Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


E-Tweets

Posted: 21 Oct 2013 02:15 PM PDT

முகநூலின் சிறந்த பதிவுகளைப் போல் இங்கு ட்விட்டர் தளத்தின் சிறந்த பதிவர்களின் ட்வீட்டுகள் இடம்பெறும்!


கார்ப்ரேசன்ல துப்புரவு பண்றவங்களுக்கு ஒரு ரெஸ்பிரேட்டரி மாஸ்க் குடுக்க துப்பில்லாத நாட்டுல LCDடிவிக்கி பொல்யூசன் மாஸ்க் விளம்பரம் ஒரு கேடா?

சச்சின் 200!! நினைவுப்பாதை!

Posted: 21 Oct 2013 01:55 PM PDT

25 ஆண்டுகால கிரிக்கெட் பயணம்!! முடிவுக்கு வந்தது. சச்சின் டெண்டுல்கர் கடைசியில் இருதய கனத்துடன் ஓய்வு அறிவித்து விட்டார். மேற்கிந்திய தீவுகளுடன் விளையாடவுள்ள 2வது டெஸ்ட் போட்டி அவரது கடைசி டெஸ்ட் போட்டி. இந்த நிலையில் அவரது கிரிக்கெட் வாழ்வை துவக்கம் முதல் புள்ளி விவரங்களுடனுடனும், தனிப்பட்ட நினைவுகளுடனும் அசைபோடுதல் சுவாரசியமாக இருக்கும் என்று நம்புகிறோம்: 1988, பிப்ரவரி 23- 25 சச்சின் டெண்டுல்கருக்கு வயது 14. தனது பள்ளித் தோழன் வினோத் காம்ப்ளி(16) உடன் சேர்ந்து 664 ரன்களைக் குவித்து ...

books

Posted: 21 Oct 2013 11:58 AM PDT

.



i need "valga vilirundhu kangai varai"

and ra.ki.rangarajan "kadhal mel aanai" .....pls friends

கன்னி மாடம் - சாண்டில்யன் - மின்நூல்

Posted: 21 Oct 2013 11:43 AM PDT

வாசக நண்பர்களே! சாண்டில்யனின் மிகத்தெளிவான மின்நூல் வரிசையில் இந்தப் பதிவில் இடம்பெறுவது கன்னிமாடம் ஆகும். தெளிவான மின்நூல் வரிசையில் இதற்கு முன்பு வெளியிட்ட நாவல்கள் பின்வருமாறு: 01. யவனராணி http://thamizhthenee.blogspot.com/2012/06/blog-post_14.html 02. மன்னன் மகள் http://thamizhthenee.blogspot.com/2012/06/blog-post_15.html 03. மூங்கில் கோட்டை http://thamizhthenee.blogspot.com/2012/06/moongil-kottai-history-novels-sandilyan.html 04. ஜல மோகினி http://thamizhthenee.blogspot.com/2012/07/jalamokini-sandilyan-ebook.html ஈழ ...

மின்னஞ்சலும் வெங்காய வியாபாரியும் - தன்னம்பிக்கை கதை

Posted: 21 Oct 2013 11:14 AM PDT

ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான். தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள். 'ஈ மெயிலா? எனகக்கு ஈ மெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே' என்றான் துடைக்க வந்தவன். 'கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லயா? ச்சே!' என்று அவனை அனுப்பி விட்டார்கள். வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று ...

உளவியல் சொல்லும் உண்மைகள்! ! ! !

Posted: 21 Oct 2013 11:10 AM PDT

உளவியல் சொல்லும் உண்மைகள்! ! ! ! 1. அதிகம் சிரிப்பவர்கள் அதிகம் தனிமையில் வாடுபவர்கள். 2. அதிகம் தூங்குபவர்கள், சோகத்தில் இருப்பவர்கள். 3. வேகமாக அதே நேரம் குறைவாக பேசுபவர்கள், அதிகமாக ரகசியங்களை வைத்திருப்பவர்கள். 4. அழுகையை அடக்குபவர்கள் மனதால் பலவீனமானவர்கள். 5. முரட்டுத்தனமாக உண்பவர்கள் மன அழுத்தத்தில் இருப்பவர்கள். 6. சின்ன சின்ன விஷயங்களுக்கும்அழுபவர்கள் அப்பாவிகள். மனத்தால் மென்மையானவர்கள். 7. சின்ன சின்ன விஷயங்களுக்கும்கோபப்படுபவர்கள்அன்புக்காக ஏங்குபவர்கள்.

ஆத்திரம் அழிவை தரும் - தமிழ் அறிவு கதைகள்

Posted: 21 Oct 2013 11:09 AM PDT

அது ஒரு கிராமம். அது காட்டை ஒட்டிய வனப்பகுதி. பிராணிகளிடம் பிரியமுள்ள ஒருவன் வாழ்ந்து வந்தான். ஒருநாள் காட்டிற்கு வேட்டைக்கு போனான். அழகிய புள்ளிமான் ஒன்றை பிடித்து வந்தான். மானின் அழகில் மயங்கிய அவன் மாமிசத்திற்காக கொல்லவில்லை. வீட்டில் வளர்த்து வந்தான். ஒருநாள் மான் மாயமாய் மறைந்து விட்டது. ஆனால் அது ஓடவில்லை. காணாமல் போய்விட்டது. அவனுக்கோ ஆத்திரம். இந்த மானை யார் பிடித்து போயிருப்பார்கள். அவன் எங்கே இருந்தாலும் தேடி கண்டுபிடித்து பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் கோவமாக உருவெடுத்தது. ...

கடவுளை குழப்பிய மன்னார்சாமி - தன்னம்பிக்கை கதை

Posted: 21 Oct 2013 11:05 AM PDT

ஒரு ஊரில் மன்னார்சாமி என்ற பெயருடைய மனிதர் ஒருவர் இருந்தார். அவரை எல்லோரும் முட்டாள் என்றும் பிழைக்கத் தெரியாதவர் என்றும் கேலி செய்து வந்தனர். இதைக் கேட்டுக் கேட்டு அந்த மனிதருக்கு வெட்கமாகிப் போய்விட்டது. அந்த ஊரின் எல்லையில் ஒரு முனிவர் இருந்தார். அவரிடம் சென்று அந்த மனிதர் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு கேட்டார். "கடவுளை நினைச்சுத் தவம் செய். உனக்கு வேண்டிய வரத்தைக் கொடுப்பார்..." என்று அந்தச் முனிவர் கூறினார். மன்னார்சாமி கடுமையாகத் தவம் இருந்தார். பல நாட்கள் சென்ற பிறகு, கடவுள் ...

பார்வை ஒன்றே போதுமே - அறிவு கதைகள்

Posted: 21 Oct 2013 11:04 AM PDT

ஒரு காட்டில் ஒரு துறவி ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்குப் பார்வை கிடையாது. அந்த வழியாக வந்த ஒருவன் " ஏ கிழவா, இந்த வழியாக சற்று முன் யாராவது சென்றார்களா? என்று அதிகாரத்தோடு கேட்டான். அதற்குத் துறவி , "இதற்கு முன் இந்த வழியாக யாரும் சென்றதாகத் தெரியவில்லை." என்றார். சிறிது நேரத்தில் மற்றொருவன் வந்து, " ஐயா, இதற்கு முன் யாராவது இப்பக்கமாகச் சென்றார்களா? என்று கேட்டான். அதற்கு அத்துறவி, சற்று முன் இந்த வழியாகச் சென்ற ஒருவன் இதே கேள்வியைக் கேட்டு விட்டுச் சென்றான்." என்றார். மேலும் ...

நீதிக்கதை

Posted: 21 Oct 2013 11:00 AM PDT

நீதிக்கதை" கோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது. ஒரு ஒடுக்கமான பாலத்தில் அது வரும் போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்தது. யானை ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழி விட்டது. அந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், "பார்த்தாயா, அந்த யானை என்னைக் கண்டு பயந்து விட்டது!" என்று சொல்லிச் சிரித்தது. அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, "அப்படியா, நீ பயந்து விட்டாயா?" என்று கேட்டது. அதற்குக் கோவில் யானையின் பதில் ...

நான் அழகில்லை நிறமில்லை என்ற எண்ணம்

Posted: 21 Oct 2013 10:52 AM PDT

நான் அழகில்லை நிறமில்லை என்ற எண்ணம் எனக்கு எப்போதும் வந்ததில்லை, என் ஒவ்வொரு அசைவையும் ரசிக்கும் அன்னை இருப்பதால்.. எனக்கு அறிவில்லை என்ற எண்ணம் எனக்கு எப்போதும் வந்ததில்லை, மதிப்பெண் அட்டையில் இருக்கும் மதிப்பெண்ணை வைத்து மட்டுமே என் அறிவை கணக்கிடாத தந்தை இருப்பதால்.. எனக்கு எந்த மொழியும் சரளமாய் பேசதெரியவில்லை என்ற எண்ணம் எனக்கு வந்ததே இல்லை, எத்தனை வயதானாலும் இன்னும் குழந்தை போலவே பேசுகிறாய்என்று என் உளறலையும் ரசிக்கும் என் குடும்பம் இருப்பதால்.. ஒரு குடும்பம் பிள்ளைகளுக்கு ...

2032 ஆம் ஆண்டு உலகம் அழியும் அபாயம்

Posted: 21 Oct 2013 10:50 AM PDT

வருகிற 2032 ஆம் ஆண்டில் பூமியை ஒரு ராட்ஷச விண்கல் தாக்குமென்றும், இதனால் உலகம் அழியும் ஆபத்து உள்ளதாகவும் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். விண்வெளியில் அனுமிங்கும் மிதக்கும் விண்கற்களில் சில பூமியை நோக்கி பயணிக்கின்றன. இத்தகைய விண்கற்களில் பெரும்பாலானவை பூமியை நெருங்குவதற்கு முன்பே வெடித்துவிட, சில மாதங்களுக்கு முன் ரஷ்யாவில் விழுந்த விண்கல்லால் பாதிப்பும் ஏற்படுகின்றன. இந்த நிலையில் இன்னும் 19 ஆண்டுகளில் அதாவது 2032 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி மற்றொரு ராட்ஷச விண்கல் ...

உலகம் முழுவதும் முகநூல் தொடர்புகள் நிலை குத்தியது! குறுகிய காலத்தில் வழக்க நிலைமைக்கு திரும்பியது!

Posted: 21 Oct 2013 10:45 AM PDT

இன்று எதிர்பாராத விதமாக உலகம் முழுமையிலும் முகநூல் தொடர்புகள் நிலைகுத்தியதைத் தொடர்ந்து, அதனை பயன்படுத்துபவர்கள் தங்களின் முகநூல் பக்கத்தில் தாங்கள் விரும்பிய தகவல்களை பதிவேற்றம் செய்ய முடியாமல் அவதிக்குள்ளாயினர். தங்களின் நிலைப்பாட்டை (status) தெரிவிக்க முடியாமல் பலர் தவித்தனர். பதிவேற்றம் செய்ய முற்பட்ட போது "உங்களின் நிலைப்பாட்டை திருத்தங்கள் செய்து பதிவேற்றம் செய்வதில் தவறு உள்ளது" என்ற அர்த்தத்தில் ("there was an error updating your status.") வாசகங்கள் பதிலாகக் கிடைத்தன. இருப்பினும் ...

ஆண்மைக் குறைவை தடுக்கும் கீரைகள்!

Posted: 21 Oct 2013 10:42 AM PDT

"நறுந்தாளி நன்முருங்கை, தூதுவளை, பசலை, வாளிளறு கீரை நெய்வார்த்துண்ணில் யாழி என விஞ்சுவார் போகத்தில் பெண்களெல்லாம் பின் வாங்கிக் கேள்" இந்தியாவில் சுகாதாரத்துறை ஆய்வு கணக்கெடுப்பில் இன்றைய ஆண்களிடம் 75% வீதம் ஆண்மைக் குறைவு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. "கொக்கோகம்" என்ற காம சாஸ்த்திரத்தை முனிவர்களால் உருவாக்கப்பட்டு உலகிற்கு அளித்த நமது இந்தியாவில் இப்படி ஒரு நிலை. இன்றைய கலாச்சார சீரழிவு மற்றும் FAST FOOD எனப்படும் உணவு வகைகளாலும் இந்நிலை ஏற்பட்டுள்ளது. ஆண்மைக் குறைவினால் ...

காகமும் நாய்க்குட்டியும் - நீதிக் கதைகள்

Posted: 21 Oct 2013 10:42 AM PDT

ஒரு வீட்டில் நாய்க்குட்டியொன்றை எடுத்து வளர்த்து வந்தார்கள்.அந்த நாய்க் குட்டி காகத்துடன் நட்பாக இருந்தது. ஒரு நாள் காகம் மிகவும் கவலையுடன் அமர்ந்திருந்தது. இதைக் கண்ட நாய்க் குட்டி காகத்திடம் சென்று. என்ன காக்கையாரே! ஏன் ஒன்றும் பேசாமல் வருத்தமாக இருக்கிறீர்? என்று கேட்டது. அதற்கு காகம், மனிதர்கள் மற்றப் பறவைகளை அன்புடன் வளர்க்கின்றார்கள். அவைகளின் செயல்களைப் பாராட்டுகின்றார்கள் ஆனால் என்னை வெறுத்து. கல்லால் எறிந்து துரத்துகிறார்களே ஏன்? என்று கேட்டது காகம். இதற்குக் காரணம் ...

சோழனின் பெருமை - மேற்பார்வையாளரின் ஆணவம் ஒழிந்தது - அறிவுக் கதைகள்

Posted: 21 Oct 2013 10:39 AM PDT

தஞ்சை பெரிய கோயில் கட்டும் பணி வேகமாக நடந்து கொண்டிருந்தது. சோழப் பேரரசர் ராஜராஜ சோழன் அந்தப் பணியில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார். ஒரு நாள், "கோயில் வேலை எப்படி நடைபெறுகிறது?" என்பதை அறிய விரும்பிய அவர், ஒரு வழிப்போக்கனைப் போல் மாறுவேடம் பூண்டு கோயில் பணி நடக்கும் இடத்துக்குச் சென்றார். அவரை அரசர் என்று எவரும் அறிந்து கொள்ளவில்லை. அப்பொழுது ஒரு பெரிய பாறையைச் சுவரின் மேல் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். வேலையாட்கள் பலர்ம் ஒன்று சேர்ந்து கயிறு போட்டு இழுத்தும் அந்தப் பாறை சிறிதும் ...

பேஸ்புக் தோழியைச் சந்திக்கச் சென்று செல்பேசி, பணத்தை இழந்த மாணவர்!

Posted: 21 Oct 2013 10:35 AM PDT

பேஸ்புக் மூலம் தவறான முகவரிகளை உருவாக்கி பெண் போலவே சில ஆண்கள் போலி அடையாளம் தயாரித்து சபலம் பிடித்த ஆண்களை வலையில் வீழ்த்தி முடிந்தவரை சுருட்டுவது என்பது தற்போது அதிகரித்து வருகிறது. டெல்லியில் மற்றுமொரு இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. தலைநகர் டெல்லியில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.டெக் படித்துவரும் மாணவர் ஒருவருக்கே இந்த விபரீதச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பேஸ்புக் வைத்துள்ள இவர் திவ்யா என்ற ஒரு பெண்ணிடமிருந்து நட்பு வேண்டுகோள் கிடைக்க அதனை ஏற்றார். இருவரும் சிறிது காலம் பேஸ்புக்கில் ...

பூஜ்யம் ஒரு ராஜ்ஜியம் - சிறுகதை

Posted: 21 Oct 2013 10:32 AM PDT

ஒரு நாள் கணித ஆசிரியர் ஒருவர் எல்லா எண்களையும் கலந்துரையாடலுக்கு அழைத்தார். நிகழ்ச்சி ஆரம்பிக்கும் சமயம் பூஜ்யம் அங்கு இல்லை என்பது தெரியவந்தது. பூஜ்யம் ஒளிந்து கொண்டது, மற்ற எண்கள் அதை ஆசிரியரிடம் கொண்டு வந்தன. ஆசிரியர், ""ஏன் ஒளிந்து கொண்டாய்?'' என்று கேட்டார். ""நான் வெறும் பூஜ்யம்தானே. என்னை பற்றி யார் கவலைப்படுவார்கள்? எனக்கு மதிப்பே இல்லையே,'' என்று வருத்தமாக கூறியது. புன்னகைத்த ஆசிரியர், "ஒன்று' என்ற எண்ணை முன்னே வரச்சொன்னார். குழுவினரைப் பார்த்து, ""இதன் மதிப்பு என்ன?'' என்றார். ""ஒன்று!'' ...

எங்க அப்பா தான் இந்த விமானத்தின் பைலட்

Posted: 21 Oct 2013 10:29 AM PDT

ஆகாயத்தில் பரந்துகொண்டிருந்த அந்த விமானம் ஒரு கார்மேகத்துக்குள்ளே சென்றது விமானம் கட்டுப்பாட்டை இழந்து அங்கும் இங்குமாக சரிய தொடங்கியது பயணிகள் பீதியில் அலறினார்கள் ஒரு குழந்தை மட்டும் எதையுமே பொருட்படுத்தாமல் பொம்மையை வைத்து விளையாடிக்கொண்டு இருந்தது ஒரு மணி நேர போராட்டத்துக்குபின்பு விமானம் பத்திரமாக தரை இறங்கியது அப்போது ஒருவர் அந்த குழந்தையிடம் கேட்டார் இவ்வளவு ஆபத்தான நிலையிலும் உன்னால் மட்டும் எப்படியம்மா சந்தோஷமாக விளையாடிக்கொண்டு இருக்க முடிந்தது ? குழந்தை சொன்னது .. எங்க ...

எச்சரிக்கை - அண்ட்ராய்ட் போனில் வைரஸ்

Posted: 21 Oct 2013 10:27 AM PDT

அண்ட்ராய்ட் சிஸ்டத்தினைத் தங்கள் மொபைல் போன் மற்றும் டேப்ளட் பிசிக்களில் பயன்படுத்துவோர், அதிக ஜாக்கிரதையுடன் இயங்க வேண்டும் என Computer Emergency Response TeamIndia (CeRTIn) கேட்டுக் கொண்டுள்ளது. இந்திய வெளியில், இந்த வைரஸ் மிகவும் செயல் துடிப்போடு காணப்படுகிறது. இது அண்ட்ராய்ட் பதிப்பு 4.2.2 (ஜெல்லிபீன்) முந்தையை அண்ட்ராய்ட் சிஸ்டம் பயன்படுத்தும் சாதனங்களைப் பாதிக்கிறது. இந்த வைரஸ், தான் புகுந்த சாதனங்களில் உள்ள எஸ்.எம்.எஸ். மற்றும் தனி நபர் தகவல்களைத் திருடி அனுப்புகிறது. இதற்குக் காரணம் ...

அறிவுத்திறனும், உடல் பலமும் - கதைகள்

Posted: 21 Oct 2013 10:26 AM PDT

ஒரு முதலாளி, தனக்குச் சொந்தமான பரந்த இடம் முழுதிலும் தென்னங்கன்றுகளை நட வேண்டும் என்று முடிவு செய்தார். மரக் கன்றுகள் நடுவதற்குப் பள்ளம் வெட்ட வேண்டிய வேலையை ரங்கன் என்பவனிடம் ஒப்படைத்தார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, நன்றாக உழைத்து நிறையச் சம்பாதித்துவிட வேண்டும் என்று நினைத்தான் ரங்கன். ஏனென்றால், அவன் தன் மகளின் திருமணத்திற்குக் கொஞ்சம் கொஞ்சமாகக் காசு சேர்த்து வருகிறான். இன்னும் போதுமான அளவு பணம் சேரவில்லை. ரங்கன், முதல் நாளில் இருபது மரக் கன்றுகளை நடுவதற்குப் பள்ளம் ...

தன்வினை தன்னைச் சுடும் - நீதி கதைகள்

Posted: 21 Oct 2013 10:25 AM PDT

ஒரு ஊரில் செல்வந்தர் வீட்டின் தொலை பேசி கட்டணம் மிக அதிகமாக வந்தது. அப்பா சொன்னார், நான் நம்ம வீட்டு போனை உபயோக படுத்துவதே இல்லை. ஆனாலும் இவ்வளவு தொகை வந்து இருக்கு. யார் இதற்கு காரணம்? என்று யோசித்துக் கொண்டு தன் மனைவியிடம் கேட்டார் நானும் அலுவலக தொலை பேசி மட்டுமே உபயோக படுத்துறேன். எனக்கு தெரியாது அவரும் கூறிவிட்டு தன மகனிடம் கேட்குமாறு கூறினார் மகனும், நான் காரணம் இல்லப்பா. நான் அலுவலகம் கொடுத்த ப்ளாக்பெரி தான் உபயோக படுத்துறேன். எனக்கும் தெரியாதுப்பா! என்றான் நாம யாரும் ...

கோபம் இல்லாத மனைவி வேண்டுமா? - இதோ சில டிப்ஸ்! ! ! !

Posted: 21 Oct 2013 10:19 AM PDT

கோபம் இல்லாத மனைவி வேண்டுமா? - இதோ சில டிப்ஸ்! ! ! ! குடும்பத்தில் கணவன், மனைவி இடையே சண்டை, தகராறு ஏற்பட்டு பல குடும்பங்கள் பிரிந்து விடுகின்றன. முடிவில் மனைவி தான் கோபம் கொண்டவளாக இருந்தாள் என்று பெரும்பாலான கணவன்கள் தெரிவிக்கின்றனர். குடும்பத்தில் மனைவிகள் கோபம் அடைய, கணவன்களும் சில நேரங்களில் காரணமாகி விடுகின்றனர். மனைவிக்கு கோபம் ஏற்படாமல், அவரிடம் இருந்து அன்பை மட்டும் பெற இதோ சில டிப்ஸ்.. 1. மனைவி செய்யும் சிறு சிறு தவறுகளை சுட்டிக்காட்டி வாய்க்கு வந்தபடி திட்டாதீர்கள். தவறை ...

புத்திசாலி கிளி... சிறுகதை

Posted: 21 Oct 2013 10:18 AM PDT

ஆப்பிரிக்கக் கிளி ஒன்றை கூண்டினுள் வைத்து ஒருவர் வளர்த்து வந்தார். ஒரு முறை அவர் ஆப்பிரிக்கா செல்லும் போது கிளி சொல்லிற்றாம், ''என் ஜோடிக் கிளி அங்கிருக்கும்.அதனிடம் நான் இங்கு கூண்டில் இருப்பதாகச் சொல்லுங்கள்.'' அவரும் தன வேலை முடிந்த பின் சிரமப்பட்டு காட்டில் தனியாக இருந்த அந்தக் கிளியைக் கண்டு விபரம் சொல்ல, அது உடனே கண்ணீர் உகுத்துக் கீழே சுருண்டு விழுந்து விட்டது. 'அடடா, இந்தக் கிளி இறந்ததற்கு நாம் காரணமாகிவிட்டோமே,' என்று வருத்தப்பட்டு ஊருக்கு வந்து கூண்டுக் கிளியிடம் விபரம் சொல்ல, ...

நன்றாக தூங்கினால் மூளை சுத்தமடையும்

Posted: 21 Oct 2013 10:13 AM PDT

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நன்றாக உறங்கும்போது மூளையில் உள்ள நச்சுக்கள் நீக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் ரோசெஸ்டர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி ஒருவரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், நன்றாக தூங்கும் போது தான் மூளை சுத்தம் செய்யப்படுவது தெரிய வந்தது. ஒருவர் தூங்கும்போது அவரது மூளையில் இருக்கும் செல்கள் சுருங்குகின்றன. அப்போது மூளை வெளியேற்றும் ஒரு திரவத்தால், நாள் முழுவதும் மூளையில் ஏற்படும் நச்சுக்கள் வெளியேற்றப்படுகின்றன. மூளைக்கு ...

6000 மதிப்பீடுகளை கடந்தார் நம்ம சிவா

Posted: 21 Oct 2013 10:07 AM PDT

6000 மதிப்பீடுகள் 6000 மதிப்பீடுகள் என்பது ஒரு பெரிய இலக்கு. இதற்கு கடுமையாக உழைக்கவேன்டும். பதிவுகள் எவ்வளவு வேன்டுமானாலும் பதியலாம், ஆனால் மதிப்பீடுகளை நல்ல பல திரிகள் பதிப்பதன் மூலமே அடைய முடியும். அந்த வகையில் 6000 மதிப்பீடுகளை கடந்து 6040யும் தாண்டி அமைதியாக வலம் வந்துக்கொண்டிருக்கும் ஈகரை நிறுவனர் நண்பர் சிவாவிற்கு எனது வாழ்த்துகள் அன்புடன் அசுரன்

பிறந்த நாள்---- முத்துமுஹமது

Posted: 21 Oct 2013 10:05 AM PDT

இன்று பிறந்த நாள் கொண்டாடும் முத்துமுஹமது  வாழ்த்துவோம்               வாழ்த்துக்கள் முத்துமுஹமது ரமணியன் இந்த படம் வேலை செய்யவில்லை. அதனால் படம் மாற்றியிருக்கிறேன் - அசுரன் [img]

நெல்லைக்காரர்,”சரி, பையக் கொடுங்க”.என்று சொல்லி இருக்கிறார்.

Posted: 21 Oct 2013 09:53 AM PDT

நெல்லைப் பக்கத்தைச் சேர்ந்த ஒருவர் சென்னைக்கு வந்தார். பேருந்தில் பயணம் செய்யும்போது சீட்டு வாங்கிக் கொண்டு ரூபாய் நோட்டைக் கொடுத்தார். நடத்துனர், சில்லறை இல்லை, அப்புறம் தருகிறேன் என்று சொல்ல, நெல்லைக்காரர்,"சரி, பையக் கொடுங்க".என்று சொல்லி இருக்கிறார். "ஏய்யா, நாந்தான் தரேன் என்று சொன்னேனே, உன்னோட சில்லறைக் காசுக்கு என் பையையே கேக்குரியே" என்று சத்தம் போட.... பயணி மிக சிரமப்பட்டு 'பைய' என்பதை விளக்கினார்.(மெல்ல) பைய என்பது ஒரு தூய தமிழ்ச் சொல். ஆனால் இப்போது இத்தகைய தூய தமிழ்ச் ...

இதுதான் நட்பு..!

Posted: 21 Oct 2013 09:47 AM PDT

இதுதான் நட்பு..! ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன்... கார்கில் போரின் போது இரண்டு நண்பர்கள் களத்தில் இருந்து சுட்டுக் கொண்டிருந்தனர்.எதிரிகள் சுற்றி வளைத்து சுடும்போது ஒருவன் மட்டும் குண்டடி பட்டு விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான். நான் என் நண்பனை எப்படியாவது தூக்கி வந்து விடுகிறேன் எனக்கு உத்தரவு கொடுங்கள் என படை தளபதியிடம் கேட்டான். மறைந்து இருந்து தாக்குவது தான் சரியான வழி, நீ அங்கு போவதால் உன் உயிர்க்கும் தான் ஆபத்து என்றார் தளபதி. மீண்டும் மீண்டும் கேட்க நீ போவது ...

கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்

Posted: 21 Oct 2013 09:42 AM PDT

நண்பர்களே இந்த திரியில் உங்களுக்கு எழும் சந்தேகங்கள் அல்லது நீங்கள் கேட்க நினைக்கும் விடை தெரியாத கேள்விகள் இருந்தால் (ஒரே ஒரு கேள்வி மட்டும் ஒரு பதிவில்) கேளுங்கள். நானோ அல்லது இந்த கேள்விக்கு விடை தெரிந்தவர்களோ அல்லது அந்த துறை சார்ந்தவர்களோ பதில் அளிப்பார்கள். சரியான பதில் வந்தால் அதை எடுத்து முதல் திரியில் கேள்வியுடன் சேர்ந்து ஒட்டிவிடுகிறேன். பின்னாளில் இந்த திரி ஒரு செய்தி பெட்டகமாக திகழும். முதல் கேள்வியை நானே கேட்கிறேன்: வழக்கறிஞர் - வழக்குரைஞர் என்ன வேறுபாடு?

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

Posted: 21 Oct 2013 09:24 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

மனைவி அமைவதெல்லாம்

Posted: 21 Oct 2013 09:22 AM PDT



"மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்"

என் அடிமையாக வேண்டாம்!!

உன்னைபோல் ஒருவள் கிடைத்தால்
ஓராயிரம் வலிகளையும்
ஓயாமல் தாங்கிகொள்வேன்...

ஒட்டுமொத்த உலகையும் நின்று வெல்வேன்....!!

நீ என்ன ஜாதி - குழந்தை ஜாதி

Posted: 21 Oct 2013 09:20 AM PDT

ஒரு பத்திரிகை நிருபர் ... ஒரு கிராமத்திற்கு சென்று சாதியை ஒழிப்போம் என்ற தலைப்பில் பேட்டி எடுத்தார் .. இவர் முதல் ஒரு டீ கடையின் முன் தனது பேட்டியை ஆரம்பித்தார் .அங்கே ஒரு பெரியவரிடம் சாதி என்பது உங்கள் ஊரில் உண்டா என்று நிருபர் கேட்டார் ..? ஏன் இல்லை இதோ கீழே உட்கார்ந்து டீ குடிப்பவர்கள் கீழ் ஜாதி மக்கள் என்றார் பெரியவர் .. நிருபர் எதுவும் பேசாமல் ஊரின் உள்ளே சென்றார் ..அங்கே தம்பதிகள் நடந்து வந்தனர் அவகளிடம் நிருபர் சாதி என்பதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிரீர்கள்என்று கேட்டார் ...

வாழ்க்கையை வாழ்ந்து பாருங்கள்

Posted: 21 Oct 2013 08:06 AM PDT

அந்தச் சிறுவன் நடந்து போய்க் கொண்டிருந்த போது சாலையில் நூறு ரூபாய் நோட்டு கிடப்பதைப் பார்த்தான். அன்று முதல் ஏதும் தரையில் கிடக்கிறதா என்று பூமியைப் பார்த்துக் கொண்டே நடந்தான். அடுத்த அறுபது வருடங்கள் அப்படியே இருந்தான். அவனுக்குக் கிடைத்தவை 768 ரூபாய், 2 மோதிரங்கள், 3 கொலுசுகள். ஆனால் அவன் இழந்திருந்தவை, 21900 சூர்யோதயங்கள், 630 வானவில் காட்சிகள். ஆயிரக்கணக்கான பூக்கள், பல்லாயிரம் குழந்தைகளின் புன்னகைகள் வாழ்க்கையைத் தொலைத்தவன் மீட்பதற்கு வாய்ப்பே இல்லை. அதிர்ஷ்டம் காலை ...

பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - அரசியல் ஸ்டேட்மென்டு

Posted: 21 Oct 2013 07:53 AM PDT

நண்பர்களே இந்த திரியில் அரசியல் தலைவர்கள் சொல்லும் பஞ்ச் டயலாக்கை செய்திகளில் இருந்து எடுத்தோ அல்லது தொலைகாட்சி செய்தியில் பார்த்தோ இங்கு பதிவிட்டு படித்து மகிழலாம்   அவங்களுக்கு என்ன பல்லுமேல நாக்கை போட்டு எதை வேன்டூமானாலும் சொல்லுவாங்க! பாவம்நாம என்ன செய்ய முடியும்.ஹிஹி முதல் பக்கோடா இதோ: அவசர சட்டம் வாபஸ் பெறப்பட்டதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிதான் காரணமே தவிர ராகுல் காந்தி அல்ல பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானி

பணம் ஒரு குரங்கு

Posted: 21 Oct 2013 07:46 AM PDT

பணம் இல்லாத போது ஹோட்டல்ல வேலை செஞ்சாலும் வீட்ல வந்து சாப்பிடுகிறான் பணம் இருக்கும் போது வீட்டுல சமச்சாலும் ஹோட்டல்ல போய் சாப்பிடுகிறான் பணம் இல்லாத போது வயத்தை நிரப்ப சைக்கிள் ல போறான் பணம் இருக்கும் போது வயத்தைக் குறைக்க சைக்கிள் ல ோறான் பணம் இல்லாத போது சோத்துக்காக அலைகிறான் பணம் இருக்கும் போது சொத்துக்காக அலைகிறான் பணம் இல்லாதபோது பணக்காரனாக நடந்து கொள்கிறான்; பணம் இருக்கும் போது ஏழையாக காட்டிக் கொள்கிறான். நிம்மதியாக இருக்கும் போது பணத்தைத் தேடுகிறான் பணம் ...

புற்று நோயால் அவதிப்படுகிறார் நாகேஸ்வரராவ்...!!

Posted: 21 Oct 2013 07:38 AM PDT

தமிழ்நாட்டு மக்களால் தேவதாசை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. அந்த தேவதாஸ் தான் அக்கினேனி நாகேஸ்வரராவ். ஆந்திராவின் சிவாஜி என்று இவரை அழைப்பார்கள். மகன் நாகார்ஜுனா, பேரன் நாகசைதன்யா ஆகியோர் சினிமாவில் ஹீரோக்களாக கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறார்கள். 90 வயதை தாண்டியும் இப்போதும் நடித்துக் கொண்டிருக்கிறார் நாகேஸ்வரராவ். அவருக்கு இப்போது புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இந்த வயதிலும் யாருடைய துணையும் இன்றி தன்னிச்சையாக தன் தேவைகளை தானே கவனித்துக் ...

2013 -ஆங்கில வார/மாதஇதழ்கள் இலவசமாக பதிவிறக்க ..

Posted: 21 Oct 2013 07:15 AM PDT

October2013-Cinema Spice Entertainment Magazine PDF Mediafire Link.... http://www.mediafire.com/download/tdsb84tqa8xdm86/Cinema+Spice+October2013%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf August2013-Cinema Spice Entertainment Magazine PDF Mediafire Link.... http://www.mediafire.com/download/cergchvdghra7dc/Cinema+Spice+Entertainment+August2013%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf October2013--India Today Travel Plus Magaine PDF Free Download Link... http://www68.zippyshare.com/v/30292452/file.html October2013-FHM ...

கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை

Posted: 21 Oct 2013 06:54 AM PDT

சினிமா திரைப்படங்களில் கூட  சினிமா திரைப்படங்களில் கூட இப்படி ஒரு திருப்பத்தை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். அதுபோன்றதொரு நிலைமை இந்தியாவில் குடியா என்ற இளம் பெண்ணுக்கு நேரிட்டது. பிறகு அதுவே சினிமாவாகவும் எடுக்கப்பட்டது. கார்கில் போரில் கைதான இந்திய ராணுவத்தினர் விடுதலை செய்யப்பட்ட பிறகு அதாவது 2005ஆம் ஆண்டு குடியா பற்றிய செய்திகள் பரவலாக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தன. இந்திய எல்லையில் எத்தனையோ போர்களில் வீரர்கள் இறக்கிறார்கள். எத்தனையோ வீரர்கள் கைதிகளாக ...

ரோட்ல ஒரு பையனும், ஒரு பெண்ணும் போறாங்க....

Posted: 21 Oct 2013 06:54 AM PDT

ரோட்ல ஒரு பையனும், ஒரு பெண்ணும் போறாங்க.... பையனோட மாமியார், பெண்ணோட மாமியாருக்கு அம்மா. அப்படின்னா பையனுக்கும் பெண்ணுக்கும் என்ன உறவு...... தயவு செஞ்சு பதில் சொல்லிட்டு போங்க.... நன்றி facebook

வெளிநாட்டு பயணத்திற்கு ரூ.640 கோடி ; அனைத்து பிரதமரையும் விஞ்சி நிற்கிறார்

Posted: 21 Oct 2013 06:42 AM PDT

புதுடில்லி: இந்திய பிரதமர்களில், அதிகம் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டவர், முந்தைய பிரதமர்கள் காட்டிலும் வெளிநாட்டு பயணத்திற்காக அதிக பணம் செலவு செய்தவர் என்ற பெருமைகளை மன்மோகன்சிங் பெற்று, மற்ற பிரதர்களை காட்டிலும் விஞ்சி நிற்கிறார். இன்னும் சொல்லப்போனால், பார்லி., நடக்கும் போதுதான் மன்மோகன்சிங் அதிகமான அளவில் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார். இது குறித்து இந்தியா டூ டே வெளியிட்டுள்ள சிறப்பு செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அமர்ந்த காலம் ( 2004 ) முதல் பிரதமர் ...

அதுக்குதான் பெரியவங்க சொல்லுவாங்க.. ரெண்டு பாஷை தெரிஞ்சு வச்சுக்கறதுன்னு.

Posted: 21 Oct 2013 06:36 AM PDT

# படித்ததில் பிடித்தது # ஒரு எலி தன் குடும்பத்தோடு போய்க் கொண்டிருந்தது.. அப்போது திடீரென ஒரு பூனை வழி மறித்தது. தாய் எலியும், குட்டி எலிகளும் பயத்தில் உறைந்து நிற்க, தந்தை எலி தைரியமாக முன்னே பாய்ந்து, லொள்... லொள்.. என்று சத்தமிட்டது. அதிர்ச்சி அடைந்த பூனை ஓடிவிட்டது. குட்டி எலி அப்பாவிடம் இது என்னா கூத்து..? என்று கேட்க அப்பா எலி சொன்னது.. அதுக்குதான் பெரியவங்க சொல்லுவாங்க.. ரெண்டு பாஷை தெரிஞ்சு வச்சுக்கறதுன்னு... நன்றி முகநூல்

எல்லா தவறுகளும் ஒரு நாள் தண்டிக்கப்படும்- இதில் எனக்கு நம்பிக்கை உண்டு

Posted: 21 Oct 2013 06:32 AM PDT

ஆசையே துன்பத்திற்கு காரணமாம் . புழுவிற்கு மீன் ஆசைப்பட்டது . மீனுக்கு மனிதன் ஆசைப்பட்டான் . மீனுக்கு சிக்கியது புழு . மனிதனுக்கு சிக்கியது மீன் . புழுவிற்கு ? ஆனாலும் காத்திருந்தது புழு, மனிதன் மண்ணுக்குள் வரும் வரை . # எல்லா தவறுகளும் ஒரு நாள் தண்டிக்கப்படும்

வெள்ளையா இருக்குறவன் பொய் பேசமாட்டான் ஹி ஹி

Posted: 21 Oct 2013 06:30 AM PDT

அறிவு சார்ந்த அளவுகோலை பணத்தின் கைகளில் கொடுத்தது யார் ? இந்தச் சமூகம் தான். இலவசமாக வைத்தியம் பார்க்க நான் தயார் என்று ஒரு மருத்துவர் சொன்னால் அப்பொழுது கூட நீங்கள் சொல்லும் வார்த்தை இதுவாகத்தான் இருக்கும் - ஓசியில வைத்தியம் பார்க்கிறேன்னு சொல்றாரே ! நல்லா பார்ப்பாரா ? பணம் அதிகம் வாங்கும் மருத்துவர் தான் அதிகம் படித்தவர், அதிகம் அறிந்தவர் , நம்மை விரைவில் நோயிலிருந்து குணமாக்குவார் என்னும் கண்மூடித்தனமான நம்பிக்கையில் இருந்து முதலில் வெளியில் வாருங்கள மக்களே... ஆங்கிலத்துல பேசினாத்தான் ...

பெற்றோரின் கவனத்திற்கு - சில அறிவுரைகள்

Posted: 21 Oct 2013 06:28 AM PDT

ஒவ்வொரு பெற்றோரும் கண்டிப்பா படிக்க வேண்டிய பயனுள்ள விடயங்கள்! ! ! ! 1. பசி என்று குழந்தை சொன்னால், உடனே உணவு கொடுங்கள், அரட்டையிலோ, சோம்பலிலோ, வேறு வேலையிலோ குழந்தையின் குரலை அலட்சியப்படுத்தாதீர்கள்! 2. மேலாடையின்றியோ,ஆடையே இன்றியோ குழந்தைகள் உங்களுக்கு குழந்தையாய் தெரியலாம், எல்லோருக்கும் அப்படியே தெரியும் என்று எண்ணிவிடாதீர்கள். 3. ஒருபோதும் "ச்சீ வாயை மூடு" "தொணதொண என்று கேள்வி கேட்காதே" என்று அவர்களிடம் எரிச்சல் காட்டி, அவர்களின் ஆர்வத்தை குழி தோண்டி புதைத்து விடாதீர்கள்! 4. ...

பரோட்டா சாப்பிடுவது எப்படி...??

Posted: 21 Oct 2013 06:27 AM PDT

பரோட்டா சாப்பிடுவது எப்படி...?? 1, முதலில் இரண்டு பரோட்டாக்களும் ஒரு ஆம்லெட்டும் ஆர்டர் பண்ணவும், ( பரோட்டா பொன்னிறமாக படத்தில் உள்ளது போல் இருப்பது நல்லது, சுவையை கூட்டும்) 2, வாங்கிய பரோட்டாவை சரியாக 2.5 இன்ச் நீளத்துக்கு தனி தனியாக பிய்த்துபோட்டுக்கொள்ளவும், 3, பிய்த்து போடப்பட்ட பரோட்டக்களை மலை போல குவிக்கவும், இப்போது நடுவில் மட்டன் அல்லது சிக்கன் குழம்பை ஊற்றவும், 4, குழம்பு கலக்கப்பட்ட பரோட்டாவை சாதம் பிசைவது போல மென்மையாக பிசையவும்! பிசைந்துவிட்டு 1 நிமிடம் பொறுமையாக இருக்கவும்! ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™