Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


மீண்டும் வெங்காயம் விலை பறக்கிறது: மேலும் உயரும் என்பதால் பதுக்கல் "ஜோர்!'

Posted:

நாடு முழுவதும், வெங்காயம் விலை, நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. நேற்று, பெரு நகரங்களில், ஒரு கிலோ, 80 ரூபாய்க்கு, விற்பனை செய்யப்பட்டது. வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தொடர்ந்து விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் லாபம் சம்பாதிப்பதற்காக, வெங்காயம் பதுக்கலும், அதிகரித்து வருகிறது. ஏற்றுமதிக்கு தடை விதிக்காவிட்டால், விலை மேலும் அதிகரிக்கும் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.மகாராஷ்டிரா மாநிலத்தில் தான், வெங்காயம் அதிக அளவில் பயிர் செய்யப்படுகிறது. இங்கு விளையும், வெங்காயம், ஈரப்பதம் குறைவானது என்பதால், வெளிநாடுகளுக்கு ...

உ.பி.,யில் கலவரத்தை தூண்டியவர்களுக்கு கைது "வாரன்ட்'

Posted:

லக்னோ: உ.பி.,யில், கலவரத்தை தூண்டி விட்டதாக, பகுஜன் சமாஜ் எம்.பி., பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள், காங்., மூத்த தலைவர் உட்பட, அம்மாநில அரசியல்வாதிகள், 16 பேருக்கு எதிராக, கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எந்த நேரத்திலும், இவர்கள் கைது செய்யப்படலாம் என்பதால், அங்கு, மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.பயங்கர கலவரம்:உ.பி.,யில், முதல்வர், அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறது. அங்குள்ள, முசாபர் நகர் மாவட்டத்தில், இரண்டு பிரிவினருக்கு இடையே, சமீபத்தில், கலவரம் ஏற்பட்டது. இதில், 48 பேர் பலியாகினர்; 1,000க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 40 ஆயிரம் பேர், ...

ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கிய ராஜா பிரதமருக்கு கேள்வி

Posted:

""ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நான் எடுத்த ஒவ்வொரு முடிவும், பிரதமரை நேரில் சந்தித்து, அவரது எழுத்துப்பூர்வமான ஒப்புதலை பெற்ற பிறகே, 2007 மற்றும் 2008ம் ஆண்டில் நடந்தது. அதில் முறைகேடு நடந்திருந்தால், ஏன் 2009ல், திரும்பவும், அதே தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையை, பிரதமர், ஒதுக்கினார்,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல், சுப்ரீம் கோர்ட் பார்வையில் விசாரிக்கப்படும் போது, மறுபக்கம் இது குறித்து விசாரிக்கும் பார்லிமென்ட் கூட்டுக்குழு கூட்டம் (ஜே.பி.சி.,) வரும் 23ம் தேதி நடக்கிறது. இதில் ...

நிலக்கரி சுரங்கம் கொடையாக கொடுக்கும் பொருள் அல்ல: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுரை

Posted:

புதுடில்லி : "நிலக்கரி சுரங்கங்கள், இயற்கை வளங்கள். அவை, தனியார் நிறுவனங்களுக்கு கொடையாக கொடுக்கப்படும் பொருட்கள் அல்ல' என, சுப்ரீம் கோர்ட், மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பான வழக்கு விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் நடக்கிறது. நேற்று முன்தினம் நடந்த விசாரணையில்,"நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில், ஏல நடைமுறைகளை பின்பற்றாதது ஏன்' என, மத்திய அரசுக்கு, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த வழக்கின் விசாரணை, நீதிபதி, ஆர்.எம்.லோதா தலைமையிலான," பெஞ்ச்' முன், நேற்றும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய ...

அதிகாரிகள் விமான பயணத்திற்கு கெடுபிடி அரசு எடுத்தது அதிரடி சிக்கன நடவடிக்கை

Posted:

புதுடில்லி : பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, மத்திய அரசு, அதிரடி சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. அரசுத் துறையில், புதிய நியமனங்களுக்கு தடை, திட்டமில்லா செலவுகள், 10 சதவீதம் குறைப்பு உள்ளிட்ட, சிக்கன நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்னைகளால், இந்திய பொருளாதாரம், தள்ளாடத் துவங்கியுள்ளது. "பொருளாதார நிலைமை, விரைவில் சரியாகி விடும்; ரூபாய் மதிப்பு உயரும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன' என, இதுவரை பேசி வந்த மத்திய அரசு, ...

மோடி கூட்டத்தில் மொபைல் போனுக்கு தடை

Posted:

திருச்சியில், இம்மாதம், 26ம் தேதி நடக்கும், பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூட்டத்துக்கு, மொபைல் போன் கொண்டு வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு கருதி, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின், தமிழகத்துக்கு முதல்முறையாக மோடி வருகிறார். திருச்சியில், 26ம் தேதி நடக்கும் தமிழக பா.ஜ., இளம் தாமரை மாநாட்டில், அவர் பங்கேற்கிறார். இதற்கான, ஏற்பாடுகளை பா.ஜ., மேற்கொண்டுள்ளது. தொண்டர்களையும், பொதுமக்களையும் மாநாட்டுக்கு அழைப்பதற்காக, பிரசார பாடல்கள், விளம்பர படம் ஆகியவையும் தயார் ...

10 மாதமாக ஒரே உடையுடன் ஈரான் சிறையில் வாடிய தமிழக மீனவர்கள்

Posted:

சென்னை:""போதிய உணவு, குடிநீர் இல்லாமல், பத்து மாதங்களாக, ஒரே உடையை அணிந்து கொண்டு, சொந்த ஊருக்கு திரும்ப வழி கிடைக்காதா என ஏங்கியபடி, பயங்கரமான கொடுமைகளை அனுபவித்து வந்தோம். எங்களை மீட்க உதவிய, தமிழக முதல்வருக்கு, நன்றிக்கடன் பட்டுள்ளோம்,'' என, ஈரான் சிறையில் இருந்து மீட்கப்பட்ட, 16 மீனவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.ராமநாதபுரம் மாவட்டம், காரன்காடு கிராமத்தை சேர்ந்த ஜெகராஜ், முள்ளிமுனை கிராமத்தை சேர்ந்த மாயாண்டி, முத்துதர்மா; மோர்பண்ணை கிராமத்தை சேர்ந்த ராஜ கருப்பையா, சாகிப்; திருபாலைக்குடி கிராமத்தை சேர்ந்த காளியப்பன், காளி கண்ணதாசன், ...

இன்று, எந்த ஏரியாவோ... என்ன கெட்டப்போ: கோவையில் பெண்கள் பீதி

Posted:

கோவை நகரில், "மப்டி போலீஸ்' எனக்கூறி, பெண்ணை தடுத்து நிறுத்திய இருவர், 9 பவுன் தங்க நகைகளை "லவட்டி' சென்றனர். கொள்ளையர்கள், ஒவ்வொரு நாளும் வெவ்வேறு "கெட்டப்'பில் வந்து, நகை பறித்துச் செல்வதால், பெண்கள் பீதியடைந்துள்ளனர்.கோவை, காந்திபுரம், 5வது வீதியைச் சேர்ந்தவர் தாமோதரன். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி, ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சுப்புலட்சுமி, 68. நேற்று முன்தினம் பகலில் ரத்தினபுரி, இச்சிப்பட்டியிலுள்ள ரேஷன் கடைக்குச் சென்றார். ஆறாவது வீதி விரிவாக்கம் வழியாக சென்றபோது, எதிரே வந்த இரு ஆசாமிகள், தங்களை போலீசார் என, அறிமுகப்படுத்திக் கொண்டனர். ...

அகவிலைப்படி 10 சதவீதம் உயருகிறது : நாளை அறிவிப்பு வெளியாகிறது?

Posted:

புதுடில்லி : மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, 10 சதவீதம் உயர்த்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பு, நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஆண்டுதோறும், ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, நுகர்வோர் விலை குறியீட்டை அடிப்படையாக வைத்து, அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும். கடந்த, ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியிட்டது.இது, ஒவ்வொரு ஊழியரின் அடிப்படை சம்பளத்தை கணக்கிட்டு வழங்கப்படும். இதன்படி, அடிப்படை சம்பளத்தில், 72 சதவீதமாக இருந்த அகவிலைப்படியை, ஜனவரி ...

தெற்கு பெங்களூரில் சரியான போட்டி : நிலேகனியை எதிர்த்து அனில் கும்ளே?

Posted:

பெங்களூரு: வரும், லோக்சபா தேர்தலில், தெற்கு பெங்களூரு தொகுதியில், காங்கிரஸ் சார்பில், "ஆதார் அட்டை' நந்தன் நிலேகனியும், அவரை எதிர்த்து, பா.ஜ., சார்பில், மாஜி கிரிக்கெட் வீரர், அனில் கும்ளேயும் போட்டியிடப் போவதாக, பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.லோக்சபா தேர்தல் : அடுத்தாண்டு, லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. அரசியல் கட்சிகள், தேர்தலுக்காக, இப்போதே தயாராகி வருகின்றன. பா.ஜ., சார்பில், பிரதமர் வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டு உள்ளார். கர்நாடகா மாநிலத்திலும், தேர்தல் ஏற்பாடுகளில், அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™