மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- ஐதராபாத் கூட்டத்துக்கு சென்று திரும்பிய அரசு ஊழியர்களின் பஸ்கள் கல்வீசி உடைப்பு
- பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி: அசாராம்பாபு மகன் மீதும் பெண் செக்ஸ் புகார்
- உத்தரபிரதேசத்தில் கலவரத்தில் 10 பேர் பலி: ஊரடங்கு உத்தரவு அமல்
- கேரளாவில் மீண்டும் கனமழை
- ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும் திட்டம் இல்லை: ஷிண்டே அறிவிப்பு
- குண்டு சப்தங்களுக்கு இடையே நடந்து முடிந்த ஜுபின் மேத்தாவின் இசை நிகழ்ச்சி
- மும்பை–நாசிக் நெடுஞ்சாலையில் விபத்து: சொகுசு பஸ்–கார் நேருக்கு நேர் மோதி 12 பேர் பலி
- உத்தரப்பிரதேசத்தில் இரு பிரிவினரிடையே மோதல்: பத்திரிக்கையாளர் உள்பட 6 பேர் பலி
- பொருளாதார நிலையில் தேக்கம்-கடினமான முடிவுகள் எடுக்கப்படும்: ப.சிதம்பரம் அறிவிப்பு
- ராகுல் தலைமையின் கீழ் பணியாற்ற மிக்க சந்தோஷம்: பிரதமர் மன்மோகன் சிங்
- சிபிஐ சம்மன் அனுப்பினால் ஆஜராக பிரதமர் தயாராக உள்ளார்: கமல் நாத் தகவல்
- மயில் இறகு உபயோகத்திற்கு தடை விதித்துள்ளதை எதிர்க்கும் சமணத் துறவிகள்
- ஹாலிவுட்டில் உதவி இயக்குனரான கொல்கத்தா பாலியல் தொழிலாளியின் 22 வயது மகன்
- காங்கிரஸ் மக்களை வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்துகிறது: நரேந்திரமோடி குற்றச்சாட்டு
- தீவிரவாதி அப்துல் கரீம் துண்டாவுக்கு 4 நாள் போலீஸ் காவல் நீட்டிப்பு
- விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராஜாமுந்திரியில் 4 ஆயிரம் கிலோ பிரம்மாண்ட லட்டு: பார்வையாளர்கள் பரவசம்
- கொள்ளையன் தள்ளியதால் ரெயிலில் இருந்து விழுந்த பெண்ணுக்கு மூளை சாவு
- கொல்கத்தாவில் அரசு ஆஸ்பத்திரியில் 3 நாளில் 25 குழந்தைகள் பலி
- சிரஞ்சீவி மகன் படம் ஓடும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு: ஐகோர்ட்டு உத்தரவு
- ஒடிசா: திருமணத்துக்கு மறுத்ததால் தூங்கிக் கொண்டிருந்த பெண் மீது ஆசிட் வீச்சு
| ஐதராபாத் கூட்டத்துக்கு சென்று திரும்பிய அரசு ஊழியர்களின் பஸ்கள் கல்வீசி உடைப்பு Posted: 07 Sep 2013 11:22 PM PDT தெலுங்கானா பகுதி தனி மாநிலமாக பிரிக்கப்பட்டதற்கு ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அங்குள்ள அரசு ஊழியர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து ஐக்கிய ஆந்திராவே நீடிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள் |
| பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி: அசாராம்பாபு மகன் மீதும் பெண் செக்ஸ் புகார் Posted: 07 Sep 2013 10:49 PM PDT ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் ஆசிரமத்தில் 15 வயது பெண்ணை கற்பழித்ததாக சாமியார் அசாராம்பாபு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் சாமியாரின் மகன் நாராயண் சாய் மீதும் ஒரு பெண் செக்ஸ் புகார் கூறியுள்ளார் |
