ஈகரை தமிழ் களஞ்சியம் |
- மனம் திருந்திய மதன் :)
- இம்போர்ட் லைசென்ஸ் சம்பந்தமாக ஒரு உதவி தேவை ?
- திருடனிடமே திருடியது ..... I MEAN சுட்டது .
- சிட்டு குருவி
- இதுதான் வாழ்க்கை
- சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்!
- வியப்பூட்டும் சீனா !
- கருவறையில் தமிழ் – சிறப்பு மாநாடு
- அனுபவமே ஆசான்!
- அறிவுக்கண் திறந்தது!
- தலைவலி: இளமைக்குச் சவால்!
- செம்மொழியாளர் கண்ட செல்லப்பெயர்!
- மகத்துவம் வாய்ந்த மருத்துவக் குறிப்புகள் !
- நாம் நினைப்பது போல அல்ல பழச்சாறுகள் :(
- பாமரன் கேள்வியும் பரமாசாரியார் பதிலும்!
- அழகுக்கு அழகு சேர்க்கும் தக்காளி !
- கவிராயர்கள்
- சதுர்த்தியன்று சந்திரனை பார்க்கக் கூடாது என்பது ஏன்?
- பக்த ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் !
- நிழல் கிரகங்கள் தரும் நன்மைகள் என்ன?
- மின்சாரத்தை சேமிக்கும் வழிகள் !
- குடும்பத்தோடு ஒன்றி வாழுங்கள் !
- சைபர் பாதுகாப்பு நிபுணரின் செல்போனை முடக்கி அதிநவீன ஆன்லைன் திருட்டு
- "ஊசி போடுவது எங்கள் வேலையல்ல' பயிற்சி டாக்டர்கள் போராட்டம்
- புற்று நோய் வேண்டுமா?பாஸ் புட் சாப்பிடுங்க
- சதாசிவம் அவர்களோடு கருத்துச் சண்டை
- இளையராஜாவின் கீதாஞ்சலி ஆல்பத்தின் தரவிறக்கம்உதவி தேவை
- போலீசாருக்கு பயந்து ஊரை காலி செய்த கிராமத்தினர்: மலை அடிவாரத்தில் தங்கினர்
- கணினி தொடர்பான செய்முறை விளக்க புத்தங்கள் மின் நூல் வடிவில் (தமிழ் மற்றும் ஆங்கிலம் )
- கருணாநிதி குடும்பத்து சொத்து மதிப்பு - மயக்கமே வருகிறது..!
- பெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா?
- சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூவின் 90 வது பிறந்தநாள் - இங்கிலாந்து ராணி வாழ்த்து
- சிறுநீர் கழித்த பின் எரிச்சல், என்ன தீர்வு?
- தமிழில் 12 கம்ப்யூட்டர் புத்தகம் PDF வடிவில்
- சிவகங்கை வியான்னி அருள்பணி மையத்தில் 133 மணி நேரம் பைபிள் தொடர் வாசிப்பு
- தெளிவாக ஆங்கிலம் பேச உதவும் இணையதளம்
- எம் மொழி பேசும் பிற இனத்தவர்கள் காணொளிகள்
| Posted: 18 Sep 2013 11:19 AM PDT வீட்டுக்குள் தயங்கித் தயங்கி பூனை போல அக்கம் பக்கம் நோட்டம் விட்டபடி உள்ளே நுழைந்து புத்தகப் பையை ஒரு மூலையில் வைத்தான் மதன். பையின் அடியில் இருந்த டிஃபன் பாக்ஸ் சப்தம் கேட்டு சமையல் அறையிலிருந்து "வந்துட்டியா மதன்' என்று கேட்டுக்கொண்டே வெளியே வந்தாள் மதனின் அம்மா அமுதா. நம்ம வந்தது அம்மாவுக்கு எப்படித் தெரிந்தது என்று பிரமித்தான் மதன். ஆனால், தன் பிள்ளைகளின் ஒவ்வொரு அசைவையும் தாய் நன்கறிவாள்; அவளை ஏமாற்றவே முடியாது என்பதை அவன் அறியவில்லை. ஆனால் சில நாள்களாக மதன், தன் தாயை ஏமாற்றி வருவதை ... |
| இம்போர்ட் லைசென்ஸ் சம்பந்தமாக ஒரு உதவி தேவை ? Posted: 18 Sep 2013 11:17 AM PDT உறவுகளே ஒரு சின்ன சந்தேகம் வெளி நாட்டில் இருந்து இறக்குமதி செய்ய லைசென்ஸ் எடுக்க என்னவெல்லாம் தேவை ? எப்படி லைசென்ஸ் எடுப்பது என்பது போன்ற விரிவான விளக்கம் தேவை ? உதவுங்கள் உறவுகளே |
| திருடனிடமே திருடியது ..... I MEAN சுட்டது . Posted: 18 Sep 2013 11:10 AM PDT # # திருடனிடமே திருடியது ..... I MEAN சுட்டது . வெள்ளையனே? எங்க ஆளுக பேரை வைத்துதான் உலகமே இயங்குதா .....தமிழன்.... டா...! Doctor -- வைத்தியநாதன் Dentist -- பல்லவன் Lawyer -- கேசவன் Financier -- தனசேகரன் Cardiologist -- இருதயராஜ் Pediatrist -- குழந்தைசாமி Psychiatrist -- மனோ Sex Therapist -- காமதேவன் Marriage Counselor -- கல்யாண சுந்தரம் Ophthalmologist--கண்ணாயிரம் ENT Specialist -- நீலகண்டன் Diabetologist -- சக்கரபாணி Nutritionist -- ஆரோக்கியசாமி Hypnotist ... |
