Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


குற்றவாளியான அரசியல்வாதியின் பதவி பறிபோவது முதல் முறை: சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி சிக்குகிறார் ராஜ்யசபா எம்.பி.,

Posted:

புதுடில்லி: தகுதி இல்லாதவர்களுக்கு, மருத்துவப் படிப்பிற்கான இடங்களை வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய ராஜ்யசபா காங்., - எம்.பி.,யுமான ரஷீத் மசூது குற்றவாளி என, அறிவிக்கப்பட்டு உள்ளார். "எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்களுக்கு குற்ற வழக்குகளில், தண்டனை விதிக்கப்பட்டால், அவர்களின் பதவியை உடனே பறிக்க வேண்டும்' என, சமீபத்தில், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அந்த உத்தரவுபடி, முதலில் சிக்கிஉள்ளவர் ரஷீத் மசூது. அதனால், அவரின் பதவி பறிக்கப்படுவது உறுதியாகியுள்ளது.உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ரஷீத் மசூது. 1990 - 1991ம் ...

அமெரிக்காவுடன் புதிய அணு ஒப்பந்த முயற்சியால் சர்ச்சை: மன்மோகன் அரசுக்கு அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு

Posted:

புதுடில்லி: ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க செல்லும், பிரதமர், மன்மோகன் சிங், அமெரிக்காவுடன் புதிய அணுமின் நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவ்வாறு எத்தகைய ஒப்பந்தங்களையும் மேற்கொள்ளக் கூடாது என, முக்கிய எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.ஐக்கிய நாடுகள் சபையின், பொதுச்சபை கூட்டம், இம்மாதம், 28ம் தேதி கூடுகிறது. முதல் நாள் கூட்டத்திலேயே, பிரதமர் மன்மோகன் சிங் உரையாற்றுகிறார்.புதிய அணுமின் நிலையம்: அவர் பயணத்தின் போது, குஜராத் மாநிலத்தில் புதிய அணுமின் நிலையம் ...

மோடி பேச குண்டு துளைக்காத மேடை: "இளந்தாமரை' மாநாட்டு பணி "விறுவிறு'

Posted:

திருச்சி: பா.ஜ., சார்பில் திருச்சியில் நடக்கும், "இளந்தாமரை' மாநாட்டில், குண்டு துளைக்காத மேடையில், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி உரையாற்றுகிறார். இதற்காக மேடை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது.தமிழக பா.ஜ., இளைஞரணி சார்பில், "இளந்தாமரை' மாநாடு, திருச்சி பொன்மலை, "ஜி' கார்னர் மைதானத்தில், இம்மாதம், 26ம் தேதி நடக்கிறது. மாநாட்டில், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பேசுகிறார். மாநாட்டில், கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங், வெங்கையா நாயுடு, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட பலரும் ...

நாட்டில் டீ குடிப்பது தவறா? போலீசாருக்கு, மும்பை ஐகோர்ட் கண்டனம்

Posted:

மும்பை: "நாட்டில், டீ குடிப்பது தவறா? சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில், டீ குடித்தார் என்பதற்காக, ஒருவரை கைது செய்வதா?' என, போலீசாருக்கு, மும்பை ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.சிறையில் அடைப்பு: மகாராஷ்டிரா மாநிலம், கோல்காபுரியை சேர்ந்த, விஜய் பாட்டீல் என்பவர், அங்குள்ள பல்கலைக்கழகம் அருகே உள்ள டீக்கடையில், சில மாதங்களுக்கு முன், டீ குடித்துக் கொண்டிருந்தார். அங்கு வந்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமினில் வந்த அவர், போலீசாரின் நடவடிக்கையை எதிர்த்து, மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, ...

ஜெனரேட்டருக்கு தாவிய கான்ட்ராக்டர்கள்: மின்வாரிய "டெபாசிட்' அறிவிப்பால் "கிலி'

Posted:

காரைக்குடி: தற்காலிக இணைப்புக்கு "டெபாசிட்' தொகை, அதிகம் செலுத்த வேண்டியுள்ளதால்,கட்டட கான்ட்ராக்டர்கள் ஜெனரேட்டர் பயன்பாட்டுக்கு மாறியுள்ளனர்.கடந்த 21.6.2013-க்கு முன், வீடு கட்டுபவர்கள், மின் இணைப்பு பெறவேண்டுமென்றால், அட்டவணை 5-ன் படி, ஒரு யூனிட்டுக்கு ரூ.5.80 மின் கட்டணமாக செலுத்த வேண்டும். இதற்கு வைப்புத்தொகையாக ரூ.1600 இருந்தது. தற்போது, மின்சாரத்தின் அளவு (கிலோ வாட்டில்), எவ்வளவு நேரம், கட்டடம் கட்ட ஆகும் காலம் ஆகியவற்றை பெருக்கி, நிரந்தர கட்டணம் ரூ.4500, மற்றும் பிற கட்டணங்கள் செலுத்த வேண்டும். தற்காலிக இணைப்பில், ஒரு கிலோவாட் அளவுள்ள, மின் இணைப்பு பெற ...

