Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


சத்தீஸ்கர் மாநில உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.கே. அக்னிஹோத்ரி சென்னைக்கு மாற்றம்

Posted: 19 Sep 2013 12:59 PM PDT

சத்தீஸ்கர் மாநில உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வரும் சதீஷ்குமார் அக்னிஹோத்ரியை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

இலங்கை கடற்படையினரால் புதுகை மீனவர்கள் 19 பேர் சிறைபிடிப்பு

Posted: 19 Sep 2013 12:56 PM PDT

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 19 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் புதன்கிழமை சிறைபிடிக்கப்பட்டனர்.

மதுபானத்துக்கு சரக்கு-சேவை வரி விதிப்பதில் கருத்தொற்றுமை இல்லை

Posted: 19 Sep 2013 12:55 PM PDT

மத்திய அரசு உத்தேசித்துள்ள சரக்கு, சேவை வரிச் சட்ட வரம்பில் மதுபானத்தை சேர்ப்பது தொடர்பாக தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற அதிகாரமளிக்கப்பட்ட மாநில நிதியமைச்சர்கள் குழுக் கூட்டத்தில் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. இதையடுத்து, குழுவின் கூட்டம் முடிவு எடுக்கப்படாமல் நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கொங்கு மண்டலம் பாசனம் பெற வழிவகுத்த காளிங்கராயனுக்கு சிலை: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

Posted: 19 Sep 2013 12:55 PM PDT

கொங்கு மண்டலம் பாசனம் பெற வழிவகுத்த காளிங்கராயனுக்கு சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். மேலும், அவரது பெயரிலுள்ள அணைக்கட்டுப் பகுதி சுற்றுலாத் தலமாகவும் மாற்றப்படும் என அவர் அறிவித்தார்.

பள்ளிகளில் அறிவியல் மையம் கட்ட ரூ.2 லட்சம் நிதியுதவி

Posted: 19 Sep 2013 12:45 PM PDT

:தூத்துக்குடியில் இரண்டு பள்ளிகளில் அறிவியல் மையம் கட்டுவதற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவியை எம்.எல்.ஏ. சி.த. செல்லப்பாண்டியன் வியாழக்கிழமை வழங்கினார்.

அகத்தியர் கோவிலில் பெளர்ணமி சிறப்பு பூஜை

Posted: 19 Sep 2013 12:45 PM PDT

திருச்செந்தூர் அகத்தியர் கோவிலில் புரட்டாசி மாத பெளர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை

Posted: 19 Sep 2013 12:45 PM PDT

கோவில்பட்டி  மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் வியாழக்கிழமை முதன்முதலாக இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

புளியடி அம்மன் கோவில் திருவிழா இன்று தொடக்கம்

Posted: 19 Sep 2013 12:44 PM PDT

சாத்தான்குளம் புளியடி தேவி ஸ்ரீமாரியம்மன் கோவில் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

பெண்ணை தாக்கிய ஆட்டோ ஓட்டுநர் கைது

Posted: 19 Sep 2013 12:44 PM PDT

கழுகுமலை அருகே முன்விரோதம் காரணமாக, பெண்ணை தாக்கிய ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

நாளை தொடங்கவிருந்த மினிபஸ்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

Posted: 19 Sep 2013 12:44 PM PDT

கோவில்பட்டியில் இம்மாதம் 21-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்ற மினி பஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளின் முடிவு வாபஸ் பெறப்பட்டது.

முஸ்லிம் லீக் மாணவரணி கூட்டம்

Posted: 19 Sep 2013 12:43 PM PDT

காயல்பட்டினத்தில் முஸ்லிம் லீக் மாணவரணியின் ஆலோசனைக் கூட்டம், நகர கிளை அலுவலகத்தில் நடைபெற்றது.

தாது மணல் முறைகேடு: வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தல்

Posted: 19 Sep 2013 12:43 PM PDT

தாது மணல் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் மீனவ ஐக்கிய முன்னணி சார்பில் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

தாது மணல் ஆலையில் இளைஞர் சாவு

Posted: 19 Sep 2013 12:42 PM PDT

தூத்துக்குடி அருகே தாது மணல் ஆலையில் புதன்கிழமை இரவு மர்மமான முறையில் இளைஞர் இறந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்செந்தூரில் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

Posted: 19 Sep 2013 12:42 PM PDT

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.

செப்டம்பர் 21 மின் தடை

Posted: 19 Sep 2013 12:42 PM PDT

தூத்துக்குடி,கோவில்பட்டி மற்றும் ஓட்டப்பிடாரம் பகுதிகளில் சனிக்கிழமை (செப். 21) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

"சாத்தான்குளத்தில் பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மையம் திறக்கப்படும்

Posted: 19 Sep 2013 12:41 PM PDT

சாத்தான்குளத்தில் அடுத்த வாரம் பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். திறக்கப்பட உள்ளதாகவும், இதையடுத்து வங்கிக் கிளை அமைக்கப்பட உள்ளது என பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் அதன் தலைவர் ஏ.எஸ். ஜோசப் தெரிவித்தார்.

அதிசயபுரத்தில் அதிமுக பொதுக்கூட்டம்

Posted: 19 Sep 2013 12:41 PM PDT

சாத்தான்குளம் ஒன்றிய அதிமுக சார்பில்  அண்ணாவின் 105-வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் அதிசயபுரத்தில் நடைபெற்றது.

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகளுக்கு ஆட்சியர் எச்சரிக்கை

Posted: 19 Sep 2013 12:40 PM PDT

தூத்துக்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகளை மாவட்ட ஆட்சியர் ம. ரவிக்குமார் எச்சரித்தார்.

தமிழக அரசின் சாதனை விளக்க துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்

Posted: 19 Sep 2013 12:39 PM PDT

தமிழக அரசின் 2 ஆண்டு சாதனைகள் குறித்த துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் கோவில்பட்டி நகர ஜெயலலிதா பேரவை சார்பில்  நடைபெற்றது.

தைலாபுரம் பரிசுத்த உபகார அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Posted: 19 Sep 2013 12:39 PM PDT

சாத்தான்குளம் அருகேயுள்ள தைலாபுரம் பரிசுத்த உபகார அன்னை ஆலய திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

"நகராட்சிப் பணிகளுக்கு இடைத்தரகர்களை அணுக வேண்டாம்'

Posted: 19 Sep 2013 12:38 PM PDT

கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள பணிகளுக்கு இடைத்தரகர்களை பொதுமக்கள் அணுக வேண்டாம் என கோவில்பட்டி நகராட்சி ஆணையர் சுல்தானா தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் பேரூராட்சிக்கு ரூ.14.5 லட்சம் செலவில் புதிய லாரி

Posted: 19 Sep 2013 12:38 PM PDT

:திருச்செந்தூர் பேரூராட்சி சுகாதாரப் பணிக்காக ரூ.14.5 லட்சம் செலவில் புதிய டிப்பர் லாரி வாங்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு கல்வியும், விழிப்புணர்வும் தேவை

Posted: 19 Sep 2013 12:38 PM PDT

பெண்களுக்கு கல்வியும், விழிப்புணர்வும் அவசியம் தேவை என தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி ஜே. கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

469 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள்

Posted: 19 Sep 2013 12:38 PM PDT

கோவில்பட்டி மற்றும் ஊத்துப்பட்டியில் 469 மாணவர், மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

கடலில் மூழ்கி தொழிலாளி சாவு

Posted: 19 Sep 2013 12:37 PM PDT

:திருச்செந்தூர் கடலில் மூழ்கி கோயம்புத்தூரைச் சேர்ந்த தங்கநகைத் தொழிலாளி இறந்தார்.

காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

Posted: 19 Sep 2013 12:37 PM PDT

கோவில்பட்டியையடுத்த பீக்கிலிபட்டி ஸ்ரீ காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மாற்றுத்திறன் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

Posted: 19 Sep 2013 12:37 PM PDT

ஓட்டப்பிடாரம் மாற்றுத்திறனாளி  குழந்தைகளுக்கான பகல் பாதுகாப்பு மையத்தில் அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மைக் கல்வி அலுவலர் பா.சரோஜா ஆய்வு செய்தார்.

"சாத்தான்குளம் வட்டத்தில் அக்.1 முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்'

Posted: 19 Sep 2013 12:36 PM PDT

சாத்தான்குளம் வட்டத்தில் அக்.1-ம் தேதி முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் குறித்து விண்ணப்பிக்கலாம் என வட்டாட்சியர் பொ.மிகாவேல் ஞானதீபம் தெரிவித்துள்ளார்.

இளம் படகர் சங்கப் பேரவை பிரச்னை: உதகை எம்.எல்.ஏ. புத்தி சந்திரன் கைது

Posted: 19 Sep 2013 12:34 PM PDT

உதகையிலுள்ள இளம் படகர் சங்க நிர்வாகிகள் தொடர்பான பிரச்னையில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை மீறிச் செயல்பட்டதாக சட்டப்பேரவை உறுப்பினர் புத்தி சந்திரன் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

சொத்துக் குவிப்பு வழக்கு: நீதிபதிக்கு பதவி நீட்டிப்பு கோரும் ஜெயலலிதா மனு இன்று விசாரணை

Posted: 19 Sep 2013 12:34 PM PDT

தன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்து வரும் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணாவின் பதவிக் காலத்தை நீட்டிக்கக் கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20) விசாரணை நடைபெறவுள்ளது.

ஊத்தங்கரை அருகே சரக்கு ரயிலில் தீ

Posted: 19 Sep 2013 12:34 PM PDT

: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி அருகே நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரயிலின் 15 பெட்டிகளில் தீப் பற்றியது. ரயில்வே ஊழியர்கள், தீயணைப்புப் படையினர் விரைவாகச் செயல்பட்டதால் 4,625 டன் நிலக்கரி தப்பியது.

சொந்த ஊர் திரும்பிய மீனவர்களுக்கு உற்சாக வரவேற்பு

Posted: 19 Sep 2013 12:33 PM PDT

ஈரான் சிறையிலிருந்து சொந்த ஊருக்கு வியாழக்கிழமை திரும்பிய கன்னியாகுமரி மாவட்டம் ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த 3 மீனவர்களுக்கு உறவினர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

மணலிக்குழிவிளை ஆதிதூதர் குடும்ப பெருவிழா இன்று தொடக்கம்

Posted: 19 Sep 2013 12:33 PM PDT

மணலிக்குழிவிளை ஆதிதூதர் மிக்கேல் ஆலய குடும்ப பெருவிழா வெள்ளிக்கிழமை (செப். 20) கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறுகிறது.

மார்த்தாண்டத்தில் 5 வேன்கள், மினி பஸ் பறிமுதல்

Posted: 19 Sep 2013 12:32 PM PDT

மார்த்தாண்டம் சுற்றுவட்டாரப் பகுதியில் பயணிகளை ஏற்றிச் சென்ற 5 வேன்கள், தடம் மாறி இயக்கப்பட்ட மினி பஸ் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

தேர்வுக் கட்டண உயர்வைக் கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 19 Sep 2013 12:32 PM PDT

தேர்வுக் கட்டண உயர்வைக் கண்டித்து நாகர்கோவிலில் கல்லூரி மாணவர்கள் வியாழக்கிழமை, வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடையல் அருகே தனியார் ரப்பர் தோட்ட மருத்துவமனை முன் தொழிலாளர்கள் முற்றுகை

Posted: 19 Sep 2013 12:32 PM PDT

கடையல் அருகே தனியார் ரப்பர் தோட்டத்தில் தொழிலாளர்களுக்கு உயர் மருத்துவ சிகிச்சை மறுக்கப்பட்டுள்ள நிலையில், தொழிலாளர் துறையினர் தோட்ட நிறுவனங்கள் ஆய்வாளர் பிரச்னைக்குரிய தோட்டத்திலுள்ள மருத்துவமனையை வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.

குமாரகோவில் கோவிலில் கிரிவலம்

Posted: 19 Sep 2013 12:31 PM PDT

குமாரகோவில் வேளிமலை குமாரசுவாமி கோவிலில் பௌர்ணமியை முன்னிட்டு வேல்முருகன் சேவா சங்க பக்தர்கள் சார்பில் வியாழக்கிழமை கிரிவலம் நடைபெற்றது.

புனித வின்சென்ட் பல்லோட்டி பயன்படுத்திய வேதாகமம் நாளை குமரி வருகை

Posted: 19 Sep 2013 12:31 PM PDT

கத்தோலிக்க திருச்சபையில் புரட்சிகரமான சீர்திருத்தங்கள் உருவாக காரணமாக இருந்த, புனித வின்சென்ட் பல்லோட்டி பயன்படுத்திய புனித வேதாகமம் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு சனிக்கிழமை (செப். 21) வருகிறது.

நாகர்கோவிலில் நினைவஞ்சலி

Posted: 19 Sep 2013 12:31 PM PDT

நாகர்கோவிலில் இசைமேதை மீனா கிருஷ்ணமூர்த்திக்கு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

தாது மணல் ஆலையில் இளைஞர் சாவு

Posted: 19 Sep 2013 12:31 PM PDT

தூத்துக்குடி அருகே தாது மணல் ஆலையில் புதன்கிழமை இரவு மர்மமான முறையில் இளைஞர் இறந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

"சிறுபான்மையினருக்கு ரூ. 5 கோடி கடனுதவி வழங்க இலக்கு'

Posted: 19 Sep 2013 12:30 PM PDT

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சிறுபான்மையின மக்களுக்கு நடப்பு நிதியாண்டில் ரூ. 5 கோடி கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு சிறுபான்மையினரின் பொருளாதார மேம்பாட்டுக்

கொல்லங்கோட்டில் அரசு பஸ்களை சிறைப்பிடித்த மாணவர்கள்

Posted: 19 Sep 2013 12:30 PM PDT

கொல்லங்கோட்டில் அரசு பஸ்களை குறிப்பிட்ட நேரங்களில் இயக்க வலியுறுத்தி, கல்லூரி மாணவர்-மாணவிகள் 2 அரசு பஸ்களை வியாழக்கிழமை சிறைப்பிடித்தனர்.

இளைஞர் காங்கிரஸ் சார்பில் விழிப்புணர்வுப் பிரசாரம்

Posted: 19 Sep 2013 12:29 PM PDT

இளைஞர் காங்கிரஸ் சார்பில் உணவுப் பாதுகாப்பு சட்ட மசோதா விழிப்புணர்வு பிரசார வாகனம் வியாழக்கிழமை வந்தவாசி வந்தடைந்தன.

மும்பை பெண் புகைப்பட நிருபர் பாலியல் வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல்

Posted: 19 Sep 2013 12:29 PM PDT

மும்பையில் பெண் புகைப்பட நிருபர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வியாழக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

ஊராட்சி ஒன்றிய அலுவலர்களுக்குப் பயிற்சி

Posted: 19 Sep 2013 12:29 PM PDT

பெரணமல்லூர் மற்றும் செய்யாறு ஊராட்சி ஒன்றிய அலுவலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி புதன்கிழமை அளிக்கப்பட்டது.  

746 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

Posted: 19 Sep 2013 12:29 PM PDT

போளூர் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் வடமாதிமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டியை எம்எல்ஏ ஜெயசுதா வியாழக்கிழமை வழங்கினார் .

பணி வழங்கக் கோரி சாலை மறியல்

Posted: 19 Sep 2013 12:28 PM PDT

சேத்துப்பட்டு ஒன்றியம் ஈயகொளத்தூர் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு பணி தரவில்லை எனக்கூறி பெண்கள் சாலை மறியலில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.

முனுகப்பட்டு அரசுப் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன்

Posted: 19 Sep 2013 12:28 PM PDT

பெரணமல்லூர் வட்ட அளவிலான மகளிர் விளையாட்டுப் போட்டியில் முனுகப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றது.

பால் உற்பத்தியாளர்கள் நிர்வாகிகள் தேர்வு

Posted: 19 Sep 2013 12:28 PM PDT

புதுவாழ்வுத் திட்டம் சார்பில், செங்கம் ஒன்றியத்தில் உள்ள 44 ஊராட்சிகளில் பால் உற்பத்தியாளர்களுக்கான நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

அதிக முறை ரத்த தானம் செய்தவர்கள் ஆளுநர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

Posted: 19 Sep 2013 12:28 PM PDT

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிக முறை ரத்த தானம் செய்தவர்கள் ஆளுநர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்கூட்டம்

Posted: 19 Sep 2013 12:27 PM PDT

ஆரணியை அடுத்த லாடவரம் கிராமத்தில் அண்ணா பிறந்த நாளையொட்டி அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

"மேலை நாடுகளுக்கு இணையாக ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும்

Posted: 19 Sep 2013 12:27 PM PDT

மேலை நாடுகளுக்கு இணையாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் மாணவ-மாணவிகளுக்கு தமிழக முன்

விவசாயப் பணிக்கு அழைத்துச் செல்லப்பட்ட 6 மாணவர்கள் மீட்பு

Posted: 19 Sep 2013 12:27 PM PDT

பருத்திப் பூ பறிப்பதற்காக சின்னசேலம் அழைத்துச் செல்லப்பட்ட 6 மாணவர்கள் வியாழக்கிழமை மீட்கப்பட்டனர்.

மேகாலய உயர் நீதிமன்ற முதல் தலைமை நீதிபதி நியமனம்

Posted: 19 Sep 2013 12:27 PM PDT

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மேகாலய உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பிரபுல்ல சந்திர பந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

பள்ளி மாணவர்களுக்கான ஆளுமைத் திறன் பயிற்சி

Posted: 19 Sep 2013 12:26 PM PDT

திருவண்ணாமலையில் பள்ளி மாணவ-மாணவியர்களுக்கான ஆளுமைத் திறன் பயிற்சி முகாம் நடைபெற்றது. திருவண்ணாமலை மூன்சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில், இன்ட்ராக்ட் கிளப் பள்ளி மாணவ-

விநாயகர் சதுர்த்தி: பணிக்கு வராத 41 காவலர்கள் இடைநீக்கம்

Posted: 19 Sep 2013 12:26 PM PDT

மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழாவின்போது பணிக்கு வராத 41 காவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

மலேசிய எழுத்தாளர்களுக்கு வரவேற்பு

Posted: 19 Sep 2013 12:26 PM PDT

திருவண்ணாமலைக்கு வந்த மலேசிய எழுத்தாளர்களுக்கு கம்பன் தமிழ்ச் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அண்ணா பிறந்த நாள் விழா

Posted: 19 Sep 2013 12:26 PM PDT

திருவண்ணாமலை கன்னிகா பரமேஸ்வரி தொடக்கப் பள்ளியில் அண்ணா பிறந்த நாள் விழா அண்மையில் நடைபெற்றது.

கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம்: பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு

Posted: 19 Sep 2013 12:26 PM PDT

: திருவண்ணாமலை மாவட்டத்தில் இம் மாதம் 4-வது வாரம் முதல் நடைபெறும் கால்நடைகளுக்கான கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம்களுக்கு விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு அழைத்துச் சென்று பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.

காணாமல் போன கோப்புகள்: இரண்டு நாள்களில் சிபிஐ விசாரணை தொடக்கம்

Posted: 19 Sep 2013 12:25 PM PDT

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக மாயமான 150 கோப்புகளில் 18 கோப்புகள் கண்டுபிடிக்க முடியவில்லை என்று மத்திய நிலக்கரித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இரண்டு நாள்களில் முதல்கட்ட விசாரணையை தொடங்கயுள்ளது.

பிகார் வறட்சி நிவாரணத்துக்கு ரூ.12,000 கோடி தேவை

Posted: 19 Sep 2013 12:25 PM PDT

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பிகார் மாநிலத்துக்கு, நிவாரண உதவியாக ரூ.12,000 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

பாஜகவில் மீண்டும் சேரப் போவதில்லை

Posted: 19 Sep 2013 12:23 PM PDT

பாஜகவில் மீண்டும் சேரப் போவதில்லை என்று, கர்நாடக முன்னாள் முதல்வரும், கர்நாடக ஜனதா கட்சித் தலைவருமான எடியூரப்பா தெரிவித்தார்.

ஹைதராபாத் குண்டு வெடிப்பு: நீதிமன்றத்தில் அசதுல்லா ஆஜர்

Posted: 19 Sep 2013 12:22 PM PDT

ஹைதராபாதின் தில்சுக்நகரில் பிப்ரவரி 21ஆம் தேதி நிகழ்ந்த இரட்டை குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில், இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் தலைவர் யாசின் பட்கலின் நெருங்கிய கூட்டாளி அசதுல்லா அக்தர், அங்குள்ள நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார்.

காமன்வெல்த் விளையாட்டு தொடர்பான வரி ஏய்ப்பு விவரத்தை வெளியிட முடியாது

Posted: 19 Sep 2013 12:20 PM PDT

காமன்வெல்த் விளையாட்டு தொடர்பான பணிகளில் ஈடுபட்ட பல்வேறு நிறுவனங்கள் செய்துள்ள வரி ஏய்ப்பு விவரங்களை வெளியிட மத்திய நிதி அமைச்சகம் மறுத்துவிட்டது.

முசாஃபர்நகர் கலவரம்: வழக்கு முடியும்வரை கண்காணிப்போம்

Posted: 19 Sep 2013 12:11 PM PDT

வகுப்புக் கலவரம் நிகழ்ந்த உத்தர பிரதேச மாநிலம் முசாஃபர்நகரின் நிலவரத்தை அதுகுறித்த வழக்கு முடியும்வரை கண்காணிக்கப் போவதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

பாரம்பரியத்தின் அடையாளம் கைவினைப் பொருள்கள்!

Posted: 19 Sep 2013 12:11 PM PDT

நம் நாட்டின் பாரம்பரியத்தின் அடையாளங்களுள் ஒன்றாகக் கைவினைப் பொருள்கள் திகழ்கின்றன என்று தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். 

 நடிகர் பிரவீண்குமார் வஜீர்பூர் தொகுதியில் தேர்தலில் போட்டி

Posted: 19 Sep 2013 12:11 PM PDT

ஹிந்தி மஹாபாரத டி.வி. தொடரில் பீமன் வேடத்தில் நடித்த பிரவீண் குமார், ஆம் ஆத்மி கட்சி சார்பில் தில்லி பிரதேச வஜீர்பூர் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட உள்ளார்.

படிப்பு, பராமரிப்புச் செலவுக்குதந்தையிடம் ரூ.4 கோடிகேட்கும் மகள்கள்

Posted: 19 Sep 2013 12:10 PM PDT

படிப்பு மற்றும் பராமரிப்புச் செலவுக்காக தந்தையிடம் இருந்து ஆண்டுக்கு ரூ.4 கோடி பெற்றுத் தர வேண்டும் என்று அவரது மகள்கள் இருவர் தில்லி பெருநகர நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

விமான நிலைய ஊழியர்களுக்கு மருத்துவ முகாம்

Posted: 19 Sep 2013 12:10 PM PDT

தில்லி விமான நிலையத்தில் வேலை செய்யும் பேருந்து, கார் ஓட்டுநர்கள் உள்ளிட்டவர்களுக்கான மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் 550 பேர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். மேதாந்தா மெடிசிட்டி மருத்துவமனையைச் சேர்ந்த ஏழு மருத்துவர்கள் மற்றும் 21 மருத்துவப் பணியாளர்கள் அடங்கிய குழு அவர்களுக்குச் சிகிச்சை அளித்தது.

விநாயகர் விசர்ஜனம்: யமுனையில் மூழ்கி 13 பேர் பலி

Posted: 19 Sep 2013 12:10 PM PDT

வடக்கு தில்லி வஜிராபாத் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற  விநாயகர் சிலை விசர்ஜனத்தின் போது, யமுனை ஆற்றில் மூழ்கி 13 பேர் இறந்தனர். நீரில் மூழ்கியவர்களைத் தேடும் பணி வியாழக்கிழமையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என

"திறமையானவர்களை உருவாக்கவே திறன் வளர்ப்பு மையம்'

Posted: 19 Sep 2013 12:09 PM PDT

வேலைக்கு திறமையான இளைஞர்களை உருவாக்கும் நோக்கத்தில் திறன் வளர்ப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று தில்லி பிரதேச முதல்வர் ஷீலா தீட்சித் தெரிவித்தார்.

ரூ.93 லட்சம் சம்பளத்துடன் தில்லி மாணவருக்கு வேலை

Posted: 19 Sep 2013 12:09 PM PDT

தில்லி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் நான்காம் ஆண்டு படித்து வரும் ஹிமான்ஷூ ஜிண்டாலுக்கு ஆண்டுக்கு ரூ.93 லட்சம் சம்பளத்துடன் அமெரிக்க நிறுவனம் வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது.

எய்ம்ஸ் மாணவி தற்கொலை

Posted: 19 Sep 2013 12:09 PM PDT

தில்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவி மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

எய்ம்ஸ் கலை விழாவில் பங்கேற்க வந்த மாணவர் மயக்கம்

Posted: 19 Sep 2013 12:08 PM PDT

தில்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் நடைபெறும் மாணவர் கலை விழாவுக்கு வந்த ஜெய்ப்பூர் மருத்துவக் கல்லூரி மாணவர் கல்லூரி ஆடிட்டோரியத்தில் மயங்கிய நிலைய

பூங்காவில் மரங்கள் சாய்ந்த விவகாரம்: மாநகராட்சிக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம்

Posted: 19 Sep 2013 12:08 PM PDT

தில்லி சித்தரஞ்சன் (சி.ஆர்.) பூங்காவில் கான்கிரீட் தளங்களை அகற்றும்போது இரண்டு மரங்கள் வேருடன் சாய்ந்ததற்குக் காரணமாக இருந்த தெற்கு தில்லி மாநகராட்சி நிர்வாகத்துக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

ஷீலா தீட்சித் மீதான புகார் இடைக்காலத் தடை இன்று வரை நீட்டிப்பு

Posted: 19 Sep 2013 12:08 PM PDT

தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட தில்லி நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்திருந்த தில்லி உயர் நீதிமன்றம் அத்தடையை வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20) வரை நீட்டித்துள்ளது.

விவேகானந்தர் சிகாக்கோவில் உரையாற்றிய தின நல்லோட்டம்

Posted: 19 Sep 2013 12:07 PM PDT

சிகாக்கோ மாநாட்டில் விவேகானந்தர் சொற்பொழிவு நிகழ்த்திய தினத்தையொட்டி விவேகானந்தர் 150-வது ஜெயந்திக் குழுவினர் சார்பில் நல்லோட்ட நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

அக்டோபர் 1-ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

Posted: 19 Sep 2013 12:07 PM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் அக்டோபர் 1-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக ஆட்சியர் லி. சித்ரசேனன் அறிவித்துள்ளார்.

டெங்கு கொசுவை ஒழிக்க தனிப்படை: மருத்துவ இணை இயக்குநர் தகவல்

Posted: 19 Sep 2013 12:06 PM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் டெங்கு கொசுவை ஒழிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் டாக்டர் கிருஷ்ணராஜ் தெரிவித்தார்.

கிணற்றில் விழுந்து கூலித் தொழிலாளி தற்கொலை

Posted: 19 Sep 2013 12:06 PM PDT

சின்ன காஞ்சிபுரம் டோல்கேட் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கண்ணன் (42), கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

ரேஷன் கடை நிர்வாகத்தைக் கண்டித்து சாலை மறியல்

Posted: 19 Sep 2013 12:06 PM PDT

மதுராந்தகம் அருகே ரேஷன் கடை நிர்வாகத்தைக் கண்டித்து பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அரசு பஸ் - லாரி மோதல்: 18 பேர் காயம்

Posted: 19 Sep 2013 12:05 PM PDT

காஞ்சிபுரம் அருகே செய்யாறு பாலத்தில் அரசு பஸ்ஸýம், லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 18 பேர் பலத்த காயமடைந்தனர்.

பெட்ரோல் விலை உயர்வு: மார்க்சிஸ்ட் கண்டன ஆர்ப்பாட்டம்

Posted: 19 Sep 2013 12:05 PM PDT

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மதுராந்தகத்தில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம்

Posted: 19 Sep 2013 12:05 PM PDT

குன்றத்தூர் ஒன்றியம், படப்பை பேருந்து நிலையத்தில் ஒன்றிய அதிமுக சார்பில் அண்ணாவின் 105-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம்

Posted: 19 Sep 2013 12:04 PM PDT

புழல் ஒன்றிய அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் செங்குன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பிரம்மக்குமாரிகள் இயக்கத்தினர் சைக்கிள் பேரணி

Posted: 19 Sep 2013 12:03 PM PDT

பிரம்மக்குமாரிகள் இயக்கத்தின் சார்பில் நடைபெறும் சைக்கிள் பேரணி புதன்கிழமை திருத்தணியை வந்தடைந்தது.

திருவள்ளூர் நகராட்சியில் சாலைப் பணிகள்: நகராட்சி அதிகாரிகள் ஆய்வு

Posted: 19 Sep 2013 12:03 PM PDT

திருவள்ளூர் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெறும் சாலைப் பணிகள், மழைநீர் வடிகால் கால்வாய் பணிகள் ஆகியவற்றை நகராட்சி நிர்வாகத்தினர் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.

துப்புரவுப்  பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு ஆணை

Posted: 19 Sep 2013 12:03 PM PDT

வெங்கத்தூர் ஊராட்சியில் பணிபுரிந்த துப்புரவுப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு ஆணை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

முன்னாள் குத்துச்சண்டை வீரர் கென் நார்டன் காலமானார்

Posted: 19 Sep 2013 12:02 PM PDT

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் குத்துச்சண்டை வீரர் கென் நார்டன் புதன்கிழமை காலமானார்.

வேன் - கார் மோதல்: 7 பேர் காயம்

Posted: 19 Sep 2013 12:02 PM PDT

திருவள்ளூர் அருகே வேனும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 7 பேர் பலத்த காயமடைந்தனர்.

தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு:எடைக்கற்கள், தராசுகள் பறிமுதல்

Posted: 19 Sep 2013 12:02 PM PDT

: திருத்தணி நகர் மார்க்கெட் பகுதியில் தொழிலாளர் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை மேற்கொண்ட திடீர் சோதனையில் முறைகேடாக பயன்படுத்தப்பட்ட ஏராளமான எடைக்கற்கள் மற்றும் தராசுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியைக்கு பாராட்டு விழா

Posted: 19 Sep 2013 12:02 PM PDT

அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற கவரப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ரா.சி.சரஸ்வதிக்கு வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

தேர்வுக் கட்டண உயர்வு: கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 19 Sep 2013 12:01 PM PDT

தேர்வுக் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திண்டுக்கல்லில் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜப்பான் ஓபன் பாட்மிண்டன்: காலிறுதியில் பிரணய், ஸ்ரீகாந்த்

Posted: 19 Sep 2013 12:01 PM PDT

ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் போட்டியின் இரண்டாம் சுற்றில் பி.வி.சிந்து தரவரிசையில் பின்தங்கியுள்ள வீராங்கனையிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.

பழனியில் சுவாமி விவேகானந்தர் ஜயந்தியை முன்னிட்டு பெருந்திரள் ஓட்டம்

Posted: 19 Sep 2013 12:01 PM PDT

சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது ஜயந்தி விழாவை முன்னிட்டு, பழனியில் புதன்கிழமை பெருந்திரள் ஓட்டம் மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கொடைக்கானல் கூக்கால் ஏரியில் ரப்பர் படகில் பயணம் செய்யும் சுற்றுலாப் பயணிகள்

Posted: 19 Sep 2013 12:01 PM PDT

கொடைக்கானல் அருகே கூக்கால் ஏரியில்,  ஆபத்தை விளைவிக்கக் கூடிய ரப்பர் படகில் அனுமதியின்றி பயணித்து வரும் சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஸ்டவ் வெடித்து பெண் சாவு

Posted: 19 Sep 2013 12:00 PM PDT

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வடகாடு சுரக்காப்பட்டியைச் சேர்ந்த ஈஸ்வரன் மனைவி செல்வமணி (22). இவர், கடந்த 4 ஆம் தேதி வீட்டில் சமையல் செய்வதற்காக மண்ணெண்ணெய்

கம்பத்தில் ஆட்டோ-ஜீப் மோதல்:3 பெண்கள் படுகாயம்

Posted: 19 Sep 2013 12:00 PM PDT

கம்பத்தில் புதன்கிழமை இரவு ஆட்டோ-ஜீப் நேருக்கு நேர் மோதிய விபத்தில், ஆட்டோவில் பயணம் செய்த 3 பெண்கள் படுகாயமடைந்தனர்.

உலக சாதனைக்காக யோகா செய்த பெண்ணுக்குப் பாராட்டு

Posted: 19 Sep 2013 11:59 AM PDT

ராஜபாளையத்தில் வியாழக்கிழமை சுவாமி விவேகானந்தா யோகா ஸ்கேட்டிங் கழகம் மற்றும் லட்சிய. இளைஞர் அறக்கட்டளை சார்பில் டி.ஞானவாணி என்ற பெண் உலக சாதனைக்காக 20 நிமிடத்தில் 310

பெட்ரோல் பங்க் ஊழியரை கம்பியால் தாக்கிய இளைஞர் கைது

Posted: 19 Sep 2013 11:59 AM PDT

அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் பெட்ரோல் நிரப்பும் நிலையத்திற்கு, அதே பகுதியைச் சேர்ந்த மைதீன் பாட்ஷா என்பவரது மகன் ஹரிமுல்லா சேட்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™