Tamil Star |
- காணி அதிகாரம் தொடர்பில் கூட்டமைப்பின் கோரிக்கை நியாயமற்றது -கொமின் தயாசிறி
- வடக்கில் வேட்பாளர்களில் பலரை சில வெளிநாடுகளே தெரிவு செய்தன – பசில் ராஜபக்ச
- காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் பெற்றுக்கொள்ளப்படும் – முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன்
- அமெரிக்கா – ஈரான் ஆறு வருடங்களுக்குப்பின் நேரிடை சந்திப்பு
- நரேந்திரமோடி பேரணிக்கு உத்தரபிரதேசத்தில் அனுமதி மறுப்பு
- நியூயோர்க்கில் பொதுநலவாய அமைச்சர் மட்ட நடவடிக்கை குழு கூட்டத்தில் இலங்கை பங்கேற்கவில்லை
- அணுசக்தி துறையில் முதல் வர்த்தக ஒப்பந்தம் : இந்தியா-அமெரிக்கா இடையே கையெழுத்தானது
- அவுஸ்திரேலியாவிற்கு அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து 20 பேர் பலி
- இரா.சம்பந்தன் முன்னிலையிலேயே முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ள, சி.வி.விக்னேஸ்வரன் பதவியேற்பார்
- பாகிஸ்தான் பூகம்பத்தின் பின் உணவு, குடிநீர் இன்றி மக்கள் தவிப்பு
| காணி அதிகாரம் தொடர்பில் கூட்டமைப்பின் கோரிக்கை நியாயமற்றது -கொமின் தயாசிறி Posted: 27 Sep 2013 10:23 PM PDT
இந்திய இலங்கை உடன்படிக்கையில் சிக்கல்கள் காண்ப்படுகின்றது. நாட்டின் அரசியல் அமைப்பை கவனத்திற் கொள்ளாது உடன்படிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது, அண்மையில் காணி அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திற்கே உரியது என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பு இதனை உறுதி செய்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் அரசியல் அமைப்பு குறித்து போதிய விளக்கமற்ற இந்தியர்களினால் 13ம் திருத்தச் சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் காணி அதிகாரக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொலிஸ் அதிகார கோரிக்கைகளுக்கும் சட்ட ரீதியான பதிலளிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| வடக்கில் வேட்பாளர்களில் பலரை சில வெளிநாடுகளே தெரிவு செய்தன – பசில் ராஜபக்ச Posted: 27 Sep 2013 10:01 PM PDT
வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில் பலரை சில வெளிநாடுகளே தெரிவு செய்திருந்தன என இலங்கை பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பாளர்களைத் தெரிவு செய்து கொண்டிருந்த போது யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருந்த சில நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்களும், தங்களுக்கு விருப்பமான சிலரின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களையும் வேட்பாளர்களாகக் களமிறக்கும்படி கேட்டுக் கொண்டனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனடிப்படையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில வேட்பாளர்கள் வடபுலத்தில் போட்டியிட நிறுத்தப்பட்டனர் என்றும் அவர் கூறியுள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் பெற்றுக்கொள்ளப்படும் – முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் Posted: 27 Sep 2013 09:55 PM PDT
காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் பெற்றுக்கொள்ளப்படும் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரவித்துள்ளார்.சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர் காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை இலங்கை மத்திய அரசாங்கம் வழங்கத் தவறினால், சர்வதேச சமூகத்தின் ஆதரவினை பெற்றுக்கொள்ள நேரிடும். சர்வதேச சமூகத்தின் மத்தியஸ்தத்துடன் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். மாகாணசபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை பெற்றுக்கொள்வது குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். அரசாங்கம் தொடர்ந்தும் உதாசீனப் போக்கைப் பின்பற்றினால் மக்களுக்காக கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும். 13ம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் ஏற்கனவே காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன என சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| அமெரிக்கா – ஈரான் ஆறு வருடங்களுக்குப்பின் நேரிடை சந்திப்பு Posted: 27 Sep 2013 09:46 PM PDT