| உத்தரபிரதேசத்தில் கலவரத்தில் 10 பேர் பலி: ஊரடங்கு உத்தரவு அமல் Posted: 07 Sep 2013 10:31 PM PDT உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் கவால் என்ற கிராமத்தில் கடந்த மாதம் 27–ந் தேதி இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பான வழக்குகளை வாபஸ் பெறக்கோரி ஒரு சமூகத்தினர் கூட்டம் நடத்தினர். |
| Posted: 07 Sep 2013 10:23 PM PDT கேரளாவில் இந்த ஆண்டு கடந்த ஜூன் மாதம் 1–ந் தேதி தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. இந்த மழை மாநிலம் முழுவதும் கனமழையாக பெய்ததால் நீர்நிலைகள் நிரம்பியது. பல இடங்களில் நிலச் சரிவும் ஏற்பட்டது. மேலும் மரங்கள் வேரோடு சாய்ந்தன. தாழ்வான பகுதிகளில் உள்ள ஏராளமான வீடுகளில் |
| ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும் திட்டம் இல்லை: ஷிண்டே அறிவிப்பு Posted: 07 Sep 2013 09:26 PM PDT ஆந்திர மாநிலத்தில் தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் பேராட்டம் வலுத்து வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் உள்துறை மந்திரி சுசில்குமார் ஷிண்டேவை நிருபர்கள் சந்தித்து ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படுமா? என்று கேட்டனர் |
| குண்டு சப்தங்களுக்கு இடையே நடந்து முடிந்த ஜுபின் மேத்தாவின் இசை நிகழ்ச்சி Posted: 07 Sep 2013 05:38 PM PDT இந்திய பார்சி இனத்தைச் சேர்ந்த உலகப் புகழ் பெற்ற இசை நிகழ்ச்சியாளர் ஜுபின் மேத்தாவின் இசை நிகழ்ச்சி நேற்று மாலை காஷ்மீரில் நடை பெற்றது. |
| மும்பை–நாசிக் நெடுஞ்சாலையில் விபத்து: சொகுசு பஸ்–கார் நேருக்கு நேர் மோதி 12 பேர் பலி Posted: 07 Sep 2013 10:25 AM PDT மராட்டிய மாநிலம் நாசிக்கில் இருந்து இன்று மாலை தனியார் சொகுசு பஸ் ஒன்று 32 பயணிகளை ஏற்றிக்கொண்டு மும்பை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் தானே சகாப்பூர் அருகில் லகில்பாட்டா பகுதியில் நாசிக்–மும்பை நெடுஞ்சாலையில் வேகமாக வந்து கொண்டிருந்தது. |
| உத்தரப்பிரதேசத்தில் இரு பிரிவினரிடையே மோதல்: பத்திரிக்கையாளர் உள்பட 6 பேர் பலி Posted: 07 Sep 2013 09:34 AM PDT உத்தரப்பிரதேசம் முசாபர் நகர் கவல் பகுதியில் கடந்த மாதம் 27-ம் தேதி இரு மதத்தை சேர்ந்தவர்கள் ஓட்டிச்சென்ற மோட்டர் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று லேசாக மோதிக்கொண்டன. இதையடுத்து அவர்களிடையே நடந்த மோதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். |
| பொருளாதார நிலையில் தேக்கம்-கடினமான முடிவுகள் எடுக்கப்படும்: ப.சிதம்பரம் அறிவிப்பு Posted: 07 Sep 2013 08:39 AM PDT மேல்–சபையில் வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு விவாதத்தினை முடித்து வைத்து மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– பொருளாதார ரீதியில் ஒரு கடினமான காலகட்டத்தை நாம் கடந்து கொண்டிருக்கிறோம். பண வீக்கமும், அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றமும் இதற்கான முக்கிய காரணங்களில் அடங்கும். உணவு பொருட்களின் |
| ராகுல் தலைமையின் கீழ் பணியாற்ற மிக்க சந்தோஷம்: பிரதமர் மன்மோகன் சிங் Posted: 07 Sep 2013 07:03 AM PDT பிரதமர் மன்மோகன் சிங் (80), ரஷ்யாவில் நடைபெற்ற இரண்டு நாள் ஜி.20 உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார். பின்னர் அங்கிருந்து இந்தியாவிற்கு புறப்பட்ட அவர் விமானத்தில் பேட்டியளித்தார். அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைமையை ஏற்க ராகுல் காந்தி எதிர்பார்க்கப்படுகிற |
| சிபிஐ சம்மன் அனுப்பினால் ஆஜராக பிரதமர் தயாராக உள்ளார்: கமல் நாத் தகவல் Posted: 07 Sep 2013 05:08 AM PDT நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரி, பிரதமரிடம் இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என கோரியதாக தகவல் வெளியாகியது. இதையடுத்து எதிர்கட்சிகள், பிரதமர் மன்மோகன் சிங் சிபிஐ முன் ஆஜராக வேண்டும் என வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களுக்க்கு பேட்டி அளித்த நாடாளுமன்ற விவகாரத்துதுறை மந்திரி |
| மயில் இறகு உபயோகத்திற்கு தடை விதித்துள்ளதை எதிர்க்கும் சமணத் துறவிகள் Posted: 07 Sep 2013 05:02 AM PDT இந்தியாவின் தேசியப் பறவையான மயில்கள் அவற்றின் இறகுகளுக்காகக் கொல்லப்படுவது அதிகரித்து வருகின்றது. இதனால் அவற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதைத் தடுக்கும் பொருட்டு, இந்திய அரசு கடந்த 1972 ஆம் ஆண்டு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தில் ஒரு திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளது. இதன்படி, மயிலிறகுகளின் உபயோகம் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக |
| ஹாலிவுட்டில் உதவி இயக்குனரான கொல்கத்தா பாலியல் தொழிலாளியின் 22 வயது மகன் Posted: 07 Sep 2013 04:58 AM PDT கொல்கத்தாவின் சிவப்பு விளக்குப் பகுதி சோனாகச்சி ஆகும். கடந்த 2004ஆம் ஆண்டில் இந்தப் பகுதியில் பிறந்துள்ள சிறுவர்களைப் பற்றி 'பார்ன் இன்டு பிராத்தல்ஸ்' என்ற ஒரு டாக்குமெண்டரி படம் எடுக்கப்பட்டது. சனா பிரிஸ்கி, ரோஸ் காப்மன் ஆகியோர் இயக்கிய இந்தப் படத்தில் பாலியல் தொழிலாளிகளின் எட்டு சிறுவர்கள் நடித்திருந்தனர். இந்தப் படம் ஆஸ்கர் விருதினையும் தட்டிச் சென்றது. இதில், அவிஜித் ஹல்டர் என்ற 14 வயது சிறுவன் தங்கள் பகுதியைப் பற்றி சில புகைப்படங்களை எடுத்துத் தந்திருந்தான். சில புகைப்படங்கள் அவனுடைய வீட்டிலேயே கூட எடுக்கப்பட்டிருந்து. இந்த டாக்குமெண்டரி திரைப்படத்தை தயாரித்தவர்கள் இந்த சிறுவர்களின் கல்விச் செலவிற்காக 'கிட்ஸ் வித் கேமராஸ்' என்ற தொண்டு அமைப்பினை நிறுவினர். |
| காங்கிரஸ் மக்களை வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்துகிறது: நரேந்திரமோடி குற்றச்சாட்டு Posted: 07 Sep 2013 04:43 AM PDT குஜராத் முதல்வரும், பா.ஜனதா கட்சியின் தேர்தல் பிரச்சாரக்குழு தலைவருமான நரேந்திர மோடி ஒவ்வொரு மாநிலமாக சென்று பா.ஜ.க.விற்காக பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில், இன்று சத்தீஸ்கர் மாவட்டம் அம்பிகாபூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது, காங்கிரஸ் மக்களை வாக்கு வங்கியாக |
