Tamil News | Online Tamil News |
- உரத்த சிந்தனை: தண்டனை மட்டும் போதுமா?- அப்சல்
- ஆழ்துளை குழியில் விழுந்த 4 வயது குழந்தை: 10 மணி நேரத்துக்கு பின் மீட்பு: சிகிச்சை பலனின்றி பரிதாப பலி
- 11 லட்சம் பேர் எழுதிய டி.இ.டி., தேர்வு முடிவு வெளியிடுவதில் இழுபறி
- அவசர சட்டம் அமலாவது ரத்தாகுமா? வரும் 3ம் தேதி அமைச்சரவை முடிவு
- சரக்கு கட்டணம் உயர்வு: திரும்ப பெற முதல்வர் வலியுறுத்தல்
- செம்மொழி மாநாட்டில் முறைகேடு; அதிகாரிகளை விசாரியுங்கள்: கருணாநிதி
- தமிழக அரசியலில் மோடி ஏற்படுத்திய அதிர்வலை
- பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த பாகிஸ்தானை நிர்பந்திப்பேன்: அதிபர் ஒபாமா உறுதி
- ராகுல் 'டிராமா'விற்கு ஆதரவு இல்லாததால் காங்கிரஸ் நடுக்கம்: டில்லியை இன்று மோடி கலக்கப்போவதால் கூடுதல் பீதி
- சோனியா மருமகன் ஊழல்: அம்பலப்படுத்திய எம்.பி.,க்கு காங்., மேலிடம் நோட்டீஸ்
| உரத்த சிந்தனை: தண்டனை மட்டும் போதுமா?- அப்சல் Posted: கடந்த ஆண்டு, டிசம்பர், 16 அன்று டில்லி பஸ்சில் ஆறு பேர் கொண்ட கும்பலால், மருத்துவ மாணவி பாலியல் வன்முறைக்கு உள்ளானார். அந்த மாணவியின் நண்பரை தாக்கிய, கும்பல் ஓடும் பஸ்சிலிருந்து மாணவியை துாக்கி வீசினர். மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட மாணவி, பனிரெண்டு நாள் கழித்து இறந்து போனார். இந்த அவலச் சம்பவம் உலகமெங்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.மனிதனுக்கும், மிருகத்திற்கும் வித்தியாசம் உண்டு என்பதை, இந்த சம்பவம் தகர்த்துவிட்டது. இதில் ஈடுபட்ட ஆறு பேரில், பஸ் டிரைவர் ராம்சிங், ஜெயில் அறையிலேயே துாக்கு போட்டுக் கொண்டார். இன்னொருவர், 18 ... |
| Posted: திருவண்ணாமலை : ஆரணி அருகே, போர்வெல் குழியில் விழுந்த, நான்கு வயது பெண் குழந்தை, 10 மணி நேரத்துக்கு பின், மாலை, 6.10 மணிக்கு மீட்கப்பட்டது. வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி, இரவு, 8 மணிக்கு பரிதாபமாக இறந்தது.போர்வெல் குழியில், குழந்தைகள் விழுந்து பலியாகும் சம்பவங்கள் பல இடங்களில் நடந்துள்ளது. சில இடங்களில், அதிர்ஷ்டவசமாக குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். போர்வெல் குழிகளை மூடாமல், மெத்தனமாக இருப்பதால், இது போன்ற துயரங்கள் அடிக்கடி நடக்கிறது.திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த, புலவன்பாடியை சேர்ந்த பழனி ... |
| 11 லட்சம் பேர் எழுதிய டி.இ.டி., தேர்வு முடிவு வெளியிடுவதில் இழுபறி Posted: கேள்வித்தாள், 'லீக்' சர்ச்சையில் சிக்கிய தர்மபுரி மாவட்டம், டி.இ.டி., தேர்வு முடிவில், முதலிடத்தை பிடித்திருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது. இந்த விவகாரம் காரணமாகவே, தேர்வு முடிவை வெளியிடுவதில், இழுபறி நிலை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.தமிழகத்தில், மூன்றாவது முறையாக, ஆகஸ்ட், 17,18ம் தேதிகளில், டி.இ.டி., தேர்வுகள் நடந்தன. 11 லட்சம் பேர், இந்த தேர்வை எழுதினர். விடைத்தாள்கள் அனைத்தும், கம்ப்யூட்டர் மூலம் மதிப்பீடு செய்து முடிக்கப்பட்டுவிட்டன.தேர்வு முடிவை, தேர்வர்கள், ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். எனினும், தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என, ... |
| அவசர சட்டம் அமலாவது ரத்தாகுமா? வரும் 3ம் தேதி அமைச்சரவை முடிவு Posted: புதுடில்லி : குற்ற வழக்குகளில், தண்டனை பெறும், எம்.பி., எம்.எல்.ஏ.,க்களுக்கு பாதுகாப்பு அளிக்கும், அவசர சட்டம் தொடர்பாக, வரும், 3 அல்லது, 4ம் தேதி, முடிவு எடுக்கப்படலாம் என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. "குற்ற வழக்குகளில், இரண்டு அல்லது அதற்கு மேலான ஆண்டுகள், தண்டனை பெறும், எம்.பி., எம்.எல்.ஏ.,க்களை, உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவை செல்லாததாக்கும் வகையில், அவசர சட்டம் ஒன்றை அமல்படுத்த, மத்திய அரசு முற்பட்டது. ஆனால், "இந்த அவசர சட்டம் முட்டாள்தனமானது; அதை கிழித்து எறிய வேண்டும்' என, காங்கிரஸ் துணைத் ... |
| சரக்கு கட்டணம் உயர்வு: திரும்ப பெற முதல்வர் வலியுறுத்தல் Posted: சென்னை : 'ரயில்வே சரக்கு கட்டண உயர்வை, திரும்பப் பெற வேண்டும்' என, முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசை வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:பெட்ரோலியப் பொருட்களின் தொடர் விலையேற்றம் காரணமாக, விலைவாசி விஷம் போல் ஏறிக் கொண்டிருக்கும் சூழலில், ரயில்வே சரக்கு கட்டணத்தை, மத்திய அரசுஉயர்த்தி இருப்பது, எரிகிற நெருப்பில், எண்ணெய் ஊற்றுவதுபோல் அமைந்து உள்ளது.கடந்த சில ஆண்டு களாக, 'வலுவான விலைக் கொள்கை' என்ற பெயரில், அக்டோபர் முதல் ஜூன் வரையிலான, ஒன்பது மாதங்கள், சுறுசுறுப்பான பருவம்; ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான, மூன்று மாதங்கள், சுறுசுறுப்பற்ற பருவம் என, ... |
| செம்மொழி மாநாட்டில் முறைகேடு; அதிகாரிகளை விசாரியுங்கள்: கருணாநிதி Posted: சென்னை : 'செம்மொழி மாநாட்டு அதிகாரிகளாக இருந்தவர்கள், இப்போது நிதித் துறை அதிகாரிகளாக உள்ளனர். அவர்களிடம், மாநாட்டில் முறைகேடு நடந்ததா என்பதை விசாரிக்கலாம்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:உத்தரவு:செம்மொழி மாநாட்டில் முறைகேடு நடந்ததாக, யாரோ ஒருவர் தொடர்ந்த வழக்கில், ஆதாரம் இருந்தால், வழக்கு பதிவு செய்யலாம் என, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.ஆனால், 'எனக்கு சம்மன் அனுப்பப்படும்' என, செய்திகள் வெளியாகி உள்ளன. சம்மனை பார்த்து அஞ்சப்போவதில்லை.மாநாடு நடந்தபோது, நிதித்துறை செயலராக ... |
| தமிழக அரசியலில் மோடி ஏற்படுத்திய அதிர்வலை Posted: பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்ட பிறகு, நாடு முழுவதும், மக்கள் மத்தியில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில், அரசியல் ஆர்வம் அதிகரித்துள்ளது.அதை பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்ட, தமிழக பா.ஜ., திருச்சியில், 'இளந்தாமரை மாநாடு'க்கு ஏற்பாடு செய்தது. பிரியாணி, குவார்ட்டர், கைசெலவுக்கு பணம், அழைத்து வர வாகனம் என, லட்சக்கணக்கில் செலவு செய்து தான், மற்ற கட்சிகள் மாநாடு நடத்துவது வழக்கம்.அதற்கு நேர்மாறாக, தலா, 10 ரூபாய் கட்டணம் செலுத்தி, மாநாட்டில் பங்கேற்க, ஒன்றரை லட்சம் பேர் முன்பதிவு செய்தனர் என்ற, மாநாட்டுக்கு முந்தைய ... |
| பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த பாகிஸ்தானை நிர்பந்திப்பேன்: அதிபர் ஒபாமா உறுதி Posted: வாஷிங்டன் : 'பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு எதிராக தூண்டி விடப்படும் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தும்படி, பாக்., பிரதமரிடம் வலியுறுத்துவேன்' என, பிரதமர் மன்மோகன் சிங்கிடம், அமெரிக்க அதிபர் ஒபாமா, உறுதி அளித்தார்.சந்திப்பு;ஐ.நா., பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றுவதற்காக, பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்கா சென்றுள்ளார். நேற்று முன்தினம் அவர், அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து பேசினார்.இரு தலைவர்களும், பயங்கரவாதம், பொருளாதாரம், குடியேற்ற விவகாரம், வறுமை ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து, மூன்று மணி நேரத்துக்கும் மேலாக ... |
| Posted: 'குற்ற வழக்குகளில் தண்டனை பெறும், எம்.பி., – எம்.எல்.ஏ.,க்களை காப்பாற்ற, மத்திய அரசு அமல்படுத்த முற்பட்டுள்ள, அவசர சட்டம் முட்டாள்தனமானது; இந்த விவகாரத்தில், அரசு செய்தது தவறு' எனக்கூறி, காங்கிரஸ் துணை தலைவர், ராகுல், நேற்று முன்தினம் நடத்திய, 'டிராமா'வுக்கு பெருமளவு ஆதரவு இல்லாததால், காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் நடுக்கம் உருவாகி உள்ளது.அதே நேரத்தில், பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதல், பல நகரங்களில் பொதுக்கூட்டங்களை நடத்தி, தன் செல்வாக்கை பெருக்கி வரும், முதல்வர் நரேந்திர மோடி, இன்று டில்லியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ... |
| சோனியா மருமகன் ஊழல்: அம்பலப்படுத்திய எம்.பி.,க்கு காங்., மேலிடம் நோட்டீஸ் Posted: ரேவாரி : காங்கிரசில் இருந்து விலகப் போவதாக அறிவித்துள்ள, எம்.பி., ராவ் இந்தர்ஜித் சிங்கிடம், விளக்கம் கேட்டுள்ளது, கட்சி மேலிடம். காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகள், பிரியங்காவின் கணவர், ராபர்ட் வாத்ரா, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், அரியானா மாநிலத்தில், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை வளைத்து போட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார், குர்கான் தொகுதி, காங்கிரஸ், எம்.பி., ராவ் இந்தர்ஜித் சிங். மேலும், ராபர்ட் வாத்ரா மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த அவர், இனிமேலும் கட்சியில் நீடிப்பது சரியல்ல என கூறி, பதவியை ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |செப்டம்பர் 29,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |