Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


இளம்பெண் விஞ்ஞானி விருது விண்ணப்பங்கள் வரவேற்பு

Posted: 11 Oct 2013 02:09 PM PDT

சென்னை: இளம்பெண் விஞ்ஞானி விருது மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற, அறிவியல் துறையில், சாதனை புரிந்த, பெண்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறிவியல் நகரம் என்ற தன்னாட்சி நிறுவனம், உயர்கல்வித்துறை கீழ் உள்ளது. இந்நிறுவனம், அறிவியல் தொழில்நுட்பத்தை பிரபலப்படுத்த, ஆண்டுதோறும், தமிழகத்தில் உள்ள, பெண் அறிவியலாளர்களை, தேர்வு செய்து, இளம்பெண் விஞ்ஞானி விருது மற்றும் பெண் விஞ்ஞானிகளுக்கான, வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி வருகிறது. வேளாண் அறிவியல், ரசாயன அறிவியல், பொறியியல் மற்றும் ...

பெரும் புயல் சனிக்கிழமை இந்தியாவைத் தாக்கும்

Posted: 11 Oct 2013 02:07 PM PDT

இந்தியாவின் கிழக்கு கடற்கரையை பெரும் புயல் நாளை கடக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஒதிஷா மற்றும் ஆந்திரப்பிரதேச மாநிலங்களை 'பைலின்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல் தாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுவரும் நிலையில், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடலோரப் பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுவருகிறார்கள் வங்கக் கடலில் உருவாகியுள்ள 'பைலின்' புயல் மிகவும் சக்தி வாயந்ததாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தற்போது கரையில இருந்து 450 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ள இந்தப் ...

"பத்திரிகைகளை வாங்காதீர்கள்!': கருணாநிதி கட்டளை

Posted: 11 Oct 2013 01:37 PM PDT

தி.மு.க., சட்டதிட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்ளாமலும், கட்சித் தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திடும் வகையிலும், அ.தி.மு.க., ஆட்சியினரிடமிருந்து, எப்படியாவது விளம்பரங்களைப் பெற்று தங்கள் கஜனாவை நிரப்பிக் கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தோடும், கட்சியை பற்றிய உண்மைக்கு மாறான செய்திகளை, ஒரு சில நாளேடுகள், தொடர்ந்து வெளியிட்ட வண்ணம் உள்ளன. விரைவில் நடக்க உள்ள கட்சி பொதுக் குழுவுக்கான அறிவிப்பை தலைமை அலுவலகத்தின் சார்பில் அறிவித்ததில் இருந்து, இந்த பத்திரிகைகள், "இவர் பொதுச் செயலராக வரப்போகிறார்; ...

உழவும் உயிர் அற்று கிடக்குதே  ......

Posted: 11 Oct 2013 01:17 PM PDT

காடெல்லாம் நாடாக்க பாடுபட்ட எத்தனையோ கைகள் காடெல்லாம்  கழனியாக   ஓடாய் தேய்ந்த உழவர்  எத்தனையோ மேடு பள்ளம் எல்லாம்   கோடு கோடாக  உழுது   ஆடு  மாடெல்லாம் அழகாக தொழுது வீடெல்லாம் விருந்தளிக்கும்   விலையில்லா  விவசாயி  இவரோ  .... மண்ணெல்லாம் விளைய பொன்னாக  பெருக   எண்ணமெல்லாம் எண்ணமுடியாத வண்ணமென வயலெல்லாம்   மனம் போல குணம்  போல     தினம் விளையனும்  வெள்ளாமை .... உழுது  போட்ட  நிலமெல்லாம் பழுதாகி  கிடக்குதைய்யா உயர  உயர  கட்டிடம்  எல்லாம் உயர்ந்து நிற்குதைய்யா ...

நிஜமா? இல்ல கல்லுதானா ?

Posted: 11 Oct 2013 12:27 PM PDT

இது கற்களால் செய்யப்பட்டவை என்றால் நம்புவீர்களா ? நன்றி : இணையத்தில் சுட்டது...

How do download tamiltorrent.net torrentfiles without registration

Posted: 11 Oct 2013 12:21 PM PDT

How do download tamiltorrent.net torrentfiles without registration

வெற்றிக்கு ஒரு புத்தகம்

Posted: 11 Oct 2013 12:19 PM PDT

வெற்றியைத் தேட ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றன. சந்தோஷத்தை எங்கே போய்த் தேடுவது? அது உள்ளுக்குள்ளிருந்து மலரவேண்டிய விஷயம் இல்லையா? நாமாக நம் வாழ்க்கையை சந்தோஷமாக அமைத்துக் கொள்ள வழி(கள்) ஏதேனும் உண்டா? இந்த கேள்விகளை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒரு பிரபலமான புத்தகம் "தி வே டு ஹேப்பினெஸ்' இங்கிலாந்தைச் சேர்ந்த ரான் ஹப்பார்ட் என்பவர் எழுதிய இந்தப் புத்தகம் இன்றுவரை பல லட்சம் பிரதிகள் வெளியாகியுள்ளது. 70 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. "தி வே டு ஹேப்பினஸ்' ...

பலத்த பாதுகாப்பு வளையத்தை மீறி லிபியா பிரதமர் கடத்தல்

Posted: 11 Oct 2013 12:17 PM PDT

திரிபோலி : லிபியா நாட்டு பிரதமர் அலி ஜிடானை நேற்று அதிகாலை பயங்கர ஆயுத கும்பல் கடத்தியது. அவரை பற்றி தகவல் தெரியாததால் பதற்றம் நிலவுகிறது. லிபியாவில் சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்த கடாபிக்கு எதிராக கடந்த 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உள்நாட்டு புரட்சி ஏற்பட்டது. அதன்பின் தலைமறைவான கடாபியை புரட்சியாளர்கள் கடந்த 2011ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி கண்டுபிடித்து அடித்து கொன்றனர். இதனால், சர்வதேச அளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பிறகு இடைக்கால அரசு நிர்வாக பொறுப்பேற்றது. லிபியா பிரதமராக அலி ...

வரதட்சணை கேட்டு மிரட்டுகிறார்: கிறித்தவ மதபோதகர் மீது மனைவி புகார்!

Posted: 11 Oct 2013 11:55 AM PDT

10.10.2013 சென்னை: வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக, மதபோதகர் மீது, அவர் மனைவி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை அயனாவரம், போலீஸ் மாணிக்கம் தெருவைச் சேர்ந்தவர், பியூலா மெர்சி பிரீத்தி, 25. இவர், கமிஷனர் அலுவலகத்தில், நேற்று அளித்த புகார் விவரம்: அயனாவரம், போலீஸ் மாணிக்கம் தெருவைச் சேர்ந்த, ஜெசுரன் ராய் நைட். சென்னை "சர்ச் ஆப் கிரைஸ்டில்', மதபோதகராக உள்ளார். கடந்த, 2007ல், எங்கள் இருவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது, 18 சவரன் நகையும், ஒரு ...

பெண் குழந்தைகள்... பெண் தெய்வங்கள்: சர்வதேச பெண் குழந்தைகள் தினம்

Posted: 11 Oct 2013 11:47 AM PDT

இன்றைய நவீன உலகிலும் பெண் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படுவது அநீதி. பெண் குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டவும், அவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாகவும், 2011 டிச., 19ம் தேதி ஐ.நா, சபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன்படி, அக்., 11ம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. "பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தல்' என்பது இந்தாண்டு இத்தினத்தின் மையக்கருத்து. உலகில் அனைத்து பெண் குழந்தைகளுக்கும் கட்டாயம் கல்வி வழங்கவேண்டும் என ஐ.நா., வலியுறுத்துகிறது. பெண் குழந்தைகள் ...

பெருச்சாளி வாகனம் ஏன்?

Posted: 11 Oct 2013 11:45 AM PDT

- மிகப்பெரிய யானையின் முகமுள்ள விநாயகர் மிகச்சிறிய பெருச்சாளியை வாகனமாகக் கொண்டிருப்பது அவரே எல்லாவற்றுக்கும் ஆதாரமாக உள்ளார் என்பதை எடுத்துக்காட்டுகிறது. - பெருச்சாளி இருளை விரும்பும். கீழறுத்துச் சென்று கேடு விளைவிக்கும். எனவே அது அறியாமையையும் ஆணவத்தையும் குறிக்கிறது. - ஆகவே பெருச்சாளியை பிள்ளையார் தமது காலின் கீழ் கொண்டிருப்பதன் அர்த்தம், அவர் அறியாமையையும், செருக்கையும் அடக்கி ஆட்கொள்பவர் என்பதை புலப்படுத்தவே - ------------------------------

தேவதச்சன் - கவிதைகளின் நாயகன் !

Posted: 11 Oct 2013 11:41 AM PDT

பதில் எதுவும் சொல்ல வேண்டாம் பதிலுக்கு என்னைப் பார்க்கவும் வேண்டாம் உன்னைத் தீண்டும் போது பதிலுக்குப் பதில் என்னைத் தொட்டுவிடத் தேவையில்லை பார்வையில் பட்டோ படாமலோ அருகிருந்தால் போதும் என்னை நனைக்கும் நீரின் ஈரம் எதற்கும் பதிலாக இல்லை                                         - தேவதச்சன் நீங்கள் கவிதை வாசிக்கும் பழக்கம் உள்ளவரா ? இல்லையென்றாலும் பரவாயில்லை , ஒரு முறை தேவதச்சனின் கவிதைகளைப் படித்துப் பாருங்கள் . உங்கள் தினசரி வாழ்க்கையை சுவை மிக்கதாக மாற்றும் வல்லமை அவரது கவிதைகளுக்கு ...

ஹெல்த் ஸ்பெஷல் - கேழ்வரகு இட்லி

Posted: 11 Oct 2013 11:35 AM PDT

ஹெல்த் ஸ்பெஷல் - கேழ்வரகு இட்லி இது சூப்பரான சத்தான கேழ்வரகு இட்லி. அரிசி இட்லியினை விட இந்த இட்லி மிகவும் பஞ்சு போல மென்மையாக இருக்கும். கேழ்வரகில் அதிக அளவு கால்சியம்(Calcium) இருக்கின்றது. அதனால் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் அவசியம். கேழ்வரகில் அதிக அளவு நார்சத்து(Dietary Fiber), புரோட்டின்(Protein) காணப்படுகின்றது. டயபெட்டிக், வயதனாவர்களுக்கு எற்ற உணவு. தேவையான பொருட்கள் : கேழ்வரகு மாவு - 2 கப் உளுத்தம் பருப்பு - 3/4 கப் உப்பு - 1 தே.கரண்டி கேழ்வரகு இட்லி செய்முறை : உளுத்தம் ...

சச்சின் : 200வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு

Posted: 11 Oct 2013 11:31 AM PDT

பல மாத யோசனைக்குப் பின், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இருந்து ஓய்வை அறிவித்தார் இந்திய அணி வீரர் சச்சின். அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான, தனது 200வது டெஸ்ட் போட்டியுடன், முழுமையாக விடைபெறுகிறார். இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், 40. 1989, நவ., 15ல் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகம் ஆனார். சர்வதேச போட்டிகளில் "சதத்தில் சதம்' அடித்து சாதித்தவர். 198 டெஸ்டில் 15,837 ரன்கள் (51 சதம்), 463 ஒருநாள் போட்டிகளில் 18,426 ரன்கள் (49 சதம்) என, மொத்தம் 50,024 ரன்கள் குவித்துள்ளார். ...

உறவுகள்

Posted: 11 Oct 2013 11:29 AM PDT

எங்கள் வீட்டு விருந்தோம்பல் என்றென்றும் திருவிழாவாய் எங்கள் வீடு நிறைந்திருக்கும் உறவினர்கள் வருகையின்றி ஒரு நாளும் இருந்ததில்லை உற்றார்கள் துணையோடு சந்தோசத்தில் திளைத்திருந்தோம் சங்கீதமாய் பாடி மகிழ்ந்தோம் இத்தனையும் ஒரு நொடியில் காணாமல் போனதிங்கு அப்பாவின் தொழில் நஷ்டம் அனைத்தையும் இழந்து நின்றோம் ஒருவரையும் காணவில்லை ஒருவார்த்தை பேசவில்லை இத்தனை நாள் வந்த சொந்தம் ஒருவருமே வருவதில்லை மனித மனம் மிருகமென்று அப்பொழுதே அறிந்து கொண்டேன் சொந்தங்கள் அத்தனையும் பகட்டானா வாழ்க்கைக்கு ...

மரங்களுக்கு இன்சூரன்ஸ் திட்டம் துவக்கம்

Posted: 11 Oct 2013 11:16 AM PDT

மரங்களுக்கு இன்சூரன்ஸ் திட்டம் துவக்கம் மேட்டுப்பாளையம்: ஏழு வகையான மரங்களுக்கு காப்பீடு செய்யும் திட்டம், இன்று இங்குள்ள வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் துவக்கி வைக்கப்பட்டது. இந்தியாவிலேயே முதன் முறையாக துவக்கப்பட்டுள்ள இத்தி்ட்டத்தின் கீழ், சவுக்கு, தைலம், மலைவேம்பு, பெருமரம், குமிழ், சுபாபுல் மற்றும் சிசு ஆகிய மர வகைகளுக்கு, யுனைட்டட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் காப்பீடு செய்து கொள்ள முடியும். இதற்கு, ஏக்கருக்கு ஆண்டுக்கு 300 முதல் 600 ரூபாய் வரை பணம் செலுத்த ...

கப்பலா? இல்லை ஒரு நகரமா?

Posted: 11 Oct 2013 11:14 AM PDT

நன்றி : தமிழ் இணையம்.

காஞ்சிரைப் பழங்கள்

Posted: 11 Oct 2013 11:10 AM PDT

அழகாயிருக்கும் காஞ்சிரைப் பழங்கள் சந்தையில் விக்காது. இப்படி ஒரு பாடலில் வரிகள்.

காஞ்சிரைப் பழங்கள் எப்படி இருக்கும், அன்புடன் விளக்கம் தருவீர்களா?

இந்த ஆம்பிளைங்க ரொம்பக் கொடுத்து வச்சவங்கப்பா....

Posted: 11 Oct 2013 11:06 AM PDT

பொதுவாக ஆண், பெண் என்ற உடலியல் வேறுபாடுகளைத் தவிர்த்து சமுகமும் சில பல சௌகரியங்களை ஆண்களுக்கும், பெண்களுக்கும் வகுத்துக் கொடுத்துள்ளது. அந்தவகையில் பெண்களோடு ஒப்பிட்டால் ஆண்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் தான். பெண்களுக்கு சாத்தியப்படாத சில விஷயங்களை ஆண்கள் இலகுவாக கடந்து செல்வார்கள். அந்த வகையில் ஆண்கள் ஏன் பெண்களை விட அதிக அதிர்ஷ்டசாலிகள் என்பதைத் தெரிந்து கொள்ள பின்வரும் பகுதிகளை பாருங்க நிரந்தரமானது... ஆண்களுக்கு இன்சியலும் சரி, பெயரின் கடைசிப் பகுதியும் சரி வாழ்நாளில் மாறவே ...

வைகைப் புயல் வடிவேலுக்கு பிறந்த நாள்

Posted: 11 Oct 2013 11:04 AM PDT

(10-10-2013) --------------------- வடிவேலு தனது 53வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். - - 1991ல் கஸ்தூரி ராசா இயக்கிய என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானார் வடிவேலு. அதனைத்தொடர்ந்து இவர், காதலன், கிழக்குச் சீமையிலே, முதல்வன், பொற்காலம், வின்னர், சச்சின், சந்திரமுகி உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் கலக்கியுள்ளார். தன்னுடைய நகைச்சுவையால் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பெற்றிருக்கும் வடிவேலு முதன் முறையாக இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் ...

ஆசை நாயகிகளால் சிக்கும் சீன அரசு அதிகாரிகள்

Posted: 11 Oct 2013 11:02 AM PDT

தாங்கள் அரசின் உயர்ந்த பதவிகளில் இருந்தபோது கிடைத்த பணத்தில் அனுபவித்த ஆசை நாயகிகளின் தொடர்பு இப்போது பல சீன அரசாங்க அதிகாரிகளை சிக்கலில் மாட்டிவிடுகின்றது. அதிகாரிகளுடன் தாங்கள் அனுபவித்த உல்லாச வாழ்க்கையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும், வீடியோக் காட்சிகளையும் வெளியிடுவது தற்போதைய சீன அரசியலில் புதுத்திருப்பமாக உள்ளது. சீன அரசாங்கத்தின் லஞ்ச ஊழல் எதிர்ப்பு அதிகாரிகளும் இது போன்ற தொடர்பு வைத்திருப்பவர்களை தகுந்த ஆதாரங்களுடன் வெளிப்படுத்தி ஊழலை ஒழிக்க தங்களின் பங்களிப்பைத் தரும்படி அவர்களை ...

செடிகளுக்கு தண்ணீர் விடுங்கள்

Posted: 11 Oct 2013 11:00 AM PDT

செடிகளுக்கு தண்ணீர் விடுங்கள் எங்கு மக்கள் துன்பப்படுகிறார்களோ, அங்கே வலுவில் சென்று நம்மால் ஆகக்கூடியதை எல்லாம் செய்ய முயல வேண்டும். பணத்தாலோ, உடலாலோ, வாக்காலோ பிறருக்கு முடிந்த உதவியை செய்ய வேண்டியது நம் கடமை. * தினமும் செடி கொடிகளுக்கு தண்ணீர் விட வேண்டும். மிருகங்களுக்கு அன்போடு உணவு கொடுக்கவேண்டும். வாயில்லா ஜீவன்களுக்கு பரிவு காட்டுவது அவசியம். ஒருபோதும் அவற்றைக் கொடுமைப்படுத்தக் கூடாது. * பக்தி இல்லாமல் வெறுமனே கடமையில் ஈடுபடுவது கூடாது. கடவுளே நம் நன்மைக்காக கடமைகளை விதித்து, அதற்கான ...

முதுமை எவ்வாறு ஏற்படுகிறது... இந்த வீடியோவை உற்றுப்பாருங்கள்.

Posted: 11 Oct 2013 10:35 AM PDT

முதுமை எவ்வாறு ஏற்படுகிறது... இந்த வீடியோவை உற்றுப்பாருங்கள் உங்களை உங்கள் கண்கள் ஏமாற்றும் அதற்கும் முதுமை வந்துவிடும்....



முகநூல்

New Internet Radio For South indian Peoples

Posted: 11 Oct 2013 10:33 AM PDT

This Is new Version With Following Options:- Tamil 62 channles Malayalam 15 Channels Telugu 15 Channels Kannada 3 channels( i not Get more Channels) For More Info Please Read Help File After Installation System Requirements:- Windows Xp Or Vista 256 Mb Ram Screen Resolution More ...

சன்டிவியில் வேலைவாய்ப்பு...

Posted: 11 Oct 2013 08:48 AM PDT

New Openings at Sun TV. Send your resumes to careers@sunnetwork.in with Subject as the Position.. - 1. Front Office Receptionist In Sun Tv Network Ltd Multiple Openings Must have pleasing personality and must posses Good communication skill. Work Location – Chennai Qualification – Any Graduate - 2. Supervisor (For Camera Dept.) Job type: Full-Time Candidates with 2+ years of experience Should have supervisory experience to handle a big team of employees. Should be a graduate/ Diploma ...

மந்திரயுத்தம்-கௌதமநீலாம்பரன் நாவல்

Posted: 11 Oct 2013 08:30 AM PDT

மந்திரயுத்தம்-கௌதமநீலாம்பரன் நாவல்

http://www.mediafire.com/download/b2s24vbylesebif/MANDHIRA+YUTHTHAM%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf

கண்ணதாசன் -ஊமையன் கோட்டை

Posted: 11 Oct 2013 08:29 AM PDT

வல்லத்து இளவரசி-விக்கிரமன் நாவல்

Posted: 11 Oct 2013 08:28 AM PDT

வல்லத்து இளவரசி-விக்கிரமன் நாவல்

http://www.mediafire.com/download/5ac28ag2fbayr5e/VallathuIlavarasi_Vikraman.pdf

ரிஷி-எண்டமூரி விரேந்திரநாத் நாவல்

Posted: 11 Oct 2013 08:27 AM PDT

ரிஷி-எண்டமூரி விரேந்திரநாத் நாவல்

http://www.mediafire.com/download/09e6y7ys2foq62l/ENDAMOORI-RISHI.pdf

கவிதையில் யாப்பு

Posted: 11 Oct 2013 06:13 AM PDT

யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம் ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012 இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி. தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது. கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே, என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம். யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில் ...

ரமணியின் கவிதைகள்

Posted: 11 Oct 2013 05:18 AM PDT

கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ...

பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள்)

Posted: 11 Oct 2013 04:28 AM PDT


-
செம்போத்து
-
-------------------------

-
சிட்டுக்குருவி ( ஊர்க்குருவி)
-

சாவுக்கு முன்னால்(சா.மு),சாவுக்குப் பின்னால்(சா.பி)...!!! (Mano Red)

Posted: 11 Oct 2013 03:04 AM PDT

சாவும் ஒருவகைப் பிறப்பே, மனிதனிலிருந்து பிணமாய் அவதாரம் காண்கையில்..!! மனித சட்டை கழற்றி பிணமென்ற புத்தாடை அணிந்து சுதந்திர மகிழ்வில் சுடுகாட்டை நோக்கி வருகையில் சாவும் சந்தோசமே...!! எதற்கோ பிறந்த உடல் எதை எதையோ தேடி, வந்த வழி மறந்து வராத வழி சென்று வரும் வழி சேர்ந்து மடிகிறது..!! சொந்த பந்தம் சூழ செழிப்பாய் வாழ்ந்த உடல், செத்துப் போவோமென தெரியாமல் செதுக்காத வாழ்வில் தொலைகிறது..!! மண் பொன் என ஆசை பல கொண்ட உடல், ஆவி விட்டுப் பிரிகையில் ஆடை அகலுமென தெரியாமல் ஆடிக்கூடி ...

கர்ப்பிணி வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு இருதய ஆபரேசன்: அமெரிக்க டாக்டர்கள் சாதனை

Posted: 11 Oct 2013 02:31 AM PDT

கர்ப்பிணி வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு இருதய ஆபரேசன் செய்து அமெரிக்க டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். அமெரிக்காவில் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த ஒரு கர்ப்பிணி பெண்ணிற்கு ஸ்கேன் பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது அவரது வயிற்றில் வளர்ந்த 25 வார கருக்குழந்தைக்கு இருதயத்தில் பெருந்தமணி ரத்தக்குழாய் வால்வில் அடைப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அக்குழந்தை பிறந்த பிறகு மூச்சுதிணறல் உள்ளிட்ட இருதய நோயினால் அவதிப்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். மேலும் உயிருக்கு ஆபத்து விளையும் நிலையும் இருந்தது. எனவே, ...

ஆறடி நிலமே சொந்தமாடா...!

Posted: 11 Oct 2013 01:25 AM PDT

ஒர் ஊரில் ஏழை விசாயி இருந்தான். அவனுக்குப் பணக்கரனாக வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது. கூடவே பெரிய அளவிலான நிலத்திற்கு சொந்தக்காரனாக வேண்டுமென்ற ஆசையும் அவனுக்கு ஏற்பட்டது. - அடுத்த ஊரில் பெரிய அளவிலான நிலம் பராமரிக்கப்படாமல் கிடந்ததைப் பார்த்தான். அந்த நில உரிமையாளரைத் தேடிச் சென்றான். நில உரிமையாளரிடம், அந்த நிலத்தைத் தனக்கு விலைக்குத் தரும்படி கோரினான். - நில உரிமையாளர் அவனிடம், "நீ ஓடிவிட்டுத் திரும்பும் வரை எவ்வளவு தூரம் உன் கால் படுகிறதோ அவ்வளவு தூரத்திற்கான நிலத்தை இலவசமாகவே ...

மீனவர் வலையில் சிக்கிய 1 டன் எடையுள்ள "யானை திருக்கை மீன்கள்'!

Posted: 11 Oct 2013 01:06 AM PDT

- கன்னியாகுமரி மாவட்டம் ஆரோக்கியபுரத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தூத்தூர் மீனவரின் விசைப்படகில் தலா 1 டன் எடையுள்ள 4 ராட்சத யானை திருக்கை மீன்கள் கிடைத்தன. இது குறித்து படகின் உரிமையாளரான பிஜி கூறியதாவது: விசைப்படகு மூலம் 15 நாள்கள் தங்குதொழிலுக்காக ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்றோம். எங்களது வலையில் "யானை திருக்கை மீன்கள்' சிக்கின. ஒரு டன் எடையுள்ள இவ்வகை மீன்கள் தலா ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ளவை. மீன்கள் அதிகமாகக் கிடைத்ததால் தங்குதொழிலை ரத்து செய்து விட்டு கரை ...

internet radio station

Posted: 11 Oct 2013 12:57 AM PDT

internet radio station Internet radio (also known as web radio, net radio, streaming radio and e-radio) is an audio broadcasting service transmitted via the Internet. Broadcasting on the Internet is usually referred to as webcasting since it is not transmitted broadly through wireless means. Internet radio involves a streaming medium that presents listeners with a continuous "stream" of audio IInternet radio services are usually ...

சிக்ஸ் பேக்கில் கரீனா கபூர்!

Posted: 11 Oct 2013 12:16 AM PDT

-- – 'Shuddhi' என்னும் இந்தி படத்திற்காக சிக்ஸ் பேக் வைக்கவிருக்கிறார் கரீனா கபூர். - கரண் மல்கோத்ரா இப்படத்தினை இயக்கவிருக்கிறார். ஹிரித்திக் ரோஷன் நாயகனாக நடிக்கும் இப்படத்தினை தயாரிக்கிறார் இயக்குநர் கரண் ஜோஹர். டிசம்பர் மாதம் முதல் படப்பிடிப்பு துவங்கப் போகிறார்களாம். - இப்படத்திற்காக தற்காப்பு கலைகளை கற்க திட்டமிட்டு இருக்கிறார் கரீனா கபூர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™