| Posted: 18 Sep 2013 10:13 AM PDT சிட்டு குருவி என் வீட்டு முற்றத்தில் உன் வீட்டை கட்டினாயே, எப்பொழுதும் துணையுடன் சுற்றி சுற்றி வந்தாயே ! உன்னால் ஒரு உயிரை கருவாக சுமக்க முடியாதென்று உதிரத்தை முட்டையாக்கி உண்டாக்கினாய் உயிரிரண்டை !! என்நேரம் நான் உண்டாலும் உனக்கும் ஒரு பங்கு வைத்துதானே நான் உண்பேன் சோறுதனை!! சோகமாய் நான் வந்தால் உன் கீட்சு குரலில் சொல்லிடுவாய் ஆறுதலை உன்னை விட சொந்தம் எனக்காருமில்லை !! இனிமையாய் போனதம்மா ஈறைந்து மாதங்கள், பாலாய்ப்போன பாம்பொன்று விட்டத்திலேறி உன்னை கடிக்காதவரை!! சிதறிப்போய் ... |
| Posted: 18 Sep 2013 09:37 AM PDT இதுதான் வாழ்க்கை வீட்டில் தங்கையின் கூந்தல் பூவுக்காய் தவம் கிடக்க அண்ணன் வாங்கி வந்து தருவாநென தங்கையவள் காத்துக் கிடக்க - நானோ பெண்ணே உனக்கு பூக்கடையையே தலையில் வைத்து பூரிக்கிறேன் - இது காதலாம் !! பேப்பர் படிக்க முடியாமல் தவிக்கிறார் அன்பான என் அப்பா அவர் கண்களுக்கு புதிய பார்வை தராமல் நீ தலைவலி என்றதும் கண்ணாடி மாட்டிவிட்டு அழகு பார்க்கிறேன் - இது காதலாம் !! மகனுக்கு அரசாங்க வேலை வேண்டும் என்று அம்மனுக்கு விரதமிருந்து தன் உடல் இளைக்கிறாள் என் மானசீக ... |
| சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்! Posted: 18 Sep 2013 09:10 AM PDT அது ஓர் அழகிய அடர்ந்த காடு. அந்தக் காட்டில் தேக்கு, தோதகத்தி, மா, பலா என பலவகையான மரங்கள் வளர்ந்திருந்தன. அந்தக் காட்டைப் பார்க்கும்பொழுது பச்சைப் புல்வெளிகள் நிறைந்து பச்சைக் கம்பளம் விரித்தது போல அழகாக இருந்தது. அங்கிருந்த மாமரங்களும் புளிய மரங்களும் மற்றும் பலவகையான மரங்களும் அதன் கிளைகளும் கொப்புகளும் ஏராளமான இலைகளுடன் பரந்து விரிந்த நிழலை கொடுத்துக் கொண்டு நின்றிருந்தன. அந்தக் காட்டில் எல்லாவகையான மிருகங்களும் வாழ்ந்து வந்தன. அந்தக் காட்டை சிங்க ராஜா நன்றாக ஆட்சி செய்து வந்தார். ... |
| Posted: 18 Sep 2013 08:33 AM PDT சீனாவைப் பற்றிய தகவல்கள் நம்மை வியக்கவைக்கின்றன. ஆதிகாலத்திலிருந்தே அவர்கள் புதிய கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர்களாக இருந்திருக்கிறார்கள். அவைகளில் சிலவற்றைப் பார்ப்போம்: காற்றாடி: இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஹூவான் ஹெங் என்ற அரசன் சீனாவை ஆண்டுவந்தான். அவன் ஒருநாள் சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது அவன் தலையில் அணிந்திருந்த பட்டுத்தொப்பி காற்றில் பறந்து சென்றது. அப்பொழுது அதன் நுனியில் ஒரு பட்டு நூல் கட்டப்பட்டிருந்தது. தொப்பியைப் பிடிக்க அந்த நூலை இழுத்தான். தொப்பி காற்றில் அழகாக ... |
| கருவறையில் தமிழ் – சிறப்பு மாநாடு Posted: 18 Sep 2013 08:31 AM PDT வருகிற ஞாயிற்றுக்கிழமை (22 செப்டம்பர் 2013) தமிழ் மறுமலர்ச்சி சங்கம் 'கருவறையில் தமிழ்: அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்' என்ற தலைப்பில் சிறப்பு மாநாடு ஒன்றை நடத்துகின்றது. அறிவிற் சிறந்த சான்றோர்கள் பலர் இதில் கலந்து கொள்கின்றனர். அனுமதி இலவசம். நிகழ்ச்சி நிரல்: நாள்: 22.09.2013 ஞாயிறு நேரம்: காலை 10 முதல் மாலை 5 மணிவரை இடம்: கப்பல் சிப்பந்திகள் மையம், (ரிசர்வ் வங்கி எதிரில், இராஜாஜி சாலை, சென்னை-1. முதல் அமர்வு – காலை 10 மணி – 1.30 மணி வரவேற்புரை : திரு. சு.கிருபானந்தசாமி தலைமை ... |