முலாயம் சிங்கிற்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு: விரைவில் முடிவுக்கு கொண்டு வர சி.பி.ஐ., திட்டம்

Posted:

புதுடில்லி: சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங்கிற்கு எதிரான, வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பான வழக்கு விசாரணையில், போதிய ஆதாரங்கள் கிடைக்காததால், விரைவில் முடிக்க, சி.பி.ஐ., முடிவு செய்துள்ளது.இது தொடர்பாக, சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்ததாவது: "முலாயம் சிங்கும், அவரின் குடும்பத்தினரும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளனர். அது பற்றி, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கோரி, வழக்கறிஞர் விஸ்வநாதன் சதுர்வேதி என்பவர், சுப்ரீம் கோர்ட்டில், பொதுநல மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், "முலாயம் சிங் ...

"ரெய்டு' பீதியால் அப்புறப்படுத்தபட்ட பதுக்கல் வெங்காயம்

Posted:

சென்னை: அதிகாரிகள், "ரெய்டு' வரக்கூடும் என்ற தகவல் பரவியதால், சென்னையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, பல டன் வெங்காயம், அவசரமாக அப்புறப்படுத்தப்பட்டது. அதே நேரத்தில், கூடுதல் வெங்காயம் கொள்முதல் செய்து, அரசு மலிவு விலைக்கடைகளில் விற்பனை செய்ய, அரசு முடிவு செய்துள்ளது.கடந்த ஆண்டு ஏற்பட்ட வறட்சி மற்றும் இந்த ஆண்டு பெய்து வரும் மழை காரணமாக, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில், வெங்காய உற்பத்தி பெரிதும் சரிந்துள்ளது.ஏற்றுமதி: நாடு முழுவதும், வெங்காயத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையிலும், ஏற்றுமதியை மத்திய அரசு தடை ...

அரசு சின்னத்தில் கோவில் கோபுரம்: மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

Posted:

சென்னை: "தமிழக அரசின் சின்னத்தில், கோவில் கோபுரம் பொறிக்கப்பட்டிருப்பதால், குறிப்பிட்ட மதத்தை ஊக்குவிப்பதாகக் கூற முடியாது' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், கீழ்மருவத்தூரைச் சேர்ந்த, கண்ணன் கோவிந்தராஜுலு என்பவர் தாக்கல் செய்த மனுவில், "தமிழக அரசு சின்னத்தில், கோவில் கோபுரம் பொறிக்கப்பட்டுள்ளது. இது, இந்து மதத்தின் சின்னம்; இதை மாற்ற வேண்டும். மேலும், தேசியக் கொடியும் அதில் பொறிக்கப்பட்டுள்ளது. இதை சரியான வடிவமைப்பில் பொறிக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது. இம்மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி (பொறுப்பு) அகர்வால், நீதிபதி ...

மணல் குவாரிகளிலும் முறைகேடுகளை தடுக்க அரசு பரிசீலனை

Posted:

சென்னை: தாது மணல் எடுக்க விதிக்கப்பட்ட தடையை தொடர்ந்து, ஆற்று மணல் குவாரிகள் முறைகேடுகளை தடுக்க, அதிரடி நடவடிக்கை எடுப்பது குறித்து, தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. இதன் மூலம் அரசுக்கு ஏற்படும் பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பைத் தடுக்க முடியும் என, தெரிய வந்துள்ளது.தமிழகத்தில், தற்போதைய நிலவரப்படி, 60 இடங்களில் உள்ள குவாரிகள் மட்டுமே சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெற்றுள்ளன. இக்குவாரிகளில், இரண்டு யூனிட் கொண்ட ஒரு லோடு மணலுக்கு, 626 ரூபாய் செலுத்தி ரசீது பெற்று, மணல் எடுத்துச் செல்லலாம் என்பது அரசு விதி. குவாரிகள் பொதுப்பணித் துறை ...

ரசாயன ஆயுதங்களை ஒப்படைக்க ஓராண்டாகும்: சிரியா

Posted:

டமாஸ்கஸ்: ""ரசாயன ஆயுதங்களை ஒப்படைக்க, ஓராண்டுக்கும் மேலாகும்; இதற்கு பல ஆயிரம் கோடி செலவாகும்,'' என, சிரியா அதிபர் பஷர்-அல்-ஆசாத் தெரிவித்து உள்ளார்.சிரியா நாட்டில், அதிபர் பஷர் -அல்-ஆசாத் ஆட்சி நடக்கிறது. பல ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள அவரை, பதவி விலகும்படி, எதிர்க்கட்சியினர், இரண்டரை ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிளர்ச்சியாளர்கள், ராணுவம் மூலம் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும், ஆசாத்தை பதவி விலகும்படி வலியுறுத்தின. ஆனால், ஆசாத் மறுத்துவிட்டதால், கிளர்ச்சியாளர்களுக்கு, ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™