மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- ஆந்திராவில் மேனகாவை முற்றுகையிட்ட போராட்டக் குழுவினர்: தெலுங்கானாவுக்கு எதிராக கோஷம்
- ஒருங்கிணைந்த ஆந்திராவுக்காக முதல்–மந்திரி பதவியை ராஜினாமா செய்யத்தயார்: கிரண்குமார்ரெட்டி
- எம்.பி.,எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்கும் அவசரச்சட்டம் வாபஸ் ஆகிறது
- புரட்டாசி பிரமோற்சவம்: திருப்பதி கோவிலில் வி.ஐ.பி. தரிசனம் ரத்து
- ராகுல் பேச்சால் மன்மோகன் சிங் பதவி விலக முடிவு?: சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை
- போக்குவரத்தை சரி செய்த போலீஸ்காரர் லாரி மோதி பலி
- பெட்ரோல் விலை 2 ரூபாய் குறைகிறது: திங்கட்கிழமை அறிவிப்பு வெளியாகிறது
- உத்தரபிரதேசத்தில் நரேந்திரமோடி பேரணிக்கு அனுமதி மறுப்பு
- பாகிஸ்தானியர்களுடன் நடைபெறும் திருமணங்கள் தோல்வியடைந்ததில் பிரச்சினைக்குள்ளாகும் இந்தியப் பெண்கள்
- தென்னிந்தியத் திருச்சபையால் நியமனம் செய்யப்பட்ட முதல் பெண் பிஷப்
- நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்
- ரெயில்வே சரக்கு கட்டணம் 15 சதவீதம் உயர்வு: 1-ந்தேதி முதல் அமல்
- ஜெயில் ஊழியர்களின் நலனுக்காக சஞ்சய் தத் நடத்த இருந்த கலாச்சார நாடக விழா தள்ளிவைப்பு
- அவசர சட்டத்துக்கு ராகுல் எதிர்ப்பு எதிரொலி: பிரதமருடன் சோனியா டெலிபோனில் பேசினார்
- மாலத்தீவில் ஜனநாயகம் பாதுகாக்கப் பட வேண்டும்: இந்தியா வேண்டுகோள்
- சர்ச்சைக்குள்ளான அவசர சட்டம்: பிரதமர் மன்மோகன்சிங் விளக்கம்
- ஆசாராம் பாபு வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்கு மிரட்டல்
- மும்பையில் 5 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பலி
- 2ஜி ஊழல் வழக்கில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை ஏற்பு
- பி.சி.சி.ஐ. தலைவர் பதவிக்கு சீனிவாசன் போட்டியிடலாம்; ஆனால் பதவியேற்க முடியாது - சுப்ரீம் கோர்ட்
| ஆந்திராவில் மேனகாவை முற்றுகையிட்ட போராட்டக் குழுவினர்: தெலுங்கானாவுக்கு எதிராக கோஷம் Posted: 27 Sep 2013 11:17 PM PDT ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க பாரதீய ஜனதா பகிரங்க ஆதரவை தெரிவித்தது. இந்த நிலையில் பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த மேனகா காந்தி நேற்று சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி வந்தார். நக்கலா தினாவில் உள்ள தனது குருவும், சத்சங் பவுண்டேசன் நிறுவன தலைவர் மும்தாஜ் அலி இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மேனகா வந்ததை அறிந்த சீமாந்திரா போராட்டக் குழுவினர் அந்த நிறுவனம் முன் திரண்டனர். ஐக்கிய ஆந்திராவுக்கு ஆதரவாக சுமார் 30 நிமிடம் |
| ஒருங்கிணைந்த ஆந்திராவுக்காக முதல்–மந்திரி பதவியை ராஜினாமா செய்யத்தயார்: கிரண்குமார்ரெட்டி Posted: 27 Sep 2013 11:06 PM PDT ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திரா பகுதி மக்கள் 1½ மாதத்துக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். அரசு ஊழியர்கள், போக்கு வரத்து கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக அரசு அலுவலகங்கள் செயல் படவில்லை. பஸ்களும் ஓடவில்லை. இந்த நிலையில் ஆந்திர முதல்–மந்திரி கிரண்குமார் ரெட்டி |
| எம்.பி.,எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்கும் அவசரச்சட்டம் வாபஸ் ஆகிறது Posted: 27 Sep 2013 10:47 PM PDT குற்ற வழக்குகளில் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பதவி உடனே பறிக்கப்படும் என்று கடந்த ஜூலை மாதம் 10–ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு ஒன்றை வெளியிட்டது. இதற்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 8 (4) பிரிவில் திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை |
| புரட்டாசி பிரமோற்சவம்: திருப்பதி கோவிலில் வி.ஐ.பி. தரிசனம் ரத்து Posted: 27 Sep 2013 10:46 PM PDT திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் 5–ந்தேதி புரட்டாசி மாத பிரமோற்சவம் தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் தயாராகி வருகிறது. விழா தொடங்கும் முதல்நாள் ஏழுமலையானுக்கு ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரம் காணிக்கையாக வழங்கப்படுகிறது. முதல்–மந்திரி கிரண்குமார்ரெட்டி பட்டு வஸ்திரத்தை தலையில் சுமந்து கொண்டு வருவார். |