| Posted: 18 Sep 2013 08:14 AM PDT ஓர் இளைஞன் பாலைவனம் ஒன்றைக் கடக்க எண்ணி, தன்னைப் போன்ற மன உறுதிமிக்க நண்பர்கள் பலரைத் துணைக்கு அழைத்துக் கொண்டான். அவர்களிடம், ""நம்மோடு முதியவர்கள் யாரும் வரக்கூடாது. அவர்களது உதவியும் தேவையில்லை'' என்று கூறிப் பயணத்தைத் தொடங்கினான். அவரவரும் தமக்குத் தேவையான பொருட்களைச் சுமந்துகொண்டு அவனோடு சென்றனர். பல நாட்களாகப் பயணம் செய்த பின்பும் பாலைவனத்தைக் கடந்து செழிப்பான இடத்துக்கு அவர்களால் வர இயலவில்லை. இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்றும் அவர்களுக்குத் தெரியவில்லை. கொண்டு வந்த உணவும் ... |
| Posted: 18 Sep 2013 08:13 AM PDT ஒரு நாட்டில் துறவி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவரை மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து வணங்கிச் சென்று கொண்டிருந்தனர். துறவிக்குக் கிடைத்துக் கொண்டிருந்த மரியாதையைக் கண்டு அந்நாட்டு படைத் தளபதிக்குப் பொறுக்கவில்லை. ஒருநாள் மாலை நேரம். துறவியைச் சந்தித்த அவன் தன் உள்ளக்குமுறலை அவரிடம் கொட்டினான். ""நாட்டு மக்கள் உமக்கு அதிக அளவில் மதிப்புத் தருகிறார்களே... இது நியாயமா?'' என்று கேட்டான். புன்முறுவல் பூத்த துறவி, அவனைத் தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கே ரோஜா உட்பட பலவகையான வண்ணப்பூக்கள் ... |
| Posted: 18 Sep 2013 08:11 AM PDT வாழ்நாளில் தலைவலியை எப்போதாவது ஒரு சமயம் அனுபவித்திருக்காதவர் இருக்கவே முடியாது. தலைவலிக்குப் பெரும்பாலும் பரபரப்புத் தன்மையே காரணம். ஒருவர் இளமைக் காலத்தில், 20 முதல் 40 வயது வரை பரபரப்புடன் செயல்படுவதால் அக் காலகட்டங்களில் தலைவலி வருவது இயல்பாக உள்ளது. முதுமையில் தலைவலியின் தாக்கம் குறையத் தொடங்கி விடும். வலி தலையில்தான் என்றாலும்கூட கண் கோளாறால் ஏற்படும் சாதாரண தலைவலி உள்பட ஒற்றைத் தலைவலி வரை அறிகுறிகள் வேறுபடும். தலைவலியைப் பொருத்தவரை அது வந்துபோகும் கால அளவு கருத்தில் கொள்ளப்பட வேண்டிய ... |
| செம்மொழியாளர் கண்ட செல்லப்பெயர்! Posted: 18 Sep 2013 08:02 AM PDT 'சிவம்' என்பது தமிழுக்கு மிகவும் ஏற்புடையதொரு சொல். சிவப்பு என்பதன் முதல்நிலை 'சிவ'. மாசுக்களைச் சுட்டெரித்துத் தூய்மையாக்குவது நெருப்பு. அதன் நிறம் சிவப்பு. நவமணிகளுள் பெருமையுடன் இன்பமும் பயப்பது பவளம். அதன் நிறம் சிவப்பு. மலர்களுள் சிறந்து தாமரை. அதற்கு அழகு தரும் நிறம் சிவப்பு. நம் உடம்பு முழுவதும் ஓடி நமக்கு ஆற்றலைத் தருவது குருதி. அதன் நிறம் சிவப்பு. வாழ்வில் மங்கலத்தை உணர்த்துகிற சொல்லும் சிவப்பு. 'சிவப்பும் கறுப்பும் வெகுளிப்பொருள்' என்பார் தொல்காப்பியர். முரண்பாடுகளைக் காணும்போது ... |
| மகத்துவம் வாய்ந்த மருத்துவக் குறிப்புகள் ! Posted: 18 Sep 2013 08:01 AM PDT * மாதுளம் பழத்தை பிழிந்து கற்கண்டு சேர்த்து பருகி வர உடல் வெப்பம் தணிந்து குளிர்ச்சி உண்டாகும். * பாகற்காயைச் சமைத்துச் சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். * வயிற்று வலி குணமாக சீரகத்தை வறுத்து பொடி செய்து மோரில் கலந்து சாப்பிட குணமாகும். * முட்டை கோஸ் சாற்றை முகத்தில் தடவி வர முகச்சுருக்கம் மறையும். * அத்திப் பழத்தை உலர்த்தி பொடி செய்து 1 ஸ்பூன் காலை, மாலை பாலில் உட்கொண்டு வந்தால் இதயம் வலுவாகும். இரத்தம் ஊறும். * ஓமத்தை நீர்விட்டு அரைத்துக் களி போல் கிளறி இளஞ்சூட்டில், ... |
