Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தண்டனை பெறும் எம்.பி., – எம்.எல்.ஏ.,க்களை காப்பாற்ற அவசர சட்டம்: பதவி பறிப்பை தடுக்க மத்திய அமைச்சரவை முடிவு

Posted:

புதுடில்லி : கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெறும், எம்.பி., – எம்.எல்.ஏ.,க்களை காப்பாற்ற, மத்திய அரசு, இயற்றியுள்ள அவசர சட்டத்துக்கு, மத்திய அமைச்சரவை, நேற்று ஒப்புதல் அளித்தது. இதன் மூலம், சிறைத் தண்டனை பெறும், எம்.பி., – எம்.எல்.ஏ.,க்கள், தங்கள் தண்டனையை எதிர்த்து, மேல் முறையீடு செய்திருந்தால், அவர்களை பதவி நீக்கம் செய்ய முடியாது.அரசியலில், குற்றப் பின்னணி உடையவர்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தக் கோரும், பொதுநல மனுவை விசாரித்த, சுப்ரீம் கோர்ட், ஜூலை, 10ம் தேதி, அதிரடியான உத்தரவை பிறப்பித்தது.உத்தரவு:கிரிமினல் வழக்குகளில், இரண்டு அல்லது அதற்கு அதிகமான ...

மந்திரிகளுக்கு பணம் கொடுத்த தகவலில் அதிர்ச்சி : முன்னாள் தளபதி எய்த அம்பால் பரபரப்பு

Posted:

புதுடில்லி : "ஜம்மு – காஷ்மீர் அமைச்சர்களுக்கு, ராணுவம் பணம் கொடுத்ததாக, முன்னாள் ராணுவ தளபதி, வி.கே.சிங் கூறிய தகவல், மத்திய அரசு அளவிலும், ஜம்மு – காஷ்மீர் மாநில அரசுக்கும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.ஜம்மு – காஷ்மீர் மக்கள் இறையாண்மையை காக்கும் விதத்தில், தன்னார்வ அமைப்புக்கு நிதி தருவது ராணுவத்தின் வழக்கமான செயல்; இதனால் அங்குள்ள அரசைக் கவிழ்க்கும் செயலில் தான் ஈடுபட்டதாக கூறுவது அபத்தம் என்று முன்னாள் ராணுவ தளபதி சிங் கூறியுள்ளார். இச்செய்தி பெரியஅளவில் பரபரப்பாகி, தன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதால், தனது நிலையை விளக்கியதாக கூறிய ...

மூத்த வக்கீல் மோகன் பராசரன் கருத்து சரியில்லை: கருணாநிதி

Posted:

சென்னை : 'சேதுசமுத்திர திட்டத்தை நிறை வேற்ற, மத்திய அரசு முன் வந்துள்ள நிலையில், மோகன் பராசரன் போன்ற மூத்த வழக்கறிஞர்கள், மத்திய அரசின் கருத்துக்கு மாறாக, ஒரு மதவாதியைப் போல கருத்து தெரிவித்திருப்பது சரியானதாக எனக்கு தெரியவில்லை' என, தி.மு.க., தலைவர் கருணாநிதிகூறியுள்ளார்போராட்டம்: அவரது பேட்டி:தமிழகத்தில், பார்வையற்றவர்கள் கடந்த, ஒன்பது நாட்களாக அரசை எதிர்த்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். என்னை பொறுத்தவரையில், இந்தச் செயலைக் கண்டிக்கத் தான் முடியும்.பார்வையற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களை இந்த அரசு ஆரம்பம் ...

‘பொழுதுபோக்குடன் சமூக பொறுப்புணர்வுமிக்க படங்களை எடுங்கள்’: ஜனாதிபதி

Posted:

சென்னை : ''திரைப்படத்துறையினர் பொழுதுபோக்கு படங்களை மட்டும் எடுக்காமல், சமூக பொறுப்புணர்வுடன் கூடிய படங்களை எடுக்க வேண்டும்,'' என, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, திரைப்படத் துறையினருக்கு, அறிவுரை வழங்கினார்.இந்திய சினிமா நூற்றாண்டு விழா, 21ம் தேதி சென்னையில் துவங்கியது. நேற்று மாலை, நிறைவு விழா நடந்தது. விழாவிற்கு, தமிழக கவர்னர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா, கேரளா முதல்வர் உம்மன்சாண்டி ஆகியோர், தலைமை தாங்கினர். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, 45 பேருக்கு விருது வழங்கினார்.பின், அவர் பேசியதாவது:முன்பு சமூக ...

மோடி நாளை திருச்சி வருகை: போலீஸ் பாதுகாப்பு வளையத்தில் திருச்சி மாநகர்

Posted:

திருச்சி: நாளை நடக்க உள்ள, பா.ஜ.,வின், இளந்தாமரை மாநாட்டுக்கு, அக்கட்சியின், பிரதமர் வேட்பாளர் மோடி வருவதால், பலத்த பாதுகாப்பு வளையத்தில், திருச்சி மாநகரம் கொண்டு வரப்பட்டுள்ளது; மாநாடு நடக்கும் மைதானத்தை, குஜராத் உளவுத்துறை போலீசாரும் ஆய்வு செய்தனர்.தமிழக, பா.ஜ., இளைஞரணி சார்பில், இளந்தாமரை மாநாடு, நாளை திருச்சி, "ஜி' கார்னர் மைதானத்தில் நடக்கிறது. மாநாட்டில், பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி பங்கேற்கிறார். பா.ஜ., தேசிய தலைவர் ராஜ்நாத் சிங், இளைஞரணி தேசிய தலைவர் அனுராக்சிங் தாக்குர், தேசிய, மாநில நிர்வாகிகள் பலரும் ...

கமிஷனர் அலுவலகத்தில் 14 ஆயிரம் கோப்புகள் தேக்கம்: ஸ்தம்பிக்கும் நிலையில் போலீஸ் நிர்வாகம்

Posted:

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவல கத்தில், வந்த புகார்களே அதிகளவில் திரும்பத் திரும்ப வருகின்றன. இதற்கு, புகார்கள் மீது நடவடிக்கை இல்லாததும், கமிஷனர் அனுமதிக்காக காத்திருக்கும் கோப்புகளின் எண்ணிக்கையும் தான் காரணம் என, கமிஷனர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.படாதபாடுபட்டவர்:கமிஷனர் அலுவலகத்தின் தற்போதையநிர்வாகத்திற்கான சிறந்த உதாரணம்,சென்னையை சேர்ந்த, தொடர் புகார்தாரர் அந்தஸ்து பெற்ற, வாலிபர் ஒருவரின் சோகமான அனுபவங்கள் தான்.திருமண தகவல் மையம் மூலம், அந்த வாலிபர், மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு வசதியான பெண்ணை திருமணம் செய்து ...

பெரிய வெங்காயம் உற்பத்திக்கு முயற்சிக்காத தமிழக அரசு

Posted:

தமிழகத்தில், பெரிய வெங்காயம் உற்பத்திக்கு, சாதகமான சூழ்நிலை நிலவியும், உற்பத்தியை அதிகரிக்க, அரசு, எந்த விதமான முயற்சியும் மேற்கொள்ளாமல் உள்ளது. இதனால்,வெங்காயம் தேவையை பூர்த்தி செய்ய, அண்டை மாநிலங்களை நம்பி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.மகாராஷ்டிரா முதலிடம்:நாட்டின், மொத்த வெங்காய உற்பத்தியில், மகாராஷ்டிராவின் பங்களிப்பு, 37 சதவீதம். இதை அடுத்து, கர்நாடகம், 14; மத்திய பிரதேசம், 11; குஜராத், 8.92 சதவீதம் என்ற அளவில் உள்ளது. தமிழகத்தின் பங்களிப்பு, 3.37 சதவீதம் மட்டுமே.மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ், தேசிய வேளாண் கூட்டுறவு ...

மோட்டல்களை கடந்து செல்லும் அரசு விரைவு பஸ்கள்: பசியில் வாடும் பயணிகள்

Posted:

தொலைதூரம் செல்லும் அரசு பஸ்களில், மதிய உணவிற்காக, மாலை வரை காத்திருக்க வேண்டியுள்ளதால், பயணிகள் பசியில் வாடுகின்றனர். குறிப்பிட்ட மோட்டலில் தான், பஸ்சை நிறுத்த வேண்டும் என்ற உத்தரவை மீற முடியாததால், ஊழியர்களும் பசியில் தவிக்கின்றனர்.பராமரிப்பு இல்லை:தொலைதூரம் செல்லும் பயணிகளின் நலன் கருதி, அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில், குறிப்பிட்ட வழித்தடங்களில் மோட்டல்கள் (சாலையோர உணவகங்கள்) அமைக்கப்பட்டன. முறையான நிர்வாகம் மற்றும் பராமரிப்பு இல்லாததால், பெரும்பாலான மோட்டல்கள் மூடப்பட்டன.இந்த சூழ்நிலையில், தொலைதுாரம் பஸ்கள் செல்லும் ...

ஜெனரேட்டர் இல்லாததால் அரசு மருத்துவமனையில் இருட்டு: மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பிரசவம்

Posted:

சென்னை : மின்தடை ஏற்பட்டால், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பிரசவம் பார்க்கும் அவலம், மாதவரத்தில் உள்ள மாநகராட்சி மருத்துவமனையில் நடந்து வருகிறது.சென்னை மாதவரம் மண்டல அலுவலகத்தின் பின்புறம், மாநகராட்சி மருத்துவமனை உள்ளது. அது 21 ஆண்டுகளுக்கு முன், நகர நலவாழ்வு நிலையமாக துவக்கப்பட்டது. 10 பேருக்கு மகப்பேறு சிகிச்சைதற்போது, ஒரு மண்டல மருத்துவ அதிகாரி, சுகாதார கண்காணிப்பாளர், நகர சுகாதார செவிலியர்கள், அறுவை அரங்கு உதவியாளர் மற்றும் ஆயா உட்பட மொத்தம் 13 பேர் பணியாற்றி வருகின்றனர்.தினசரி, 80 முதல் 100 பேர் புறநோயாளிகளாக வந்து செல்கின்றனர். ஒவ்வொரு ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™