This posting includes an audio/video/photo media file: Download Now |
| நரேந்திரமோடி பேரணிக்கு உத்தரபிரதேசத்தில் அனுமதி மறுப்பு Posted: 27 Sep 2013 09:21 PM PDT
This posting includes an audio/video/photo media file: Download Now |
| நியூயோர்க்கில் பொதுநலவாய அமைச்சர் மட்ட நடவடிக்கை குழு கூட்டத்தில் இலங்கை பங்கேற்கவில்லை Posted: 27 Sep 2013 09:00 PM PDT
பங்களாதேஸின் வெளியுறவு அமைச்சர் திபு மொனி இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் இலங்கையின் மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து ஆராயப்பட வேண்டும் என்று ஏற்கனவே சர்வதேச மன்னிப்பு சபை மற்றும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற அமைப்புக்கள் கோரிக்கை விடுத்திருந்தன. எனினும் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் பிஜி மற்றும் மாலைதீவைப் பற்றியே பிரதானமாக ஆராயப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் கூட்டத்தில் கனடா, அவுஸ்திரேலியா உட்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். This posting includes an audio/video/photo media file: Download Now |
| அணுசக்தி துறையில் முதல் வர்த்தக ஒப்பந்தம் : இந்தியா-அமெரிக்கா இடையே கையெழுத்தானது Posted: 27 Sep 2013 08:51 PM PDT
This posting includes an audio/video/photo media file: Download Now |
| அவுஸ்திரேலியாவிற்கு அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து 20 பேர் பலி Posted: 27 Sep 2013 08:47 PM PDT
இதில் குறைந்தது 20 பேர் வரை பலியாகியுள்ளனர். 25 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் பலரைக் காணவில்லை. இவர்கள் எந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல்கள் உடனடியாகக் கிடைக்கவில்லை. அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் டொனி அப்பொட் அவர்கள், அகதிகள் அவுஸ்திரேலியாவுக்கு வருவது குறித்துப் பேசுவதற்காக ஜாவாவுக்கு செல்வதற்கு சில தினங்களுக்கு முன்னதாக இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அண்மைய வருடங்களில் நூற்றுக்கணக்கானவர்கள், அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோருவதற்காக இந்தோனேசியாவின் ஊடாக மரப் படகுகளில் பயணம் செய்துள்ளனர். இவர்களில் இலங்கையர்களும் அடங்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| இரா.சம்பந்தன் முன்னிலையிலேயே முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ள, சி.வி.விக்னேஸ்வரன் பதவியேற்பார் Posted: 27 Sep 2013 08:31 PM PDT
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முன்னிலையிலேயே அவர் பதவியேற்றுக் கொள்வார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சிறிலங்காவில் இதுவரை பெரும்பாலான மாகாண முதல்வர்கள் சிறிலங்கா அதிபர் முன்னிலையிலேயே பதவியேற்று வந்துள்ளனர். எனினும், மாகாண முதலமைச்சர்கள், சிறிலங்கா அதிபரின் முன்னிலையிலேயே பதவியேற்க வேண்டும் என்ற சட்டரீதியான கட்டாயம் இல்லாத நிலையில், மகிந்த ராஜபக்ச முன்னிலையில், பதவியேற்பதை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பவில்லை என்று தெரியவருகிறது. ஏற்கனவே, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களும், கிழக்கு மாகாண ஆளுனர் முன்பாக பதவியேற்கவில்லை. இரா.சம்பந்தன் முன்னிலையிலேயே அவர்கள் பதவியேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பாகிஸ்தான் பூகம்பத்தின் பின் உணவு, குடிநீர் இன்றி மக்கள் தவிப்பு Posted: 27 Sep 2013 08:26 PM PDT
என்றாலும் இந்த பூகம்பம் தாக்கிய பகுதியில் சுமார் 1 லட்சம் மக்கள் உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் இன்றி வெட்டவெளியிலேயே தங்கியிருக்கிறார்கள். இவர்களை மீட்டு அழைத்து வர போதிய ஹெலிகாப்டர்கள் இல்லாததே காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் கூடுதலாக நவீன சி-130 ரக ஹெலிகாப்டர்களை அனுப்பி வைக்க பிரதமர் நவாஸ் ஷெரீப் உத்தரவிட்டார். பூகம்பம் பாதித்த பகுதிக்கு 2,600 கூடாரங்கள் மற்றும் உணவு பொட்டலங்கள், குடிநீர் பாக்கெட்டுகளை அனுப்பி மீட்பு நடவடிக்கை இரவு, பகலாக நடக்கிறது என்று பலுசிஸ்தான் அதிகாரிகள் கூறினர். This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
