| ராகுல் பேச்சால் மன்மோகன் சிங் பதவி விலக முடிவு?: சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை Posted: 27 Sep 2013 10:34 PM PDT 43 வயது ராகுல் இப்படி அதிரடியாக பேசுவார் என்று 81 வயது மன்மோகன் சிங் கொஞ்சம் கூட எதிர் பார்க்க வில்லை. எதிர்க்கட்சிகள் எப்படி விமர்சனம் செய்தாலும், எவ்வளவு புழுதிவாரித் தூற்றினாலும் புயலுக்கே அசராத ஆலமரம் மாதிரி நிற்கும் பிரதமர் மன்மோகன் சிங், ராகுலின் மரியாதை குறைவான பேச்சால் மனம் நொந்து போய் விட்டார். அவசரச் சட்டம் கொண்டு வந்தது முட்டாள்தனம் என்று ராகுல் |
| போக்குவரத்தை சரி செய்த போலீஸ்காரர் லாரி மோதி பலி Posted: 27 Sep 2013 10:31 PM PDT கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் பட்டிக்காட்டை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் நிசாத் (வயது 26). இவர் ராமவர்மாபுரம் ஏ.ஆர். கேம்பில் போலீசாக பணியாற்றினார். பட்டிக்காட்டில் தார்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக நிசாத் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது |
| பெட்ரோல் விலை 2 ரூபாய் குறைகிறது: திங்கட்கிழமை அறிவிப்பு வெளியாகிறது Posted: 27 Sep 2013 10:23 PM PDT அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தற்போது சீரடைந்து வருகிறது. இதற்கிடையே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலையும் கட்டுப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலை காரணமாக இந்திய எண்ணை நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பு குறைந்து உபரி வருவாய் கிடைக்கத் தொடங்கியுள்ளது. இந்த லாபத்தை நுகர்வோருக்கு பகிர்ந்து கொடுக்க எண்ணை நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. |
| உத்தரபிரதேசத்தில் நரேந்திரமோடி பேரணிக்கு அனுமதி மறுப்பு Posted: 27 Sep 2013 08:53 PM PDT உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் அடுத்த மாதம் (அக்டோபர்) 20-ந்தேதி பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி மற்றும் தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோர் கலந்து கொள்ளும் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பேரணியை தொடர்ந்து கான்பூர் அருகே நிரலாநகர் பகுதியில் ரெயில்வேக்கு சொந்தமான இடத்தில் பொதுக்கூட்டம் நடத்தவும் முடிவு |
| பாகிஸ்தானியர்களுடன் நடைபெறும் திருமணங்கள் தோல்வியடைந்ததில் பிரச்சினைக்குள்ளாகும் இந்தியப் பெண்கள் Posted: 27 Sep 2013 08:47 PM PDT வெளிநாட்டுக் குடியுரிமை உள்ளவர்களுடன் அதிலும் குறிப்பாக பாகிஸ்தானியர்களைத் திருமணம் செய்துகொள்ளும் இந்தியப் பெண்கள் பலருக்கும் திருமண வாழ்க்கை சொர்க்கத்தில் முடிவு செய்யப்படுவதில்லை.பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தில் செயல்படும்(பிபிசி) அமைப்பின் திருமணத் தகவல் அறிக்கை ஒன்று இதனை உறுதிப்படுத்துவதாக அமைகின்றது. இந்த அறிக்கை இதுவரை 226 பெண்கள் தங்கள் திருமணத் தோல்விகளால் பிறந்த நாட்டிற்குத் திரும்பி வந்துள்ளதாகத் தெரிவிக்கின்றது. இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பதற்றம் காரணமாக பாதிக்கப்பட்ட |
| தென்னிந்தியத் திருச்சபையால் நியமனம் செய்யப்பட்ட முதல் பெண் பிஷப் Posted: 27 Sep 2013 05:37 PM PDT இந்தியாவில் இயங்கிவரும் ஆங்கிலிகன் தேவாலயங்களில் தென்னிந்தியத் திருச்சபை, வட இந்தியத் திருச்சபை, மெதடிஸ்ட் தேவாலயம், மார்தோமா சர்ச் உள்ளிட்டவை அடங்கும். இவற்றுள், தென்னிந்திய திருச்சபையால் தேவாலய வரலாற்றில் முதன்முதலாக கர்நூலில் இருந்து ஒரு பெண் பிஷப் நியமிக்கப் பட்டுள்ளார். |
| நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் Posted: 27 Sep 2013 04:44 PM PDT நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். நிலம் கையகப்படுத்தும் சட்டம், 119 ஆண்டு பழமையானது. அதில், நிலம் கையகப்படுத்தப்பட்டதால், இடம்பெயர்ந்தவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது பற்றி எதுவும் கூறப்படவில்லை. |
| ரெயில்வே சரக்கு கட்டணம் 15 சதவீதம் உயர்வு: 1-ந்தேதி முதல் அமல் Posted: 27 Sep 2013 04:14 PM PDT பண்டிகை காலங்களில் ரெயில்களில் அனுப்பப்படும் சரக்கு கட்டணத்தை 15 சதவீதம் அதிகரிக்க ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த அதிகரிப்பு வருகிற 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. |
| ஜெயில் ஊழியர்களின் நலனுக்காக சஞ்சய் தத் நடத்த இருந்த கலாச்சார நாடக விழா தள்ளிவைப்பு Posted: 27 Sep 2013 03:42 PM PDT புனே ஏரவாடா ஜெயில் ஊழிர்களின் நலனுக்காக நிதி திரட்ட நடிகர் சஞ்சய் தத் நடத்த இருந்த கலாச்சார நாடக விழா தள்ளி வைக்கப்பட்டது. 1992-ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில், |
| அவசர சட்டத்துக்கு ராகுல் எதிர்ப்பு எதிரொலி: பிரதமருடன் சோனியா டெலிபோனில் பேசினார் Posted: 27 Sep 2013 03:03 PM PDT அமெரிக்காவில் உள்ள பிரதமர் மன்மோகன்சிங்குடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று டெலிபோனில் பேசினார். அவர்கள் என்ன பேசினர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. |
| மாலத்தீவில் ஜனநாயகம் பாதுகாக்கப் பட வேண்டும்: இந்தியா வேண்டுகோள் Posted: 27 Sep 2013 08:26 AM PDT கடந்த 2008 ஆம் ஆண்டில் மாலத்தீவு டெமோகிராடிக் கட்சியின் சார்பில் தேர்தலில் வென்று முகமது நஷீத் அதிபர் பதவி ஏற்றார். பின்னர் ஏற்பட்ட உட்கட்சிப் பூசலில் அவர் 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி பதவியை ராஜினாமா செய்ததாக அறிவித்தார். தற்போது இந்த ஆண்டு செப்டம்பர் முதல் வாரத்தில் நடந்த அதிபர் தேர்தலுக்கான முதல் சுற்று வாக்குப் பதிவில் நஷீத் 45 சதவிகிதம் வாக்குகளைப் பெற்று முன்னணியில் இருப்பதாக அறிவிக்கப்பட்டது |
| சர்ச்சைக்குள்ளான அவசர சட்டம்: பிரதமர் மன்மோகன்சிங் விளக்கம் Posted: 27 Sep 2013 07:12 AM PDT தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்க வகை செய்யும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அவசர சட்டத்திற்கு எதிர்ப்பு வலுத்துள்ளது. இதன் உச்சகட்டமாக காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தியும், இதனை கடுமையாக |
| ஆசாராம் பாபு வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்கு மிரட்டல் Posted: 27 Sep 2013 07:03 AM PDT ஆன்மீக தலைவர் ஆசாராம் பாபு, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள தனது ஆசிரமத்தில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக |
| மும்பையில் 5 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பலி Posted: 27 Sep 2013 05:50 AM PDT மும்பை டாக்யார்டு சாலையில் உள்ள பாபுகெனு மார்க்கெட் அருகில் 5 மாடி கட்டிடம் உள்ளது. மும்பை மாநகராட்சிக்கு சொந்தமான இந்த குடியிருப்பு கட்டிடத்தில் மாநகராட்சி ஊழியர்கள் வசித்து வந்தனர். மிக பழமையான இந்த கட்டிடம் இன்று காலை திடீர் என்று இடிந்து விழுந்தது. அப்போது |
| 2ஜி ஊழல் வழக்கில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை ஏற்பு Posted: 27 Sep 2013 04:38 AM PDT 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இந்த ஊழல் விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டின் மேற்பார்வையில் சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு விசாரணை நடத்தி வருகிறது. |
| பி.சி.சி.ஐ. தலைவர் பதவிக்கு சீனிவாசன் போட்டியிடலாம்; ஆனால் பதவியேற்க முடியாது - சுப்ரீம் கோர்ட் Posted: 27 Sep 2013 03:43 AM PDT சென்னையில் நாளை மறுநாள் நடைபெற உள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பி.சி.சி.ஐ.) பொதுக்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த தேர்தலில் தற்போதைய தலைவராக உள்ள என்.சீனிவாசன் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள தடை விதிக்க வேண்டும் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |