ஈகரை தமிழ் களஞ்சியம் |
- குண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா?
- சிறுமியை விடிய விடிய பலாத்காரம் செய்த 5 சிறார்கள்
- மோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்
- உலகின் மிக உயரமான விமான நிலையம் சீனாவில் திறப்பு
- நாளை முதல் சினிமா படப்பிடிப்பு 7 நாட்கள் ரத்து: நடிகர், நடிகைகள் நடன ஒத்திகை
- நடிகர் ரஜினிகாந்த், நரேந்திரமோடிக்கு ஆதரவு தெரிவிப்பாரா?
- கொத்தமல்லிக் கீரையின் மருத்துவ குணங்கள்!
- மிஸ் அமெரிக்காவாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்லூரி மாணவி தேர்வு
- மருத்துவத் தகவல்கள்
- மனைவியை மயக்க 10 வழிகள்…!
- முதலில் ஆயுள் தண்டனை மேல் முறையீட்டில் மரண தண்டனை
- தென் மாவட்டங்களில் மீண்டும் டெங்கு அபாயம்
- இன்று ஈகரையில் 10 லட்சம் (ஒரு மில்லியன்) பதிவுகள் எனும் மைல் கல்
- தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி
- ஊக்கமளிக்கும் தமிழ் வாசகங்கள்!
- அரிய தகவல்கள் அறிந்து கொள்ளுங்கள் :)
- கடி ஜோக்ஸ் -சில..
- சினிமா நூற்றாண்டு விழா: மால் தியேட்டர்களில் இலவச சினிமா!
- கடவுளே இல்லை என்று சொல்லும் என்னை கடவுள் என்பதா? ரசிகர்களை ஆப் பண்ணிய கமல்!!
- குமரகுருபரர் குருபூஜை
- கோடிக்கணக்கில் வருவாய் இருந்தும் குடமுழுக்கு காணாத கோயில்கள்
- தமிழைத் தாங்கி வந்த புதிய ஐபோன்கள்
- உலக மல்யுத்தம்: வெள்ளி வென்றார் அமித் குமார்
- உங்கள் மொபைல் போனின் ஸ்க்ரீன்ஷாட் -ஐ இங்கு பதிவிடுங்கள்!
- தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு
- உறுப்பினர் அறிமுகம்
- வியாபார ரகசியம்!
- உயிர் எழுத்துக்கள் என அழைக்க காரணம் என்ன ??
- பெரியாரிசம்
- தொடத் தொடத் தொல்காப்பியம் (124)
- பேஸ் புக் போதுமே
- யாரை கண்டிப்பது?... சிறுகதை
- எனது 33 வது திருமண நாள்
- "நீடூழி வாழ்க' என்றால் அர்த்தம் தெரியுமா உங்களுக்கு?
- தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ? கவிஞர் இரா .இரவி !
- வடிகால்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் பொன் .கண்ணகி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
- பாடாதே !
- தெரிஞ்சுக்கோங்க! - மல்லிகை மலர்கள் மாலை நேரத்தில் ஏன் மலர்கின்றன?
- காத்திருக்கிறேன்
- உன்னால் முடியுமா?
- உள்ளத்தால் உயர்வோம்!
- ஒரு குட்டி கதை
- படித்ததில் பிடித்தது :) - பொது இடத்தில் வேண்டாமே!
- சிலந்தி வலை
- இந்த பெண்ணின் உயரம், 27 அங்குலம் தான்!
- படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50)
| குண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா? Posted: 17 Sep 2013 03:24 PM PDT குண்டர்களுக்கு எதிரான காவல்துறையின் நடவடிக்கையில் சரியாக இருக்கலாம். அணுகுமுறை கேள்விகுறியாக மாறிவிடலாம். சட்டத்தின் மீது நம்பிக்கை உடையவர்கள் சட்டத்தை பேணும்படி வலியுறுத்தியவர்கள், சட்டதைக் கையில் எடுத்துக்கொள்ளக் கூடாது என்ற அபிப்பிராயத்தை ஒதுக்கிவிட முடியாதே. குண்டர்களின் அட்டகாசம், ராட்சஸ குணமும், செயல்களும் நாட்டின் சுபிட்சத்தை கெடுக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டது. மக்கள் அச்சமின்றி நடமாடமுடியவில்லை; மக்கள் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை ... |
| சிறுமியை விடிய விடிய பலாத்காரம் செய்த 5 சிறார்கள் Posted: 17 Sep 2013 03:07 PM PDT அஸ்ஸாமின் குவஹாத்தி நகரில் மைனர் சிறுமி ஒருவரை ஐந்து பேர் கொண்ட கும்பல் கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளது. இந்த ஐந்து பேரும் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் என்பது அதிர்ச்சி தருவதாக உள்ளது. ஐந்து பேரும் அச்சிறுமியின் நண்பர்களாம். சிறுமி தனது வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது அருகே அழைத்துச் சென்று நாசப்படுத்தியுள்ளனர். குற்றம் இழைத்த ஐந்து பேருக்கும் 15 முதல் 16 வயதுதான் ஆகிறதாம். ஐந்து பேரும் பிடிபட்டுள்ளனர். அவர்களுக்கு வயதை நிர்ணயிக்கும் எலும்பு மஜ்ஜை சோதனைக்கு போலீஸார் முடிவு செய்துள்ளனர். அந்த ... |
| மோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள் Posted: 17 Sep 2013 03:04 PM PDT காந்திநகர்: பா.ஜ., பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திரமோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள். இவரது பிறந்த தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பா.ஜ., தொண்டர்கள் இனிப்பு வழங்கியும் கலைநிகழ்ச்சிகள் நடத்தியும் கொண்டாடி வருகின்றனர். பிறந்த நாளில் காந்திநகரில் சிறு அரசு இல்லத்தில் வசிக்கும் மோடியின் தாயார் ஹிராபாவிடம் ( வயது 94) காலில் விழுந்து ஆசி பெற்றார். தாயார் மோடியை உச்சி முகர்ந்து முத்தமிட்டு வாழ்த்தினார். தொடர்ந்து மோடி நிருபர்களிடம் பேசுகையில்: தமக்கு பல்வேறு தரப்பினரும் பிறந்த நாள் ... |
| உலகின் மிக உயரமான விமான நிலையம் சீனாவில் திறப்பு Posted: 17 Sep 2013 03:02 PM PDT திபெத்தில் 4,334 மீட்டர் உயரத்தில் இருக்கும் பாங்டா விமான நிலையமே உயரமான இடத்திலிருந்து செயல்படும் விமான நிலையம் என்ற பெருமையை இதுவரை பெற்றிருந்தது. தற்போது சுற்றுலாத்துறையை விஸ்தரிக்கும் வண்ணமும், நாட்டின் மேற்குப் பகுதியில் நடைபெறும் அரசியல் அமைதியின்மையைக் கண்காணிக்கவும் 4,411 மீட்டர் உயரத்தில் புதிய விமான நிலையம் ஒன்றினை சீனா அமைத்துள்ளது. டயோசெங் யாடிங் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விமான நிலையம், உயரமான இடத்தில் அமைந்துள்ள முதல் சிவிலியன் விமான நிலையம் என்ற பெருமையைப் பெறுகின்றது. இத்தகைய ... |
| நாளை முதல் சினிமா படப்பிடிப்பு 7 நாட்கள் ரத்து: நடிகர், நடிகைகள் நடன ஒத்திகை Posted: 17 Sep 2013 03:01 PM PDT இந்திய சினிமா நூற்றாண்டு விழா வருகிற 21–ந்தேதி முதல் 24–ந்தேதி வரை சென்னையில் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை முதல் அமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைக்கிறார். நிறைவு விழாவில் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி பங்கேற்கிறார். நூற்றாண்டு விழாவையொட்டி 21–ந்தேதி மாலை 5.30 மணிக்கு தமிழ், நடிகர், நடிகைகள் கலை நிகழ்ச்சியும் 22–ந்தேதி காலை கன்னட நடிகர், நடிகையர் கலை நிகழ்ச்சியும் 22–ந்தேதி மாலை தெலுங்கு நடிகர், நடிகையர் கலை நிகழ்ச்சியும் 23–ந்தேதி காலை மலையாள சினிமா உலகினர் கலை நிகழ்ச்சியும் நடக்கின்றன. நயன்தாரா, ... |
| நடிகர் ரஜினிகாந்த், நரேந்திரமோடிக்கு ஆதரவு தெரிவிப்பாரா? Posted: 17 Sep 2013 02:56 PM PDT பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திரமோடிக்கு ரஜினிகாந்த் ஆதரவு அளிப்பது குறித்து பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் பதிலளித்தார். குஜராத் முதல்-மந்திரியும், பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடியின் 64-வது பிறந்த நாள் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. சென்னையில் பா.ஜ.க. வினர் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். பிறந்தநாளையொட்டி பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசனிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:- கேள்வி: ... |
| கொத்தமல்லிக் கீரையின் மருத்துவ குணங்கள்! Posted: 17 Sep 2013 02:52 PM PDT கொத்தமல்லிக் கீரை வீட்டுத் தோட்டங்களிலும் மட்டுமின்றி சிறு தொட்டிகளில் கூட வளர்க்கலாம். வழக்கமாக ரசம், சாம்பார் போன்றவற்றில் மணத்திற்காக இக்கீரையைப் பயன்படுத்துவார்கள். கொத்தமல்லிக் கீரை உப்புச் சுவையுடையது. உஷ்ணமும் குளிர்ச்சியும் கலந்த தன்மை உடையது. கொத்தமல்லிக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதால் காய்ச்சல் குணமாகும். வாதம், பித்தம் நீங்கும். உடல் பலம் பெறும். தாது விருத்திக்கும் நல்லது. இக்கீரை பசியைத் தூண்டும் சக்தி படைத்தது. இக்கீரையின் சாறு பிழிந்து பித்தத் தழும்புகள் மீது ... |
| மிஸ் அமெரிக்காவாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்லூரி மாணவி தேர்வு Posted: 17 Sep 2013 02:50 PM PDT அமெரிக்காவில் 2014-ம் ஆண்டிற்கான மிஸ் அமெரிக்கா அழகி போட்டி நியூஜெர்சியில் உள்ள அட்லாண்டிக் நகரில் நடந்தது. பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த 53 அழகிகள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர். இதில் மிஸ் நியூயார்க் அழகியான நினா தவுலுரி (வயது 24) 'மிஸ் அமெரிக்கா' பட்டத்தை தட்டிச்சென்றார். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இப்பட்டத்தை வென்ற மூலம் முதன் முறையாக இந்திய வம்சவாளியைச் சேர்ந்த ஒரு பெண் மிஸ் அமெரிக்கா பட்டத்தை வென்றவர் என்ற பெருமையை பெற்றார். இவரின் பூர்விகம் ஆந்திரா மாநிலம் ... |
| Posted: 17 Sep 2013 02:37 PM PDT விளாம்பழம் வெப்பத்தைத் தணித்து உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். இது ஈளை இருமல், கோழை, வெப்பத்தால் உண்டான நீர்வேட்கை இவைகளைப் போக்குவதுடன் பசியை உண்டாக்கி உடலுக்கு நன்மை தரும். விளாம்பழத்தின் ஓட்டை நீக்கிப் பழத்தை மாத்திரம் சாப்பிட்டு வர வாய் நீர் ஊறல், தொண்டைப் புண், பல்லீற்றுப் புண்கள் ஆறும் |
| Posted: 17 Sep 2013 02:31 PM PDT என் பொண்டாடியை புரிஞ்சுக்கவே முடியல…' என்று அலுத்துக்கொள்ளும் ஆண்கள் அனேகம். அது ஒன்றும் அலிபாபா மந்திரமல்ல. இன்றைய `நவீன யுக மனைவி'யின் அன்பை பெற 10 வழிகள் இதோ… 1. மதியுங்கள் வீட்டு வேலை தவிர தங்களால் நிறைய விஷயங்கள்முடியும் என்று பெண்கள் நிரூபித்து நீண்டநாட்களாகி விட்டன. எனவே மனைவியை அவரது திறமைக்காக மதியுங்கள். புதிய விஷயங்களைச் சாதிப்பதற்கு ஊக்குயவியுங்கள். 2. கனவுகளை பின்பற்றட்டும், உங்களை அல்லஇன்றைய பெண்கள் இலக்கு சார்ந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு ஓர் இலட்சியம் இருக்கிறது, ஒரு ... |
| முதலில் ஆயுள் தண்டனை மேல் முறையீட்டில் மரண தண்டனை Posted: 17 Sep 2013 02:19 PM PDT வங்கதேசம் பாகிஸ்தானிடமிருந்து விடுதலை பெற 1971 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட போரின் போது, பலரை கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இஸ்லாமிய அரசியல் பிரமுகருக்கு மேல் முறையீட்டில் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசம் பாகிஸ்தானிடமிருந்து விடுதலை பெற 1971 ஆம் ஆண்டு நடத்திய போரின் போது, ஒட்டுமொத்தமாகப் பலரை கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அப்துல் குவாதர் முல்லாவிற்கு மேல் முறையீட்டில், வங்கதேச உச்ச நீதிமன்றம், மரண தண்டனை ... |
| தென் மாவட்டங்களில் மீண்டும் டெங்கு அபாயம் Posted: 17 Sep 2013 02:10 PM PDT சொல்லாமல் கொள்ளாமல் உயிரை எடுத்துச் செல்லும் நோய்களின் பட்டியலில், "டெங்கு' காய்ச்சலையும் சேர்க்கலாம். கொசுக்கள் கடிக்கும் போது, அதன் உடலில் உள்ள வைரஸ், மனிதர்களுக்குப் பரவுகிறது. அதன் அறிகுறி காய்ச்சல்... கவனிக்காத பட்சத்தில் உயிரிழிப்பு நேர்கிறது. கடந்தாண்டில் திருநெல்வேலியில் 40 பேரை பலி வாங்கிய, "டெங்கு' தொடர்ந்து மதுரையைச் சுற்றியுள்ள பிற மாவட்டங்களுக்கு வேகமாக பரவியது. தென் மாவட்டங்களில் 80 பேர் வரை இறந்தாலும், மதுரை அரசு மருத்துவமனையில் "டெங்கு' காய்ச்சல் பலி எண்ணிக்கை 35 ஆனது. மதுரையில் ... |
| இன்று ஈகரையில் 10 லட்சம் (ஒரு மில்லியன்) பதிவுகள் எனும் மைல் கல் Posted: 17 Sep 2013 12:36 PM PDT இன்று ஈகரையில் 10 லட்சம் (ஒரு மில்லியன்) பதிவுகள் எனும் மைல் கல் தமிழ் தளங்களிலே வரலாறு படைக்கும் பத்து லட்சம் (ஒரு மில்லியன்) பதிவுகளை இன்று நாம் கடக்கிறோம் நண்பர்களே. இதற்கு முதற்கண் நன்றிகளும், வாழ்த்துகளும் பதிவர்கள் உங்களுக்கே சமர்ப்பணம். ஈகரையுடன் தொடர்ந்து இன்றுபோல் இணைந்திருந்து மேலும் பல மைல் கற்களை அடைந்து தமிழின் சிறப்பை போற்றுவோமாக. வாழ்த்துகள் நண்பர்களே மீண்டும் மீண்டும். |
| தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறி Posted: 17 Sep 2013 12:11 PM PDT தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறியை கண்டிப்போம்! இந்திய நடுவண் அரசின் கீழ் இயங்கும் சென்னை விமான நிலையம் ஹிந்தியர்களின் கூடாரமாக விளங்குகிறது. இங்கு ஹிந்தி மொழிக்கும் , ஹிந்தியை தாய் மொழியாக கொண்டவர்களுக்கும் தான் முதலிடம். இதனால் தமிழக பயணிகள் கடும் துன்பத்திற்கு ஆளாகிறார்கள். பயணிகளை சோதனையிடும் காவலர்கள் அனைவரும் இந்தி மொழியினர். இவர்களுக்கு தமிழ் தெரியாது . இவர்களிடம் தமிழர்கள் தமிழில் பேசினால் இவர்கள் இந்தியில் தான் மறுமொழி கொடுப்பார்கள். அண்மையில் மலேசியாவில் இருந்து ... |
| ஊக்கமளிக்கும் தமிழ் வாசகங்கள்! Posted: 17 Sep 2013 10:46 AM PDT http://img546.imageshack.us/img546/6648/tlyg.png பொருள்: "எல்லா ஊரும் எம் ஊர்...எல்லா மக்களும் எம் உறவினரே" சொன்னவர்: புலவர் கனியன் பூங்குன்றனார் நூல்: புறநானூறு, பாடல் எண்:129 |
| அரிய தகவல்கள் அறிந்து கொள்ளுங்கள் :) Posted: 17 Sep 2013 10:24 AM PDT ஒரு கிலோ முளைக்கீரையில் 70 கிலோ வாழைப்பழத்தின் வைட்டமின் 'ஏ' உள்ளது. ஒரு கிலோ அகத்தி கீரையில் 113 கிலோ ஆப்பிளின் கால்சியம் சத்து உள்ளது. ஒரு கிலோ அரைக்கீரையில் 32 கிலோ அன்னாசியின் இரும்பு சத்து உள்ளது. ஒரு கிலோ முருங்கை கீரையில் 7 மடங்கு ஆரஞ்சின் விட்டமின் 'சி' மற்றும் 3 மடங்கு வாழைப்பழத்தின் பொட்டாசியம் சத்து மற்றும் 4 மடங்கு பாலில் உள்ள கால்சியம் சத்து மற்றும் 4 மடங்கு கேரட்டின் விட்டமின் 'ஏ' சத்து மற்றும் 2 மடங்கு தயிரின் புரத சத்து உள்ளது. மனித மூளை மனித நரம்பு மண்டலத்தின் தலைமையானதும், ... |
| Posted: 17 Sep 2013 10:24 AM PDT "டாக்டர் இவ்வளவு மருந்தையும் ரெண்டே நாள்ல சாப்பிட்டு முடிக்கணும்னு சொல்றீங்களே, ஏன்?" "ரெண்டு நாளைக்கு அப்புறம் எக்ஸ்ப்ரி டேட் முடிஞ்சுடும்." |
| சினிமா நூற்றாண்டு விழா: மால் தியேட்டர்களில் இலவச சினிமா! Posted: 17 Sep 2013 10:13 AM PDT இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா சென்னையில் வருகிற 21ந் தேதி முதல் 24ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி விழாக் குழுவினர் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள மால் தியேட்டர்கள், மற்றும் பிரிவியூ தியேட்டர்களில் முக்கியமான, புகழ்பெற்ற சினிமாக்கள் பொதுமக்களுக்கு இலவசமாக திரையிடப்படுகிறது. சத்யம் தியேட்டரில் நடந்த விழாவில் இதனை நடிகை தேவயானி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். சேம்பர் தலைவர் கல்யாண், செயலாளர் சுரேஷ், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் ... |
| கடவுளே இல்லை என்று சொல்லும் என்னை கடவுள் என்பதா? ரசிகர்களை ஆப் பண்ணிய கமல்!! Posted: 17 Sep 2013 10:10 AM PDT கடவுள் நமபிக்கை, நல்ல நேரம், கெட்ட நேரம் போன்றவை நிறைந்தது சினிமா உலகம். படத்திற்கு பூஜை போடுவதில் இருந்து, படப்பிடிப்பு தொடங்கி கடைசியில் பூசணிக்காய் உடைக்கிறது வரைக்கும் இதையெல்லாம் சரியாக கடைபிடிப்பார்கள். ஆனால், அப்படிப்பட்ட சினிமாவில் இது எதையும் பார்க்காமல் தனது திறமை, முயற்சி, உழைப்பு இவற்றையே மூலதனமாகக்கொண்டு இன்று வரை வெற்றி மேல் வெற்றி பெற்று வருகிறார் கமல். குறிப்பாக கடவுள் நம்பிக்கை இல்லாதவர். ஆனால், அப்படிப்பட்ட கமல், ரீ ரிலிசாகும் நினைத்தாலே இனிக்கும் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு ... |