| தீவிரவாதி அப்துல் கரீம் துண்டாவுக்கு 4 நாள் போலீஸ் காவல் நீட்டிப்பு Posted: 07 Sep 2013 04:31 AM PDT டெல்லி உள்பட நாடு முழுவதும் நடைபெற்ற 43 குண்டு வெடிப்புகளில் மூளையாக செயல்பட்ட லஸ்கர்–இ–தொய்பா இயக்கத்தின் முக்கிய தீவிரவாதி சையத் அப்துல் கரீம் என்ற துண்டா (வயது 70). இவர் இந்தியா தேடி வருகிற 20 அதிபயங்கர தீவிரவாதிகளின் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். இவரை இந்திய–நேபாள எல்லையில் டெல்லி போலீசாரால் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய அவரை |
| Posted: 07 Sep 2013 04:28 AM PDT ஆந்திரப்பிரதேசத்தில் விநாயகர் சதுர்த்தி திருவிழா வரும் 9-ம் தேதி முதல் 10 நாட்களுக்கு கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி ராஜமுந்திரி தபேஸ்வரம் கிராமத்தை சேர்ந்த ஒரு ஸ்வீட் கடைக்காரர் 4 ஆயிரம் கிலோ எடையுள்ள பிரம்மாண்ட லட்டு ஒன்றை தயாரித்துள்ளார். |
| கொள்ளையன் தள்ளியதால் ரெயிலில் இருந்து விழுந்த பெண்ணுக்கு மூளை சாவு Posted: 07 Sep 2013 04:03 AM PDT மும்பை புறநகர் ரெயிலில் ஆர்த்தி கோலப்கர் என்ற 43 வயது பெண் பயணம் செய்து வந்தார். இவர் பன்வானே என்ற இடத்தில் உள்ள தொழிற்சாலையில் பணி புரிகிறார். வேலை முடிந்து இரவு 8.30 மணியளவில் அவர் ரெயிலில் வந்த போது கொள்ளையன் ஒருவன் அந்தப் பெட்டியில் ஏரி அவரிடம் நகையையும் கைப்பையையும் |
| கொல்கத்தாவில் அரசு ஆஸ்பத்திரியில் 3 நாளில் 25 குழந்தைகள் பலி Posted: 07 Sep 2013 03:43 AM PDT கொல்கத்தாவில் அரசு குழந்தைகள் ஆஸ்பத்திரி உள்ளது. கடந்த சில நாட்களாக இங்கு அனுமதிக்கப்படும் குழந்தைகள் சிகிச்சை பலனளிக்காமல் இறக்கிறது. கடந்த 3 நாளில் மட்டும் 25 குழந்தைகள் பலியாகி இருப்பதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு ஆஸ்பத்திரி நிர்வாகம் காரணம் அல்ல என்றும் கடுமையான காய்ச்சல் காரணமாக வெளி மாவட்டங்களில் |
| சிரஞ்சீவி மகன் படம் ஓடும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு: ஐகோர்ட்டு உத்தரவு Posted: 07 Sep 2013 03:28 AM PDT சிரஞ்சீவி மகன் ராம்சரண் தேஜாவின் படங்கள் ஓடும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்க கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. ஐதராபாத்தை யூனியன் பிரதேசமாக மாற்ற வேண்டும் என சிரஞ்சீவி கருத்து வெளியிட்டதற்கு தெலுங்கானாவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சிரஞ்சீவி மகன் ராம்சரண் தேஜா, தம்பி பவன் கல்யாண் நடித்த படங்களை ஓட விடமாட்டோம் என்று அறிவித்து உள்ளனர். |
| ஒடிசா: திருமணத்துக்கு மறுத்ததால் தூங்கிக் கொண்டிருந்த பெண் மீது ஆசிட் வீச்சு Posted: 07 Sep 2013 03:22 AM PDT ஒடிசா மாநிலம் படானாகானா கிராமத்தைச் சேர்ந்தவர் அலேகா மண்டல் (21). இவருக்கும் அதே ஊரில் வசிக்கும் இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அந்தப் பெண் திருமணத்துக்கு மறுத்து விட்டாள். இதனால் ஆத்திரம் அடைந்த அலேகா மண்டல் நேற்று தூங்கிக் கொண்டிருந்த அந்த பெண் மீது ஜன்னல் வழியாக ஆசிட் ஊற்றி விட்டு |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |