Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஷாப்பிங் மால்களில் "டாஸ்மாக்' கடைகள் திறக்க திட்டம்

Posted:

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், முக்கிய இடங்களில் உள்ள, ஷாப்பிங் மால்களில், மதுபான கடைகள் திறக்க,"டாஸ்மாக்' நிறுவனம் முடிவு செய்துள்ளது. சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி என, ஐந்து மண்டலங்களில், மொத்தம், 6,838 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகள் மூலம், நாள்தோறும், சராசரியாக, 67 கோடி ரூபாய்க்கு மது வகைகள் விற்பனையாகின்றன.உள்நாட்டில் மதுபான ஆலை கொண்டுள்ள நிறுவனங்கள், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மன் ஆகிய நாடுகளில் இருந்து, சிறப்பு மது வகைகளை இறக்குமதி செய்து, அவற்றை, டாஸ்மாக் நிறுவனத்துக்கு வினியோகம் செய்கின்றன. இந்த மது வகைகளுக்கு என, தனி ...

ஊழல் புகார்கள் 113 சதவீதம் அதிகரிப்பு : சி.வி.சி., ஆண்டு அறிக்கையில் தகவல்

Posted:

புதுடில்லி : "ஊழல் முறைகேடு குறித்த புகார்கள், கடந்தாண்டு, 113 சதவீதம் அதிகரித்துள்ளது' என, மத்திய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.மத்திய அரசு துறைகளில், ரயில்வே துறையில் தான், அதிகளவில், ஊழல் முறைகேடு குறித்த புகார்கள் வந்துள்ளன. இந்த வகையில், கடந்தாண்டு, 10 ஆயிரம் புகார் மனுக்கள் வந்துள்ளன. சி.வி.சி., என்ற மத்திய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையம் வெளியிட்டுள்ள, ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை, சமீபத்தில், பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் வருமாறு:மத்திய ...

162 எம்.பி.,க்கள் மீது குற்ற வழக்குகள் தேர்தல் வெற்றிக்கு இதுவும் "முக்கியம்'

Posted:

புதுடில்லி : நடப்பு லோக்சபாவில், மொத்தமுள்ள உறுப்பினர்களில், மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் மீது, குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. இதே அளவுக்கு, பல்வேறு மாநில சட்டசபை உறுப்பினர்கள் மீதும், குற்ற வழக்குகள் உள்ளன.லோக்சபா உறுப்பினர்கள், பல்வேறு மாநில சட்டசபை உறுப்பினர்களில், குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் குறித்து, தேர்தல் சீர்திருத்தத்தை ஆதரிக்கும் தன்னார்வ நிறுவனம் ஒன்று, நாடு முழுவதும் சர்வே ஒன்றை நடத்தியது. வரவிருக்கும் ஐந்து மாநில தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை யொட்டி, இந்த சர்வே நடத்தப்பட்டது. 2004ம் ஆண்டு முதல் லோக்சபா தேர்தல் ...

சொகுசு படகு... 40 கிலோ தங்கம்... பறிமுதல் - தமிழகத்தில் நடப்பது என்ன?

Posted:

"தமிழகத்திற்கு கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவலாம்' என, திடீர் எச்சரிக்கைகள் வந்ததன் பின்னணி குறித்து, தற்போது விசாரணை நடந்து வருகிறது. கோடியக்கரை பகுதியில், 15 தினங்களுக்கு முன், கண்டுபிடிக்கப்பட்ட ஆளில்லாத சொகுசுப் படகில், வந்தது யார் என்பதும், வேதாரண்யத்தில் தற்போது பிடிபட்டு வரும் தங்கத்திற்கும், இந்த படகிற்கும் தொடர்பிருக்கிறதா என்பதும், விசாரணையில் உள்ளதாக கூறப்படுகிறது.வடமாநிலங்களில் தான் நக்சல்கள், மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் அதிகளவில் உள்ளது. தென் மாநிலங்களில், தமிழகத்தை பொறுத்தவரை, ஊடுருவல் என்று கூறப்பட்டாலும், உடனடி நடவடிக்கை மூலம், ...

பண்ருட்டி ராமச்சந்திரனை வெளியேற்ற காய் நகர்த்தும் மூவர் குழு

Posted:

தே.மு.தி.க.,வில் இருந்து, கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை வெளியேற்ற, அக்கட்சியில் உள்ள, மூவர் குழு தீவிரமாக வேலை பார்க்கிறது. இது தெரிந்தும், "அவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க முடியாது' என, செயற்குழு கூட்டத்தில், விஜயகாந்த் வெளிப்படையாக அறிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த, 2006, சட்டசபை தேர்தலுக்கு பின், அ.தி.மு.க., - தி.மு.க., - காங்., - பா.ஜ., உள்ளிட்ட, கட்சிகளை சேர்ந்த பலர், தே.மு.தி.க.,வில் இணைந்தனர். இதில், குறிப்பிடத்தக்கவர், பண்ருட்டி ராமச்சந்திரன்.சென்னையில் இருக்கும் நாட்களில், காலை, 11:30 மணிக்கு கட்சி அலுவலகம் வருவதை, விஜயகாந்த் வழக்கமாக ...

என்னை விட்டு சென்ற துரோகிகள் : அழகிரி திடீர் வருத்தம்

Posted:

மதுரை : ""பதவியில் இருந்தபோது, என்னுடன் இருந்தவர்கள், இப்போது, என்னை விட்டு சென்றுவிட்டனர்,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, நேற்று வருத்தமாக தெரிவித்தார்.மதுரை உட்பட, தென் மண்டலத்தில், கட்சியில் முக்கியத்துவம் பெற்று வந்த அழகிரி, கடந்த சில மாதங்களாக, கட்சி சார்பில் நடக்கும் எந்த கூட்டங்களிலும் பங்கேற்கவில்லை. இதனால், அரசியல் எதிர்காலம் கருதி, தென் மாவட்டத்தில், பல தி.மு.க., நிர்வாகிகள், ஸ்டாலின் ஆதரவாளர்களாக மாறினர். மதுரையிலும், அழகிரிக்கு நெருங்கிய சில பிரமுகர்கள், அவரை விட்டு சென்றனர். ஆனாலும், அழகிரி எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் ...

கச்சத்தீவு பற்றி விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம்: பாரதிய ஜனதா கோரிக்கை

Posted:

"கச்சத்தீவு, இலங்கைக்கு சொந்தமானது என, கூறுவதை, ஏற்க முடியாது. இதுபற்றி விவாதிக்க, அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும்' என, பா.ஜ., கோரியுள்ளது."ராமேஸ்வரம் அருகேயுள்ள கச்சத்தீவு, இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டு விட்டது. அதை, திரும்பப் பெறும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்' எனக்கோரி, முதல்வர் ஜெயலலிதா, சுப்ரீம் கோர்ட்டில், மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.கேள்விக்கே இடமில்லை:இந்த மனு, சமீபத்தில் விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு சார்பில், பதில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், "கச்சத்தீவு இந்திய அரசால், இலங்கைக்கு ...

பார்லிமென்டில் ரகளையில் ஈடுபட்ட 11 எம்.பி.,க்கள் சஸ்பெண்ட்

Posted:

தெலுங்கானா விவகாரம் நேற்று மீண்டும் பார்லிமென்டில் எதிரொலித்தது. லோக்சபாவில், இந்தப் பிரச்னையை எழுப்பி அமளியில் ஈடுபட்ட, காங்கிரஸ் எம்.பி.,க்கள், ஐந்து பேர், தெலுங்கு தேசம் எம்.பி.,க்கள், நான்கு பேர் என, மொத்தம், ஒன்பது எம்.பி.,க்களை, சபாநாயகர் மீராகுமார், "சஸ்பெண்ட்' செய்தார்.இருந்தாலும், சபையிலிருந்து வெளியேறாமல், அந்த எம்.பி.,க்கள் ரகளையில் ஈடுபட்டதால், லோக்சபா நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. இதேபோல், ராஜ்யசபாவிலும், அமளியில் ஈடுபட்ட, தெலுங்கு தேச எம்.பி.,க்கள் இருவர், சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.தெலுங்கானா மாநிலம்:ஆந்திராவை பிரித்து ...

இரவு நேரங்களில் "பெட்ரோல் பங்க்'குகளை மூடும் யோசனை நிராகரிப்பு : மந்திரி வீரப்ப மொய்லி கருத்துக்கு கடும் எதிர்ப்பு எதிரொலி

Posted:

புதுடில்லி : "பெட்ரோல் பங்க்'குகளை, இரவில் மூடும் யோசனைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதை, பிரதமர் அலுவலகமும், நிதி அமைசகமும் நிராகரித்துள்ளது. இதன் எதிரொலியாக, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, இதை உடனடியாக மறுத்துள்ளதோடு, ""அப்படியொரு திட்டமோ, எண்ணமோ அரசிடம் இல்லை; இது என்னுடைய யோசனை அல்ல; பொதுமக்களிடமிருந்து வந்தது தான்,'' என, தெரிவித்துள்ளார்.இந்திய ரூபாயின் மதிப்பு, எப்போதும் இல்லாத வகையில் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால், மத்திய அரசு, "எதை தின்றால், பித்தம் தெளியும்' என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ரூபாயின் வீழ்ச்சியால், முதல் ...

உணவு பாதுகாப்பு மசோதாவுக்கு பார்லிமென்ட் ஒப்புதல்

Posted:

புதுடில்லி: மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டம் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, மசோதாவிற்கு பார்லிமென்ட் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனையடுத்து விரைவில் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும்.ஏழை மக்களுக்கு, மலிவு விலையில் உணவு தானியங்களை வழங்கும், உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றும் அவசர சட்டத்தில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, கடந்த, ஜூலை மாதம், 5ம்தேதி, கையெழுத்திட்டார்.இந்த மசோதா, கடந்த மாதம், 26ம்தேதி, லோக்சபாவில், பலத்த விவாதத்திற்கு பிறகு நிறைவேற்றப்பட்டது.இந்த மசோதா நேற்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டு ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™