| நாம் நினைப்பது போல அல்ல பழச்சாறுகள் :( Posted: 18 Sep 2013 07:57 AM PDT பழச்சாறு.. உடலுக்கு மிகவும் நல்ல உணவு வகையில் முதலிடத்தில் இருப்பது. மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் சரி, அதிக நாள் சாப்பிடாமல் இருப்பவர்களுக்கும் சரி முதலில் கொடுப்பது பழச்சாறு தான். மேலும், வீட்டில் இருக்கும் நோயாளிகளுக்கும் நாம் அடிக்கடி பழச்சாறு கலந்து கொடுத்து வருவோம். பழச்சாறு என்பது உடலுக்கு மிகவும் நல்லது. அதனால் உடலுக்கு மிக அதிக நன்மை கிடைக்கும் என்று நாம் நினைக்கிறோம். ஆனால், பழச்சாறு என்பது நாம் நினைப்பது போல மிகவும் நல்ல உணவாக இல்லாமல், அதில் சில குறைபாடுகளும் ... |
| பாமரன் கேள்வியும் பரமாசாரியார் பதிலும்! Posted: 18 Sep 2013 07:52 AM PDT கர்மானுஷ்டானமும் பக்தி யோகமும் என்பதில், பாமரர்களாகிய நமக்கு இருக்கும் ஐயங்களை காஞ்சி ஸ்ரீமகாபெரியவர் தனக்கே உரிய விதத்தில் தீர்த்த அனுபவ பதில் இது... ------------------------------------------------ ? இந்த வர்த்தக உலகில் தமக்குத்தாமே நல்லது செய்து கொள்ளத்தானே இந்த அளவுக்கு உழைத்து சம்பாதிக்கிறார்கள். அதற்கே நேரம் போதாமல் பரபரப்பாகச் சுற்ற வேண்டியிருக்கிறதே. * மற்றவர்களுக்குச் சேவை புரிவதற்காக நாம் எத்தனையோ கஷ்டங்களை, தியாகங்களை, உடல் சிரமத்தை எல்லாம் அடைந்தாலும் இதற்கெல்லாம் மேலாக ... |
| அழகுக்கு அழகு சேர்க்கும் தக்காளி ! Posted: 18 Sep 2013 07:50 AM PDT பொதுவாக தக்காளி அனைத்து வீடுகளிலும் சமையலறையில் பயன்படுத்தும் பொருள். பெண்களின் அழகை கூட்டுவதில் தக்காளி முக்கிய பங்கு வகிக்கின்றது. பெண்கள் தங்களை அழகுப் படுத்திக் கொள்ள பியூட்டி பார்லருக்கு செல்வதை விட வீட்டில் இருக்கும் சில எளிய பொருட்களை வைத்து நம்மை அழகுப்படுத்தி கொள்ளலாம். * தக்காளியை தோல் மற்றும் விதைகள் நீக்கி கூழாக்குங்கள். ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை முகத்தில் தடவுங்கள். அதன் மேல் இந்த கூழைத் தடவி பத்து நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் இருமுறை இவ்வாறு செய்தால் ஒட்டிய கன்னங்கள் ... |
| Posted: 18 Sep 2013 07:31 AM PDT நமச்சிவாயக் கவிராயர் இவர் பாவநாசம் அருகில் உள்ள விக்கிரமசிங்கபுரத்தில் பிறந்தவர். மாதவ சிவஞான யோகியின் தந்தையாகிய ஆனந்தக்கூத்தரின் உடன்பிறந்தவர். பாவநாசம் உலகம்மை மீது பேரன்பு கொண்டு நாள்தோறும் வழிபட்டு வந்தவர். ஒருமுறை உலகம்மை அவருடைய மகளாக வந்து உணவு படைத்தாளாம். கவிராயர், நோய்வாய்ப்பட்டு தன் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றபோது, உலகம்மை தடுத்து அருள்புரிந்தார் என்றும் கூறுவர். இவர், உலகம்மை பிள்ளைத்தமிழ், உலகம்மை கலித்துறை அந்தாதி, கொச்சகக் கலிப்பா, சந்தவிருத்தம், சிங்கை சிலேடை வெண்பா முதலிய ... |
| சதுர்த்தியன்று சந்திரனை பார்க்கக் கூடாது என்பது ஏன்? Posted: 18 Sep 2013 07:13 AM PDT பொதுவாக அமாவாசையில் இருந்து மூன்றாவது நாள் மூன்றாம் பிறையைப் பார்க்க ஆவலோடு இருக்கும் நாம், நான்காம் நாள் சந்திரனைப் பார்த்துவிட்டு ஐயோ பார்த்து விட்டோமே என்று புலம்புவோம். நான்காம் நாள் சந்திரனை பார்த்துவிட்டால் ஞாபக மறதி ஏற்படும் என்று முன்னோர்கள் நம்மிடம் கூறி வைத்திருப்பதும் இதற்கு ஒரு காரணம். சரி, இது பற்றி புராணங்கள் என்ன கூறுகின்றன என்று பார்த்தால், விநாயகருக்கு உகந்ததான சதுர்த்தி அன்று சந்திரனை பார்த்தல் கூடாது என்கிறது புராணக் கதைகள். அதாவது, ஆண்டில் விநாயகர் சதுர்த்தி அன்று ... |
| பக்த ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் ! Posted: 18 Sep 2013 06:49 AM PDT சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் பக்த ஆஞ்சநேயர். ஒரகடத்தை அடுத்த காரணித்தாங்கல் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட கிருஷ்ணர் மற்றும் பக்த ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. குன்றத்தூர் ஒன்றியம், வைப்பூர் ஊராட்சிக்குட்பட்டது காரணித்தாங்கல் கிராமம். இக்கிராமத்தில் புதிதாக கிருஷ்ணர் மற்றும் பக்த ஆஞ்சநேயர் கோயில் கட்டப்பட்டது. இப் புதிய கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. சனிக்கிழமை கோபூஜையுடன் கும்பாபிஷேகத்தை நடத்தினர். கணபதி ஹோமம், முதல் ... |
| நிழல் கிரகங்கள் தரும் நன்மைகள் என்ன? Posted: 18 Sep 2013 06:47 AM PDT பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட அமுதத்தை, தேவர்கள் ஒரு பக்கமும் அசுரர்கள் ஒரு பக்கமுமாக அமர்ந்திருக்க, மகாவிஷ்ணு மோகினி வடிவில் வந்து பங்கிட்டார். அப்போது, அசுரர்கள் எல்லாம் அப்படியே மோகினியின் அழகில் மயங்கிக் கிடந்தார்கள். தேவர்களும் மோகினியின் அழகில் மயங்கத்தான் செய்தார்கள்; ஆனால், உடனேயே தங்கள் மனதை நிலை நிறுத்திக்கொண்டு, அமுதத்தைப் பெறுவதிலே அறிவைச் செலுத்தினார்கள். அசுரர்களின் எண்ணப்படியே, ஏக்கப்படியே மோகினியின் நடமாட்டம் அவர்கள் பக்கமே இருந்தது. அதேசமயம் தேவர்களின் எண்ணப்படி, அவர்களுக்கு ... |
| மின்சாரத்தை சேமிக்கும் வழிகள் ! Posted: 18 Sep 2013 06:43 AM PDT ஒரு யூனிட் மின்சாரத்தை சேமிப்பது இரண்டு யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு சமம் என்று கூறப்படுகிறது. இதனை கருத்தில் வைத்து நமது வீட்டில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதால் நமக்கென்ன பலன் என்று நினைக்கலாம். நிச்சயமாக உள்ளது. உங்கள் வீட்டு மின் கட்டணம் குறைவாக வரும், மேலும், உங்கள் வருங்காலத்துக்கு மின் தடையற்ற சூழலை ஏற்படுத்திக் கொடுக்கலாம். இதற்கு வீட்டில் நாம் செய்ய வேண்டிய சில விஷயங்கள் என்னவென்று பார்க்கலாம். வீட்டில் தேவையற்ற ... |
| குடும்பத்தோடு ஒன்றி வாழுங்கள் ! Posted: 18 Sep 2013 06:39 AM PDT பிள்ளைகள் தற்போதெல்லாம் நன்கு படித்துவிட்டு நல்ல வேலைக்கு சென்றதுமே குடும்பத்தில் இருந்து சற்று விலகி வாழ ஆரம்பித்து விடுகிறார்கள். சில பிள்ளைகள் தங்களது உண்மையான சம்பளம் எவ்வளவு என்று கூட பெற்றோரிடம் சொல்லாமல் மறைத்து விடுகின்றனர். பிள்ளைகள் பிறந்தது முதல் வளர்த்து படிக்க வைத்து நல்ல பணியில் சேரும் வரை அனைத்து செலவுகளையும் பெற்றோர் பார்த்து பார்த்து செய்யும் போது, அவர்களது உண்மையான சம்பளம் என்ன என்று சில பெற்றோர் அவர்களது நண்பர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள நேரிடுகிறது. இது, கூட்டுக் ... |
| சைபர் பாதுகாப்பு நிபுணரின் செல்போனை முடக்கி அதிநவீன ஆன்லைன் திருட்டு Posted: 18 Sep 2013 06:37 AM PDT தேசிய சைபர் பாதுகாப்பு ஆலோசனை மையத்தின் உறுப்பினராக இருப்பவர் சஞ்சய் கோவிந்த் தாண்டே(65). இவர் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி கணக்கில் இருந்து கில்லாடி நபர்கள், ஆன்லைன் மூலம் 4 நாளில் ரூ.19 லட்சத்து ஆயிரத்து 73 ரூபாயை சுரண்டி பொருட்கள் வாங்கியுள்ளனர். ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடும்போது, உடனுக்குடன் வாடிக்கையாளரின் செல்போன் எண்ணுக்கு தகவல் வரும். இதனால் தாண்டேவின் செல்போன் எண்ணையும் முடக்கியுள்ளனர். தாண்டே வங்கி கணக்கில் இருந்து குறுகிய இடைவெளியில் அதிக பணம், டிரான்ஸ்வர் ஆவதை கண்டறிந்த வங்கி அதிகாரிகள், ... |
| "ஊசி போடுவது எங்கள் வேலையல்ல' பயிற்சி டாக்டர்கள் போராட்டம் Posted: 18 Sep 2013 06:28 AM PDT சென்னை:"ஊசி போடுவது எங்கள் வேலையல்ல; அரசு உத்தரவுப்படி, அதற்கு ஒப்பந்த ஆட்களை நியமிக்க வேண்டும்' என கோரி, சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், பயிற்சி டாக்டர்கள், பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். "ஊசி போடுதல், ரத்தம் எடுத்தல் போன்ற பணிகள், எங்கள் வேலையல்ல; 36 மணி நேர வேலையை, "ஷிப்டு' முறைக்கு மாற்ற வேண்டும்' என கோரி, மாநிலம் முழுவதும், பயிற்சி டாக்டர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, சுகாதார துறை செயலர் உத்தரவுப்படி, ஊசி போடுதல் போன்ற பணிகளிலிருந்து, அவர்கள் விடுவிக்கப்பட்டனர். சென்னை ... |
| புற்று நோய் வேண்டுமா?பாஸ் புட் சாப்பிடுங்க Posted: 18 Sep 2013 06:00 AM PDT உணவு பழக்க வழக்கத்தைப் பற்றி கோவை என்.ஜி.மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் லேபராஸ்கோபி மற்றும் எண்டோஸ்கோபி நிபுணர் டர்கடர்.மனோகரன் விளக்கமளிக்கிறார். உணவே மருந்து...மருந்தே உணவு... என்ற பழமொழிக்கேற்ப சிறந்த உணவே நமக்கு மருந்தாக அமையும். அதே நேரத்தில், அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கேற்ப எந்த உணவையும் அளவோடு எடுத்து கொண்டால் நல்லது. அளவை மீறும் போது அது நமக்கே பல ஆபத்துக்களை விளைவிப்பதுண்டு. இந்த அவசர நாகரீக உலகத்தில் அனைவரும் அவசரத்தை நோக்கியே பயணம் செய்து கொண்டிருக்கிறோம். ... |
| சதாசிவம் அவர்களோடு கருத்துச் சண்டை Posted: 18 Sep 2013 05:56 AM PDT http://www.eegarai.net/t96244-topic சும்மா பின்னோக்கிப் பார்த்த போது இது தட்டுப்பட்டுச்சு நல்லவேளை. நான் வந்த புதுசு அவர் யாருன்னு தெரியாம கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டேனோ (நல்லவேளை பிளோக் பண்ணால) |
| இளையராஜாவின் கீதாஞ்சலி ஆல்பத்தின் தரவிறக்கம்உதவி தேவை Posted: 18 Sep 2013 05:55 AM PDT என் தோழியின் இசை ஆய்வுக்காக இளையராஜாவின் கீதாஞ்சலி ஆல்பத்தின் தரவிறக்கம் தேவை படுகிறதாம். உறவுகள் யாரிடமாச்சும் இருந்தா தாங்கப்பா. என்னடா இவ வரதே இல்லை. ஆனா தரவிறக்கம் மட்டும் கேக்குறாளே ன்னு நினைக்காதீங்க. என் நிலைமை அப்படி. நான் லாகின் செய்யலை என்றாலும் ஈகரையோடு இணைந்துதான் இருக்கேன். நன்றி . |
| போலீசாருக்கு பயந்து ஊரை காலி செய்த கிராமத்தினர்: மலை அடிவாரத்தில் தங்கினர் Posted: 18 Sep 2013 05:49 AM PDT தேனி: தேனி அருகே போலீசுக்கு பயந்து, ஊரை காலி செய்த கிராம மக்கள் 100 பேர், மலை அடிவாரத்தில் தங்கினர். தேனி அருகே, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் வசிக்கும் திருச்செந்தூர் கிராமத்தில், கடந்த ஏப்ரல் மாதம் பொங்கல் விழா நடந்தது. அப்போது இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டு, தொடர்ந்து மோதிக்கொண்டனர். பழனி செட்டிபட்டி போலீசில், மாறி, மாறி புகார் செய்துள்ளனர். போடி தாலுகா அலுவலகத்தில் அமைதி பேச்சு வார்த்தை நடந்தது. இந்நிலையில், கடந்த செப்.,8ல், இரு தரப்பினரும் மீண்டும் மோதிக் கொண்டு, போலீசில் புகார் ... |
| கணினி தொடர்பான செய்முறை விளக்க புத்தங்கள் மின் நூல் வடிவில் (தமிழ் மற்றும் ஆங்கிலம் ) Posted: 18 Sep 2013 05:45 AM PDT 1-9-2013-மொபைல் உலகம் தமிழ் தொழில் நுட்ப இதழ் http://www.mediafire.com/download/3jl28svv4vydcyu/Mobile+Ulagam1913%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 12September13-Micro Mart Technology Magazine Free download http://www65.zippyshare.com/v/35123604/file.html Sep 2013-Computer active india Pdf Magazine free download http://www19.zippyshare.com/v/95455394/file.html OCTOBER -2013-WINDOWS 7 HELP & ADVICE MAGAZINE http://www34.zippyshare.com/v/75151645/file.html 1-9-2013-இன்டர்நெட் ... |
| கருணாநிதி குடும்பத்து சொத்து மதிப்பு - மயக்கமே வருகிறது..! Posted: 18 Sep 2013 05:45 AM PDT திமுக அடிமைகளே... இதயம் பலகீனமாக உள்ளவர்கள் மற்றும் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தயவுசெய்து இதை படிக்கவேண்டாம்.. கருணாநிதி குடும்பத்து சொத்து மதிப்பு - மயக்கமே வருகிறது..! கருணாநிதியின் குடும்பத்துக்கு இருக்கும் சொத்துப் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது, டெல்லியில் இருந்து வெளிவரும் 'த அதர் சைடு' என்ற ஆங்கில மாத இதழ். இது ஏதோ, கருணாநிதிக்கு வேண்டாத அரசியல் எதிரிகள் நடத்தும் பத்திரிகை இல்லை. 'எனது நண்பர்... எமர்ஜென்ஸி கொடுமைகளை ஒன்றாகச் சேர்ந்தே எதிர்த்தோம்!' என்று கருணாநிதியால் வாஞ்சையாகப் ... |
| பெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா? Posted: 18 Sep 2013 05:44 AM PDT பெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா? 16 வயது… பெண்களுக்கு ஒருவிதமான மனரீதியான ரசாயன மாற்றத்தை கொடுக்க கூடிய ரெண்டும் கெட்டான் வயது, நல்லதும் தெரியாது, கெட்டதும் புரியாது என்பார்கள்.. வெழுத்ததெல்லாம் பால் மின்னுவதெல்லாம் பொன் என்று நினைத்து விடுகிறார்கள். இந்த வயதுடைய பள்ளிக்கு செல்லும் மாணவிகள் சிலர் விளக்கில் விழுந்த விட்டில் பூச்சிகளாய் காதல் வலையில் விழுந்து வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள். ஓரக்கண்ணால் பார்த்து… தயங்கி தயங்கி பேசி ... |
| சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூவின் 90 வது பிறந்தநாள் - இங்கிலாந்து ராணி வாழ்த்து Posted: 18 Sep 2013 05:29 AM PDT கடந்த ஞாயிற்றுக்கிழமை முன்னாள் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் இயூவின் 90 வது பிறந்தநாளையொட்டி இங்கிலாந்து ராணி எலிசபெத் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து சிங்கப்பூர் வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ராணி எலிசபெத் அவர்களின் வாழ்த்து இரு நாட்டு மூத்த தலைவர்களின் ஆழமான நட்பையும், பாசத்தையும் காட்டுகிறது. அதோடு சிங்கப்பூருக்கும், இங்கிலாந்துக்குமிடையே இருக்கும் நட்புறவையும் முன்னிருத்துகிறது என்று தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், ஜெர்மன் அதிபர் ஆஞ்செலா மெர்கல் மற்றும் ... |
| சிறுநீர் கழித்த பின் எரிச்சல், என்ன தீர்வு? Posted: 18 Sep 2013 05:24 AM PDT இதயத்துக்கும் தொப்புளுக்கும் இடைப்பட்ட பகுதியில் குடி கொண்டுள்ள பித்த தோஷத்தின் குணங்களாகிய சிறிது நெய்ப்பு, ஊடுருவும் தன்மை, சூடு, லேசு, துர்நாற்றம், இளகும் தன்மை, நீர்த்தது போன்றவை தம் அளவிலிருந்து கூடும் தறுவாயில், அவை கல்லீரல் வழியே சிறுநீர்ப் பாதைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சிறுநீர்ப்பை வழியாக சிறுநீரில் கலந்து வெளியேறுகின்றன. அப்போது சிறுநீர் கழிக்கும் போது அதிக எரிச்சல் ஏற்பட்டு, சிறுநீர்க் குழாயில் அவை விட்டுச் செல்லும் உஷ்ணமானது, நெடுநேரம் நீடிக்கிறது. இந்த குணங்களை இனிப்புச் சுவை, ... |
| தமிழில் 12 கம்ப்யூட்டர் புத்தகம் PDF வடிவில் Posted: 18 Sep 2013 05:20 AM PDT தமிழில் 12 கம்ப்யூட்டர் புத்தகம் PDF வடிவில் கணினியின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் 12 PDF வடிவிலான மின்னூல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே கொடுத்துள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . கணிப்பொறிகள் , சிக்கலான அறிவியல், வணிக, நிர்வாகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் நமக்கு உதவுகிற எந்திரங்கள் ஆகும் கம்ப்யூட்டர் மனிதர்களால் உருவாக்கப்பட்டு, மேலாண்மை செய்யப்படும் எந்திரங்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவை தானே சிந்திக்கும் மூளையைப் பெற்றிருக்கவில்லை அவை மனிதரின் ஆணைகளின்ப்படியே ... |
| சிவகங்கை வியான்னி அருள்பணி மையத்தில் 133 மணி நேரம் பைபிள் தொடர் வாசிப்பு Posted: 18 Sep 2013 05:19 AM PDT சிவகங்கை வியான்னி அருள்பணி மையத்தில், 133 மணி நேரம் விவிலியம் (பைபிள்) தொடர் வாசிப்பு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை மாலை துவங்கியது. வாசிப்பு நிகழ்விற்கு சிவகங்கை மறைமாவட்ட ஆயர் செ.சூசைமாணிக்கம் தலைமை வகித்தார். அருள்பணி மைய இயக்குநர் பி.அல்போன்ஸ்நாதன், கிறிஸ்துவ வாழ்வுப் பணிக்குழு செயலர் எஸ்.ஜேசு ஜெயராஜ், பங்குத் தந்தையர்கள், அருட்சகோதரிகள், நற்கருணைப் பணியாளர், அருட்சகோதரர்கள், நற்செய்திப் பணியாளர்கள், மரியின் சேனையினர், வின்சென்ட் தே பவுல் சபையினர், பொது மக்கள் பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பைபிள் ... |
| தெளிவாக ஆங்கிலம் பேச உதவும் இணையதளம் Posted: 18 Sep 2013 05:05 AM PDT ஆங்கில மொழியில் சொற்களில் உள்ள எழுத்துக்களை நாம் தமிழில் உள்ளது போல அப்படியே உச்சரிப்பதில்லை. உச்சரிப்பில் நிறைய வேறுபாடு உண்டு. ஆனால், அதே நேரத்தில், ஒரே மாதிரியான உச்சரிப்பில் பல ஜோடி சொற்கள் பயன்பாட்டில் உள்ளன. எடுத்துக்காட்டாக Capital/ Capitol, Affect/ Effect, new/ anew, practice/ practise, sour/ sore, side/ aside, warranty/ guarantee, affluent/ effluent/ suit, suite ஆகியவற்றைக் கூறலாம். இந்தச் சொற்களைப் பயன்படுத்துகையில், நமக்கு எந்த சொல் எந்தப் பொருளுக்குப் பயன்படுத்துவது என்ற குழப்பம் ... |
| எம் மொழி பேசும் பிற இனத்தவர்கள் காணொளிகள் Posted: 18 Sep 2013 04:55 AM PDT தமிழில் தெளிவாகப் பேசும் ஜப்பானியப் பேராசிரியர். சில தமிழர்களுக்கு தமிழ் மொழி இழிவானதாக தோன்றுகிறதாம். ஆனால் இந்த வேற்று நாட்டு-இன அறிஞர்கள் தமிழின் பெருமையை -சிறப்பை அறிந்து தமிழ் மொழியை கற்றுவருகின்றனர். அவ்வகையில் ஜப்பானியப் பேராசிரியர் தெளிவாக பேசுவதை பாருங்கள். தமிழ் மொழி பேசும் சீனப் பெண்மணி: இவர் சீனா நாட்டுத் தமிழ் வானொலி அறிவிப்பாளர் . பிறப்பால் ஒரு சீனர். கலையரசி என்று தமிழ்ப்பெயர் சூட்டிக்கொண்டவர். எப்படி தமிழ் பேசுகிறார் கேளுங்கள் இவர் தமிழ் உணர்வைப் பாருங்கள். தொடர்பு ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |