Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


சமூக வலைதளங்கள் மீது பிரதமர் மன்மோகன் பாய்ச்சல் : மத கலவரங்கள் பரவ காரணம் என பகிரங்க புகார்

Posted:

புதுடில்லி:ஆட்சேபனைக்குரிய தகவல்களை பரப்பி, மக்களிடையே மத கலவரங்களை உருவாக்க, சமூக வலைதளங்கள் காரணமாக இருக்கின்றன; அது கண்டனத்திற்குரியது. நாட்டின் பல பகுதிகளிலும், மத கலவரங்கள் அதிகரித்து வருவதை ஏற்க முடியாது. மத கலவரங்கள் உருவாக காரணமானவர்கள், யாராக இருந்தாலும், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய கடமை, மாநில அரசுகளுக்கு உள்ளது,'' என, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். உத்தர பிரதேச மாநிலம், முசாபர் நகரில், சமீபத்தில், மத கலவரம் ஏற்பட்டு, 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து, இந்தப் பிரச்னை பற்றி விவாதிக்க, தேசிய ஒருமைப்பாட்டு ...

பவானி சிங் நியமிக்கப்பட்ட போதே எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்: கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

Posted:

புதுடில்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், அரசு தரப்பு வழக்கறிஞராக, பவானி சிங் நியமிக்கப்பட்டபோதே, எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்?' என, கர்நாடகா மாநில அரசுக்கு, சுப்ரீம் கோர்ட், கேள்வி எழுப்பியுள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் விசாரணை, பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடக்கிறது. 17 ஆண்டுகளாக நடந்து வரும், இந்த வழக்கின் விசாரணை, முடிவடையும் நிலையில், திடீரென, கர்நாடகா மாநில அரசு தரப்பில், சிறப்பு வழக்கறிஞராக ஆஜராகிய, பவானி சிங்கை, அம்மாநில அரசு, திடீரென நீக்கியது. இதை எதிர்த்து, ஜெயலலிதா சார்பில், ...

லோக்சபா தேர்தலின் போது எந்த தொகுதியில் நரேந்திர மோடி போட்டி: ராஜ்நாத் சிங் பதில்

Posted:

சண்டிகார் லோக்சபா தேர்தலின் போது, முதல்வர் நரேந்திர மோடி எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்பது தொடர்பாக, பரபரப்பு தகவல்களை, பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்து உள்ளார்.ஊடுருவல்:பா.ஜ., தேசிய தலைவர் ராஜ்நாத் சிங்,சண்டிகாரில்,கூறியதாவது:பாகிஸ்தான் ராணுவம், நம் வீரர்கள் மீது, தாக்குதல் நடத்துகிறது. பயங்கரவாதிகளை, நம் எல்லைக்குள்ஊடுருவ வைக்கிறது இதனால், எல்லை பகுதியில், தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. இப்படிப்பட்ட சூழலில், அமெரிக்காவுக்கு செல்லும், பிரதமர் மன்மோகன் சிங், அங்கு, பாக்., பிரதமருடன் பேச்சு நடத்தவுள்ளதாக, செய்திகள் ...

சமமாக நடத்த பாருங்கள்: மத்திய அரசுக்கு முதல்வர் அறிவுரை

Posted:

புதுடில்லி:சட்டம் – ஒழுங்கு மற்றும் போலீஸ் நிர்வாகம் ஆகியவை, மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டவை. இவற்றின் மீது, ஆதிக்கம் செலுத்த, மத்திய அரசு முயற்சிக்க கூடாது. மாநில அரசுகளை சமமாக நடத்துவதற்கு, மத்திய அரசு முன்வர வேண்டும். சட்டம் − ஒழுங்கைகட்டிக்காப்பதில், அரசியல் ரீதியிலான, குறுகிய லாப நோக்கங்கள், இருக்க கூடாது," என்று, முதல்வர் ஜெயலலிதா கூறினார்.டில்லியில் நடைபெற்ற, தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டத் திற்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா வரவில்லை. இருப்பினும் இந்த கூட்டத்தில், முதல்வருக்கு பதிலாக, சட்ட அமைச்சர் முனுசாமி கலந்து கொண்டார். ...

4 நிமிடத்தில் 384 மூட்டை மானிய விலை சிமென்ட் கொள்முதல்: அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ., மீது புகார்

Posted:

திருச்சி: மானிய விலை சிமென்ட்டை, அதிகாரத்தை பயன்படுத்தி, விதிமுறைக்கு புறம்பாக, மணப்பாறை, அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ., பெற்றது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில், ஆறு ஆண்டுக்கு முன், ஒரு மூட்டை சிமென்ட் விலை, 180 ரூபாய் முதல், 200 ரூபாய் வரை, இருந்தது. கடந்த, தி.மு.க., ஆட்சியில் கடைசி ஓராண்டில் சிமென்ட் விலை தாறுமாறாக உயர துவங்கியது. தங்கத்துக்கு இணையாக சிமென்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் விலை உயர்வும், கடந்த சட்டசபைத் தேர்தலில், தி.மு.க.,வின் வீழ்ச்சிக்கு காரணமாகும். சிமென்ட்டை ஏழை, நடுத்தர மக்கள், பொருளாதார சிக்கலின்றி பெறும் வகையில், மானிய விலை ...

சொத்து குவிப்பு வழக்கில் கைதான ஜெகன் மோகனுக்கு ஜாமின்

Posted:

ஐதராபாத் : வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பான வழக்கில் கைதாகி, 16 மாதங்களாக, சிறைவாசம் அனுபவித்த, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, 40, நேற்று ஜாமினில் விடுவிக்கப்பட்டார். அதே நேரத்தில், அவர், ஐதராபாத் நகரை விட்டு வெளியேறக் கூடாது என, கோர்ட் தடை விதித்துள்ளது.ஆந்திர மாநில முன்னாள் காங்., முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன், ஜெகன் மோகன் ரெட்டி. ராஜசேகர ரெட்டி, ஹெலிகாப்டர் விபத்தில் இறந்ததும், அவர் வகித்து வந்த, முதல்வர் பதவியை தனக்கு வழங்க வேண்டும் என, காங்கிரஸ் மேலிடத்தை வலியுறுத்தினார். அதற்கு காங்., மேலிடம் மறுப்பு ...

அரசு பஸ்களில் ‘அம்மா குடிநீர்’ கிடைப்பது எப்போது?உற்பத்தியில் சிக்கல்

Posted:

குடிநீர் உற்பத்தி நிலையத்தில், போதிய உற்பத்தி எட்டாததால், அரசு பஸ்களில், 'அம்மா குடிநீர்' வினியோகத்தை துவங்குவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.குடிநீர் வினியோகம்:தமிழகத்தில், இம்மாதம், 15ம் தேதி முதல், அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம், 304 இடங்களில், 'அம்மா குடிநீர்' பாட்டில் விற்பனை துவங்கப்பட்டது. பஸ் நிலையங்கள், மோட்டல்கள் மற்றும் தொலைதூரம் செல்லும் அரசு பஸ்களில் குடிநீர் வினியோகம் செய்ய திட்டமிடப்பட்டது.இதற்காக, திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிபூண்டியில், மினரல் வாட்டர் உற்பத்தி நிலையம் துவக்கப்பட்டது. நாள் ஒன்றுக்கு, 3 லட்சம் ...

‘டிவி’ புகைப்பட நிருபர், ஆட்டோ ஓட்டுனர் மீது கல்லூரி மாணவர்கள் கொலைவெறி தாக்குதல்

Posted:

சென்னை : மாநில கல்லூரி மாணவர்களின் கொலைவெறி தாக்குதலில்,'தந்தி 'டிவி' யை சேர்ந்த புகைப்பட நிருபர் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். நகரின் பிரதான சாலையில் நடந்த இந்த சம்பவத்தில், ஒரு மாணவர் கைது செய்யப்பட்டார்.சென்னை, தலைமை செயலகத்தில், நேற்று பிற்பகல் 3:00 மணிக்கு, முதல்வரின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு, 'தந்தி டிவி'யை சேர்ந்த கார், மெரீனா காமராஜர் சாலையில், கண்ணகி சிலை அருகே, சிக்னலில் நின்று கொண்டிருந்தது.வாகனங்கள் மீது தாக்குதல்:அப்போது, சென்னை மாநில கல்லூரி யை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட மாணவர்கள், ...

காற்றாலை மின்சாரம் வீண்: கருணாநிதி கவலை

Posted:

சென்னை:'மின்வெட்டு பிரச்னை தீர்த்து வைப்பதற்கு, முன்னுரிமை கொடுக்காத காரணத்தினால், பொதுமக்களின் அவதி குறையவில்லை' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:தமிழகத்தில், மின்சார பற்றாக்குறை காரணமாக, மின்வெட்டு நீடித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கடந்த, 10 நாட்களில் மட்டும், காற்றாலைகள் உற்பத்தி செய்த, 5.73 கோடி யூனிட் மின்சாரம், வீணாகி இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. தமிழகத்தில் சில வாரக்கால இடைவெளிக்கு பின், மீண்டும் மின்வெட்டு தொடரும் என்ற செய்தியை பார்த்து, தமிழக மக்கள் பீதியும், பதற்றமும் அடைய துவங்கி விட்டனர்.இந்நிலையில், ...

உணவு தானிய உற்பத்தி அதிகரிக்கும் : மத்திய அமைச்சர் சரத் பவார் நம்பிக்கை

Posted:

புதுடில்லி: நாட்டின் பல இடங்களில், குறிப்பாக வட மாநிலங்களில், பருவமழை வழக்கத்திற்கு அதிகமாக பெய்துள்ளது. அதனால், உணவு தானிய உற்பத்தி, இந்தாண்டு, கடந்தாண்டை விட அதிகரிக்க வாய்ப்பு உள்ளது, என, மத்திய விவசாய அமைச்சர், சரத் பவார் கூறினார்.மத்திய விவசாய அமைச்சர் சரத் பவார், டில்லியில், நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கடந்தாண்டு, காரீப் பருவத்தில், உணவு தானிய உற்பத்தி, 12.8 கோடி டன்னாக இருந்தது. இந்த ஆண்டு பருவமழை வழக்கத்தை விட அதிகமாக பெய்துள்ளதால், அக்டோபரில் அறுவடை சிறப்பாக இருக்கும். உணவு தானிய உற்பத்தி, 13 கோடி டன்னாக இருக்கலாம் என, நம்பப்படுகிறது. ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™