை

Posted: 30 Oct 2013 10:04 AM PDT

சென்னை,

செவ்வாய் கிரகத்துக்கு மங்கள்யான் விண்கலம் 5–ந் தேதி பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ஏவப்படுகிறது. இதுகுறித்து நாளை (வியாழக்கிழமை) ஒத்திகை நடக்கிறது. கவுண்ட்டவுண் 3–ந் தேதி காலை தொடங்குகிறது.

மங்கள்யான் விண்கலம்

செவ்வாய் கிரகத்தரையின் மேற்பரப்பு குறித்தும், அங்கு மீத்தேன் வாயு உற்பத்தி ஆகும் இடம் குறித்தும் ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் சதிஸ்தவான் ராக்கெட் தளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி– சி25 ராக்கெட் மூலம் மங்கள்யான் விண்கலத்தை வருகிற 5–ந் தேதி பிற்பகல் 2.36 மணிக்கு ஏவுகிறது.

உலகின் சக்திவாய்ந்த பெண்களில் சோனியாவுக்கு 3–வது இடம்

Posted: 30 Oct 2013 09:59 AM PDT

நியூயார்க்,

அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிகை, உலகின் சக்தி வாய்ந்த அரசியல் தலைவர்கள், நாட்டின் தலைவர்கள், வர்த்தக ஜாம்பவான்களின் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. 72 பேர் இடம் பெற்றுள்ள இந்த பட்டியலில், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு 21–வது இடம் கிடைத்துள்ளது.

அதே நேரத்தில், இந்த பட்டியலின்படி சக்தி வாய்ந்த பெண் தலைவர்களில், சோனியா 3–வது இடத்தில் இருக்கிறார். சோனியாவுக்கு முன்பாக ஜெர்மனி அதிபர் அங்கேலா மெர்கல் முதல் இடத்திலும், பிரேசில் ஜனாதிபதி டில்மா ரவுசப் 2–வது இடத்திலும் உள்ளனர்.

வாகன பதிவு எண் மோசடி வழக்கு: நடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் சிவகாசி கோர்ட்டில் ஆஜர்

Posted: 30 Oct 2013 09:07 AM PDT

சிவகாசி

வாகன பதிவு எண் மோசடி வழக்கில் நடிகர் 'பவர் ஸ்டார்' சீனிவாசன் சிவகாசி கோர்ட்டில் இன்று ஆஜரானார்.

கார் பதிவு எண்

சிவகாசி அருகே உள்ள மாரனேரி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் தற்போது தமிழ் சினிமாவில் நகைச்சுவை வேடத்தில் நடித்து வருகிறார். சினிமாவுக்கு வந்த பின்னர் சீனிவாசன் என்ற பெயரை 'பவர் ஸ்டார்' சீனிவாசன் என்று மாற்றிக்கொண்டார். இவர் கடந்த 21.7.1997 முதல் 17.7.2000 வரை ஒரு காரை பயன்படுத்தி வந்தார். இந்த காரின் பதிவு எண், சிவகாசியில் பகுதியில் உள்ள ஒரு டிராக்டரின் பதிவு எண் ஆகும்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கிரிக்கெட் போட்டி: இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

Posted: 30 Oct 2013 08:57 AM PDT

நாக்பூர்,

இந்தி நடிகை கஜோல் வீட்டில் ரூ.5 லட்சம் நகை திருட்டு வேலைக்கார பெண் உள்பட 2 பேர் கைது

Posted: 30 Oct 2013 08:36 AM PDT

மும்பை,

பிரபல இந்தி திரையுலக தம்பதி அஜய் தேவ்கன் மற்றும் கஜோல். இந்த தம்பதியினர் மும்பை ஜூகுவில் உள்ள பங்களா ஒன்றில் வசித்து வருகிறார்கள். கடந்த 22–ந்தேதி கஜோல் தனது பீரோவை திறந்து பார்த்தபோது 17 தங்க வளையல்கள் திருட்டு போயிருந்தது. இதன் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும். இதுகுறித்து கஜோல், ஜூகு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

விசாரணையில், கஜோல் பங்களாவில் சில மாதங்களுக்கு முன்பு வேலை செய்த காயத்ரி தேவேந்திரா என்ற பெண் மற்றும் சந்தோஷ் பாண்டே ஆகிய 2 பேரும் தங்க வளையல்களை திருடியது தெரியவந்தது.

வள்ளியூர் அருகே கார் பாலத்தில் மோதி கோர விபத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பரிதாப சாவு

Posted: 30 Oct 2013 08:34 AM PDT

வள்ளியூர்,

நாற்கர சாலை மேம்பால சுவற்றில் கார் மோதி விபத்துக்குள்ளானதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் இறந்தனர். நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு வந்த போது இந்த கோர விபத்தில் சிக்கி உயிரிழந்த பரிதாபம் நேர்ந்துள்ளது.

இந்த பயங்கர விபத்து பற்றிய விவரம் வருமாறு:–

நாகர்கோவிலை சேர்ந்தவர்கள்

நாகர்கோவில் அருகே கணபதிபுரத்தை அடுத்த ஆலங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர், ராசையா (வயது 65). அவருடைய 2–வது மகன் பாலசுப்பிரமணியன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

டீசல் விலையை ரூ.5 உயர்த்த வல்லுனர்குழு சிபாரிசு மத்திய மந்திரி வீரப்ப மொய்லி தகவல்

Posted: 30 Oct 2013 08:32 AM PDT

புதுடெல்லி,

டீசல் விலையை உடனடியாக லிட்டருக்கு ரூ.5 உயர்த்த வல்லுனர் குழு சிபாரிசு செய்துள்ளதாக மத்திய மந்திரி வீரப்ப மொய்லி கூறினார்.

மத்திய அரசு தவிப்பு

உலகிலேயே அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் 4–வது நாடாக இந்தியா உள்ளது. ஆனால் சர்வதேச அளவில் நிலவுகிற விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல், மண் எண்ணெய், சமையல் கியாஸ் ஆகியவற்றின் விலையை உயர்த்த முடியாமல் மத்திய அரசு தவிக்கிறது. அதிக பணவீக்கம், அரசியல் நிர்ப்பந்தம் இதற்கு தடைச்சுவராக அமைந்துள்ளது.

திட்டமிட்டபடி குரூப்–2 தேர்வு டிசம்பர் 1–ந் தேதி நடத்தப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

Posted: 30 Oct 2013 08:29 AM PDT

சென்னை

திட்டமிட்டபடி குரூப்–2 தேர்வு டிசம்பர் மாதம் 1–ந் தேதி நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–

குரூப்–2 தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – 2 (தொகுதி 2)–ல் உள்ளடங்கிய 1064 பதவிகளுக்கான அறிவிக்கையினை (எண் 14/2013) வெளியிட்டு அதற்கான முதல் நிலை எழுத்து தேர்வினை 1–12–2013 அன்று நடத்த திட்டமிட்டிருக்கிறது.

ஆன்மீக சிந்தனை (31-10-2013)

Posted: 30 Oct 2013 08:20 AM PDT

கன்னித்தீவு (31-10-2013)

Posted: 30 Oct 2013 08:18 AM PDT



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™