Tamil News | Online Tamil News |
- வி.ஐ.பி.,க்கள் மீதான ஊழல் வழக்குகள் விசாரணை தாமதமா?
- தாயாரை சந்தித்து வாழ்த்து பெற்றார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி
- டில்லியில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 80ரூபாய்
- குவாரிகளில் தாது மணல் அள்ள தமிழகம் முழுவதும் தடை: விசாரணை குழு அறிக்கையை தொடர்ந்து அரசு உத்தரவு
- தி.மு.க.,வை யாராலும் அழிக்க முடியாது: முப்பெரும் விழாவில் கருணாநிதி பேச்சு
- தமிழகம் முழுவதும் "அம்மா' குடிநீர் பாட்டில்களுக்கு தட்டுப்பாடு
- சேலம் கோட்ட எம்.பி.,க்களுக்கு அழைப்பு; ரயில் வசதிகளை பெற இறுதி வாய்ப்பு!
- நழுவும் ஆட்டோக்களை பிடிக்க 10 பறக்கும் படைகள்: ஆட்டோக்களை மடக்கும் ஜீப்கள்
- ஊசி போடுவது எங்கள் வேலையல்ல: பணியை புறக்கணித்து பயிற்சி டாக்டர்கள் போராட்டம்
| வி.ஐ.பி.,க்கள் மீதான ஊழல் வழக்குகள் விசாரணை தாமதமா? Posted: புதுடில்லி: வி.ஐ.பி.,க்கள் மீதான ஊழல் வழக்குகளின் விசாரணைகளை, வேண்டுமென்றே தாமதமாக நடத்துவதாக கூறி, கொடுக்கப்பட்ட புகாருக்கு விளக்கம் அளிக்கும்படி, மத்திய லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம், சி.பி.ஐ., க்கு உத்தரவிட்டுள்ளது.எல்லை பாதுகாப்பு படை முன்னாள் இயக்குனர், பிரகாஷ் சிங், தன்னார்வ அமைப்பு ஒன்றின் சார்பில், மத்திய லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையத்துக்கு கடிதம் எழுதினார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:சி.பி.ஐ., விசாரணை, ஒரு சில வழக்குகளில் வருத்தம் அளிக்கும் வகையில் உள்ளது. ஆளும் கட்சி, ஏதாவது ஒரு வழக்கை கிடப்பில் போட ... |
| தாயாரை சந்தித்து வாழ்த்து பெற்றார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி Posted: ஆமதாபாத்:பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி, தன் பிறந்த நாளையொட்டி, தன் தாயை சந்தித்து ஆசி பெற்றார். ""ஏராளமானோர், எனக்கு ஆசி வழங்கியுள்ளனர். அவர்களின் ஆசிகள், வீணாகாது,'' என, தாயாரிடம் கூறினார்.கொண்டாட்டங்கள்:குஜராத் முதல்வரும், பா.ஜ., பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடிக்கு, நேற்று,64வது பிறந்த நாள். இதையொட்டி, குஜராத், டில்லி, மகாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில், பா.ஜ.,வினர், விமரிசையான கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிலையில், நரேந்திர மோடி, காந்திநகரில் உள்ள, தன் சகோதரர் வீட்டுக்கு, நேற்று காலை சென்றார். அங்கு ... |
| டில்லியில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 80ரூபாய் Posted: டில்லியில், ஒரு கிலோ வெங்காயம், 80 ரூபாய்க்கு விற்கப்படுவதால், பொதுமக்கள் மத்தியில், பெரும் கொந்தளிப்பு உருவாகியுள்ளது. அடுத்த சில நாட்களில், கிலோ, 100 ரூபாயை எட்டலாம் என்பதால், மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.அவசியமானது: சமையலுக்கு, அன்றாடம் தேவையான பொருட்களில் மிகவும் முக்கியமானது வெங்காயம். அந்த வெங்காயத்தின் விலை, தற்போது ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டிருக்கிறது. டில்லியில், மொத்த விற்பனை சந்தையில், 60 ரூபாய்க்கு விற்கப்படும் வெங்காயம், சில்லரை விற்பனையில், கிலோ, 70 முதல், 80 ரூபாய் வரை விற்கப்படுகிறது. கடந்த மூன்று ... |
| குவாரிகளில் தாது மணல் அள்ள தமிழகம் முழுவதும் தடை: விசாரணை குழு அறிக்கையை தொடர்ந்து அரசு உத்தரவு Posted: சென்னை:தூத்துக்குடி மாவட்டத்தில், கனிம குவாரிகளில் நடந்த முறைகேடு குறித்து, ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட, சிறப்பு குழு, நேற்று ஆய்வறிக்கையை, முதல்வர் ஜெயலலிதாவிடம் சமர்பித்தது. அதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும், தாது மணல் அள்ளப்படும் கனிம குவாரிகளில் நடந்துள்ள, முறைகேடுகளை ஆய்வு செய்யவும், அதுவரை அனைத்து குவாரிகளின் செயல்பாடுகளை நிறுத்தவும், போக்குவரத்து உரிம சீட்டு வழங்குவதை நிறுத்தி வைக்கவும், முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.நாட்டின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதிலும், அரசுக்கு வருவாய் ஈட்டித் தருவதிலும், ... |
| தி.மு.க.,வை யாராலும் அழிக்க முடியாது: முப்பெரும் விழாவில் கருணாநிதி பேச்சு Posted: சென்னை:""தி.மு.க.,வை யாராலும் அழிக்க முடியாது,'' என, முப்பெரும் விழாவில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.தி.மு.க., முப்பெரும் விழா, சென்னை, அறிவாலயத்தில், நேற்று நடந்தது. விழாவில், ஈ.வெ.ராமசாமி விருதை, மும்பை ஆர்யசங்காரன், பாரதிதாசன் விருதை, எழுத்தாளர் திருநாவுக்கரசு, அண்ணாதுரை விருதை, எல்.கணேசன், கருணாநிதி விருதை, உசேன் ஆகியோருக்கு வழங்கி, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாவது:என் அக்கா, உடல்நலம் குன்றி, படுத்த படுக்கையாக, இப்போதோ, அப்போதோ என்ற நிலையில் உள்ளார். அந்த கவலையில், நான் இருந்தாலும், தொண்டர்களாகிய உங்கள் முகம் பார்த்து, ஆறுதல் அடைகிறேன். நாம் ... |
| தமிழகம் முழுவதும் "அம்மா' குடிநீர் பாட்டில்களுக்கு தட்டுப்பாடு Posted: தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தால் துவக்கப்பட்ட, "அம்மா' குடிநீர் திட்டத்தில், குடிநீர் பாட்டில்கள் போதுமான அளவு வினியோகம் செய்யப்படாததால், தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், வெகு தூரம் செல்லும் பயணிகள், குடிநீர் பாட்டில் கிடைக்காமல் ஏமாற்றமடைந்து வருகின்றனர்.15ல் துவக்கம் : "அம்மா' உணவகம், "அம்மா' பசுமை காய்கறி கடை விற்பனை நிலையங்களை தொடர்ந்து, போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், 304 இடங்களில், "அம்மா' குடிநீர் திட்டத்தில், குடிநீர் பாட்டில் விற்பனை, இம்மாதம், 15ம் தேதி துவங்கப்பட்டது.நாள் ஒன்றுக்கு, மூன்று லட்சம் பாட்டில்கள் உற்பத்தி செய்ய ... |
| சேலம் கோட்ட எம்.பி.,க்களுக்கு அழைப்பு; ரயில் வசதிகளை பெற இறுதி வாய்ப்பு! Posted: சென்னை மற்றும் சேலம் கோட்டத்துக்குட்பட்ட, எம்.பி.,க்களுக்கான சிறப்பு கூட்டத்தை, தெற்கு ரயில்வே நடத்தவுள்ளது; இந்த கூட்டத்திலாவது, தமிழக மக்களின் ரயில்வே தேவைகளை, நம் எம்.பி.,க்கள் தீவிரமாக வலியுறுத்துவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.லோக்சபா தேர்தலுக்கு, இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், எம்.பி.,க்களின் சிறப்பு கூட்டங்களை, தெற்கு ரயில்வே நடத்தி வருகிறது. சென்னை மற்றும் சேலம் ரயில்வே கோட்டங்களுக்குட்பட்ட எம்.பி.,க்களின் சிறப்பு கூட்டம், ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் சர்மா தலைமையில், 20ம் தேதி, சென்னையில் நடக்கவுள்ளது.தேர்தலுக்கு முன், ... |
| நழுவும் ஆட்டோக்களை பிடிக்க 10 பறக்கும் படைகள்: ஆட்டோக்களை மடக்கும் ஜீப்கள் Posted: புதிய கட்டணத்தை பின்பற்றாமல், அதிகாரிகளிடம் இருந்து தப்பிச் செல்லும் ஆட்டோக்களை பிடிப்பதற்காக, 10 பறக்கும் படைகள், ஜீப்களில் சென்று, சோதனை செய்யும் பணியை மேற்கொள்ள உள்ளன.அரசு நிர்ணயித்துள்ள ஆட்டோ கட்டணம், நேற்று முன்தினம் முதல், கட்டாயமாக்கப்பட்டது. ஆட்டோக்களில் மீட்டரை இயக்குவதுடன், புதிய கட்டண அட்டையில் உள்ளது போல், பயணிகளிடம் வ‹லிக்க வேண்டும். புதிய கட்டணத்தை, நேரடியாக மீட்டரில் திருத்தம் செய்து கொண்டும் இயக்கலாம்.சென்னையில் ஓடும், 71 ஆயிரம் ஆட்டோக்களில், 47 ஆயிரம் ஆட்டோக்களுக்கு மட்டுமே, புதிய கட்டண அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. பலர், புதிய ... |
| ஊசி போடுவது எங்கள் வேலையல்ல: பணியை புறக்கணித்து பயிற்சி டாக்டர்கள் போராட்டம் Posted: சென்னை:"ஊசி போடுவது எங்கள் வேலையல்ல; அரசு உத்தரவுப்படி, அதற்கு ஒப்பந்த ஆட்களை நியமிக்க வேண்டும்' என கோரி, சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், பயிற்சி டாக்டர்கள், பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்."ஊசி போடுதல், ரத்தம் எடுத்தல் போன்ற பணிகள், எங்கள் வேலையல்ல; 36 மணி நேர வேலையை, "ஷிப்டு' முறைக்கு மாற்ற வேண்டும்' என கோரி, மாநிலம் முழுவதும், பயிற்சி டாக்டர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, சுகாதார துறை செயலர் உத்தரவுப்படி, ஊசி போடுதல் போன்ற பணிகளிலிருந்து, அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.சென்னை அரசு பொது மருத்துவமனையில், ஊசி போட ஒப்பந்த நர்சுகள் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |செப்டம்பர் 18,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |