Tamil Star |
- நவியின் கருத்துக்கு அதிருப்தி ஐ.நா.செயலருக்கு அரசு கடிதம்
- பிரபாகரன் சரணடைந்திருந்தால் மஹிந்தவின் குடும்பத்துடன் இருந்திருப்பார்’
- கேதார் பள்ளத்தாக்கில் மேலும் 68 உடல்கள் மீட்பு
- பாகிஸ்தானுக்கு சுற்றூலா செல்ல வேண்டாம்: அமெரிக்கா பயண எச்சரிக்கை
- 2014ம் ஆண்டில் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை
- இலங்கையில் நவனீதம்பிள்ளையை றோ உளவுப் பிரிவினர் பின் தொடர்ந்தனர்
- ஹாலிவுட்டில் உதவி இயக்குனரான பாலியல் தொழிலாளியின் மகன்
- செவ்வாய் கிரகத்துக்கு விரைவில் ஆய்வு விண்கலம்: இஸ்ரோ முடிவு
- தேசியத்தலைவரின் சிந்தனையில் உதித்ததே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு -எம். எம் .ரதன்
- ஐ.நாவின் அறிக்கைக்காக காத்திருப்போம்! பிரான்ஸ்
| நவியின் கருத்துக்கு அதிருப்தி ஐ.நா.செயலருக்கு அரசு கடிதம் Posted: 07 Sep 2013 10:27 PM PDT ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையாளர் நவ நீதம்பிள்ளை தனது பயணத்தின் முடிவில் முன்வைத்த கருத்துகளுக்குக் கடும் ஆட்சேபனையை வெளியிட்டு ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கு கடித மொன்றை அனுப்புவதற்கு இலங்கை அரசு தீர்மானித்துள்ளது. அடுத்தவாரமளவில் வெளிவிவகார அமைச்சினூடாக இந்தக் கடிதத்தை அரசு, ஐ.நா. செயலாளருக்கு அனுப்பவுள்ளது என்று தெரியவருகிறது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைத்த குற்றச்சாட்டுகளை இலங்கை அரசு ஏற்கனவே நிராகரித் திருந்தாலும், ஆட்சேபனையை உத்தியோகபூர்வமாக வெளியிடும் முகமாகவே ஐ.நாவுக்கு கடிதம் எழுதப்படவுள்ளது. ஐ.நா. […] |
| பிரபாகரன் சரணடைந்திருந்தால் மஹிந்தவின் குடும்பத்துடன் இருந்திருப்பார்’ Posted: 07 Sep 2013 10:05 PM PDT இராணுவத்திடம் பிரபாகரன் சரணடைந்திருந்தால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்துடன் இருந்திருப்பார்' என்று முன்னாள் இராணுவத்தளபதியும் புதிய ஜனநாயக் கட்சியின் செயலாளர் நாயகமுமான சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் சனிக்கிழமை (7) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு மேலும் தெரிவித்த அவர், 'யுத்தம் நடைபெற்ற காலத்தில் சிரேஷ்ட தலைவர்கள் எவரும் சரணைடையவில்லை. சரணடைந்தவர்கள் இப்போது ராஜபக்ஷ குடும்பத்துடன் இருக்கின்றார்கள். குறிப்பாக கே.பி மற்றும் தயாமாஸ்டர் போன்றவர்கள் இப்போது மஹிந்தவின் குடும்பத்துடன்தான் இருக்கின்றனர். […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| கேதார் பள்ளத்தாக்கில் மேலும் 68 உடல்கள் மீட்பு Posted: 07 Sep 2013 09:58 PM PDT உத்தரகாண்டில் உள்ள கேதார் பள்ளத்தாக்கில் மேலும் 68 உடல்கள் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டன. கடந்த செவ்வாய்க்கிழமையில் இருந்து இதுவரை 166 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உத்தரகாண்ட் மழை வெள்ளித்தில் இறந்தோரின் உடல்களை மீட்கும் பணி இரண்டு மாதத்துக்கும் மேலாக நடந்து வருகிறது. வெள்ளிக்கிழமை கருர்சாட்டி, கெüரிகுந்த், ராம்பாடா பகுதிகளில் நடந்த மீட்பு நடவடிக்கையின்போது 68 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பாகிஸ்தானுக்கு சுற்றூலா செல்ல வேண்டாம்: அமெரிக்கா பயண எச்சரிக்கை Posted: 07 Sep 2013 09:52 PM PDT
This posting includes an audio/video/photo media file: Download Now |
| 2014ம் ஆண்டில் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை Posted: 07 Sep 2013 09:20 PM PDT 2014ம் ஆண்டில் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட உள்ளது. இரு நாட்டுத் தலைவர்களினால் ஏற்கனவே சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடுவது குறித்து இணக்கம் காணப்பட்டுள்ளது. சீன- இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை எதிர்வரும் ஆண்டில் கைச்சாத்திடப்படும் என சீனாவிற்கான இலங்கை தூதுவர் ரஞ்சித் உயன்கொட தெரிவித்துள்ளார். இந்த உடன்படிக்கையின் பின்னர் வரிச் சலுகைகளுடன் சீனாவுடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் இலங்கை ஏற்றுமதியாளர்கள் பாரியளவில் நன்மை அடைவார்கள் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| இலங்கையில் நவனீதம்பிள்ளையை றோ உளவுப் பிரிவினர் பின் தொடர்ந்தனர் Posted: 07 Sep 2013 08:12 PM PDT
நவனீதம்பிள்ளை இலங்கை விஜயம் செய்திருந்த காலப் பகுதியில் றோ உளவுப் பிரிவினர் அவரது நடவடிக்கைகளை கண்காணித்துள்ளனர். பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவினர் இதனை உறுதி செய்துள்ளனர். நவனீதம்பிள்ளை இலங்கையில் ஆற்றிய உரைகள் சந்தித்த நபர்கள் பற்றிய தகவல்கள் இவ்வாறு சேகரிக்கப்பட்டுள்ளன. இலங்கை விஜயம் செய்த தருணம் முதல் நாடு திரும்பும் வரையில் சகல நடவடிக்கைகளையும் றோ உளவுப் பிரிவினர் கண்காணித்துள்ளனர். குறிப்பாக வடக்கில் கூடுதலாக றோ உளவுப் பிரிவினர் சஞ்சரித்து தகவல்களை திரட்டியுள்ளனர். என்ன காரணத்திற்காக இவ்வாறு நவனீதம்பிள்ளையின் விஜயத்தை கண்காணித்தார்கள் என்பது பற்றி தகவல்கள் வெளியாகவில்லை. வடக்கு மக்கள் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நவனீதம்பிள்ளை வெளிப்படுத்தியிருக்கக் கூடும் என்ற காரணத்தினால் இவ்வாறு றோ உளவுப் பிரிவினர் கண்காணிப்புக்களை மேற்கெண்டிருக்கலாம் என சிங்களப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஹாலிவுட்டில் உதவி இயக்குனரான பாலியல் தொழிலாளியின் மகன் Posted: 07 Sep 2013 07:59 PM PDT கொல்கத்தாவின் சிவப்பு விளக்குப் பகுதி சோனாகச்சி ஆகும். கடந்த 2004ஆம் ஆண்டில் இந்தப் பகுதியில் பிறந்துள்ள சிறுவர்களைப் பற்றி ‘பார்ன் இன்டு பிராத்தல்ஸ்’ என்ற ஒரு டாக்குமெண்டரி படம் எடுக்கப்பட்டது. சனா பிரிஸ்கி, ரோஸ் காப்மன் ஆகியோர் இயக்கிய இந்தப் படத்தில் பாலியல் தொழிலாளிகளின் எட்டு சிறுவர்கள் நடித்திருந்தனர். இந்தப் படம் ஆஸ்கர் விருதினையும் தட்டிச் சென்றது. இதில், அவிஜித் ஹல்டர் என்ற 14 வயது சிறுவன் தங்கள் பகுதியைப் பற்றி சில புகைப்படங்களை எடுத்துத் தந்திருந்தான். […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| செவ்வாய் கிரகத்துக்கு விரைவில் ஆய்வு விண்கலம்: இஸ்ரோ முடிவு Posted: 07 Sep 2013 07:50 PM PDT செவ்வாய் கிரகத்துக்கு வருகிற அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஆய்வு விண்கலம் அனுப்ப இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் கனவுத் திட்டமாகக் கருதப்படும் இந்தத் திட்டத்தை இஸ்ரோ வருகிற 11-ஆம் தேதி அறிவிக்க உள்ளது. பி.எஸ்.எல்.வி.- சி25 ராக்கெட்டின் உதவியுடன் நிகழாண்டு அக்டோபர் 21 முதல் நவம்பர் 19-ஆம் தேதிக்குள் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. விண்வெளி போன்ற சூழலில் விண்கலம் சோதிக்கப்பட்டுள்ளது. வெப்ப, வெற்றிடச் சோதனைகளையும் விண்கலம் கடந்துள்ளது. அதேபோல, […] |
| தேசியத்தலைவரின் சிந்தனையில் உதித்ததே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு -எம். எம் .ரதன் Posted: 07 Sep 2013 07:35 PM PDT தமிழ் பேசும் மக்களின் உண்மைக்குரலாய் இன்று திகழ்வது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பே அதனை உருவாக்கிய பெருமை எங்கள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையே சார்ந்துகொள்ளும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணித்தலைவரும் வட மாகாணசபை வேட்பாளருமாகிய எம். எம். ரதன் தெரிவித்தார் நெடுங் கேனி,மதியாமடு கிராமத்தில் இன்று நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரைநிகழ்த்தும் போதே அவர் இதனைத்தெரிவித்தார் இக் கூட்டத்திற்கு மதியாமடு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ம .சயந்தசீலன் தலைமைதாங்கினார் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் வட கிழக்கு இணைந்த […] |
| ஐ.நாவின் அறிக்கைக்காக காத்திருப்போம்! பிரான்ஸ் Posted: 07 Sep 2013 07:29 PM PDT ஐ.நாவின் அறிக்கை வராமல் சிரியா மீதான தாக்குதலில் பிரான்ஸ் பங்குபெறாது என ஜனாதிபதி பிராங்கோய்ஸ் ஹோலண்டே அறிவித்துள்ளார். சிரியாவில் இரசாயன தாக்குதல் நடத்தி நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதனையடுத்து அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் தாக்குதல் நடத்த தீர்மானித்துள்ளன. இந்நிலையில் ஐ.நாவின் அறிக்கை வராமல் தாக்குதல் நடத்தக்கூடாது என பான் கி மூனும், ரஷ்யாவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையே ஐ.நாவின் அறிக்கை மற்றும் அமெரிக்க செனட்டரின் ஒப்புதல் பெறாமல், சிரியா […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |



