Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


எல்லையில் சீனா ஆக்கிரமிப்பு விவகாரத்தில் மத்திய அரசு மழுப்பல் : அரசு விழிப்பாக இருக்கிறது என்கிறார் ராணுவ மந்திரி அந்தோணி

Posted:

"அண்டை நாடான சீனா, நம் எல்லைக்குள், 640 கி.மீ., அத்துமீறி நுழைந்துள்ளது' என, நேற்று வெளியான தகவல், லோக்சபாவில் கடும் அமளியை ஏற்படுத்தியது. "இது குறித்து, மத்திய அரசு தெளிவான பதிலளிக்க வேண்டும்' என, வலியுறுத்தி, எதிர்க்கட்சி, எம்.பி.,க்கள் நடத்திய அமளியால், சபை ஒத்தி வைக்கப்பட்டது.ஆனால், "அந்தச் செய்தியில் உண்மையில்லை' என, ராணுவ அமைச்சர், அந்தோணி மழுப்பலாக கூறி சமாளித்தார்.நம் நாட்டின் அண்டை நாடுகள், நம்மை பல விதங்களிலும் துன்புறுத்தும் சண்டை நாடுகளாகவே உள்ளன. அண்டை நாடான பாகிஸ்தான், பயங்கரவாத முகாம்களை அமைத்து, பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்து, நாள் ...

"ஆசிட்' விற்பனைக்கு மத்திய அரசு கட்டுப்பாடு : ரகசியமாக விற்றால் ரூ.50 ஆயிரம் அபராதம்

Posted:

புதுடில்லி : நாட்டில், பெண்களுக்கு எதிராக நடத்தப்படும், "ஆசிட்' வீச்சு தாக்குதலை தடுக்கும் வகையில், அனைத்து மாநிலங்களிலும், ஆசிட் விற்பனையை தடை செய்யுமாறு, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மீறுவோருக்கு, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டுள்ளது.பல மாத அவஸ்தை:பெண்களின் மீது, ஆசிட் வீசி தாக்குதல் நடத்தும் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. தமிழகத்தில், காதலை ஏற்க மறுத்த, பொறியியல் பட்டதாரி வினோதினி, ஆசிட் வீச்சுக்கு ஆளாகி, பல மாத அவஸ்தைக்குப் பின், உயிரிழந்தார். இது போல், நாட்டின் பல பகுதிகளிலும், பெண்கள், ஆசிட் ...

சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு எதிரான மசோதா நிறைவேற்றம்

Posted:

புதுடில்லி : அரசியல்வாதிகளுக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை, செல்லாததாக மாற்றும் அரசியல் சட்ட திருத்தம், பார்லிமென்டில் நேற்று நிறைவேறியது."சிறையில் இருப்பவர்கள், தேர்தலில் ஓட்டளிக்க முடியாது; தேர்தலில் போட்டியிடவும் முடியாது' என, ஜூலை, 10ம் தேதி, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதனால், அதிர்ச்சி அடைந்த மக்கள் பிரதிநிதிகள், சட்ட திருத்தம் மூலம், சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு மாற்று வழி காண முடிவு செய்தனர்.அந்த உத்தரவுக்கு அடிப்படையான, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்து, அந்த திருத்த மசோதாவை, அவசரமாக, ராஜ்யசபாவில் ...

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் அனுமதியின் பேரில் சிரியா மீது நடவடிக்கை: மன்மோகன்

Posted:

மாஸ்கோ:""சிரியா நாட்டின் மீது, எந்த நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அது ஐ.நா.,வரம்புக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்,'' என, பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.சிரியா நாட்டில், இரண்டு ஆண்டுகளாக, உள்நாட்டு சண்டை நடந்து வருகிறது. அதிபர் பஷர்-அல்-ஆசாத் பதவி விலக மறுத்ததால், இந்த சண்டை நீடிக்கிறது. இதுவரை, 1 லட்சம் பேர், இந்த சண்டையில் பலியாகியுள்ளனர்; 20 லட்சம் பேர் அகதிகளாகியுள்ளனர்.கடந்த, 21ம் தேதி, டமாஸ்கஸ் நகரத்துக்கு அருகே, ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதில், 1,300 பேர் பலியாயினர். இதற்குரிய தடயங்களை ஐ.நா., சிறப்பு ஆய்வாளர்கள் பரிசோதித்து வருகின்றனர்.சர்வதேச ...

எரிபொருள் பயன்பாட்டை குறைக்க கட்டுப்பாடு 16ம் தேதி முதல் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்?

Posted:

புதுடில்லி:""பெட்ரோல், டீசலை அதிகமாக பயன்படுத்துவதை தவிர்க்க, கட்டுப்பாடு விதிப்பதை தவிர வேறு வழியில்லை,'' என, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர், சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. இதை கட்டுப்படுத்த வேண்டிய நிலை, மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் இறக்குமதியில் முதலிடம் பெறுவது, கச்சா எண்ணெய் தான். இதற்கான, தொகையை, அமெரிக்க டாலர் மதிப்பில் செலுத்தும்போது, அரசின் அன்னிய செலாவணி கையிருப்பு, குறைந்து வருகிறது. இதனால், அரசின் நடப்பு கணக்கில் பெரும் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதை சமாளிக்க, பல்வேறு ...

கூடங்குளத்தில்15 நாட்களில் மின் உற்பத்தி:அமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு

Posted:

புதுடில்லி:""கூடங்குளம் அணு மின் நிலையத்தில், இன்னும், 10 - 15 நாட்களில் மின் உற்பத்தி செய்யப்படும்; இரண்டாவது அணு உலை, அடுத்த மாதம், மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் செயல்படும்,'' என, மத்திய பணியாளர் நலம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை இணையமைச்சர், வி.நாராயணசாமி கூறினார்.டில்லியில் நேற்று, அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட குழுக்களுக்கு, வெளிநாட்டு அமைப்புகள் சில, நிதியுதவி அளித்துள்ளன. அந்த அமைப்புகளின் நிதியுதவியை, மத்திய உள்துறை அமைச்சகம் தடுத்து ...

பிரபாகரனால் செய்ய முடியாமல் போனதை வேறு யாரும் நிறைவேற்ற முடியாது: ராஜபக்ஷே பேச்சு

Posted:

கொழும்பு:""விடுதலை புலி தலைவர், பிரபாகரனால் எதை செய்ய முடியாமல் போனதோ, அதை தற்போதுள்ள தமிழ் தலைவர்களால், ஒரு போதும் நிறைவேற்ற முடியாது,'' என, இலங்கை அதிபர் ராஜபக்ஷே தெரிவித்துள்ளார்.இலங்கையின், வடக்கு மாகாணத்திலும், மத்திய மற்றும் வட மேற்கு மாகாணத்தின் சில தொகுதிகளிலும், வரும், 21ம் தேதி, தேர்தல் நடைபெற உள்ளது.இதையடுத்து, வடக்கு மாகாணத்தில், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லை தீவு மாவட்டங்களிலும், வட மேற்கு மாகாணத்தில், குருநாகல், புத்தளம் மாவட்டங்களிலும், மத்திய மாகாணத்தில், நுவரெலியா, கண்டி, மாத்தளை மாவட்டங்களிலும், தேர்தல் நடைபெற ...

நாத்திகவாதம் பேசுபவர்களுக்கு கோவில்களில் நிகழ்ச்சி நடத்த தடை

Posted:

கடவுள் மறுப்பு கொள்கை உடையவர்களுக்கு, தமிழகத்தில் உள்ள, கோவில் நிலங்களை வாடகைக்கு கொடுப்பதற்கும், மண்டபங்களில் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்குவதற்கும், தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ், 38 ஆயிரத்துக்கும் அதிகமான கோவில்கள் உள்ளன. இவற்றில், ஆண்டு வருமானம், 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக உள்ள கோவில்கள் எண்ணிக்கை, 234.கோவில்களுக்கு, சொந்தமாக திருமண மண்டபங்கள், பொது நிகழ்ச்சிக்கான மண்டபங்கள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்படுகின்றன.இதில், நிகழ்ச்சிகள் நடத்த எந்த கட்டுப்பாடும் இல்லை.இழுக்கு:கடந்த ...

வாழ்நாளில் 10 மரங்கள் வளர்க்க முன்னாள் ஜனாதிபதி கலாம் அறிவுரை

Posted:

கோவை : "ஒவ்வொரு மனிதனும், மானுடனாக வேண்டுமானால், வாழ்நாளில், 10 மரங்களையாவது வளர்க்க வேண்டும்' என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அறிவுரை வழங்கினார்.கோவை, உக்கடம் பெரியகுளம் அருகில், "சிறுதுளி' அமைப்பின், 10ம் ஆண்டு விழா, "பசுமை பஞ்சாயத்து' மற்றும் குப்பையில் இருந்து, இயற்கை உரம் தயாரித்து, காய்கறி தோட்டம் அமைக்கும் திட்டங்கள் துவக்க விழா, நேற்று நடந்தது.திட்டங்களை துவக்கி வைத்து, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசியதாவது: கோவை உக்கடத்தில் இருந்த, பெரியகுளம், முட்புதர், குப்பை நிறைந்திருந்தது; இன்று, நீர் நிரம்பி, பறவைகள் சுதந்திரமாக உலாவுகின்றன. ...

நரேந்திர மோடி மீது திக்விஜய் சிங் சாடல்

Posted:

புதுடில்லி: "பிரதமர் கனவில் மிதப்பவர்கள் கடும் ஏமாற்றம் அடைவர்' என, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர், திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவர், குஜராத் முதல்வர், நரேந்திர மோடியை சாடியுள்ளார்.பா.ஜ.,வின் தேர்தல் பிரசார குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள, குஜராத் முதல்வர், நரேந்திர மோடி, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில், பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்ற கருத்து, பா.ஜ.,வில் நிலவுகிறது. ஆனால், அதற்கு, பா.ஜ.,வில் பலத்த எதிர்ப்பு நிலவுகிறது. அதே அளவிற்கு, காங்கிரசும், மோடியை வசைபாடி வருகிறது. நேற்று முன்தினம், குஜராத்தில் நடந்த ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™