| Posted: 17 Sep 2013 09:40 AM PDT கடவுளின் அருள் இருந்தால் நடக்காததும் நடக்கும். இதற்கு குமரகுருபரரின் வாழ்க்கை வரலாறு உதாரணம். திருநெல்வேலி அருகிலுள்ள ஸ்ரீவைகுண்டம் பிரசித்தி பெற்ற ஆன்மிகத்தலம். இங்கு சண்முகசிகாமணி கவிராயர், சிவகாமி சுந்தரி தம்பதியர் வசித்தனர். இவர்கள் தங்கள் குலதெய்வமாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு வந்தனர். இவர்களுக்கு பிறந்த மகனுக்கு, முருகனின் ஒரு பெயரான குமரகுருபரன் என்ற பெயரைச் சூட்டினர். குமரன் எனறால் இளைஞன். அவர் தந்தைக்கே குரு. பரன் என்றால் தெய்வம். இளைஞனும், குருவுமாக இருக்கும் அந்த ... |
| கோடிக்கணக்கில் வருவாய் இருந்தும் குடமுழுக்கு காணாத கோயில்கள் Posted: 17 Sep 2013 09:26 AM PDT இந்திய கலாசாரத்தின் ஆணிவேர்களாகவும், அடையாளமாகவும் விளங்கி வருபவை திருக்கோயில்களே. இந்தியாவின் பன்மொழி கலாசாரத்தை ஒரு மெல்லிய நூலிழையில் வலுவாக பிணைத்து காத்து வரும் பெருமைமிகு சின்னங்கள் கோயில்கள். இத்தகைய கோயில்களுக்கு அந்நாட்களில் அரசர்களும், தனவந்தர்களும், பெரும் அரசு பொறுப்பில் இருந்தவர்களும் அசையும், அசையா சொத்துகளை உடமையாக்கி வைத்திருந்தனர். இந்த சொத்துகள் மூலம் கிடைக்கும் வருவாய் அந்த கோயில்களில் அன்றாட பூஜைகள் தடையின்றி நடக்கவும், கோயில்களை நம்பியுள்ள அர்ச்சகர்கள், பிற பணியாளர்களின் ... |
| தமிழைத் தாங்கி வந்த புதிய ஐபோன்கள் Posted: 17 Sep 2013 09:19 AM PDT பல மாதங்களாக எதிர்பார்த்த, புதிய ஐபோன் 5, சென்ற செப்டம்பர் 10 அன்று, கலிபோர்னியாவில் தன் தலைமை அலுவலகத்தில், ஆப்பிள் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. அதே நேரத்தில், ஜப்பான் மற்றும் சீனாவிலும் இந்த போன் அறிமுகப்படுத்தப்பட்டது. "எதிர்காலத்திற்கான சிந்தனை யோடு, இதுவரை எவரும் தர முடியாத மொபைல் போன் இது" என ஆப்பிள் நிறுவனம் இது பற்றிக் கூறியுள்ளது. ஆனால், தமிழர்களுக்கு இது உண்மையிலேயே இதுவரை எவரும் தராத போனாகத்தான் உள்ளது. போனிலேயே தமிழ் உள்ளீடு செய்திடும் செயல்பாடு தரப்பட்டுள்ளது. இதில் இயங்கும் ... |
| உலக மல்யுத்தம்: வெள்ளி வென்றார் அமித் குமார் Posted: 17 Sep 2013 09:15 AM PDT புடாபெஸ்ட்: உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் அமித் குமார், வெள்ளிப்பதக்கம் வென்றார். ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் உலக மல்யத்த சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதில், இந்தியா சார்பில் 22 பேர் பங்கேற்கின்றனர். "பிரீஸ்டைல்' 55 கி.கி., எடைப் பிரிவின் அரையிறுதியில் ரஷ்யாவின் அலெஸ்மோவை வீழ்த்திய ஆசிய சாம்பியன் அமித் குமார், பைனலுக்கு முன்னேறினார். பைனலில், முன்னாள் வெண்கல வீரரான ஈரானின் ஹசன் பார்மனை எதிர்கொண்டார். பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் முதல் பாதியில் துவக்கத்திலேயே அமித் ... |
| உங்கள் மொபைல் போனின் ஸ்க்ரீன்ஷாட் -ஐ இங்கு பதிவிடுங்கள்! Posted: 17 Sep 2013 09:14 AM PDT விருப்பமுள்ளவர்கள் உங்கள் மொபைல் போனின் Screenshot -ஐ இங்கு பதிவிடுங்கள்! இது என்னுடைய Tab2 ஸ்க்ரீன்ஷாட் . GT-P3100 ROM: Sungsonic™ HD |
| தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உயர்வு Posted: 17 Sep 2013 09:14 AM PDT அதிக அளவில் தங்கம் இறக்குமதி செய்யும் நாடான இந்தியாவில், நகை தொழில் துறைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால், அதிக அளவு தங்கம் ஏற்றுமதி செய்வதால் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகபட்ச அளவான 4.8 சதவீதத்தை எட்டியது. இதையடுத்து நடப்பு கணக்கு பற்றாக்குறை உயர்வை சமாளிக்கவும், உள்நாட்டு உற்பத்தியாளர்களை பாதுகாக்கவும் மத்திய அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறது. கடந்த ஜூன் மாதம் இறக்குமதி வரி 6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்த்தப்பட்டது. பின்னர் கடந்த மாதம் ... |
| Posted: 17 Sep 2013 09:08 AM PDT பறந்து விரிந்த உலகுதன்னில் பறக்கத் துடிக்கும் கனவோடு அதை நினைவாக்க தன் சிறகை வலுப்படுத்தும் சாதனை பறவை இவள் கவியாழினி ... |
| Posted: 17 Sep 2013 09:03 AM PDT பணக்கார வியாபாரி ஒருவர் இறக்கும் நிலையில் இருந்தார். அவர் தன் மகனுக்கு தமது வியாபார ரகசியத்தைச் சொல்லத் துடித்தார். அவர் மகன் அவரிடம் வந்தான். வியாபாரி அவனிடம், ""வியாபார இடத் திற்கு நிழலில் போ. நிழலில் வா. இரண்டாவது, பணத்தைக் கடன் கொடு... திருப்பி நீயாகக் கேட்காதே... மூன்றாவது அதிக விலைக்கு வாங்கு, மலிவாக விற்பாயாக. நாலாவது ரகசியத்தைச் சொல்லும் முன், வியாபாரியின் மூச்சு நின்றுவிட்டது. தன் தந்தை சொன்னபடியே செய்தான். தன் வீடு தொடங்கி கடை வரைக்கும் கல் மண்டபம் கட்டினான். பணம் கடன் கொடுத்தான். ... |
| உயிர் எழுத்துக்கள் என அழைக்க காரணம் என்ன ?? Posted: 17 Sep 2013 08:58 AM PDT தமிழ் செம்மொழி பாடலில் "ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்" என்ற வரிகள் வரும்பொழுது VTV கணேஷ் அவர்கள் 'ஒ'வில் இருந்து யானை உருவத்தை வரைந்து காண்பிப்பர். http://imageshack.us/photo/my-images/706/kj6x.jpg/ எனது கேள்வி என்னவென்றால் வேறு எந்தெந்த உடலமைப்பை தமிழ் எழுத்துக்களில் இருந்து வரைய முடியும் . இதனால்தான் நாம் உயிர் எழுத்துக்கள் என்கிறோமா? |
| Posted: 17 Sep 2013 08:30 AM PDT பெரியாரிசம் (பதிவு 1) அன்பு நண்பர்களே பெரியாரிசத்தை விரிவாக அலசவேண்டும் என்று கருதினேன். எனவே இது மிக நீ......ண்ட பதிவாக அமைந்துவிட்டது. ஆகையால் பொறுமையுடன் (விருப்பப்பட்டால்) படித்து உங்களுக்கு தோன்றும் கருத்தை நீங்கள் விருப்பப்பட்டால் பின்னூட்டம் இடுங்கள். பெரியாரிசம் ; ஜாதிகள் ஒழிய வேண்டும், பெண் அடிமைத்தனம் ஒழிய வேண்டும், இதற்கு பெரியாரின் தீர்வு : ஜாதிகள் ஒழிய கடவுள் மறுப்புக் கொள்கையும், பெண் அடிமைத்தனம் ஒழிய ஆண்களைப்போல பெண்களும் கற்பு நெறியிலிருந்து வெளியே வரவேண்டும், ஆகியவை பெரியாரிசத்தின் ... |
| தொடத் தொடத் தொல்காப்பியம் (124) Posted: 17 Sep 2013 08:29 AM PDT தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| Posted: 17 Sep 2013 08:11 AM PDT பேஸ் புக் போதுமே மவனுக்கு கண்ணாலம் பண்ணிடலாம் வைகாசியில, விதச்சத அறுத்து முடிச்சா வெத நெல்லுக்குப் போக மீதியாகும் ஒரு லட்சம் ! தம்பி மவ கண்ணாலத்துக்கு வாங்கின காச இப்போ எந் தம்பியவன் திருப்ப தந்தா அது வருமே அம்பதாயிரம் ! கடனோ உடனோ - டவுனுல மளிகை கடை வெச்ச ராசு மவங்கிட்ட கேட்டு வைப்போம் கண்ணால செலவுக்கு அம்பதாயிரம் ! ஆத்தாலும், அப்பனும் சேர்ந்து கணக்குப் போடறாக, தவமிருந்து பெத்த தன்னோட ஒத்தப்புள்ளைக்கு !! நான் பொண்ணு பாத்துட்டேன் சிம்புளா கோயில்ல தாலி கட்டிட்டு ... |
| Posted: 17 Sep 2013 08:10 AM PDT முரளி ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார். அவருடைய மனைவி வசந்தா. இவர்களுக்கு சோமு என்ற மகன் இருக்கிறான்.. வழக்கம் போல் மாலை பள்ளி முடிந்ததும் சோமு வீட்டுக்கு வந்தான்.. வந்தவுடன் தன் பையில் இருந்து பேனா, பென்சில், ரப்பர் போன்ற பொருட்களை ஒவ்வொன்றாய் எடுத்து "இது மணியிடம் அடிச்சது, இது ராஜு கிட்ட சுட்டது அப்புறம் இது ராகுலிடம் எடுத்தது" என்று சொல்லி கொண்டே வெளியே வைத்து விட்டு விளையாட சென்று விட்டான்.. இதை பார்த்து கொண்டு இருந்த அவனுடைய அம்மா அன்று இரவு முரளியிடம் நம்ம பையனுக்கு எல்லாம் ... |
| Posted: 17 Sep 2013 08:09 AM PDT உறவுகள் அனைவருக்கும் வணக்கம். இன்று எனது திருமண நாள். முப்பத்திமூன்று வருடங்கள் கடந்துவிட்டது! நேற்று நடந்தது போலவே உள்ளது. திருமணம் முடிந்ததும் ஸ்டுடியோவுக்குச் சென்று எடுக்கப்பட்ட படம்தான் முதலில் உள்ளது. பின்பு தேனிலவுக்கு ஜம்மு காஸ்மீர் மாநிலம் சென்றோம். அங்கு குப்வாரா என்ற நகரத்தில் ஒரு ஸ்டுடியோவில் எடுக்கப்பட்டதுதான் இரண்டாம் படம். ஒரு தங்கும் விடுதியில் இருந்து எடுக்கப்பட்டதே முன்றாம் படம். தில்லியில் இருந்து பதேபூர் சிக்ரியில் எடுத்ததே நான்காம் படம்.பழைய நினைவுகளின் ஒரு உதாரணமாக இதைப் ... |
| "நீடூழி வாழ்க' என்றால் அர்த்தம் தெரியுமா உங்களுக்கு? Posted: 17 Sep 2013 08:07 AM PDT "நீடுழி வாழ்க' என்பது, ஒரு ஆசிச் சொல். நீடுழி என்றால் எவ்வளவு காலம்... கலியுகம் முடியும் வரையிலா அல்லது இவன் விரும்பும் வரையிலா ... நீண்ட நாள், நீண்ட காலம் என்று பொதுவாகச் சொல்லி விடலாம். இதையே,"சதமானம் பவதி' என்பர். இதற்கு பொருள் நூறு வயது வாழ வேண்டும் என்பது. நூறு ஆண்டுகள் வாழ்ந்தால் மட்டும் போதுமா... அத்துடன் ஆயுள், ஆரோக்கியம், சவுக்கியம் இம்மூன்றையும் கடவுளிடம் வேண்டச் சொன்னார்கள். ஆரோக்கியமாக இருந்தால் பிறருக்கும், தனக்கும் எவ்வித தொந்தரவும் இருக்காது. கண் தெரியாமலும், காது கேட்காமலும் ... |
| தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ? கவிஞர் இரா .இரவி ! Posted: 17 Sep 2013 07:53 AM PDT தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ? கவிஞர் இரா .இரவி ! அறியாமை இருள் அகற்றிய அறிவுச்சூரியன் ! அறிந்ததை அகிலத்திற்கு உரக்கச் சொன்னவர் ! எதையும் ஏன் ? எதற்கு ? எப்படி ? எதனால் ? என்று கேட்டிடத் துணிவை தந்தவர் ! ஆறாம் அறிவை அறிமுகம் செய்தவர் ! அனைவரும் சமம் அறிவிப்புச் செய்தவர் ! பிறப்பினில் பேதம் கற்ப்பிப்பது மடமை என்றவர் ! பிறப்பால் ஏற்றத்தாழ்வு இல்லை என்றவர் ! . கடவுள் இல்லை இல்லவே இல்லை என்றார் ! கடவுள் கற்ப்பிக்கப்பட்ட கற்பனை என்றவர் ! சொல்வது யாராக இருந்தாலும் ... |
| வடிகால்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் பொன் .கண்ணகி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Posted: 17 Sep 2013 07:51 AM PDT வடிகால்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் பொன் .கண்ணகி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! நியூ செஞ்சுரி புக் ஹவுஷ் 41.பி .சிட்கோ இண்டஸ்டிரியஸ் எஷ்டேட் ,அம்பத்தூர் ,சென்னை .600098.விலை ரூபாய் 50. தொலைபேசி 044- 26359906. நூல் ஆசிரியர் கவிஞர் பொன் .கண்ணகி அவர்கள் உதவி கல்வி அலுவலராக இருந்து ஒய்வு பெற்றவர் .பின்னர் ஊர் மக்களால் ஊராட்சி மன்ற தலைவராக்கப்பட்டு அதையும் திறம்பட நடத்திக் காட்டியவர் .அதிர்ந்து பேசாத மென்மையான சுபாவம் என்றாலும் எடுத்ததை முடித்துக் காட்டும் நெஞ்சுறுதி துணிவு மிக்கவர் ... |
| Posted: 17 Sep 2013 07:40 AM PDT ஒரு சலவை தொழிலாளியிடம் கழுதை ஒன்று இருந்தது. அந்த கழுதை சலவை தொழிலாளிக்கு பல வகைகளில் உதவி செய்தது. அழுக்கு துணி மூட்டைகளை ஆற்றுக்கு துவைக்க கொண்டு சென்று, துவைத்து, வெளுத்த துணிகளை மீண்டும், சலவை தொழிலாளியின் வீட்டுக்கு கொண்டு வந்து சேர்க்கும் வேலையை, கழுதை தினமும் தவறாமல் செய்து வந்தது. சலவை தொழிலாளி பகலில் வேலை முடிந் ததும், கழுதையை கட்டிப் போடாமல் இரவு முழுவதும் அதன் விருப்பம் போல சுற்றித்திரிய அனுமதித்தான். பகலில் வேலை முடிந்ததும், இரவில் ஓர் இடத்தில் தங்காமல் ஊர் சுற்றுவது கழுதைக்கு மிகவும் ... |
| தெரிஞ்சுக்கோங்க! - மல்லிகை மலர்கள் மாலை நேரத்தில் ஏன் மலர்கின்றன? Posted: 17 Sep 2013 07:32 AM PDT வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ... |
| Posted: 17 Sep 2013 07:32 AM PDT காத்திருக்கிறேன் மழைக்காக காத்திருக்கும் நிலம் போல நானும் காத்திருக்கிறேன் உனக்காக !! மழை வந்தால் மானிடர் அனைவருக்கும் பூக்கும் முகத்தில் புன்னகைப் பூ, நீ வந்தாள் என் மனதில் மட்டும் மின்னும் மத்தாப்பு !! மேகம் காத்திருக்கிறது வானவில்லை தாங்கி நின்று கலர் கண்காட்சி நடத்த நானும் காத்திருக்கிறேன் உன்னை தாங்கி என் உயிரில் கலக்க !! சிந்தனை சிறகை அழகாய் விரித்து எழுதுகோளை காகிதத்தின் மேல் நடனமாடவிட்டு நான் வடிக்கும் - அந்த அழகிய கவிதைக்காய் நான் காத்திருக்கிறேன் ... |
| Posted: 17 Sep 2013 07:29 AM PDT தரையில் மெல்ல மெல்ல ஊர்ந்து சென்றது எறும்பு. அந்த நேரத்தில் எறும்பின் அருகே பூரான் வந்தது. ""எறும்பே, எங்கே சென்று கொண்டிருக் கிறாய்? நான் எதிரில் வருவதைக் கூட கவனிக் காமல் சென்று கொண்டு இருக்கிறாயே... அப்படி நீ எங்கேதான் செல்கிறாய்?'' என்று கேட்டது பூரான். ""பூரானே, இப்போது உன்னைக் கவனிக்கும் வேலை எனக்கில்லை. அதோடு எப்போதும் போல என் கடமையைச் செய்ய புறப்பட்டுச் செல்கிறேன்,'' என்றது எறும்பு. "" எறும்பே, கடமையென்று நீ எதனைக் கூறுகிறாய்?'' என்று கேட்டது பூரான். ""பூரானே, தினமும் இரை தேடுவதுதான் ... |
| Posted: 17 Sep 2013 07:25 AM PDT மகாபலி சக்கரவர்த்தி அசுரகுலத்தில் பிறந்தாலும், தர்ம நெறி தவறாமல் நல்லாட்சி நடத்தி வந்தார். அதனால், யாருக்கும் கிடைக்காத அரிய பலனாக, திருமாலின் திருவடி ஸ்பரிசம் பெறும் பேற்றை அடைந்தார். மகாபலி சக்கரவர்த்தி தேவர்களையும், தேவதைகளையும் ஒடுக்கி வைத்திருந்தார். இதனால், தேவதைகள் அவரைக் கொன்று விட்டனர். ஒருவனுக்கு, குரு அருள் இருந்தால், எத்தகைய சூழலிலும் விடுபட்டு விடுவான் என்கிறது சாஸ்திரம். மகாபலியின் குருவான சுக்ராச்சாரியார் அதீத சக்தி படைத்தவர். இறந்தவர்களை எழ வைக்கும், "ம்ருத ஸஞ்ஜீவினி' ... |
| Posted: 17 Sep 2013 07:16 AM PDT ஒருவன் தன் கழுதை மேல் சுமை ஏற்றிக் கொண்டிருக்கும் போது எதிரிகள் வருவதைப் பார்த்தான், பயந்துபோய், "கழுதையே வா! நாமிருவரும் ஒடிப்போய்விடலாம். எதிரிகள் வருகிறார்" என்றான். ... கழுதை, "நான் வரவில்லை. நீ ஓடு!" என்றது. "ஏன் கழுதை?" "எதிரிகளுக்கும் பொதி சுமக்கத்தானே போகிறேன். உன்னுடன் வந்தால் எனக்கு சுமை குறையப்போகிறாதா?" என்றது. நீதி: அரசு மாறும்போது, ஏழை மக்களுக்கு நிகழும் ஒரே மாற்றம் எஜமானர்களின் பெயர் மட்டுமே! நன்றி:முகநூல் |
| படித்ததில் பிடித்தது :) - பொது இடத்தில் வேண்டாமே! Posted: 17 Sep 2013 07:13 AM PDT கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ... |
| Posted: 17 Sep 2013 07:04 AM PDT http://img21.imageshack.us/img21/199/rzs9.jpg சிலந்திவலை மெல்லிய இழைகள் துல்லிய அளவு ஷேத்திர கணித கட்டங்கள் சாத்திரப்படி கற்றதெங்கே? விடமுள்ள தொன்று விடமற்றதொன்று பயமில்லா பயணப்பாதை உனக்கு பயணித்தோருக்கு மரணப்பாதை. தலை கீழாய் நின்று தவம் புரிந்து , உணவருந்தும் சிலந்தியே, ஊர்வன ஜாதி ஞானியோ நீ? ரமணியன் |
| இந்த பெண்ணின் உயரம், 27 அங்குலம் தான்! Posted: 17 Sep 2013 06:51 AM PDT உலகின், மிக குள்ளமான பெண்ணாக, நெதர்லாந்தை சேர்ந்த, ஒரு பெண் இருந்தார். அவரின் உயரம், 24 அங்குலம் தான். சில ஆண்டுகளுக்கு முன், அவர் இறந்து விட்டார். இதையடுத்து, உலகின் மிக குள்ளமான பெண் என்ற பெருமை, அமெரிக்காவைச் சேர்ந்த, 22 வயது கல்லூரி மாணவி, பிரிட்ஜ்ஜெட் ஜோர்டன் என்ற பெண்ணுக்கு கிடைத்துள்ளது. இவரின் உயரம், 27 அங்குலம் மட்டுமே. இதற்காக, கின்னஸ் சாதனை புத்தகத்தில், இவரின் பெயர், இடம் பிடித்துள்ளது. இவரின் இளைய சகோதரர், பிராட் ஜோர்டனின் உயரமும், 38 அங்குலம் தான். உலகின், மிக குள்ளமான, ... |
| படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -50) Posted: 17 Sep 2013 06:17 AM PDT வணக்கம் ஈகரை உறவுகளே .. இது பாலா சார் அவர்களின் படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !- என்பதன் தொடர்ச்சி .. ஆகவே முதலில் இனிய நண்பர் திரு.பாலா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துகொள்கின்றேன் . மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . கிருஷ்ணம்மா மற்றும் இனியவன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த திரி தொடங்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |